- Messages
- 308
- Reaction score
- 217
- Points
- 63
அத்தியாயம் - 8
மண்டியிட்டு அமர்ந்தவனை அதீத வெறுப்பில் கண்டவளை சீரான பார்வை பார்த்தான் திலீப்.
"இதழ் நான்தா சொன்னேன்ல உன்னை வந்து பாக்குறேன்னு அவசரப்பட்டு இங்க வந்து மச்.. பாரு உனக்கு எவ்வளவு பெரிய அவமானம்னு.." வருத்தமாக சொல்ல தீயாக முறைத்தாள் அவனை.
"ச்சீ.. நம்பிக்கை துரோகி. உன்னை போய் நம்பி காதலிச்சி என் வீட்டை விட்டு வந்தேன் பாரு என் புத்திய முதல்ல செருப்பால அடிச்சிக்கணும். ஏன் டா குடும்பமே சேர்ந்து இப்படி ஒரு கேவலமான நாடகத்தை ஆடி என்ன ஏமாத்தினீங்க."
அவன் சட்டை பிடித்து ஆவேசமாக உளுக்கி எடுக்க, "இதழ் ப்ளீஸ் ஸ்டாப் இட். எதுவா இருந்தாலும் இங்க வேணாம் வா நம்ம தனியா போய் பேசிக்கலாம்" எரிச்சலாகி அவள் கரத்தை விலக்கினான்.
"இதுக்கு மேற்பட்டு உன்கிட்ட தனியா பேச என்னடா இருக்கு. அதான் எல்லாத்தையும் என் கண்ணால பாத்து தொலைச்சிட்டேனே!
உன் குடும்பமும் சரி நீயும் சரி சரியான பிராடுங்க, உடம்புக்கு முடியலன்னு சீப்பான நாடகம் ஆடி நீங்க வசதியாக என்ன பயன்படுத்தி இருக்கீங்க..." கோபத்தில் கத்தி அவன் உதட்டில் கசிந்த ரத்தத்துளியை கண்டு அருவருப்பாக முகத்தை சுளித்தாள் யமுனா.
"இங்க பாரு இதழ். என் குடும்பத்தை பத்தி நீ இவ்வளோ கேவலமா பேசும் போது நானும் என்னோட பக்க நியாயத்தை இப்பவே பேசிடறது தான் நல்லது" என்று பெருமூச்சு விட்டவனை அற்ப்பமாக பார்த்தாள்.
"எங்க அம்மாக்கு ஹார்ட் ஆப்ரேசன் பண்ணது எல்லாம் உண்மை தான். ஆனா அந்த கிட்னி ஃபெயிலியர்னு சொன்னது தான் பொய். அப்புறம் அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்ததும் பொய். இது எல்லாமே நீயும் நானும் கஷ்டப்பட்டு உழச்ச காசை எல்லாம் கடன் கொடுத்துட்டேன் கடன் கொடுத்துட்டேன்னு சொல்லி எல்லாத்தையும் சேத்து வச்சி பைனான்ஸ் விட்டு மூணு பங்காக்கி இந்த இடம் வாங்கி வீடு கட்டி இப்போ சொந்தமா பைனான்ஸ் கம்பனி வச்சி ரன் பண்ற அளவுக்கு முன்னேறி இருக்காங்க.
இந்த உண்மை எல்லாமே எனக்கு கூட இங்க வந்து எல்லாத்தையும் பார்த்த பிறகுதான் தெரியும். தெரிஞ்சதும் பயங்கர ஷாக்க்காகிட்டேன். சத்தியமா இதழ் அப்படி நம்பாம பாக்காத நான் உண்மைய தான் சொல்றேன்.
கோவம் வந்து பயங்கரமா கத்தினேன், நான் சம்பாதிச்ச பணத்தை அவங்க என்ன செஞ்சிருந்தாலும் பரவால்ல ஆனா நீ கஷ்டப்பட்ட பணத்த அவங்க யூஸ் பண்ணிக்கிட்டது ரொம்ப பெரிய தப்பு. அந்த கோவம் எனக்குள்ளும் நிறைய இருக்கு. ஏன் அப்படி பண்ணீங்கனு கேட்டதுக்கு,
"எல்லாம் உன் நல்லதுக்காக தான் திலீப் எத்தனை நாளைக்கு தான் மிடில் கிளாஸ் வாழ்க்கைய வாழ்ந்து கடைசி வரைக்கும் ஒருத்தனுக்கு அடிமையா வேலை பாத்து கஷ்டப்பட்டுகிட்டே இருக்க போறே. அதான் நாங்க எல்லாருமே இந்த ஆப்ரேசனை வச்சி யோசிச்சி இப்படி ஒரு முடிவுக்கு வந்தோம், எங்களுக்கு ஒரு பிரச்சனைனா துடிச்சி போய் ஓடி ஓடி உழைக்கிற பிள்ளைக்காக நாங்க எதாவது செய்யணும்னு நினைச்சது தப்பா திலீப்"
"மூச்சி வாங்கிட்டே நெஞ்ச பிடிச்சிக்கிட்டு அழுத அம்மாவ என்ன சொல்ல முடியும் சொல்லு. அப்புறம் அவங்க சொன்னதை எல்லாம் யோசிச்சி பாத்தேன் எனக்கும் கூட அது சரியாவே பட்டுச்சு. ஆனா இதுல நான் பண்ண தப்பு உனக்கு தெரியாம வீட்ல பாத்த பொண்ண நிச்சயம் பண்ணிக்கிட்டது"
தலை குனிந்து கொண்டவனை ஏளன சிரிப்போடு பார்த்தவள், "நிச்சயமா இதுவும் உனக்கு தெரியாம தான் நடந்திருக்கும் திலீப் நான் உன்னை நம்புறேன்.." ஒருமாதிரி நக்கல் குரலில் சொன்னதை கவனிக்காமல்,
"நிஜமாவா இதழ்..?" என்றான் ஆவலாக.
"ம்ம்.. ஆமா.. பின்னே சாருக்கும் பணக்கார வாழ்க்கைய வாழ ஆசை வந்தபிறகு என்ன மாதிரி மாச வேலைக்கு கையேந்துற ஒருத்திய கட்டிக்க தோணுமா சொல்லு.
அதான் கோடிஸ்வரிய பாத்ததும் காதலாவது மை*ராவது தூக்கி வீசிட்டு எனக்கும் என் காதலுக்கு துரோகம் செஞ்சிட்ட" வலி நிறைந்த வார்த்தையில் கண்ணீரை துடைத்துக் கொண்டவளை பதில் பேச முடியாமல் வெறும் பார்வை பார்த்தான் திலீப்.
"சத்தியமா நான் ஊருக்கு வர வரைக்கும் உன்னை கை விடணும்னு நினைச்சதே இல்ல இதழ். வீட்ல பேசி சர்ப்ரைஸா நம்ம கல்யாண டேட்ட உனக்கு அன்னவுன்ஸ் பண்ணனும்னு ஏதேதோ ஆசைய மனசுல நினைச்சிட்டு வந்தேன், ஆனா கடைசில எல்லாம் மாறிடுச்சு. அதுக்காக உன்னை கைவிட்ருவேன்னு நினைச்சி நீ எப்பவும் பயப்படாத இதழி. உன்கிட்டருந்து வாங்கின பணத்தை முழுக்க உன் பேர்ல டெபாசிட் பண்ணிட்டு உனக்கொரு நல்ல மாப்பிளையா பாத்து நானே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.." படபடவென மொழிந்தவனின் முகத்தில் இப்போது ஆவேசமாக காரி உமிழ்ந்திருந்தாள் யமுனா.
"யாருக்கு டா வேணும் அந்த பணம் தூஊ.. ராஸ்கல்.." மீண்டும் பாக்கவாட்டில் துப்பி சீற்றம் பொங்க எழுந்து நின்றவளை முறைத்துக் கொண்டே எச்சிலை வழித்து விட்டபடி தானும் எழுந்து நின்றான்.
"நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் மொத்தமும் நன்றிகெட்ட பிச்சைக்கார கும்பலுக்கு தூக்கிப் போட்டதா நினைச்சி போயிட்டே இருப்பேன். அப்படி பிச்சை போட்ட பணத்தை வாங்கிதா நான் அடுத்த வேளை சோறு திங்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. அதை விட நூறு பங்கு சுயமா சம்பாதிச்சி என்னால வாழ்ந்து காட்ட முடியும். வாழ்ந்து காட்டுவேன்"
"நீயே இப்படி சுயநலம் புடிச்ச கேடுகெட்டவனா இருக்கும் போது நீ பாக்க போற மாப்பிளை மட்டும் உத்தமபுத்திரனாவா இருப்பான். இனிமே என் வாழ்க்கைய நான் பாத்துக்குறேன் உங்க அக்கறைக்கு மிக்க நன்றி mr. திலீப்..." என்று கண்களில் தீர்க்கம் கொண்டு இருகைகளை ஓசை ஒலிக்க தலைக்கு கும்பிட்டுப் போட்ட யமுனாவை வெறிக்க வெறிக்க பார்த்தவன் மனதிலும் கலக்கம் இல்லாமல் இல்லை.
இதற்கு மேலும் அவனிடம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என்ற விரக்தியான எண்ணத்துடன் மனதில் இருந்த திலீப்க்கான காதலை உடனடியாக தூக்கி எறிய முடியாத பேதையின் உள்ளம் கலங்கி, சாலையில் நடந்துக் கொண்டிருக்கும் போது அசுர வேகத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனம் லேசாக இடித்து விட்டு சென்றதில், கை கால் சிராய்ப்போடு அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மீண்டும் மயங்கியவளை அவள் பின்னாலே வந்த திலீப் பதறி மருத்துவமனை அழைத்து சென்ற இடத்தில் பெரும் அதிர்ச்சி.
"என்ன டாக்டர் சொல்றீங்க இதழ் ப்ரெக்னன்ட்டா இருக்காளா?" தன் காதால் கேட்ட விடயத்தை நம்ப முடியாமல் மீண்டும் கேட்டான்.
"ஆமா mr. மூணு மாசம் முழுகாம இருக்காங்க. கடவுள் புண்ணியத்துல தாய்க்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகல. வயித்துல பிள்ளைய வச்சிக்கிட்டு இப்படியா அஜாக்கிரதையா இருக்குறது. இனிமே கொஞ்சம் சேஃபா இருக்க சொல்லுங்க" என்ற மருத்துவர் அவளுக்கான மருந்துகளை எழுதி அவன் கையில் கொடுக்க, பெருத்த ஏமாற்றம் அப்பட்டமாக பிரதிபலித்தன அவன் முகத்தில்.
மயக்கம் தெளிந்து கண் விழித்தவளின் முகத்தில், மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்து சீட்டை கசக்கி அதீத கோபத்தில் திலீப் விட்டெரிந்ததும், அவனையும் அந்த சீட்டயும் மாறி மாறி புரியாமல் பார்த்தவளை நெருங்கி கழுத்தைப் பிடித்து விட்டான் ஆத்திரம் தாளாமல்.
"ஏன் டி என் குடும்பத்தையும் என்னையும் எப்படியெல்லாம் கேவலமா பேசிட்டு வந்த ஆனா நீ மட்டும் ஒழுக்கமா டி. உன்னை முழுசா நம்பிவிட்டு போனதுக்கு என்னென்ன அசிங்கத்தை செஞ்சிட்டு வந்து திமிரா பேசுற நீ.." கொஞ்சமும் யமுனாவின் கர்ப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் துடித்து விட்டான் திலீப்.
"தி... திலீப் என்ன பண்ற விடு.. பைத்தியமா பிடிச்சி இருக்கு உனக்கு கைய எடு" மூச்சிக்கு திணறி அவன் கையை விலக்க போராடியவளை கேவலமான பார்வை பார்த்தான்.
"என்ன டி ஒன்னுமே தெரியாத பாப்பா மாறி ஆக்ட் பண்ற. ரெசார்ட்க்கு வேலைக்கு போறேன்னு நீ ஒத்த காலுல நிக்கும் போதே நான் யோசிச்சி இருக்கனும் டி. உன் இஷ்டத்துக்கும் இருன்னு உன்னை நம்பி விட்டதுக்கு தான் கண்டவன் கூடயும் உல்லாசமா இருந்துட்டு வயித்த ரொப்பிட்டு வந்து நிக்குற"
காதலனாக அவளுக்கு துரோகம் நினைத்து விட்டாலும் ஒரு தோழனாக அவள் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், உள்ளுக்குள் குமைந்து போக, யமுனாவின் முகமோ இருளடைந்து போனது.
"என்ன நான் கர்ப்பமாக இருக்கேனா?" தனக்கு தானே பிரம்மை பிடித்தவள் போல் கேட்டுக் கொண்டவளின் கரங்கள் இரண்டும் அவளின் வயிற்றை இறுக்கிக் கொள்ள, தேகம் மொத்தமும் அதீத பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தது.
"என்ன டி மேலும் மேலும் கண்ணக் கண்ண உருட்டி பாப்பா போல நடிக்கிற. நான் ஒரு சின்ன காதல் பார்வை பாத்தாலே ஏதோ சமூக குற்றம் செஞ்சது போல அப்படி பேசுவ, இப்ப என்னடான்னா எவங்கூடவோ ப**து எந்திரிச்சி வந்துருக்கியே வெக்கமா இல்ல" திலீப்பின் நாக்கைப் பிடுங்கும் வார்த்தையில் தன்னையே அருவருத்து அவமானத்தில் செத்து மடிந்தாள் யமுனா.
"இந்த செய்தி என் காதால கேக்குற வரைக்கும், ஐயோ நம்மளயே நம்பி வந்த ஒருத்திய ஏமாற்ற பாக்குறேனேன்னு குற்றவுணர்ச்சியில் ஒவ்வொரு முறையும் செத்துகிட்டு இருந்தேன். என் அம்மா அப்பாகிட்ட எப்படியாவது பேசி எனக்கு பாத்த பொண்ண வேண்டாம்னு சொல்லிட்டு உன்னை மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இப்ப சொல்றேன் கேட்டுக்கடி, எப்ப நீ எனக்கே துரோகம் செஞ்சி வயித்துல பிள்ளைய வாங்கிட்டியோ இனிமே உனக்கும் எனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்ல..."
வெறிப் பிடித்தவன் போல் கத்திட யமுனாவின் பக்கம் இருந்து பெரிதாக எந்த மறுப்பும் வரவில்லை. வாழ்க்கையே இருண்டு போன நிலையில் அவசரமாக எழுந்தவள் கதவை திறந்து கொண்டு வெளியேற முயல, "ஒரு நிமிஷம் நில்லு" என்றவனின் கடுமையில் திரும்பாமல் நின்றாள்.
"இத்தனை நாளும் லட்ச லட்சமா பணத்தை என் அக்கவுண்ட்க்கு கிரெடிட் பண்ணியே, அதெல்லாம் உண்மையாவே வேலை பாத்து சம்பாதிச்ச பணமா இல்ல..." அவன் அடுத்த வார்த்தை பேசுவதற்குள், "போதும் நிறுத்து திலீப்ப்.." யமுனாவின் ஆக்ரோஷமான சீற்றத்தில் சற்றே திடுக்கிட்டு நின்றான் அவன்.
"போதும்.. இதுவரைக்கும் நீ பேசினது பண்ணது எல்லாமே போதும். அதுதான் நமக்குள்ள எல்லாமே முடிஞ்சி போச்சின்னு சொல்லிட்டேல்ல அதோட உனக்கும் எனக்கும் நடுவுல எந்த ஒரு பேச்சிக்கும் இடமே இல்ல. ஒழுங்கா வந்த வழிய பாத்து கிளம்பி போயிட்டே இரு. அதை விட்டுட்டு தேவை இல்லாம என் பெண்மைய இழிவுபடுத்தி பேசின அசிங்கமா போய்டும் உனக்கு.." இரு புருவங்களிடையே ஆள்க்காட்டி விரலை ஆட்டி மொத்த கோபத்தையும் கண்களில் அக்னியாக கக்கியவளை பார்க்கவே பயமாக இருந்தாலும் வெளிகாட்டிக் கொள்ளாமல் திடமாக நின்றான் திலீப்.
"ஏய்.. சும்மா பத்தினி மாதிரி சீன் போடாத. உன்னோட முகத்திரை எல்லாம் கிழிஞ்சி வெட்டவெளியாகிடுச்சி. செய்றத எல்லாம் செஞ்சிட்டு பெரிய கண்ணகி மாதிரி கோபப்பட்டா நீ கெட்டுப் போகலனு ஆகிடுமா" நக்கலாக உரைத்த வார்த்தைகள் யாவும் கொடிய விஷம் தடவிய ஈட்டியாக நெஞ்சில் பாய்ந்தது.
ஆனாலும் மனதை தைரியப்படுத்திக் கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்த யமுனா, "ஆமா நான் கெட்டு போய்ட்டேன்தா அதுனால உனக்கு இப்ப என்ன பிரச்சனை வந்துச்சி. உனக்குதா பெரிய கோடிஸ்வரி காத்திருக்காளே அவளை போய் கவனமா பாத்துக்குற வேலைய மட்டும் பாரு. இனிமே தேவை இல்லாம என் விஷயத்துல தலையிடாதே" முகத்தில் அடித்ததை போல் கடுமையாக உரைத்து விட்டு மருத்துவரின் அறைக்கு சென்றாள்.
யமுனாவின் சவுக்கடி வார்த்தையில் முகம் கருத்த நிலையிலும் அங்கிருந்து போகாமல் இருந்த திலீப், அவளை அப்படியே விட்டு செல்ல மனம் வராமல் மருத்துவரிடம் யமுனா பேசுவதை கேட்கலானான்.
"என்னமா வந்ததுல இருந்து அமைதியாவே உக்காந்திருக்க, உன்னைதா எப்பவோ வீட்டுக்கு போக சொல்லிட்டேனே! வேற என்ன..." அவளின் அமைதி கண்டு மருத்துவரே கேள்வி எழுப்ப,
சிவந்த முகத்தை துப்பட்டாவால் துடைத்துக் கொண்டவள், "எனக்கு அபார்ஷன் பண்ணனும் டாக்டர்..." யமுனாவின் தீர்க்க முடிவில் மருத்துவர் மட்டுமில்லாமல் அதை கேட்ட திலீப்பும் அதிர்ந்து போனான்.
"என்னமா பேசுற நீ குழந்தைனா உங்கள மாதிரி பொண்ணுங்களுக்கு அவ்வளவு ஈஸியா போச்சா. எங்க உன் புருஷன் அவரை கூப்பிடு நான் அவர்கிட்ட பேசுகிறேன்" கோவம் கொண்டார் மருத்துவர்.
"டாக்டர் ப்ளீஸ் என் நிலைமைய புரிஞ்சிக்கோங்க, எனக்கு இந்த குழந்தை வேண்டா ப்ளீஸ் அபார்ட் பண்ணிடுங்க" கை கூப்பி கும்பிட்டு தேம்பி அழுதவளை பார்க்க அனுபவசாலி மருத்துவரின் மனதில் ஏதோ தவறாகவே பட்டது.
சற்றே நிதானம் அடைந்தவராக "வீட்டுக்கு தெரியாம பாய் பிரண்டோட தப்பு செஞ்சுட்டியா..?" என்றார் முறைப்பாக.
"இல்லை" என அழுகையோடு தலையாட்ட,
"வேற எப்படி இந்த குழந்தை"
"தெரியல டாக்டர். சத்தியமா எனக்கு இந்த குழந்தை எப்படி எனக்குள்ள உருவாச்சின்னு தெரியாது. நான் வேலை செஞ்ச இடத்துல என்ன யாரோ ரேப் பண்ணிட்டாங்க..." என குலுங்கி அழ திலீப் ஒரு நொடி அதிர்ந்தாலும் பின் நம்பாத பார்வை பார்த்தான்.
"என்னமா இந்த காலத்துக்கு புள்ளைங்க எல்லாம் இப்படி அசால்ட்டா இருக்கீங்க. நம்ம தான் எங்க இருந்தாலும் ஜாக்கிரதையா இருந்துக்கணும். எனக்கும் உன்னோட நிலைமை புரியாம இல்ல ஆனா எல்லாமே கை மீறி போன பிறகு என்னால ஒன்னும் பண்ண முடியாதுமா.
இப்ப குழந்தைக்கு நாலு மாசம் நடந்துட்டு இருக்கு இதுக்கு மேற்பட்டு அபார்ட் பண்ணா அது குழந்தைக்கு மட்டுமில்ல உன் உயிர்க்கும் ஆபத்து"
மருத்துவரும் கை விடப்பட்ட நிலையில் பைத்தியக்காரியை போல் சாலையில் கத்திக் கொண்டு ஓடியவளை தொடர்ந்து திலீப்பும் பயந்து போய் ஓடினான்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 8
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.