- Messages
- 275
- Reaction score
- 296
- Points
- 63
அத்தியாயம் - 4
"கவி.. கவி.. காம் டவுன்.. இப்ப ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற.. ஒன்னும் பிரச்சன இல்ல ஹியரிங் மெஷின் தானே உடைஞ்சிது அதை நம்ம எப்படியாவது வாங்கிக்கலாம் கவலை படாத கவி" ஸ்வாதி அவளால் முடிந்த ஆறுதல் வார்த்தைகளை எடுத்து கூறியும், பாவம் அவள் என்னவோ தனியாக புலம்புவதை போல தான் இருந்தது.
பார்கவி அவள் பாட்டுக்கு சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி புலம்பிக் கொண்டு இருந்தாளே தவிர, ஸ்வாதியின் உதட்டு அசைவை கண்டுக் கொண்டதாக தெரியவே இல்லை.
அப்போது கதவை படாரென திறந்துக் கொண்டு உள்ளே வந்த ஆதியை ஸ்வாதி பாவமாக பார்த்து வைக்க, அவள் நிலையை கண்டு உதட்டுக்குள் சிரித்தவனாக,
"என்ன சொல்றா உன் பிரண்டு" என்றான் கனியா குரலில். இன்னுமும் அவன் மென்மை வண்மை எல்லாம் முழுதாக காட்டப் படுவது அவன் மித்துபேபி யிடம் மட்டும் தான். மகள் பேத்தியிடமாவது குரல் கொஞ்சம் தழையும் ஆனால் மகனிடம்?.
"சார்.. ரொம்ப படுத்தி எடுக்குறா ஹியரிங் மெஷின் இல்லாம.. அதோட கண்ணாடி உடைஞ்சி போச்சி, அதான் டென்ஷன் ஆகி திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி கத்திட்டு இருக்கா" என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்.
"காது தான் கேக்காது, கண்ணுக்கு என்ன" என்றான் புருவம் உயர்த்தி.
"சார் அது பவர் கிளாஸ், கண்ணாடி இல்லனா அவளுக்கு கண்ணு மங்கி தலை வலி வந்திடும்" என்றாள் விளக்கமாக.
"ஓஹ்.. என்றவன் கவியை பார்க்க, அவளோ கண்களை கசக்கியபடி ஸ்வாதியின் சுடியை கவசம் போல் ஒரு கையால் பிடித்துக் கொண்டு, அவள் பாட்டுக்கு தனியாகக் கத்திக் கொண்டு இருந்தாள்.
தன்னை மீறி ஒரு நிமிடம் கவியின் செய்கையை உதட்டில் தவழும் புன்னகையோடு ஆசையாக பார்த்து நின்ற ஆதி, "கியூட் லிட்டில்" என்றான் மீசைக்குள் உதடு அசைய. பின் நியாபகம் வந்தவனாக பின்னால் இருந்த டிரைவரிடம் கை நீட்ட, "இந்தாங்க சார்' என அவன் கையில் பணிவாக சில பொருளை வைத்தார்.
ஸ்வாதியை விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டு இருந்தவளின் முன்னால் ஆதி வந்து நிற்க, மீண்டும் கண்களை கசக்கிக் கொண்டு அவனை பார்த்த கவி கண்களுக்கு மங்கலான உருவமாக தெரிந்தான் ஆதி.
எல்லாம் அந்த பைக் சக்கோவால வந்துச்சி.. அவன் மட்டும் என் கைல கெடச்சான்" என்று மீண்டும் பழைய பல்லவியை பாடத் தொடங்க, தலையில் கை வைத்துக் கொண்டாள் ஸ்வாதி.
மெலிதாக சிரித்தவன் தன் கையில் இருந்த பாக்ஸை பிரித்து ட்ரைவரிடம் புதிதாக வாங்கி வர சொல்லி இருந்த விலை உயர்ந்த ஹியரிங் மெஷினை, அவனே கவி காதில் மாட்டிவிடுவதை கண்ட ஸ்வாதிக்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சிவுமாக இருந்தது.
மெஷினை ஆன் செய்து விட்ட ஆதி, உடைந்து கிடந்த கண்ணாடியின் பெயரை கூறி அதே போல் வாங்கி வர்ற சொன்ன கண்ணாடியும் எடுத்து கண்ணில் மாட்டியப் பிறகு, கண்ணும் காதும் சரியாக வேலை செய்ததில் ஆதியை தெளிவாகக் கண்டுக் கொண்டவளாக,
"அங்கிள் நீங்க தானே என்ன ரோட்ல திட்டிட்டு இருந்தீங்க" என்றாள் முகம் சுருங்கி பாவமாக.
அதில் பதறிய ஸ்வாதி, "ஏய்.. கவி கொஞ்சம் அமைதியா இரு.. சார் தான் உன்ன அவர் கார்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்து சேத்ததும் இல்லாம ஹாஸ்பிடல்க்கு பணம் கட்டி உனக்கு ஹியரிங் மெஷின் கண்ணாடி எல்லாம் வாங்கிக் கொடுத்தது" சற்று அதட்டிக் கூறி "சார்க்கு நன்றி சொல்லு" என்றாள்.
ஓஹ்.. என்று பதறிய கவியும், "சாரி அங்கிள் தெரியாம பேசிட்டேன் என்ன மன்னிச்சிடுங்க" கண்கள் சுருக்கி கெஞ்சலாக மன்னிப்பு கேட்டவளாக, "அப்புறம் இதெல்லாம் வாங்கிக் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி அங்கிள்" என்றாள் கண்கள் சிரிக்க.
இரு பெண்களையும் கண்டு மெலிதாக தலையசைத்த ஆதி, அவனே அறியாது தானாக கை உயர்ந்து கவியின் தலையை வருடிக் கொடுத்தவனாக, "இனிமே ரோட்ல நடக்கும் போது பாத்து ஜாக்கிரதையா போகணும்" என்றானே கட்டளையாக, தன்னால் தலை ஆடியது சரி எனும் விதமாக.
ஸ்வாதியிடம் திரும்பி கவியை பார்த்துக் கொள்ளும் படி கண்ணசைத்த ஆதி, டிரைவரிடம் டாக்சி பிடித்து இருவரையும் அவர்கள் வீட்டில் விட சொன்னவன், டிரைவர் கொண்டு வந்த காரை எடுத்துக் கொண்டு புயல் வேகத்தில் கிளப்பிக் கொண்டு ஏர்போர்ட் வந்தவன் தான். அசோக் யாரை பார்க்கக் கூடாது யார் கண்ணில் சிக்கிவிடக் கூடாது என்று பயந்து நடுங்கிக் கொண்டு வந்தானோ, அவன் மீதே தான் முட்டி மோதி நிலைத் தடுமாறி நின்றது.
இரும்பில் மோதியதை போல் தலையை தேய்த்துக் கொண்டு நிமிர்ந்தானே, கண் முழி பிதுங்க ஆதியின் கூர் பார்வையில் இடுப்புக்கு கீழ் உள்ள மொத்த பாகமும் ஆட்டம் கானத்தொடங்கி விட்டது.
"அவரு பையன ரேஸ்ல கலந்துக்கக் கூடாதுன்னு உத்தரவு போட்டு வச்சிட்டு, இப்ப இவரு என்ன ஏரோபிளைன்ல பறந்து வந்தாரா என்ன" மனதில் நினைத்தபடி, அசோக்கின் நிலையை எண்ணி தனியாக சிரித்த அஜய்,
"டேய் ஆத்வி என்னடா உன் பிரண்ட இப்டி அநியாயமா உன் அப்பாட்ட கோத்து விட்டு ஜாலியா இருக்க" என்றான் அவன் கையில் இருந்த பெட்டி ஒன்றை வாங்கியபடி.
அதில் அசோக் மற்றும் அவன் தந்தையை கண்டு மெலிதாக இதழ் விரித்தவன், "அவன் வரலைனா இந்நேரம் இந்த ஹிட்லர் கிட்ட நான் இல்ல மாட்டி இருப்பேன், அவங்க பிரச்சனய முடிச்சிட்டு வரட்டும் நீ வா மாமா" என்ற ஆத்வி முன்னால் நடக்க, "அப்பனும் புள்ளையும் என்ன ரகமோ" அஜய் புலம்பியபடி அவன் பின்னால் சென்றான்.
போகும் இருவரையும் பார்த்த ஆதி, அசோக்கின் கழுத்தை வளைத்து இறுக்கமாக பிடித்துக் கொண்டது தான் தாமதம்,
"ஐயோ அங்கிள் நான் எதுவும் பண்ணல எல்லாம் ஆத்வி தான் பண்ணான்.. சொல்ல சொல்லக் கேக்காம நேத்து நடந்த ரேஸ்ல கலந்துக்கிட்டு ஜெய்ச்சி முதல் பரிசு வாங்கினது எல்லாம் அவன்தான்.. இதுக்கும் எனக்குm எந்த சம்மந்தமும் இல்ல அங்கிள் ப்ளீஸ் என்ன விட்ருங்க" என்று ஆதிக்கு தெரியாத உண்மைகளை மலமலவென உளறிக் கொட்டி விட்டான்.
அசோக்கை முறைத்த ஆதி, "இத ஏன் டா நீ அப்பவே எனக்கு போன் பண்ணி சொல்லல" என்றான் கணீர் குரலில்.
அதில் மேலும் கோழிக் குஞ்சியாக நடுங்கியவன், "அவன் தான் அங்கிள் உங்ககிட்ட சொல்லக் கூடாதுனு என் போனை புடுங்கி வச்சிக்கிட்டான்" என்றான் பாவமாக அழுது விடும் குரலில்.
"உன்ன அப்புறமா கவனிச்சிக்கிறேன் வா" மேலும் அவனை முறைத்த ஆதி முன்னால் நடக்க,
"ஐயோ இன்னும் இருக்கா" என்ற ரீதியில் ஆத்வியை மனதிலே கழுவி ஊற்றியபடி அறக்கப் பறக்க ஓடினான்.
தடபுடலாக மகனுக்கு பிடித்த அனைத்து வகையான உணவையும் செய்து முடித்து, மித்ரா உணவு மேஜையில் அடுக்கிக் கொண்டு இருக்க, "என்னம்மா எல்லாமே ஆத்விக்கு புடிச்ச ஐட்டமா இருக்கு, எனக்கு புடிச்சது எதுவும் இல்லையா" என்றபடி வந்தாள் ஆரு.
"உன்ன மட்டும் எப்டி ஆரு விடுவேன், உனக்கும் உங்க அப்பாக்கும் பிடிச்ச வெஜ் ரைஸ் இருக்கு, மாப்பிளைக்கும் அதன்யாக்கு இதோ மீன் வருவல் இருக்கு" என்று மூடி இருந்த மூடியை திறந்துக் காட்ட உணவின் ருசி அதன் வாசனையிலே தெரிந்தது.
"சூப்பர் ம்மா.." என்ற ஆரு "ஏம்மா எல்லாருக்கும் பிடிச்சத செஞ்சி வச்சிருக்க ஆனா உனக்குனு எதுவும் செய்யலையா" என்றாள் யோசனையாக.
"எனக்குனு என்ன தனியா செய்ய இருக்கு நீங்க எல்லாரும் என்ன சாப்பிடுவீங்களோ அதை தான் நான் சாப்பிடுவேன் ஆரு" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அடுத்தடுத்து இரண்டு கார் வந்து நின்றது.
முதல் காரில் இருந்து ஆத்வி அஜய் இறங்க, அடுத்தக் காரில் இருந்து ஆதி அசோக் இருவரும் இறங்கினர்.
மகனை பார்த்ததும் இளமை ததும்ப கண்ணில் கண்ணீரோடு "ஆத்விஇஇ.." என்று ஓடி வரும் மனைவியை ஆதி கண்கள் ரசித்து பார்த்து நிற்க, "மாம்ம்ம்.." என ஓடி சென்று அன்னையை தூக்கி சுற்றினானே மகன் என்றும் பாராமல் இந்த வயதிலும் அவன் மேல் பொறாமை பொங்கியது.
"எப்டி இருக்க ஆத்வி.. என்னபா உடம்பு இப்டி இளச்சி போய் இருக்கு.. அங்க சரியா சாப்டியா இல்லையா" கேள்விகளை தொடுக்க தொடங்கி விட, ஆண்கள் அனைவருக்கும் ஆத்வியின் உடலை "என்னது இளச்சி போய் இருக்கானா" எனும் ரீதியில் மேலும் கீழுமாக பார்த்து வைத்தனர். பின்னே பாடி பில்டர் போல் இருப்பவனை இளைத்து விட்டாய் என்றால் அவர்களுக்கு எப்படி தோன்றும்.
"ம்க்கும்.. அம்மாவும் புள்ளயும் அப்புறம் தனியா வந்து கொஞ்சிக்கோங்க இப்ப எனக்கு பசிக்குது, மித்து உள்ள வரியா இல்லையா" என்றான் ஆதி காட்டமாக.
அதில் மிரண்டு விழித்தவள், "எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டேன்ங்க உள்ள வாங்க" என்ற மித்ரா உள்ளே ஓடுவதை பார்த்த ஆத்வி, "என்ன மாமா எங்கேயோ புகையர ஸ்மெல் ஹெவியா வருது" என்றான் தந்தையை ஓரக்கண்ணால் பார்த்து.
அதில் திடுக்கிட்டு போய் முழித்த அஜய், "ஸ்மெல் வந்தா மூக்க மூடிட்டு போடா எதுக்கு என்னைய நடுவுல இழுக்குற" என்று நினைத்தபடி நிற்கயில்,
ஆதி அவனை வெறியாக முறைப்பதை கண்டு, ம்ஹ்ம்.. என்று முகத்தை சுளித்தான் ஆத்வி இந்த முறைப்புக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்ற ரீதியில்.
"எல்லாம் இவனுக்கு இந்த மித்து பேபி குடுக்குற இடம், அவளுக்கு இருக்கு" உள்ளே கருவி வேக எட்டுக்களுடன் உள்ளே சென்றான், தன் மித்துபேபியை அவன் பாணியில் பழி வாங்க.
போகும் ஆதியை கண்டு அனைவரும் சிரித்தபடி உள்ளே செல்லுகையில், ஆரு தம்பியை நலம் விசாரித்தபடியே அசோக்கிடம் பேசிக் கொண்டு வர்ற,
விக்ரம் அறையில் இருந்து ஓடி வந்த அதன்யா, "மாமாஆஆ.." என கத்திக் கொண்டே தத்தலாக ஓடி வந்து ஆத்வியின் மேல் ஏறிக்கொண்டாள்.
"ஹேய் தன்யா குட்டி" என்ற ஆத்வியும் தனது அக்கா மகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு கேச் பிடித்துக் கொண்டே வந்தான்.
புயல் வீசும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 4
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.