• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
முள் மஞ்சமோ! மலர் தஞ்சமோ!

அத்தியாயம் 1

இன்று தை பூசம் திருநாள். பாலைக்கொடி கிராமத்தில் விசக்தி பெற்ற முருகர் கோவிலில், சுவாமிக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையை ஒரு பக்கம் பக்தர்கள் பக்தியோடு கண்டு கழிக்க, மற்றொரு பக்க பக்தர்கள் எண்ணற்ற வேண்டுதல்களை வேண்டி அலகு குத்துதல், காவடி எடுத்தல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டை அடித்தல், அன்னதானம் வழங்குதல், அங்கபிரதக்ஷணம், காணிக்கை இடுதல் என்று தாங்கள் வேண்டிய வேண்டுதல்களை எல்லாம் வெகு சிறத்தையாக பக்தி பயத்தோடு நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.

அதே கோவிலில், ஒருத்தி தன் வாழ்க்கையே சூனியமாக போவது தன் கண்ணெதிரே தெரிந்தும், அதை தடுக்க முடியாத தன் நிலையை எண்ணி நொந்து, இனி தன் வாழ்க்கை அவ்ளோ தானா என்று கலங்கிய மனதை திட படுத்திக் கொண்டு, மனமேடையில் ஐயர் கூறும் மந்திரங்களை கடமைக்கே அவள் சொல்லிக் கொண்டிக்க, அவள் மனதோ கூண்டில் சிறைப்பட்ட கிளியை போல வெளியே தப்பிச் செல்ல வழி அரியாது தவித்துக் கொண்டு இருந்தது.

மதுபாலா பார்ப்போர் கண்களை கொல்லையடித்து மயக்கம் கொள்ள வைக்குக் அழகி அமைதியானவள் கிராமத்துப் பைங்கிளி, பல இக்கட்டுக்கு நடுவில் தன் படிப்பை முடித்த பெண்.

கொரியர் அலுவலில் பணியாற்றி விட்டு மாலை சோர்ந்து வீடு வந்து சேர்ந்தவள் தலையில் இடியை இறக்கி இந்த கட்டாய திருமண ஏர்பாடு செய்தார்கள் என்பதை விட, ஐந்து லட்சம் ரூபாய்க்காக பெற்ற தந்தையே அவளை விற்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவளின் சித்தியின் பேச்சிக்கு மறு வார்த்தை இல்லை, அவள் பேச்சே வேதவாக்காக எடுத்துக் கொண்டு அதன் வழியில் தான் அனைவரும் நடக்க வேண்டும்,

அதுவும் அவளின் தந்தையை பற்றி கூறவே வேண்டாம் அவள் சித்தி ரூபாவதி எள் என்றால் எண்ணையாவர் சுப்பிரமணி.


மது பிறந்து அவளின் ஆறு வயது வரை அவளுடன் பாசமாக இருந்த அவளின் அன்னை வாசுகி திடீரென ஒருநாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரணம் மதுவின் வீட்டில் சமையல் வேலைக்கு வந்த ஒன்றும் இல்லாத ரூபாவதி, நாளடைவில் சுப்பிரமணியின் வசதியை கண்டு மயங்கியவள், வாசுகியை எந்நேரமும் அவர் கொஞ்சி குழாவி அவள் பின்னாடியே சுற்றித் திரிவதை ஒவ்வொரு நாளும் காணும் போது, தன்னை விட அழகிலும் பணத்திலும் உயர்ந்து இருப்பவளைக் கண்டு, வாசுகி மேல் நாளுக்கு நாள் பொறாமை தீ கொழுந்து விட்டெரிய, இது போதாதென்று அவளை போலவே செல்வ செழிப்போடு மினுமினுப்பாக வளரும் குட்டி மதுவையும் பொறாமையோடு பார்க்க தொடங்கினாள்.


எந்நேரமும் நகமும் சதையுமாக பிரியாமல் இருந்த தம்பதிகளை ஏக்கத்தோடு பார்க்க, அவளின் கொல்லிக்கண் பட்டுவிட்டதோ என்னவோ!!


மது வைரஸ் காய்ச்சலில் உயிருக்கு போராடிய நிலையில், வாசுகி அலறி அடித்து டவுனில் இருக்கும் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடி இருக்க, வேலை முடித்து இரவு வீடு வந்த சுப்பிரமணி மனைவி மகளை தேட, அவர்கள் இல்லாமல் போகவே புருவம் சுழித்தவரிடம் தன் நீண்ட நாள் தீராத ஆசையை நிறைவேற்ற நினைத்து அதில் வெற்றியும் கண்டாள் ரூபாவதி.


நள்ளிரவு தாண்டியும் வராது இருந்த மனைவி எங்கே என்று சுப்பிரமணி யோசனையில் மூழ்கி தேடி அலைந்து திரிந்து சோர்வாக வந்து அமர, அவரிடம் பவ்யமாக வந்து நின்றாள் ரூபாவதி.

"ஐயா" என்றழைக்க, தலை நிமிர்ந்து பார்த்தவரிடம் ஒரு கடிதத்தை நீட்ட, புருவமுடிச்சோடே அதை பிரித்து படித்து பார்த்த சுப்பிரமணியின் கண்கள் கோவத்தில் சிவந்தது.


"நான் வாசுகி எழுதிக் கொள்வது.

இதுவரை உங்களுடனான திருமண வாழ்க்கையை ஊர் உலகத்துக்காக மகிழ்ச்சியாக வாழ்வது போல் நடித்த என்னால், இனிமேலும் என் ஆசா பாசங்களை உள்ளடக்கி வெளி உலகத்துக்காக வாழ என் மனம் இடம் கொடுக்கவில்லை. நம் திருமணத்திற்கு முன்னாள் நான் நேசித்த என் காதலனுடன் என் குழந்தையுடன் செல்கிறேன்"


என்றதோடு அந்த கடிதம் நிறைவடைய. அதை கசக்கி போட்ட சுப்பிரமணி, முன்கோவத்தில் அறியவில்லை தன் மனைவிக்கு எழுத படிக்க கூட தெரியாது என்று, இதில் எங்கிருந்து பழைய காதலன் புது காதலன் எல்லாம்.

ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பதுக்கு எடுத்துக் காட்டாக, ஒரு மொட்டை கடிதாசியை நம்பி என்ன ஏதென்று கேட்டறியாமல் முட்டாள்த்தனமாய் முடிவெடுக்கும் சுப்பிரமணி போல் ஆட்கள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல.


கிட்டதட்ட ஐந்து நாட்கள் ஆகி இருந்தது மதுவின் உடல் நலம் தேறி வர. வாசுகி அழைத்து வந்தது என்னவோ பாலைக்கொடி கிராமத்தின் அருகில் உள்ள டவுன்.

அங்கு தான் வாசுகியின் தாய் வீடும் என்பதால், பேருந்து வசதி இல்லாத தன் கணவன் வீட்டுக்கு குழந்தையை தனியே விட்டு எங்கே செல்வது என்ற எண்ணத்தில் அப்போதெல்லாம் போன் வசதியும் இல்லாத காரணத்தால், முதலில் ஆபத்தில் இருக்கும் தன் பிள்ளையின் உடலை சரி செய்து கொண்டு பிறகு தன் கணவனிடம் பேசிக் கொள்ளாமல் என்று, தாய் தந்தை இறந்து பூட்டி கிடந்த தனது வீட்டில் தங்கி மது உடலை முழுமையாக சரி செய்து கொண்டு தனது கணவன் வீட்டுக்கு வந்த வாசுகிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

மனைவி இல்லாது அவள் தன்னை ஏமாற்றி ஓடி விட்டாள் என்ற கோவத்தில் அவளை பார்த்தால் வெட்டி போடும் அளவு கோவத்தை ரூபாவதி தூபம் போட்டு ஏற்றி விட்டு குடிக்க தூண்டி, இரவு பகல் பாராமல் பட்டசாராயம் குடித்து போதையில் ஆழ்ந்த சுப்பிரமணியிடம் ஆறுதல் சொல்வது போல் நெருங்கி தன் கவர்ச்சிகளை காட்டி, அவனை கவர்ந்திழுத்து தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டாள்.


இதுவே நேரம் காலம் பாராமல் சுப்பிரமணி போதையில் அல்லாது தெளிவாக இருக்கும் போதும் தொடர, ரூபாவதி இன்பக்கடலில் மூழ்கி சுப்பிரமணியை தன் சொல் பேச்சி கேட்கும் கைப்பாகையாய் மாற்றி இருந்தாள்.

பகல் நேரமெனும் பாராமல் யாரும் இல்லை என்ற தைரியத்தில், கதவை திறந்து வைத்துக் கொண்டே தன் கணவன் வேலைக்காரியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த வாசுகி நொறுங்கி போக, சடாரென வந்த அவளை கண்டு முதலில் இருவரும் திகைத்து பின் வேகமாக படுக்கையை விட்டு எழுந்த சுப்பிரமணி வாசுகியை வார்த்தையாளும், பலமான அடிகலாளும் அவளை தாக்க, வாசுகி கதறித் துடிப்பதை ரூபாவதி குரூரமாக தன் ஆடைகளை கூட சரி செய்யாது பார்த்து நகைத்துக் கொண்டிருந்தாள்.

"பழைய காதலனை தேடி ஓடி போனவ திரும்ப இங்க எதுக்கு டி வந்த? என்ன பணம் ஏதாவது வாங்கிட்டு வர சொல்லி உன் காதலன் அனுப்பி வச்சானா.. இல்ல இந்த அஞ்சி நாளே அவனோடவும் வாழ்ந்து உனக்கு சலிப்பு தட்டி போச்சா"


மேலும் அவளை காயப்படுத்த அப்பாவி கிராமத்து பெண், அபாண்டமாக தன் மீது பழி சுமத்துவத்தையும், அவள் கண்களால் பார்த்த காட்சிகளையும் சகித்துக் கொள்ள முடியாமல், தான் பத்து மாதம் சுமந்து பெற்ற ஆறு வயது நிரம்பிய குழந்தையை, அதுவும் அது பெண் குழந்தை என்ற எண்ணம் துளி கூட இல்லாமல் அதே வீட்டில் தூக்கிட்டு தற்க்கொலை செய்து கொண்டாள்.

அப்போதும் சுப்பிரமணிக்கு எந்த ஒரு உணர்வும் யோசிக்கும் திறனையும் இழந்து ரூபாவதியின் முழுகட்டுப்பாட்டில் இருந்தான்.

தொடரும்.
 
Top