Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

தாயாக வந்த தாரகை..1

New member
Messages
1
Reaction score
1
Points
3
தாரகை-1

சுற்றிலும் பரவி இருந்த அமைதியின் சாயலும்...எத்தனை முறை சுத்தம் செய்தாலும் காற்றை கிழித்து கொண்டு படரும் ஒளி போல் பரவியிருந்த மெல்லிய மருந்தின் நெடியுமே அது மருத்துவமனை என உணர்த்தியது....

அந்த சூழலின் அமைதிக்கு சற்றும் அடங்காமல் அந்த பாவையின் மனம் ஆழிப்பேரலையாய் தவிக்க‌..கண்கள் மட்டும் வற்றாத ஜீவநதியாக கண்ணீரை சுரந்தது ...இழக்க கூடாத வயதில் எல்லாமே இழந்தாயிற்று இப்போது வாழ்வின் பற்றுக்கோளாக எஞ்சி இருப்பது இந்த ஒரு ஜீவன் தான் என்று இருக்கையில் அதுவும் ஊசல் ஆடியதில் அந்த நீல் இருக்கையில் உயிர் வெறுத்து அமர்ந்து இருந்தாள் அகில்நிலா....


இறுக்க பின்னிய ஜடையில் அடங்காத கற்றை கூந்தல் அவள் முகத்தை மறைக்க சிறு விசும்பளோடு கையை தலையில் உன்றி அழுது கரைந்தவளின் முன் வந்த ஒர் உருவம் பாசமாக அவள் தலையை வருட...அதில் கண்ணீர் வழிய ஏறிட்டு பார்த்தவள் பட்டென எழுந்து...அங்கிள் பாட்டி எப்படி இருக்காங்க என ஒருவித எதிர்ப்பார்போடு கண்களை தன்னக்கு எதிரே இருந்த அறையை நோக்கி பார்வையை சூழலவிட்டு கேட்க...


அந்த குழந்தை தனமான முகத்தில் இழையோடும் சோகத்தில் அவர் மனமும் சற்று அடிவங்கியது போலும்..சற்று தாழ்த்திய குரலில் ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லுறாங்க மா...பண்ணாலுமே நூறு சதவீதம் உறுதியா சொல்ல முடியாதாம் இருந்தாலும் கொஞ்சம் சாத்தியக்கூறு இருக்க பட்சத்துல பண்ணலாம்னு சொன்னாங்க என கூற...

அந்த சிறு பெண்ணும் எவ்வளவு தான் தாங்குவாள் குருவி தலையில் பனங்காயை சுமத்தியது போல் நெஞ்சில் பாரம் கூடி போக உடைப்பேடுக்க காத்திருக்கும் வெள்ளமென பொங்கும் அழுகை மொத்ததையும் வலியோடு தொண்டைக்குள் விழுங்கி கொண்டவள் கரகரத்த குரலில் எவ்வளவு செலவு ஆகும் என கேட்க...

அவரோ மெதுவான குரலில் இருபது லட்சம் என அலுங்காமல் மற்றோர் இடியை சத்தமே இல்லாமல் அவள் தலையில் இறக்கிவிட்டு இதோ வரேன் என கூறி அந்த இடத்தை விட்டு அகன்றார்...
கால்கள் வலுவிழக்க பிடிமானம் அற்று பொத்ததென நாற்காலியில் வெறித்த பார்வையுடன் அமர்ந்தவளுக்கு திக்கு தெரியாத காட்டில் விட்ட நிலை...வட்டம் போல் மீண்டும் மீண்டும் ஒரே புள்ளியில் வந்து நிற்கும் வாழ்வின் சுழற்ச்சியில் தன் மேலே கழிவிரக்கம் கொண்டாள் பாவையவள்...எல்லொருக்கும் இரக்கத்தை அள்ளி தெளிக்கும் கடவுளுக்கு அவள் மேல் மட்டும் குன்றி போனது ஏனோ தெரியவில்லை...


வாழ்க்கை நன்றாகத்தான் சென்றது தாய் தந்தை இருந்த வரை...பெற்றோருக்கு செல்ல சீமாட்டியாக பாட்டி தாத்தாவிற்கு செல்ல பேத்தியாக இருந்தவளின் குதூகலம் ஆசை சந்தோசம் என மொத்தமும் மண்ணோடு சரிந்து புதைந்து போனது அந்த கோர விபத்தில்...


சுமதி மற்றும் ராகவேந்திரன் தம்பதியரின் ஒற்றை பெண் பிள்ளை தான் அகில் நிலா...பெரிதாக குடும்ப பின்னனி இல்லை என்றாலும் தன் அயராது உழைப்பினால் தன் குடும்பத்தை லோயர் மிடில் கிளாஸில் இருந்து ஹையர் மிடில் கிளாஸாக தரம் உயர்த்தி நல்ல மகனாக தாய் தந்தைக்கும் நல்ல கனவனாக மனைவிக்கும்.. நல்ல தகப்பனாக மகளுக்கு என மனநிறைவோடு சந்தோசமாக இருந்தவருக்கு அந்த நிம்மதியும் சந்தோஷமும் வேகுநாட்கள் நிழைக்கமல் போனது தான் பரிதாபம்...

பிள்ளையை கோழி குஞ்சு போல் தன் மார்போடு அனைத்து இருந்தவர்..அம்மு கொஞ்சமா சாப்பிடு டா பீளிஸ் அப்பாக்கு நேரம் ஆச்சு பாரு என மகளிடம் சொஞ்சி கெஞ்சி உணவு புகட்டுவதை அவர் மனையாள் முகம்கொள்ளா சிரிப்புடன் பார்க்க...

அவரை ஒரவிழியாள் ஏறிட்டவர் என்னடி அப்படி பாக்குற எங்கள கண்ணுவைக்கிறியா என கண்சிமிட்டி மனைவியை வம்பிழுக்க..

அவரோ லேசாக இதழ் சுழித்து ம்ஹூம் ரொம்ப தான் என சிலுப்பி கொண்ட போதும் அந்த நிகழ்வை மொத்தமும் தன் மனப்பெட்டகத்தில் சேமித்தவர் இந்த நிகழ்வு இனிமேல் கிடைக்காது என முன்பே அறிந்திருந்தாரோ என்னவோ விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்பதையும் மறந்து இருவரையும் ரசித்தார்...


அப்பா போதும் என சினுங்கி உணவு வாங்க மறுத்த தன் மகளிடம்..சரிடா போதும் என தன் வேஷ்டி முனையில் வாயை துடைத்து தன் நெஞ்சோடு அனைத்து முதுகை நீவி தட்டி கொடுத்து தூங்க வைத்தார்...


அப்போது அங்க வந்தார்கள் அமிர்தம்மாள் மற்றும் ஈஸ்வரன் தம்பதிகள்...ராகவா நீங்க இன்னும் கிளப்பிளயா என கேட்க..இல்லமா பாப்பாக்கு கொஞ்சம் காய்ச்சல் மாதிரி இருக்கு அதான் என மகளை பிரிய மனம் இல்லாமல் கூற...

இல்லபா இந்த கல்யாணத்துக்கு முக்கியமா போயே ஆகணும் என கூறியவர் சரி நீங்க தம்பதி சகிதமா அப்பாவ அளச்சிட்டு போய்ட்டு வாங்க நா பாப்பாவ பாத்துகுறேன் என கூற...சற்று தயங்கியவர் சரிமா என மனமே இல்லாமல் பிள்ளைக்கு ஆயிரம் முத்தமிட்டு அன்னை கையில் கொடுக்க..சுமதியும் தன் பங்கிற்கு குழந்தையை முத்தாடி கொஞ்சி விட்டு சென்றார்...


முன்னிறைக்கையில் இருவரும் அமர்ந்து இருக்க பின்னிருக்கையில் ஈஸ்வரன் தலை சாய்த்து அமர்ந்து கொண்டார்....
மெல்லிய இனிமை பரவிய பயணத்தை சிதைக்கவே வந்தது அந்த லாரி...முழு போதையில் ஓட்டி இருப்பான் போலும் நிலையில்லாமல் அசைந்து வர...எவ்வளவு லாவகமாக காரை ஓட்டியும் முடியாமல் புளியமரத்தில் பட் என பெரும் சத்ததோடு மொதி விழ போன சமயம் லாரியுமே அதே மரத்தில் மொதி காரின் மேலேயே விழ கார் நசுங்கி காருடன் அம்முவரின் பல ஆசைகளும் சந்தோசமும் சேர்த்தே வெடித்த சிதறியது....


இந்த விஷியம் அமிர்தம்மாளுக்கு தெரிவிக்கபட நொருங்கி போனார்...போக தயங்கிய மகனை வம்படியாக அனுப்பி தானே கொன்று விட்டேன் என மனதளவில் மரித்தவர்...பேத்திக்காக ஓர் அளவிற்கு மனதை திடப்படுத்தி கொண்டு செய்யவேண்டிய காரியங்களை தனி பெண்ணாக நின்று செய்தார்....


இதற்கிடையில் குழந்தை வேறு தாயின் உடல் சூடும் தந்தையின் அரவணைப்பு இன்றி ஏங்கி போய் அதுவும் நொடிந்து விழ...மிகவும் நொந்து போனார்...இதுவரை தந்தை கணவர் மகன் என சார்ந்து வாழ்ந்தே பழகியவருக்கு திடிரென தனியாக நின்று அனைத்தையும் சமாளிப்பது சற்று சவாலாக இருந்த போதும் மகனின் நண்பன் ராமகிருஷ்ணனின் உதவியோடு தன்னை தேற்றி எல்லாவற்றையும் சமாளித்து கொண்டார்...


கையிருப்பு இன்ஷுரன்ஸ் என எல்லாம் பிள்ளையை காப்பாற்றுவதற்கும் தன் உடல் நிலையை சீர் செய்யவுமே கறைய...சற்று வசதியான நிலை மாறி ஏழ்மையில் தள்ளப்பட்டனர்...
ஒருவழியாக தன்னாள் முடிந்த வேலைகள் அனைத்தையும் செய்து அவளை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்தவர்..பின் அவளே ஸ்காலர்ஷிப்பின் மூலம் படித்து... அதன்பின் அவரை எங்கும்‌ வேலைக்கு செல்ல விடாது..தன் தகுதிக்கு ஏற்ற போதுமான சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தாள்...


எல்லாம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது என்று சற்று பெருமூச்சு விட்ட நேரம் மீண்டும் தலையில் இறங்கிய இடியில் உருகுலைந்து போனால்...
அன்று எப்போதும் போல் நிதானமாக வேலை செய்து கொண்டு இருந்தவர் பொத்தென சத்தத்துடன் கீழே சரிய...சத்தம் கேட்டு வந்தவள் கண்டது பேச்சு மூச்சு இல்லாமல் சரிந்து இருக்கும் பாட்டியை தான்..பதட்டத்தில் எதுவும் விளங்கவில்லை யாரை அழைப்பது என்ன செய்வது என...சற்று தன்னை சமன் செய்தவள் ராமகிருஷ்ணனுக்கு அழைத்து படபடவென விஷயத்தை கூற...அவரும் விஷயத்தின் விரியம் உணர்ந்து உடனடியாக கிளம்பி வந்து அகிலுக்கும் ஆறுதல் கூறி சற்று தேற்றி பாட்டியை அழைத்து கொண்டு இருவரும் மருத்துவமனை சென்றனர்...
உள்ளே அவரை அனுமதித்து விட்டு இருவரும் பரித்தவிப்போடு காத்திருக்க..அப்போது அங்கே வந்த மருத்துவர் இவுங்க அட்டன்டர் யாரு என வினவ..இருவரும் நாங்க தான் என படபடப்பாக அவர் முன் நிற்க்க..சற்று குரலை செருமியவர்...அவுங்களுக்கு ஹார்ட் அட்டாக் இதுக்கு முன்னாடியே டூ டைம்ஸ் அவுங்களுக்கு அட்டாக் வந்ததுனால இப்போ ரொம்ப காம்பலிகேட்டா தான் இருக்கு என அவர் கூற கூற...


இங்கே ஒருவளுக்கு தலை கிறுகிறுத்து மூச்சு முட்டி கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து கால்கள் தள்ளாட மயங்கி இருந்தாள்...


அவளை எழுப்பி அங்குள்ள இருக்கையில் அமரவைத்தவர்...மருத்துவரிடம் வந்து மற்ற அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டு இருவருக்கும் உதவியாக நின்றார்...
எப்படி திடிரென இவ்வளவு பணத்தை பிரட்டுவது...வேலை செய்யும் இடத்திலும் கேட்க முடியாத நிலை....கடனுக்கு வாங்களாம் என்றால் எதை சான்றாக வைத்து பணம் கேட்பது என அவள் மனதிற்குள் மருகி தவிக்க..அந்த பெரிய மனிதருக்கும் அதே மன நிலைதான்...தன்னிடம் இருந்தாள் தானே கடனாகவோ கொடையாகவோ வழங்க முடியும் இப்போது தான் அவர் பெண்ணிற்கு திருமணம் முடித்த நிலையில் அவராலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை...

அந்த நாள் எந்த ஒரு முன்னேற்றமும் இன்றி கழிய...

மறுநாள் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி சிலபல அதிர்ச்சியோடு விடிந்தது...
கதிரையில் பின்பக்கமாக தலை சாய்த்து வெறித்த பார்வையுடன் அமர்ந்து இருந்தவளின் முன் வந்த ராமகிருஷ்ணனின் மனைவி கொஞ்சமா சாப்பிடு டா பாட்டி நல்லபடியா வருவாங்க என ஆறுதல் கூறி அவளை சாப்பிட வைக்க முயல..இல்ல ஆன்ட்டி வேண்டாம் என மறுக்க...நேத்துல இருந்த இப்பிடியே இருக்க காபியாவது குடி என கரிசனமாக பேசி கொண்டு இருக்க..அப்போது அங்கு வந்த ராமகிருஷ்ணன்..பாப்பா எல்லார் கிட்டயும் பணத்துக்கு சொல்லி வச்சு இருந்தேன்...

அதுல ஒருத்தவுங்க ஒருத்தர் பணம் தருவாறுனு சொல்லுறாங்க பேசி பாக்கலாமா என கேட்க...உடனே பேசலாம் அங்கிள் எனக்கு எப்பிடியாவது என் பாட்டி வேணும் என கூற...

சரி சாப்பிட்டு பேசிட்டு வா அனு போன் பண்ணா என்னனு கேட்டுட்டு வரேன் என கூறி அவர் மகளிடம் பேச சென்றுவிட்டார்...
கடகடவென சாப்பிட்டு விட்டு ராமகிருஷ்ணனின் மனைவியிடம் பாட்டியை பாத்து கொள்ள கூறிவிட்டு ஏதோ ஓர் புது நம்பிக்கையில் பணம் கொடுப்பவரிடம் சென்றாள்...ஆனால் அவள் அறியவில்லை பணம் கொடுப்பவர் பணத்துக்கு ஈடாக வேறொன்றை கேட்டு அவள் வாழ்க்கையையே பிரட்டி போடுவார் என்று...விதி அதன் விளயாட்டை சிறப்பாக தொடங்கி இந்த பாவையை வைத்து விளையாட காத்திருந்தது...

தொடரும்...
 
Last edited:
Top