• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

அத்தியாயம் 1

Administrator
Staff member
Messages
323
Reaction score
243
Points
63
வா வசியக்காரா!

அத்தியாயம் - 1

ஜீ பூம்பா.. லாஜிக் பாத்து இந்த கதைய படிச்சா மூளை குழம்பி போவீங்க.

பல ஏக்கரை சுற்றியும் வான் தொடும் தூரம் பெரிய மதில் சுவர்கள் எழுப்பட்டு, அதனுள் சொர்கலோகத்திற்கே இணையாக கட்டப்பட்டிருந்த அரண்மனைக் கோட்டையில் உள்ளும் வெளியும் மஞ்சள் விளக்குள் மூலம் விட்டு விட்டு எரிந்து ஜொலித்துக்கொண்டிருந்தது.

அங்குள்ள பணிபெண்கள் அனைவரும் மார்பு வரையிலான ஆபரணம் கோர்த்த ஆடையினை அணிந்து, தங்களுக்கு கொடுப்பட்டுள்ள பணிகளை நேர்த்தியாக செய்துகொண்டிருக்க,

ஆண்கள் படையோ கையில் வில்லும் அம்பும் வைத்துக்கொண்டு போர்த்தொடுக்கும் உடைகளில், அக்கோட்டையினை பாதுகாத்து கண் பார்க்குமிடமெங்கும் சிப்பாய்களாக நடந்துகொண்டிருந்தர்.

"இன்று என்ன அதிசயம் போல் அரண்மனையே அமைதியாக உள்ளது" பணிப்பெண் ஒருத்தி சத்தமில்லாது கிசுகிசுக்க செய்தாள்.

"ஓ.. இவ்வரண்மனைக்கு நீ புதிதாக வந்தவள் அல்லவா. அதான் விபரம் புரியாமல் கேட்கிறாய் அம்மையே! இன்று அரசருக்கு கன்னி விருந்து படைக்கும் ஏற்பாடு அரசபையில் நடந்துகொண்டிருக்கிறது" மற்றொரு பணிப்பெண் புதியவளுக்கு விளக்கம் சொல்ல, கன்னி விருந்தா அதிர்ந்து விழித்தாள் அவள்.

"கன்னி விருந்து என்றால் பெண்ணுக்கு விருப்பம் உண்டோ இல்லையோ, விருந்து அனுபவிக்கும் நபர் எந்த பெண்ணை கை காட்டுகிறானோ அவளோடு விடிய விடிய இன்பம் கண்டு, ஆயுளுக்கும் அப்பெண்ணை தங்கள் ஆசை நாயகியில் ஒருத்தியாக பயன்படுத்திக் கொள்ளலாம்"

"என்ன அம்மையே எதற்கு இந்த திடீர் கன்னி விருந்து என புரியவில்லையா.. தெளிய சொல்கிறேன் கேள். நம்முடைய அரசர் அதிவீரராவ் மகாதேவன் அவர்கள், தம்முடைய அரசர் பதவியை தனது மூத்த புதல்வன், ரணதீர வஜ்ரமகாதேவன் அவர்களுக்கு மடிசூட முடிவெடுத்து உள்ளார்.

ஆனால் தனக்கு பின் தன்னை போலவே தன் ராஜ்யத்தை கட்டி ஆட்சி செய்ய, இளவரசருக்கு போதுமான வலிமை உண்டா என சோதிக்கவே பல இக்கட்டான சவால்களை இளவரசருக்கு வழங்கினார்.

அதில் வீரமே முதன்மை பெற்றிருக்க, துணிவாக எவ்வொரு சவாலையும் சந்தித்து, வலி, ஆபத்து, எதிர்பாரா நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றையும் கடந்து வந்த இளவரசுரும் தனக்கான கடுஞ்சோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டார். அதற்கு வெகுமதியாக தான் இந்த கன்னி விருந்து ஏற்பாடு" என்றாள் ரகசியக் குரலில்.

"என்ன சொல்கிறீர்கள் அம்மையே!! அரச பதவியை இளவரசருக்கு வழங்க இருக்கிறார்களா? அதற்காக தான் இந்த கன்னி விருந்தா?" அதிர்ந்து கேட்ட பெண்மணியை இவளும் கவலையாக தான் பார்த்து வைத்தாள்.

புதிதாக வந்தவள் என்றாலும் மகாதேவன் அரச குடும்பத்தை பற்றி நன்கு அறிந்தவள் ஆயிற்றே! அரசாட்சி என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தி அதில் இன்பம் காணும் கொடும்மாட்சி புரியும் இவர்களின் மத்தியில், குடும்பம் நடத்துவதே பெரும் அக்கப்போர் தான் அடிமைவாதி மக்களுக்கு.

அதிவீரராவ் அரசர், மாதத்தில் ஒரு கன்னியுடன் சல்லாபம் காணும் அரக்கன் என்றால், அவர் மகன் ரணதீர வஜ்ரன் நாளுமொரு பெண்ணுடன் வாழ்க்கையை புசித்து வாழும் பேரரக்கன்.

இதோ இன்று கன்னி விருந்து. அப்பணிபெண் அதிர்ந்து கேட்டதை போல, இங்கே அரச சபையில் நீண்ட படிக்கட்டு மீதுள்ள சிங்க முகம் கொண்ட அரியாசனத்தில், அரசர் குலத்து வாரிசான ரணதீர வஜ்ரமகாதேவன் அரசாலும் அரசனுக்கே உண்டான தோரணையோடு, பெரிய தொடை மீது கை ஊன்றி கத்தி கண்களோடு அமர்ந்திருந்தான்.

கழுத்து வரை உள்ள ராஜ கேசம், நெற்றித் திலகமிட்ட நீண்ட இறுகிய வர்ண முகம், கண்டு கண்டு புஜங்கள் பளபளக்க, படி படியான இரும்பு வயிறுக்கு மேல், அகண்டு விரிந்து புடைத்து துடிக்கும் மார்பக கோளங்கள் என பார்ப்போறை அச்சுறுத்தினாளும், எந்த பெண்ணையும் மயக்கவைக்கும் வசியத்தை அங்குதான் வைத்திருக்கிறான் இந்த வசியக்காரன்.

மொத்த ஊர் மக்களும் அவனுக்கு கீழே உள்ள சிவப்பு விரிப்பானில் கூடி இருக்க, எங்கே தங்கள் வீட்டு பெண்ணை இளவரசர் கைக் காட்டி விடுவாரோ என்ற பதைபதைப்போடு சிலர் காத்திருக்க, அரசபையின் வலது புறத்தில், அனைத்து கன்னிப் பெண்களையும் அலங்கரித்து தனித் தனியாக நிற்க வைத்து இருந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது அழகிய கன்னிகளை தான் அங்கு நிறுத்தி இருந்தனர். அதில் முக்கால்வாசி பெண்களும் எப்படியாவது இளவரசரை தன்ப்பக்கம் வளைத்துப் போட்டு, தாசியாக மாறி காலத்திற்கும் அவனது செல்வங்களை ஆண்டு வசதியாக அனுபவிக்கலாம் என்ற பேராசையில் கண்கள் மின்ன நிற்க,

சிலர் கற்பு போனால் காதலித்தவனும் விட்டு சென்று விடுவானே என்ற கவலையில் இருக்க, இன்னும் சிலர் தாய் தந்தையை பார்த்தபடி அழுகையில் கரைந்து நின்றனர்.

"இன்று எனது மைந்தனனுக்கு விருந்தாக எந்த பெண்ணிற்கு அதிர்ஷ்டம் கிடைக்கவிருக்கிறது என்று பார்த்து விடுவோம். தொடங்குங்கள் ஆட்டத்தை.." ரணதீரன் அருகில் மற்றொரு அரியாசனத்தில் அமர்ந்திருந்த, அதிவீரராவின் அரச கட்டளைக்கு இணங்க, அங்கு கன்னிகளின் ஆடலும் பாடலும் கோளாகலமாக ஆரம்பம் ஆனது.

அவனை மயக்க நினைத்த பெண்கள், அக்கால முறையிலான முத்துக்கள் பதித்த, பாதி மார்பு மறைத்த வண்ண கச்சைகள் அணிந்து, வளைந்த இடையும் அதில் உள்ள குழியும் பளிச்சிட்டு, முட்டி வரையிலான அங்கவஸ்திரம் ஜொலிக்க, இடை வளைத்து, குனிந்து நெளிந்து, கரம் தூக்கி ஆடும் ஒவ்வொரு கன்னியின் நடனங்களையும் கண்டு ராஜபோதை ஏறியது ரணதீரனின் கூரிய நயனங்களில்.

மேலும் இரண்டு கன்னிகளே ரணதீரனை மகிழ்விக்க மீதம் இருக்க, "என்ன உங்களுக்கு மட்டும் தனித் தனியே கூற வேண்டுமா? ம்ம்.. நடனமாடுங்கள்" கட்டளையிட்ட அரசரை கண்டு அஞ்சிய கன்னிகள், ஒருவர் முகத்தை மற்றொருவர் கலக்கமாக பார்த்துக் கொண்டனர்.

"நீ முதலில் செல்" பார்வையாலே தவிப்பாக சொன்ன கன்னியை, மிரண்டு பார்த்தாள் மற்றொரு கன்னி.

"எனக்கும் அச்சமாக தான் இருக்கிறது. ஆனால் நமக்கு வேறு வழி இல்லையே! என்னை விட உன் நிலை மிக மோசம். நானாவது என்னை எப்படியாவது பார்த்துக்கொள்வேன். தாசியாக வாழ்ந்தாலும் என் விதி என்னோடு போகட்டும். ஆனால் நீ அப்படி அல்ல உனக்கென்று நிறைய கடைமைகள் உள்ளது. காதல் உள்ளது.

முன்பே நாம் இருவரும் பேசிக் கொண்டது தான், நான் இறுதியாக செல்கிறேன். நான் ஒருத்தி துணைக்கு இருக்கும் போதே மனதில் தைரியம் கொண்டு ஆடிவிடு" என்ற கன்னி அவள் உயிர் தோழி சகுந்தலை.

"சரி" என கலங்க சொன்ன கன்னி, மறக்காமல் தலையில் முக்காடு இட்டிருந்த மினுக்கும் துணியால் கண்கள் மட்டும் தெரிய மூக்கு வரை கட்டிக் கொண்டு, தாளத்திற்கு ஏற்ப இடை நெளித்து நளினங்களே தோற்று விடும் அளவிற்கு, அபிநயம் பிடித்து, நயனங்கள் உருட்டி நடனம் ஆட துவங்கினாள்.

முகத்தை பார்த்து தான் இளவரசர் கன்னியை தேர்ந்தெடுப்பார் என்ற நப்பாசையில், இரு பெண்களும் விளையாட்டுத்தனமாக திட்டங்கள் தீட்டி இதோ அரக்கனின் கத்திமுனை பார்வையில் வசமாக சிக்கி இருந்தனர்.

மற்ற பதினெட்டு பெண்களை போல முகத்தை காட்டி இருந்தால், பத்தோடு பதின்னொன்று என நினைத்திருப்பானோ என்னவோ! வீணாக பயந்து முகத்தை முக்காடிட்டு மறைத்து, அரக்க கண்களில் சுவாரிசியத்தை கூட்டி விட்டனர் இருவரும்.

அதிலும் இவள். ப்பா.. உடல் வனப்பா அது!! ஆண்களின் கண்களை கொக்கிப் போட்டு இழுக்கும் பிரமிக்க வைக்கும் உடல் வனப்பு. அபார வளர்ச்சியில் கிறங்க வைக்கும் மேக பந்துகள். அதற்கு கீழ் ஓட்டிய வயிற்றில் ஆழ்துளை கிணறு வெட்டி, அதில் எளிதாக நீர் பாசனம் செய்ய வழி வகுத்து நின்ற வழுக்கும் பருத்தி இடைகளில், அவளது அசைவுக்கு ஏற்ப இடை சங்கிலி ஏறி இறங்கி ரணதீரனை வெகுவாக ஈர்த்தது.

கரிய மை தீட்டி பளிச்சென்று மினுமினுக்கும் கருவண்டு அம்பகம் கொண்ட அவள் அம்பை.

இரு அம்பகம் மட்டும் பார்த்தே கண்டுகொள்ளலாம், இவள் தேவலோக மங்கைக்கே சவால் விடும் அழகியில் ஒருத்தி தான் என்று.

தடிமனான கீழ் உதட்டின் நுனியை பற்களுகிடையே கடிதபடி, அம்பையின் ஒவ்வொரு அசைவையும் நுனுக்கமாக கண்டு, பழுப்பு பார்வையில் போதைகொண்ட ரணதீரன், அடுத்ததாக ஆடிய சகுந்தலையையும் பார்க்க தவறவில்லை.

"இருபது கன்னிகளின் நடனமும் அபாரம். ஆனால் ஆயுள் நாயகியாக தேர்ந்தெடுக்க ஒருத்திக்கு மட்டும் தானே யோகம் இருக்கிறது. ஆகையால் எனது மைந்தன், எந்த கன்னியை பிடித்து கை நீட்டுகிறானோ அவளே எனது மைந்தனின் ஆயுட்கால ஆசை நாயகி" அரசர் அதிவீரராவ் உறுதியாக கூறிட, சபலப் பெண்கள் யாவும்

"இளவரசர் எப்படியாவது தன்னை தேர்ந்தெடுத்துவிட வேண்டுமே!" என்ற ஆவலோடு கையை பிசைந்து நிற்க, அவர்களின் பின்னே "ரணதீரன் கண்ணில் தாங்கள் மட்டும் பட்டுவிடவே கூடாது எம்பெருமானே" என வேண்டியபடி அம்பையும் சகுந்தலையும் கலவரமாக நின்றிருந்தனர்.

அது கழுகு பார்வையில் தப்பாமல் போகுமா..! அம்பையின் பளிச்சிடும் அம்பகம் காட்டும் அத்தனை வித்தைகளையும் வசியன் கூர்ந்துகொண்டு தானே இருக்கிறான்.

"உன் வீரத்தின் வெற்றி பரிசு உன் கண் முன்னே. சொல் ரணதீரா, உமக்கு எந்த கன்னி வேண்டும்?" தந்தையின் கேள்விக்கு பதில் கூறாது,

ஆழ்ந்த அழுத்தமான பார்வையால் ஓரமாக தலை குனிந்து நின்றிருந்த அம்பையை துளைத்துக் கொண்டிருக்க, அதிவீரராவும் அவன் பார்வை போன போக்கைக் கண்டு அவன் தோளை தட்டியவராக,

"ம்.. கன்னியை தேர்ந்தெடுத்தாயிற்று, அப்பெண்ணை அழைத்து வாருங்கள்" அம்பையை நோக்கி கைக் காட்டி தூதுவர்களிடம் கட்டளை இட, அரசர் கை நீட்டிய கன்னி யாரென்று, மொத்த பேரும் ஆவலாக அவளைத்தான் திரும்பி பார்த்தனர்.

அதுவரை தலை குனிந்து நின்று சகுந்தலையோடு எதையோ பேசி முணுமுணுத்துக் கொண்டிருந்த அம்பை, அனைவரின் பார்வையிலும் மேனி குறுகுறுத்து மெல்லத் தலைக் தூக்கிப் பார்த்தவளுக்கு, ஹக்..அதிர்ச்சியில் மூச்சே நின்று போனது.

ரணதீர வஜ்ரனின் நெஞ்சுரசும் திடீர் நெருக்கத்திலும், அவனது சிவந்து விழுங்கும் கோர விழிப்பார்வையும் கண்டு, ஆஆஆஆஆஆஆஆஆ... என்ற பெருத்த அலறல் சத்தத்தில்,

"ஏய் ச்சீ..எந்திரி டி நாயே.. எப்பப்பாரு என்னத்தையாவது பாத்துட்டு வந்து அதையே கனவா கண்டு, நீ பயந்து கத்துறதும் இல்லாம, உன்னைய எழுப்பும் போதெல்லாம் என்னையும் சேர்த்து பயம்புறுத்தி பதற வைக்கிறதே வேலையா போச்சி உனக்கு" அலுத்துக்கொண்ட ஈஸ்வரி, தூக்கத்தில் இருந்து வாரிசுருட்டி எழுந்து திருத்திருமுழியை மாற்றி,

"சாரி மம்மி" என அசட்டு சிரிப்பு சிரித்தவளை கண்டு தலையில் அடித்துக்கொண்டார்.

"இன்னைக்கு என்னவோ முக்கியமான ஆராய்ச்சி இருக்கு. வேலையோட ரிசர்ச் சென்டர் போகணும், டீன் வர்ற சொன்னாரு அப்டி இப்டினு நைட்டெல்லாம் எங்கள தூங்க விடாம அந்த அலம்பு பண்ணிட்டு, இத்தனை நேரம் வரைக்கும் இழுத்து போத்திட்டு தூங்குற"

"ஐய்யோ.. ஆமா மம்மி மறந்தே போய்ட்டேன். எல்லாம் இந்த கனவால வந்துது" தலையினை பிடித்து அமர்ந்து கொண்டவளுக்கு, கனவில் கண்ட அந்த கோர விழிப்பார்வையே மீண்டும் மீண்டும் நினைவில் தோன்றி, உள்ளுக்குள் ஒருமாதிரி படபடப்பை உண்டு பண்ணியது.

"சரி சரி நேரமாச்சு டி எழும்பி போயி குளி, குளிச்சிட்டு போட்டுக்க துணி எடுத்து வச்சிட்டேன். கிளம்பி வந்து ரெண்டு வாய் சாப்ட்டு பொறப்படு" என்ற ஈஸ்வரி தன் வேலையை கவனிக்க சென்றிட,

அப்போதும் அந்த கனவில் இருந்து வெளிவர முடியாமல் தடுமாறி, சில கணங்கள் கழித்த பின்னே நேரமாவதை உணர்ந்து பதறி எழுந்தவள்,

"அச்சோ நான் ஒரு மடச்சி, எவ்வளவு நேரம் தூங்கி இருக்கேன். இன்னும் அரைமணி நேரத்துல எப்டி குளிச்சிட்டு ரிசர்ச் சென்டர் போறது" தனக்கு தானே புலம்பிக் கொண்டு குளியலறைகுள் ஓடினாள் ஐஸ்வர்யதேவி.

பெயருக்கு ஏற்றது போல ஐஸ்வர்யம் பொங்கும் வசீகர முகம் கொண்ட அழகி. வயது 25. பண்டைய கால பழமையான இறந்த உடல்களை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும் உதவி ஆய்வாளராக இருக்கிறாள்.

ஏற்கனவே தயாராக வைத்திருந்த பாத் டப்பில் உள்ள சுடு நீரில் ஆவிப்பறக்க குளித்து முடித்து, தனது பண்ணீர் உடலில் துண்டை சுற்றிக்கொண்டு வந்த ஐஸ், தலையை கூட காய வைக்க நேரமின்றி, நேர்த்தியாக ஐயன் செய்து வைத்திருந்த சுடிதாரை அணிந்தவளாக,

மிதமான ஒப்பனையில் முகத்தை மட்டும் அழகு படுத்திக்கொண்டவள், கடுகு சைஸ் கருப்பு பொட்டு நெற்றியில் வைத்து, வெட்டி விட்ட கூந்தலை விரித்து விட்டு, பேக்கை எடுத்துக்கொண்டு அவசரமாக ஓடி வந்த மகளை, அவள் மறுக்க மறுக்க உண்ண வைத்தபின்னே ஆய்வாகத்திற்கு அனுப்பி வைத்தாள் ஈஸ்வரி.

இந்த ஆராய்ச்சி, ஐஸ்வர்யாவின் வாழ்க்கை பயணத்தையே மாற்றி அமைக்க போவதை முன்பே அறிந்திருந்தால், அவளை கனவு கண்டுக்கிட்டே தூங்கி இருக்கட்டும் என்றே விட்டிருப்பாளோ என்னவோ!

இனிமே ஒன்னுமே பண்ண முடியாது ஈஸ்வரி அம்மா, இட்ஸ் டூ லேட். உன் மகளுக்கு சனி தலைக்கு மேல ஆட தொடங்கியாச்சு.

தொடரும்.
 
Top