Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
37
Reaction score
8
Points
8
அத்தியாயம் 7


ரதி இன்று கல்லூரியில் ஒரு மாணவன் மீது தெரியாமல் மோதி விடுகிறாள். இவளோ இமைக்க மறந்து அவன் கண்களை பார்க்க அவனோ கவனமா போங்க பாப்பா என கூறி செல்கிறான். ரதியோ சென்ற அவனை பார்த்து கொண்டு இருக்கிறாள்.
அதன் பின் போட்டி நடக்கும் இடத்திற்கு செல்கிறாள் அங்கே அனைவருக்கும் அடையாள அட்டை பெயர் மற்றும் வகுப்பு போட்டு பேட்ஜ் போல தோளில் குத்த தருகிறார்கள். ரதியும் அதை அணிந்து கொள்கிறாள்.


அங்கே தான் அவள் மனதை கொள்ளைகொண்ட தேவனை கண்கிறாள். அவன் தோளில் RUDRADEVAN MBA I YEAR, என்ற பேட்ஜ் இருந்தது. அதன் பின் போட்டி முடிந்தவுடன் ருத்ரனை சந்தித்து அவனிடம் அறிமுகமாகி கொள்கிறாள்.


நாட்கள் அதன் போக்கில் செல்ல தினமும் அவள் தேவனை கான தவறாமல் வந்துவிடுவாள் ரதிமலர். அவர்கள் படிப்பு, உணவு, போன்ற சாதாரணமான விசயங்களை மட்டுமே பேசி கொள்வர். அவர்களின் பார்வையோ கண்களை தாண்டி வேறு எங்கும் சென்றது இல்லை.



அனைவரும் ருத்ரதேவனை ருத்ரன் என்று அழைத்தாள், ரதிக்கு மட்டும் அவன் தேவ். அவனுக்கோ இவள் அம்மு பாப்பா. அந்த கல்லூரியில் ஒரு மாதமும் ருத்ரன் பின்னால் தேவ், தேவ் மாமா என பட்டாம்பூச்சி போல சுற்றி கொண்டு இருந்தாள் அவன் அம்மு.

இன்று விழா கடைசியாய் பாட்டு போட்டி நடத்தப்பட்டது. அதில் ரதி கலந்து கொண்டு எனதுயிரியே என்ற பாடலை பாட ஆரம்பித்தாள்.

🎶எனதுயிரே எனதுயிரே
என்னக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்🎶

🎶நெடுசாலையில் படும் பாதம்
போல் சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே 🎶

என அவள் தேன்குரலால் பாடி முடிக்க அரங்கில் பலத்த கரெவொளி எழுந்தது.
ருத்ரனோ அவன் கை பேசியில் அதை சேமித்து கொண்டான்.


இன்றோடு நிகழ்ச்சி முடிவு பெற்றது.போட்டியில் ருத்ரன் இரண்டாம் பரிசு பெற்றான்.ருத்ரனும் ரதியிடம் பாடலுக்குகான பாரட்டை கூறிவிட்டு அவனவளிடம் பிரியா விடை கொடுத்து விட்டு அவன் சொந்த ஊரான மதுரை நோக்கி சென்றான். இவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியான நாட்கள் என்றால் இந்த ஒரு மாதம் தான் இருவரும் அவர்களின் கவலை மறந்து சந்தோசமாக ஒருவர் அறியவண்ணம் மற்றவர் பார்த்து கொண்டு இருந்தனர்.

இரண்டு வருடம் கழித்து.....


இன்றோடு நிலா இறந்து ஒரு வாரம் முடிந்து விட்டது. தேவராகவன் தான் நிலவிற்கான சடங்குகள் அனைத்தையும் செய்தான். ரதியும் அவள் பி. பி. ஏ. படிப்பை முடித்து விட்டு ஆர். எம். குரூப்ஸ். ஐ நிர்வாகம் செய்து கொண்டு இருந்தாள் இந்த நிலைமையில் தான் நிலாவும் இறந்துவிட அவள் தனித்து விடப்பட்டத்தை போல உணர்ந்தாள்.


அவள் மனமோ அவள் தேவ்வை தான் தேடியது. இந்த இரண்டு வருடங்களில் தினமும் தேவ்வை பற்றி ஸ்பை மூலம் அறிந்து கொள்வாள். அப்போது தோன்ற உணர்வு இப்பொது அவளுக்கு தோன்றுவது வித்தியாசமாக தான் அவள் உணர்ந்தாள். ரதி இப்படி தனியாய் அறையிலேயே அடைந்து சோகமாக இருப்பது ராகவனுக்கு பிடிக்காமல் மனமாற்றம் வேண்டும் என அவளை ஊட்டிக்கு அனுப்பி வைக்கிறான்.


மறுநாள் காலை ஊட்டி நோக்கி சென்றாள் ரதிமலர். அவள் அங்கே ஆர். எம். குரூப்ஸ்க்கு சொந்தமான எஸ்டேட்யில் உள்ள வேலை ஆட்கள் தங்கும் இடத்தில் ஒரு தனி வீட்டில் தங்கி கொண்டாள். அங்கே தான் மேனேஜராக ருத்ரன் வேலை செய்கிறான். அவனக்கு அவன் முதலாளி தான் ரதி என்பது தெரியாது ஆனால் ராகவனை தெரியும்.


இப்பொது ரதி அங்கே வேலை செய்யும் அக்கௌன்ட்ண்ட் ஆக வந்து உள்ளாள்.தினமும் காலை மாலை என இரு வேலையும் அவள் தேவனின் தரிசனத்தை பெறுவாள். ருத்ரனும் இரண்டு வருடம் கழித்து ரதியை பார்த்ததும் அவளிடம் உள்ள மாற்றத்தை தான் கண்டு அதிர்ச்சியானன். பால் போன்ற அவள் குழந்தை முகம் மாறி அழுது சிவந்து வீங்கிய கண்களோடு இருந்தாள். எப்போதும் தேவ் மாமா தேவ் மாமா என அவன் பின்னால் சுற்றுபவள் இப்பொது அவனிடம் இரண்டு மூன்று வார்த்தைக்கு மேல் பேசுவது இல்லை. எப்போதும் கவலை இல்லா பட்டாம்பூச்சி போல சுற்றி திரிந்தவள் இன்று சோகமே உருவமாய் கொண்டு உள்ளாள்.


அந்த கணம் முதல் அவளை பழைய படி மற்ற வேண்டும் என முடிவு செய்து கொண்டான். தினமும் அவளிடம் சென்று மதிய உணவு இடை வேளையில் பேசுவான். அவள் கொண்டு வரும் சப்பாத்தி அல்லது பிரட்- ஐ அவன் உண்டு விட்டு அவன் கொண்டு வந்த சாப்பாட்டை அவளுக்கு ஊட்டி விடுவான். மாலை வேளையில் அவளுடன் அவன் புல்லட் வண்டியில் ஒரு சின்ன டிரைவ் செல்வான் அல்லது மாலை உச்சிக்கு செல்வான்.



சில நேரம் அந்த எஸ்டேட்யில் வேலை செய்யும் கண்ணன், ரமேஷ், ராம், சுமதி, திவ்யா, போன்ற மற்றவர்களிடமும் பேசுவாள் ரதி. இதில் ராமிற்க்கும் ரதியை பார்த்தால் மட்டும் அடிக்கடி சண்டை வரும். அதை ருத்ரன் தான் சரி செய்து வைப்பான்.


இந்த ஒரு மாதமாக ரதிமலர் எதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டத்தை போல அவள் தேவ் சொல்வதை எல்லாம் செய்வாள். இப்பொது அவனின் முதல் வெற்றியாக உணவினை மாற்றி சமைத்து கொண்டு வர ஆரம்பித்தாள் பின் அழுத முகமும் மாறி இருந்தது. அவன் அருகில் இருந்தாள் போதும் என்ற அளவுக்கு அவளை ஒரு மாதத்தில் மாற்றி இருந்தான் அவள் தேவன்.


அந்த எஸ்டேட்யில் வேலை செய்யும் மற்றவர்களும் இவர்களை காதலர்கள் என்று கூறும் அளவிற்கு தேவ் ரதியிடம் அன்பாகவும் அக்கறையாகவும் நடந்து கொள்வான். ரதியை குழந்தை போலவே சிறு கல் கூட அவளை குத்தாமல் பாதுக்காத்து வந்தான் ருத்ரதேவன். அங்கு நடக்கும் அணைத்து விடயங்களையும் தினமும் ராகவனிடம் கூறி விடுவாள் ரதி.


அலுவலக அறையில் மயங்கி விழும் ரதி? நடந்தது என்ன?அடுத்த பாகத்தில்..... 🩷
 
Last edited:
Top