Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Member
Messages
37
Reaction score
8
Points
8
அத்தியாயம் 8


தேவ் ரதியை கொஞ்சம் கொஞ்சமாக பழைய ரதியாக மாற்றி கொண்டு வந்தான். அன்று ரதி காலை உணவை உண்ணாமல் வந்ததால் அவளுக்கு 11 மணி போலவே சோர்வாகவும் மயக்கமாகவும் இருந்தது. அதனால் கேன்டீன்யில் இருந்து ஒரு பழரசத்தை டெலிபோன் மூலம் அவள் அறைக்கு எடுத்து வர ஆர்டர் செய்தாள்.

அவள் அறைக்கு பழரசத்தை ராம் தான் கொண்டு வந்து கொடுத்தான். அதை அவளும் வாங்கி குடித்துவிட்டு கொஞ்ச நேரத்தில் மயங்கி விட்டாள். அவளை தவறான கண்ணோட்டத்துடன் நெருங்கினான் ராம். அவன் கண்கள் மூலம் அவள் உடல் வடிவை ஆராந்தான்.
ரதியின் அறை தனியாய் இருப்பதால் யாருக்கும் அங்கு நடப்பது தெரியவில்லை.


அவன் ரதி அருகில் நெருங்கி அவள் ஷாளை விலக்க முயற்சிக்க அங்கே புயலேன வந்த தேவ் அவன் முதுகின் மேல் ஓங்கி மீதிதான். அந்த மெதியில் அவன் சுருண்டு கீழே விழுந்தான். அப்போதும் கோபம் குறையாமல் தன் அம்முவின் மேல் கை வைக்க பார்த்த ராம்யை அடித்து துவைத்து எடுத்து விட்டான்.
அவனும் விட்டால் போதும் என தேவ் மற்றும் ரதியின் மீது வன்மதோடு ஒரு பார்வையை செலுத்தி வெளியே சென்று விட்டான்.

தேவ் ரதியின் முகத்தில் தண்ணீரை தெளித்து அவளை மயக்கத்திலிருந்து எழுப்பினான். ரதியும் தேவை பார்த்து என்னாச்சு தேவ் என்று கேட்க அவனோ கோபமாக நடந்த சம்பவங்களை கூறினான். அவளும் சாரி தேவ் நான் சோர்வா இருக்குனு ஜூஸ் ஆர்டர் பண்ணேன். அப்போதான் ராம் கொண்டு வந்தான். நானும் நம்பி குடிச்சேன் ஆனா இப்படி நடக்கும்னு நான் நினைக்கல.. என அவள் கூறி முடிக்க கோபமாக அவள் கன்னத்தில் விட்டான் ஒரு அறை அவளோ பாவமாய் கன்னத்தில் கை வைத்து அவனை பார்க்க அவனோ கோபம் குறையாது ரதியை பார்த்தான்.

தேவ்வோ ரதியை பார்த்து எத்தனை தடவை உன்கிட்ட சொல்லி இருக்கேன் காலைல சாப்டாம வர கூடாதுனு சொல்லு அம்மு என அவன் கோபமாக கேட்க

அவளோ அவனை பாவமாக பார்த்து அது காலைல ரொம்ப வயிறு வலி அதான் சமைக்கல அப்படியே கிளம்பி இங்க வந்துட்டேன் சாரி

அவனோ அவளை பார்த்து என் நான் இல்ல என்கிட்ட சொன்ன நான் சாப்பாடு கொண்டு வர போறேன். என் நான் ஒருத்தன் இருக்கறது உனக்கு தெரியலையா இல்ல இவன் கிட்ட பேச வேணாம் பழக வேணாம்னு முடிவு பண்ணிட்டியா என கோபமாக கத்த

அவளோ அப்படி இல்ல தேவ் மாமா நீ நான் ரொம்ப பிடிக்கும் உங்கிட்ட பேசாம எப்படி இருக்க முடியும் சொல்லு என குழந்தை போல முகத்தை பாவமாக சொல்ல

அடுத்த நொடி அவன் கோபம் எல்லாம் காணாமல் போய்விட்டது இருந்தும் போய் கோபத்தோடு அவளை பார்த்து அடுத்த வாட்டி இப்படி பண்ணாத சரியா கொஞ்சம் நா வர லேட் ஆகிருந்தாலும் என்ன ஆகிருக்கும் சொல்லு பாப்பா

சாரி தேவ் மாமா இனி இப்படி பண்ண மாட்டேன் ஓகே வா. இப்ப கொஞ்சம் சிரி என அவன் கன்னம் பற்றி கேட்க

அவனோ அவன் அடித்து சிவந்த அவள் கன்னத்தை இதமாக வருடி விட்டான். பின் அவளை பார்த்து இப்ப வயிறு வலி எப்படி இருக்கு பாப்பா என்ன கேட்க

இப்ப வலி இல்ல ஆனா பசிக்குது இன்னக்கி என்ன சமைச்சு கொண்டு வந்த தேவ் வா போய் சாப்புடலாம் என அழைக்க

அவனோ மறுப்பு தெரிவிக்காமல் அவளை அழைத்து சென்று அவன் கொண்டு வந்த உணவினை அவளுக்கு ஊட்டி விட்டான். பின் அவளும் தேவிவிற்கு ஊட்டிவிட்டாள் அவனும் உண்டு விட்டு அவரவர் வேலைகளை தொடர்ந்தனர்.

ரதியோ ராகவனுக்கு தகவல் அனுப்பி ராம்மை பணி நீக்கம் செய்தால். மாலை போல தேவ் அவளை மலை உச்சிக்கு அழைத்து சென்றான். அங்கே மேகக் கூட்டம் எல்லாம் மலைகளின் மேல் தவழ்ந்து விளையாட, இதமான குளிர் காற்று மேனியை வருட தேவின் கைகளை கோர்த்து அவன் தோள் சாய்ந்து அமர்ந்து இருந்தாள் அவன் அம்மு.

இருவரும் மௌனமாக அமர்ந்து இருந்தனர். இருவருக்கும் அந்த மோன நிலையை கலைய விருப்பம் இல்லை. முதலில் தேவ் தான் ஆரம்பித்தான் அம்முமா நீங்க யாராவது லவ் பண்றிங்களா என கேட்க அவளோ உடனே இல்ல தேவ் எனக்கு யார் மேலயும் அப்படி ஒரு பீல் வரல நீ யாரையாவது லவ் பண்றியா என கேட்க அவனோ ஆம் என தலை அசைத்தான்.


உடனே ரதியின் முகம் வாடிவிட தேவ் வோ அவளை பார்த்து அது யாருனு கேக்க மாட்டிய அம்மு சரி நானே சொல்றேன். ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி சென்னைக்கு ஒரு காம்பெடிஷன்கு போனேன் அங்க தான் முத முறை அவளை பார்த்தேன். என் மேல பூங்கொத்து மாறி வந்து விழுந்த அப்பறம் ஒரு மாசம் தினமும் அவளை பார்க்கவே அங்க போனேன்.

அப்பறம் அவளை பார்க்க முடியல இரண்டு வருஷம் ஆச்சு மறுபடியும் அவளை பார்க்க இந்த இரண்டு வருஷத்துல அவள நிறைய வாட்டி மிஸ் பண்ணேன். அவள நிறைய இடத்துல தேடுனேன் கடைசியா அவளே என்னை தேடி வந்துடா என அவன் கூறி முடிக்க அவனை விழிகள் அசையது பார்த்து கொண்டு இருந்தாள் ரதி.

தேவ் ரதியின் கண்களை பார்த்து எனக்கு அம்மா அப்பா இல்ல எனக்கு 17 வயசு இருக்கும் போது ஒரு அச்சிடேன்ட்ல இறந்துட்டாங்க இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் எங்க அப்பாவோட முதல் மனைவி நீலவேணி அப்பறம் அவங்க பொண்ணு மணிமேகலை குடும்பம் தான் இவளோ தான் என்னைக்குனு இருக்குற குடும்பம் இப்ப சொல்லு இந்த ருத்ரதேவனோட ரதிதேவியா ❤️ என் பொண்டாட்டி ரதிமலரா என் கடைசி மூச்சு இருக்க வர என்கூட வர சம்மதமா பாப்பா சொல்லு..

ரதியோ ஒரு நிமிடம் அதிர்ந்து பின் அவன் கண்களை பார்த்து நீயும் என் அம்மா அப்பா நிலா மாறி என்ன பாதியில விட்டு போய்டா மாட்டியே தேவ் மாமா என கேட்க அவனோ அவளை எலும்புகள் உடையும் அளவிற்கு அணைத்து கொண்டு கண்டிப்பா உன்னை விட்டு என்னைக்கும் நான் போகாமாட்டேன் சரியா பாப்பா ஐ லவ் யூ அம்மு பாப்பா என கூற
அவளோ ஐ லவ் யூ தேவ் மாமா என கூறினாள்.


பின் அவன் கால் சட்டையில் இருந்து ஒரு டப்பாவில் தேவ் என டாலர் போட்ட சங்கிலியை அவள் சங்கு கழுத்தில் அணிவித்து விட்டான். இது நான் உனக்கு போடுற தாலி மாறி நம்ம காதலுக்குக்காக நான் தர முதல் பரிசு இத நீ எப்பவும் கழட்ட கூடாது சரியா என கூறி அவளை அணைத்து கொண்டான்.அவளும் அவனை கட்டி கொண்டு அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்.


வானம் இருட்ட தொடங்க தேவ் ரதியை அழைத்து கொண்டு கீழே இறங்கினான். மேகப்பெண்ணோ பூமியின் மேல் கொண்ட காதலை மழையாய் பொழிந்தால். தேவ் வண்டியினை அவன் வீடு நோக்கி செல்லுத அவன் முதுகின் மீது சாய்த்து அதில் முகம் போதைத்து கொண்டு அவன் இடுப்பினை சுற்றி கரங்களை கோர்த்து கொண்டு அமர்ந்து வந்தாள் தேவனின் ரதி மலர் ❤️


முழுவதுமாக நனைந்தப்படி தேவ் வீட்டின்னுள் நுழைந்தாள் ரதி. ராம்மினால் தனியாக இருக்கும் ரதிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து என அவன் வீட்டினிலே அவளை தங்க வைத்து கொண்டான் தேவ். தேவ் சோபாவில் அமர்ந்து தலையை ரதியின் வயிரில் புதைத்து கொண்டான் அவன் தலையை துண்டால் துடைத்து கொண்டு இருந்தாள் அவன் அம்மு.
இருவரும் சென்று உடை மாற்றி வந்து இரவு உணவினை சமைத்தனர்.

வழமை போல தேவ் அவளுக்கு ஊட்டி விட இருவரும் உண்டு சமையலறையை தூய்மை செய்து விட்டு குளிருக்கு இதமாக விறகினை அடுக்கி தீ முட்டி குளிர் கயிந்தனர். தேவ் சோபாவின் மேல் அமர்ந்து இருக்க ரதி அவன் மடி மீது அமர்ந்து மடிக்கணினியில் 🩷கீதா கோவிந்தம்🩷 படத்தை பார்த்து கொண்டு இருந்தாள். அவனோ மாறும் அவனவள் முக பாவனைகளை கவனித்து கொண்டு இருந்தான். அவன் காரமோ ரதியின் வயிரை சுற்றி இருக்க அவன் உடம்பில் ஒரு வித மாற்றம் அதனால் அவள் கழுத்தில் முகத்தை புதைத்து கொண்டான்.


ரதியோ அவன் வெளியிட்ட சூடான மூச்சு காற்றில் நெளிந்து மடிக்கணினியை மூடி டீப்பாய் மேல் வைத்து விட்டு தேவ் புறம் திரும்பி அமைதியாக இருக்கும் படி கூறினாள்.
அவனோ முடியாது என கூற அவளோ அவன் கன்னம் நெற்றி என முகம் முழுவதும் முத்தம் வைத்தாள்.


அவனோ அவள் முகத்தை கையில் ஏந்தி இப்ப நீ அமைதியா இல்ல நடக்குற பாதிப்புக்கு நான் பொறுப்பு இல்லை பா என கூற அவளோ நீ அதுக்குலம் சரிப்பட்டு வர மாட்ட தேவ் மாமா என கூறி அவன் கழுத்தை கட்டி கொண்டாள். அவனோ அவளை பார்த்து உன் அண்ணா கிட்ட பேசிட்டியா என் கேட்க அவளோ பேசிட்டேன் என கூறினாள்.

உடனே அவளை கைகளிள் ஏந்தி மெத்தையின் மீது படுக்க வைத்து அவள் மார்பின் மீது முகம் புதைத்து கொண்டு அவள் இடுப்பை சுற்றி கை போட்டு படுத்துவிட்டான். அவளோ அவன் உறங்கும் வரை பாடலை பாடி கொண்டு இருந்தாள். அவள் கைகளோ அவன் தலையை கொதி கொண்டு இருந்தது. அவனும் அவள் கதகதப்பில் உறங்கி விட்டான்.



திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் நீலவேணி. காரணம் என்ன? அடுத்த பாகத்தில்.....
 
Last edited:
Top