• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
309
Reaction score
251
Points
63
அத்தியாயம் - 4

மதிய வெயில் மண்டையை பிளக்க, அதன் தாக்கத்தில் முகமெல்லாம் வியர்வையில் ஊரிய நிலையில், கண்ணுறங்கிய பெண் விழிகள், விழிப்பதற்காக மெல்ல அசைய தொடங்கின.

வெட்டவெளி தார் சாலையில் வறண்ட புழுதி காற்று அனலாக வீச, சாலையின் ஓரங்களில் நீண்ட நீண்ட உயர்ந்து வளர்ந்த மரங்களும், அங்குள்ள செடி கொடிகளில் செம்மண் படர்ந்து, ஒன்னு ரெண்டு இருசக்கர வாகனங்கள் அவ்வழியாக போவதை எல்லாம் தூக்கக்கண்ணால் கண்ட மிது, சட்டென அதிர்ந்தவளாக, முழுதாக கண் திறந்து அவசரமாக தான் இருக்கும் இடத்தை சுற்றியும் பார்த்தாள்.

நிற்கும் ஜிப்ஸியின் முன்பக்க இருக்கையில் மிது அமர்ந்திருக்க, வண்டியில் உள்ள சன்னல் கண்ணாடி யாவும் திறந்து வைக்க பட்டிருந்ததில், மொத்த வெய்யோனும் அவளை தான் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

உடனே திரும்பி ட்ரைவர் சீட்டை நோட்டமிட, அது காலியாக இருக்கவும், யோசனையாக மீண்டும் வெளியே எட்டி பார்த்தாள். பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத அவ்விடத்தில் ஒரே ஒரு பழைய உணவகம், டீ கடையோடு சேர்ந்து இருப்பதை கண்டவன், வெளியே போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மேசையில் அமர்ந்து, இஷ்டத்துக்கும் பிரியாணியை பிரித்து மேய்ந்து கொண்டிருந்த ரகுவை, இதயம் படபடக்க பார்த்தாள் மிது.

"என் வாழ்க்கைய மொத்தமா சிதச்சிட்டு, எந்த ஒரு கவலையும் இல்லாம, சோத்து மாடு எப்டி திங்கிறான் பாரு.. இப்ப ந்நா இவங்கிட்டருந்து எப்டி தப்பிப்பேன் ஈஸ்வரா.." கலங்கிய பாவையின் கண்கள் கண்ணீர் திரையிட தனது கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றையே வெறுப்பாக வெறித்தன.

மீசையை முறுக்கிவிட்டபடி திமிராக குருவிடம் சவால் விட்ட ரகு, மணமேடையில் அதிர்ச்சி மாறாமல் அமர்ந்திருந்த வெண்கடுகை கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி தோளில் போட்டதும், துள்ளித் திமிறியவளை சட்டை செய்யாது தன்னோடு இறுகி, குருவின் ஆட்கள் அவனை சுற்றி வலைப்பதை உணர்ந்தவனாக,

"ஒனக்கு ஒரு தம்பி இருக்கான்ல.. பேர் கூட என்ன ஹான்.. பாலகுரு.. அவன் உசுரு இப்ப ஊசலாடிட்டு இருக்கு" என்றதும் நம்பாத பார்த்த சிவகுரு,

"என்ன டா.. எங்க என் ஆளுங்க உன்ன போட்ருவானுங்களோனு, உயிர் பயத்துல உலற்றியா.." கடுமையானது அவன் முகம்.

"ஏய்.. தோடா.. உன் அல்லக்கைங்கள பாத்து நடுங்கிட்டேன் பாரு.. நெசமாலுமே உன் தொம்பி சாக கெடக்கான்டா.. நம்பலைனா செல்லூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்க்கு போன் போட்டு கேட்டுட்டு வெரசா கெளம்பு. இல்லனா உன் தொம்பிக்கு பாடை தான்டிஇஇ.." நாக்கை உள்மடித்து கடித்தவன், அத்தனை பேரும் திகைத்து நிற்கும் நேரம் கடுகோடு எஸ்ஸாகி இருந்தான்.

அவசரமாக இன்ஸ்பெக்டருக்கு அழைத்து விபரம் கேட்ட,
"ட்ரிங்க் அண்ட் டிரைவ் பண்ணி இருக்கார் சார், லாரி தட்டி தூக்கிடுச்சி. யாருன்னு பாத்தேன் உங்க தம்பி தான். உங்களுக்கு இன்பார்ம் பண்ணலாம்னு பாத்தா மேரேஜ் பிஸில இருப்பீங்க, சரி முகூர்த்தம் முடிஞ்சதும் சொல்லிக்கலாம்னு, நானே ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போய்ட்டு இருக்கேன் சார்"

அவர் பணிவாக சொன்னதும், "பாலாஆஆ.." என பற்களை கடித்தவன், "எந்த ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறீங்க" என்றதும், இன்ஸ்பெக்டர் சொன்ன மருத்துவமனை நோக்கி விரைந்தாலும், சிவகுருவின் ஆட்கள் ரகுவின் ஜிப்ஸியை பின் தொடர்ந்து சென்றது.

"யூ.. ராஸ்கல் எதுக்கு டா எனக்கு தாலி கட்டின.. நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்னு என் வாழ்க்கைய சுத்தி சுத்தி நாசம் பண்ற.. மரியாதையா என்ன விடு.. வண்டிய நிறுத்து டா.."

முன் இருக்கையில் அமரவைக்கப்பட்டிருந்த மிது, புயல் வேகத்தில் வளைத்து வளைத்து ஜிப்ஸியை ஒட்டியவனை தொடர்ந்து அடித்து, கத்தி கூச்சலிட்டவளின் நச்சரிப்பு தாங்காமல்
"ஏய்ய்.. இதுக்கு மேல சத்தம் வந்துது.. மொத்தமா உன் சத்தத்த நிறுத்திப்புடுவேன்.. பேசாம வரணும்.." கரத்தை மடக்கி ஓங்கி சீட்டில் குத்திய ரகு, பெரிய கண்களை உருட்டி கத்திய வேகத்தில், மொத்த உடலும் தடதடவென நடுங்கி போனாள் மாது.

ஏற்கனவே அவன் கையால் அடி வாங்கிய அனுபவம் உண்டல்லவா..! அந்த பயத்தில் பூனைக்குட்டியாக சீட்டில் பதுங்கிய பாவை, தங்கள் பின்னால் வரும் ஆட்கள் எப்படியும் இந்த அரக்கனிடமிருந்து தன்னை காப்பற்றி சென்று விடுவார்கள் என்ற சிறு நம்பிக்கையில் இருக்க, ரகுவோ அவள் நம்பிக்கையை தூள் தூளாக ஆக்கும் வகையில், துரத்தி வந்த ஒவ்வொருவனையும் ஜிப்ஸி ஓட்டியபடியே பந்தாடி காலி செய்து விட்டான்.

நீண்ட தூர பயணம். தன்னை மீறி உறக்கத்திற்கு சென்ற மிது, கண் விழித்து பார்த்தது பிரியாணி உண்ணும் முரட்டு கணவனை தான்.

வண்டியில் வேறு அவள் மட்டுமே இருக்க, கதவும் திறந்து இருப்பதை கண்ட மிது, முரடனிடமிருந்து தப்பிக்க இதுதான் நேரமென அவசரமாக இறங்கி அங்கிருந்து ஓட தொடங்கி இருந்தாள். எங்கே அவன் வந்து விடுவானோ என்ற அச்சத்தில், அடிக்கடி பின்னால் திரும்பி பார்த்து மூச்சிறைக்க ஓடியவள், ஏதோ ஒரு கனமான ஒன்றில் மோதி பொத்தென மண்ணில் விழுந்த மிது அரண்டு போனாள்.

ஏஏஏஏஏப்ப்.. பெரிய ஏப்பம் விட்டு, அவள் முட்டிய நெஞ்சை நீவி விட்டபடி நின்றிருந்த ரகுவை கண்டு எச்சில் விழுங்கிய மிது, தடுமாறி எழுந்து மீண்டும் அங்கிருந்து ஓட முற்பட்டவளின் ஜரிகை முந்தானை, உடையவன் கையில் சிக்கி இழு பட்டதில், திகைப்பாக திரும்பிய மிதுவின் கண்கள் கண்ணீரில் நிறைந்திருந்தன.

"பொறுக்கி ராஸ்கல்.. நடுரோட்ல நின்னு ஒரு பொண்ணோட ட்ரெஸ பிடிச்சி இழுக்குறியே உனக்கு அறிவில்ல.. விடுடா என் சேலைய.." முந்தானை நழுவி விடாதவாறு இறுக்கிப் பிடித்துக்கொண்ட மிது, அவன் கையில் சுருட்டி வைத்திருந்த பாதி முந்தானையை உருவ முயன்று தோற்றவளாக,

"ப்ளீஸ் ஹெல்ப் மீ.. யாராவது காப்பாத்துங்களேன்.. இந்த நான்சென்ஸ் எங்கிட்ட அத்துமீற பாக்குறான்.." தன்னை யாராவது வந்து காப்பாற்றி விட மாட்டார்களா என்ற தவிப்பில் தொண்டை தண்ணீர் வற்ற கத்த, கண்ணுகெட்டும் தூரம் வரையில் சுற்றியும் ஆட்கள் இல்லை. அந்த உணவகத்தில் இருந்து சற்று தூரம் ஓடி வந்து விட்டதால், அதுகூட கண்ணை விட்டு மறைந்து போனது தான் பரிதாபம் அங்கே!

"நீ என்ன கத்தி கூப்பாடு போட்டாலும் இங்கன யாரும் வரமாட்டாங்க.. இது முழுக்க கரிசல் காட்டு பாதை. அவசரத்துக்கு ஒதுங்க யாராவது வர்றதோட சரி.." வறண்ட குரல் அச்சுறுத்த சொன்னவனை முகம் வெளுத்த நிலையில் பார்த்தாள் மிது.

"நீ யாரு.. உன்ன இதுக்கு முன்னாடி நான் பாத்தது கூட இல்ல. ஆனா எதுக்காக என் லைஃப்ல அன்வான்டடா புகுந்து என்ன சித்ரவதை பண்ற. உனக்கு நான் என்ன அறியாம ஏதாவது தப்பு செஞ்சி இருந்தா, உன் காலுல கூட விழுந்து மன்னிப்பு கேக்குறேன். ப்ளீஸ் என்ன இதோட விட்டுடு.." சண்டைக்காரனோடு சரிக்கு சரியாக மல்லுக்கு நிற்பதை விட, சகித்துக்கொண்டு மன்னிப்பு கேட்பதே மேல் என நினைத்து விட்டாளோ என்னவோ!

பாவமாக கெஞ்சியவளை கண்டு சிறு ஈரம் பூக்கவில்லை அவனது இரும்பு நெஞ்சினில்.

"வ்.வேணும்னா எ.என் மாமாகிட்ட சொல்லி உன்ன எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்றேன்.. நான் சொன்னா என் மாமா கேட்டுப்பார்.." அவள் அவசரமாக சொன்னதை கேட்டு ஏலனமாக உதடு கோணினான் ரகு.

"என்ன டி, நீ பேசுறத அமைதியா கேக்குறேன்னு என்னைய கேனையன்னு நெனச்சிட்டியா.. நல்லா கடுகு சைல இருந்துகிட்டு பேச்சை பாரு.. அந்த பலகுருக்கு ஸ்கெட்ச்சி போட்டு தூக்கின எனக்கு, உன் மாமன நேருக்கு நேர் போட எம்புட்டு நேரம் ஆகி இருக்குங்ற.." முரட்டாக கேட்டவன் வார்த்தையில் அதிர்ந்த கண்கள் நன்கு விரிந்தன.

"அவன விட்டுட்டு வந்ததுக்கு காரணம் இருக்கு.. இப்ப அதையெல்லாம் உங்கிட்ட சொல்ல எனக்கு மூடில்ல டி.. ந்நா தொட்டு தாலி கட்டி என் பொண்டாட்டியா பளபளன்னு என் முன்னாடி நிக்கிற உன்னைய.. கண்டபடி இழுத்து வச்சி கடிச்சி.." செவிகள் கூசுமளவுக்கு பச்சையாக அந்தரங்கம் பேசியவன், தன் கையில் சுற்றி இருந்த அவளது சேலை நுனியை வெடுக்கென இழுத்து, தன் நெஞ்சோடு அவளை மோத விட்ட வேகத்தில் பெண்ணிதழை வன்மையாக சிறை செய்திருந்தான் ரகுபதி.

அதுவரை ரகு சொன்னதை கேட்டே நடுங்கி இருந்த மிது, முரட்டுக்காளையின் திடீர் இதழ் முத்தத்தில் நிலைகுலைந்து போனாள் மிது.

ஆறடி இளையோன், நாலே முக்காலடி உள்ள மாயோளை குனிந்து முத்தவிடுவது சற்று சிரமமாக இருப்பினும், தேன்துளி சுரக்கும் வாய் முத்தத்தில் கண்கள் கிறங்கி நுண்ணிடை நசுக்கி பிடித்த ரகு, பெண்ணவளின் பின்னழகில் கைகோர்த்து தனக்கு ஈடான உயரத்திற்கு தூக்கி, பெண்ணவளின் எச்சில் ரசத்தை உறிஞ்சி எடுக்க வேகத்தில், மொத்தமாக சோர்ந்து போனது பொன்னுடல்.

தொடர்ந்து நீடித்த முத்தத்தில், அவள் மேனி தளர்ந்து கையில் தொய்வதை உணர்ந்த ரகு, மிதுவை தரை இறக்க, நிற்க முடியாது கண்ணீரோடு தள்ளாடியவளுக்கு இயலாமையில் அழுகை பீரிட்டது.

"ப்பா.. செம்ம கிக்கா இருந்துச்சு டி உன் உதடு தந்த முத்தம்.. அன்னைக்கும் அப்டிதே எனக்கு இஸ்டப்பட்ட எடத்துல எல்லாம் உதட்டால தேச்சி கடிச்சி ருசி பாத்தேன்.. இன்னைக்கு அதைவிட ரொம்ப கம்மிதே, ரோடுங்றதால அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்" பெரிய மனசுக்காரன் சலித்து

"இன்னைக்கு வேற நமக்கு மொத ராத்திரி அதுனால இங்க விட்டத அங்க புடிச்சிடறேன்.. இப்ப வா பிரியாணி நல்லா டேஸ்ட்டா இருக்கு வயிறு முட்ட இங்கனவே சாப்ட்ரு.. அப்பதே விடிய விடிய மாமனோட தெம்பா கபடி ஆட முடியும்.."

சொன்னதோடு இல்லாமல், அவனது அராஜகத்தில் ஆடிப் போனவளை பரபரவென இழந்து சென்று அதட்டி உருட்டி உண்ண வைத்த ரகு, எண்ணை பட்டு பளபளத்த அவள் இதழையும் அவ்வப்போது கடித்து உண்டு ஆண்மைக்கு சிறு தீனி போட்டவனாக, மீண்டும் அவளை இழுத்துக்கொண்டு தன் வீடு நோக்கி பயணமானான்.

தொடரும்.

படிக்கிறவங்க கமெண்ட் பண்ணுங்க கண்ணுகளா.. இல்லாட்டி யாரும் படிக்கல போலன்னு நான் கதை எழுதாம சோம்பேறியா தூங்கி தூங்கி எந்திரிப்பேன் சொல்லிட்டேன் 🫣
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 4
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
11
Reaction score
8
Points
3
Ivan appana vida Mosama irukane..
Yen ipdi panran andha pulla pavam thana
 
Top