- Messages
- 309
- Reaction score
- 251
- Points
- 63
அத்தியாயம் - 44
தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கல் மேடையில் மல்லாக்கப் படுத்து அயர்ந்து துயில் கொள்ளும் யுவாவை நெஞ்சில்ப் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டே ஏதேதோ சிந்தனையில் நட்சத்திரங்கள் மின்னும் கரிய வானை வெறித்துக் கொண்டிருந்தான் ராம்.
மனம் முழுக்க பாரம் அழுத்த எத்தனை நேரம் வீட்டினுள் செல்லாமல் இருந்தானோ, "ம்க்கும்..உள்ள வர்ற ஐடியா இருக்கா இல்ல இங்கேயே நைட் படுத்துக்க போறீங்களா?" தொண்டையை செருமிக் கொண்டு நக்கலாக கேட்டவளை சீரான பார்வை பார்த்து குழந்தையின் தலை சரியாதவாறு அணைத்தபடி மெதுவாக எழுந்து அமர்ந்தான்.
"என்ன வந்ததுல இருந்து ஒருமாதிரியாவே இருக்கீங்க, பேசாம கொள்ளாம அமைதியா வந்து இங்க படுத்துகிட்டா என்ன அர்த்தம்" நெருங்கி சென்றால் சாக்குபோக்கு சொல்லி விலகி செல்லும் கணவன் மீது நாளுக்கு நாள் பெருகும் ஆத்திரத்தை என்ன செய்து அடக்குவது.
"உள்ள ஒரே புழுக்கம் நேத்தூமா.. காத்துப் பத்தாம யுவா அழுதான், அதான் இங்க தூக்கிட்டு வந்து விளையாட்டு காட்டி தூங்க வச்சேன்." நேத்தூ என்றதும் அவள் முகத்தில் வந்து போன கொடூர சாயலை கூர்மையாக கண்டு உள்ளுக்குள் அச்சம் படர்ந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாதவனாய் அமைதியாக இருந்தான்.
"அதுக்கு ரூம் ஜன்னலை திறந்து விட்டா போதுமே சல்லுனு காத்து வர போகுது. இங்க தான் வந்து படுக்கணுமா.." அவன் கழுத்தை சுற்றி குட்டி கரங்கள் தொங்க தோளில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையை உக்கிரமாய் முறைத்தாள் நேத்ராவினுள் உள்ள தீஷா.
இப்போதெல்லாம் ராமுக்கும் அவளுக்கும் அதிகமாய் இடையில் புகுந்து ஆட்டத்தை கலைப்பது இந்த குட்டி பாலகன் தானே! ஓரளவிற்கு மேல் அவள் ஆத்மா என்பதனை அடிக்கடி நிரூபிக்கும் விதமாய் நிறைய நிகழ்வுகள் அடுகடுக்காய் நடந்துக் கொண்டே இருப்பதில் பெற்ற மகனையே எதிரியாக பாகிக்கும் நேரங்கள் தான் அதிகமாகிப் போனது.
"சும்மா பெறாக்கா வந்தேம்மா.. அதுக்கு ஏன் டென்ஷன் ஆகுற வா உள்ள போலாம்." சமாளிப்பாக பதிலுரைத்து அவன் உள்ளே செல்ல, பின்னாலே நடந்தவளின் முகம் தீஷாவாக மாறி கோபத்தில் திளைத்துப் போனது.
இரவு உணவை முடித்துக் கொண்ட ராம் அமைதியாய் படுக்கையின் ஓரத்தில் படுத்து கண்மூடி இருக்க, அவன் முதுகின் பின்னே மென்மையான பஞ்சி பொதிகை அழுத்தியதில் மேலும் கண்களை அழுத்தமாக மூடிக் கொண்டவனின் இதயம் அதிவேகத்தில் துடித்துக் கொண்டிருக்க, தீஷாவின் விரல்கள் சரியாக அவன் பதட்டமடைந்த இதயத்தை வருடி, அவனது சிவந்த செவி மடலை பற்கள் படாமல் உதட்டால் கவ்வி இழுத்து இச்.. இச்.. முத்தங்கள் வைக்க, லப்டப்.. லப்டப்.. சப்தம் அவ்வறையை சுற்றிலும் எதிரொலித்து அவள் கரங்களும் அதிரலை கண்டது.
"என்னாச்சிங்க, எதுக்காக இவ்ளோ பதட்டமா இருக்கீங்க, தண்ணி குடிக்கிறீங்களா." அக்கறையாக கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் இருக்க முடியுமா?
"ம்.. குடுமா" என தலையாட்டியவனுக்கு ஹாட்கேனில் உள்ள நீரை அவளாகவே பருக வைக்க, அவள் முகத்தையே உற்று நோக்கினான் ராம்.
தீஷாவோ! நேத்ராவோ! இருவரின் காதலும் வெவ்வேறு மாதிரியான தாக்கத்தை அவன் இதயத்தில் நிகழ்த்தி இருவரையுமே அவன் காதலிப்பது எத்தனை தூரம் உண்மையோ! அதே அளவுக்கு நிதர்சனம் விளங்கி நேத்ரா மட்டுமே இனி தன் எதிர்கால வாழ்க்கையின் அனைத்தும் என்று தீர்மானித்த பின் தானே அவளோடு இணக்கமாக வாழத் தொடங்கியது.
தீஷா பிடிக்கும் அவனுக்காக அவள் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு அக்கறையும் மனதுக்குள் அத்துனை தித்திப்பை உண்டு செய்யும், தீஷாவிடம் அவன் குழந்தை என்றால் ராமிடம் நேத்ரா குழந்தை அல்லவா! அவளுக்காக இவன் தான் பார்த்து பார்த்து ஒவ்வொன்றும் செய்ய வேண்டியதாய் இருக்கும், அதுகூட மிகவும் பிடிக்கும் அவனுக்கு.
ஒருக்காலத்தில் ஆன்மாவாகவாது தன்னோடு வாழ்ந்து விட மாட்டாளா என்று கலங்காத நாளில்லை. ஆனால் தற்போது அவன் ஆசைப்பட்டது போலவே நடந்தும் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லையே! இப்போது தான் அதன் தாக்கம் பிரிகிறது, விதியின் சட்டதிட்டங்களுக்கு புரம்பாக உயிருள்ள மற்றொரு பெண்ணின் உணர்வுகளை கொன்று அவள் உயிரை கொன்றால் தீஷாவின் ஆத்மா பூமியில் வாழும் என்பது. அதுகூட நிரந்தரம் இல்லை, நேத்ராவின் உயிரும் அவள் கூட்டை விட்டு பிரிந்த பின் நேத்ராவின் உடலுக்கும் அழிவு, மானுட பிறவியான ராமுக்கும் அவனை சுற்றி உள்ளவர்களுக்கும் அவளால் அழிவு.
"வர வர நீ ரொம்ப மாறிட்ட நேத்தூ" அமைதியாக உரைத்தவனை நிமிர்ந்து பார்த்தாள் தீஷா.
"திடீர்னு ஏங்க அப்டி தோணுது உங்களுக்கு, நான் நானா தான் இருக்கேன்." சிரித்தபடி பேசி மிகு இயல்பாய் தன்னைக் காட்டிக் கொண்டவளாக, "ஆனா நீங்க தான் ரொம்பவே மாறிட்டிங்க, எப்பவும் உங்க அம்மா நினைப்பும் யுவா நினைப்பும் மட்டும் தான் உங்களுக்கு. கொஞ்சம் கூட என் நினைப்பே இல்லாம, அடியோட மாறிட்டீங்க" அவனது மேல் சட்டையை கழட்டி தூர வீசி மயக்கும் வார்த்தைகளால் சிணுங்கலாக அவன் அதரம் கவ்வ நெருங்கியவளை சட்டென முகத்தைத் திருப்பி விலக்கி நிறுத்தினான் ராம்.
அதில் மேல்மூச்சி கீழ்மூச்சி வாங்க ஆத்திரம் அடைந்த தீஷா இல்லாத பொறுமையை சிரமபட்டு இழுத்து பிடித்தாள். மனித உருவில் ஜீவன் உள்ள போது இருந்த அதே அமைதியும் பொறுமையும் யோசித்து செயல்படும் நிதானமும் இறந்து போன ஆன்மாவிற்கும் நிலைத்திடுமா என்ன? மெல்ல மெல்ல அகோர குணம் வெளிவரத் துடித்ததை அடக்கி, "சொன்னேனே.. மாறிட்டீங்கனு.. எதுக்காக என்னை விலக்கி வைக்கிறீங்க" விரிந்த கூந்தல் காற்றில் கலைந்து அலைமோத குரல் மாடுலேஷன் அனைத்தும் முரடாக மாறிப் போனது.
"நான் மாறவும் இல்ல ஒன்னும் இல்ல, தலை வலிக்குது போதுமா. மனுஷனோட நிலைமைய புரிஞ்சிக்காம எப்பப்பாரு நெருங்கி வந்தா நான் என்ன தான் பண்றது, கொஞ்ச நேரமாவது என்னை தொல்லை பண்ணாம நிம்மதியா விடு நேத்ராஆ.." அவளை எப்படி அவாய்ட் செய்வது என புரியாமல் கோவத்தில் எரிந்து விழுந்து முதுகுக் காட்டி படுத்துக் கண்மூடிக் கொண்டவனை மெழுகு போல் அழுகி உருகும் முகத்தால் உக்கிரமாய் பார்த்தாள்.
மறுநாள் விடியல் தீஷாவின் முகம் அதீத கோபத்தில் திளைத்து இருக்க, அம்மா என ஆசையாக ஓடி வந்த யுவாவைக் கூட காலால் உதைத்து தூக்கி சுவற்றில் விசிறி விட்டிருந்தாள். வீரிட்டு அழும் குழந்தையின் சப்தம் கேட்டு அடித்துப் பதறி ஓடி வந்த ராமும் பத்மாவும், அவள் தனது மடியில் படுக்க வைத்து குழந்தையை சமாதானம் செய்து கொண்டிருந்த காட்சியில் அமைதியானாலும் பெற்றவனின் மனம் மட்டும் பயத்தில் ஆழ்ந்தன.
இப்போதெல்லாம் குழந்தை கூட அவளிடம் செல்வதற்கு பயந்து போய் பெருங்குரல் எடுத்து கத்துவதை அவனும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். அதிலும் இரவு நேரங்களில் பேயைக் கண்டது போல் விடாமல் அழும் குட்டிப்பயனை தோளிலும் மாரிலும் போட்டு தட்டிக் கொடுத்து அழுகையை நிப்பாட்டி உறங்க வைப்பதற்குள் ஒரு வழியாகிப் போகிறான்.
"நேத்ரா கண்ணு.. ஏன் யுவா அழறான்" அவளை பற்றி எதுவும் தெரியாத பத்மா எப்போதும் போல் கேட்டு விட, கண்களை உருட்டி அவரை முறைத்து பதில் கொடுக்காமல் காலில் போட்டு வேகம் கூட்டி ஆட்டிக் கொண்டு இருந்தும் அழுகை ஓய்ந்தபாடில்லை.
"அவனை ஏங்கிட்ட குடு டி," ஓடி வந்து தன் பிள்ளையை தூக்கிக் கொண்ட ராம் அவளை முறைத்து விட்டு குழந்தையும் சேர்த்து பத்மாவையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.
"விடமாட்டேன் ராம்ம்ம்..." ஓலக்குரல் எதிரொலிக்க போகும் அவர்களின் முதுகின் பின்னே ரத்தக்கிளறியாக மாறி இருந்தது நேத்ராவின் முழு உருவம்.
°° °° °°
"என்ன டா பேசணும்னு வர சொல்லிட்டு அமைதியாவே இருக்க" என்ற வர்மனை முறைத்தான் ராம்.
"நேத்ரா எதுக்காக என்னை கல்யாணம் செஞ்சிகிட்டா வர்மா?"
"ஏன்னு என்னை கேட்டா எனக்கெப்டி தெரியும், போய் உன் பொண்டாட்டிய கேளு" உதடு சுழித்து சொன்னவனை மேலும் முறைத்து, "பீ சீரியஸ் வர்மா.. எந்த வயசுல விளையாட ஆசை வந்திருக்கு உனக்கு" சலித்தான் ராம்.
"அட என்னடா இது புது புரளி, நண்பனோட விளையாட கூட வயசு வித்தியாசம் வேணுமா" வர்மன் பொய்யாக உச்சி கொட்ட ராம் பார்த்த பார்வையில் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் போசில் நின்றான்.
"நானும் நேத்ராவும் வீட்டை விட்டு போறதுக்கு முன்னாடி நாள், நீயும் நேத்ராவும் தனியா பேசிட்டு இருந்தீங்களே என்ன விஷயம்." என்ற நண்பனை சைலன்ட்டாக கைக்கட்டி நின்று கூர்ந்தான் வர்மன்.
"மச்.. உன்னோட ஐ கில்லிங் மேஜிக் எல்லாம் பனியோட வச்சிக்கோ வர்மா. நீயும் நேத்ராவும் அன்னைக்கு ரகசியமா பேசின போதே எனக்கு நல்லா தெரிஞ்சி போச்சி, உன் சப்போர்ட் இல்லாம நேத்ரா என்கிட்ட ஆரம்பத்துல இருந்தே அந்த அளவுக்கு உரிமையா நடந்துகிட்டு இருக்க மாட்டானு. அப்பவே உன்கிட்ட இதைபத்தி கேக்கலாம்னு பாத்தேன் ஆனா அந்த அடங்காபிடாரி அங்க இருக்க விடாம என்னை இழுத்துட்டு போய்ட்டா" அப்போதும் அவனது ராங்கி மனைவி மீதே செல்லமாய் கோபம் கொண்டு நண்பனிடம் குறைப்பட்டான்.
"இப்ப உனக்கு என்ன டா தெரியனும்"
"நேத்ரா உடம்புக்குள்ள தீஷா வந்துட்டாளோனு. தோணுது வர்மா" கவலையாக சொன்னவனை கண்கள் இடுங்கக் கண்டான்.
"எப்டி டா அவ்ளோ உறுதியா சொல்ற. அதெல்லாம் ஒன்னும் இருக்காது ராம், தீஷாவோட ஒன்னா வாழ்ந்த வீட்டுக்கு திரும்ப போனதும் உனக்கு அவ நினைப்பு அதிகமா வந்திருக்கும் அதான் அப்டி தோணி இருக்கும்" நண்பனுக்கு ஆறுதலாக கூற, "இல்ல டா வர்மா" என இடவலமாய் தலையாட்டி மறுத்தாம் ராம்.
"நேத்ராக்கு சமைக்க தெரியாது, ஆனா தீஷா சமையல்ல எக்ஸ்பர்ட்."
"இதை ஒன்ன வச்சே முடிவு செஞ்சிட்டியா, தீஷானு. அவளை மாதிரியே விழிகிட்ட கேட்டு கத்துக்கிட்டு சமைக்க கூட வாய்ப்பிருக்கு இல்லையா"
"மச்.. இல்ல டா, நீ யோசிச்ச மாதிரியே நானும் யோசிக்காம இருந்திருப்பேனா? கொஞ்சம் பர்சனலும் கூட அதை எப்டி உன்கிட்ட சொல்ல" தான் உணர்ந்து கண்கூடாக கண்டதை நண்பனிடம் சொல்ல முடியாமல் திணறிப் போனவனின் உணர்வுகளை ஒரு ஆணாக யூகித்த வர்மன் அவனை வற்புறுத்தவில்லை என்றாலும் ராமாகவே சிலகணங்கள் பிறகு சொன்னான், பாதி மறைத்தும் மறைக்காமலும்.
"சமையல், பேச்சி, நடை, உடை, வெட்கம், கோவம், சிரிப்பு இப்டி எல்லாத்தையும் டிட்டோவா மேட்ச் பண்ற மாதிரி நேத்ராவோட நடைவடைக்கை மாறினதை முதல் நாளே உணர்ந்தேன் வர்மா. இப்போ நீ சொன்ன மாதிரி தீஷா வாழ்ந்த வீட்டுக்கு வந்ததால தான் அப்டி பிரம்மை தோணுதுனு நினைச்சி நானும் இயல்பா கடந்துட்டுட்டேன், ஆனா நைட் நாங்க சந்தோஷமா இருக்க நினைக்கும் போது,."
அன்று இரவே வெட்கம் கொண்டு நளினமாக நடந்து வந்தவளை கட்டிக் கொண்டு ஈர எச்சில் தெறிக்கும் முத்தங்களோடு ஆசையாய் தழுவி மெத்தையில் புரண்ட இருமேனியும் மோக மயக்கத்தின் எல்லையைக் கடந்து, ஆடைகள் கலைந்து இல்லறம் எனும் பந்தத்தில் அடியெடுத்து வைக்கப் போகும் நேரத்தில் யுவாவின் வீரிட்ட அழுகையில் மோக மயக்கம் தெளிந்தான் ராம்.
அனைத்த விளக்கை மீண்டும் ஒளிர விட்டு துண்டை இடையில் சுற்றிக் கொண்டு குழந்தையை தூக்கி சமாதானம் செய்தபடியே மனைவியை ஏக்கமாய் பார்க்க, பிறந்தமேனியாக பாம்பாய் நெளிந்தவளை கிறக்கமாய் பார்வை தழுவி அவள் மார்பில் மையல் கொண்டவன் கண்கள் எதையோ தேடி ஏமாந்துப் போக, தோளில் இருந்த குழந்தையை மெதுவாக தட்டிக் கொடுத்தபடி திரும்பியவனின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து போனது.
படுக்கையின் நேரே சுவற்றில் பொறுத்தி இருந்த நிலைக் கண்ணாடியில் தீஷாவின் உருவத்தைக் கண்டு. எப்படி சாத்தியம் நெஞ்சமெல்லாம் நடுங்கிப் போனவன், "இல்ல இல்ல இது பிரம்மை.. தீஷா எப்டி வருவா இங்க, அதுவும் நேத்ரா உடம்புல தைரியமா இரு ராம். திடீர்னு அப்டி உனக்கா தோணி இருக்கும்" தனக்கு தானே சமாதானம் செய்து அதிர்ச்சியை வெளிகாட்டாமல் மெதுவாக திரும்பி பார்த்தவன், நேத்ராவின் நெஞ்சில் இருக்கும் கருநிற வட்ட மச்சத்தை தேட, அப்படி ஒரு மச்சமே அவள் உடலில் இல்லாமல் போனதில் அவசரமாக மீண்டும் திரும்பி கண்ணாடியில் பார்க்க முகம் வெளிரிப் போனான் ராம்.
சரியான நேரத்தில் தன் மயக்கம் தெளிய வைத்து தீஷாவின் அடையாளத்தைக் காட்டிக் கொடுத்த பிள்ளையை இறுக்கி அணைத்து கலங்கி தவித்தவன் செவியில், "என் முடிவு இதுதான் நீங்க என்னோட ஒரு நாளாவது வாழ்ந்தா போதும். அதன் பிறகு நான் நிரந்தரமா உங்கள விட்டு போய்டுவேன், நீங்களே என்ன பாக்கணும்னு நினைச்சாலும் பாக்க முடியாது" அடிக்கடி உதிர்க்கும் நேத்ராவின் வார்த்தைகள் அடுக்கடுக்காய் ஊடுருவி அவன் இதயத்தைக் குத்திக் கிழித்தன.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 44
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.