அத்தியாயம் 5
அனைவரும் சென்று ரதியை பார்த்து விட்டு வந்தனர். கடைசியாக அந்த ஐ சி யூ அறையில் தோளில் உறங்கும் வீரோடு உள்ளே நுழைந்தான் ருத்ர தேவன். அவன் கால்களோ நகர மறுத்தன. கடினப்பட்டு ரதியின் அருகில் சென்று அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவனின் வலது கையை ரதியின் கைக்குள் வைத்து கொண்டு அவள் காதில் எதோ கூறினான்.
அதை கேட்டதும் இத்தனை நேரம் அசைவின்றி இருந்த ரதியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பின் அவள் முகம் பார்த்து உனக்காக அவனும் நானும் வீரும் கத்துக்கிட்டு இருக்கோம் ரதி சீக்கிரம் எழுந்து வா என கூறி அவள் கண்ணீரை துடைத்து விட்டு அவள் பிறை நெற்றியில் அழுந்த முத்தம் வைத்து சென்றான். அப்போது அவள் உதடுகளோ தேவ் மாமா என அசைந்தது. அதை கேட்டவனின் கண்களிலோ கண்ணர் வழிய ஆரம்பித்தது. கண்களை துடைத்து கொண்டு வெளியே சென்றான்.
அங்கே இருந்த சோக மன நிலையில் யாரும் ருத்தரணை கண்டு கொள்ள வில்லை. யார் குரலுக்கும் அசையாத ரதி ருத்தரனின் குரலுக்கு கண்ணீர் சிந்தியது ஏன்? ருத்ரன் வந்து சென்ற பின் மருத்துவர்கள் ரதியை பரிசோதனை செய்தனர்.
அவள் ஆபாயகட்டத்தை தாண்டி விட்டதாகவும் இன்னும் இரண்டு மணி நேரங்களில் கண் விழித்து விடுவாள் என கூறி சென்றனர்.
அனைவரையும் காக்க வைத்த ரதி காலை ஐந்து மணி அளவில் விழி குடைகளை திறந்தாள்.
அவள் விழிகளோ வீரை தான் தேடியது. அவள் தேடலுக்கு சொந்தக்காரனோ ருத்தரனின் தோளில் அவன் உடல் தந்த கதகதப்பில் சுகமாக உறங்கி கொண்டு இருந்தான்.
அதன் பின் மருத்துவர் ரதியை பரிசோதனை செய்து விட்டு வயிற்றில் உள்ள காயம் மட்டும் ஆற மூன்று வாரம் ஆகும் எனவும் நாளை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என கூறி சென்றார். இரவு முழுவதும் ருத்தரனின் தோளில் தான் உறங்கி கொண்டு இருந்தான் ருத்ரவீர்.
காலையில் தான் வீரை ரதியிடம் கொடுத்து விட்டு அவரச வேலை இருப்பதாய் கூறி சென்ற ருத்ரன் இரவு தான் வீடு திரும்பினான். இதற்கு இடையில் ராகவன் அவன் ஆட்கள் மூலம் ரதியை கொலை செய்ய சொன்ன நபரை கண்டு பிடித்தான் அவன் தான் ஆர். ஆர். கான்ஸ்டருக்ஷன்ஸ் எம். டி. ரங்கராஜப்பிள்ளை. ஆனால் அதற்குள் அவனை யாரோ லாரி யில் மோதி கொலை செய்து உள்ளனர் என்ற தகவல் மட்டுமே அவனுக்கு கிடைத்தது. அவனே ரதியின் முக்கிய எதிரிகளில் ஒருவன்.
மறுநாள் காலை ரதி வீட்டின்னுள் நுழைம்போது தொலைக்காட்சியில் பிரபல கான்ஸ்டருக்ஷன் எம். டி. ரங்கராஜபிள்ளை லாரி விபத்தில் மரணம் என செய்தி வந்தது. அதனை கேட்ட ரதிக்கோ அவளின் தேவ் தான் நியாபகத்திற்கு வந்தான்.
அவனும் அப்படித்தான் அவளை சிறு எறும்பு கடித்தலும் அதை நசுக்கி கொன்று விடுவான்.
அவள் மீது துரும்பும் படாமல் பார்த்துக்கொள்ளவான். அப்படி பட்டவன் இப்பொது அவளை கொலை செய்ய முயற்சி செய்தவனை மட்டும் சும்மா விடுவானா என்ன?ஆனால் இந்த கொலையை தடயமே இல்லாமல் செய்தது ருத்ரதேவன் தான்.
அதன் பின் ஒரு வாரமும் மீனாட்சியின் கவனிப்பில் தான் ரதி இருந்தாள். ஒரு வாரம் கழித்து ருத்ரன், வீர், ராகவனோடு ரதி சென்னைக்கு சென்றாள். அங்கே வீட்டில் இருந்த படியே அனைத்தையும் ரதி மேற்பார்வை செய்து வந்தாள். முக்கியமான இடங்களில் மட்டும் கையெழுத்து வாங்க ருத்ரன் மாலை போல வந்து செல்வான்.
இப்படியே ஒரு மாதம் சென்றது...
அன்று ரதி அவளுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் தினேஷ் என்ற நபரின் திருமணத்திற்கு குழந்தையோடு சென்றாள். திருமணம் எளிமையாக கோவிலில் நடைபெற்றது. அங்கே ருத்தரனும் வந்து இருந்தான். அங்கே ரதியின் அலுவலகத்தில் வேலை. செய்யும் நபர்களும் வந்து இருந்தனர்.
ரதியை தன் மனைவி என கூறும் ருத்ரன். கோவிலில் நடந்தது என்ன? அடுத்த பாகத்தில்....