• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

அத்தியாயம் 45

Administrator
Staff member
Messages
309
Reaction score
251
Points
63
அத்தியாயம் - 45

பேய் பிசாசு பூதம் இதிலெல்லாம் துளியும் நம்பிக்கை இல்லாதவன் வர்மன். அப்படி இருக்க, ராம் சொன்னதை கேட்டு நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை.

நேத்ரா ராமோடு சண்டையிட்டு பழி வாங்க துடித்த நாட்கள் அது. திடீரென மனம் மாறி ராமை காதலிப்பதாகவும் அவனை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கூறியும் வர்மனின் சூப்பர் மார்க்கெட்டில் வந்து உரிமையாய் அமர்ந்துக் கொண்டவளை அடித்து விரட்டாத குறையாக துரத்தி விட்டான். ஆனாலும் விடாப்பிடியாக தொடர்ந்து வந்த நேத்ராவை ஓரளவுக்கு மேல நிராகரிக்க முடியாமல், தனது அலுவலக அறைக்கு அழைத்தான் வர்மன்.

"உங்க பிரண்ட் ஸ்ரீராமை எனக்கு மேரேஜ் பண்ணி வைங்க." முதல் நாள் திமிராக உரைத்ததை போலவே அதே திமிர் குறையாமல் கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன், "அதை நேரா போய் என் பிரண்டுகிட்டயே கேக்குறது. செவில்லயே நாலு விட்டு துரத்தி இருப்பானே" அவளுக்கு இணையான அதே திமிர் பேச்சி அவனிடமிருந்து வந்ததில் முகம் கருத்துப் போனாள்.

இங்கு வருவதற்கு முன்னவே ராமிடம் இப்படி கேட்டு தான் வர்மன் சொன்னது போலவே அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்து விட்டாளே!

"ஸீ சார்.. நான் கேள்விப்பட்ட வரை ராம் அவர் வைஃப்க்கு அடுத்து உங்க பேச்சை தான் கேப்பாறாம். நீங்க சொன்னா கண்டிப்பா அவர் என்னை மனைவியா ஏத்துப்பார், ஏத்துக்கணும். அதுதான் ராம்க்கு நல்லது, அவர் பையனுக்கும் நல்லது" அவள் அழுத்தம் திருத்தமாக தெளிவாக சொன்ன விதத்தில் புருவம் இடுங்க பார்த்தான் வர்மன்.

யாரையும் அத்துனை எளிதில் நம்பி விடும் ஆள் வர்மன் இல்லையே, ஆரம்பத்தில் மந்திரி பரமானந்தம் பெண் மிகவும் திமிர் பிடித்தவள், பிடிவாதக்காரி, அடக்கம் இல்லாதவள் என்று தெரிந்து கொண்டு அவளை விரட்டியவன், தற்போது அவள் கண்ணில் வந்து போன அந்த ஒரு நொடி வேதனையில் கண்கள் கூர்ந்து அவள் சொல்வதை கேட்கலானான்.

"ராம் வைஃப் தீஷா எப்டி இறந்தாங்க, யார் யாரெல்லாம் அவங்க இறப்புக்கு காரணம்னு எனக்கு தெரியும்" மிகப்பெரிய விடயத்தை அவள் சொல்லிட, என்ன..? என்று அதிர்ந்தவனை கண்டு ஆம்.. என கண்மூடித் திறந்தாள் நேத்ரா.

"தீஷாக்கு ட்ரீட்மெண்ட் சேராம இறந்து போனதா டாக்டர்ஸ் சொன்னாங்களே மா.." அவள் மீதிருந்த ஏளனம் சென்று கனிவு வந்தது வர்மனுக்கு.

"பணம் பத்தும் செய்யும்னு நீங்க கேள்வி பட்டதில்லையா சார். அதே பணம் பாதாளம் வரைக்கு கூட பாயும் அப்டித்தான் டாக்டர்ஸ்கிட்டயும் பாஞ்சிருக்கு. வேற ஒரு இறந்து போன பாடிய தீஷாவா மாத்தி உங்ககிட்ட ஒப்படைச்சி ஏமாத்தி இருக்காங்க." நேத்ரா சொல்ல இருக்கையில் இருந்து அதிர்ச்சி தாலாமல் எழுந்தே விட்டான் வர்மன்.

"இங்க தீஷாவா உங்ககிட்ட வந்த அந்த பிணத்துக்கு ராம் கொல்லி வைக்கிறதுக்கு முன்னாடியே, உண்மையான தீஷாவ உயிரோட நிக்க வச்சி எரிச்சி சாம்பல் ஆக்கிட்டாங்க." அதரம் துடிக்க கண்கள் சிவப்பேரி உடல் நடுங்கியவள், மேலும் அவளுக்கு தெரிந்த உண்மைகளை வர்மனிடம் சொல்லி முடிக்க, அப்போதே கலங்கி இருந்த கண்களை வேகமாக புறங்கையால் துடைத்துக் கொண்டு அதீத கோபத்தில் தீஷாவை கொன்றவர்களை துடிக்க துடிக்க வெட்டி கூரு போடும் அளவுக்கு சீற்றம் பொங்க எழுந்தவன் கரத்தை பற்றினாள் நேத்ரா.

"நீங்க கோபப்பட்டு அவங்களை கொலை செஞ்சிட்டா ராம் வாழ்க்கை திரும்பவும் பழைய மாதிரி திரும்பிடுமா" என்றாள் அழுத்தமாக.

"அதுக்காக என் நண்பனோட வாழ்க்கைய அழிச்சி அவன் ஆசை பொண்டாட்டிய கொன்ன பாவிங்கள சும்மா விட சொல்றியா!?" கோபத்தை அடக்க முடியவில்லை அவனால்.

"அந்த பாவிங்கள கொலை செய்றது தான் தீர்வுனா அந்த கொலையை நானே செஞ்சிட்டு வந்திருப்பேனே, அதுக்காக நான் ஏன் ராமை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்ல போறேன்" அவளின் தீர்க்கமான பேச்சில் புரியாமல் பார்த்தான்.

"நான் சொன்னது பாதி உண்மை தான், மீதி உண்மை உங்களுக்கு தெரிய வரணும்னா எனக்கு ராம் வேணும்." வர்மனுக்கு இணையாக நின்று டீல் பேசியவளை மெச்சும் பார்வை பார்த்தாலும் முகம் கனியவில்லை.

"ராம் உனக்கு இல்லனு சொன்னா"

"நானே அவரை எனக்கு சொந்தமாக்கிட்டு உங்க முன்னாடியே வந்து ஜோடியா நிப்பேன்" அசராமல் பதில் கொடுத்தாள்.

நேத்ராவோடு ஏட்டிக்கு போட்டி நின்றாலும், அவளின் தைரியமான பேச்சும் ஆட்டியூடும் அவன் கவனத்தை ஈர்த்து தனக்கு தங்கை இருந்தாலும் இவளை போலவே துடுக்குத்தனமாக இருந்திருப்பாளோ என்ற எண்ணம் தோன்றி, அவளை கண்காணித்தபடியே அவள் போக்கில் விட்டு பிடித்தான் வர்மன்.

ஆனால் அவனே எதிர்பாராத விடயம், நேத்ரா குழந்தைகளை கடத்தி வைத்து மிரட்டி ராமை திருமணம் செய்து கொண்டது தான். (ஒரு ஆன்ட்டி ஹீரோயின்னு அவளை பில்டப் பண்ணதுக்கு இது கூட பண்ணலைனா எப்டி?)

அதன் பிறகு வந்த நாட்களில் நேத்ராவின் வாயால் உண்மையை கறக்க நிறைய முயற்சிகள் எடுத்தான், எதுவும் அவளிடம் வேலைக்கு ஆகவில்லை. கடைசி நாளான்று அவளாகவே அவன் முன்பு வந்தாள்.

"நீ சொன்ன மூணு மாசம் நாளையோட முடிய போகுது, இன்னும் நீ சொல்றதா சொன்ன மீதி உண்மைகளை சொல்லவே இல்லையே?" முதல் கேள்வியை தொடுத்தான் வர்மனாகவே.

"நான் என்ன சொன்னேன் நீங்களா எனக்கு ராமை கல்யாணம் பண்ணி வச்சா தான் மீதியை சொல்லுவேன்னு சொன்னேன், ஆனா நானே தானே அவரை அதட்டி உருட்டி கல்யாணம் செய்துகிட்டேன். சோ அந்த இடத்துலேயே நம்ம டீல் கேன்சல் ஆகிடுச்சு" அசால்ட்டாக அவனிடம் வம்பு வளர்க்கும் திமிர்க்காரியை ஒரு சகோதரனின் கண்ணோட்டத்தில் ரசித்தாலும், உண்மையை சொல்லாமல் ஏமாற்றி விளையாடுவது கோபத்தை வரவழைத்தது என்னவோ உண்மை தான்.

"நான் ஊர்ல இல்லாத நேரம் பாத்து நீயா அவசரப்பட்டு தாலிகட்ட வச்சிக்கிட்டா நான் என்ன பண்றது. ஏதோ ஒண்ணு ராம் உன்கூட இப்போல்லாம் சந்தோஷமா இருக்கான், ஆனா உன் சந்தோஷத்தை நான் பாக்கவே இல்லையேமா" வர்மன் கேட்ட வார்த்தையில் எமோஷனல் என்றால் என்னவென அறியாதவளின் கண்கள் கூட சட்டென கலங்கி போனது.

அதுவரை துடுக்குத்தனமாக இருந்த அவள் எதையோ இழந்ததை போல் சோகத்தில் ஆழ்ந்து, அத்தான்.. என உரிமையாக அழைத்தவளை கண்டு மெலிதான புன்னகை வந்து மறைந்தது வர்மனின் உதட்டில்.

"எனக்கு தெரியும், நீங்க ராம் மேலயும் அவர் பையன் மேலயும் எவ்ளோ அன்பு வச்சிருக்கீங்கன்னு, ஆரம்பத்துல கூட உங்க ரெண்டு பேரோட நட்பை கிண்டல் கேலியா நினைச்சதுண்டு, ஆனா இங்க வந்து பார்த்த பிறகு தான் தெரிஞ்சிது உங்க உன்னதமான நட்பை பற்றி. நான் இருந்தாலும் இல்லைனாலும் நீங்க எல்லாரும் ராம்க்கு உறுதுணையா நிப்பீங்கனு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு" ஊடகமாக பேசியவளை கண்கள் இடுங்கக் கண்டவனாக, "இப்போ என்ன முடிவோட என்னை பாக்க வந்திருக்க" அவள் நோக்கம் புரியாமல் கேட்டான்.

நாளைக்கு நானும் ராமும் இங்கிருந்து கிளம்புரோம். இனிமே திரும்ப வருவேனானு தெரியாது ஆனா உங்களுக்கு தெரிய வேண்டிய உண்மைகள் எல்லாம் கூடிய சீக்கிரம் தெரிய வரும்." கடைசியாக நேத்ரா, வர்மனிடம் உரைத்து விட்டு சென்ற வார்த்தைகள்

வர்மன் சொல்லி முடிக்க, திக்பிரம்மை பிடித்தவன் போல் வியர்த்து வடியும் முகத்தோடு கண்ணீர் கன்னம் தாண்டுவதை கூட உணராமல் அமர்ந்திருந்தான் ராம்.

"அப்போ.. அப்போ.. என் தீஷாவ கொன்னு இருக்காங்களா மச்சான்.." பேச்சே எழவில்லை அவனுக்கு.

"ராம்.. கஷ்டமா இருக்கு டா ப்ளீஸ் அழாத.." நண்பனின் துக்கம் தாலவில்லையே!

"நேத்ரா எல்லாம் தெரிஞ்சே எனக்காக அவ உடலையும் உயிரையும் தியாகம் பண்ண துணிஞ்சிட்டாளே டா.. அவளை நான் வார்த்தையால எவ்ளோ எல்லாம் கஸ்டபடுத்தி அவமானப்படுத்தி இருப்பேன், எதுக்காக டா அவ்வளவையும் பொறுத்துக்கிட்டு இப்டி ஒரு முடிவை எடுத்தா, இதுனால அவளுக்கு என்ன கிடைக்க போகுது, சரிதான் போடானு விட்டு போயிட்டே இருந்திருக்க வேண்டியது தானே. இதை நினைச்சி நிம்மதி இல்லாம அவ எப்டிலாம் துடிச்சி தனிமைல தவிச்சு இருந்திருப்பா, நான் அவளுக்கு துணையா ஒரே ஒரு இடத்துல கூட நம்பிக்கையா நிக்காம விட்டேனே!!.." தலையில் அடித்துக் கொண்டு அழுது கதறியவனை என்ன ஆறுதல் மொழி கூறியும் தேற்ற முடியாமல் பரிதவித்து போனான் வர்மன்.

தீஷாவ கொன்னவனை ஈஸியா கொன்னு போட்றுலாம் ஆனா இனிமே என் நேத்ராவ எப்டி நான் காப்பாத்துவேன்.. என் தீஷா ஒரு பொண்ண இத்தனை தூரம் கொடுமை படுத்துற அளவுக்கு கெட்டவளா எப்ப மாறினா? அவளோட நிறைவேறாத ஆசைக்கு, தன் உயிரை பத்தி கூட கவலை படாம அவளுக்காக உதவ வந்த என் நேத்ராவ பழி தீர்க்க துடிக்கிறது எவ்ளோ பெரிய பாவம். அந்த பாவத்தை என் தீஷாவ நான் சுமக்க விட வர்மா, இதுக்கெல்லாம் ஒரு வழி பண்ணியே தீரனும் ஆனா எப்டி? மண்டை சூடேரி புலம்பிக் கொண்டிருந்தான் இதயம் வெடித்து விடுவதை போன்ற துயரத்தில்.

நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது ராமின் எண்ணுக்கு அழைப்பு வர, எடுத்து திரையைக் கண்டவன் யோசனையாக மொபைல் திரையை திருப்பி வர்மனிடம் காட்ட. 'எதுக்கு நரேன் போன் பண்றான்' இருவரும் ஒருசேர கேட்டுக் கொண்டு அழைப்பை ஏற்றனர்.

"நான் நரேன் பேசுறேன்" என்றான் உறைப்பான குரலால்.

"என்ன விஷயமா கூப்பிட்டீங்க" ராம் தான் கேட்டது.

"முக்கியமான விஷயம் பேசணும் இப்போ பிரீயா" இன்னும் தன் ஈகோவை விட்டுக் கொடுக்க முடிவில்லை போலும், வேண்டா வெறுப்பாக பேசுபவனை போலவே இருந்தது அவன் உரையாடல்.

"ம்ம்.. பிரீ தான், இங்க வீட்டு பக்கத்துல உள்ள பார்க்கல வர்மனோட இருக்கேன்" தகவல் சொல்ல, "20 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்" என்று அழைப்பு துண்டிக்கப் பட்டது.

குணவதியை கையோடு அழைத்து வந்து வர்மன் வீட்டில் விட்டவன், பார்க் நோக்கி வந்தான்.

அவன் வரும் போதே ராம் வர்மனின் முகம் கூர்ந்து ஏதோ நிலைமை சரி இல்லை என்று உணர்ந்தவனாக, "உங்க அம்மா பையனை மட்டும் வர்மன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க போல, நேத்ரா எங்கே, அவ நல்லா தானே இருக்கா?" வந்ததும் வராததுமாய் நரேன் அப்படி கேட்டதும் ராமின் முகம் சோகத்தில் ஆழ்ந்தது.

"நேத்ரா, ராம் வீட்ல இருக்கா, நீ எதுக்கு ராமை பாக்கணும்னு சொன்ன நரேன்" வர்மன் கேட்டதும் அதிர்ச்சியான நரேன், "என்னது ராம் வீட்ல தனியா இருக்காளா.. எதுக்காக அவளை தனியா விட்டு வந்தீங்க, இந்நேரம் எங்க அப்பா பரமானந்தம் அவளையும் கடத்தி தூக்கிட்டு போய் இருப்பாரு" தலையில் அடித்துக் கொண்டு நரேன் கத்த. என்னஆ.. அதிர்ந்தவர்கள் மூவருமாய் அவளை தேடி ஓடிக் கொண்டிருக்க.

இங்கு பரமானந்தம் எதிரில் கைகால்களை எல்லாம் இறுக்கமாக கட்டி வைத்து அமரவைக்கப் பட்டிருந்தாள் நேத்ரா.

தொடரும்.

இனி லாஜிக் பாக்காம படிங்க drs.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 45
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top