Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
275
Reaction score
296
Points
63
அத்தியாயம் - 27

உடல் அசதி, மன சோர்வு, அடுத்து என்ன நடக்குமோ என்ற அதீத அச்சம் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஆழ்ந்த உறக்கம் யாதவியை ஆட்க்கொண்டதோ!

காரின் பின் சீட்டில் வாட்டமாக அமர்ந்து உறங்கிக்கொண்டிருந்தவள், கார் ஏர்போர்ட் செல்லாமல் வழி மாறி செல்வதை கூட உணரவில்லை. நீண்ட தூர பயணம் மேற்கொண்டதில் நா வறண்டு தாகம் எடுத்தது போலும்.

கை மட்டும் துழாவி தண்ணீர் கேனை தேடிட, அது தானாக மூடி திறந்து கைக்கு சேர்ந்ததும், கண் திறவாமல் குடித்த நங்கை, மீண்டும் அதனை வைக்க போகும் போது தானாக கையில் இருந்து தண்ணீர் கேன் வாங்கப்பட்டதும், உறக்கத்தை தொடர போனவளின் முகம் சட்டென யோசனையில் சுணங்கியது.

நித்திரை கலைந்து கண் விழித்த பேதைக்கு பேரதிர்ச்சி தான் அருகில் இருந்தவனை கண்டதும்.

"மாமா.. நீங்க எப்டி என் கார்ல.." வெள்ளை சட்டைகாரன் சாவகாசமாக அமர்ந்து, மிரண்டு விழித்த மாமன் மகளை சுவாரிசியம் பொங்க பார்க்கலானான்.

"நம்ம கல்யாணத்துக்கு ஊர்கோலம் போறோம் டி.." நக்கலாக உரைத்த வார்த்தையில் மூக்கு நுனி சிவக்க முறைத்த யாதவி, காருக்கு வெளியே தெரிந்த புது பாதை கண்டு நெஞ்சி நடுக்கம் கண்டாள்.

"இது என்ன புது வழி.. டிரைவர் காரை ஏர்போர்ட் விடுங்க.. ஹெலோ டிரைவர் உங்ககிட்ட தான் சொல்றேன்.." அவள் பதைபதைப்பில் கத்த,

"ஐயா கோவிலுக்கு போக சொல்லி உத்தரவு போட்டுருக்காருங்க மா.." பணிவாக சொன்னபடி திரும்பிய ஓட்டுநரும் சிவகுரு ஆளாகி போக, நொந்து போன யாதவி அவனை தீயாக முறைப்பது எதையும் சட்டை செய்யாதவனாக,

"இன்னும் பத்து நிமிசத்துல ரீச் ஆகிடுவேன், எல்லாம் அங்க சரியா இருக்கா.. காதும் காதும் வச்சது போல முடிச்சிட்டு போயிட்டே இருக்கணும்.. விஷயம் வெளிய லீக் ஆக கூடாது" காரை விட்டு இறங்கும் வரையில் தீவிரமாக போனில் பேசியபடியே வந்தான்.

"நீங்க செய்றது எதுவுமே சரி இல்ல.. அனாவசியமா என் வாழ்க்கைல குறுக்க வராதீங்க, உங்களுக்கு நல்லது இல்ல சொல்லிட்டேன்.." விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்து அவள் கத்த, நீட்டிய விரலை கப்பென பிடித்துக்கொண்ட குரு,

"என் நல்லது என்னனு எனக்கு தெரியும்.. அம்மணி உனக்கு தான் இனி நல்லதே நடக்காது.. சும்மா தொனதொனக்காம மூடிட்டு வாடி.. " விறுவிறுவென கோவிலுக்குள் இழுத்து செல்ல, வீற்றிருக்கும் முருகர் கோவிலை அண்ணாந்து பார்த்தே பதகளித்தவள், கோவிலுக்குள் எளிமையாக அமைக்கப்பட்டிருந்த திருமண செட்டப்பை கண்டு திகிலடைந்து போனான் யாதவி.

"விடுங்க என் கைய.. நான் போகணும்.." அவன் கரத்தை உதறி தள்ள போராட,

"போலாம் போலாம் அவசரப்படாத, கல்யாணம் முடிச்சிட்டு ரெண்டு பேத்துமா சேர்ந்து நம்ம புது வீட்டுக்கு போலாம்.." கூலாக சொன்ன சிவகுரு, அவளது திகைத்த விழிகளை பார்த்தவாறு, "இந்தா பட்டு சேல சீக்கிரம் கட்டிட்டு வா.." மங்களகரமான மஞ்சளும் நீலமும் கலந்த பட்டு புடவையை அவள் கையில் வைத்தவன், கூடவே நகைநட்டு பூவையும் கொடுக்க சிலையானாள் பாவை.

"என்னால முடியாது.. எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல, மீறி என்ன கட்டாயப்படுத்தனா, உங்க பேர்ல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பேன்.." சீற்றமாக உரைத்தவளை அழுத்தமாக பார்த்த சிவகுரு,

"ஹை இது கூட நல்லா இருக்கே, நீ அவ்வளோலாம் கஷ்டப்பட வேணாம் செல்லம்.. அந்தா நோக்கு கமிஷ்னரு, நேரா போயி அவராண்ட கம்ப்ளைன்ட் குடு என்ன வேணா பண்ணு, உன்னால ஒன்னும் அசைக்க முடியாது" திமிராக சிரித்தவனை வெறுப்பாக பார்த்த யாதவி, கமிஷ்னரை நோக்கி ஓடிட, இவனும் பின்னோடு தான் போனான்.

"சார் இவர் என்ன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண பாக்குறார்.. எப்படியாவது என்ன இவர்கிட்ட இருந்து காப்பாத்துங்க சார்.." கமிஷ்னரின் முன்பு மூச்சு வாங்க நின்ற யாதவி, கை கூப்பி கெஞ்ச, அவளை பரிதாபமாக பார்த்தார் அவர்.

"பயப்படாதமா, குரு தம்பி அப்பவே சொன்னார், என்னதான் ரெண்டு பேரும் உருகி உருகி காதலிச்சி இருந்தாலும், சில விஷங்கள பாத்தா நீ அப்நார்மலா ரியாக்ட் பண்ணுவேன்னு.. அது சரியா போச்சி,

ரொம்ப பயந்த சுபாவம் இருக்கியேமா.. கல்யாணம் பண்ணினா குரு உன்ன நல்லா பாத்துப்பார், தைரியமா போய் ரெடியாகிட்டு வா நான் உனக்கு பாதுகாப்பா இங்கேயே தான் இருப்பேன்"

அன்பாக சொல்லி அவள் தலை வருடி விட்டவராக, "கூட்டிட்டு போங்க குரு தம்பி" என்றபடி யாதவி கரத்தை அவன் கரத்தில் வைத்துவிட்டு அவர் போனில் பிஸியாகிட, கலவரமாக நின்றவளை கேலியாக பார்த்தான் சிவகுரு.

"சொன்னேன்ல உன்னால ஒன்னும் அசைக்க முடியாதுனு.. இப்ப நீயா போய் சேலைய கட்டி ரெடியாகுறியா இல்ல நானே களத்துல இறங்கவா.." பட்டு வேஷ்டியை காலால் தூக்கி, முட்டி தெரிய மடித்து கட்டி ஒரு தினுசாக இடை வளைத்து பார்த்தவனை, விழிகள் மிரள கண்டவளாக அவன் கை காட்டிய அறைக்குள் சென்றவளுக்கு படபடப்பில் மூச்சடைக்கும் நிலையானது.

காவ்யாவின் கடைசி நிமிடங்களை இப்போது நினைத்தாலும் நெஞ்சி நடுக்கம் கொள்ளும். சொந்த அண்ணனே இப்படி ஒரு துரோக செயலை செய்திருக்க, அதிலிருந்து ஆண்கள் மீது வெறுப்பு வந்து விட்டதென்றே சொல்லலாம். தங்கைக்கும் அதே நிலை ஏற்பட்டதில் திருமண வாழ்க்கையே கசப்பாக தோன்றி விட்டது.

இந்நிலையில் சிவகுரு படுத்தும் பாடு, அம்மாஆஆ.. எங்காவது கண் காணாத இடத்திற்கு ஓடி விடலாம் போல் இருந்தது.

"பட்டுகுட்டி மாமா குடுத்த பட்ட கட்டி முடிச்சிட்டியா.." உள்ளே வந்த அரைமணி நேரத்தில் கதவு தட்டும் சத்தம், கூடவே சிவகுருவின் அலப்பறை வேறு தாங்க முடியவில்லை அவளால்.

"யாது என்ன சத்தத்தையே காணல.. மாமா வரட்டா டி.." மீண்டும் மீண்டும் விடாமல் செய்யும் தொந்தரவில், அடடாஆஆ.. பற்களை கடித்தாள் யாதவி.

"நீங்க பண்றதெல்லாம் கொஞ்சம் கூட சரி இல்ல சொல்லிட்டேன், டென்ஷன் படுத்தாம போங்க.." உள்ளிருந்து இவள் குரல் எரிச்சலாக வந்து விழுந்தது.

"உன்ன முழு நேரமும் டென்ஷன்ல வச்சுருக்குறது தான் இனிமே என் வேலையே.. அடுத்த பத்து நிமிசத்துல நீ வெளிய வரல, நான் உள்ள இருப்பேன்.." சொன்னதை செய்து காட்டும் தீவிரம் அவன் குரலில் உள்ளதை உணர்ந்தவளாக, வேக வேகமாக தயாராகி கதவை திறந்தாள் மாது.

"அப்பாஆஆ.." வாய் பிளக்காத குறையாக, கூலர் வழியே அவன் நோக்கிய பாகமெல்லாம் ஆபத்தானவை.

"என்ன இருந்தாலும், என் அளவுக்கு நீ அழகில்ல டி.. ரொம்ப சுமார் பீஸ் தான்.." ஐவிரலை உதறிக்காட்டி உதார் விட்டவனை மைவிழிகள் முறைத்து நோக்கின.

"சரி சரி முறைச்சி பாத்தே டைம் வேஸ்ட் பண்ணாம வா சட்டுபுட்டுனு கல்யாணத்த முடிப்போம்" கையோடு அவளை மணமேடைக்கு அழைத்து செல்ல, அங்கிருந்தோர்களை கண்டதும் கண்ணீர் உடைபெடுத்தன பாவைக்கு.

"யாதுஊ.." நீண்ட வருடங்களுக்கு பிறகு மகளை மணக்கோலத்தில் கண்டு பெற்றவர்கள் உள்ளம் பூரித்து, மகளை வாரி அணைத்து கண்ணீரோடு முத்தமிட, உறைந்த பனியாக நின்றவள் கண்ணிலும் கண்ணீர் பெறுகியது.

"ம்.ம்மாஆஆ.."

"அழாத யாது.. எங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும்.. பிள்ளைய பெக்காம அரக்கன பெத்து வளத்து ஒரு பொண்ணோட சாவுக்கும், எங்க பேர புள்ளையோட சாவுக்கும் நாங்களே காரணமாகிட்டோம்.. அந்த பாவியால உனக்கும் ஆபத்து வந்து எங்கள எல்லாம் பிரிஞ்சிருக்க நிலைமையாகி போச்சி.."

யாதவி தாய் வேதனையாக சொல்ல, ராஜ்மோகன் மகளை கண்டதில் மிகவும் உணர்ச்சிவசமாக இருந்தார்.

"நீ திரும்பி வந்ததே பெரிய சந்தோஷம்.. அதை விட பெரிய சந்தோஷம், நீ நம்ம மாப்பிளைய உயிருக்கு உயிரா விரும்புறது.. இந்தியா வந்ததும் கல்யாணம் பண்ணியே ஆகணும்னு அவ்வளவு அடம் பண்ணியமே, அதான் திடுதிப்புனு ஏற்பாடு பண்ணிட்டேன் மாமானு மாப்பிளை சொன்னார்.." மோகன் சொன்னதை தொடர்ந்து,

"நல்லவேளையா மிதுக்கும் பெரியவனுக்கும் கல்யாணம் நடக்கல, இல்லைனா இவனையே மனசு நினைச்சிட்டு வாழுற உனக்கு எவ்வளவு பெரிய வருத்தமாகி இருக்குமோ.." அவள் அத்தையும் சேர்ந்து சொல்ல சொல்ல, இவள் அனல் பார்வை எல்லாம், இவளையே குறுகுறுப்பாக பார்த்துகொண்டிருந்த சிவகுருவை தான் தாக்கியது.

"அப்டியே அரசியல்வாதி புத்திய காட்டிட்டான் பிராடு.." மனதில் புகைந்தவள், தன் தாய் தந்தை, சிவகுருவின் அன்னை, பாதுகாப்புக்கு ஒருசில காவல் அதிகாரிகளை மட்டும் வைத்துக்கொண்டு எளிமையான முறையில் திருமணம் ஏற்பாட்டை செய்திருப்பதை யோசனையாக பார்த்தபடியே மணமேடையில் அமர வைக்கப்பட்டாள்.

மிதமான அலங்காரத்தில் அழகோவியம் போல இருந்தவளை மனதில் ரசித்தபடியே, ஐயர் கூறும் மந்திரங்களை சொன்னவன் சற்று நேரத்தில் எல்லாம், யாதவி கழுத்தில் மூன்று முடிச்சிட்டு நினைத்தது போலவே தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான் சிவகுரு.

அவன் இழுக்கும் திசையெங்கும் புடவை தடக்தடக்க பொம்மையாக தத்தி நடந்தவள், தன் வீட்டிற்கும் அழைத்து செல்லாமல், அவன் வீட்டிற்கும் அழைத்து செல்லாமல் தனி வீட்டுக்கு அழைத்து செல்வதை அந்நிலையிலும் புரியாமல் பார்த்தாள்.

"இத்தனை வருஷமா கல்யாணம் வேணாம்னு தட்டி கழிச்சவன், எப்டியோ மனசு மாறி உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டான் அதுவே என் மனசு நிறைஞ்சி போச்சி யாது..

உன்ன என் கூடவே வச்சிக்க தான் விருப்பம், ஆனா இவன் தான் நானும் என் பொண்டாட்டியும் கொஞ்ச நாள் தனியா இருக்க ஆசைப்படுறோம், வீட்ல இருந்தா கட்சி ஆட்களெல்லாம் அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணுவாங்கனு சொன்னான்..

யோசிச்சி பாத்தேன் எனக்கும் அதுதான் சரியா பட்டுச்சு, ரெண்டு பேரும் சந்தோசமா இருந்துட்டு வாங்க" ராஜேஸ்வரி சொல்ல, அதையே யாதவியின் தாய் தந்தையும் ஆமோதித்தவர்களாக மகளை வாழ்த்திவிட்டு, இரவு முதலிரவு ஏற்பாட்டை முடித்த கையோடு மூவரும் அங்கிருந்து கிளம்பி இருக்க, பதற்றம் தொற்றிக்கொண்டது பெண்ணுக்கு.

புதிய அறைக்குள் பிரவேசம் ஆகி சில கணங்கள் கடந்த நிலையில் பின்னிருந்து கதவு தாழிடும் சத்தத்தில், இதயம் எகிறி துடிக்க அசையாது நின்றிருந்தவளின் தோளில் சூடான சுவாசம் மோதியதும் கையில் இருந்த பால்சொம்பை இறுக பற்றியது அவளது வெண்டை விரல்கள்.

"காலைல பாக்க சுமார் பீசா இருந்தாலும், ராத்திரில பாக்க சும்மா கும்முனு இருக்கியே டி.. ஒருவேளை இந்த சேலைல பாக்க அப்டி தெரியிதோ!" வெல்வட் முதுகில் முத்து முத்தாக திரண்டிருந்த வியர்வை துளிகளை உஃப் என ஊதி ஹஸ்கியாக சொன்னவன், அவள் செவிமடலை உதட்டால் உரசிட தேக நடுக்கம் கொண்டாள் பாவை.

சட்டென விலகிகொண்ட யாதவி, அத்தனை தூரம் சொல்லியும் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கி விட்டானே என்ற ஆற்றாமையில் நின்றிருந்தவளின் நாசியில் வினோத வாடை உட்புகவே, தலை தூக்கி பார்த்தவளின் கருவிழி திகைப்பில் விரிந்தன.

வட்டமான வெண்புகை உஃப்ப்.. என அவள் முகத்தில் ஊதியவனாக, "என்ன டி பாக்குற.. நீ போன நாளுல இருந்து உன்ன மறக்க இதை புடிக்க ஆரமிச்சேன், கூடவே எப்பவாது இந்த புட்டி, இது ரெண்டும் எனக்கு நிம்மதிய தரும் டி..

ஆனா சோதனை என்ன தெரியுமா.." தன்னை மிரண்டு பார்க்கும் புது மனைவியை ஆழ நோக்கியவன்,

"குடிக்கிற வரைக்கும் சரியா கம்பெனி குடுத்துட்டு, உள்ள போன பின்னாடி திரும்பவும் உன் நியாபகத்தை அதிகரிச்சி விட்டு என்னைய கோமாளியாக்கி வேடிக்கை பாக்கும் பாரு.. அப்டியே நீ இருக்க இடத்துக்கே வந்து உன்னைய கொன்னு போடுற வெறி வரும் டி.." கேலியாக தொடங்கி கடுமையாக உரைத்தபடியே அவளை நெருங்கி வர்ற வர்ற, தொண்டை குழியில் ஈரம் வற்றி விட்டது அச்சத்தில்.

இத்தனை நேரமும் பெரிய மனிதன் தோரணையில் இருந்தவனின் இயல்பு நிலை மாறி, மெல்ல மெல்ல நிதானம் தவறிய நேரத்தில், யாதவி கையில் கிடுகிடுத்துக்கொண்டிருந்த பால் சொம்பை பிடுங்கிய சிவகுரு, யாதவி என்னவென நிதானிப்பதற்குள் மொத்தமாக அவள் தலையில் கவிழ்த்தி பெண்ணவளை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டான்.

தொடரும்.
 
Last edited:

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 27
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top