- Messages
- 309
- Reaction score
- 251
- Points
- 63
அத்தியாயம் - 41
"விழி இன்னும் எத்தனை நாளைக்கு யுவாவ நினைச்சி அழுதுட்டு இருக்கப் போற." மேஜையில் தலை சாய்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவளை ஆழ்ந்து நோக்கினான் வர்மன்.
"அவ எப்டி வரு, என் யுவாகிட்ட அப்டி சொல்லலாம். அவன் பிறந்ததுல இருந்தே என் சொந்த மகனா நினைச்சி தானே வளத்தேன், மலருக்கு முன்னாடியே அவன் எனக்கு மகனாகிட்டான். அப்டி இருக்க, நேத்து வந்தவ என்னை அம்மானு சொல்லக் கூடாதுனு சொல்லலாமா வரு. எனக்கு எவ்ளோ வேதனையா இருந்திருக்கும், அவளுக்கு மாமாவும் சப்போர்ட் வேற அவ பேச்சைக் கேட்டு யுவாவ என்கிட்டருந்து பிரிச்சி தூக்கிட்டு போய்ட்டாரு." சிறுமியாக தேம்பி அழும் மனைவியை ராம் கிளம்பிய நாளில் இருந்து அவ்வப்போது சமாதானம் செய்து தன்னுள் அடக்கிக் கொண்டாலும், ரெட்டை போர் போல் குழந்தையில் இருந்து ரெண்டு பிள்ளைகளையும் பிரியாமல் உடன் வைத்திருக்கும் பனியால் எளிதாக சில நேரங்களை கடக்க முடியவில்லையே!!
"விழிமா.. முன்னாடி அவன் குழந்தைய வச்சிக்கிட்டு தனியா இருந்தான், ஆனா இப்ப அவனுக்கு இன்னொரு கல்யாணம் ஆகிடுச்சி அவன் திரும்ப குடும்பமா வாழ தொடங்கிட்டான். அவன் சந்தோஷமா குடும்பத்தோடு வாழ்ந்தா நமக்கும் சந்தோஷம் தானே டி, என்ன ஒன்னு முன்னாடி மாதிரி யுவாவ நம்ம உரிமையா நம்ம கூடவே வச்சிருக்க முடியாது விழி.." என்றவனுக்கும் கண்கள் போயின. அவனும் சொந்த மகனாகவே பாவித்து பாசம் கொட்டி வளர்த்து விட்டானே!
"ஆனா நேத்ராவோட திடீர் மாற்றம் எப்டி வரு, அதுதானே குழப்பத்தை கொடுக்குது. இத்தனை மாசமா யுவாவ திரும்பி கூட பாக்காதவ திடீர்னு வந்து நான் மட்டும் தான் அவனுக்கு அம்மானு உரிமை பேசுறா. குழந்தைய தூக்கி நொடி பிரியாம கொஞ்சுறா. யுவாவ அவ சந்தோசமா சொந்த பிள்ளையா பாத்துகிட்டா எனக்கு அதை விட பெரிய நிம்மதி வேற இல்ல வரு, ஆனா என்னை ஒதுங்கி இருக்க சொன்னதை தான் தாங்க முடியல." வர்மனின் நெஞ்சில் முகம் புதைத்து அழுகையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள் பனி.
"நிதர்சனம் புரிஞ்சி தான் வாழனும் விழி. நேத்ரா சொல்லிட்டா நமக்கு யுவா உரிமை இல்லாதவனா ஆகிட முடியுமா. நீ கவலை படாதே, ராமே தடுத்தாலும் நம்ம யுவாவ யாராலும் நம்மள விட்டு பிரிக்க முடியாது, என்ன இருந்தாலும் அவன் பெத்தவன் இல்லையா கொஞ்ச நாள் குழந்தைய வச்சிருக்கட்டும். ஒண்ணு ராமே குழந்தையோட வருவான் இல்ல.." என்று அதோடு நிறுத்தி சூட்சமமாக சொன்ன கணவனை உள்ளுக்குள் தோன்றிய அச்சத்தோடு கண்டவளாக,
"இல்லனா.. என்ன பண்ணுவ வரு"
"பொறுத்திருந்து பாரு டி பனிவிழி.. நம்ம யுவா நமக்குத்தான்" கண்ணடித்து கள்மிஷம் செய்தவனை முறைக்க முயன்று சிவந்தவளின் மனதில், தன்னவனின் செய்கையில் ஏதோ வில்லங்கம் உள்ளது என்று மட்டும் தெளிவாக விளங்கியது.
** ** **
அலுவலகம் வந்திருந்த ராமின் மனநிலை முற்றிலுமாக வேறு மாதிரி எண்ணத்தை பிரதிபலிக்க, வேலையில் சரியாக நாட்டமின்றி உடலும் உள்ளமும் சோர்வாக உணர்ந்தான்.
இழந்தவை அனைத்தும் மீண்டும் கையில் கிடைத்தும் திருப்தி கொண்டு மகிழ்ச்சிகொள்ள முடியாத அபலைநிலை அவனுடையது. அவ்வபோது குட்டி பனிமலரின் நினைவு வேறு.
மனைவி, குழந்தை, அம்மா, வேலை, மீண்டும் பழைய வீடு நன்றாக தான் சென்றது சிறிது காலம். ஆனாலும் முதல் நாளில் இருந்தே கண்டறிய முடியாத ஏதோ ஒரு குறை. முன்பு வர்மன் வீட்டில் நேத்ராவோடு வாழ்ந்த அந்த மகிழ்ச்சியாக தருணங்கள் அவளின் அடாவடியான குறும்புகள் அணைத்தும் மாயமாய் மறைந்து போக, நடை, உடை, பேச்சி, பாவனை என்று முற்றிலுமாக மாறி ஏதோ புதிய மனிதியாக தோற்றமளிக்கும் உணர்வு அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளில்.
ஏரெடுத்தும் பார்க்காத யுவதேவை எந்நேரமும் கங்காரு குட்டி போல் தோளில் தூக்கிக் கொண்டு சற்றி வரும் நேத்ரா புதிதாக தெரிந்தாலும் அதை ஆரம்பத்தில் சகஜமாக எடுத்துக் கொண்டானே! அதன் பிறகு வந்த நாட்களில் தான் உள்ளத்தில் திகில் பரவி அவனை அறியாமலே நேத்ராவைப் பற்றின பெருத்த கவலை படர தொடங்கியது.
மாலை ஆனது. முன்பெல்லாம் அத்துனை ஆர்வமாக நேத்ராவை பார்க்க ஓடத் துடிக்கும் கால்கள் இப்போதெல்லாம் தயங்கி தயங்கி அடியெடுத்து வைக்கும் விந்தை ஏனோ!!
இரு சக்கர வாகனத்தை மெதுவாக செலுத்தியபடி வீடு வந்து சேர்ந்தவனை, தலை நிறைய பூவும், தழையத் தழைய கட்டிய புடவையுமாக வாயிலில் நின்று புன்னகை முகமாக வரவேற்ற மனைவியைக் கண்டு இப்போதெல்லாம் ரசிக்க தோன்றவில்லை அதற்கு பதிலாக நெஞ்சிக்குள் உண்டாகும் பயபந்தை மறைத்துக் கொண்டவனாக உள்ளே செல்ல முனைகையில், "அதை என்கிட்ட குடுங்க" என அவனது உணவுப்பையை வாங்கிக் கொள்ள, மேலுக்கு சிறு புன்னகை சிந்தி உள்ளே சென்றான் ராம்.
"என்னங்க.. என்னங்க.. நீங்க எதுக்கு சிரமப்படுறீங்க காலை காட்டுங்க நானே ஷூவ கழட்டி விடுறேன்." இருக்கையில் அமர்ந்து குனிந்து ஷூவை கழட்டிக் கொண்டிருந்தவனின் காலை தூக்கி மடியில் வைத்து அவளே பக்குவமாய் கழட்ட, ஆழ்ந்து பார்த்தான் அவளை.
இங்கு வந்த நாளில் இருந்து இப்படித்தான் ராமின் ஒவ்வொரு சிறுசிறு வேலையும் அவளே முன் வந்து பார்த்து பார்த்து செய்கிறாள்.
காலை பல்துலக்க ப்ரெஷில் பேஸ்ட் வைத்துக் கொடுத்து, குளிக்க துண்டைக் கொடுத்து அனுப்பி குளித்து வந்ததும் அவன் தலை துவட்டி விட்டு, சட்டை மாட்டி, உணவு ஊட்டி விட்டு அதே தட்டில் அவள் உண்டு, வேலைக்கு செல்லும் போது வெளியே நின்று டாடா காட்டி வழி அனுப்பி வைப்பது முதல், மாலை வீடு வந்ததும் இப்போது போலவே அவனை வரவேற்று இரவு படுக்கப் போவது வரையில் அனைத்தும் ஒன்று விடாமல் செய்து கொண்டு இருக்கிறாள்.
அதிலும் பக்குவம் வர தொடங்கியபின் சகமனிதர்களின் குணமும் நடவடிக்கையும் மாற்றிக் கொள்வது இயல்பு தான் என்றாலும், கை பக்குவமே முற்றிலும் வேறாகி ஏற்கனவே பழக்கப்பட்ட கைபக்குவமாய் மாறிப் போனதில், அங்கு தான் முதல் நாளே, அவளின் முதல் கைப் பக்குவதிலேயே எதையோ உணர்ந்து இதயம் திடுக்கிட்டுப் போனான் ராம்.
"நேத்தூமா.. சாப்டியா டா" ஏதோ ஒரு எதிர்பார்போடு ஆசையாய் அவள் தலை வருடி பேர் சொல்லி அழைத்தான் அவளை.
முகம் இருண்டு போக உர்.. உர்.. என்ற முகபாவனையோடு அவன் கேட்டது எதுவும் காதில் விழாததை போல் அவன் காலில் இருந்த ஷாக்சை கழட்டினாள்.
"யுவா என்ன பண்றான் அம்மு.." அடுத்த கேள்வியை தொடுத்தான் அம்மு என்ற வேறு செல்ல பெயரில் அவளை கூர்ந்தபடி.
"இவ்ளோ நேரம் விளையாடிட்டு தான் இருந்தாங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அத்தை தூங்கவும் அவங்க கூடவே அவனும் படுத்து தூங்கிட்டான்" என்றாள் தெளிவாக.
"ம்ம்.. நீ சாப்டியா.." மெல்ல மெல்ல மனதுக்குள் கலக்கம் பரவின.
"இதென்ன கேள்வி உங்கள விட்டு நான் என்னைக்குங்க சாப்ட்டு இருக்கேன், பிரெஷாகிட்டு வாங்க நம்ம ரெண்டு பேரும் சூடா காப்பி குடிச்சிக்கிட்டே பால்கனில உக்காந்து பேசுவோம், ரொம்ப நாளாச்சுங்க நம்ம ரெண்டு நிறைய நேரம் ஸ்பென்ட் பண்ணி." அவள் பாட்டுக்கு பேசியபடி அவனுக்கு டவல் எடுத்துக் கொடுத்து குளியலறையில் விட்டுவிட்டு, புடவை முந்தானையை இடையில் சொருகிக் கொண்டு பின்னழகு அசைந்தாட, ரத்த சிகப்பு நிற ரோஜாப் பூவை சைடில் வைத்து அவள் நடந்து சென்ற தோற்றம் கண்டு உடல் வரை சிலிர்த்து உள்ளம் நடுநடுங்கிப் போனான் ராம்.
பழைய நேத்ரா அப்படி இல்லையே அவனுக்கும் சேர்த்து அவளே காதலைக் கொடுப்பாள், அளவில்லாத காமத்தையும் கொடுப்பாள். அவளுக்கு தெரிந்ததை சமைத்தால் முதலில் தன் வயிற்றை நிரப்பிக் கொண்டபின் தான் அவனையே பார்ப்பாள். அவளை பொறுத்தவரை காதல் வேறு பசி வேறு. முதலில் அவள் வேலை முடித்த பின் மற்ற வேலைகளில் ஈடுபாடு செலுத்தும் இக்காலத்து மார்டன் மங்கையவள்.
அவளின் அடாவடியும் பிடிவாதமும் ஒன்று திரண்டு, அறைக்குள் அவனுக்காகவே தனித்துவமாய் அணியும் அவளின் அரைகுறை ஆடைகள் கூட அவன் கண்களுக்கு பேரழகாய் காட்சியளிக்க, மெய்சிலிர்த்து நேத்ராவின் இயல்பு குணத்தோடு சேர்த்து அவளையும் முழுமைனதாய் விரும்பத் தொடங்கி விட்டிருந்தவன் ராம்.
அதற்காக தீஷா அவன் எண்ணத்தில் இல்லையா என்று கேட்டாள், அவனது உயிர் மூச்சில் கலந்தவளாயிற்றே அவன் முதல் தேவதை, நினைவில் இருந்து அழிக்க முடியுமா அவளை. ஆனால் நேத்ரா அவனின் சரிபாதி, துடிக்கும் இதயம் அவள், இம்சையரசி, செல்ல ராட்சசி, முரண்டு பிடிக்கும் சண்டிக்குதிரை. இரண்டு மனைவிமார்களும் இரு கண்கள் அவனுக்கு. இருவரின் நடவடிக்கைகள் மற்றும் குணாதிசயங்கள் பற்றியும் அக்கு வேறு ஆணி வேறாக மனதில் பதியவைத்து அணுஅணுவாய் இருவரையும் ரசித்து லைத்தவன்.
அப்படி இருக்க, ஒருத்தி தன் இயல்பை மறந்து 'இழந்து' இன்னொருத்தியை போன்ற, 'அதுவும் இலோகத்தில் இல்லாத' ஒருத்தியைப் போன்ற செயல்பாடுகளோடு நடந்து கொண்டால் ஆண் மனம் எப்படி துடிக்கும். அதே நிலையில் தான் ராமும் தற்போது.
வெளி தோற்றத்தில் அவள் நேத்ரா, ஆனால் அவளினுள்ளே இருப்பது???
கண்ணாடியின் முன்னே தன் தோற்றத்தை பார்த்துக் கொண்டவளின் முகம் மெல்ல மெல்ல கொடூரமாக மாறியபின் மற்றுமொரு அழகான முகஜாடையை காட்டியது, ஆம் அவள் தீஷா.
நினைத்ததை சாதிக்க நேத்ராவின் உடலில் தீஷாவின் ஆன்மா தஞ்சம் புகுந்து நாளாகிவிட்டதே!! இனி நிரந்தரமாக உள்ளிருக்கும் நேத்ராவை அழித்து விட்டு இழந்த வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள வந்திருக்கிறாள். தன் கணவன் மகனோடு சராசரியான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் சிலபல காரியங்களை செய்து சாதிக்க வேண்டும். ஆனால் அதற்கு ராம் வளைந்து கொடுக்க வேண்டுமே!! அவனை எப்படியாவது வளைந்து கொடுக்க வைத்து விடுவாள் தீஷா.
மானுடப்பிறவியாக வாழ்ந்த தீஷாக்கு சிறு எறும்புக்கு கூட கெடுதல் நினைக்க தெரியாது. ஆனால் பிரேதாத்மாவாக திரும்ப வந்திருக்கும் இந்த கொடூர தீஷாக்கு காக்கத் தெரியாது அழிக்க மட்டும் தானே தெரியும்.
"என்னங்க உங்க தீஷா கொஞ்ச நாள் உங்க கூட இல்லனதும் கண்டவளையும், பொண்டாட்டியா நினைக்க தொடங்கி எனக்கு துரோகம் பண்ணுவீங்களா நீங்க" ஆங்காரமாக உருமியவளின் முகம் மீண்டும் அகோராமக மாறி எக்காலமிட்டு மார்பில் குத்திக் கொள்ள உள்ளிருக்கும் நேத்ராவோ வலியில் துடித்து ஆஆஆ.. எனும் அலறல் சத்தத்திலும், "அம்முஊ.." என்றபடி ராம் கதவை திறந்துக் கொண்டு வரவும், தன்னிலை வந்து ஒன்றும் அறியாததை போல் கையில் காப்பியோடு புன்னகை முகமாக நின்றாள் நேத்ராவின் உருவத்தில் இருக்கும் தீஷா.
** ** **
தனதறையில் எதையோ இழந்ததை போல் சுருண்டு படுத்திருக்கும் மகனை பார்க்கையில் வருத்தமாகிப் போக, மெல்ல அவன் அருகில் அமர்ந்து தலை கோதினார் குணவதி.
"என்னாச்சி ப்பா.. எதுக்காக ஒருமாதிரி இருக்க, ஏதாவது பிரச்சனையா தம்பி." தாயுள்ளம் பரிதவித்துப் போனது.
"பின்ன இல்லையா ம்மா.. எல்லாமே உன் புருஷனால தான். அந்த ஆளு பண்ண ஒவ்வொரு செயலுக்கும் நம்ம தான் தண்டனைய அனுபவிச்சு கஷ்டப்பட்டுட்டு இருக்கோம்னு பாத்தா, அவரால எல்லாருக்குமே கஷ்டமா போச்சி ம்மா.." குரல் உடைந்து போக அன்னை மடியில் தாவி தலை வைத்து கலங்கிப் போனான் நரேன்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 41
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.