• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

அத்தியாயம் 38

Administrator
Staff member
Messages
309
Reaction score
251
Points
63
அத்தியாயம் - 38

புலந்தும் புலராத அழகிய காலைப் பொழுது, அன்று விடுமுறை தினம், நேத்ராவின் புண்ணியத்தால் தாமதமாக எழுந்த ராம், முகம் கணியாமல் குளித்து முடித்து வந்தவன் சட்டையை மாட்டிக் கொண்டு எதையும் கண்டு கொள்ளாது வெளியே செல்லப் போக, அப்போதே தூக்கம் கலைந்து கண் விழித்த நேத்ராவும் அவன் எங்கோ செல்லப் போவதை உணர்ந்தவளாக, "ராம் எங்கே போறீங்க, நில்லுங்க" என்றாளே எரிச்சலாக அவளை முறைத்து விட்டு மீண்டும் வெளியேறப் போனவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டவளின் இறுகிய அணைப்பில் உடல் விரைக்க நின்றான் ராம்.

"கூப்பிடுறது காதுல விழலையா, இன்னைக்கு ஆபிஸ் லீவ் தானே எங்கே கிளம்பிட்டீங்க ராம். இன்னைக்கு ஒருநாளாவது என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணக் கூடாதா" உள்ளுக்குள் ஏக்கம்.. வெளியே கலாட்டாவாக கேட்டவளை கண்டு முகம் திருப்பிக் கொண்டான்.

"கடுப்பக் கிளப்பாம தள்ளிப் போ நேத்ரா, ரெண்டு நாளாகுது ரூம் விட்டு வெளிய போய். என் பையனக் கூட பாக்க விடாம அலம்பல் பண்ணிட்டு, வாய் கூசாம உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண சொல்ற, போய் குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வெளிய வந்து முதல்ல சாப்பிடு. எதை மனசுல வச்சி இவ்வளவும் பண்றனு தெரியல ஆனா மூளைக் கெட்டத்தனமா ஏதாவது விபரீதம் செய்ய நினச்ச, இதுவரைக்கும் பாக்காத ராமை பாப்ப நீ" பற்களை நரநரவென கடித்தவனுக்கு அத்தனைக் கொதிப்பு, எங்கே ஏதாவது தேவை இல்லாத சிக்கலில் மாட்டிக் கொள்வாளோ என்ற நெருடலில்.

சீரான பார்வையால் அவனை ஏறிட்டவளின் எண்ணத்தில் என்ன உள்ளதென்று கண்டு பிடிப்பது எல்லாம் எளிதான காரியமா என்ன? இரண்டு நாட்களாக, பெண்ணவளின் அதீத காதலில் மூச்சித்திணறிப் போனாலும், மருந்தின் வீரியம் முற்றிலுமாக உடலை விட்டு நீங்கியும் அவளை உதறித் தள்ளாது தனது கைவளைவில் வைத்து நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தவன் மனமோ துன்பத்தில் ஆழ்ந்து இரட்டை மனதாக அடித்துக் கொண்டது, மறைந்த மனைவியைப் பற்றியும் நிகழ்கால மனைவியின் அடாவடியானக் காதலை எண்ணியும்.

"என்ன டி.. ஒண்ணுமே தெரியாத மாதிரி அப்டி பாக்குற. சோத்துல மருந்து கலந்து கொடுத்து எப்டியோ நீ நினைச்சத சாதிச்சிட்டல்ல" மீண்டும் பற்களை கடித்தான்.

“ஆரம்பத்துல சாதிக்க நினைச்சி தான் உள்ள வந்தேன் ராம். ஆனா சாதிக்க வந்த இடத்துல மனச பறிகொடுத்து அநியாயமா தோத்துப் போவேன்னு தெரியாம போச்சே” மனதில் விரக்தியாக நினைத்தவளாக, "அப்டிதான் வச்சிக்கோங்களேன், முதல் நாள் மருந்து கலந்தேன் ஓகே ரெண்டாவது நாள் சார் என்ன பண்ணீங்க. நெருங்கி வந்தேனே விலகாம எதுக்காக அமைதியா இருந்தீங்களாம்" அயன் செய்து நீட்டாக உடுத்தி இருந்த சட்டையை கசக்கியபடி அவன் மீது சரிந்து ஒரு மார்க்கமாக பார்த்திட, பெண்ணவளின் அதீத நெருக்கத்தில் ராம் தடுமாறி அவள் இடைப் பற்றிக் கொண்டான்.

"பைத்தியம் டி.. நீ" முகம் சுழித்தவனின் இதழில் குறுநகை. கூடலின் போது மனைவியின் சேட்டைகளை எண்ணி.

"ஆமா உங்க மேல" கிறக்கமாக அவன் கழுத்தைக் கட்டிக்கொள்ள. “சரியான இம்சை..” வாய் விட்டே மொழிந்தவன் இதழை பிச்சி தின்ற பாவையை சீரான பார்வையால் அவள் விழிகளை மேய்ந்தான்.

நேத்ரா போன்ற அடாவடிப் பெண்ணை பார்த்தால் பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும். அப்படி தான் ராம்க்கும், இத்தனை நாளும் தன்னை நெருங்க விடாது வார்த்தையால் சாடி துரத்தித் துரத்தி விலக்கி வைத்தவன், அனுபவம் இல்லாத தேகப்பரிமாற்றம் விளையாட்டை விளையாடி வலியில் துடித்தவளை அள்ளி அணைக்க முடியாமல் அவன் தவித்த தவிப்பில் தான் உணர்ந்தான் பெண்ணவளின் வேதனையில் உள்ள தனது ஈரம் சுரந்த காதலினை.

அனுபவம் உள்ளதோ இல்லையோ. காமத்தை பார்வையாலே உணர்த்த ஒரு ஆணுக்கு தான் அதிக வல்லமையும் ஆதிக்கமும் உள்ளது. மனதளவில் ஆண் போன்ற கம்பீரம் வாய்ந்த பெண்ணே ஆணவனின் ஒவ்வொரு அதிர்விலும், தொடுகையிலும் மிரண்டுப் போகக் கூடும். அதன் பின் மெல்ல மெல்லப் பழக்கப்பட்டு முகத்தில் தெரியும் அந்த பிரகாசமே உணர்த்தி விடும் தன்னவனின் சூடுப் பிடிக்கும் ஆட்டத்தில் உள்ள, மீள முடியாத இதமான சுகவலி இதுவே என்று.

அதே நிலையில் நேத்ராவும் இருந்தாள். மருந்தின் வீரியத்தில் உரியவனின் வளர்ச்சியில் மிகவும் திணறி சரியான வழி நடத்துதலின்றி ரணம் கண்டு சோர்ந்துப் போனவளை, முதல் நாள் கை கொண்டு அணைக்க முடியாமல் பரிதவித்து அவள் முகம் பார்த்தவன், மறுநாள் அவனே பெண்மையின் மென்மை இதுதான் என ஒவ்வொன்றாக அவளுக்கு அழகாக உணர்த்தியதில், வெட்கம் அறியாத நேத்ராவின் முகமும் அதிசயமாக செம்மை படர்ந்த விந்தையைக் கண்டு வியந்து போனானே ராம்.

"அச்சோ ராம் இங்க என்ன கழுத்துல சிகப்பு, ஓஹ்.. நான் தான் ஒரு வேகத்துல கடிச்சிட்டேனா" எச்சிலை நாவல் சுழட்டிக் கொண்டு எக்கி அவன் கழுத்தை வருடி முத்தத்தால் மருந்திட்டவளை எந்த லிஸ்டில் சேர்ப்பது. அவளின் ஒவ்வொரு செயலிலும் ஆணவனை கூச்சமுற செய்ய, "ஏன் டி.. படுத்துற. நீ உண்மையாவே பொண்ணு தானா நேத்ரா" அவனுக்கே சந்தேகம் வந்து விட்டது.

"ஏன் ராம் ரெண்டு நாளா நடந்த ஆராய்ச்சில நீங்க கண்டு பிடிக்கலையா நான் பொண்ணா இல்லையானு" இருவருக்குமான இயல்பான பேச்சி வார்த்தைகள் இருவருக்குமே இதமளித்தது நெஞ்சினில்.

"ஆமா கண்டு பிடிச்சிட்டாலும், ஒரு பொண்ணுக்கு உண்டான ஒரு அடக்க ஒடுக்கம் கூட உன்கிட்ட இல்ல. அப்புறம் எப்டி கண்டுப் பிடிக்க" பொய்யாக அவளை சீண்டிட, "ம்க்கும்.. கண்டு பிடிக்காம தான் அங்கேயே விழுந்துக் கிடந்திங்களாக்கும் வெயிட் பண்ணுங்க குளிச்சிட்டு வரேன்" என உதட்டை சுழித்து நெஞ்சத்தில் குறிப்புக் காட்டி விழிகளை உருட்டியவளாக குளியலறை சென்றாள்.

அவள் குளித்து முடிக்கும் வரை வெளியே காத்திருந்தான் ராம். நேத்ராவோடு சற்று இயல்பாக பழகி தன் சரிபாதியாக எண்ணத் தொடங்கி இருந்தாலும், ஏதாவது ஒரு வகையிலாவது தீஷாவின் நினைவுகள் வராமல் இல்லை. நேத்ராவை ஒவ்வொரு முறையும் நெருங்கும் போதும் தானாக இரு மனைவி மார்களையும் ஒப்பிட்டுப் பார்த்த மனதை அடக்க வழி தெரியாமல் உண்டானக் கலக்கத்தை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இதயம் கனத்துப் போகுமே!

'தீஷா வேற நேத்ரா வேற ரெண்டு பேரையும் ஒன்னா நினைச்சி பாக்காத ராம், அது உயிரோட இருக்கவளுக்கு நீ செய்ற துரோகம்' மனசாட்சி எடுத்து சொல்ல.

'துரோகம் தான், ஆனா என் தீஷாக்கு நான் செஞ்சி கொடுத்த சத்தியம் ஒண்ணும் இல்லாம போச்சே டா. அவளை தவிர வேற எந்த பொண்ணுக்கும் என் வாழ்க்கையில இடம் இல்லனு அவளோட இருந்த போது எத்தனை முறை உறுதி கொடுத்து இருப்பேன். அவளும் என் வாழ்க்கையில வேற ஒருத்தி வர்றத விரும்ப மாட்டாளே. அப்போ என் தீஷாக்கு நான் செஞ்சது துரோகம் இல்லையா?' ஆழ்மனம் கடுமையாக முறையிட்டது.

‘அதுக்காக என்ன டா பண்ண முடியும். நல்லதோ கெட்டதோ, நேத்ரா உன்னோட வாழ்க்கைக்குள்ள வந்துட்டா. தீஷாவ எப்டி உன்னால மறந்து விட்டுக் கொடுக்க முடியாதோ, அதே போல தான் நேத்ராவையும் நீ விட்டுக் கொடுக்க கூடாது. இல்லாதவளுக்காக இருக்குறவ மனச ஒடச்சி நீயும் ஒடஞ்சி போகாத ராம். உன் தீஷா எப்பவும் உனக்கு கெட்டது நினைக்க மாட்டா, எங்கிருந்தாலும் நீயும் யுவாவும் நல்லா இருக்கணும்னு தான் நினைப்பா. இப்போ அவ தெய்வம் டா ராம். தெய்வத்தை கடைசி வரைக்கும் மனசுல நினைச்சுக்கிட்டே வாழலாம், ஆனா உன் தெய்வத்தால இனி ஒருக்காலமும் உன்னோட சேந்து வாழ முடியாது’ நிதர்சனத்தை அழுத்தமாக அடித்து சொன்னது மனம்.

‘ஆமா, எப்பவும் என் முதல் காதல் தீஷா தான் அதுல எந்த மாற்றமும் இல்ல. ஆனா நேத்ராவையும் இனிமே விட்டுட்டு இருக்க முடியாது. அடாவடிக்காரி என்னவோ செஞ்சி என் மனசுல இடம் பிடிச்சிட்டா. அவ எந்த மோட்டிவ்ல வேணாலும் என்னை கல்யாணம் பண்ணி நெருங்கி இருக்கலாம், ஆனா அப்பப்ப அவளை மீறி தனியா இருக்கும் போது கத்திக் கதறி பயந்து போறதும், ஏதோ காரணத்துக்காக என் கூட ஒன்னா வாழணும்னு அவ பிடிவாதம் பிடிச்சது எல்லாம் சரியா தோணல. அது என்னனு சீக்கிரத்துல கண்டு பிடிச்சி அவளை அதுல இருந்து வெளிய கொண்டு வரணும்..’ தீர்க்கமாக எண்ணியவனாக,

‘நேத்ராவோட என் வாழ்க்கைய வாழத் தொடங்கிட்ட இதுக்கு மேலயும் தீஷாவ காரணம் காட்டி, பாவம் என் நேத்ராவ உயிரோட சிதைக்கக் கூடாது’ அவனையும் அறியாமல் என்னவள் என உணர்த்திய தருணம் அது.

‘உன் நேத்ராவா?’ உள்மனம் கிண்டல் செய்தது.

‘எப்ப அவளோட என் உள்ளமும் உடலும் இணைஞ்சிதோ அப்பவே அவ என் நேத்ராவாகிட்டா’ வெட்கம் கொண்டான் ஆடவன்.

அதுசரி என சிரித்துக் கொண்டது மனசாட்சி.

‘ஆனா ஒண்ணு. அவ ஏதோ ஒரு பிளான்லே இருக்கா, அது நல்லதா கெட்டதானு ஒன்னும் புரியல. அடிக்கடி சொல்லுவாளே ஒருநாள் வாழ்ந்தா போதும் அதுக்கு மேல நீங்களா நினைச்சாலும் என்னை பாக்க முடியாதுனு என்னவா இருக்கும்’ யோசனையோடே அவன் அமர்ந்திருக்க, குளித்து முடித்த ஈர மங்கை மார்பு வரை துண்டைக் கட்டிக் கொண்டு கெண்டைக்கால் பளபளக்க வெளியே வந்தவளை கண்டு எச்சில் விழுங்க பார்வையை தாழ்த்திக் கொண்டான் ராம்.

வேண்டுமென்றே அவன் முன்பு ஆடை மாற்றப் போக, "ஏய்.. லூசு.. பாத்ரூம்லே ட்ரெஸ்ஸிங்க்கு தனி இடம் இருக்குல்ல அப்புறம் என்ன இங்க வந்து நின்னு ஃபிலிம் காட்ற" எரிச்சலாக மொழிந்தவன் பேச்சி அதற்கு மேல் வெளிவராமல் சடன் பிரேக் பிடித்து நின்று விட்டது, மேனியை மறைத்திருந்த துண்டு எங்கோ சென்று பறந்து விழுந்ததில்.

"என்ன சொன்னீங்க ராம்.." அப்பாவி பிள்ளை அடிமேல் அடி எடுத்து வைத்து உடலை வளைத்து நெருங்கி வர. "எ.ஏய்.. இதெல்லாம் கொஞ்சம் கூட சரி இல்ல டி.. ரெண்டு நாளா சரியா கூட சாப்பிட விடல நீ, வேலை பாக்குறவங்ககிட்ட பனி கொடுத்து அனுப்பின சாப்பாடு எல்லாம் பாதிக்கும் மேல வீணா போச்சி. ரொம்ப நாள் பிறகு நல்லா வயிறு பசிக்குது, ப்ளீஸ் வா டி.. சாப்ட்டு பசங்கள பாத்துட்டு வரலாம்" பெண்ணவளின் வனப்புகளில் மேய்ந்த கண்களுக்கு கடிவாளமிட்டு அடக்குவது எல்லாம் சாத்தியமற்றதாக மாறி கை மீறி போய் விட்டது.

"என்ன ராம் என்கிட்ட நீங்க கெஞ்சிறதா!" கலகலப்பாக சிரித்து, "ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு. அதுக்கு முன்னாடி நான் எப்டி இருக்கேன்னு சொல்லுங்க நம்ம ரெண்டு பேருமே ஒன்னா வெளிய போகலாம்" போதை ஏறும் பார்வையால், திமிராக நிமிர்ந்து நின்ற கொஞ்களை அவன் மார்போடு அழுத்தமாக ஒட்டி தேகம் உரசாது நின்றவளின் நறுமணம் நாசியை துளைத்ததில், ஆண்மையின் வீரியம் மீண்டும் உயிர் பெற்றதை உணர்ந்து பொய்யாக முறைத்தான் ராம்.

"கூச்சமே இல்லையாடி உனக்கு" சலிப்பாக கேட்டாலும், நேத்ராவின் ஒவ்வொரு செயலும் அவளை தனித்துவமான பெண்ணாகவே ஒவ்வொரு முறையும் அவனிடம் தனித்து உணர்த்தியது.

"கூச்சத்தை பாத்தா சந்தோஷத்தை அனுபவிக்க முடியுமா ராம். அதோட எனக்கு கூச்சம் வரலையே, ஏன்னு கொஞ்சம் டெஸ்ட் பண்ணி சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்" சீரியஸாக சொன்னவளை மேலும் கீழும் ஒரு மார்க்கமாக பார்த்தான் ராம்.

எங்கு தொட்டால் எப்படி எல்லாம் கூச்சம் பெருவாள் என்று அவனுக்கு தெரியாதா, இருந்தும் பலவீனமாக இருந்த தேகங்களுக்கும் சத்தான உணவு தான் முதலில் முக்கியம் என நினைத்தவன், இடை விடாது தொணத்தொணத்த வாயை பிளாஸ்திரியால் அடைத்து நல்ல உடையாக எடுத்து அவளின் பூட்டப்படாத தங்கமேனியை அலங்கரித்தவனின் கரங்கள் அடங்காமல் தழுவிய இடங்களில் அவள் கேட்ட கூச்சத்தை கற்பித்த பின்னே வெளியே அழைத்து சென்றான்.

நீண்ட நாட்கள் கழித்து மகன் முகத்தில் படர்ந்திருந்த சந்தோஷ சாயலை ஒரு பார்வையில் கண்டு கொண்டு பூரித்துப் போனது தாயுள்ளம். மலரை இடுப்பில் வைத்துக் கொண்டு கணவனுக்கு உணவுப் பரிமாறிக் கொண்டிருந்த பனியின் தோளை இடித்து, ராம் நேத்ராவை பார்த்து சூட்சமமாக சமிக்கை செய்தார் பத்மா.

'என்ன அத்த..' முதலில் புரியாதவள் பின் பத்மாவின் பார்வையில் திளைத்த மகிழ்ச்சியைக் கண்டு, இருவரையும் கூர்ந்து பார்த்த பனிக்கும் அம்மகிழ்ச்சி ஒட்டிக் கொண்டது.

"உண்மையா வர்றது ராம் மாமா தானா அத்தை" குனிந்து பத்மாவின் காதில் கிசுகிசுக்க, "அதுதான் எனக்கும் சந்தேகமா இருக்கு பனி, நெசமா தான் ராம் சிரிச்சிட்டே வரானா"

ஆளுக்கு ஒரு பிள்ளையை இடுப்பில் வைத்து சாய்ந்து நின்று சந்தேகித்துக் கொள்ள, மனைவியின் பார்வை தன்னிடம் இல்லை என உணர்ந்ததும் உண்டு கொண்டு இருந்த வர்மன் நிமிர்ந்து பார்க்க, அவளின் பார்வை சென்ற அலைவரிசையை பின்தொடர்ந்த வர்மனின் பார்வையும் நண்பனின் புன்னகை முகத்தைக் கண்டு திருப்தியாக உணர்ந்தன.

கூடிய விரைவில் அனைவரது திருப்தியும் மகிழ்ச்சியும் இருந்த இடம் தெரியாமல் ஆகப் போவது தெரியாமல், புதிய தம்பதிகளாக, கல்மிஷப் பார்வையால் காதலைக் கடத்திக் கொள்ளும் ராம் நேத்ராவை கண்டும் காணாததுமாக தமது வேலையைத் தொடர்ந்தனர்.

தொடர்ந்து ஒரு வாரம் எப்படி தான் சரசரவென ஓடியதோ, நேத்ராவின் மனதில் இருப்பதை கண்டுகொள்ள முடியாமல் நெஞ்சில் கலக்கம் இருந்தாலும், தன்னவளின் காதலை உணர்ந்து திக்குமுக்காடி, அவளுள் மூழ்கி அவளுக்கே அவளுக்காக மாறிப் போன ராமின் இதயத்தை மொத்தமாக உளுக்கிப் போட்டது, ராமின் மகிழ்ச்சிக்காக அவள் எடுத்திருந்த புதிய அவதாரத்தைக் கண்டு.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 38
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top