Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
New member
Messages
3
Reaction score
1
Points
3
அசுரன் 2

விடியற் காலை 4 மணியளவில் உக்ரானந்த் சுடரிகாவின் கழுத்தில் தாலியை காட்டினான். சுற்றியும் நான்கே பேரை வைத்து திருமணத்தை முடித்து விட்டார் மித்ரா தேவி.

மித்ரா தேவி அவரது கணவர் கெய்யானந்த், ஜோதிடர், உக்ராந்தின் உயிர் தோழன் குமார் அவ்வளவே. இவர்கள் மட்டுமே மணமக்களான இருவரையும் சுற்றி இருக்க கையில் அர்ச்சதை கூடவே ஐயர் மந்திரங்கள் ஒலிக்க அந்த அம்மன் சாட்சியாகவும் அந்த பஞ்ச பூதங்களின் சாட்சியாகவும் அவர்களின் திருமணம் நடந்தது. ஏன் சுற்றியும் இருக்கும் இந்த நான்கு பேரும் சாட்சியாக இருக்க மாட்டார்களா ? எப்படி இருக்க முடியும் அதுதான் கல்யாணமே திருட்டுத்தனமாக அல்லவா செய்து வைக்கிறார்கள்.

மிகப்பெரிய கோடீஸ்வரரான மித்ராதேவி அவரது மகனுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது சுலபமல்லவே. ஒரு சின்ன பத்திரிகையாளர் உள்ளே நுழைந்து விட்டால் போதும் சோசியல் மீடியா முழுவதும் பரவிவிடும் செய்திகளில் பரவலாக இடம்பெற்றும் விடும் சும்மாவே அவர்கள் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்க மாட்டார்களா என்று தவித்துக் கொண்டிருக்கும் பல பணக்கார லிஸ்டுகளில் ஒருவர் இவர்கள். அப்படி இருக்க இவர்களுக்கு மிகவும் நெருக்கமான எதிரிகளும் இருக்கிறார்கள். உறவிளும் எதிரிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் இந்த செய்தி கிடைத்துவிட்டால் அவலாக அல்லவா போட்டு மென்று தின்று விடுவார்கள்.

*****

"ஜோசியரே! என்ன பேசுறீங்க நீங்க? நீங்க பேசறது உங்களுக்கே சரின்னு தோணுதா? எங்களுடைய தகுதிக்கு கொஞ்சம் கூட மேட்சே இல்லாத ஒரு பொண்ண காமிச்சு இவளை கல்யாணம் பண்ணா தான் உங்க பையனுக்கு ஏற்பட்டிருக்கும் கண்டத்தில் இருந்து நீங்க தப்பிக்க முடியும்னு சொல்றீங்க என்னால இதை ஏத்துக்கவே முடியாது" மித்ராவின் சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து வெளியே வந்தார் கெய்யானந்த்.

மித்ரா தேவியின் கணவர் அவர். வெளியே வந்ததும் தன்னுடைய சத்தமான ஆக்ரோஷமான பேச்சை கொஞ்சமேனும் நிறுத்தியவர் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவரெல்லாம் ஒரு ஆளா என்பது போல மேலும் அதிகப்படியான கத்தலுக்கு தன்னை உள் இழுத்துக் கொண்டார் மித்ரா.

இவ்வளவு சத்தத்தையும் ஆக்ரோஷமான கோபத்தையும் கண்ட ஜோசியர் வெலவெலத்து போனார்.

'ஒரு சின்ன ஐடியா தானே கொடுத்தோம் அதுக்கு இந்த அம்மா மேலும் மேலும் குதிக்குது.
அடப்பாவமே நான் இவங்க பையனுடைய கண்டத்தில் இருந்து தப்பிக்கிறதுக்கு தானே இந்த வழியை சொன்னேன். அது ஏன் இந்த அம்மாவுக்கு புரிய மாட்டேங்குது. நான் யோசனையும் சொல்லிட்டேனே ஒரு வருட காலம் மட்டும் இந்த பொண்ண உங்க பையனோடு வாழட்டும். அதற்கு பிறகு உங்க பையனுக்கும் 31 வயது முடிந்த பின்பு கண்டமுமன் நீங்கி விடும். நீங்கள் பார்த்து வச்சிருக்கிற அந்த பொண்ணுக்கே கல்யாணம் பண்ணி வைங்கன்னு தான சொன்னேன். இதுக்கு போய் தாம் தூம்னு குதிக்குது.' யோசித்துக் கொண்டே போனார் ஜோசியர்.

"அம்மா அம்மா கொஞ்சம் பொறுங்க நீங்க இப்படி கத்துறதுனால எதுவும் மாறிட போறது கிடையாது. இதுவரைக்கும் உங்க மகனுடைய விஷயத்துல நான் சொன்னதெல்லாம் பழித்ததா? இல்லையா?" ஒரே கேள்வி நெற்றி பொட்டில் அடித்தது போல கேட்க கடத்திக் கொண்டே இருந்த மித்ரா சிறு நிமிடம் அப்படியே அமைதியாக இருந்தார். இதற்கும் ஜோதிடரின் பக்கத்தில் சுடரிகா நின்று கொண்டுதான் இருந்தாள்.

நடக்கும் கூத்தை அவளும் பார்த்துக் கொண்டேதான் இருந்தாள். இவ்வளவு சத்தமாக பேசியதும் அவள் இதயம் படபடவென துடித்துக் கொண்டே இருந்தது. நான்பாட்டுக்கு சிவனேனு தானே இருந்தேன். என்னை எதுக்குடா உள்ள கோர்த்து விடுறீங்க என்னும் ரீதியில் தான் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஆமா நீங்க சொன்னதெல்லாம் நடந்தது"

"அப்போ இதுவும் நடக்கும் தானே?"

"அதுக்கு இவள என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணுமா என் மகனுடைய ஸ்டேட்டஸ் என்ன இவளுடைய ஸ்டேட்டஸ் என்ன?"

"மித்ரா போதும் நிறுத்து" கெய்யானந்த் அவரின் பக்கத்தில் வந்து நின்று பேசவும் அவரை ஒரு பொருட்டாக பார்க்காமல் எள்ளலான ஒரு பார்வை மேலும் மேலும் ஒரு துச்சமான பார்வை அதில் உள்ளுக்குள் நொறுங்கிப் போனார் கெய்யானந்த்.

"சீ இதற்கு மேலும் இவளிடம் பேசுவதா?" என்று நினைத்தவரோ கைகளை கட்டிக் கொண்டார். திருமணமானதிலிருந்து இதுநாள் வரையிலும் அவள் ஏதாவது பேசினாலோ இல்லை தன்னை கேவலமாக பார்த்தாலோ கைகளை மட்டும் தானே கட்டிக் கொண்டிருக்கிறார் இந்த கைக்கட்டும் வித்தையை அவளிடம் மட்டும்தானே காட்டிக் கொண்டிருக்கிறார்.

"வேற எந்த வழியும் இல்லையா இந்த பொண்ணை தான் அவன் கல்யாணம் பண்ணிக்கணுமா இவள் என் குடும்பத்துக்கும் எனக்கும் சுத்தமா செட்டே ஆகாத பொண்ணு. இவள எல்லாம் என் மகனுக்கு நான் திருமணம் செய்து வைக்க மாட்டேன்" என சொன்னதையே வேறு வேறு மாடுலேஷனில் சொல்லிக் கொண்டே இருக்க ஜோசியருக்ருக்கு ஒரு கட்டத்தில் எரிச்சல் வந்துவிட்டது.

"இந்த பொம்பளைய என்னதான் சொல்லி அடக்குவதோ?" என்ற எண்ணமும் உள்ளுக்குள் வந்துவிட சற்றே கோபத்துடனே பேச ஆரம்பித்தார்.

"போதுமா நீங்க இவ்ளோ நேரம் பேசினத நானும் கேட்டுக்கிட்டே தான் இருந்தேன். எங்க அப்பாவிலிருந்து இப்ப வரைக்கும் எங்ககிட்ட தான் நீங்க ஜாதகம் பார்த்துக்கிட்டு இருக்கீங்க. நாங்க சொன்னது எதுவுமே உங்களுடைய குடும்பத்தில் பலிக்காம இருந்தது கிடையாது. அது நீங்க நம்ப போய்த்தான் இப்பவும் எங்க கிட்ட ஜாதகம் பார்த்துட்டு இருக்கீங்க. அந்த நம்பிக்கையை நாங்க பொய்யாக்கக் கூடாது நாங்க சொல்றது உண்மையான பலன் தான். இது கண்டிப்பா நடக்கும்"

"நான் உங்க ஜாதகத்து மேல எந்த சந்தேகமும் படவே இல்லையே?"

"அதேதான் இப்பவும் சொல்றேன் நீங்க நாங்க சொல்ற ஜாதகத்து மேல சந்தேகம் படல ஆனா நான் சொன்ன இந்த ஐடியாவை நீங்க செஞ்சு தான் ஆகணும்" என்று சொன்னவரோ மெல்லமாக,

"உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணுமா" எனவும் அவர் சுற்றி நிற்கும் சுடரிகாவையும் தன்னுடைய கணவரையும் பார்த்துவிட்டு உள்ளே வாங்க என்று தனது அறைக்குள் அழைத்துப் போனார்.

"அம்மா ஒரு வருடம் தான் கண்ணை மூடி கண்ணு திறக்கறதுக்குள்ள போயிடும்" என்றார் ஜோசியர்.

"ஐயோ ஜோசியரே வேற ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்க. பரிகாரம் ஏதாவது அந்த மாதிரி கேட்டேன் ஆனா நீங்க சும்மா சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க இதுக்கு தான் தனியா உங்க பேசணும்னு அழைச்சிட்டு வந்தீங்களா?" என்று கேட்டார் மித்ராதேவி.

"இல்லம்மா இன்னொரு முக்கியமான விஷயமும் சொல்றதுக்கு தான் வந்தேன். இப்ப நான் பார்த்த அந்த பெண்ணுடைய கைரேகைய வச்சு சொல்றேன் அந்த பெண்ணுடைய ஜாதகம் கண்டிப்பா நல்ல அமோகமான மாங்கல்ய பாக்கியம் கொண்ட ஜாதகமா தான் இருக்கும்."

"அதுவே ஒரு அனாதை கழுதை" முகத்தை ஒரு உர்ரெனே வைத்துக் கொண்டு சொன்ன மித்ரா தேவியின் முகம் அஷ்ட கோணலாக போனது.

"அனாதையா இருந்தா உங்களுக்கு தாமா ரொம்பவுமே பிளஸ் பாயிண்ட் அந்த பொண்ண என்ன செஞ்சாலும் தட்டி கேக்குறதுக்கு யாருமே இல்ல. இந்த பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்கறதுக்கு உங்களுக்கு விருப்பமில்லைனா மேற்கொண்டு நீங்க வேற ஏதும் உன்னை பார்த்து அது நம்ம பையனுடைய ஜாதகத்தோட பொருந்தி வந்து அவங்களுக்கு சொந்தக்காரங்க அப்பா அம்மா இந்த மாதிரி உறவுகள் இருந்து அவங்க கிட்ட சொல்லி நம்மை இந்த மாதிரி எல்லாம் பண்ண முடியுமா யோசிச்சு பாருங்க யோசிச்சு பாருங்க. அதுக்கு இந்த மாதிரியான அனாதை பொண்ணு தான் சரியா வரும் காதும் காதும் வச்ச மாதிரி அந்த பொண்ணுக்கும் உங்க மகனுக்கும் கல்யாணம் நடக்கட்டும். உங்க குலதெய்வ கோயில்ல தான் இந்த கல்யாணம் நடக்கணும் அதையும் நான் இப்பவே சொல்றேன். இன்னொரு முக்கியமான விஷயம் இது எந்த ஒரு பிரஸுக்கும், மீடியாவுக்கும் தெரியாத மாதிரி நீங்க பாத்துக்கோங்க. அத பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. யாருக்குமே தெரியாம கல்யாணம் பண்ணி வச்சிடலாம். இதுல நீங்க சம்மதம் வாங்க போற முக்கியமான ஆளு உங்க மகன் மட்டும் தான் இந்த பொண்ண நம்ம எப்படியும் வழிக்கு கொண்டு வர உங்களுக்கு தெரியும்" என்றார் ஜோதிடர்.

விளக்கமாக அதுவும் தன்னுடைய மூளைக்கு எட்டும் வகையில் நல்ல ஒரு யோசனையாக ஜோதிடர் சொல்லி இருக்க பலே பலே இவரை நம்ம பிஏவாக வச்சிருக்கலாம். யாருக்குமே தெரியாம இந்த கல்யாணத்தை நடத்தி இருக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டார் மித்ராதேவி. யாருக்கும் தெரியாமல் வேண்டுமானாலும் திருமணத்தை நடத்தி வைக்கலாம் ஆனால் கடவுள் போட்ட கணக்கை மாற்றிவிட முடியுமா என்ன?

"இப்போ உங்களுக்கு சம்மதமா" நீண்ட நேரம் யோசனையில் ஆழ்கடலிலே புகுந்து கொண்டிருந்த மித்ராதேவியே மீண்டும் மீட்டெடுத்து வந்துவிட்டார் ஜோசியர். அவரின் பேச்சை கேட்டு திடுக்கிட்டு அவரை பார்த்ததும் எனக்கு சம்மதம் என்று அவர் சொல்லவும் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நின்ற ஜோசியரோ மீண்டும் ஒரு நிமிடம் கதவை மெல்லமாக சாத்தி விட்டு மித்ரா தேவியிடம் வந்தவர்,

"முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் இந்த கல்யாணம் நம்ம யாருக்கும் தெரியாமல் நடத்தி வைக்கிறது என்னவோ ரொம்பவும் ஈஸியான விஷயமா இருக்கலாம் ஆனா இதுக்கு அடுத்து தான் மிகப்பெரிய சவாலே உங்களுக்கு காத்துக்கிட்டு இருக்கு"

"என்ன ஜோசியரே என்னன்னு சொல்லுங்க இந்த பூடகமா பேசறதெல்லாம் எனக்கு பிடிக்காது எதா இருந்தாலும் டைரக்டா சொல்லுங்க"

"சரி மா நான் நேரடியாவே விஷயத்துக்கு வரேன். உங்க மகனுக்கும் அந்த பொண்ணுக்கும் திருமணம் நடந்தே ஆகணும் ஆனா ஒரே ஒரு நிபந்தனை இரண்டு பேரும் ஒண்ணா வாழனும்"

ஜோசியர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் நெஞ்சில் கை வைத்தார் மித்ராதேவி.

தொழிலில் பல சரிவுகளை கண்டாலும் அதை எல்லாம் சொடக்கு போடும் நேரத்தில் பிரச்சினைகளை சரி செய்து முன்னிறுத்தி போய்க் கொண்டே இருப்பவர் மித்ரா. ஆனால் ஜோசியர் சொன்னதை கேட்டு கால்கள் துவண்டு போனது போல ஆனது ஒரு நிமிடம் நடுக்கம் வராத அவளின் கைகளும் நடுக்கத்தைக் கூட்டியது.

"என்ன சொல்றீங்க ஒன்னா வாழணுமா?"

"ஐயோ அம்மா நான் அந்த அர்த்தத்துல சொல்லல வாழனும்னா அந்த பொண்ணு உங்க மகனோட தான் இருக்கணும் அதுக்காக தாம்பத்திய வாழ்க்கையில இருக்கணும்னு நான் சொல்ல வரல ரெண்டு பேரும் ஒரே அறையில் இருக்கணும் அவ்வளவுதான். அப்படி இல்லைன்னா உங்க மகனுக்கு ஆபத்து. அந்த பொண்ணு அவர் கூடவே இருக்கணும். அப்பத்தான் பலன் கிடைக்கும்" என்று ஜோசியர் சற்றே விளக்கத்துடன் சொல்ல அப்பொழுதுதான் மித்ராவுக்கு துள்ளிக் கொண்டிருந்த இதயம் சற்றே அடங்கியது போலவே இருந்தது.

"இதுவா விஷயம் நான் பார்த்துக்கிறேன் சரி உங்களுக்கான பணம் உங்களுடைய அக்கவுண்டுக்கு வந்து சேரும் நீங்க இப்ப கிளம்பலாம்" என்று ஜோசியர் சொன்னதும் அவர் வெளியே வந்து விட்டு,

"சரிங்கம்மா நாள், கிழமை, நேரம் இதெல்லாம் நான் குறித்து தரேன் அதுக்கப்புறம் கல்யாணத்தை வச்சு கொள்வோம்" என்று சொல்லிவிட்டு ஜோசியர் கிளம்பி விட அங்கு தனியாக சுடரிகா நின்று கொண்டிருந்தாள். கணவர் எங்கே போனார் என்று தெரியவில்லை மித்ராவோ வழக்கம் போல தான் என்று மனதில் நினைத்தவராக வெளியே வந்து நின்றவர்,
சுடரிகாவை பார்த்ததும்,

"உள்ள வா உன்னிடம் முக்கியமான ஒரு விஷயம் பேசணும்" என்று சொடக்குப் போட்டு அவளை அழைக்க அவள் பயந்தபடி அந்த அறைக்குள் வந்து நின்றாள்.

கட்டிலில் ஒய்யாரமாக பின் கைகளை கட்டிலில் மெத்தையில் கொடுத்து விட்டு கால் மேல் கால் போட்டு ஆட்டியபடியே அவளை மேலும் கீழுமாக சுடரிகாவை ஒரு பார்வை பார்த்தார் மித்ராதேவி.

வட்டமான முகம் புருவங்களுக்கு இடையில் கோபுர அளவு ஒரு சின்னதாக பொட்டு அதற்கு மேலே சந்தனக்கீற்று. கீழே குங்குமம் கூர் நாசி உப்பிய கன்னங்கள் வெளிர் நிறத்தில் அழகிய பதுமையாக இருந்தாள். பிரம்மன் படைத்ததில் கொஞ்சம் அதிக அளவுக்கு அழகு கூடி இருக்க வேண்டும் இந்த பெண்ணுக்கு. அழகு இருந்தால் மட்டுமே இவர்களுக்கான அதிர்ஷ்டங்கள் வந்து சேரும் மித்ரா நினைக்க அதிர்ஷ்டமா அது என்ன எப்பொழுது அவளுக்கு வந்திருக்கிறது அனைத்தும் துரதிஷ்டம் மட்டுமே...

மேலும் கீழுமாய் அவளை பார்த்துக் கொண்டிருந்த மித்ராதேவி ஒரு கட்டத்தில் அழகாகத்தான் இருக்கா அழகுக்கு குறைச்சல் இல்லை மனதில் நினைத்தாலும் அவளை பார்க்கும் பார்வையில் முழுவதும் ஏளனமும், நக்கலும் இருந்தது என்னவோ உண்மைதான்.

"வெளிய ஜோசியர் பேசுனது எல்லாம் உன் காதுல விழுந்ததா?" கனீரென கேள்வியில் அவள் உள்ளம் துடிக்க பார்க்க அவளுக்கு எதுவும் புரியவில்லை என்பது மட்டும் அவளின் பார்வையில் இருந்து நன்றாக புரிந்து கொண்டார் மித்ராதேவி.

"இல்ல மேம் என்ன பேசிக்கிட்டிங்கன்னு எனக்கு தெரியாது" திக்கலும் திணறலுமாக அவளது குரல் வெளிப்பட்டது.

"சுத்தம் கிழிஞ்சது முதலருந்து என்னால ஆரம்பிக்க முடியாது. உனக்கு உன் வாழ்க்கையில நீ நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு ஆஃபர் தரேன். அதை நல்லா அனுபவிச்சுக்கோ. அதுவும் ஒரு வருஷம் மட்டும்தான் சொன்னது காதுல இப்பவாது விழுந்ததா?" என்று கேட்க இப்பொழுதும் அவளுக்கு புரியவில்லை புரியாமல் மழங்க மழங்க விழித்தாள் பெண்ணவள்.

அவளை பார்க்க பார்க்க எரிச்சலும் கோபமும் தான் வந்தது மித்ராவுக்கு. தன் பக்கத்தில் அதாவது தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் சார்ப்பாக இருக்க வேண்டும் தன் பார்வையாலே என்ன நினைக்கிறோம் என்ன சொல்ல வருகிறோம் என்று புரிந்து கொள்ளவும் வேண்டும். இவள் புரியாத தத்தியாக இருப்பதை பார்த்து மனதிற்குள் திட்டியவள் வெளிப்படையாகவே அவளை திட்டவும் ஆரம்பித்துவிட்டார்.

"ஏய் என்ன பொண்ணு நீ படிச்சிருக்க பேசறது கூட உன்னால புரிஞ்சுக்க முடியாது?"

"சாரி மேம் எனக்கு புரியல எனக்கு கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன். என்ன ஆஃபர் என்ன ஒரு வருடம் எதை நான் அனுபவிக்கணும்" என்று சற்றே தைரியம் வந்தவள் போல அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க மித்ராவுக்கு கோபம் தான் மனதில் எழுந்தது. ஆனாலும் தனக்கு காரியமாக வேண்டுமே அதற்காக கொஞ்சம் மீண்டும் தன்னுடைய பொறுமையை கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். பொறுமை என்பது மித்ராவுக்கு துளியும் இல்லை. தொழிலிலும் சரி உறவுகளிலும் சரி.

"இங்க பாரு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஜோசியர் வந்துட்டு போனார் அவர் எங்களுடைய குடும்ப ஜோதிடர் என் மகனுக்கு ஜாதகத்துல கண்டம் இருக்கு உயிர் போற அளவுக்கு கண்டம் அவனை ஆக்கிரமிச்சிருக்கு. அவனுடைய கண்டம் தீரனும்னா நல்ல மாங்கல்ய பாக்கியம் இருக்கிற ஒரு பெண்ணை பார்த்து தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்லி இருக்காரு. ஜோசியர் உன் கையை பார்த்தார் இல்ல அதுல உனக்கு அமோகமா மாங்கல்ய பாக்கியம் இருக்குங்குறத சொல்லி இருக்காரு. உன்னை என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுல எனக்கு துளியும் விருப்பமே இல்ல. ஆனா என் நேரம் திருமணம் செய்து தான் வைக்க வேண்டிய கட்டாயம். நான் பார்த்த பொண்ணையே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா என்ன பண்றது நேரம் என்னை பிடித்து ஆக்கிரமிச்சிருக்கு. இதெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு எனக்கு அவசியமே கிடையாது. ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயம். எவ்வளவு பணம் வேணுமோ பிளாக் செக் தர வாங்கிக்கோ அதுல உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ நிரப்பிக்கோ. என் மகனுக்கும் உனக்கும் அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம். கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் அவனுடன் நீ வாழனும் அதுக்கப்புறம் நீ இந்த வீட்டை விட்டும் இந்த ஊரைவிட்டும் போயிடனும் இருக்கக் கூடாது புரியுதா? " தொலைக்காட்சியில் வரும் செய்தி வாசிப்பாளர்கள் இன்றைக்கு முக்கிய செய்தி திடுக்கிடும் தகவல் என்று சொல்வார்களே அதுபோலவே மித்ராதேவி சொன்னது போலவே இருந்தது சுடரிகாவுக்கு

மித்ரா தேவி சொன்னதை முழுவதுமாக கேட்டுக்கொண்டே போன சுடரிகாவுக்கு கை கால் எல்லாம் உதறியது.

"மேம் அது வந்து நான்..."

"உனக்கு ஆப்ஷன் எதுவும் கொடுக்கல இதை நீ செய்து தான் ஆகணும் புரியுதா? இல்ல என்னால செய்ய முடியாது அப்படின்னு மட்டும் சொன்ன உன் உயிர் தோழி பெயர் என்னவோ என் பி ஏ சொன்னானே ஆ விஜி இப்போ வெளிநாட்டில் தானே வேலை பார்த்துட்டு இருக்கா அங்கேயே அவளுடைய கதையை, முடிச்சுருவேன். அவளோட பொணத்தைக் கூட உன்னால பார்க்க முடியாது." சொன்னதும் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் படபடவென கீழே தரையில் வந்து விழுந்தது. அதை பார்த்து கூட மித்ராவிற்கு இரக்கம் வரவில்லை. தன் மகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிந்து விடுவார் மித்ரா ஒரு உயிரை கொல்லவும் தயங்கவும் மாட்டார் மித்ரா.

இதற்கு மேலும் அவள் சரி என்று சொல்வதை தவிர அவளுக்கு வேற எந்த பதிலும் இல்லையே?

இதோ திருமணமும் முடிந்து இருவரும் ஒரே அறையில் இருக்க, வெளியே அவர்களின் அறையில் காது கொடுத்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என கேட்டு கொண்டிருந்தாள் அவளது பிஏ நந்தினி.

அசுரன் தொடர்வான்...
 
Top