Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
37
Reaction score
8
Points
8
அத்தியாயம் 30

அம்மா வந்துட்டாங்க என்ற சத்தத்திற்கு சூர்யாவோ ' எல்லாரும் வாங்க ' என கூறி கொண்டே வேகமாக கீழே இறங்க போக அங்கே நின்று இருந்தவளை கண்டு திரு திரு வென நால்வரும் முழித்து கொண்டு நின்றனர்.

அங்கே நின்று கொண்டு இருந்த ரதிமலர் அந்த நல்வரையும் பார்த்து கோபமாக " யாரை கேட்டு எல்லாம் மழையில விளையாட வந்திங்க " என்றாள்

தேவ் தவறு செய்த குழந்தை போல தலையயை குனிந்து கொள்ள வீரோ ' ரதிம்மா அது ' என்று சூர்யாவை பார்க்க சூர்யாவோ வேகமாக ரதியை இழுத்து கொண்டு மழையில் நனைய ஆரம்பித்தான். பிறகு அவனே "ரதிம்மா இப்ப நீங்களும் நினைச்சு போயிட்டீங்க அதனால எங்கள திட்ட கூடாது " என கூற

ரதியோ சிரித்து கொண்டே ' சரி மழையில நினைந்தது போதும் எல்லாரும் வீட்டுக்குள்ள போங்க ' என கூற வேகமாக அனைவரும் வீட்டிற்குள் சென்றனர். தேவ் ரதி அருகில் வர அவளோ முகத்தை திருப்பி கொண்டு கீழே சென்று விட்டாள்.

கீழே தேவ் பிள்ளைகளுக்கு உடை மாற்றி விட ரதியோ ஈர உடையை மாற்றி விட்டு அங்கே கையில் சூடான மிளகு மஞ்சள் கலந்த பாலை கொண்டு வந்தாள். ' வீர், சூர்யா, நிலா எல்லாரும் எடுத்து குடிங்க ' என மூவருக்கும் பாலை கொடுத்து அவர்கள் குடித்ததும் வாயை துடைத்து விட்டு கதைகள் கூறி உறங்க வைத்தாள்.

தேவ்வோ வெளியே சென்று விட்டான். மூவரும் உறங்கிய பின் வெளியே வந்த ரதி சோபாவில் கண்களை மூடி படுத்து விட சிறிது நேரத்தில் அவள் மேல் வந்து படுத்து கொண்டான் தேவ். அவளோ ' இப்ப எதுக்கு இங்க வந்த, அதான் நான் கூப்பிட்டா வர முடியாதுனு சொல்லிட்டாள போ போய் உன் பாப்பா கூடவே படுத்துக்க ' என்று நுனி மூக்கு சிவக்க கோபத்தில் கூறினாள்.

அவனோ அவள் சிவந்த மூக்கில் முத்தம் வைத்து ' ஹேய் அதான் சொன்னேன்ல பாப்பா தூங்கிட்டா இவனுங்க ரெண்டு பேரும் ஐஸ் கிரீம் வேணும்னு ஒரே பிடிவாதம் அதான் கூப்பிட வர முடியல சாரி, உன் தேவ் மாமா பாவம் இல்லையா ' என்றான் முகத்தை பாவமாக வைத்து கொண்டு

அவளோ ' அதெல்லாம் முடியாது முதல எழுந்திரு போ போய் உள்ளவே தனியா படு அப்பயாவது பொண்டாட்டிக்கு சேர்த்து ஐஸ் கிரீம் வாங்கி வைக்கணும்னு தோணுதா பார்ப்போம் ' என முகத்தை திருப்பி கொண்டாள்.


அவனோ ' ஏய் அம்மு உன்ன எப்படி டி மறப்பேன் அதான் உனக்கு மட்டும் மறுபடியும் போய் வாங்கிட்டு வந்தேன். பிரிட்ஜ் ல இருக்கு, இப்பயாவது எழுந்து வா ' என்று அவள் முகம் முழுதும் முத்தம் வைத்து அவளை சமாதானம் செய்ய

அவளோ ' எதோ இந்த வாட்டி போன போகட்டும்னு விடுறேன், மறுபடியும் இதே தொடர கூடாது, அப்பறம் ஐஸ் கிரீம் சாப்டு தான் மழையில விளையாடி கிட்டு இருந்தியா ' என கேட்டு முறைக்க

அவனோ ' அது நான் சாப்பிடவே இல்ல உன் பசங்க ரெண்டு பேரும் தான் கேட்டாங்க அதனால அவனுங்களுக்கு மட்டும் வாங்கி கொடுத்தேன் ' என்றான்

---

ரதி ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டு இருக்க தேவ் அவள் முழுங்கும் மூன் அவள் இதளோடு இதழ் சேர்த்து அவன் வாய்க்குள்ள மாற்றி கொண்டான். அவளோ ஒரு முறை இரு முறை என அமைதியாக இருந்தாள். ஆனால் மூன்றாவது முறை அவன் அருகில் வரும் போது கொத்தாக அவன் தலை முடியை பிடித்து கொண்டு ' டேய் உனக்கு வேணும்னா போய் சாப்பிட வேண்டியது தானே அதவிட்டுடு என் ஐஸ் கிரீம் மா வந்து சாப்புடுற ' என்றாள் அவன் செய்த குறும்பில் கன்னம் சிவக்க

அவனோ ' அத விட இது தான் ரொம்ப நல்லா இருக்கு அம்மு ' என்றான்

அவளோ ' கொஞ்சமாச்சும் பொறுப்பா நடந்துக்க, இப்படி குழந்தை மாதிரி பண்ணாத தேவ் ' என்றாள்

அவனோ ' அப்ப இவ்வளவு நேரம் நீ என்ன பண்ண ஒரு ஐஸ் கிரீம்கு என்ன வச்சு செய்யல ' என கேக்க

அவளோ ' பச்! நான் உன்கிட்ட சண்டை போட கூடாத '

நான் எப்ப அப்பிடி சொன்னேன் ஆனா குழந்தைங்க கூட சேர்ந்து சண்டைக்கு போகாத அப்பிடின்னு தான் சொன்னேன் - என்றான்

அவளோ ' அது என்னு தெரியல நீ எனக்கு தான் பிரஸ்ட் அப்பறம் தான் பசங்க எல்லாம் இது தப்பு தான் பட் உன்ன யாருக்கும் நான் பங்கு தர மாட்டேன் ' என்றாள்

அவனோ ' எனக்கும் நீ இப்படி ஓவர் போஸ்ஸஸ்இவ் வா இருக்குறது தான் பிடிக்குது பட் இருந்தாலும் குழந்தைங்க கூட வேணாம் ' என்றான்

சரி ஐ வில் ட்ரை, உன்கிட்ட ஒன்னு கேக்கணும் என அவன் மடி மீது நன்றாக அமர்ந்து கொண்டு ' உனக்கு உங்க அக்கா பேமிலியை பாக்க விருப்பம் இல்லையா இந்த அஞ்சு வருசத்துல ஒரு வாட்டி கூட உனக்கு அப்படி எதுவும் தோணலையா ' என கேக்க

அவனோ பெண் அவளின் இடையை கட்டி கொண்டு அவள் கழுத்தில் நாடியை வைத்து ' அதான் எனக்கும் சேர்த்து எல்லாம் பண்ண நீ இருக்கியே அப்பறம் எதுக்கு அவங்க நியாபகம் எனக்கு வரணும் சொல்லு அம்மு, அவங்க இருந்தும் நான் தனியா தானடி இருந்தேன் அதுக்கு பிறகு நீ எப்ப வந்தியோ உன்னால தான் இப்படி ஒரு அழகான குடும்பம் எனக்கு இருக்கு அதனால இனி எப்பவும் அவங்கள பத்தி பேசாத சரியா டி ' என்றான்

அவளோ ' சரி அப்பறம் ராகவ் எப்ப இந்தியா வரேன்னு சொன்னாங்க ' என்றாள்

அவனோ " ம்ம். உன் ப்ராஜெக்ட் பங்க்சன் அன்னக்கி ரெண்டு பெரும் வரங்கலாம் " என்றான்

----

நான்கு மாதம் கழித்து...

இன்றோடு ரதி புதிய ப்ராஜெக்ட் ஆரம்பித்து நான்கு மாதங்கள் ஆகி விட்டன. அன்று இருக்கு இரவு எட்டு மணி போல தான் சோர்வாக வீட்டின்னுள் நுழைந்தாள் ரதி. தேவ் வோ ' போய் குளிச்சிட்டு வா அம்மு சாப்பாடு எல்லாம் சூடா இருக்கு சப்புடலாம் ' என்றான்

அவளோ ' தேவ் பசங்க எங்க ' என்றாள்

அவனோ ' இவ்வளவு நேரம் ரதிம்மா எப்ப வருவாங்கனு கேட்டுட்டு ரெண்டு பெரும் இப்ப தான் தூங்குனாங்க ' என்றான்

அவளோ உள்ளே சென்று குளித்து விட்டு உறங்கும் குழந்தைகள் நெற்றியில் மென்மையாக முத்தம் வைத்தாள் வீரோ தாயின் தொடுகை உணர்ந்து துக்கத்திலும் ரதிம்மா என்றான்

ரதியோ பிள்ளைகள் தன்னை ஏங்கி தேடுகிறர்கள் என சோகமாக வெளியே சோபாவில் அமர்ந்து கொண்டாள். தேவ் அவள் அருகில் அமர்ந்து " என்னாச்சு அம்மு முகம் ரொம்ப சோர்ந்து போய் இருக்கு வேலை அதிகமா நான் வேணும்னா நாளையில இருந்து நீ வர வரைக்கும் அங்கேயே பசங்களோட வேலை பாக்கவா " என்றான்

அவளோ அவன் தோளில் சாய்ந்து கொண்டு ' நான் நல்ல அம்மாவ இருக்கேனா தேவ் எனக்கு என்னமோ பசங்க என்ன ரொம்ப மிஸ் பண்றங்களோன்னு தோணுது ' என்றாள் கண்ணில் நீரோடு

அவனோ ' அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சரியா அவங்க வளர்ந்ததும் புரிஞ்சிப்பாங்க நான் தான் கூடவே இருந்து பார்த்துக்குறேன்ல நீ உன் கோல் மட்டும் அடையுற வேலையை பாருடி வேணும்னா இனிமே வீக் எண்டு ல நாம நாலு பெரும் ஒன்னா டைம் ஸ்பென்ட் பண்ணலாம் சரியா ' என கேக்க

அவளோ ' ஆனா ' என்று இழுக்க

அவனோ ' இப்ப என்ன எனக்கு நல்ல பொண்டாட்டிய இருக்குறேனானு கேக்க போறியா, அடி வாங்க போராடி டி அம்மு நீ, நாங்க மூணு பெரும் அப்படியா சொன்னோம் எங்களுக்கு நீ ரதியா இருக்குறத விட பிசினஸ் ஒமென் ரதிமலர் ருத்ரதேவன இரு அது போதும் ' என சில பல அறிவுரைகளை கூறி அவள் மனதை மாற்றினான்.

அந்த இரவு தேவ் ரதி மற்றும் பிள்ளைகளை அணைத்து கொண்டு உறங்க அவர்களுக்கு இடையே இருந்த சிறு இடைவெளியும் முழுமையாக குறைந்தது. சின்ன சண்டைகளும், கொஞ்சல் மொழி சமாதானமும் அவர்களுக்கு இடையில் தினமும் நடக்கும் ஒன்றாய் மாறி போனது. இன்றும் அதே காதல் குறையாமல் வாழ்ந்து கொண்டு உள்ளனர்.


பெஸ்ட் பிஸ்ஸின்ஸ் ப்ராஜெக்ட் அவார்ட் வாங்கும் ரதி. அடுத்த பாகத்தில்...


தொடரும்....
 
Last edited:
Top