• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

அத்தியாயம் 40

Administrator
Staff member
Messages
309
Reaction score
251
Points
63
அத்தியாயம் - 40

"என்ன பத்தி உங்க பிரண்ட்கிட்டயும் அவர் வைஃப்கிட்டயும் என்ன பேசிட்டு இருந்தீங்க ராம்." அறைக்குள் வந்ததும் தொடங்கி விட்டாள் நேத்ரா.

"அவசியம் தெரிஞ்சிக்கணுமா என்ன?"

"ஆமா சொல்லுங்க"

"ம்ம்.. உன்ன எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலைனு சொன்னேன், உனக்கும் எனக்கும் கடைசிவரை வாழ்க்கையில ஒத்து போகாதுனு சொன்னேன் போதுமா"அவன் தோளில் தட்டி முகத்தை புரட்டி விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளை பாதுகாப்பாக மெத்தையில் அமர வைத்தபடி விளையாட்டாக தான் சொன்னான். ஆனால் அப்போதைக்கு அவ்வார்த்தையை தவிர்த்திருக்கலாம் அவன்.

நேத்ராவின் முகத்தில் சட்டென வந்து போன விரக்தியை மறைத்தவளாக, "இதுதான் எனக்கு ஆரம்பத்துல இருந்தே தெரியுமே, ஆமா எப்போ இவங்க ரெண்டு பேரும் தூங்குவாங்க" அவனை ஒட்டி அமர்ந்து சட்டை பொத்தானை ஒரு மார்க்கமாக திருகவும், உதட்டுக்குள் உதயமான சிரிப்பை அடக்கிக் கொண்டவனாக, "நைட்லாம் வயிறு வலியில புரண்டுட்டு இருந்தியே டி, அதுவும் எம்மேல வேற பழி போட்ட, இப்ப மேடம்க்கு வலி சரியா போச்சா" சிடுசிடுப்பாக கேட்டான் அவள் வயிற்றை இதமாக வருடி விட்டு.

"அதூ.. அப்டி சொன்னதால தானே என்ன நீங்க நல்லா கேர் பண்ணி பாத்துக்கிட்டீங்க, உங்க நெஞ்சை விட்டு என்ன விலக்கவே இல்லையே. லேசா எனக்கு வலி இருந்தாலும் இங்க தலை வச்சி தூங்கும் போது வலியெல்லாம் மறைஞ்சி என் நெஞ்செல்லாம் குளுகுளுனு இருந்துச்சி தெரியுமா ராம்." வாகாக அவனது மடியில் அமர்ந்து ஒற்றை கரத்தால் அவன் கழுத்தை சுற்றி வளைத்து மறு கரத்தால் அவன் நெஞ்சை கடைந்தெடுக்க, ராமின் நிலையோ குதிரை ஓட்ட தயாராக இருந்தது.

"குழந்தைங்க முழிச்சிருக்கு தள்ளி போடி உடம்பெல்லாம் ஒரு மாதிரி முறுக்குது." எப்போதும் போல் அவள் காதலை திகட்டாமல் கொடுத்ததில் திக்குமுக்காடி அவள் இடைப்பற்றி நெளிந்தான்.

"அதுக்கு தான் தூங்க வைக்க சொன்னேன், எனக்கு கூட நீங்க உடனே வேணும்னு தோணுது ராம், சீக்கிரம் இவங்கள தூங்க வச்சிட்டு வாங்க, வெயிட் பண்றேன்."

அவன் செவிதனில் ஹஸ்கியாக கிசுகிசுத்து பட்டும்படாமலும் அவன் அதரம் சுவைத்து ஜவ்வாக இழுத்து விடுவிக்கவும், கிறக்கப்பார்வையால் அவளையும் கிறங்கடித்து குழந்தைகளின் அருகில் படுத்து தட்டிக் கொடுத்து உறங்க வைத்த சில நிமிடங்களில், மோக மந்திரங்கள் ஓத குதிரைகள் கணைக்கும் சத்தம் அவ்வறையை நிறைத்தன. காமம் முடிந்த பின்னும் ராமை விட்டு இம்மியும் விலகாமல் இடைவிடாத ஈரமுத்தம் கண்ணீரோடு அவன் கன்னத்தில் கரைந்து போனது.

"என்ன நேத்ரா இப்பலாம் ஒரு மாதிரி இருக்க, உன் மனசுல என்ன தான் டி.. இருக்கு என்கிட்ட தெளிவா சொல்லு, என்னால முடிஞ்ச வரை உனக்கு உதவி செய்றேன் நேத்ரா." இருளிலும் நீரில் பளபளத்த அவள் ஈர விழிகளை நோக்கினான்.

"என் கஷ்டம் என்னோட போகட்டும் ராம். நாளையில இருந்து நீங்க பழையபடி ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்க போறீங்க, என்ன பத்தி விட்ருங்க இனிமே நீங்க உங்க பையன் குடும்பம்னு நிம்மதியா இருக்கனும்" பதில் பேச விடாமல் அவன் இதழ் கவ்வி அவன் மூளையை திசைத்திருப்பி கூடலுக்கு அடித்தளம் போட்டு மன்னவனை மீண்டும் மீண்டும் ஆண்டால் மங்கையவள்.

அவள் ஆய்ந்து ஓய்ந்து கிடக்கையில் ஒன்றும் விளங்காமல் அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் நெஞ்சில் குழப்பம் குடிக் கொள்ள யோசனையில் ஆழ்ந்தபடியே உறங்கிப் போனான் ராம்.

ராமின் மகிழ்ச்சி என நேத்ரா எடுத்த முடிவு நாளை அவனுக்கே சாபமாகிப் போகும் என அறிந்திருந்தால் அம்முடிவை அப்போதே கை விட்டிருப்பாளோ என்னவோ!

°° °° °°
குணவதியை முரட்டுத்தனமாக அடித்து துன்புறுத்திக் கொண்டிருந்த நேரம், "அப்பாஆஆ.." என்ற கர்ஜனைக் குரலில் பெல்ட்டை ஓங்கிய கரம் அந்திரத்தில் நிற்க வாயில் புறம் திரும்பினார் பரமு.

நரேன், நேத்ரா இருவரும் ஒன்றாக கை கோர்த்து நின்று, தந்தையை கூர்ந்து பார்த்தபடி உள்ளே வந்தவர்களின் பார்வை, பரிதாபமாக அழுது கொண்டிருந்த அன்னையை கண்டு மீண்டன.

"எதுக்காக ப்பா.. அவங்கள அடிக்கிறீங்க. மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிற அளவுக்கு அவங்க என்ன தப்பு செஞ்சாங்க" நரேனின் கடுமையான கேள்வியில் புருவம் நெளித்து இகழ்ச்சியாக பார்த்தார் அவனை.

"இதோ இதோ.. இவளுக்காக பறிஞ்சி பேசி என்கிட்டயே குரல் உயர்த்துற பாரு இதுக்கு தான். நேத்து வரை நான் சொன்ன பேச்சை தட்டாம கேட்டவன் இப்போல்லாம் சுவர் ஏறி குதிச்சி, இதுக்கெல்லாம் காரணம் யாரு இவ தானே. இவளோட என்னைக்கு நீ தனியா ஊர் சுத்த தொடங்கினியோ அப்பவே நீ என் கைய விட்டு நழுவ தொடங்கிட்ட நரேன்" பற்களை கடித்த பரமுவை உச்சகட்ட வெறுப்போடு பார்த்தான்.

"நீங்களா அப்டி நினைச்சிக்கிட்டா நான் அதுக்கு பொறுப்பாக முடியாது. இனிமே தேவை இல்லாம அவங்கள அடிச்சி துன்புறுத்துற வேலை எல்லாம் வச்சிக்காதீங்க, இல்ல.." விரல் நீட்டி எச்சரிக்கை விடும் போதே, "இல்லனா என்னடா பண்ணுவ" விதண்டாவாதமாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முன்னால் நடந்தார் கோவத்தில் திளைத்த முகத்தோடு.

"திரும்ப அடிச்சி பாருங்க தெரியும்" அவனும் அதே நிமிர்வோடு சொன்ன தோரணையில் ஒரு நிமிடம் ஆடிப் போன பரமு, கையில் சுழட்டி இருந்த பெல்ட்டை ஓங்கிய நேரம், "ஐயோ.. அவனை அடிக்காதீங்க" என்று குணவதி ஒரு பக்கம் பதறி ஓடி வர, அதற்குள் அந்த பெல்ட்டை வெடுக்கென பிடிங்கி இருந்தாள் நேத்ரா.

"நேத்ரா நீயும் அவன் கூட கூட்டு சேந்துட்டியா என்ன.. பாத்தெல்ல அந்த நாய்க்காக பெத்த அப்பனையே இவன் எடுத்தெரிஞ்சி பேசுறத" சட்டென தன் அதீத கோபத்தைக் குறைத்துக் கொண்டு நயவஞ்சகமாக செயல்பட்டது அவரின் மூளை. மகன் மகள் அனைவரும் ஒன்று திரண்டிருக்கும் இந்நேரத்தில் ஓவராக கண்டித்தால் இனி தன் பாட்சா செல்லுபடி ஆகாது என்று உணர்ந்து விட்டாரோ என்னவோ!

"நான் யாரோடவும் கூட்டு சேரல, ஆனா நீங்க பண்ற கூத்து எதுவுமே சரி இல்ல. வீட்டுக்கு வெளிய தான் உங்க பதவி அதிகாரம் எல்லாம், அதையே வீட்டுக்குள்ள காட்ட நினைக்காதீங்க" பொறுமையின் சிகரமாக ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக உரைத்த மகளை கூர்ந்து பார்த்தார் பரமு.

எப்போதும் நரேனை விட நேத்ரா தான் அவருடன் அதிகம் வளர்ந்த செல்ல மகள். அப்பா சொல்லே வேதவாக்கு எனும் அளவுக்கு தான் இரண்டு பிள்ளைகளையும் வளர்த்தார் அவர். ஆனாலும் நரேனை விட நேத்ரா ஒருபடி மேல், தந்தை எது செய்தாலும் சரியே என்று சொல்லும் மகள் இன்று தன்னையே தவறு என்று சுட்டி காட்டும் அளவுக்கு வந்து விட்டதை எண்ணி தாங்க முடியாமல் ரத்தம் சூடேரிப் போனது.

நேத்ரா.. என்றழைத்து அவர் ஏதோ சொல்ல வரும் முன்னே, "என்னால உங்களுக்குள்ள பிரச்சனை வேணாம்மா.. என்ன இருந்தாலும் உங்க ரெண்டு பேரையும் குழந்தையா இருக்கும் போதுல இருந்தே பெத்தவகிட்ட இருந்து பிரிச்சி பாசமா வளர்த்தவர் அவரு, நான் உங்க யாருக்கும் வேண்டாதவளா தான் இது வரைக்கும் இருந்திருக்கேன், அதே மாதிரி இனியும் இருந்துட்டு போறேன், அதுவும் தொந்தரவா இருந்தா யாருக்கும் சிரமம் இல்லாம ஒரேடியா செத்து தொலைஞ்சிடுறேன். ஒரு மனைவியாவும் வாழ தகுதி இல்ல, ஒரு நல்ல அம்மாவாவும் வாழ தகுதி இல்லாத நானெல்லாம் உயிரோட இருந்து என்ன பண்ண போறேன்." வேதனை தாங்காது முதல் முறையாக வாய் திறந்து பேசி கண்ணை கசக்கிய குணவதியை பார்வையாலே எரித்துக் கொண்டிருந்தார் பரமு.

"ஆசை ஆசையா பெத்துகிட்ட பிள்ளைங்க கூட வெறுத்து ஒதுக்குற அளவுக்கு நான் அப்டி என்ன பாவம் பண்ணிட்டேன்னு தெரியல, என்னைக்காவது ஒருநாள் என் பிள்ளைங்க என்ன மதிச்சு அம்மானு ஒரு வார்த்தை கூப்பிட மாட்டாங்களானு ஏங்கி ஏங்கியே 28 வருஷமா தினம் தினம் அடி உதை கேக்கக் கூடாத வன்சொல் சித்ரவதைதானே என் வாழ்க்கை முடிஞ்சி போச்சி. மணிமணியா ரெண்டு பிள்ளைங்க இருந்தும் அனாதையா பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாம சொந்த வீட்டிலே குப்பைகளை தூக்கி எறியிர சின்னோண்டு அறையில அடஞ்சி கிடக்குறேன், செத்தாலும், கை கால் முடங்கி விழுந்தாலும் எட்டி பாக்க ஒரு நாதியும் இல்ல." முந்தானையால் வாய் பொத்தி துடித்து அழுத குணவதியை அதற்குமேலும் காண முடியாமல், அம்மாஆஆ.. என்று ஓடி அணைத்துக் கொண்டு தானும் கலங்கி விட்டான் நரேன்.

"அம்மா.. ப்ளீஸ் அழாதீங்க ம்ம்மா.. உங்களுக்காக உங்க பையன் நான் இருக்கேன் ம்மா.. இனிமே எந்த ஒரு சூழ்நிலையிலயும் உங்கள தவிக்க விட்டு வேடிக்கை பாக்க மாட்டேன்." அன்னையின் வேதனையை இத்தனை நாளும் கண்கூடாக பார்த்தும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் தவித்திருந்தவன், இன்று அவரின் வாயாலே தன் வேதனைகளை சொல்லி அழவும் அதற்கு மேலும் தாங்க மாட்டாமல் இத்தனை நாளும் மறைத்து வாழ்ந்த பாசம் அனைத்தும் வெளிகொணர்ந்து விட்டது அன்னையின் கண்ணீர்.

குணவதியின் நிலையோ உரைநிலை தான். நம்பவே முடியவில்லை நரேனின் வார்த்தைகளை, உண்மையாகவே தன் மகன் தானா என்ற அதிர்ச்சியில் சந்தேகம் மேலிட அகல விரிந்த அவரின் விழிகளுக்குள், அழகாய் புன்னகைத்தான் நரேன்.

"நரேன்.. உண்மையா நீதான் பேசினியா.. நான் கனவு எதுவும் காணலையே!" பேரானந்தம் தாங்காது அவன் கன்னம் வருடி ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடியவரின் கன்னத்தில் முத்தமிட்டு தன் அன்பை உணர்த்தும் விதமாக மென்மையாக அணைத்துக் கொண்டதும் குணவதியின் மகிழ்ச்சிக்கு அளவுண்டா என்ன.

தாய் மகனின் பாசத்தை ஒரு ஜீவன் உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு காண, மற்றொரு ஜீவன் கொலைவெறியில் கண்டது.

வீட்டில் உள்ள ஒரு பொருட்கள் விடாது அடித்து நொறுக்கப்பட்டது பரமுவின் கையால். வெறிக் கூடிப் போனது அவருக்கு. நரேன் உச்சகட்ட வெறுப்பில் அன்னையை கை வளைவில் நிறுத்தி வைத்துக் கொண்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தான். நேத்ரா அனைத்தும் கண்டும் காணாதது போல் வெறுமையான மனதோடு ராம் வீட்டிற்கு வந்து விட்டாள்.

வந்தவள் அவ்வீட்டினை வினோதமாக பார்த்தபடி உள்ளே வந்தாள். "நேத்ரா.. நேத்ரா.. நில்லு.." பனி அவளை அழைக்க அழைக்க காது கேளாதவளாய் உள்ளே சென்றவளை யோசனையாக அவள் போன திசையை வெறித்து நின்றவளை கலைத்தது குழந்தைகளின் குரல்.

"அம்மா.. அம்மா.. பாஆ.. பா.. தூக்கு" என மழலை மொழியால் அழைத்துக் கொண்டு பால்முகத்தில் புன்னகை தவழ தத்திதத்தி நடந்து வந்த யுவாவை, பனிக்கு முன்னால் ஓடி வந்து தூக்கி முத்தமிட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்த நேத்ராவை விசித்திரமாக பார்த்த பனியை முறைத்தவளாக, "நான் தான் உனக்கு அம்மா யுவா.. நான் இருக்கும் போது இனிமே நீ கண்டவளையும் அம்மானு கூப்பிட வேண்டிய அவசியம் உனக்கு இல்ல புரிஞ்சிதா. அப்பா வரட்டும், நீ நான் அப்பா மூணு பேரும் நம்ம வீட்டுக்கு போய்டலாம் சரியா.." யுவாவிடம் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் திகைத்து நின்ற பனியை அலட்சியமாக பார்த்து விட்டு யுவாவை தூக்கிக் கொண்டு அறைக்கு சென்று விட்டாள் நேத்ரா.

அப்போதே உள்ளே வந்த வர்மனும் நேத்ரா சொன்னதை கேட்டு அதிர்ச்சியானாலும் வெளிகாட்டி கொள்ளாதவனாக, கண்ணீர் ஊற்றெடுக்க நின்ற மனைவியை நெருங்கி சமாதானமாக தோளோடு அணைத்துக் கொண்டவன் மூளையை குடைந்தன சில விஷயங்கள்.

மாலை ராம் வந்தான். முற்றிலுமாக ஆளே மாறிப்போய் இருந்த நேத்ராவின் புதிய உடை அலங்காரத்தைக் கண்டு அசந்து போகாமல் ஏதேதோ சிந்தனையில் ஆழ்ந்து போனான். போதா குறைக்கு அம்மா.. அம்மா.. என்று வாய் ஓயாமல் அழைத்துக் கொண்டு நேத்ராவை விட்டு துளியும் பிரியாமல் இருக்கும் யுவாவை, மடியில் வைத்து சீராட்டி கொஞ்சி பேசி சிரித்துக் கொண்டிருந்த புதிய நேத்ராவை கண்டு எத்தனை நேரம் கண் இமைக்காமல் பார்த்தானோ! அவளாக வந்து பேசும் வரை.

என்ன சொல்லி அவன் மூளையை சலவை செய்து மயக்கினாளோ! மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல் அடுத்த சில மணி நேரங்களில் ராம் தன் குடும்பத்துடன் அவனது வீட்டிற்கு வந்து விட்டான். பனி வர்மன் தடுத்தும் கேளாது.

வெளியே தெரிந்த நேத்ராவின் முகத்தில் குரூரமான வெற்றிப் புன்னகை என்றால், நாதியற்ற நிலையில் உள்ளே கதறிக் கொண்டிருக்கும் உண்மையான நேத்ராவின் நிலையோ பரிதாபத்தின் உச்சக்கட்டம்.

இனி ராமின் ராணியாக அவனோடு வாழப் போகும் உருவம் எதுவோ?

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 40
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top