• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
323
Reaction score
243
Points
63
இதழ்- 73


மூவரும் ஒவ்வொரு அறையாக மகியை தேடி செல்ல, அடிக்க அடிக்க குறையாமல் அடியாட்கள் படையெடுத்து வந்துக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் மூவருமே சோர்ந்து போகும் நிலை வந்துவிட்டது. இருந்தும் தங்களின் தோல்வியை ஒத்துக் கொள்ளாமல், படிகளில் குரங்கு கூட்டமாக சீறிக் கொண்டு வந்த ஆட்களை எல்லாம் அடித்து ஒவ்வொரு அறைக்குள் அப்படியே தள்ளி விட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டி, அடுத்தடுத்த அறைகளில் மகி இருக்கிறாளா என்று பரபரப்பாக சோதனை செய்தனர்.

ஊசி குத்தியதும் மடங்கி விழுந்தது யார்? நிச்சயம் மகி இல்லை. அவளை பிடித்து இருந்தவன் தான் மொத்த உடலும் மரத்த நிலையில் தரையில் விழுந்திருந்தான்.

“முட்டாள் முட்டாள் டேய் இடியட் ஊசிய மாத்தி போட்டு எதுக்குடா உயிர எடுக்குற. நான் வந்தேன்னு வச்சிக்கோ உன்னை உயிரோட சமாதி கட்டிடுவேன்..” ஆதிகேசவ் திரையில் இருந்து கடுங்கோபத்தில் கத்திக் கொண்டு இருந்தான்.

சற்று நேரம் முன், மகி அழுதும் கெஞ்சியும் அவளை விடாமல் பின்னாலிருந்து ஒருவன் பிடித்திருக்க, ஊசி போட வந்தவன் மகியின் கழுத்தை குறி வைத்துக் குத்த சட்டென தலை குனிந்தவள், கணவனை ஒருமுறை உதைத்த அனுபவத்தில் கத்து வைத்த வித்தையை எதிரில் உள்ளவன் மணியில் முட்டிக்காலால் டிங்கென்று வேகமாக ஒரு ஏத்து ஏத்த, அவன் கையில் இருந்த ஊசி பின்னால் இருந்தவன் கழுத்து நரம்பில் இறங்கியதும், மகியை விட்டு இருவரும் ஒரே நேரத்தில் தரையில் சரிந்தனர்.

மணியில் அடிப்பட்டவன் தப்பி ஓடப் போனவளின் காலை பிடித்து இழுத்து விட “ஆஆ..” என குப்புற அடித்து விழுந்தவளுக்கு முன்பக்க உடம்பு முழுக்க வலி.

இதை பார்த்து தான் பிபி எகிறி ஆதிகேசவ் கத்திக் கொண்டு இருக்கிறான். விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து அவள் ஓட முயற்சிக்க,

“டேய் அவ ஓட பாக்குறா. சீக்கிரம் அவளை கொல்லு. இனிமே அவளை ஊசி போட்டு ஆர்கன்ஸ் எடுக்குற வேலையெல்லாம் வேணாம். கொன்னு போட்டு அப்புறம் பாக்கலாம்..” நெஞ்சில் ஈரமின்றி அவன் கத்திக் கொண்டு இருக்க, மகியை எழ விடாமல் பிடித்துக் கொண்டான் உதைப்பட்டவன்.

“ஆ! விடுடா..” என கத்திக் கொண்டே அவள் காலை உதறி அவனிடமிருந்து தப்பி செல்ல பார்க்க, நன்றாக பிடித்திருந்தான் அவள் கால்மணிகட்டை. காலியான கண்ணாடி மருந்து பாட்டில் ஒன்று தரையில் கிடப்பதை பார்த்தவள் கடினப்பட்டு எக்கி அதகையில் எடுக்க முயற்சிக்க, அதற்குள் அவன் எழுந்து நின்று ஸ்ட்ரக்சர் அருகில் இருந்த கத்தியை எடுக்கவும், மகி கண்ணாடி பாட்டில் எடுக்கவும் சரியாக இருந்தது.

பாய்ந்து வந்து விழுந்து கிடந்தவள் முதுகில் கத்தியால் அவன் குத்தப் போக, நொடி பொழுதில் சடாரென அவன் புறம் திரும்பிய மகி, கையில் இருந்த கண்ணாடி பாட்டிலை விட்டு எறிய, அது அவன் முகத்தில் பட்டு வெடித்த வேகத்தில், கண்களில் எல்லாம் கண்ணாடி துகள்கள் சிதறி வலி தாங்க முடியாமல் துடித்தவன், கையில் இருந்த கத்தியை கீழே போட்டு அவன் அலறிய வேலையில் மகி வெளியே ஓடி வரவும், அந்த அறை கதவை அர்ஜூன் திறக்கப் போகவும் சரியாக இருந்தது.


ஒருவரை ஒருவர் பார்த்து ஒரு நொடி திகைத்து போன கணவன் மனைவி இருவரும், பார்வையால் தலை முதல் பாதம் வரை அளந்தவர்கள், பிரிவின் துக்கத்தில் இருவரின் முகமும் பழைய பொலிவின்றி இருக்க, அர்ஜூன் உடல் இளைத்து போய் இருப்பதை கண்டு “ஓ..!” என்ற அழுகையுடன் “அத்தான்..” என அவனை கட்டிக்கொள்ள அவள் முன்னேற, "வராதே.." என கை நீட்டி கடுமையாக தடுத்திருந்தான் அர்ஜூன்.


அவன் அப்படி செய்ததும் உயிர் உருகும் வலிவுடன் அவனை கண்டவள், “அத்.. அத்தான்..” பரிதவிப்புடன் மகி பேச தடுமாறிய போது, சருட்டென வந்த புல்லட் மகியை பதம் பார்க்க வந்ததை கண்ட அர்ஜுன், அவளை இழுத்து தரையோடு தரையாக உருண்டவன், தன் பிஸ்டலை எடுத்து மகியை குறி வைத்தவன் நெற்றிப் பொட்டில் சுட்டவன், அடுத்தடுத்த அவர்களை தாக்க வந்த ஆட்களை எல்லாம் புல்லட் தீரும் வரை சுட்டே கொன்றான்.

பயத்தில் கிடுகிடுவென அவன் மேல் கண் மூடி நடுங்கிக் கொண்டு இருக்கும் மகியை தூக்கி நிறுத்தி அவள் கை பிடித்துக் கொண்டு அவன் ஓட, நடப்பது எதுவும் புரியாமல் கணவனின் இழுப்புக்கு ஓடிய மகி, அவன் கையில் இருந்த காயத்தில் இருந்து வழிந்த ரத்தம் அவளின் உள்ளங்கைலும் சூடாக நனைந்து தஞ்சம் புகுந்ததை, சுற்றி எங்கும் துப்பாக்கி சத்தம் அலறல் சத்தம் பெண்நெஞ்சை அதிர செய்ததில் அதனை அவள் உணராமல் போனாள்.

கதிர் ரிஷி இருவரும், கையில் கிடைக்கும் ரவுடிகளை எல்லாம் பந்தாடிக் கொண்டே வர, ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களுக்கே சலிப்புத்தட்டி விட்டது இத்தனை பேரும் எங்கிருந்து தான் வருகிறார்கள் என்று. எல்லாம் கன்ஸ்ட்ரக்ஷன் வேலை செய்யும் கூலிபடைகள் தான். அர்ஜூன் மகியை கூட்டிக் கொண்டு ஓடி வருவதை பார்த்த இருவரும், நிம்மதியாக உணரும் முன்பே அந்த அசம்பாவிதம் நடந்தேறி இருந்தது.

மறைந்திருந்த அடியாள் குறி வைத்த தோட்டா அர்ஜூனின் தோள்பட்டை மேல் உராய்ந்து சென்று சுவற்றை துளை இட்டது.

“ஆஆ!..” என்ற அலறலுடன் இடதுபக்க தோளை அர்ஜூன் அழுத்திப் பிடிக்க, மகியின் முகமெங்கும் ரத்தம் தெறித்து வழிய, அதிர்ச்சியில் இருந்து மீள முடியாது அவள் அப்படியே நிற்க,

"அர்ஜூன்ன்ன்.." என கதிரும் ரிஷியும் கத்திக் கொண்டு அவனிடம் ஓட முற்பட, இருவரையும் கொத்தாக அமுக்கிப்பிடித்தனர் ஆதிகேசவ் ஆட்கள்.

“டேய் விடுங்கடா..” இருவரும் திமிறிக் கொண்டு இருக்க, வலியில் முகம் கருத்து தள்ளாடி நின்றவனை “அத்தான்..” என்ற கதறலோடு மகி அவனை தாங்கி பிடிக்க முனைய, அப்போதும் அவளை நெருங்க விடாமல் "தள்ளியே இரு என்பது போல் பார்வையாலே எச்சரித்த அர்ஜுன் தன்னை திடப் படுத்திக் கொண்டவனாக,
எதிர்க்க வந்த ஆட்களை மரண அடி அடிக்கத் தொடங்கினான்.

உறைந்து நின்ற மகியை ஒருவன் பின்னிருந்து தாக்க வர, அவனையும் அடித்து வெளுத்தவன், கதிரை பிடித்து இருந்தவன் கையில் அடிக்கி வைத்திருந்த செங்கலை தூக்கி எறிய அவன் பிடி தளர்ந்தது.

கதிர் அவனை அடித்துப் போட்டு ரிஷியை பிடித்து இருந்தவனை அடித்து நொறுக்க, மூவரும் சேர்ந்து மீண்டும் சண்டையிட, காற்றை சுழட்டி அடித்து வேகமாக தரை இறங்கியது ஆதிகேசவ் வந்த ஜெட்.

பெரிய அளவிலான துப்பாக்கியைக் கொண்டு ஜெட்டில் இருந்தபடியே ஆதிகேசவ் வெறியாக சுடத் தொடங்க, அவன் சுட்ட முதல் தோட்டா அர்ஜூனின் அதே இடது தோளை மீண்டும் பதம் பார்த்தது. அதில் நொடியும் தாமதிக்காமல் அவன் கையில் இருந்த துப்பாக்கியால் சரியாக ஆதிகேசவ் கையை குறி பார்த்து சுட, ரத்தம் பீறிட்டு துப்பாக்கி தரையில் நழுவ “ஷட்...” என கத்தியவன்,

“அர்ஜூன் நீ ரொம்ப தப்பு பண்ணிட்ட. மரியாதையா நீங்க எல்லாரும் என்கிட்ட சரண்டர் ஆகிடுங்க. இல்லை உங்க மொத்த குடும்பத்தையும் அழிச்சி ஒன்னும் இல்லாம தரைமட்டமா ஆக்கிடுவேன்..” வெறியானான் ஆதிகேசவ்.

அவனை கண்டு ஏளனமாக நகைத்தவன் “என்ன மாமு இவ்வளோ லேட்டா வர. வந்ததும் இவ்வளோ மொக்கயான டைலாக் பேசி எதுக்கு நேரத்த வீணடிக்கிற சீக்கிரம் ஓடி வா.. உன்னை முடிச்சிட்டு அடுத்த வேலைய பாக்க போகணும்..”வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றிய அர்ஜுனை, தீயாக முறைத்தான்.

“யாரு யாரை முடிகிறதுன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும்டா..” என்றவன் அணிந்திருக்கும் கோர்ட் பறக்க, கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டி தூர வீசியபடி அசுரன் போல் ஜெட்டில் இருந்து இறங்கி வந்தான் ஆதிகேசவ்.

பயத்தில் ஓடி வந்து பிடித்திருந்த மகியின் கையை அர்ஜூன் எடுத்து விட முயல, "அத்தான்.." உதடு துடிக்க மேலும் கெட்டியாக அவனை பிடித்துக் கொண்டவளை நிமிர்ந்தும் பார்க்காத அர்ஜுன், வலுக்கட்டாயமாக அவள் கரத்தை எடுத்து விட்டு முன்னே செல்ல, அவன் தோளில் நிற்காமல் ரத்தம் வடிந்துக் கொண்டு இருப்பதை கண்டு மகியின் இதயமே நின்று போனது.

‘அத்தான் வேணாம் போகாதீங்க.. இப்ப நீங்க சண்டை போடறது நல்லதுக்கு இல்லை அத்தான்..” என்று அவள் கத்தியது எல்லாம் வீண் தான்.

இரு துருவங்கள் நேர் எதிரில் மிரள வைக்கும் தோரணையில் இருக்க, முதலில் வெறித்தனமாக பாய்ந்து அடிக்க வந்த ஆதிகேசவ், அர்ஜூன் வயிற்றில் கையை முறுக்கி ஓங்கி குத்து விட, கால்கள் இரண்டும் காற்றில் பறக்க மார்பில் இருந்து இடுப்பு வரை வில் போன்று பின்னால் வளைந்து, நான்கு அடி பின்னால் சென்று தள்ளாடி நின்றான்.

அதை கண்ட மகி “ஐயோ அத்தான்..” என பதறிக் கத்த அவளை கண்டுக் கொள்ளாமல், கழுத்தை வளைத்து முறித்துக் கொண்டு திடமாக நிமிர்ந்தவன், பாய்ந்து சென்று இம்முறை ஆதிகேசவ் கழுத்து வளைவில் ஓங்கிக் குத்த, தாடை உதடு கன்னம் எல்லாம் ஸ்லோ மோஷனில் காற்றில் பறக்க இரண்டு கடவா பல் சிதறி விழ, தள்ளாடி நின்றான்.

மீண்டும் அர்ஜூனை தாக்க, அடுத்தடுத்து தாக்குதல்கள் வெகு தீவிரமாக இருவருக்கும் இடையே நடக்க, அங்கு நடக்கும் களேபரத்தில் மூவருக்கும் ஏதாவது ஆகி விடுமோ என்ற பயத்தில் பரிதவிப்போடு துடித்த மகியின் கண்களில் கட்டுப்பாடின்றி கண்ணீர் கொட்டியது.

ஏற்கனவே உடலில் ரத்தம் வற்றிய நிலையில், ஆதிகேசவின் இடி போல் இறங்கும் ஒவ்வொரு அடிக்கும் தன்னால் முடிந்தவரை கடும் தாக்குதல் செய்த அர்ஜுன், ஒரு நிலைக்கு மேல் முடியாத நிலையில் கண்கள் சொருக தரையில் சரிந்தான்.

வாயில் இருந்து வழியும் குருதியை துடைத்தபடி இளக்கார புன்னகை சிந்தி மகியை பார்த்த ஆதிகேசவ்,
“இந்த முதுகெலும்பு இல்லாதவன் கிட்டருந்தா என்னை காப்பாத்துறேன்னு சொன்ன?” என்றவன் அவன் மார்பில் ஓங்கி மிதிக்க,

“ஆக்..” மூச்சிமுட்டி, அவன் மார்பை தூக்கி குறுக்கியதில் காயம்பட்ட தோளில் இருந்து இன்னும் ரத்தம் பீறிட்டு வழிந்தது.

“ஐயோ அத்தான்..” என கதறலுடன் அவனிடம் ஓடி வந்தவளின் முடியை கொத்தாக பற்றிக் கொண்டான் கழுகன்.

“ஆஆ! விடு விடுடா..” என்று கத்தி தன்னவனிடம் ஓட முயற்சி செய்தவளை சட்டென விட்டு விலகியன், விலகிய வேகத்தில் காலால் அவள் வயிற்றில் ஓங்கி உதை விட

“மாமா..” என்ற அலறலோடு அவள் விழுந்த வேகத்தில், தலையில் அடிப்பட்டு நிலைகுத்திய கண்கள் அந்த நிலையிலும் கணவனிடமே இருந்தது.

நான்கு பேரை சராமரியாக அடித்துக் கொண்டிருந்த கதிர், மகியின் சத்தம் கேட்டு திரும்பியவன் அவள் இருக்கும் நிலை கண்டு ரத்தக் கண்ணீர் வராத குறையாக, வெறிபிடித்தவன் போல் கையில் இருந்தவர்களை அடித்துப் போட்டு, வேங்கையாக மாறி வந்த வேகத்தில் “டேய்ய்...” என்ற உருமளுடன் ஆதிகேசவ் முதுகில் ஒரே உதை விட்டான்.

குப்புற விழுந்தவன் விழுந்த வேகத்தில் உடலை வளைத்து திருப்பிக் கொண்டு அசுர வேகத்தில் எழுந்து கதிரை தாக்க, இருவரும் மாறி மாறி கையில் கிடைப்பதை எல்லாம் தூக்கி அடித்து சண்டையிட்டுக் கொண்டு இருக்க, விபரீதம் உணர்ந்த ரிஷி அவனால் முடிந்த ஆட்களை அடித்துப் போட்டு விட்டு அர்ஜூனிடம் வந்தவன், ரத்தப் போக்கு அதிகமாக இருக்கவே அணிந்து இருந்த சட்டையை கழட்டி அவன் ஷோல்டரில் இருக்கமாக கட்டிய ரிஷி,

“அர்ஜூன்.. அர்ஜூன்.. கண்ண தொற டா மச்சா..” அவன் கன்னம் தட்டி பதட்டமாக எழுப்ப முற்பட, லேசாக கண் திறக்க முயற்சி செய்த அர்ஜுன்,

”ஏஞ்..சல்..” என்று முணுமுணுப்பாக புலம்பியபடி முழுதாக கண்ணை திறக்க முயற்சி செய்தான்.

ரிஷி விடாமல் அவன் கன்னத்தில் தட்டிக் கொண்டே மண் தரையில் விழுந்துக் கிடந்த மகியை பார்க்க, தலையில் கசியும் குருதியோடு வயிற்றை பிடித்துக் கொண்டவளாக, மெல்ல எழுந்து அர்ஜூனிடம் போக நினைத்து நகர்ந்தவளின் தலையில் கட்டையால் ஒரு அடியாள் பலமாக அடித்திருக்க, கண்ணில் கண்ணீர் வழிய வாய் பிளக்க மயங்கிப் போனாள்.

அதை கண்ட ரிஷி “மகி..” என கத்திக் கொண்டே அவளிடம் ஓடியவனை சுற்றி வளைத்த ஆட்களை வெறியாக அடிக்க தொடங்க, ரிஷி நகர்ந்ததும் முழுதாக கண்களைத் திறந்த அர்ஜூன், பற்களை கடித்து வலியை பொறுத்துக் கொண்டவனாக, மயங்கிக் கிடந்த மகியிடம் தவழ்ந்து சென்று அவள் தலையை தூக்கி மடியில் வைத்தவன்,

“ஏஞ்சல்.. ஏஞ்சல். யாழு எழுந்திரி டி..” அவள் முகவாயை பிடித்து ஆட்டி பதட்டமாக எழுப்ப அவள் கண் திறந்தால் இல்லை. இன்னொருவன் அவனை “ஹேய்ய்...” என கத்திக் கொண்டே தாக்க வர, சட்டென தலை குனிந்து, அடிபடாத கையால் அவன் காலை வாரி நிலத்தில் தூக்கி அடித்தவன், அடுத்தடுத்து வந்த ஆட்களை தள்ளாடிக் கொண்டே அடித்து வெளுத்தான்.

"அர்ஜூன் இவனுங்கள நாங்க பாத்துக்குறோம் உனக்கு ரத்தம் நிக்காம வருது இப்படியே விட்டா உன் உயிருக்கே ஆபத்தாகிடும். அதோட மகிக்கும் ஆபத்து சீக்கிரம் அவளை கூட்டிட்டு நீயி இங்க இருந்து ஏதாவது ஹாஸ்பிடலுக்கு போ.." தாடை இறுக கத்திய கதிர், ஆதிகேசவை கீழே தள்ளி அவன் தலையை ஷூ காலால் மிதித்து மண்ணோடு மண்ணாக புதைத்து தள்ளினான்.

ரிஷியும் அர்ஜூனை வற்புறுத்தவே அவன் நிலையும் மோசமாவதை உணர்ந்தவன், உடலிலுள்ள சக்தியெல்லாம் வற்றி அரை உயிராய் இருப்பதை போல் தோன்ற, மகியின் தலையிலும் ரத்தம் வழிவதை கண்டு பயந்து போன அர்ஜுன், இப்போதே நன்கு இருட்டத் தொடங்கி விட வெகு சீக்கிரம் அருகில் உள்ள மருத்துவமனையில் இருவரும் சேர்ந்து விட வேண்டும் என நினைத்தவனாக,
மயங்கி கிடந்த மகியை வலி பொறுத்து பற்களை கடித்துக் கொண்டு தூக்கிக் கொண்டு பெரிய கேட் தாண்டி ஓட முற்பட, அதற்குள் அவனை தாக்கப் போன ஆட்களை மடக்கி, அடி வெளுத்தான் ரிஷி.

தலைக்கு மேல் இருந்த கதிர் காலை பிடித்து தூக்கி உதறி விட்டு ராட்சசன் போல் எழுந்த ஆதிகேசன், தன் ஆட்களுக்கு கண்ணை காட்ட, அவர்களும் அதை புரிந்துக் கொண்டு அர்ஜூன் மகியை பின் தொடர்ந்து ஒரு படையையே புழுதி பறக்க ஓடியது.

ஒரு கட்டத்தில் ஆதிகேசவை அடித்து வீழ்த்தி அவன் கழுத்தில் காலால் அரக்க, மூச்சு திணறி அவன் கண்கள் மூடவும், நெல்லூர் காவலர்கள் வரவும் சரியாக இருந்தது.

"எப்போ உங்களுக்கு இன்போர்ம் பண்ணேன், நீங்க இப்பதான் ஆடி அசைஞ்சி பொறுமையா இங்க வரீங்க?" அவர்கள் மேல் சினம் கொண்டு கதிர் உரும,

"சாரி சார் விஷயம் இவ்வளோ சீரியஸா இருக்கும்னு தெரியாது.." அவர்களின் அலட்சிய பதிலில் கோவமுற்ற கதிர்,

"இவ்வளோ அசால்ட்டா இருக்க உங்களுக்கு எல்லாம் யாரு போலீஸ் வேலை குடுத்தது. சீக்கிரம் இப்பயாவது வந்த வேலைய சரியா செய்ங்க..?" குரல் அதிர கட்டளையிட்டவன், ஒரு காவலரிடமிருந்து விளங்கை வாங்கி ஆதிக்கேச ஆச்சார்யா கையில் மாட்டி, அவனை ஜீப்பில் இழுத்து சென்று தூக்கிப் போட்டான்.

"டேய்ய்.. கதிர்.. என்னை வேணும்னா நீ இப்ப அர்ரெஸ்ட் பண்ணி இருக்கலாம். ஆனா அந்த அர்ஜூனும் அவன் பொண்டாட்டியும் உயிரோட உனக்கு கிடைக்கவே மாட்டாங்க. என் ஆளுங்க அவங்களை கொன்னு இருந்த தடம் தெரியாம அழிச்சிடுவானுங்க.." பேச முடியாத அந்த நிலையிலும் கண்ணில் திமிருடன் உறுதியாக அவன் உரைத்த விதம், கதிர் மனம் சிறிது ஆட்டம் கண்டது என்னவோ உண்மை தான்.

இருவரும் இருக்கும் நிலை அவனும் கண்களால் பார்த்தவன் தானே, காவலாளிகள் மட்டும் அழைத்த நேரத்தில் சரியாக வந்திருந்தால் இந்நேரம் நல்ல மருத்துவமனையில் இருவரையும் சேர்த்து இருக்கலாமே என்று நினைத்தவனுக்கு தாமதமாக வந்த காவலர்கள் மேல் அத்தைனை எரிச்சல் கோபம். கண்கள் மூடி கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் ஆதிகேசவை பார்த்து,

"என் தம்பி அவ்வளோ சீக்கிரம் அவன் தோல்விய ஒத்துக்க மாட்டான் ஆச்சார்யா. அவன் ஒரு அடிபட்ட சிங்கம். நாய் நரிங்கன்னு அவன் உடம்ப பிச்சி மேஞ்சும் தைரியமா தன்னை தானே சரி செய்துட்டு நடமாடுற மான்ஸ்டர். உன்னோட சாதாரண அடியாட்களால அவனை ஒன்னும் செய்ய முடியாது, சாகப் போற நேரத்துல தேவை இல்லாத பஞ்ஜ் பேசி பொட்டுன்னு போய் சேந்திடாத. உனக்கு என் தம்பி கையாளதே பாடை ஏத்தணும்.."

கொஞ்சமும் திமிர் குறையாமல் உரைத்த கதிரை வெறியோடு பார்த்தான்.

ஆதிகேசவை அலட்சியமாக கண்ட கதிர், மற்ற ஆடியாட்களையும் போலீஸ் வேனில் அள்ளிப் போட்டவன்,
மகியை ஊசி போட வந்த இருவரையும் தூக்கி போட்டுக் கொண்டு காவல்நிலையம் சென்று அவர்களை எல்லாம் பாதுகாப்பாக லாக்கப்பில் அடைத்தான்.

ஆதிகேசவை தனியாக ஒரு சிறையில் அடைத்த கதிர், சிறிதும் ஓய்வு எடுக்காமல் ரிஷியும் அவனும் சேர்ந்து அர்ஜூனை தேடும் பணியில் மும்புரமாக இருக்க, வலுகட்டாயமாக அவர்களை நிறுத்தி இருவரின் மேலுள்ள ஆழமான காயங்களுக்கும் மருந்திட்டு ஊசி செலுத்த,
அவர்களும் எத்தனை வலியை தான் பொறுத்துக் கொண்டு திடமாக இருப்பதை போல் காட்டிக் கொள்ள முடியும். விடிந்ததில் இருந்து ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருந்து, சண்டை இட்டதில் தலை கை கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தபோக்கு அதிகமாகி, மருந்தின் வீரியத்தில் தங்களையும் அறியாமல் உறங்கிப் போயினர். ஆனால் காவலர்கள் அர்ஜூன் மகியை தேடும் பணியை செய்துக் கொண்டு தான் இருந்தனர்.

அர்ஜூன் மகியை தூக்கிக் கொண்டு ஓடியவன், பின்னால் துரத்தி வரும் அடியாட்களை தற்போது மகியையும் வைத்துக் கொண்டு, தன்னால் அவர்களை எதிர்கொள்ள முடியாது என அறிந்து ஒரு காட்டுவழி பாதைக்குள் புகுந்த அர்ஜுன், ஒரு கட்டத்திற்கு மேல் உடலிலுள்ள மொத்த பலமும் இழந்து, மகியை வேறு தூக்கிக் கொண்டு ஓடியதில் மேலும் ரத்தப்போக்கு ஏற்பட்டு, நீருற்றுக்கு அருகில் உள்ள பறையில் மகியை படுக்க வைத்து அவனும் மயங்கிப் போனான்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 73
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top