- Messages
- 204
- Reaction score
- 203
- Points
- 63
அத்தியாயம் - 2
கண்ணுக்கெட்டிய தூரம் வரை உறைய வைக்கும் வெண்பனிகளே கடுமையாக படர்ந்திருக்க, தனித்திருந்த அந்த இருட்டு அறையின் உள்ளிருந்த ஒவ்வொரு பொருளும் ஐஸ்கட்டி போல ஜில்லென்ற புகை வீசிட, அத்தகைய குளிரில் மேனி சுருண்டு கிடந்தாள் இளம்பெண் ஒருத்தி.
கூந்தல் திரைமறைத்த முகத்தில் சேறு போன்ற கசடு படிந்து, கண்ணீரின் தடயங்கள் காய்ந்த நிலையில், சல்வாரின் பின் பக்கம் எதிலோ மாட்டி கிழிந்து பளிங்கு முதுகுபுறம் பளிச்சிட்டு காட்டியபோதும், சிறு சிறு கீறலினால் உண்டான காயங்களில் இருந்து வெளிவந்த செந்நீர் துளிகள், குளிரின் தாக்கத்தில் உறைந்து காணப்பட்டது.
சோர்வான மயக்கத்தில் எத்தனை நேரம் கிடந்தாளோ! கடுங்குளிர் உயிரை உறையச் செய்ய, விறைத்து போன இமை ரப்பைகள் வலிக்க, கடினப்பட்டு விழி திறந்து பார்த்த பாவையோ, அவ்விருட்டறையினை கண்டதும் இதய படபடப்பில் திடுக்கிட்டு போனாள்.
"ஹே திகான் காய் அஹே..?" என்ன இடம் இது? என புரியாமல் சுற்றும் முற்றும் விழித்து பார்த்தவளின் கரங்கள் சங்கிலியோடு பிணைக்கப்பட்டிருக்க,
"அரே.. யார் என்ன இங்க தூக்கிட்டு வந்து கட்டி வச்சது" மராத்திப் பெண் மனதில் உண்டான நடுக்கத்துடன், கையை உருவமுயன்ற போது, திடீரென்று மெதுமெதுவாய் க்ரீச்சிடும் சத்தத்தோடு கதவு திறக்கவும், வெடுக்கென அப்பக்கம் பார்த்தாள் அவள்.
பனித்துளிகள் காற்றோடு கலந்து கதவு வழியே குப்பென புகுந்திட, குளிரின் நடுவே திடகாத்திரமான ஒரு உருவம் நிழலாக நிற்பதை கண்டு பீதியடைந்த பெண்ணோ, சில்லிட்ட சுவற்றில் தன் காயமான முதுகை ஒட்டி ஒடுங்கினாள்.
டப்.. என தட்டிய சொடுக்கியில் அதுவரை இருட்டிக் கிடந்த அறை இப்போது பளிச்சிட செய்யவும் இமைகள் படபடத்த அரிவை, நிசப்தம் மறைந்த அறைதனில் அழுத்தமாய் பதிக்கும் காலடி சத்தம் கேட்டு, நிழலாக கண்ட பின்பத்தை இப்போது தெளிவாக நோக்கினாள்.
"யார் இவன்? எதற்கு தன்னை கடத்தினான்" ஒன்றும் புரியவில்லை.
அவன் முகத்தில் பனி போன்ற குளிர்ந்த அமைதி தெரிந்தாலும், கண்களில் நெருப்பாய் தகிக்கும் சூரியனின் சீற்றத்தில் உருகுலைந்து போனாள் பிணைப்பெண்.
நாசியில் இருந்து வெளியேற்றும் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் புகைமூட்டம் போலக் குளிரில் கரைந்திட, "தூ கோனா அஹேஸ்?" தொண்டை வறண்டு மராத்தியில் திக்கியவளை ஒற்றை புருவ உயர்வோடு பார்த்தான் மன்மதன். சுந்தரத் தெலுங்கன், முன்னால் போர் வீரன்.
"நேனு எவரோ அது உனக்கு தேவை இல்ல, கேக்குறதுக்கு மட்டும் பதில் செப்பு.. சொந்த ஊரை விட்டு வந்து, இங்க உனக்கு என்ன வேலை? உனக்கு கீழ இன்னும் எத்தனை படைகள் வேலை பாக்குது? எக்ஸாக்ட்டா இப்ப உன் இன்டென்ஷன் என்ன?
எல்லாத்தையும் ஒன்னு விடாம செப்பு.." திடமான குரல் கடுமையாக ஒலிக்க கூர்மையாக நோக்கியவன் விழிகள், அவளை தோட்டாவாக ஊடுருவியது.
"அரே தேவா.. து கோன் அஹேஸ்.. து போல்தோயாஸ் தே மாலா சம்ஜட் நஹி.. மீ கா இதே பக்கட்லோயாஸ்? க்ருபயா மாலா எக்டே சோட்.." பிசுரு தட்டாத மராத்தியில், 'யார் நீங்க.. நீங்க பேசுறது புரியல.. எதுக்காக என்ன இங்க கடத்தி வச்சி இருக்கீங்க.. ப்ளீஸ் என்ன விட்டுடுங்க..' என கண்ணீரோடு கெஞ்ச, இகழ்ச்சியாக பார்த்தான் அவளை.
"நுவ்வு மராத்தி அம்மாயி நாக்கு தெலுசு, அதுக்காக வேற பாஷை தெரியாதது போல நடிக்காத..
காஷ்மீர்ல உள்ள தமிழ் பிள்ளைங்ககிட்ட நீ நல்லா தமிழ் பேசி எழுத கத்துத் தந்ததை நானும் பார்த்தேன்.. நாக்கு ஓரளவுக்கு தமிழ் தெலுசு.. ஆனா மராத்தி தெளியாது, நீ தமிழ்ல செப்பு.." பகடியும் கடுமையும் கலந்து உரக்க ஒலித்த குரலில், தேக நடுக்கத்துடன் அவனை ஏறிட்டாள் அப்பெண்.
"த்.து கை மஹந்த் அஹேஸ் தே மாலா சம்ஜட் நஹியே" மீண்டும் நீ சொல்வது புரியவில்லை என்றே திணறலாக அவள் சொல்ல, வட்ட வட்ட புகையினை விட்டத்தை நோக்கிவிட்டபடி அவளை கூர்மையாக நோக்கினான் மதன்.
கடுமையான உடல்வாகும், இறுக்கமான முகத் தோற்றமும் கொண்ட மதனிடம் எப்போதுமே ஒருவித அமைதி தென்படும். அதுவே கையில் பொருளை எடுத்து விட்டால் போதும், அமைதியெல்லாம் காற்றாய்ப் பறந்து, கொடூர மனிதனாய் உருவெடுத்து குருதி காணாமல் விட மாட்டான்.
பயங்கரவாதிகளிடமும் ரவுடிகளிடமும் மட்டுமே தன்னுடைய கோர முகத்தை காட்டியவன், இந்த பெண்ணையும் கொன்று போடும் வெறியோடு இருக்க, அவள் உயிருக்கு பதிலாக தான் அந்த புகையிலை அதன் உயிரை விட்டுக் கொண்டு இருப்பது என தெரியாது, மிரண்டு மிரண்டு விழித்து தப்பிக்க வழி தேடுகிறாள் தவிப்பாக.
"நீ பேரு ஏமிட்டி.." பாதி புகைத்த வெண்சுருட்டையும் அவளையும் மாறி மாறி பார்த்து கேட்கவும், எங்கே சுட்டு விடுவானோ என்ற பயத்தில்,
"ம்.முக்தா சம்ரித்தி" என்றாள் படபடப்பாக.
"ஏதே முத்தமா.."
"நஹி, முக்தா" என்றாள் அவசரமாக மறுத்து.
"ஏதோ ஒன்னு, ஆமா முத்ததுத்க்கு மட்டும் மீனிங் தெலுசா.. இவ்வளவு அவசரமா பதில் வருது.." மீதமிருந்த புகையை இழுத்து விட்டு நக்கலாக கண்டவனை எச்சில் விழுங்க பார்த்தாள்.
"இந்த பாவமா பாத்து கண்ண உருட்டுற வேலையெல்லாம் வேணாம்.. எப்டி பாத்தாலும் உன்ன அப்பாவினு நம்ப முடியல.. என் 15 வருஷ சர்விஸ்ல உன்ன போல எத்தனை பேரை பாத்திருப்பேன், ஒழுங்கா உண்மைய செப்பு டி.." கையில் இருந்து புகைத்துண்டு கீழே விழுந்த கையோடு அவள் கழுத்தை பிடித்திருந்தான் மதன்.
உரமேறிய அவன் கரத்தின் அழுத்தத்தில் கண்கள் மேலேறி மூச்சித் திணறிய முக்தா,
"த்.து காய் போல்தோயாஸ் தே மாலா கஹி சம்ஜட் நஹி.. கிருபயா மாலா சோட்" 'நீ என்ன சொல்றேன்னு எனக்கு புரியல.. தயவு செய்து என்ன விட்டுடு' என பேச முடியாது தவிக்க, எப்போதும் பெண்ணை கண்டால் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளும் மதன், இவள் விடயத்தில் மிருகமாய் போனான்.
"என்ன வெறியேத்தி பார்த்த, இதே இடத்துல கொன்னு போடவும் தயங்க மாட்டேன்..
யார் டி நீ.. உனக்கும் அவனுங்களுக்கும் என்ன சம்மந்தம்.. உங்களோட அடுத்த பிளான் என்ன? ஒழுங்கா சொல்லு.." கடும்பார்வை கூறு போட, செவி ஜவ்வு அதிரக் கத்தியவனின் சினத்தை பார்த்தபடியே மயங்கி, கண் மூடியவளின் தலை தொங்கியது.
"ஷட்.." கடுப்பாக அவளை கீழே தள்ளிய மதன், மற்றொரு சுருட்டு துண்டை எடுத்து பற்ற வைத்து வேக வேகமாக புகையினை இழுத்தபடியே, அவ்வறையில் நடந்தவனின் அலைபேசி அலறியது.
திரையில் மின்னிய எண்ணை கண்டதும் சிகரெட்டை காலில் போட்டு மிதித்த மதன்,
"அண்ணய்யா.." என்றான் அத்தனை பணிவாக.
"ரெண்டு நாளா ஆளையே காணல, எங்க டா இருக்க.." அந்த பக்கம் கேட்ட கடுமையான குரலில், இத்தனை நேரமிருந்த சினமான மனிதன் எங்கே போனானோ!
"அண்ணய்யா அது.."
"ஏம் டா இழுவ.."
"அரைமணி நேரத்துல வர்றேன் அண்ணய்யா.." என்றவவனாக ருத்ரன் ஏன் அழைத்தான் என்று கூட கேட்காது அழைப்பை துண்டித்தவன் மனமோ, படபடப்பில் ஆழ்ந்தது.
எப்போதும் எந்த ஒரு நபரை தூக்கினாலும் ருத்ரனிடம் சொல்லாமல் இருக்கவே மாட்டான். தும்பினால் கூட இவனாகவே சென்று ருத்ரனிடம் சொன்னால் தான் நிம்மதி மூச்சே வெளிவரும்.
அப்படி இருக்க, இந்த பெண்ணை கடத்தி தூக்கி வந்து ஒருஇரவு அரைநாள் ஆகி விட்டது. இதுவரை சொல்லாமல் இருப்பது நெஞ்சை அடைக்கும் உணர்வோடு, மயங்கிக் கிடந்த முக்தாவை பார்த்தான் மதன்.
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண், பார்க்க என்னவோ இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ளும் ரதியாக தான் இருந்தாள். ஆனால் அவள் உள்ளமும் மூளையும் நாட்டிற்கு எதிராக செயல்படுவதை எப்படி எடுத்துக்கொள்வது?
இந்நேரம் மதன் இடத்தில் ருத்ரன் இருந்திருந்தால், எதை பற்றியும் யோசித்திருக்கவே மாட்டான், தூக்கியதும் முக்தா முக்தியடைந்து இருப்பாள். ஆனால் இவன்?
"ச்ச.. எப்டி கேட்டாலும் மசிய மாட்டேங்குறாளே.. என்னா நடிப்பு நடிக்கிறா.. பேசாம தயவுதாட்சணையே பாக்காம சுட்டு போட்டு, அண்ணய்யாகிட்ட சொல்லிடலாமா" வாய் விட்டே புலம்பிய மதன், அழுத்தமாக தலை கோதிக்கொண்டான்.
"முதல்ல அண்ணய்யாவ பாத்துட்டு வருவோம்.. முடிஞ்சா இவள பத்தி சொல்லிடனும், அதுவா கண்டு புடிச்சா அவ்வளவு தான்.." தீர்க்கமாக மனதில் நினைத்து, கையோடு வாங்கி வந்த உணவையும் தண்ணீர் போத்திலையும் அவளருகே வைத்தவனாக,
அங்கிருந்த தடித்த கம்பளியை எடுத்து அவள் மீது வெறுப்பாக தூக்கி வீசிய மதன், சுடுமூச்சறிந்து அங்கிருந்து சென்றான்.
இவளை தூக்கியதும் கொல்ல நினைத்து தான், மூன்று நாட்களாக முக்தாவை பின் தொடர்ந்து, அவள் நடவடிக்கைகளை கவனித்து வந்தது.
ஆனால் திடீரென மனம் மாற காரணம் என்ன? பெண்ணை பார்த்ததும் மனம் தடுமாறி விட்டதா இந்த ராணுவனுக்கு?
அதுதானே இல்லை. தான் உயிராக நேசிக்கும் ராணுன் என்கிற அதிகாரத்தை பறித்து தேசதுரோகி பட்டம் கொடுத்த அப்போதே, பெண்கள் பின்னால் மதிகெட்டு திரிந்திருப்பானே!
வயது முப்பத்தி ஏழாகிறது, கம்பீரமான ராணுவ உடை இழந்து, தன் அடையாளம் பரிப்போன போதும், இப்போது வரை தன் இலக்கு என்னவோ அதை நோக்கி மட்டுமே பின் தொடரும் மதன், சட்டத்தின் கண்ணை மறைத்தும் நாட்டிற்காக தன் கடமையை ஆற்ற எப்போதும் அஞ்சியதே இல்லை.
அப்படி இருக்க, இவள் ஒரு பயங்கரவாதக் கூட்டத்தின் துடுப்பு என அறிந்தும், உயிரோடு விட்டு வைக்க காரணம் பெரிதாக இருக்குமோ! என்னவோ!
** ** **
உணவு மேசையில் அமர்ந்து மதிய உணவிற்காக காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த குழலி, கதவு தட்டும் ஓசையில் ஓடி வந்து கதவை திறந்தாள். வேறு யாரு மதன் தானே வந்திருப்பது.
"உள்ள வாங்கோ.." மரியாதையாக அழைத்தவளை பாராதது போலவே,
"அண்ணய்யா.." என அழைத்தபடி குழலியை கடந்து மேலறைக்கு சென்றிட, உதட்டை சுளித்துக்கொண்டாள் சலிப்பாக.
"இன்னும் எத்தனை நாளைக்கு தான் எங்கிட்ட பேசாம ஒதுங்கி ஒதுங்கி போறேள்னு நானும் பாக்குறேன்.. என் ஆத்துக்காரரே எங்கிட்ட நல்லா பேச ஆரமிச்சிட்டார், இவாளுக்கு என்னவாம்.."
வெளியே கோவமாக நினைத்தாலும், உள்ளே பெரும் விரக்தி இதயத்தை சூழ்ந்து, ஏக்கங்கள் நிறைந்த வலிகள் கொல்லாமல் கொன்றது பெண்ணை.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 2
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.