Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
29
Reaction score
1
Points
3
அசுரன் 15

"சுடரிகா பேசலாமா?" அறையில் அவள் மட்டும் தனித்து இருக்க, அந்த அறையின் பால்கனியில் நின்று எதையோ வெறித்து வெறித்து பார்த்து கொண்டிருந்த சுடரிகாவின் பின்னால் பழக்கப்பட்ட குரல் கேட்க,

"சொல்லுங்க அங்கில்? என்ன பேசணும்?" நீண்ட கூந்தல் காற்றில் அலைபாய திரும்பியவள் சிரித்த முகமாக அவரிடம் பேச,

அவர் பேச வரும் முன்னே,

"அங்கிள் ஒரு நிமிஷம் நீங்க உங்க பையனை பத்தி என்கிட்ட பேச வரீங்கன்னா இப்பவே சொல்லிட்டேன் வேணாம் வேற ஏதாவது என்கிட்ட பேசுறதுன்னா பேசுங்க. நாம பேசலாம்" என அவள் மனதில் உள்ளதை உள்ளது போல சொல்லவும், அவருக்கு ஒரு நிமிடம் மனதில் திருப்தியே ஏற்பட்டது.

"நோ நோ நான் கண்டிப்பா என் பையனைப்பத்தி பேச வரல. எனக்கு ரொம்ப போர் அடிச்சது அதான் உன்கிட்ட கொஞ்சம் பேசி கொஞ்சம் விளையாட வந்தேன்" கெய்யானந்த் பேசியதில் அவளுக்கு ஆச்சர்யமாக வந்தது.

"என்ன அங்கிள் சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல வர ஹாசினி சொல்ற மாதிரியே சொல்றீங்க."

"அப்டியா? ஓகே நாலு வாரத்தை முடிஞ்சா ஒரு கப் காஃபி போலாமா?"

"ஹும் ...நாலு வார்த்தை ஒரு கப் டீ வித் சால்ட் பிஸ்கட் ஹா ஹா ..."

"ஓ யா வா போலாம்" கெய்யானந்த் கையை நீட்ட அவளும் எந்த விகல்ப்பமும் இல்லாமல் கையை நீட்டினாள்.

இருவரும் தோட்டத்து பக்கம் போயினர். டீயும் அவள் கேட்ட சால்ட் பிஸ்கட் சகிதமாய், இருவரும் மும்முரமாக செஸ் விளையாடினர்.

"அது சரி அதென்ன டீ சால்ட் பிஸ்கட் புரியலையே?" கெய்யானந்த் அவளின் மந்திரியை முடக்கி வெளியே செஸ் போர்டை வெளியே வைக்க,

"ஆஆஆஆ என் பிஷப் போச்சே!"

"ஓ சாரி குட்டிமா விளையாட்டுல எல்லா காயும் போகத்தான் செய்யும் இப்போ உன் டர்ன்"

"ஹும் ... எனக்கு டீயும் சால்ட் பிஸ்கட்டும் பிடிக்கும் அந்த காம்பினேஷன் செம்ம வேற லெவல் டேஸ்ட் கொடுக்கும், செக்" ராணியை வைத்து அவள் ராஜாவை மடக்கினாள்.

"நைஸ் மூவ்... குட்டி" கண்கள் கூர்மையாக சதுரங்க விளையாட்டில் மும்முரமாக ,

"ஒரு நிமிஷம் அங்கிள் இது என்ன குட்டி, குட்டிமா புரியலையே? என் பேரு சுடரிகா சுருக்கமா எல்லாரும் சுடர்னு சொல்லி கூப்பிடுவாங்க ஆனா நீங்க என்ன என்னை குட்டிம்மான்னு சொல்லி கூப்புடுறீங்க? ஆனாலும் கேக்க நல்லாதான் இருக்கு என்னை யாருமே இந்த மாதிரி கூப்பிட்டதே இல்ல" கண்கள் மின்ன அவள் சொல்ல ,

"ஏன்டா உனக்கு நான் அப்படி சொல்றது பிடிக்கலையா?" பாவமாக முகத்தை வைத்து கொண்டு அவர் கேட்கவும்,

"ச்சே ச்சே அப்பியெல்லாம் இல்ல அங்கிள் என்னை அப்டியே சொல்லி கூப்பிடலாம். ஆனா நானும் உங்கள மாமுன்னு சொல்லி கூப்பிடுவேன் உங்களுக்கு ஓகேவா?" என்றாள்.

"ஹா .. இதென்ன மாமு வித்தியாசமா இருக்கே? பசங்கதான் அப்படி கூப்பிட்டு பேசுவாங்க நீ என்னன்னா"

"ஏன் பிடிக்கலையா? நீங்க எனக்கு மாமனார் சோ மாமான்னு கூப்பிடனும் ஆனா நான் அங்கிள்னு சொல்லித்தான் இப்ப வரைக்கும் கூப்பிடுறேன். நீங்களும் என்னை செல்ல பேரு வச்சு கூப்பிடும் போது நானும் உங்களை மாமான்னு சொல்லி கூப்பிடறதுக்கு பதிலா பேசாம மாமூன்னு சொல்லி கூப்பிடுறேன் ஏன் உங்களுக்கு பிடிக்கலையா?"

"அட தாராளமா கூப்பிடு. செக் மேட் ஆட்டம் முடிஞ்சது" கெய்யானந்த் ஆட்டத்தை முடித்து விட ,

"வாவ் சூப்பர் குட் கேம் நான் நினைச்சே பாக்கல நீங்க நல்லா விளையாட்டுறீங்க" என்றாள் சுடரிகா.

"ம்ம்ம் பல வருட விளையாட்டு இது எத்தனை கேம் விளையாடி இருப்போம். என்னமோ தெரிலடா உன்கிட்ட பேசும் போதுதான் நான் நானா இருக்குற பீஃல் கொடுக்குது." ஆத்மார்த்தமாக அவர் சொன்னதை அவளால் நன்றாக உணர முடிந்தது.

கண்கள் அகலாமல் கெய்யானந்த்தையே பார்த்து கொண்டிருந்தாள் சுடரிகா.

"குட்டிமா"

"ஆ .. அங்கிள்"

"ம் ..."

"சாரி மாமு..."

"அது..."

"சரி போலாமா இருட்டு கட்டிருச்சு பாரு" என்றார்.

"ஓ போலாமே அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் இல்ல அது பண்ணனும் சே அது..."

"என்னடா என்ன தயக்கம் உனக்கு? இந்த திணறல் திணறுரியே? என் மகன் கிட்டதானே நீ இப்படி திக்கி திணறி பேசுவ"

"மாமு" கண்களை உருட்டி அவள் முறைத்து பார்க்க ,

"சரி சரி என் மகனை பத்தின பேச்சு எடுக்க மாட்டேன் போதுமா? சரி என்னன்னு சொல்லு ?"

"அது மாமு எழுந்துருங்களேன்"

கண்ணில் மாட்டி இருந்த கண்ணாடியை அவர் கழட்டி விட்டு "எதுக்கும்மா?" என்றார்.

"ப்ச் ... எந்திரங்கண்ணு சொல்றேன்ல எந்திரிங்க" சத்தமாக அவள் சொல்ல ,

"ஓகே ஓகே எந்திரிச்சிட்டேன் இப்போ என்ன?" அவர் எழுந்த அடுத்த நிமிடம் அவரை அணைத்து கொண்டாள் சுடரிகா.

அவரோ கண்களை அழுத்த மூடி அவள் காட்டிய அதே அன்பை அவளிடம் வெளிப்படுத்த,

"மாமு உங்க பையனோட நான் கடைசி வரைக்கும் நான் வாழுவேணான்னு எனக்கு தெரி"

"குட்டிம்மா"

"பிளீஸ் மாமு என்னை பேச விடுங்க அவரோட நான் கடைசி வரைக்கும் வாழுவேனானு எனக்கு தெரியாது. ஆனா உங்களோட உருவான இந்த பந்தம் ஒரு அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இருக்குற பந்தம் போல, அப்பான்னா எப்படியிருப்பாரு அவரோட எந்த மாதிரியான விஷயங்கள் பேசலாம் எதெல்லாம் பேச கூடாது எதுவுமே எனக்கு தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் தெரியும் அவரோட இருந்தா கடைசி வரைக்கும் அவர் தன்னோட பொண்ணை பாதுகாப்பா பார்த்துப்பார்.உங்களோட பாதிப்பை கொஞ்சமே கொஞ்சம் அன்பு போதும் கடைசிவரை. என்னை ஏமாத்த மாட்டீங்களே?"

"குட்டி..."

"நான் பேசி முடிக்கல மாமு" செல்லமாக முறைத்தவள் ,

"நீங்க பணக்காரங்க நான் அனாதை, ஒன்னும் இல்லாதவ, ஏழை, துரதிர்ஷிட்டசாலி இந்த பட்டங்களுக்கு சொந்தகாரியானவள் நான். இப்படிப்பட்ட பொண்ணு நம்ம கூட பேசறதா வெளிய அழைச்சுட்டு போறதா? அப்படியே அழைச்சுட்டு போனா நம்ம மானம் கெளரவம் என்னாகுறது இப்படியெல்லாம் நீங்க நினைச்சிங்கன்னா இப்பவே சொல்லிடுங்க நாம இப்பவே பேச்சை நிறுத்திக்கலாம்." உணர்வு பூர்வமாக பேச்சை ஆரம்பித்து இறுதியில் தன்மானம் தனக்கு முக்கியம் என அவள் பேசி முடித்திருக்க அவளை ஆச்சர்யமாக பார்த்தார் கெய்யானந்த்.

"நான் என் மாமனாருக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்காக எந்த மானத்தை காப்பாத்த இந்த வீட்டுல இன்னும் இருக்கேன்ணு எனக்கு தெரில. ஆனாலும் இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமாகவே தெரிலடா. நீ என்னை பத்தி இவ்ளோ யோசிக்க தேவையே இல்ல கவலை படாத என்ன நடந்தாலும் சரி என்ன ஆனாலும் சரி நான் உன் கூட எப்பவும் இருப்பேன் ஒரு தகப்பனா எனக்கு சில விஷயங்கள் சொல்றதை விட செயலா காமிக்க ஆர்வம் அதிகம். மென் புன்னகையாக உதிர்த்துவிட்டு அவளின் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தவர், போலாமா?" என்க இவளும் சரியென தலை ஆட்டினாள்.

நாட்கள் போக இருவருக்குள்ளும் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் உறவு போல , ஒரு தாய்க்கும் மகளுக்கும் இருக்கும் பந்தம் போல, ஒரு நண்பனுக்கும் தோழிக்கும் இருக்கும் நட்பு போல அவர்களின் உறவு வளர்ந்து கொண்டே போனது. அழகான உணர்வுபூர்வமான பந்தம் அங்கே மென்மேலும் வளர்ந்து கொண்டே போனது.

இதை எதையும் அறியாத மித்ரா தேவி கெய்யானந்தும், சுடரிகாவும் காரில் போவதை பார்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாரோ இல்லையோ, காச் மூச்சென்று கத்த ஆரம்பித்தார்.

"ஆனந்த் என்ன நடக்குது இங்க என்னடா அவங்க ரெண்டு பேரும் கார்ல போறாங்க எங்க போறாங்க. அதுவும் அந்த அனாதை நாய அழைச்சுட்டு போறாரு வாட்ஸ் கோயிங் ஆன்!?" தலைவிரி கோலமாய் காட்சியளித்த தன் அன்னையை பார்த்த உக்ரனுக்குப் சிரிப்பு வந்தாலும் அதை வெளியே காட்டி கொல்லாமல்,

"அம்மா இன்னைக்கு மட்டுமா பிரீ ஹேர் விட்டிருக்காங்க எப்பவும்தானே?" என நினைத்துக் கொண்டவன்,

"மா எதுக்கு இப்படி வந்ததும் வராததுமா கத்துறீங்க" என்றான்.

"ஆனந்த் என்னடா நீயாடா இப்படி பேசுற? என்னால நம்ப முடியல" என்றார் ஆற்றாமையுடன்.

"அம்மா புரியாம பேசாதீங்க அப்பாவுக்கு இன்னைக்கு பர்த்டே ஆனா நீங்க உங்க பிரெண்ட்டோட பொண்ணு கல்யாணத்துக்கு போயிட்டு வந்திருக்கீங்க? ஆனா அவள் நம்ம அப்பாவுக்கு கிபிட் கொடுத்திருக்கா. அதான் டேடியும் அவளும் வெளிய டின்னர் போய் சாப்பிட போறாங்க போல ஐ திங்க் நான் அப்படின்னு நினைக்கிறேன் எனக்கு சரியா தெரியாது. பட் உங்க கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்ல. ஐ ஆம் வெரி டிசப்பாயின்டென்ட் யூ மா" தன் மகனா இப்படியெல்லாம் பேசுறான். தனக்கு மட்டுமே சாப்போர்ட் பண்ணுவானே ஆனா இன்னைக்கு இப்படி பேசிவிட்டு போறானே ஆச்சர்யமாக மகனை ஏறிட்டு பார்த்தார் மித்ரா.

"அது வந்து..." அவர் பேச நிமிர அது எங்கே முடிந்தது அவரால், அதான் அவன் சொல்லிவிட்டு போய்விட்டானே,

*****

பத்து மணியளவில், உக்ரனின் வீட்டின் கேட் திறக்கப்பட அப்பொழுதுதான் முழு சிகரெட்டை முழுவதுமாக குடித்துவிட்டு, படுத்து தூங்க போகலாம் என நினைத்தவனுக்கு எண்ணமெல்லாம் அவளின் அழகிய வதனம் மட்டுமே காட்சியாய் தெரிந்தது.

எப்படி இவ்ளோ அழகா இருக்கா, இதுநாள் வரைக்கும் இவளை நான் ஏன் பாக்காமா விட்டுட்டேன். கழுத்துல நான் கட்டுன தாலி மட்டும் உடம்புல ஒட்டு துணி கூட இல்ல சே சான்சே இல்ல டேய் உக்ரா அப்பவே அவளை நீ எதாவது பண்ணிருக்கணும்டா விட்டுடியேடா, தன்னைத்தானே நொந்து கொண்டவனாய் இன்னும் பல ஆசைகள் அவனின் மனதில் ஓடியது.

மாலையில் அவளை காண ஸ்கட்ட மெடியில் பார்த்தது . கண்ணக்குழியுடன் கூடிய அவள் சிரிப்பும், இதழுக்கு மேலே சின்னதாக ஒரு மச்சம் அவளின் முகத்தை இன்னும் பேரழகியாய் காண்பித்தது என தொடங்கி அனைத்துமே அவனை பித்தனாக்கியது.

அவளின் நினைவில் உழன்று கொண்டிருந்தவனுக்கு எத்தனை சிகரெட்டை பற்ற வைத்தோம் என கணக்கில்லாமல் போனது.

பால்கனியில் இருந்து பார்க்க அவள் வந்துவிட்டால் என தெரிய, ஒன்னும் அறியா குழந்தை போல அவன் படுக்கையில் போய் படுத்து கொண்டான்.

"குட் நைட் மாமு"

"குட் நைட்டு டா குட்டிமா" அவரும் சொல்லிவிட்டு அவரின் அறைக்குள் நுழைந்தார். இவளும் அவனின் அறைக்குள் நுழைய அறை எங்கும் சிகரெட்டின் வாசனை,

"அப்பா லொக் லொக்" என இருமியவள் பால்கனி கதவை திறந்தாள்.

"கருமம் எதுக்குத்தான் இப்படி சிகரெட் பிடிக்கிறாரோ, ராமா! எப்படித்தான் குடிக்கிறாங்களோ உவாக்..." தனக்குத்தானே வாய்விட்டு புலம்பியவள் படுக்கை விரிப்பை போட்டு படுத்துக் கொள்ள,

"ஓஹோ மேடம்க்கு சிகரெட் பிடிக்காதோ. அப்போ பிடிக்க வச்சுட்டா போச்சு என்ன பண்ணலாம்?" யோசனையிலேயே அவளை பார்த்த படியே உறங்கி போனான் உக்ரானந்த்.

இங்கோ கெய்யானந்தை உறங்கவே விடாமல் கத்தி கொண்டிருந்தார் மித்ரா தேவி.

தித்திக்கும்...
 

Author: shakthinadhi
Article Title: அசுரன் 15
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top