Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
282
Reaction score
301
Points
63
அத்தியாயம் - 12

"சார் எல்லா செக்கபும் முடிஞ்சிது, டூ டேஸ் ஒன்ஸ் வந்து தலைகட்டும் கால்கட்டும் சேஞ்ச் பண்ணிட்டா போதும். அவர அழைச்சிட்டு வர்ற சிரமமா இருந்தா, நர்ஸ் அப்பாயிண்ட் பண்ணிக்கோங்க" என்ற மருத்துவர் பாலகுருவின் ரிப்போர்ட்சை நீட்ட, சிறு தலையசைப்புடன் வாங்கிக்கொண்ட சிவகுரு, தம்பியின் அறைக்கு வந்தான்.

எப்போதும் ஜீன்ஸ் டீ-ஷர்ட் என டிப்டாப்பாக உடை அணிந்து, ஸ்டைலாக வளம் வரும் பாலா, இப்போது கிழிந்த நாராக படுத்துக்கிடப்பதை, வெறித்து பார்த்தான் சிவகுரு.

"இப்ப இப்டி பாத்து என்னாக போகுது குரு.. இவனை இந்த அளவுக்கு மோசமாக்கின அந்த ரவுடி பைய, அங்க நம்ம மிதுவையும் கொடுமை பணிக்கிட்டு ஜாலியா சுத்தி வரான். ஆனா நீ கட்சி விட்டா வீடு.. வீடு விட்டா கட்சினு எதையும் கருத்துல எடுத்துக்காம அசால்ட்டா இருக்க.

என்ன தான் குரு நீ உன் மனசுல நினைச்சிட்டு இருக்க.." அவன் அமைதி காண காண, ஆறுமுகத்திற்கு ஆத்திரம் வந்தது தான் மிச்சம்.

"இப்ப என்ன சித்தப்பு பண்ண சொல்ற, அவனை கொலை பண்ணிட்டா நடந்தது எல்லாம் இல்லைனு ஆகிடுமா.. எது எப்டியோ இப்ப அவன் மிது கழுத்துல தாலி கட்டிருக்கான், அவனை என்ன பண்ணாலும் மிதுக்கு பிரச்சனை வரும். அவனை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும், நான் பாத்துக்குறேன்.. நீங்க கொஞ்சம்.." வாயில் கை வைத்து அடங்கி இரு என்பது போல் சைகை காட்ட, கோபத்தில் உச்சி சூடேறி போனார் ஆறுமுகம்.

"இப்ப ஓரளவுக்கு உடம்பு ஓகேவாம், டாக்டர் வீட்டுக்கு போக சொல்லியாச்சு போலாமா பாலா.." என்ற அண்ணனை கண்டு முடியாத போதிலும் முறைத்து வைத்தான்.

"ஏண்ணே, உண்மையாவே நீ எம்மேல பாசமா இருக்கியா.. இல்ல நடிக்கிறியா.. ஜஸ்டு மிஸ்ஸுல உயிர் பிழைச்சி வந்திருக்கேன், அதுக்கு காரணம் யார்னு தெரிஞ்சும் நீ சும்மா விட்டு இருக்குறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல..

மிதுவ நீ கட்டிக்க இருந்த, ஆனா அவன் கட்டி தூக்கிட்டு போய்ட்டான். அதுவும் உன் முன்னாடியே.. அதான் இப்ப உனக்கும் மிதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே, அவளுக்கு பிரச்சனை வந்தா என்ன வராட்டி என்ன.. அவனை வெட்டி வீசி அவன் கதைய முடிசிக்காம, எதுக்கு தேவை இல்லாம சித்தப்பாகிட்ட பேசிட்டு இருக்க"

ஆத்திரத்தில் தாம்தூமென கத்திய பாலாவை, இறுக்கமான முகத்துடன் கண்ட குரு, எதுவும் பேசாமல் அங்கிருந்த பணியாளரை ஏவி அவனை அழைத்து வர்ற சொன்னவன் விருவிருவென நடந்து காருக்கு சென்று விட்டான்.

எந்த பதிலும் பேசாது சென்ற அண்ணனின் அமைதியில், முகம் கருத்த பாலா, பணியாளர் உதவியுடன் நொண்டி நடந்து வந்து பின் சீட்டில் வசதியாக அமர, கார் வீட்டை நோக்கி புறப்பட்டது.

"முன்னாடிலாம் எனக்கு ஒன்னுனா அப்டி துடிப்ப, எம்மேல சும்மா ஒருத்தன் கைய வச்சதுக்கே அவன் கைய வெட்டி வீசி எறிஞ்ச, ஆனா இப்போல்லாம் நீ ரொம்ப மாறிட்டண்ணே.." பின்னிருந்து வந்த சத்தத்தில், மெல்ல நகைத்துக்கொண்டான் குரு.

"உன் கண்ணுக்கு அப்டி தெரிஞ்சா நான் என்ன டா பண்றது.. முன்னாடி நான் வெட்டிப் பைய, எவன் கைய கால வெட்டி வீசினாலும் ஒருத்தனும் கிட்டக்க வர்ற முடியாது. ஆனா இப்ப நான் அரசியல்வாதி, எடுத்தோம் கவுத்தோம்னு ஒன்னுத்தையும் செய்ய முடியாது பாலா.." என்றான் ஆர்ப்பாட்டம் இல்லாமல்.

"ப்ச்.. சும்மா உதார் விடாத.. முன்னாடி இருந்தத விட இப்ப உனக்கு ஆள் பலமும் பதவி பலமும் அதிகரிச்சி இருக்கே தவிர துளியும் குறையல. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூட, உனக்கு ஒருத்தன் ஓவரா குடைச்சல் குடுத்தான்னு அவனை சத்தமில்லாம முடிச்சது எனக்கு தெரியாதுனு நினைக்காத.." என்றான் எரிச்சலாக.

பாலா சொன்னதை கேட்டு அட்டகாசமாக சிரித்த குரு, "ம்ம்.. சரிதான்.. அவனை முடிச்ச வரைக்கும் தெரிஞ்சி வச்சிருக்க நீ, எதுக்கு முடிச்சேன்ற காரணத்தையும் தெரிஞ்சி வச்சிருப்பேன்னு நினைக்கிறேன். தெரியலைனா சொல்றேன் நல்லா கேட்டுக்க பாலா..

அவன் ஒரு பச்சை பொம்பள பொறுக்கி, வயசு வித்தியாசம் இல்லாம பாக்குற பொம்பளைங்கள எல்லாம் அசிங்கமா படம் பிடிச்சி மிரட்டி, அவன் இச்சைக்கு அடிபணிய வைக்கிற எச்சை.

அத்தனை பொண்ணுங்க கண்ணீரையும் பாத்து, எப்டி அவனை சும்மா விட்டு வைப்பேன்.. அதான் முடிச்சேன்.." கண்களில் ஒருவித வெறியோடு சிவகுரு சொன்னதை கேட்டு ஜர்க் ஆனாலும், பாலா அவன் பிடியில் பிடிவாதமாக இருந்தான்.

"நீ சொல்றபடியே பாத்தா கூட, அந்த ரகுவும் அதே கேட்டகரி தானே.. அவனும் மிதுவ ரேப் பண்ணி இருக்கான். அப்போ அவனை தானே நீ முதல்ல முடிச்சி இருக்கணும்.." என்றான் கடுப்பாக.

"நீ சொல்றதும் ஒருவகைல வாஸ்தவம் தான்.. ஊரான் வீட்டு பொம்பளங்க மேல கைய வச்சாளே சும்மா விட மாட்டேன், என் வீட்டு பொண்ணு மேல கை வச்சவன சும்மா விட்டுடுவேனா நான்.. அவனை எப்ப என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் பாலா, நீ கவலை படாத.." உள்ளுக்குள் கனன்ற சிவகுரு முகம் இறுகி சொல்ல, அதற்கு மேல் பாலகுரு வாய் திறக்கவில்லை.

** ** **

அதிகாலை நேரம், முந்தைய தினம் போல எங்கே வாளி நீரை தலையில் கொட்டி அலம்பல் செய்து விடுவானோ என்ற பதைபதைப்போடே, தூக்கம் கலைந்து கண் விழித்த மிது, தன் நெஞ்சில் கன்னம் புதைய உறங்கிக் கொண்டிருந்த கணவனை திடுக்கிட்டு பார்த்தாள்.

இரவு ஏதேதோ சொல்லி அல்லேகாக தூக்கி வந்து மெத்தையில் போட்டவன், மிது மிரள மிரள அவள் மீது தாவிய ரகு, மென்கன்னம் தடவி, மோக பார்வையில் அவளை கதிகலங்க வைத்தவனாக உதடு ஊர்ந்த இடமெங்கும் தொடர் இச்சிகள் பச்சையாக வைத்தபடியே அவள் மீது உறங்கியவன் தான்.

காண்டாமிருகம் அடியில் சிக்கிய முயல்குட்டியாக, அசைய முடியாது தவித்த மிது, முரட்டுக் கண்ணனின் சீரான மூச்சிக்காற்று அவள் நூலாடை தாண்டி நெஞ்சிக்குழியில் வாசம் செய்யும் குறுகுறுப்பில், தலை தூக்கி உறங்கும் அவன் முகம் பார்த்தாள்.

விழித்திருக்கும் போது இருக்கும் ருத்ர முகம் உறங்கும் போது, ஒன்றும் அறியாத பச்சைப்பிள்ளை கணக்காய் சாந்தமாக இருந்தது. முன் நெற்றியில் மறைத்திருந்த எண்ணெய் வைக்காத கேசத்தை கரம் நடுங்க ஒதுக்கி விட்ட மிதுவுக்கு, ரகுவின் நோக்கம் கொஞ்சமும் விளங்கவில்லை என்பதே உண்மை.

"நேத்து என்னவோ கலெக்டர் உத்தியோகத்துக்கு நேரமான மாதிரி, அத்தனை சீக்கிரம் எந்திரிச்சி, அப்டி ஆர்ப்பாட்டம் பண்ணான். இன்னைக்கு என்னன்னா பத்து பேர் அடிச்சி போட்டதை போல இப்டி தூங்குறான்.. மூஞ்சியபாரு உராங்குட்டான் மாதிரி உர்னு.." வாயசைப்பில் முணுமுணுத்தபடி, ஆடவனின் அடர் மீசையினை இழுத்து விட, ஸ்ஸ்.. என மெல்லிய முனகலோடு அவன் முகத்தை புரட்டிய வேகத்தில், மிது தான் உறைந்து போனாள்.

"அவசரப்பட்டியே டி மிது.." தன்னை தானே நொந்து போனவள், தன் நெஞ்சில் முட்டிய மீசை வைத்த மன்னவனை கண்டு உதடு கடுத்தாள், இதயம் படபடக்க.

மிகவும் கடினப்பட்டு அவன் உறக்கம் கலையாதவாரு ரகுவை உருட்டி தள்ளிய மிது, முகத்தை அலம்பிக்கொண்டு கிட்சன் நோக்கி வர்ற, அங்கு ஏற்கனவே மது இருப்பதை கண்டதும் அஷ்டகோணல் ஆனது அவள் முகம்.

காலையிலேயே குளித்து மங்களகரமான முகத்துடன், கணவனுக்கு டீ போட்டுக்கொண்டிருந்த மது, மிதுவை கண்டதும் ஒரு நிமிடம் வேலை நிறுத்தம் செய்தன அவள் கரங்கள்.

"ஏதாவது வாய் திறந்தா, திட்டுவாளோ! பேசலாமா வேணாமா..?" என்ற யோசனையில் இருந்த மது, மணக்கும் டீயை வடிகட்டி மூன்று தம்பலரில் எடுத்தவள், அவளிடம் ஒன்றை நீட்ட வெடுக்கென முகத்தை திருப்பிக்கொண்டாள்.

"அத்தகிட்ட உனக்குடா என்ன கோவம்.. ந்நா என்ன தப்பு பண்ணேன்.." மருமகளின் ஒட்டாத விலகல் மனதை வேதனை படுத்தியது.

"என்ன தப்பு பண்ணல நீங்க..? உங்க பையன் என்ன கெடுத்துட்டான்னு ஊரை கூட்டி அத்தனை பேர்க்கு முன்னாடி அழுதுட்டு நின்னேன்.. ஆனா நீங்க என்ன பண்ணீங்க, உங்க பையன ஏன் டா இப்டி பண்ணேன்னு ஒரு வார்த்தைகூட அவன் சட்டையை பிடிச்சி கேக்கலையே..

அதுக்கு பதிலா, கெடுத்தவளையே கல்யாணம் பண்ணிட்டு வானு தானே உங்க மகன் செஞ்ச பாவத்துக்கு துணையா நின்னு இருக்கீங்க.. உங்க பையனால என் கர்ப்பு மட்டும் தான் போச்சி, ஆனா உங்களால மட்டும் தான் என் வாழ்க்கையே நாசமா போச்சி..

இப்ப சொல்லுங்க உங்கிட்ட நான் எப்டி கோவப்படாம இருக்குறது.." காலையிலேயே கடும் கோபத்தில் வெடித்தவளை கண்டு வாயடைத்து போனாள் மது.

தான் நினைத்தது வேறு, ஆனால் மிது அதனை தவறாக புரிந்து கொண்டாளே என வருத்தமாக நினைத்த மது,

"நீ தப்பா புரிஞ்சிகிட்ட மிதுமா.. ரகு இந்த அளவுக்கு ஒரு பொண்ணுகிட்ட நடந்துக்க என்ன காரணமோ எனக்கு நெசமா தெரியாது. ஊரார் முன்னிலையில என் மகனே அவன் தப்பு செஞ்சான்னு ஒத்துக்கிட்டதுக்கு பிறகு, என்னால எப்டிமா உன்ன விட்டுக்கொடுக்க முடியும்..

எப்டியும் ரகுவுக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைக்க தானே போறோம், அந்த பொண்ணு நீயாவே இருந்தா நல்லா இருக்குமேனு நினைச்சேன். உன்ன, எந்த குறையும் இல்லாம என் மக மாதிரி பாத்துக்கணும்னு ஆசைப்பட்டேன்.

போக போக ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டு சந்தோசமா வாழுவீங்கனு முழுமனசா நம்பினேன். ரகு கோவக்காரன் தான் ஆனா தப்பானவன் கிடையாதுமா.. அவன் அம்மாவா ந்நா என் மகனைபத்தி சொல்றத விட, நீயே அவனோட வாழ்ந்து புரிஞ்சிகிட்டா மட்டும் தான் ரகுவ உன்னால ஏத்துக்க முடியும்.

அதுக்காக உடனே அவனை புரிஞ்சி ஏத்துக்கோனு அத்தை சொல்ல வரல, கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணுடா.. அதுக்காக அத்தைக்கிட்ட கோவமா இருக்காத மிதுமா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.." அவள் தாடை பிடித்து தன்னை பார்க்க செய்து, பாவமாக சொல்ல, மிதுவுக்கே ஒருமாதிரி வருத்தமாகி போனது.

"ப்ச்.. எனக்கு இந்த செண்டிமெண்ட் டாக் எல்லாம் வேணாம்.. நீங்க என்ன சொன்னாலும் சரி நீங்களும் உங்க பையனும் எனக்கு செஞ்சது மிகப்பெரிய தப்பு தான்.. என்னால உங்க ரெண்டு பேரையும் என்ன பண்ணாலும் ஏத்துக்க முடியாது.." மது கரத்தை தட்டி விட்டு, கூடத்திற்கு வந்து விட்டாள் சிலுப்பிக்கொண்டு.

வயலுக்கு செல்ல வேண்டி வீர் தயாராக அங்கு அமர்ந்திருக்க, அவனை பார்த்தும் பார்க்காதது போல எதிரில் அமர்ந்து கால்மேல் கால் போட்டு ஆட்டியவள், டிவியை ஆன் செய்து இஷ்டத்திற்கு சேனலை மாற்றிக்கொண்டிருந்த மிதுவின் மனம் எதிலும் லைக்கவில்லை.

டிவி ரிமோட் அவள் கையில் கதறிக்கொண்டிருக்க, டீயை எடுத்து வந்து தன்னிடம் கொடுத்த மனைவியை கண்களில் பருகிய வீர்,

"ஏமதூ, ற்கனவே சொல்லி இருந்தேன்னுல்ல என் பாலிய நண்பன் பொண்ணு கல்யாணத்துக்கு போவணும்னு, இன்னும் ரெண்டு நாளுல கல்யாணம், அவன் இன்னைக்கே வற்புறுத்தி கூப்பிட்றான். என்னாலும் மறுக்க முடியல, சாயங்காலம் தயாரா இரு டி, ந்நா வேலை முடிஞ்சி வந்ததும் புறப்பட சரியா இருக்கும்.."

மிதுவை ஓரக்கண்ணால் பார்த்தபடி, தகவலாக சொன்ன கணவனை புரியாமல் பார்த்த மது, "நீங்க எப்ப மாமா கல்யாணத்துக்கு போகணும்னு சொன்னீங்க.. அதுவும் இம்புட்டு அவசரமா ரெண்டு நாளுல கல்யாணமா அப்டி எதுவும் சொன்னதா எனக்கு நியாபகம் இல்லையே.." குழப்பமாக யோசித்த மனைவியை கனலாக முறைத்து வைத்தான் வீர்.

மகன் மருமகளை தனியாக விட்டால் தான் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் என்றெண்ணி வீர் சொல்ல, அவன் மக்கு மனைவிக்கு விளங்கவில்லையே!

"வர்ற வர்ற எல்லாத்தையும் மறக்குறதே ஒனக்கு வேலையா போச்சி டி.. சொன்னா சொன்னதை மட்டும் செய்யி, அத்தவுட்டு கேள்வி கேட்டு வாங்கி கட்டிக்காத.. போடி போயி சப்பாட்டு பைய கொண்டா.." காரணமே இன்றி எரிந்து விழுந்த கணவனை திருத்திருவென விழித்தபடி மீண்டும் அடுக்களைக்குள் செல்ல, வீர் போட்ட சத்தத்தில் இங்கு மிதுவும் அதிர்ந்து போனாள்.

"யப்பா, இவரே இப்படி கத்துறதால தான், அந்த காண்டாமிருகமும் இவரை போலவே கத்தி மிரட்டுரான் போல.. கொஞ்சம் விட்டிருந்தா காது ஜவ்வே விட்டிருக்கும் போல, எவ்வளவு சவுண்டு.." மனதில் நினைத்து கலவரமானவள், வீர் கத்த துவங்கிய போதே அவளே அறியாது கைக்கு வந்த சேனலை வைத்திருக்க,

அதில் ஆணும் பெண்ணும் தீவிர இதழ் முத்தத்தில் திளைத்திருக்கும் காட்சி ஓடியதை தாமதமாகவே கண்டு மீண்டும் அதிர்ந்த மிது, திரும்பி வீரை பார்க்க, வீர் எப்போதோ மனைவி பின்னோடு சென்றிருந்தான்.

வீர் அங்கில்லை என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டு நெஞ்சை நீவிக்கொண்டவளின் செவி அருகே வீசிய வெப்பக்காற்றில், தேகம் சில்லிட்டு போன மிது, அவசரமாக காற்று தீண்டிய திசைப்பக்கம் திரும்பிய நொடி, பச்சக்.. பச்சக்.. முத்த சத்தத்துடன், வஞ்சனை இல்லாது கவ்வி உறிஞ்சப்பட்டது பாவையின் வரி இதழ்கள்.

மனைவி அருகில் இல்லாது விழிப்பு தட்டி எழுந்த ரகு, கண்ணை கசக்கிக்கொண்டு வெளியே வர்ற, அங்கு டிவியில் ஓடிய காட்சியை கண்டதும் அவன் தந்தை சத்தமில்லாது ஓடி ஒளிந்ததையும், மனைவி மிரண்டதையும் பார்த்து குறும்பு புன்னகை அவன் உதட்டில் மிளிர,
பூனைபோல நெருங்கி விட்டான் மிதுவை.

இடையில் கைலி மட்டும் அணிந்து, கருகரு சுருள் ரோமங்கள் நிறைந்த வெற்று மார்பினை மறைக்காது, நடு கூடத்தில் வைத்து அக்கிரமம் செய்யும் கணவனை, கண்கள் விரிய அச்சத்துடன் கண்ட காரிகையின் இடையில் அழுத்தமாக தஞ்சம் புகுந்தது ஆண் கரம்.

அதில் உடல் நெளிந்து அவனை தள்ள முயற்சித்தவளை தடுத்த ரகு, முழுதாக அவள் இதழை ருசித்த பின் மெதுவாக அவளை விட்டவன், "இம்புட்டு தகிரியமா இங்கன உக்காந்து இந்த மாதிரி சீனெல்லாம் நானே பாத்தது இல்ல டி, தனியா பாத்து சந்தோசபடுறதோட சரி.. ஆனா நீ பயங்கரமான ஆளுதே, எங்க அப்பா முன்னாடியே சீன ஓட்டி, அவரையே ஓட விட்ட பாரு.."

அவசரமாக தன்னை சரி செய்துகொண்டு தள்ளி அமர்ந்த மனைவியிடம், நக்கலாக சொல்ல, மிது முகம் படபடப்பில் வெளிறி விட்டது.

"ச்சீ.. உன்ன மாதிரி என்னையும் நினைச்சி அபாண்டமா பேசாத.. ஏதோ தவறுதலா எனக்கே தெரியாம வந்திடுச்சி. பெரியவங்க முன்னாடி இங்கீதம் இல்லாம நடந்துக்க நான் ஒன்னும் உன்ன மாறி வெக்கம் கெட்டவ இல்ல, வீரா.."

சட்டென துளிர்த்த கோபத்துடன், விரல் நீட்டி அவள் பேசியதை கூட அவன் கண்டுகொள்ளவில்லை, ஆனால் கடைசியாக மனைவி சொன்ன வீரா என்ற பெயரில் வெறியாக முறைத்தான் அவளை.

தந்தை பெயர் அல்லவா. அவனே தேவை இல்லாத இடத்தில் அப்பெயரை உச்சரிக்க மாட்டான். பள்ளி கல்லூரிகளில் கூட வீரேந்திர ரகுபதி என்ற பெயரை சுருக்கி தவறுதலாக அவனை வீரா என்று அழைத்து விட்டால் மூக்கை பஞ்சர் பண்ணி விடுவான்.

"வெறும் ரகுபதி போதாதா, எதுக்கு முன்னாடி அப்பா பேரையும் சேர்த்து வச்சீங்க.. என்னைய வெறுப்பேத்தவே வீரா வீரானு கூப்ட்டு வம்பு பண்றானுங்க.." என அடிக்கடி மது வீரிடம் மல்லுக்கு நின்ற கதை அதிகம். அப்படி இருக்க மிது வீரா என்று சொல்லவும் சுர்ரென வந்து விட்டது அவனுக்கு.

"ஏய்.. இன்னொரு தரம் அப்டி பேர் சொல்லாத, ஒழுங்கா மாமா சொல்லி கூப்பிடு டி.." பற்களை கடித்தான் ரகு.

"முடியாது, எனக்கு வசதியான பேரை சொல்லி தான் என்னால கூப்பிட முடியும்" அவளும் ஏட்டிக்கு போட்டி நின்றான்.

"இப்படி ஏடாகூடம் பேசுன, அடிச்சி மூஞ்ச கீஞ்சலாம் குழப்பிடுவேன் டி.. அது எங்க அப்பா பேரு, அப்டி கூப்டா எனக்கு கண்டமேனிக்கு கோவம் வரும். என் அம்மா எப்டி அவங்க புருசன மாமானு சொல்லி அழகா கூப்பிடுறாங்கலோ, அப்டித்தே நீயும் என்னைய மாமானு கூப்பிடனும்.." கட்டளையாக சொன்ன ரகுவை, உள்ளுக்குள் தோன்றிய உற்சாகத்துடன் பார்த்த மிது,.

"ஓஹ்.. சாருக்கு இப்டி ஒரு வீக் பாய்ண்ட் இருக்கா.. இப்ப பாரு டா இதை வச்சே உன் பிபிய எகிற விடுறேன்" மனதில் கருவியவளாக,

"என்னால நீ சொல்ற மாதிரி எல்லாம் கூப்பிட முடியாது, வீரானு தான் சொல்லுவேன். என்னடா வீரா பண்ண பண்ண முடியும் உன்னால.."

அவன் சொல்ல வேண்டாம் என்றதற்காகவே வேண்டுமென்றே கத்தி சொன்ன மிதுவை, ரகுபதி அடிக்க பாய, அவனுக்கு முன்னதாக சுதாரித்தவளும், ரகுவை கடுப்பேத்தி விட்ட மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டே ஓடி, மது வீரிடம் பாதுகாப்பாக ஒளிந்து கொண்டாள்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 12
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top