- Messages
- 309
- Reaction score
- 251
- Points
- 63
அத்தியாயம் - 43
"ஐயா வரப்போற தேர்தலை முன்னிட்டு உங்க பேர்ல சிவன் கோவில்ல சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்ய சொல்லி இருந்தீங்களே, இன்னைக்கு சாயங்காலம் சரியா ஆறு மணிக்கு பூஜை இருக்கு" தகவல் சொன்னான் பரமுவின் காரியதரசி.
"ம்ம்.. நம்ம ஆட்கள் எல்லாம் கரகோஷம் பண்ண ரெடியா இருக்காங்களா. நான் போனதும் அமைதியா இருக்கக் கூடாது அந்த அளவுக்கு வரவேற்பு எல்லாம் பலமா இருக்கனும். பத்திரிகை டிவி எங்கே திரும்பினாலும் நான் கோவில்ல நின்னு சாமி கும்பிடறது தான் பரபரப்பான நியூஸா இருக்கனும். சொன்னது புரிஞ்சிதா" மேலும் பல விடயங்களை சொல்லி கட்டளை பிறப்பிக்க.
"புரிஞ்சிதுங்கையா" என்ற காரியதரசி இடத்தை விட்டு நகர்ந்ததும், அவர் சென்று நின்றது பரிதாபமாய் கை கால் கட்டுக்குளுடன் மயக்கத்தில் இருந்த ஸ்ருதியின் முன்பு தான்.
ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத நிலையில் உடலில் சத்துக்கள் வடிந்து முகம் வீங்கி உடல் கொதிக்கக் கண்மூடி இருந்தவளை அலட்சியமாய் பார்த்த பரமு, முன்கூட்டியே கையோடு எடுத்து வந்த ஐஸ் நீரை அவள் முகத்தில் ஊற்ற அடித்துப்பதறி கண் திறந்து பார்த்த ஸ்ருதி உடல் உதறி அரண்டு போனாள்.
"அங்கிள் ப்ளீஸ்.. என்னை.. என்னை ஒன்னும் செஞ்சிடாதீங்க. நீங்க சொன்னது போல நான் நரேன்கிட்ட இருந்து விலகி தான் இருந்தேன், ஆனா அவரா என்னை தேடி நெருங்கி வரும் போது என்னால தடுக்க முடியாம போச்சி. அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். இனிமே நரேன் என்னை தேடி வரவே முடியாத இடத்துக்கு போய்டுறேன், இந்த ஒருமுறை என்னை விட்ருங்க அங்கிள் ப்ளீஸ்." பேசவே முடியாத நிலையில் குரல் உடைந்துப் போக, வாயில் அடைத்திருந்த துணியை வெளித்துப்பி திக்கித்திணறி கெஞ்சிக் கொண்டிருந்தவளை கண்டும் மனம் இறங்கவில்லை அவருக்கு.
"உன் அழுகை கெஞ்சல் கொஞ்சலுக்கு எல்லாம் மயங்க நான் என்ன என் புள்ள நரேன்னு நினைச்சியா, மந்திரி பரமானந்தம். இங்க நான் என்ன சொல்றேனோ அதுதான் முடிவு. நான் சொன்ன முடிவை மாத்தி வேற முடிவை மனசுல நினைச்சாலே கருவருத்து போட்றுவேன். ஆனா நீ என் சொல்லை மீறி தினம் ராத்திரி என் புள்ளையோட குடித்தனம் நடத்தி இருக்க, அதுவும் திருட்டுத்தனமா.. உன்ன செய்யணும் ம்ம்.." விஷ வார்த்தைகளை பெண்ணவள் மீது ஏவ, இதயம் துடித்து கதறி விட்டாள் ஸ்ருதி.
உண்மையும் அதுதானே. அவள் என்ன அவன் கையால் தாலிக்கட்டிக் கொண்டு உரிமையோடா இணை சேர்ந்தாள். தன் காதலன், தன் மனதின் மன்னவன் என்று நினைத்துக் கொண்டால் உரிமை தன்னால் வந்துவிடும் என்ற அர்த்தமாகி விடுமா? ஒவ்வொரு நாளும் அவனை எந்த அளவுக்கு எதிர்பார்த்து ஏங்கிக் காத்துக் கிடந்தாளோ, அதைவிட அதிகமாய் அவன் தந்தைக்கு பயந்து நடுங்கிய நாட்கள் தானே அதிகம்.
பழைய மில் குடவுனில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாள் ஸ்ருதி. கடத்திய நாளன்று வந்து போன பரமு, தேர்தல் நெருங்குவதால் கட்சி, மீட்டிங், சட்டசபை, பிரச்சாரம் என்றே நேரம் சென்றிட இப்போது கிடைத்த நேரத்தை வினையம் செய்யாமல் கொலைவெறியில் வந்து, ஸ்ருதியை கோவம் குறையாது உக்கிரமாக பார்த்த பரமுவை கண்டு கிலி பிடித்தது.
"அங்கிள் ப்ளீஸ்.. உங்க பொண்ணு மாதிரி நினைச்சி இந்த ஒருமுறை என்னை விட்ருங்க." அவரின் பார்வையில் விபரீதம் உணர்ந்து நடுங்கினாள் அவள்.
"என்னது என் பொண்ணா. ஹ்ம்.. என் பொண்ணா இருக்க கூட ஒரு தகுதி வேணும். கேவலம் அப்பன முழுங்கின கழுதை, வசதிலையும் குறைச்சலான நாய் நீ எனக்கு பொண்ணா." ஏளனமாக சிரித்து, "சரி நேத்ரா கூட தானே பழகுற நாலுல ஒன்னா அவ டைம்பாஸ்க்கு இருந்துட்டு போகட்டும்னு உன்ன விட்டது தான் தப்பா போச்சி. அன்னைக்கே என் பொண்ண கண்டிச்சி உன் உறவை துண்டிச்சி இருந்தா இன்னைக்கு உன் பார்வை என் மகன் பக்கம் போயிருக்குமா" விகாரமாய் கர்ஜிக்க அரண்டு விட்டாள் ஸ்ருதி.
நேத்ராவின் தோழியாக சாதாரணமாக அவள் வீட்டிற்கு வருவாள் போவாள். அதிலும் நேத்ரா வெளிநாட்டில் இருந்த போது, குணவதியிடம் நன்றாக பேசி அவரின் தனிமையை போக்கி அவர் முகத்தில் சிரிப்பை கண்டபின் தான் அவ்வீட்டை விட்டே செல்வாள். அது நேத்ரா நரேன் இருவருக்கும் தெரிந்தாலும் கண்டும் காணததுமாய் செல்வது தான் வழக்கம்.
பரமுவின் ஆட்களும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை. ஏனெனில் நேத்ரா நரேன் இருவரையும் தான் கண்காணிக்க சொல்லி இருந்தார் குணவதியை நெருங்காமல் இருக்க. அப்படி தான் அந்த ஹோட்டல் சம்பவதற்கு முன்பும் நேத்ராவின் வீட்டிற்கு வந்திருந்தாள் ஸ்ருதி.
நரேன் பார்வை அவள் மீது ரசனையாய் வட்டமடித்துக் கொண்டிருப்பதை எதார்த்தமாக பார்த்த பரமு முதலில் அதை பெரிது செய்யவில்லை. அதன் பிறகு வந்த நாட்களில், வார்த்தையால் அல்லாது, பார்வையால் காதல் வளர்த்து கண்களாலே தங்களின் காதலை பரிமாறிக் கொள்வதை கூர்ந்து கவனித்தவர், ஸ்ருதியை தனியாக அழைத்தார்.
"என்னமா இப்பலாம் அடிக்கடி உன்ன வீட்ல பாக்குறேன். என்ன சங்கதி" என்றார் உள்நோக்கத்துடன்.
"ஒன்னும் இல்ல அங்கிள் சும்மா தான், நேத்து தான் வர சொன்னா." உண்மையும் பொய்யும் கலந்து கட்டி அடித்தாள். நேத்ரா தான் எப்போதும் அவளை அழைத்துக் கொண்டே இருப்பாள். அன்று தான் அவளாக ஆவலோடு ஓடி வந்தது. காரணம் நரேன் வேலை விடயமாக கேரளா செல்லப் போகிறான் என்று நேத்ராவின் ஊடாக தெரிந்திருந்தாளே.
"வீட்டுக்கு வந்தா வந்த வேலைய மட்டும் தான் பாக்கணும், வீட்டு ஆம்பளைங்கள வளைச்சி போடற வேலைய எல்லாம் பாக்கக் கூடாது கண்ணு." நக்கலாக சொன்ன வார்த்தையில் சுருக்கென நெஞ்சில் முள் தைக்க, நிமிர்ந்து பார்த்தாள் அவரை.
"பாத்துட்டு தான் இருக்கேன் உங்க பார்வை பரிமாற்றங்களை. என்ன கண் பாஷையால லவ் பண்றீங்களோ. என் வசதில கால் பங்கு கூட வசதியும் தகுதியும் இல்லாத அன்னக்காவாடி நாய், உனக்கு என் புள்ள கேக்குதா." எப்போதும் கனிவாக அவளிடம் பேசுபவர் இப்போது தகாத வார்த்தையால் சாட, சிறு வயதில் இருந்தே அவரை தந்தை ஸ்தானத்தில் பார்த்தே பழகியவளுக்கு எதிர்த்து பேச தெரியாமல் விழி நீர் கொட்ட நின்றாள்.
"இதுதான் உனக்கு கடைசி, இனிமே என் புள்ள பக்கம் உன் பார்வை சும்மா கூட படக்கூடாது. நரேன் பொறுத்த வரைக்கும் அவனுக்கு ஒன்னு பிடிச்சி போச்சுன்னா அது கிடைக்கிற வரை போராடி அடைவான். அவன் உன்ன பாக்குற விதமே உணர்த்துது உன் மேல உள்ள நேசத்தை. அந்த நேசத்தை நீயே உடைக்கனும் உன்மேல அவனுக்கு தீராத வெறுப்பு உண்டாகனும். அதுக்காக நீ என்ன செய்வியோ, உன் பேரை கேட்டாலே பத்திகிட்டு போற மாதிரி செஞ்சிட்டு அவன் கண்ணுல படாம ஓடிப் போ"
அன்று மிரட்டி விட்டு சென்றதும் நிலைகுலைந்து போன ஸ்ருதி, நேத்ராவின் வீட்டையும் நரேனையும் மறக்க விடாமல் உள்ளுக்குள்ளே தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நெஞ்சை பதற வைக்கும் அந்த ஹோட்டல் சம்பவம் நடைபெற்றது. அதிலும் அந்த ஹோட்டல் ரூமில் இருந்த நபரையும் அவரின் செயலையும் கண்டு தான் மிகவும் அதிர்ச்சியும் பதட்டமும் அடைந்து போனாள்.
அந்த ஹோட்டல் அறையில் அன்று காத்திருந்தது வேறுயாருமில்லை, பரமானந்தத்தின் ஆள் தான். போதையில் நிதானம் தவறி போன பின்னும் சுற்றி நடப்பதை ஓரளவு மூளையில் உள்வாங்கிக் கொள்ளும் பக்குவமும் பெண்மையின் பாதுகாப்பும் நன்றாக உணரவே முடிந்தன அவளால். தவறுதலாக அவ்வறைக்கு செல்லவில்லை அவள், அவளுக்காகவே காத்திருந்து, வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுக்கப்பட்டு, பரமுவின் ஆளாலால் பலவந்தம் செய்ய முயற்சி செய்யப் பட்டிருக்கிறாள்.
அன்று நடந்தது.
நரேனின் காதல் பார்வை ஸ்ருதியை சுற்றி வருவதை உணர்ந்துக் கொண்ட பரமு, ஆத்திரம் அடைந்த வேலைதனில்,
ஸ்ருதி போகுமிடமெல்லாம் கண்காணித்து, மகளோடு வந்துருக்கிறாள் என்று அறிந்து கொண்டவர், மகனும் அங்கு தான் நண்பர்களோடு வந்துருக்கிறான் என்பதையும் அறிந்து கொண்டார்.
அண்ணன் தங்கை இருவருமே எதார்த்தமாக ஒன்று கூடிய அந்த ஹோட்டலில் தங்கிய அவரின் ஆள், முதலில் நரேன் அறைக்கு செல்ல வேண்டிய குளிர்பானங்களை ஸ்ருதி அறைக்கு மாத்தி அனுப்பி விட்டு கலகத்தை தொடங்கி வைக்க, அதுவாகவே அவர்களுக்கு சாதகமாக அணைத்தும் நடக்க துவங்கியது.
தனியாக மாட்டிய ஸ்ருதியை கோழியாக அமுக்கி பலவந்தம் முயற்சிக்கையில் அந்த நபரின் பழக்கப்பட்ட குரலை கேட்டே, ஸ்ட்ரைக் ஆன ஸ்ருதி, அதிர்ச்சியாகி கத்தி கூச்சலிடும் வேலையில், வெளியே நின்றிருந்த மற்றுமொரு ஆள், காதில் பொறுத்தி இருந்த ப்ளூடுத வழியாக "நரேன் அறையை விட்டு வெளியே வந்து விட்டான்" என்றதும், கத்திய அவள் வாய்ப் பொத்திவனாக,
"இங்க பாரு என் குரல வச்சே நான் யாருனு உனக்கு இந்நேரம் நல்லா தெரிஞ்சிருக்கும். ஐயா தான், அவர் பிள்ளையோட பிடிவாதம் தெரிஞ்சி, உன்ன முழுசா நரேன் தம்பி வெறுத்து ஒதுக்குவாருனு இப்டி பண்ண சொன்னது. இப்ப அந்த தம்பி உன் சத்தம் கேட்டு உன்ன காப்பாத்த உள்ள வரும், அப்போ அந்த தம்பி தான் உன்ன பலவந்தம் செய்ய வந்தாரு பழியை மொத்தமும் அவர் மேல போடணும், இல்லனு முரண்டு செஞ்சி எங்கள காட்டிக் கொடுக்க நினச்ச, இன்னைக்கு வெறும் பழியா போட சொல்ற உன் கற்பு நாளைக்கு கொடூரமா சிதஞ்சி அவமானப்பட்டு உன் உயிர்ப் போகும்" கிடைத்த நிமிடத்தில் அவன் மிரட்டி விட்டு நரேனிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பி ஓட, அதீத அதிர்ச்சியில் உறைந்து போன ஸ்ருதி, மனதை சிதைத்துக் கொண்டு தன்னவன் மீது உயிரை வெறுத்து பழி போட்டு அவனது வெறுப்பை பெற்று மரிந்துப் போனாள்.
அதுபோதாதென, ராம் நேத்ராவின் முத்தக் காணொளி இணையமெங்கும் பரவும் வேலையில் மனம் கேளாமல் தோழியை பார்த்து அவளுக்கு புத்திமதி சொல்ல வந்த ஸ்ருதியை கண்ட பரமுக்கு அத்தனை கோபம். வீட்டில் ஆட்கள் இருப்பதால் ஸ்ருதியை தெரியாமல் இடிப்பதை போல் எதர்ச்சையாக இடித்து, அவளிடம் நன்றாக பேசி நலம் விசாரிப்பதை போல் தந்திரமாக நடித்து, வீட்டை விட்டு வெளியே போ என ஆத்திரமாக எச்சரிக்கை செய்ய. பதட்டமான நிலையில் நரேனை கண்டு குற்றவுணர்ச்சியிலும் காதலனின் கோவத்திலும் உருகுலைந்து போனது அவள் தானே.
அதை அறிந்துக் கொண்ட நரேனும் தந்தையின் இத்தகைய கொடிய செயலில் உடைந்து போனானே!
அப்போதே சந்தேகம் வந்து cctv முழுக்க செக் செய்து ஓரளவு அந்த மர்ம நபரை அவன் கண்டு கொண்டவனுக்கு, பரமுவின் மீது சந்தேகம் கொடிகட்டி பறக்கத் துவங்கினாலும், முழுதாக என்ன நடந்தது என்று ஒன்று ஸ்ருதியே உண்மையைக் கூற வேண்டும் அல்லது பரமுவின் கையாள் சொல்ல வேண்டும் என்றே வெறியாக அவனை தேடிக் கண்டுபிடித்து உண்மையை கூறக் கூறி எப்படி அடித்தும் உண்மையை சொல்லவில்லை மாறாக நரேன் அடித்த அடியில் கோமா போனது தான் மிச்சம்.
ஸ்ருதியும் பயத்தில் திளைத்து உண்மையைக் கூற மறுத்ததினால், ஆரம்பத்தில் கோவம் கொண்டு வார்த்தையால் அவளை வதைத்திருந்தாலும், காலப் போக்கில் அவளின் பயம் அறிந்து காதல் மனம் வெளிக்கொணர்ந்து பெண்ணவளை ஆதரித்து உண்மை அறிந்துக் கொண்ட காதலன், இப்போது அவளை தொலைத்து விட்டு துடித்துக் கொண்டிருக்கிறான்.
இனி..
துருப்பிடித்த இரும்பு ராடை வெறியோடு கையில் எடுப்பதைக் கண்டு அச்சத்தில் நெஞ்சமெல்லாம் அதிர, அரண்டு போய் கண்களை இறுக மூடிக் கொண்டவளை நோக்கி தாக்கப் போன நேரம், "ஐயோ அங்கிள் ப்ளீஸ் என்னை கொல்ல நினைச்சி என் வயித்துல வளர்ற உங்க பேரக் குழந்தையையும் சேத்து கொன்னுடாதீங்க" கதறலோடு அவள் கத்தியதில் இரும்பு ராடோடு அவரின் கை அந்திரத்தில் நின்றது.
அந்திரத்தில் நின்றது சில கணங்கள் தான், கையில் இருந்த ராடை தூர வீசி, கொடூர சிரிப்பை இடைவிடாது சிரித்துக் கொண்டிருந்தவரை ஒன்றும் புரியாமல் அழுது சிவந்த விழிகளால் ஏறிட்டவளை சட்டென சிரிப்பை நிறுத்தி வெறியாக முறைக்க, தேகம் திடுக்கிட்டுப் போன ஸ்ருதி, 'உண்மையை சொல்லி மீண்டும் தவறு செய்து விட்டோமோ' என்று இதயம் நடுங்கிப் போனவளை கண்டு மீண்டும் ஒரு மார்க்கமாக சிரித்த பரமு,
"முறைதவறி உருவான சாக்கடை எல்லாம் எனக்கு பேரப் பிள்ளையா. உன்னையே நான் ஏத்துக்கல இதுல உன் வயித்துல உள்ள குழந்தைய வேற நான் ஏத்துப்பேன்னு எப்டி கனவு கண்ட. முதல்ல அது என் புள்ளைக்கு தான் உருவாச்சினு நான் எப்டி நம்புறது" அவள் கற்பையே கலங்கப் படுத்தி பேசியதில், அவமானம் தாங்காமல் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டியதை போல் துடித்து விட்டாள்.
அவள் குழந்தை உண்டாகி இருக்கும் செய்தி அறிந்ததும், சடுதியில் தோன்றிய யோசனையில் ஸ்ருதியை வைத்தே வேறொரு திட்டம் தீட்டிய பரமு, அவளை கொல்லாமல் பாதுகாப்பாக அடைத்து வைத்து விட்டு அங்கிருந்து சென்றார்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 43
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.