- Messages
- 309
- Reaction score
- 251
- Points
- 63
அத்தியாயம் - 39
அருகில் யார் உள்ளனர், தங்களை யாராவது பார்க்கிறார்களா இல்லையா என்ற எந்த கவலையும் இல்லாது, விழிகளாலே கற்பழிக்கும் அளவுக்கு விழுங்கும் பார்வையால் அருகில் இருப்பவனை சங்கடத்தில் நெளிய வைத்தாள் நேத்ரா.
வீட்டில் உள்ள அனைவரும் அவர்களை கண்டும் காணாததுமாய் தங்களுக்குள்ளே ஜாடைக் காட்டி நமட்டு சிரிப்போடு இருப்பதை, ராமும் கவனித்து விட்டான் போலும்.
'மானத்தை வாங்குது இந்த அரைலூசு. அப்டி என்ன தான் என் முகத்துல இருக்கோ, எந்நேரமும் முழுங்குற பார்வை பாக்குறா, ராட்சசி' செல்லமாக மனதில் திட்டியபடி உள்ளுற கிளர்ந்த உணர்வுகள் சொருகும் கூச்சத்தை மறைத்து குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தவன் பார்வையும் அவ்வப்போதும் அவளை கவ்விக் கொள்ளத் தவறவில்லையே!
"புதுசா சூப்பர் மார்க்கெட் கட்ட, நல்ல ஏரியால பிளாட் பாத்துட்டு இருந்தியே, என் கூட வர்க் பண்றவரோட பிளாட் மெயின்லே ஒண்ணு இருக்காம், ஏதோ கஷ்டம்னு அதை சேல் பண்ண போறதா சொன்னாரு. நீ எப்ப பிரீனு சொல்லு போயிட்டு பாத்து பேசிட்டு வரலாம், என்ன சொல்ற வர்மா" ராம் தான் கேட்டது.
"வரியானா என்ன டா அர்த்தம். எப்போனு சொல்லு இடத்தை போய் பாத்துட்டு பிடிச்சிருந்தா கையோட முடிச்சிட்டு வரலாம்." நண்பன் மேல் உள்ள நம்பிக்கையில் வர்மனின் வார்த்தை வெளிவந்தது.
மென்னகை புரிந்த ராம், "சரி மச்சா அப்ப நேரத்தை கடத்தாம நாளைக்கே பேசிட்டு வந்திடலாம்"
மாலை வேளை, 3D டைல்ஸ் தரையில் போடப்பட்டிருந்த மெத்தைப் போன்ற மிருதுவான டைல்ஸ் மேட்டில் அமர்ந்து, ஆளுக்கு ஒரு குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு வர்மனும் ராமும் விளையாட்டுக் காட்டியபடி வெகு நாட்கள் பிறகு மனம் விட்டு பேசி சிரித்துக் கொண்டிருக்க, "உங்க ரெண்டு பேருக்கும் டீ கொடுத்து ஆறியே போச்சி. அப்டி டீ குடிக்கக் கூட நேரம் இல்லாத அளவுக்கு என்னத்த தான் உங்களுக்குள்ள பேசிப்பீங்களோ!" பொய்யாக அலுத்துக் கொண்ட பனிக்கு ராமின் சிரிப்பைக் கண்டு நிம்மதியாக இருந்தது.
"சும்மா தான் பேசிட்டு இருந்தோம் பனி, அப்டியே பேச்சி சுவாரசியத்துல டீய மறந்தாச்சி" ராம் சொல்ல.
"ம்ம். சரி சரி மாமா நீங்க இப்டி சந்தோசமா சிரிச்சி பேசுறத பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்பவும் சிரிச்சிட்டே துருத்துருனு இருப்பீங்க ஆனா கொஞ்ச நாளா அந்த சிரிப்பை மறந்து வெறுமை படர்ந்திருந்த இந்த முகத்தை பாக்கும் போதெல்லாம் எத்தனை நாள் வருத்தப் பட்டு இருப்பேன், திரும்ப உங்க முகத்துல அந்த பழைய பொலிவு வந்ததுக்கு காரணம் நேத்ரா தானே!"
யார் பேசுவதையும் காதில் வாங்காமல், ஹெட்செட்டில் ஆங்கிலப் பாடலை கேட்டபடி கால் மேல் கால் போட்டு சோபாவில் அமர்ந்து, கன்னத்தில் கை வைத்து, கீழ் உதட்டை ஒரு மார்க்கமாக கடித்துக் கொண்டு ராமையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்க்கும் ராமை கண்டு வர்மனும் பனியும் ஜாடைபேசிக் கொள்ள,
அவள் செய்யும் அட்டூழியம் தாங்காது தலையை சிலிப்பிக் கொண்டவனாக, "அ.அதெல்லாம் ஒன்னும் இல்லையே, எனக்கு தான் அவளை பிடிக்காதே பனி" சட்டென இறங்கி வந்து நேத்ராவை விரும்பும் விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் தடுமாறிப் போனான்.
"ஓஹ்.. அப்ப உங்களுக்கு நேத்ராவ பிடிக்கல அப்டி தானே" அவன் வாயை பிடுங்கினாள்.
"ம்ம்.. அதானே உண்மை, ஆளும் அவ மூஞ்சியும், எங்கயாவது குடும்ப பொண்ணு மாதிரியா இருக்கா, எந்நேரமும் குதிரை மாதிரி வீட்டுக்குள்ள டொக் டொக்னு ஹீல்ஸ் போட்டு சுத்திகிட்டு" இறுக்கிப் பிடித்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டும், இடைவரையிலான ஸ்லீவ்லெஸ் வைன்ரெட் கிராப்டாப் அணிந்து அதற்கு மேட்ச்சாக வைன்ரெட் நிற கண்ணை பறிக்கும் ஹைஹீல் மாட்டிக் கொண்டு திமிராக காலை ஆட்டியபடி அவள் இருந்த தோரணை, கணவனாக ரசித்தான் தான் ஆனால் பழைய ராமாக பார்க்கையில் குடும்ப ஆட்கள் நடமாடும் இடத்தில் என்ன இது கோலம் என்ற சிறு கோபமும் வரவே செய்தது.
"என்ன மாமா இவ்ளோ சத்தமா சொல்றீங்க அவ காதுல விழுந்தா உங்கள சாமி ஆடிடுவா!" வாய் பொத்தி சிரித்தாள் பனி.
"அவ கிடக்குறா பனி, வெளியதான் பெரிய வீராங்கனை போல ஓவரா சீன் போடுவா, உண்மையாவே அவ ஒரு தத்தி, சுத்த வேஸ்டு." எதையோ நினைத்து அவன் எதையோ சொல்லிட, "ஏன்.. அப்டி சொல்றீங்க மாமா, நேத்ரா நல்ல பிரேவ் கேர்ள் தானே" என்றாள் புரியாமல். ஆனால் வர்மன் கேடியாயிற்றே! மனைவிக்கு புரியாத பதில் அவனுக்கு புரிந்து போனது.
'யாரு அவளா..' ஏதோ சொல்ல வந்தவனாக, "ஆமா நல்ல பிரேவ் கேர்ள் தான். இந்தா டீ போயிட்டு நல்லா சூடு பண்ணி கொண்டு வா." விளக்கம் சொல்ல முடியாத நிலையில் அவள் கையில் டீயை திணிக்க அதே புரியாத பார்வையோடு அங்கிருந்து சென்ற மனைவியைக் கண்டு உள்ளூர ரசித்தான் வர்மன்.
'மக்கு விழி.. ரூம்க்கு வா நான் உனக்கு தெளிவா விளக்குறேன்' தன்னுள் பேசி சிரித்துக் கொண்டவன் நைசாக கிட்சன் நுழைவதை கண்ட ராம், "ம்க்கும்.. இனிமே டீ வந்த மாதிரிதான். டேய் பப்புக்குட்டிங்களா வாங்க நம்ம, நம்ம ரூம்க்கு போய் டிஸ்டர்பன்ஸ் இல்லாம நிம்மதியா தூங்கலாம்" பிள்ளைகளோடு பேசியபடி குழந்தைகளை தூக்கி சென்றவனின் நிம்மதியை குலைக்கவே, டொக்.. டொக்.. ஹீல்ஸ் சத்தம் டைல்சை உடைக்காத குறையாக கேட்டதும், 'இம்சை வரா' அவன் அதரம் முணுமுணுத்துக் கொண்டது.
** ** **
பஞ்சி மெத்தை ஏசி காற்று வாங்கிக் கொண்டு காலியாக கிடக்க, கட்டிலின் கீழ் ஸ்ருதியும் நரேனும் தேகங்கள் பின்னிக் கிடந்தனர்.
வந்ததும் வராததுமாய் பெண்ணவளின் மீது பாய்ந்ததும், கட்டிலை விட்டு உருண்டு கீழே விழுந்து வித விதமான கோணங்களில் தரையில் சுற்றிலும் வட்டமடித்துக் கடைசியில் தங்களையே அறியாது தஞ்சம் புகுந்த இடமே கட்டில் அடி.
"ஏன் நரேன் சொல் பேச்ச கேக்க மாட்றீங்க, உங்க அப்பாக்கு மட்டும் நம்ம விஷயம் கொஞ்சம் தெரிய வந்தாலும் பெரிய பிரச்சனை ஆகும்" சேயாய் அவள் மார்பை முட்டி மோதிக் கொண்டு இருந்தவனை இன்னும் தன்னில் புதைத்தாள்.
சப்பென எச்சில் தெறிக்கும் சத்தத்தோடு எதையோ விட்டு நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவனின் விழிகளில் கிறக்கம் தீர்ந்தபாடு இல்லை. "வேலையா இருக்கேன்ல, என்ன டி.. உன் பிரச்சனை" சலிப்போடு அவள் இதழை நசுக்கிப் பிடித்தான் இரு விரலால்.
"தினமும் பெல்ட் அடி வாங்கி வாங்கி உடம்பு எல்லாம் ரணப்பட்டு இருக்கு, அப்ப கூட உங்க திமிர் குறையலைல." சட்டென அவன் விரலை தட்டி விட்டு அவனுக்கு முதுகு காட்டி ஒருக்கலித்துப் படுத்துக் கொண்டவளை நெருங்கி பின்னோடு அணைத்துக் கொண்டதும் வேறுமாதிரி புது உணர்வுகள் உண்டாகி, தாபத்தோடு முட்டி தன்னுள் இறுக்கிக் கொண்டான் அவளை.
"திமிர் குறையிதோ இல்லையோ, உன்கிட்ட வந்தா என் ரணம் குறையிது டி.. ஸ்ருதி." பின்னங்கழுத்தில் ஊரிய ஈர இதழ்கள் பெண்ணவளை சிலிர்க்க வைக்க, அவன் தந்த பதிலில் இதயத்தில் தேனூற்றாக தித்திப்பு வெள்ளம் பெறுகியது.
"நல்லா ஐஸ் வைக்க கத்துக்கிட்டீங்கலே, ஆனா இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு நரேன். நம்ம ரெண்டு பேருக்கும் வேற வேற ஆளோட கல்யாணம் நடக்கப் போகுது, நியாபகம் இருக்கா?" குரல் உடைந்து ஈரவிழிகளால் அவனை ஏறிட்டாள்.
"ஏன் இல்ல. கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் அனுபவச்சிக்கிட்டா தான் உண்டு, கல்யாணம் முடிஞ்சதும் நான் என் பொண்டாட்டி கூடவும் நீ உன் புருஷன் அந்த சீலிங் கூடவும் ஜாலியா என்ஜாய் பண்ண வேண்டியது தான். அதுக்குமேற்பட்டு நீ யாரோ நான் யாரோ, ஏன்னா என்ன நம்பி வரவளுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன் பாரு" நக்கலாக அவன் சொல்லிட ஆத்திரத்தில் மூச்சி வாங்க கட்டில் அடியில் இருந்து சுருண்டு எழுந்திருந்தாள் ஸ்ருதி.
"ஏய்.. இப்ப என்ன சொல்லிட்டேன்னு பாதில எழுற, ஐ காண்ட் கண்ட்ரோல் கம் ஸ்ருதி, டென்ஷன் பண்ணாத" பாதியில் எழவும் மோகத்தில் வெடித்தான் நரேன்.
"முடியாது.. உங்க வருங்கால பொண்டாட்டிய போய் கூப்பிடுங்க. என்ன ஆள விடுங்க, நீங்க எப்டி கல்யாணத்துக்கு பிறகு உங்கள நம்பி வரவளுக்கு துரோகம் செய்ய மாட்டீங்களோ, நானும் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே என்ன நம்பி வர போறவருக்கு துரோகம் செய்ய மாட்டேன். இப்ப நல்லா விடிஞ்சாச்சி நீங்க கிளம்புனா நல்லா இருக்கும்." கோவத்தில் முகம் சிவந்து போக போர்வையை மேனியில் சுற்றிக் கொண்டு குளியலறையில் புகப் போனவளை ஒரே அமுக்காக மெத்தையில் புரட்டி, எரிக்கும் பார்வையால், பொறுமை இல்லாமல் மூர்கமாக அவள் இதழ்களை கவ்வி இருக்க, மூச்சி விட முடியாமல் கைகால்கள் துவள அவனிடமே ஒன்றி அடங்கி இருந்தாள் ஸ்ருதி.
உரித்து எறியப்பட்ட வாழைப்பழ தோலாய் போர்வை தூரம் கிடக்க, உள்ளிருக்கும் வழவழக்கும் செவ்வாழையாய் முகம் சிவந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த பெண்குட்டியை தன் மார்பில் கிடத்தி, ஆழ்ந்து பார்த்தான் அவளை.
"நீயா வாய் திறந்து என்கிட்ட நடந்தத சொல்லுவேன்னு நானும் ரொம்பவே பொறுமையா எதிர்பார்த்து அமைதியா போயிட்டு இருக்கேன் ஸ்ருதி. இதுக்கு மேற்பட்டும் நான் பொறுமையா இருந்தா நிரந்தரமா நீயும் நானும் பிரிஞ்சி தான் போகணும். அப்டி பிரியிரதால நீ காலம் முழுக்க என் நியாபகம் துளி கூட இல்லாம சந்தோஷமா அந்த சீலிங் மண்டையனோட வாழுவேன்னா சொல்லு, இந்த நொடி உன்ன விட்டு நிரந்தரமா போய்டுறேன். அதன் பிறகு எப்பவும் உன்ன பாக்க வர மாட்டேன்." அழுத்தம் திருத்தமாக இறுக்கமான குரலினால் அவள் உள்ளத்தை அச்சம் கொள்ள வைத்தவன் பிடி தளர்ந்து அவளை தள்ளி நிறுத்திட, அடிபட்ட பார்வையால் வெம்பி அழுதவளை அமைதியாக கண்டான்.
"நரேன்.. ப்ளீஸ்.. என்கிட்ட எதையும் கேட்டு என் மனசை கலைக்காதீங்க. நான் எதையும் சொல்ல மாட்டேன். எனக்கு நீங்க ரொம்ப ரொம்ப முக்கியம் அதுக்காக தானே, உங்கள விட்டு விலகி போகணும்னு விருப்பம் இல்லாத இந்த கல்யாணத்துக்கு கூட சம்மதிச்சேன். அப்டி இருந்தும் நான் விலக விலக நீங்களா நெருங்கி வந்தீங்க, முடிஞ்ச அளவுக்கு விலக்கி வைக்க போராடி, கடைசியில என்னையே நான் உங்ககிட்ட இழந்துட்டு நிக்கிறேன் நரேன்." முகத்தை மூடி குலுங்கி அழுத பெண்ணை ஆழ் பார்வையால் கூர்ந்தான்.
அப்போதும் விடவில்லை அவன். "எனக்கு இந்த செண்டிமெண்ட் ட்ராமா வேணா ஸ்ருதி. உண்மைய சொல்லாம மூடி மறச்சி நீயும் சந்தோஷமா வாழ முடியாது, நானும் உன்ன விட்டு உயிர் வாழுவேனானு தெரியாது" என்றதும் கண்களில் நீர் கோர்க்க சட்டென நிமிர்ந்து, “நரேன் ப்ளீஸ்.. இப்டிலாம் பேசி என் மனசை காயப்படுத்தாதீங்க” கெஞ்சலாக அவன் முகம் பார்த்தாள் வேதனையாக.
"அப்போ என் மனசு காயப்படலாம் அப்டிதானே.. சொல்லு டி.." அவள் தாடைப் பற்றினான் இறுக்கமாக.
"வலிக்குது நரேன்" வலியில் முகம் சுணங்கியவளை விடாமல் பார்த்துக் கொண்டே "உன்ன எனக்கு இருபது வருஷமா தெரியும், இந்த இருபது வருஷத்துல நீயும் நானும் ஒரு இருபது தடவை கூட சரியா பாத்து பேசிகிட்டது இல்ல அந்த ஹோட்டல் இன்சிடண்ட் முன்னாடி வரை. நம்ம சந்திக்கும் நேரம் குறைவு தான் ஆனாலும் அந்த சொற்ப நேரத்துல நம்ம ரெண்டு பேரோட பார்வையும் ஆயிரம் முறை ஒண்ணு கலந்து நம்ம மனசு ரெண்டையும் ஒரே கோட்டுல இணைச்சி வச்சிருக்கும். உன்ன பாத்தா எனக்குள்ள ஜிவ்வுனு ஒரு பீலிங் வரும் பாரு, அப்டியே கின்னுனு இருக்கும்" அப்படி சொல்லும் போதே அவன் முகத்தில் தோன்றிய புன்னகையைக் கண்டு வலியை மறந்து விழி விரித்தாள் வியப்பாக.
அவள் வியப்பை உள்வாங்கியபடியே, "இத்தனை வருஷத்துல உன்கிட்ட நான் என் மனச திறந்து வார்த்தையால எதையும் சொன்னது இல்லைனாலும், என் மனசுல என்ன இருக்கு இல்லனு உனக்கு நல்லாவே புரியும் ஸ்ருதி,
புரிஞ்சி இருக்கனும். ஏன்னா உன்ன பாத்தா எனக்குள்ள உண்டான மாற்றங்கள் எல்லாம் ஒண்ணு விடாம உனக்குள்ளயும் நிகழ்ந்து இருக்கும்னு உன் பார்வையே எனக்கு வெளிச்சம் போட்டு காட்டிடும்." என்றதும் படபடப்பான பார்வையில் தடுமாற்றம் கண்டு உள்ளுக்குள் தோன்றிய உணர்வுகள் விவரிக்க முடியாதவை.
"ந்.நீங்க சொல்ற மாதிரி எல்லாம் எனக்கு எதுவும் நடந்தது இல்ல. சும்மா உளறாதீங்க நரேன்" இப்போது வார்த்தையும் தடுமாறிப் போனது. உண்மையை ஒப்புக் கொள்ள தைரியமில்லாமல்.
"நான் இவ்ளோ சொல்லியும் புரியாத மாதிரியே ஆக்ட் பண்றேன்னா, வேற வழி இல்ல, உனக்காக என் ஈகோவ உடைச்சி இப்ப சொல்றேன் டி.. ஐ ஸ்டில் லவ் யூ ஸ்ருதி. ஐ லவ் யூ சோ மச்.. எனக்கு நீ வேணும் ஸ்ருதி. என் வாழ்க்கையோட ஆதியும் அந்தமுமா கடைசி வரைக்கும் நீ வேணும்." தன் காதலை உரைத்த நொடி உறைந்து நின்ற சிலைக்கு உயிர் பெற்று, "நரேன்ன்ன்.." என்ற கதறலோடு அவன் நெஞ்சில் புதைந்து அழுதவள், ஆவேசமாக முத்தமிட்டு அவன் முகத்தை கண்ணீரோடு எச்சில் செய்து, "ஐ லவ் யூ டூ நரேன். என்னாலயும் உங்கள பிரிஞ்சி வாழ முடியாது" தன்னவளின் காதலில் மெய் மறந்து போனவன், அவள் இதழ் கவ்வி தன் தேடலை துவங்க, நாணம் விடுத்து அவன் மீது தேர் ஏறினாள்.
எப்படியாவது அவள் வாயில் இருந்து உண்மைகளை கறந்து விட வேண்டும் என்றே, ஒரு முடிவோடு தான் வந்திருந்தான். அவனுக்காக இரவு உணவினை சமைத்து முடித்து வியர்வை முத்துகள் பூக்க, நைட் கவுனில் இருந்த அழகு பதுமையை கண்டதும் வந்த வேகத்தில் பெண்ணவளை புரட்டி எடுத்த பின் தான் கொள்கை நியாபகத்தில் வர, பந்தை எங்கு அடித்தால் எங்கு பாயும் என்று இத்தனை நாளும் அவளோடு இருந்த தனிமையில் கற்று வைத்திருந்தவன், சரியான நேரத்தில் வார்த்தை எனும் பந்தை அவள் மீது விட்டெறிய அது சரியாக வேலை செய்தது.
இருவருக்குள்ளும் மறைந்திருந்த காதலும் முழுமையாக வெளிக்கொணரவும் வைத்து விட்டது. காதல் வந்தால் கலவரமும் சேர்ந்தே வருமாம்! இவர்களுக்கு இடையே பெரிய கலவரம் வெடிக்க தயாராக உள்ளதை அறியாமல் காதலை வளர்த்தனர்.
நரேனின் காதலின் ஆழம் என்னதென அவனோடு இணைந்து அனுபவப் பூர்வமாக உணர்ந்த பின்பும் உண்மையை மறைத்து என்ன பயன். ஆனாலும் சிறு தயக்கம் உள்ளது. அந்த தயக்கம் போக அவன் வழி செய்ததும், சற்று தைரியத்தை வரவழைத்து, அவளுக்கு தெரிந்த உண்மைகளை மட்டும் அச்சத்தோடு சொல்ல சொல்ல, இதயம் கனத்து நரம்பு புடைக்க நின்ற நரேன், செந்தனலாக கொதித்து போய் அங்கிருந்து செல்லப் போனவனை, "நரேன் சொல்றத கேளுங்க, கோவத்துல எது பண்ணாலும் அது சரியா வராது, நிதானமாக யோசிச்சி முடிவெடுக்கலாம் ப்ளீஸ்" பதட்டமாக தடுத்த ஸ்ருதியை, "வழிய விட்டு போடிஇ.." ஆவேசமாக தள்ளி விட்டதில் சுவற்றில் மோதி ரத்தம் பீரிட்டு மயங்கி சரிந்தவளை கூட கவனிக்காத படி கோவம் அவன் கண்ணை மறைத்து விட்டது.
இங்கோ, காலை நேரத்தோடே வந்து விட்ட பரமு, வீடெங்கிலும் நரேனை தேடி அலைந்து, அவன் எங்கும் இல்லாமல் போனதில் பெருத்தக் கோபத்தோடு அவனை எதிர்பார்த்து அவர் காத்திருந்த போது, தெரியாமல் அவரின் கண்ணில் பட்ட குணவதிக்கு, நரேன் வாங்க வேண்டிய அடிகள் விழுந்தது.
"எனக்கு அவன் எங்கே போனான்னு தெரியாதுங்க, என்கிட்ட பிள்ளை சொல்லிட்டு போகல" வலியில் துடிக்க, "நீதான் நான் இல்லாத நேரம் பாத்து அவன் கிட்ட கண்டதையும் சொல்லி கொடுத்து அவன் மனச கலைச்சி இருப்ப, சொல்லு டி.. எங்க போனான் அவன்" என்றே மேலும் மேலும் குணவதிக்கு அடி விழ, "அப்பாஆ.." இரட்டையாக வந்த கர்ஜனைக் குரலில், இருவரும் வாசலைப் பார்க்க, அண்ணன் தங்கை இருவருமே ஒன்றாக நின்றிருந்தனர், அனல் கக்கும் முகத்தோடு.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 39
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.