• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

அத்தியாயம் 46

Administrator
Staff member
Messages
309
Reaction score
251
Points
63
அத்தியாயம் - 46

தேர்தல் பிரச்சாரம் என்று மிகவும் பரபரப்பான சூழ்நிலையை தனித்துக் கொள்ள யாருக்கும் சந்தேகம் தோன்றாத வகையில், வீட்டிலேயே பணியாளர்கள் போல் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு தினமும் இரவில், ஏசி அறையிலும் வியர்த்து வடிய இளம்பெண்ணோடு சல்லாபத்தில் ஈடுப் பட்டிருந்த பரமுவின் நினைவெல்லாம், தேர்தலுக்கு முன்னால் சிஎம் பிள்ளைகளோடு நரேன் நேத்ராவின் திருமணம் முடித்து, சிஎம்மின் சம்மந்தி என்ற பெயரை வைத்தே மக்களின் வாக்குகளை பெற்று மீண்டும் மந்திரியாகி, சிஎம்மோடு நன்கு இணக்கமாகி உடன் இருந்தே அவர் பதவியை தட்டித் தூக்க வேண்டும் என்பதில் தான் முழு மூச்சாக இருந்தது.

இது போதாதென, நரேன் ஸ்ருதியின் காதல் அவள் வயிற்றில் வளரும் குழந்தை. ஸ்ருதியை அழிப்பது பெரிய விஷயமே இல்லை. அவள் தான் இப்பொழுது இருக்கும் முக்கிய பலியாடு அவருக்கு. அவளை வைத்து தான் மற்றுமொரு பெரிய திட்டமே போட்டு வைத்திருக்கிறார் பரமு. ஆனால் நேத்ரா வேறு சொன்ன நாட்களை தாண்டியும் வராமல் ராமோடு இருப்பது என அணைத்தும் பெரிய தலைவலியை உண்டு செய்தது.

கடைசியாக அவளிடம் போனில் பேசியபோது, "எப்போ நம்ம வீட்டுக்கு வர நேத்ரா" என்று கேட்டதற்கு "கூடிய சீக்கிரம் வருவேன் டாடி.. நான் வர நாளை எதிர்பார்த்து காத்திருங்க நீங்க எதிர்பாராத நிறைய சர்பிரைசஸும் கூடவே வரும்" ஊடகமாக பேசி வைத்ததோடு சரி. மீண்டும் நிறைய முறை அழைத்து விட்டார் தொடர்பு கொள்ள முடியவில்லை அவளை.

அதிலும் சில நாட்களாகவே அவரை பின் தொடர்வதை போல் தோன்றும் அமானுஷ்யங்கள் கண் மூடி உறங்கியே பலநாட்கள் ஆனது போல் இருந்தது. அதை ஈடு செய்யவே இரவில் உறங்காது நேரம் கழிக்க பெண்கள் தேவைபடுகிறது. (இல்லனா மட்டும் தேவை படாதானு நினைக்கிறது புரியிது, ஆனாலும் மெயின் காரணம் வேணுமே)

நாளைக்கு போய் எப்படியாவது நேத்ராவை கையோடு அழைத்துக் கொண்டு வந்து விட வேண்டும். தேவை இல்லாமல் முரண்டு செய்தால் வேறு வழியே இல்லை நாலு தட்டு தட்டி தூக்கி விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு அப்பெண்ணின் மீது இயங்கிக் கொண்டிருக்க, அவர் முகத்தின் நேரே ஆஆஆ.. என்ற பெருத்த அலறலுடன் வந்து போன உருவத்தைக் கண்டு அரண்டு போய் அவர் எழுந்த வேகத்தில் அந்த பெண்ணும் புரியாமல் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

"என்னாச்சி சார் ஏன் எழுந்துடீங்க." அவளுக்கு அவள் பாடு, எங்கே பணத்தில் கை வைத்து விடுவாரோ என்று.

வியர்த்த முகத்தை வேஷ்டியை தூக்கி துடைத்தபடி சுற்றி முற்றி பார்த்த பரமு, "ஒன்னும் இல்ல நீ ஏன் எழுந்த படு" என கடுகடுத்து மெத்தையில் சரிந்து துரிதமாக செயல்பட முயல உள்ளத்தில் ஏற்பட்ட அதிர்வில் முன்பு போல் இயல்பாக இருக்க முடியாமல் போகவே, மீண்டும் அவர் கண்களில் நுழைந்து அச்சுறுத்தி உடல் நடுங்கி கலக்கம் கொள்ள வைத்தது அக்கொடிய உருவம்.

பதட்டமடைந்த பரமு, இதயம் தடக்தடக்க வேகமாக எழுந்தவர் என்ன நினைத்தாரோ, "ஏய் போதும் எழுந்து போ" அவளை பேச விடாது துரத்து விட்டு சட்டையை அணிந்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவர், டிவியை ஆன் செய்தார்.

முக்கியசெய்தி.. சென்னை காசிமேடை சேர்ந்த 30 வயதான இலைஞ்சன் பாண்டியராஜ் மர்மமுறையில் அவரது வீட்டிலேயே இறப்பு. உடலில் எந்த பகுதியிலும் யவரும் தாக்கியதற்கான எந்தஒரு தடயமும் இல்லாமல், சொட்டு ரத்தமின்றி எலும்புகளோடு சதைகள் வற்றிய நிலையில் உடல் சுருங்கி மரப்பாச்சி பொம்மை போன்று இறந்து கிடந்த பாண்டியராஜின் உடலை போலீஸார் மீட்டெடுப்பு.

பிரேத பரிசோதனை செய்தும், பாண்டியராஜின் உடலில் எப்படி ரத்தம் சுண்டியது? எப்படி இறந்தார்? இதற்கு பின்னால் வேறேதும் சதி உள்ளதா? என்ற ரகசிய மர்மத்தை கண்டறிய முடியாமல் மருத்துவக்குழு குழப்பம்.

(இந்த பாண்டியராஜை நினைவுல வச்சிக்கோங்க)

தொலைக்காட்சியில் சொல்லப்பட்ட செய்தியில் பரமு அதிர்ந்து போக, ஹா.. ஹா.. ஹா.. ஹா.. பேய் சிரிப்பு பலமாக எதிரொலித்துக் கொண்டிருப்பதை உள்வாங்கியபடி தன் கையிலும் கழுத்திலும் உள்ள சிகப்பு கயிற்றால் ஆன காப்பர் தாயத்தை இருக்கிறதா என சரி பார்த்துக் கொண்டு போனை எடுத்து யாருக்கோ பரபரப்பாக அழைத்தபடி ஷோபாவில் அமர்ந்தார்.

"ஹெலோ நான் பரமு பேசுறேன்"

"அடடே.. நீயா.. என்ன திடீர்னு என் நியாபகம் வந்து அதிசயமா போன் போட்டு இருக்க" அந்த பக்கம் நக்கல்.

"ம்ம்.. ஒனக்கு திரும்ப வேலை கொடுக்க தான். நீயெல்லாம் என்ன மந்திரவாதி என்ன கட்டு போட்ட. ஒரு வருஷமா இந்த பேய் பிசாசுங்க தொல்லை இல்லாம இருந்துச்சி ஆனா இப்போ வந்தது எதுனு தெரியல ஏதோ ஒண்ணு திரும்ப வந்து தொல்லை பண்ணுது. நமக்காக ஆள் கண்டுபிடிச்சி தூக்குற பாண்டியன் வேற செத்துட்டான் நியூஸ்ல இப்பதான் பாத்தேன். அது ஆட்டம் ரொம்ப ஓவரா போகுது. நிம்மதியா தூங்கி பத்து நாளுக்கு மேல ஆகுது" சிவந்த கண்களை கசக்கிக் கொண்டார் பரமு.

"என்ன சொல்ற பரமா, பாண்டியன் செத்துட்டானா? ஆனா எப்டி சாத்தியம், என்னோட மந்திரக்கட்டை மீறி எந்த ஒரு சக்தியாலும் வெளிவர முடியாது" என்றார் மந்திரவாதி பாவமூர்த்தி சிறு திகைப்புடன்.

"என்னத்த மந்திரக்கட்டோ மண்ணாங்கட்டி கட்டோ.. எப்டியோ உன் கட்டை உடைச்சிட்டு அது வந்துருச்சு போலய்யா.." சலித்தார் பரமு.

"இல்ல பரமா.. இதுல ஏதோ தவறு நடந்து இருக்கு, என் கட்டை உடைக்கிறது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்ல, அதை உடைக்க ஒரே ஒரு வழி மட்டும் தான் இருக்கு, புதுசா கல்யாணம் ஆகி கன்னி கழிஞ்ச பொண்ணு தன் விருப்பத்தோட இறந்து போன ஆத்மாவ தன் உடம்புல தங்க அனுமதிச்சா மட்டும் தான் கட்டு முறிஞ்சி அது சுதந்திரமா வெளிய வரும்." முக்கி முக்கி கரகரத்த பயங்கர குரலால் முறையிட்டார் மந்திரவாதி பாவமூர்த்தி.

"என்னைய்யா நீ.. கதை கதையா விட்டுட்டு இருக்க. ஒரே ஆத்மாவ ரெண்டா பிரிச்சி மந்திரக்கட்டு போட்டு வச்சது நல்ல ஆத்மாக்கு தானே, கெட்ட ஆத்மாவ எனக்கு துணையா தானே வெளிய விட்டு ஏவி வச்சிருந்த. பிறகு எப்டி ரெண்டும் ஒன்னா இணைஞ்சுது?" பயத்திலும் படபடப்பிலும் யோசனை திறன் செயலிழந்து போனது போலும் பரமுக்கு.

"யோவ்.. நீயெல்லாம் என்ன மந்திரி, நான் தான் ஏற்கனவே சொன்னேனே, புதுசா கல்யாணம் ஆகி கன்னி கழிஞ்ச பொண்ணு தன் முழு விருப்பத்தோட அந்த நல்ல ஆத்மாவ தன் உடம்புல தங்க ஏத்துக்கிட்டா, நல்லதோட கெட்டதும் கூடி ஒன்னா கலந்திடும். அதன் பிறகு நல்லதும் கெட்டதும் ஒன்னு கூடி சக்தி வாய்ந்த பிரேதாத்மாவா உருவெடுக்கும், இத்தனை நாளா ஒரே ஆத்மாவா இருந்தாலும் தனி தனியா செயல்பட்டுச்சிங்க, ஆனா இப்ப ஒன்னான பிறகு ஒரே நேர்கோட்டுல செயல்பட்டு அதை கொன்னவங்கள பழி தீர்க்க நினைக்கும்" என்றிட திகைத்து போன பரமானந்தம் முகத்தில் முட்டி மோதி, ஆந்தை அலறும் சப்தத்துடன் வவ்வால் போல் பறந்து சென்றது கொடிய உருவம்.

கண்களை இறுக மூடி வியர்வை படர்ந்த முகமும் உடலும் நடுங்க, இதயம் தாறுமாறாக குதித்து ஆஆ..க்க்.. என்ற அலறலோடு போனையும் நெஞ்சையும் இறுக்கிப் பிடித்தவர் நினைவில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் காட்சிப் படமாய் ஓடியது.

இங்கு வர்மன் காரை இயக்க, "நரேன் இவ்வளவு பெரிய பாவங்களை செஞ்ச உன் அப்பன் அந்த பொ*ம்போக்கு, எதுக்காக சம்மந்தம் இல்லாம அவர் பொண்ணான நேத்ராவையே கடத்தணும்" பரமானந்தம் மேல் கொலைவெறியில் இருந்த ராம் கொதித்துப் போனான்.

"ஏன்னா நேத்ரா உங்கள விரும்புறாளோனு அந்த ஆளுக்கு சந்தேகம் வந்திடுச்சு. மூணு மாசம் டைம் கேட்ட பொண்ணு கடைசி நாள் வரைக்கும் வராத போதே அவளை கண்காணிக்க ஆள் வச்சிட்டார், நேத்ரா உங்களோட நெருக்கமா பழகுறதை எல்லாம் தெரிஞ்சிகிட்டாரு. எனக்கும் நேத்ராக்கும் இன்னும் ரெண்டு மூணு நாளுல சிஎம் பசங்களோட கல்யாணம், அதையும் அவரோட சுயநலத்துக்காக தான் நடத்த போறாரு.

அதுனால தான் நான் ஸ்ருதிய விரும்புறதை தெரிஞ்சி என் ஸ்ருதிய கடத்தி, இதுக்கு மேலயும் நேத்ரா வராம போனா பிரச்சனை அவருக்கு தான்னு அவளையும் கடத்தி கொண்டு போய் செண்டிமெண்ட்டா பேசி சமாதானம் செஞ்சி எப்படியாவது எங்க ரெண்டு பேருக்கும் சிஎம் பசங்களோட கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு கனவு கண்டுட்டு இருக்காரு" என்றவன்

பரமு நினைத்துக் கொண்டிருக்கும் அதே காட்சிகளை, அவன் பார்த்தவரை இருவரிடமும் சொல்லிக் கொண்டு வந்தான்.

குட்டி பிளாஷ் பேக் (இனிமேல் காணப்போகும் சம்பவங்கள் அனைத்தும் முற்றிலும் கற்பையே நோ லாஜிக். பேய் கதைல கூட லாஜிக் பாத்து குத்தம் கண்டு பிடிக்கிறவங்க இருந்தா ஸ்கிப்இட்.. ஒருதரம், ஸ்கிப்இட்.. ரெண்டுதரம், ஸ்கிப்இட்.. மூணுதரம், இதை தவிர வேற என்ன சொல்ல?)

"டேய்.. எவ்ளோ நேரம் வரற்துக்கு சீக்கிரம் பூஜைய முடிக்கணும் ஆள் கிடைச்சிதா? ஒண்ணு பிள்ளை உண்டான பொண்ணா இருக்கனும் இல்ல பிள்ளை பெத்த இளம்பெண்ணா இருக்கனும். நீபாட்டுக்கு ஆண்டியவோ பாட்டியவோ மாத்திகீத்தி தூக்கிட்டு வந்திடாத." போனில் கத்திக் கொண்டிருந்தார் பரமு.

"இதோ தேடிட்டே இருக்கோம் அய்யா.. யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி பொண்ண தூக்கணும், ஹாஸ்பிடல் எமர்ஜென்சிக்கு வர்ற ஆட்களை பாத்துட்டு தான் இருக்கோம் பொண்ணு கிடைச்சதும் பட்டுனு தூக்கிடலாம்" என்றான் பாண்டியராஜ், பரமுவின் முக்கியக் கையாள்.

"சரி சரி 12 மணிக்குள்ள ஊருக்கு எல்லைல உள்ள சுடுகாட்டுக்கு தூக்கிட்டு வந்திடு. வருஷா வருஷம் கரெக்ட்டா செய்றதை போல சரியா ஒரு மணிக்கெல்லாம் தாய்மை அடைந்த பெண்ணை உயிரோட பலி கொடுத்தா தான் அடுத்தடுத்து வரப்போற தேர்தல்ல ஜெயிச்சி மந்திரியா இருக்க நான் அடுத்து முதலமைச்சர் பதவியை அடைய முடியும்" கட்டளையிட்டு அழைப்பை துண்டித்தார்.

முற்றிலுமான மூடநம்பிக்கையை எந்த கிறுக்கனோ அவர் மண்டையில் ஆணி அடித்து விட்டிருக்க மந்திரி பரமு மந்திரவாதி பாவமூர்த்தியோடு இணைந்து யாருக்கும் சந்தேகம் வராத வகையில், ஆள் அரவமற்ற கிராமங்களை தேர்ந்தெடுத்து வருடா வருடம் பலமான சுடுகாட்டு பூஜைகளை நடத்தி வருகின்றர்.

ஒவ்வொரு தாய்மை அடைந்த சுமங்கலி பெண்ணை கடத்திக் கொண்டு வந்து, பிணத்தின் சாம்பலை கரைத்த தண்ணீரை அவர்கள் மேலே ஊற்றி, அதே பிணத்தின் சாம்பல் கரைத்த நீரில் முக்கி எடுத்த ஈர கருப்பு சேலை கட்டி விட்டு நெற்றி மறையும் அளவுக்கு ரத்த சிகப்பு நிற குங்குமத்தை வைத்து, அப்பெண்கள் "தன்னை விட்டுவிடுமாறு" கதறி அழுது கெஞ்சுவதை எதையும் காதில் வாங்காமல், பத்துக்கு பத்து சைசில் மண்ணெண்ணெய் மற்றும் கற்பூர கட்டிகளை வளையமாக அமைத்து தீமூட்ட தயாராக இருக்கும் அக்னி வளையத்தின் நடுவே இரும்பு கம்பியில் நிற்க வைத்து கட்டிப் போட்டு, உடல் வெந்து துடிக்க துடிக்க ஜெகஜோதியாக ஆள் உயரத்திற்கு வளையமாக பற்றி எரியும் தீயில் உடல் கருகி சாகும் வரை மந்திரங்கள் வேகமாக உச்சரிக்க பலத்த பலி பூஜைகள் நடந்துக் கொண்டிருக்கும்.

பதவி உயர இப்படி ஒரு பதற வைக்கும் கொடூர நரபலி பூஜைகளை செய்யும் பரமுவின் மற்றொரு கொடிய முகத்தை மறைத்துக் கொண்டு தான், "மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்வேன், மக்களின் நலனே எனது உயிர் மூச்சி" என நல்லவனே தோற்று விடும் அளவிற்கு பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்.

இங்கோ மணி பத்தை கடந்தும் எந்த பெண்ணும் சிக்காததால் மருத்துவமனையின் எதிரில் உள்ள பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி புகைத்தபடி நின்றிருந்த பாண்டியராஜின் பார்வையில் சிக்கினாள் தீஷா.

அவளை பார்த்தமாத்திரத்தில் பெரும் அதிர்ச்சி அவனுக்கு.

காரணம் தீஷாவை ஒருதலையாக காதலித்து அவள் கிடைக்கவில்லை என்றதும், அவள் வீடு புகுந்து வயிற்றில் உள்ள பிள்ளையோடு அவளை கொலை செய்ய துணிந்த கொடும்பாவி இவன் தான். கணவன் குழந்தை என அழகான உறவுகள் கண்ணெதிரே இருந்தும் கண் திறந்து பார்க்க முடியாமல் துரதிர்ஷ்டவாளியாக சுயநினைவின்றி கோமாவில் படுத்து கிடந்ததற்கு முழு முக்கியக் காரணம் இதே பாண்டியராஜன் தான்.

அன்று தீஷாவை கொன்று விட்டோம் என்ற திருப்தியோடு தடயங்களை அழித்து விட்டு எப்போதும் போல் பரமுவுக்கு விசுவாசியான கையாளாக இருந்து வந்தான் பாண்டியராஜ்.

ஆனால் அவளை மீண்டும் உயிரோடு பார்ப்போம் என்று நினைத்திருக்கவில்லையோ என்னவோ! அதுவும் அவளுக்கு நினைவில்லாத போதிலும் தீஷாவை கண்ணில் வைத்து கண்ணின் மணியாக தாங்கும் கணவன் ராமின் உயிர்ப்பான காதலை காண காண ஆத்திரத்தை அடக்கமுடியவில்லை அவனால்.

அத்தனை நாளும் கோமாவில் இருந்த தீஷாக்கு திடீரென பிக்ஸ் வந்ததும் குடும்பமே அதிர்ச்சியடைந்து அவளை மருத்துவமனைக்கு தூக்கி வந்திருந்தனர் அந்நேரத்தில். அன்றோடு அவள் விதி முடியப் போகிறது என்று உறுதியான பிறகு வேண்டா வெறுப்பாக பாவம் பார்த்து அவளின் சுயநினைவை தற்காலிகமாக திருப்பிக் கொடுத்தான் போலும் காலதூதன்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 46
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top