• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் 3

முருகர் கோவிலில்.

திருமணம் முடிந்த கையோடு தன்னந்தனியாக நின்ற மது, 'இனி தன் வாழ்க்கை இருளில் மூழ்கிய சூரியனின் ஒளியாய் விடியல் இன்றி கை மீறி போய் விட்டது. இனிமேல் தன் கையில் ஒன்றும் இல்லை நடப்பது நடக்கட்டும்' என்பது போல சிறிது நேரம், கையில் வேலுடன் அவளையே பார்த்து சிரிப்பது போல வீற்றிருந்த ஆறுப்படையப்பனை கண்டாள்.

"இனிமே உன்கிட்ட வேண்டிக்க எனக்கு என்ன இருக்கு முருகா, எல்லாமே முடிஞ்சி போச்சி, கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும் உன்கிட்ட கேட்டுக்குற. எனக்கு கிடைச்ச இந்த சாபக்கேடான வாழ்க்கை மாறி வேற எந்த ஒரு அப்பாவி பொண்ணுக்கும் கிடைக்கவே கூடாது" இதை மட்டும் பண்ணு, என்றதோடு கரைபுரண்ட கண்ணீரை துடைத்தபடி, வீராவின் வீட்டை நோக்கி பொடிநடையாக சாலையில் நடக்கத் துவங்கினாள்.

"ஏன் ரூபா முகத்தை இப்டி உர்ருனு வச்சிட்டு உக்காந்திருக்க"
சுப்பிரமணி கேட்டது தான் தாமதம்,

"ஏன்யா கேக்க மாட்ட, ஏன் கேக்க மாட்ட, நல்லா அறுவடைக்கு தயாராகி மூட்டை மூட்டையா விலைச்சல் போயிட்டு இருந்த விவசாய மண்ணுல, எவனோ ஒருத்தன் வெளியூர்காரன் குறைஞ்ச விளைல தரமான உரம் தரேன், அதை போட்டா இன்னும் விலைச்சல் ரெண்டு மடங்கு அதிகமாகும், மேலும் அடுத்தடுத்து பயிர் போட்டா ஜெட்டு வேகத்துல அடுத்த அறுவடைக்கு வளந்து நிக்கும்னு சொன்னான்னு நம்பி, இருந்த பணத்தை பூராவும் அந்த கடங்காரன் கைல கொடுத்து என்ன கருமத்தை வாங்கி நிலத்துல கொட்டுனியோ, அத்தோட எல்லாம் முடிஞ்சிது. குபேரன் மாறி பணத்தை அள்ளி அள்ளி குடுத்த மண்ணு, இப்ப ஒண்ணுத்துக்கும் உதவமா தரிசுநிலமா ஒரு புல்லுக்கட்டு கூட முலையமா கருகி போய் கிடக்கு, அதுக்கு செலவு பண்ணியே இப்ப கையில சல்லி பைசா இல்லாம ஒன்னு இல்லாம கடங்காரங்களா ஆனது பத்தாதுன்னு கண்டவன் கிட்டலாம் ஏச்சி பேச்சி வாங்க வேண்டிய நிலைமை.

இதுல நீயும் எந்த வேலையும் போகாம நோகாம உக்காந்து கொட்டிக்கிற, அந்த சீம சிறுக்கி, வீட்டு வேலை எல்லாம் பாக்கி இல்லாம பாத்துக்கிட்டு , வேலைக்கு போயி மாசா மாசம் 8000 ரூவா கொடுத்துட்டு இருந்தா. அதுல தான் இத்தனை நாளா குடும்பம் ஓடுச்சி, இப்ப அதுவும் போச்சி, வீட்டு வேலை பாக்க ஆளும் இல்லாமயும் போச்சி, இனிமே நான் தான் மொத்த வேலையும் பாக்கமும்னு தலையெழுத்து. அவளை பணம் கொடுத்து கட்டிக்கிட்டு போன வீட்டுக்கு தான் இனி கொண்டாட்டம்" ரூபாவதி பொல பொலவென பொறிந்து தள்ள.

அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டு இருந்த சுப்பிரமணி,
"என்ன ரூபா இன்னுமும் பழசையே பேசிட்டு இருக்க, அதான் இப்ப கடனை எல்லாம் அடைச்சு, கைல ரொக்கமா அஞ்சி லச்சரூவா இருக்கே, நீ எதுக்கு வீட்டு வேலை எல்லாம் செய்யணும், பழையபடி நம்ம வீட்டு வேலைக்கு ஆளை வச்சிக்கலாம்" என்றவரை கொலை வெறியாக ரூபாவதி முறைத்தாள்.


"ஏன்யா சொல்ல மாட்ட, உன்ன நம்பி விவசாயம் பண்றேன்னு பணம் கொடுத்தது போதாதுன்னு, இப்ப புதுசா வேலைக்காரிக்கு தூக்கி பணத்தை நொட்ட சொல்றியா. அப்டியே வேலைக்காரிய வேலைக்கு வச்சாலும் அந்த சிறுக்கி மவ வேலை பாத்த மாறி வருமா, எந்த ஊர்லய்யா சும்மாவே வீட்டு வேலையும் செஞ்சி அதுக்கு அவங்களே சம்பளமும் கொடுத்து வேலை செய்வாங்க, ஆனா அந்த அவ செஞ்சாளே, போச்சி போச்சி எல்லாமே போச்சி இனிமே அவ அங்க சம்பாதிச்சி கொடுக்குறது மட்டு இல்லாம, வாய்க்கு ருசியா எல்லாருக்கும் சமைச்சி போட்டு வக்கனையா மொத்த வீட்டு வேலையும் செய்வா" என்று வயிறு எரிந்து சுத்தி இருப்போரின் செவிகளை பிய்த்துக் கொள்ளும் அளவு கத்திக் கொண்டே இருந்தாள்.

ஆசை யாரை விட்டது, அதிலும் இது பேராசை கையில் ஐந்து லட்சம் இருந்தும், அதை வைத்து புத்தியோடு பிழைத்துக் கொள்வோம் என்று நினைக்காமல், அப்பாவி பெண்ணை ஏமாற்றி வேலை வாங்கி பணத்தையும் பிடுங்கி விட்டு, அவள் தலையில் மிளகாய் அரைத்து விட்டு இப்போது எட்டாயிரம் போச்சே என்று தலையில் அடித்துக் கொண்டு கத்துவது யாருக்கு நஷ்டமோ!.

அந்த காலத்தில் கட்டிய இரும்பு போன்ற உறுதி கொண்ட வீட்டில் ஆங்காங்கே உயர்ந்து நின்ற தூண்கள், தேக்கு மரக்கதவு பெரிய திண்ணைகள் என பார்க்க வெளி தோற்றம் அழகாக இருந்தாலும் அதனுல் வசிக்கும் மனிதர்களின் குணம் அழகானது இல்லையே!

கால் கடக்க எத்தனை நேரம் அந்த பெரிய வீட்டின் முன் நின்றிருந்தாளோ, ஒரு நாய் கூட வா என்றோ ஆரத்தி எடுக்கவோ வரவில்லை. உள்ளே அவர்கள் பாட்டுக்கு அறுசுவை விருந்தை விழுங்கி விட்டு, கலைப்பில் உறங்கிக் கொண்டிருக்க, பாவம் மது நேற்று மதியம் அலுவலக உணவு இடைவேளையின் போது காக்கா சோறு உண்டது. இப்போது மதியம் கடந்து பொழுதே வந்து விட வயிற்றில் சத்தம் கிளப்பி பசி வேறு ஒரு பக்கம் அவளை வாட்டி எடுக்க, காலையில் திருமணத்திற்கு முன் சிறுநீர் கழித்தவள், அதற்க்கு மேல் எங்கே போக முடிந்தது.

வெகு நேரம் பொறுத்து பார்த்த மது, இனி யாரும் தன்னை அழைக்க வர மாட்டார்கள் என்றறிந்து அவளாகவே வலது காலை எடுத்து வைத்து உள்ளே செல்லலாம் என்று முடிவு செய்து காலை வைக்கப் போக துடைப்பம் ஒன்று அவள் காலில் பலமாக வந்து விழுந்தது.

திடீரென ஏதோ தன் மீது விழவும் பயந்து அலறி போய் முன் வைத்த காலை வெடுக்கென பின்னுக்கு இழுத்தவளுக்கு வலி சுல்லென்று எடுக்க, பயம் விலகாமல் நிமிர்ந்து பார்த்தாள் மது.


முழங்கால் வரை கிராமத்து பாணியில் தூக்கி கட்டி இருந்த சேலை முந்தானையை உதறி பலூன் போல வீங்கி இருக்கும் இடுப்பில் சொருகிக் கொண்டு நகைக்கு பஞ்சம் இல்லாமல் வாரி மாட்டி, பெரிய சைஸில் நெற்றியில் பொட்டுடன் அவளை கேவலமாக முறைத்துக் கொண்டிருந்த ராசம்மாளை கண்ட மதுக்கு ஏதோ பேய் பிசாசை நேரில் பார்த்தது போல உடல் உதறல் எடுத்தது.

"இப்ப எதுக்கு டி என் வீட்டு உள்ள வர" ராசம்மாள் பல்லை கடித்து உரும, அதில் மேலும் அஞ்சி நடுங்கினாள் மது.

"இல்லை யாருமே உள்ள கூப்பிடல அதான்" என்று பயந்துக் கொண்டே கூறியவளிடம், "அதான் யாரும் உள்ள வான்னு கூப்பிடலள்ள அப்பவே உனக்கு தெரியவேனா இங்க உன் தகுதி என்னன்னு. கேவலம் ஒழுக்கம் கெட்டு ஓடிப்போனாவளோட வயித்துல பிறந்தவ எல்லாம் என் வீட்டுக்கு வர நிலைமையாகிடுச்சி" அவளை பார்த்து வெறுப்பாக மொழிய. அபாண்டமான பேச்சுகளை எல்லாம் கேட்டு அழ மட்டுமே முடிந்தது மதுவால்.

இதெல்லாம் அவளுக்கு ஒன்றும் புதிய வார்த்தைகள் கிடையாது தான் ஆனால் இப்போது பேசிய ஆள் புதிது.

மனம் வெம்பி தலை குனிந்து அழுதவளை, "ஏய். என்ன வீட்டுல எழவா உழுந்து கெடக்கு இப்டி வாசல்ல நின்னு ஒப்பேரி வைக்கிற, ஏச்சீ.. உன் நீர்குழயாய நிறுத்து. இனிமே இப்டி முன் வாசல் பக்கமெல்லாம் உன்ன மாறி ஆளெல்லாம் வர கூடாது, போ கொல்லப் பக்கமா வாசல் இருக்கு அதுக்கு பக்கத்துலேயே உன்ன கட்டிகிட்டவன் அறையும் இருக்கு, அங்க போ". ஏதோ தீண்டத்தகாதவள் போல கேவலமாக பேசி முகத்தில் அடித்து விரட்டி விட.


கண்ணை துடைத்துக் கொண்டே வேதனையாக திரும்பியவளை "ஏய் நில்லு" அதிகாரமாக சொல்லவும், அவளும் அதே இடத்தில் சட்டென நின்று, இப்ப என்ன சொல்லி திட்ட போகிறாளோ என நினைத்தபடி திரும்பி பார்த்தாள்.

"காலைல சொன்னது நியாபகம் இருக்கா, இன்னைக்கு உனக்கும் வீராக்கும் மொத ராத்திரி. வீரா சீக்கிரம் வந்துடுவான் நீ அதுக்குள்ள குளிச்சிட்டு வெரசா தயாராகு, நான் செத்தநேரி கழிச்சி வாந்து பாக்குற" சொல்லி விட்டு முன் கதவை அரைந்து சாத்த. அந்த சத்தத்தில் கண்களை இறுக மூடிக்கொண்ட மது, ராசம்மாள் சொன்ன முதல்ராத்திரி என்ற வார்த்தையே , சகித்துக் கொள்ள முடியாமல் அவளை உளுக்கி எடுத்தது.

மெல்ல வீரின் அறைக்கு கொல்லை வாயில் வழியாக வலது காலை எடுத்து வைத்து வந்த மது, அந்த அறையில் எதையோ கண்டவளுக்கு தலை சுற்றி கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

தொடரும்.
 
Top