Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
New member
Messages
2
Reaction score
0
Points
1
அத்தியாயம் 1


ஐ மிஸ் யூ தேவ் மாமா என்ற குரலுக்கு உறக்கத்தில் இருந்து எழுந்தான் ருத்ர தேவன். அவன் உதடுகள் ஐ மிஸ் யூ அம்மு என மூணுமூணுத்தது. நேரம் காலை 5.30 என கடிகாரம் காட்டியது. நேரத்தை பார்த்த ருத்ரன் நேரமாவதை உணர்ந்து அலுவலகம் செல்ல தயார் ஆனான்.

( நம்ப ஹீரோ ருத்ரதேவன் பத்தி பார்க்கலாம். திராவிட நிறம், அடர்ந்த கேசம், முறுக்கு மீசை, பார்க்க விக்ரம் பிரபு போல இருக்கும் நம்ப ருத்ரன் கடந்த ஒரு வருடமாக சென்னையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக தங்கி உள்ளான். அவன் பெற்றோர் பற்றி கதை நகர்வில்லை காணலாம்.

ருத்ரன் ஆர். எம். குரூப் கம்பெனியில் காரியத்தரிசியாக வேலை செய்கிறான். இன்னும் அவன் அந்த கம்பெனி சி இ ஓ ரதி மலர்யை சந்தித்தது இல்லை. இன்று தான் முதல் முறையாக நேரில் சந்திக்க போகிறான். )

அலுவலகம் செல்லும் முன் அவன் நண்பன் தினேஷ்யை காண ஆ ர். எம். மருத்துவமனை சென்றான். அங்கே தினேஷ் அறையில் இருந்த முகமூடி அணிந்த அந்த பெண்ணை பார்த்து ஒரு நிமிடம் உறைந்து நின்றான். பின் இருக்கும் இடம் கருதி அவன் அமைதியாகி தினேஷ்யின் உடல் நிலை பற்றி அறிந்து அலுவலகம் நோக்கி சென்றான்.

ஆர். எம். குரூப்ஸ். என இருந்த அலுவலகத்தில் சென்று அவனுடைய அறைக்கு சென்றான். அந்த அமைதியான மீட்டிங் அறையில் புயலேன உள்ளே நுழைந்தாள் அவள் ரதி மலர் 🩵 பார்க்க அந்த ரதி போல இருக்கும் அவள் முகத்தில் சிரிப்பே இல்லை. பாறை போல இறுகி இருந்தது. அதில் உள்ள உணர்வுகளை யாராலும் உணர முடியாது. இரண்டு வருடம் கழித்து இன்று தான் அந்த அலுவலகத்தினுள் நுழைந்தாள் அவள்.

அவள் பின் தொடர்ந்து தேவராகவன் கையில் இரண்டு மாதமே ஆன குழந்தை ருத்ர வீரோடு ( பப்பு) நுழைந்தான். ரதியை பார்த்த ருத்ரனின் விழிகளிள் ஒரு வித வலி மற்றும் அதிர்ச்சி.

இவர்களின் அதிர்ச்சிக்காண காரணம் என்ன?
யார் இவர்கள்? யார் அந்த முகமூடி அணிந்த பெண்? என பல கேள்விகளுக்கு விடை தெரிய தொடர்ந்து வாசியுங்கள் தேவனின் ரதி அவள் 🩵.
 
Top