- Messages
- 309
- Reaction score
- 251
- Points
- 63
அத்தியாயம் - 42
குணவதி மடியில் உடலைக் குறுக்கி கண்மூடிப் படுத்திருந்த நரேனை பார்க்க பார்க்க மனதில் பாரம் கூடிப் போனது.
தூர இருந்து பார்க்கும் வரை தன் மீது பாசமே இல்லாமல் சிறு கருணையோடு கூட ஏரெடுத்தும் பாராமல் திமிராக விலகி சென்ற மகன், எப்போது அவன் மனதில் தன் மீதுள்ள பாசத்தை வெளிக்கொட்டினானோ அதிலிருந்து அவனது திமிரும் கம்பீரமும் முற்றிலும் மறைந்து போய் சிறுவனாக மாறி தன்மடி விட்டு விலகாமல் படுத்திருப்பவனை கண்டு தாய் மனம் ஒருபுறம் பூரித்துப் போனாலும், இவ்வளவு அன்பையும் வைத்துக் கொண்டா இத்தனை நாளும் தன்னிடம் இந்த ஒதுக்கம் காட்டி அவனும் வேதனை பட்டு போனான், ஏன் அவன் அப்பாவிற்கு பயந்தா? என்ற கவலையே மேலோங்கி நின்றது.
எல்லாம் அவர் ஒருவரால் தான். பதவிக்காக தன் வாழ்க்கையும் சீரழித்து பிள்ளைகளின் வாழ்க்கையிலும் சுயநலத்திற்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். மனதினுள் புழுங்கியவர், "உன் புருஷனால தான் ம்மா.. எல்லாருக்குமே கஷ்டம்" நரேன் இரும்பாக முழங்க, குனிந்து அவன் முகம் பார்த்தார் புரியாமல்.
"என்ன தம்பி சொல்ற, திடீர்னு ஏன் இவ்ளோ கோவம்? அவரை தானே நீங்க ரெண்டு பேருமே உலகமா நினைச்சி சுத்தி சுத்தி வந்து அவர் சொன்னதை எல்லாம் கேடீங்க. இப்ப என்னாச்சி" பாவம் அவருக்கு இழைத்த கொடுமைகள் மட்டும் தானே தெரியும். வெளியே அவர் கணவர் செய்யும் எந்த செயலும் தெரியாது, பெண்பித்தன் என்பதை தவிர.
"திடீர்னு வந்த கோவம் இல்லம்மா. என்னையும் நேத்ராவையும் உங்ககிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டு போனதுலருந்தே எனக்குள்ள உருவான கோவம். அப்டி கூட்டிட்டு போனவரு அடிக்கடி புதுசு புதுசா ஒவ்வொருத்திய கூட்டிட்டு வந்து நிறுத்தி இவ தான் உங்க புது அம்மானு சொல்லும் போதெல்லாம் உருவான கோவம்" என்ற மகனை உள்ளம் கலங்க ஏறிட்டார்.
"உங்களுக்கு எதுவும் முழுசா தெரியாது ம்மா.. அந்த ஆளைப் பத்தி சொன்னா தாங்க மாட்டீங்க. ஏற்கனவே உங்கள அவரு செய்யாத கொடுமை இல்ல, அந்த நேரத்துல எங்களால அவரை தட்டி கேக்க முடியாது ஏன்னா சூழ்நிலை அப்டி. அதிலும் நேத்ரா அப்பாவோட கை பொம்மை, எனக்காவது நீங்க தான் அம்மானு ஓரளவு விபரம் தெரியும் ஆனா அவளுக்கு? அப்பா சொல்றது தான் எல்லாமே.
இதுல நான் உங்ககிட்ட பேசி எதுக்கு உங்கள மேலும் மேலும் கஸ்டபட வைக்கணும்னு, தூர நின்னாவது உங்கள பாத்துகிட்டு, உங்க அருகாமையை உணர்ந்துக்கிட்டு, நீங்க பேசுறத கேட்டுகிட்டு எப்டியோ வாழ்ந்திடலாம்னு நினச்சேன்." என்றவனுக்கு துக்கம் தொண்டையை அடைக்க தொண்டைக் குழி வலிக்க எச்சில்க் கூட்டி விழுங்கிக் கொண்டான்.
"ஆனா இப்போ எல்லை மீறி போய்ட்டாரு ம்மா.. இதுக்கு மேலையும் அவர் பண்றதை எல்லாம் பொறுத்துக்கிட்டு அமைதியா போகனும்னு எந்த அவசியமும் இல்லனு தான் அன்னைக்கு துணிஞ்சி வந்தேன் ஆனா.." என்று அதற்கு மேலும் சொல்ல முடியாமல் திணறிப் போன மகனை கண்டு நெஞ்சில் கலக்கம் கொண்டார் குணவதி.
அன்று நடந்த கலவரத்தில் இருந்தே குணவதியை நரேன் தன்னோடே தன் கண்காணிப்பிலே வைத்துக் கொண்டாலும் முழுமையாக அவன் பாசத்தை வெளிகாட்ட முடியாதபடி சதி செய்து விட்டார் பரமானந்தம்.
தன் மகன் தன்னை விட்டு கைமீறிப் போவதா.. என்ற வெறியேறிப் போனவர், எப்படியாவது கை மீறிப் போன மகன் மீண்டும் அவனாகவே தன்னிடம் வந்து சேர வேண்டும் அதற்காக எதையும் செய்ய துணிந்தவராக, நரேன் தினம் தினம் ஸ்ருதியை தான் பார்த்து விட்டு வருகிறான் என்பது வரை தெளிவாக கண்டுபிடித்து, நேரம் பார்த்து வேலையைக் காட்டி விட்டார் பரமு.
"என்ன தம்பி சொல்ற ஸ்ருதிய கடத்திட்டாரா.." அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார் குணவதி.
அன்று நரேன், ஸ்ருதியை தள்ளி விட்டது தெரியாமல் சென்றிட. சுவற்றில் தலை மோதி நெற்றியில் ரத்தக் காயத்தோடு மயங்கியவளை எட்டிப் பார்க்க கூட நாதியற்ற நிலையில், நேரம் கழித்தபின் தானாக மயக்கம் தெளிந்து எழுந்தவளுக்கு தலைவலி உயிர்க்கொல்ல, ஜுரம் விட்டு விட்டு அடிக்கவே, வேறு வழியின்றி மருத்துவமனை சென்று சோர்வாக வந்த வழியில் அல்லேக்காக தூக்கி இருந்தனர் பரமுவின் ஆட்கள்.
அது தெரியாமல், எப்போதும் போல் அவளை இரவு பார்க்க வந்த நரேன், ஸ்ருதியை வீட்டில் எங்கு தேடியும் கிடைக்காமல் போக பதட்டமான நிலையில் நிற்கதியாய் இருந்தவனுக்கு பரமு அழைப்பு விடுக்க ஏற்றுக் காதில் வைத்தவன் கடுங்கோபத்தில் கை முஷ்டியை மடக்கி வேகமாக சுவற்றில் குத்திக் கொண்டு கண்கள் சிவந்துப் போனான்.
"அப்பாஆஆ.. தப்பு மேல தப்பு பண்றீங்க. ஸ்ருதிய விட்ருங்க" ஆயிரம் இருந்தாலும் பெற்ற பாசம் எஞ்சி இருக்கவே மரியாதையோடு கோவம் கொண்டான்.
"ஏன்டா.. எத்தனை முறை கேட்டேன் தினம் ராத்திரி எவள பாத்துட்டு வர்றேன்னு. கடைசில இந்த சுருதி பாப்பாவ தான் பாக்க போறேன்னு சொல்லி இருந்தா நான் என்ன வேண்டான்னா சொல்ல போறேன். என்ன இருந்தாலும் சின்ன புள்ளைல இருந்தே நான் பாத்து வளந்த புள்ள, டேஸ்ட் பாத்துக்கோனு தாராளமா விட்ருப்பேனே தம்பி." மர இருக்கையோடு வாயும் கையும் கட்டப்பட்டு வெளிறிய முகத்தோடு விடாது கண்ணீர் சொரிந்துக் கொண்டிருந்த ஸ்ருதியின் கன்னம் தட்ட. வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டவளுக்கு, உடல்நிலை வேறு சரியில்ல்லாமல் போக பயத்தில் தேகம் முழுக்க நடுங்கியது.
"இப்பவும் ஒன்னும் கெட்டு போகல, அப்பா சொல்றத கேட்டு நடப்பேன்னு எனக்கு உறுதியான வாக்கு கொடு இவளை விட்டுடறேன்." அவரின் நக்கல் தொனியில் ஆத்திரம் கண்ணை மறைக்க விடாதவனாக நிதானமாக செயல்பட முனைந்தான்.
"என்ன செய்யணும்.."
"ம்ம்.. குட் பாய்.. நான் ஏற்கனவே சொன்னது போல சிஎம் பொண்ண கட்டிக்கணும். அதன் பிறகு அவளோட நீ குடும்பம் நடத்திக்கிட்டே, யாருக்கும் சந்தேகம் வராம இவளையும் சைட்ல வச்சிக்கோ இல்ல துரத்தி விடு யார் கேட்டா. ஆனா எனக்கு பதவி முக்கியம் நரேன், அந்த பதவிய ஆளப் போற என் அரசியல் வாரிசு நீ எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்." அவரின் கடுமையான குரல் நரேனை கொஞ்மும் அசைக்கவில்லை மாறாக அவர் ஸ்ருதியை பற்றி தவறாக பேசியதில் உள்ளம் எரிந்து போனான்.
"என் ஸ்ருதிய பத்தி தப்பா பேசாதீங்க.." எச்சரிக்கையாக அவன் குரல் உயர்த்த எள்ளலாக சிரித்தார்.
"பார்றா.. என் புள்ளைக்கும் காதோல் எல்லாம் வந்திருக்கு. சரிதான் வயசு பையன் மனசு அலைபாய தான் செய்யும் அதுக்காக குப்பைய கொண்டு வந்து கோபுரத்தை அலங்கரிக்க நினைக்கிறது எவ்ளோ பெரிய பாவம். தப்பு கண்ணா.
வசதிலயும் சரி அந்தஸ்துலயும் சரி நம்மள விட கீழ இருக்க பொண்ணு மேல ஆசை வரலாம், அந்த ஆசை வெறும் ஆசையா மட்டும் தான் இருந்திருக்கணும், காலுல போடற செருப்பை வாசலோட கழட்டி போட்டு வர்ற மாதிரி" என்றவரின் குரல் கடுமையாக ஒலிக்க எரிச்சல்ப்பட்டான் அவன்.
"இப்ப என்ன தான் சொல்ல வரீங்க தெளிவா சொல்லிட்டு, ஸ்ருதி எங்க இருக்கானு சொல்லுங்க"
"ஒழுங்கா நல்ல பையனா சிஎம் பொண்ணு கழுத்துல தாலிய கட்டி எனக்கு மட்டுமே புள்ளையா நடந்துக்கோ, அப்புறம் சுருதி தானா வருவா. அதுவரைக்கும் வால சுருட்டிட்டு வீட்ல இரு. என் பேச்சை மீறி நடக்கத் துணிஞ்ச, இவ கதைய இங்கேயே முடிச்சிட்டு, புதுசா செல்லம் கொஞ்சிட்டு இருக்கியே உன் ஆத்தாக்காரி அவளையும் உரு தெரியாம அழிச்சிடுவேன்." பரமுவின் உண்மை முகம் அப்பட்டமாக வெளிவந்துப் போனதில், நரேனின் மனம் எக்குத்தப்பாக அடித்துக் கொண்டது.
அதிலிருந்து எந்த வேலையும் ஓடவில்லை, எதிலும் நாட்டமில்லை. அவளை எங்கு வைத்து என்னென்ன பாடு படுத்திக் கொண்டிருக்கிறாரோ என்றே நொடிக்கு நொடிக்கு தவித்துக் கொண்டிருப்பவனுக்கு, ஸ்ருதியை தேடி கண்டு பிடிப்பது அத்தனை கஸ்டம் இல்லை தான். ஆனாலும் அமைதியாக காத்திருக்கிறான் என்றால் காரணம் இல்லாமல் இருக்குமா??
அன்று ஸ்ருதியின் வீட்டில் இருந்து அத்தனை கோவத்தில் வெறியோடு வந்த நரேனை, அப்போதே வந்த நேத்ரா தடுத்து நிறுத்தி என்னவோ பேசியதன் காரணமாய் சற்றே கோவம் தணிந்து ஸ்ருதியை பற்றி அவன் வாய் திறக்கவில்லை. ஆனால் குணவதியை அடித்து துன்பறுத்தியதை எப்படி ஏற்றுகொள்வான். அடி உதை வலிகளை தாங்கிக் கொள்ளும் வயதா அது.
அனைத்தையும் அன்னையிடம் சொல்ல, ஸ்ருதிக்காக வருந்தி கலங்கிப் போனவராக, மகனுக்கு ஆறுதலாக இருந்தார்.
** ** **
"நேத்ரா ஆபிஸ்க்கு டைமாச்சிமா, என் சட்டையை அயன் செஞ்சு எங்க வச்ச." பத்து முறைக்கு மேல் கேட்டு அறையெங்கும் தேடி கலைத்து விட்டான் ராம். ஆனாலும் பதில் இல்லை.
"நேத்ரா.. நேத்ரா.. எங்க போன.. எவ்ளோ நேரம் உன்ன கூப்பிடறது.." நேரம் ஆவதால் கோபம் வேறு வந்தது அவள் பதில் கூறாமல் இருப்பது.
அப்போதும் அவளிடம் பதில் வராமல் போக, கோவத்திலும் சட்டென வந்த யோசனையில் அமைதியாக அவளை தேடி வர, நடு ஹாலில் நடுநாயக்கமாக விகாரமான முகத்துடன் அமர்ந்திருந்த மனைவியைக் கண்டு திடுகிட்டவனாய், நேத்ராஆஆ.. என்றான் மெதுவாக.
அசைவில்லாத அவளின் நிலை மனதினுள் பிரலையம் உண்டு செய்ய. "அ..அம்மு.." எச்சில் விழுங்கிக் கொண்டு அழைத்த நொடி விழிகளை வேகமாக உருட்டி வெடுக்கென நிமிர்ந்தவள், "என்னங்க வேணும்.." உடனே பதில் வந்தன ஆவலாக.
"இ..இல்ல.. ஸ்..சட்ட வேணும் போட்டுக்க.." என்றான் தயக்கமாய்.
"அவ்ளோ தானே இதோ எடுத்துட்டு வரேன்," பக்கத்து அறையில் அயன் செய்து வைத்திருந்த சட்டையை கொண்டு வந்து அவனிடம் நீட்ட, அவள் செய்கையை கூர்ந்தபடி அதை வாங்கி அணிந்தவனாக, அலுவலகம் கிளம்பும் நேரம் "என்னங்க நில்லுங்க" என்றபடி புன்னகை முகமாக வந்தவளை யோசனையாக கண்டான்.
"சாயங்காலம் ஆபிஸ் விட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுங்க. உங்களுக்காக ஸ்பெஷலா இன்னைக்கு சமைக்க போறேன்" வெட்கம் கலந்த கொஞ்சல் மொழி அவன் மனைவி தீஷாவை தவிர வேறு யாரால் பேச முடியும்.
"நீ சமைச்சாலே ஸ்பெஷல் தானே இதுல தனியா என்னமா ஸ்பெஷல் இருக்கு. நான் இன்னைக்கு வர லேட்டாகும், நீ சாப்ட்டு பத்திரமா படு" என்று அங்கு நிறக்காமல் விருவிருவென சென்றவனை, தீஷாவாக முழுவதும் மாறி, "எத்தனை நாளைக்கு என்கிட்ட இருந்து தப்பிச்சி போறீங்கனு நானும் பாக்குறேன். மூச்சிக்கு மூச்சி தீஷா மாறி இப்ப நேத்ரா வந்துட்டாளா. மாட்டேன்.. மாட்டேன்.. எனக்கு என் புருஷன் வேணும் அதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். ஒண்ணு உங்களோட நிரந்தரமா நான் வாழனும் இல்லையா உங்கள என்னோட நிரந்தரமா கூட்டிட்டு போகணும்." உர்.. உர்.. என உருமளோடு நெஞ்சம் ஏறி இறங்க கொடூரமாய் நின்றாள் அவள்.
அவளை இரவில் தவிர்க்க வேண்டியே தினமும் தாமதமாக வருகிறான். நல்லவேளையாக அவளை தனியாக அழைத்து வந்த அன்றே அவள் செயலில் சந்தேகம் கொண்டு விலகி இருந்தான். விலகி இருக்கவும் பெரும்பாடுப் பட்டான். ஆனபோதிலும் அவனை விடாமல் நெருங்கி கொஞ்சல் மொழியோடு சிணுங்கி இல்லறம் பழக அழைக்கும் விதத்தில் அவளிடம் மயங்கி தன்னை தொலைக்கவிருக்கும் சில நேரங்களில் யுவாவின் அழுகையோ அல்லது அழைப்போ அவன் உணர்வுகளை கட்டுக்கொள் கொண்டு வந்து நிதானிக்க வைக்கிறது.
ஆனாலும் எத்தனை நாட்கள் தான் தாக்குப் பிடிக்க முடியும். இதற்கு ஒரு தீர்வே இல்லையா? என் பழைய நேத்ராவா என்னிடம் என் அடாவடி மனைவி கிடைக்க மாட்டாளா? என்றே உள்ளம் கூக்குரலிட்டு தீர்வு பெற வழியின்றி பரிதாபமாக அலைந்துக் கொண்டு இருக்கிறான்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 42
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.