Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
204
Reaction score
203
Points
63
கள்வனே! கள்ளும் தேனடா!

அத்தியாயம் - 1

ஜம்மு காஷ்மீர் என்றாலே இயற்கை அழகிற்கு பேர் போன ஊர் தானே! பசுமையான பள்ளத்தாக்குகளும், பனி போர்த்திய மலைகளையும் காணவே அத்தனை ரம்மியமாக கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

கம்பீரத்தின் அழகினை மொத்தமும் ஒருங்கே கொண்ட காஷ்மீரில், ஆபத்தும் நிறைந்திருப்பது தான் சோகத்திற்குரிய ஒன்று. அடிக்கடி நடக்கும் பயங்கரவாத தாக்குததில் பல உயிர்கள் பலியாகும் துயரம் மட்டும் குறைவே இல்லை அங்கு.

அப்படி ஒரு அழகும் ஆபத்தும் நிறைந்த இடத்தில் தான், நம் நாயகனும் அவன் நாயகியும் தற்போது வசித்துக்கொண்டிருப்பதும், நம் கதை தொடங்கவிருப்பதும்.

கூரைகள் அகலமாக வடிவமைக்கப்பட்டிருந்த பழமையும் புதுமையும் கொண்ட நவீன வீட்டை சுற்றிலும் மேக கூட்டம் போல போர்த்தி இருந்தன வெண் பனிக்கட்டிகள்.

வெளியே கொண்ட உறையும் குளிரின் தாக்கம், அக்னிக் கண்ணன் வசிக்கும் வீட்டிற்குள் நுழைய பயந்ததுவோ!

"முகுந்தா முகுந்தா..
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா..
வரந்தா.. வரந்தா..
பிருந்தா வனம்தா.. வனம்தா..

முகுந்தா முகுந்தா..
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா..
வரந்தா வரந்தா..
பிருந்தா வனம்தா வனம்தா..

வெண்ணை உண்ட வாயால்
ம‌ண்ணை உண்டவா..
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாகவா.."

இதயத்தை இனிக்க வைக்கும் மென் குரலால் தேனிசை துள்ளும் இனிமையாக கண்ணன் பாடல், மிதமான சத்தத்தில் ஒலித்துக்கொண்டிருக்க, மெரூன் நிற காட்டன் சேலையினை நேர்த்தியாக கட்டி, குளித்த தலையில் கட்டி இருந்த துண்டினை கழட்டி உதறியபடி, மஞ்சள் பூசிய முகத்தில் செந்தூரத் திலகம் மின்ன தெய்வீகக்கலையோடு அறையில் இருந்து வெளிவந்தாள் தேன்குழலி.

காஷ்மீர் குளிரில் ஊரே நடுங்கிட இவளுக்கு அந்நடுக்கமெல்லாம் இல்லை போலும். ஹீட்டரின் உபயத்தால் வெப்பத்தின் அளவுகோல் சரியாக இருந்தது அவ்வீட்டில்.

இன்றைய நாள் கோகுலாஷ்டமி என்பதால் மாலை நேரத்து பூஜைக்காக, கண்ணனுக்கு பிடித்த நெய்வேத்தியங்களை சுவையாக தாயார் செய்த குழலி,

மாயிலை தோரணங்கள் கட்டி, கிருஷ்ணர் சிலையினை வண்ணப் பூக்களினால் அலங்கரித்து, அரிசிமா கோலமிட்டு, அதே மாவினால் வாசலில் இருந்து பூஜை அறை வரை குட்டி குட்டி பாத அச்சிட்டு நிமிர, அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் எல்லாம் சிரித்த மேனிக்கு ஒன்றாக ஓடி வருவதை கண்டு, பளிச்சிடும் ஆசைப் புன்னகையோடு அனைவரையும் வரவேற்றாள் தேன்குழலி.

"அக்கா பூஜை ஸ்டார்ட் ஆகிடுச்சா.." மழலைகள் ஒன்றாக கோரஸ் பாட,

"நீங்க வராம ஸ்டார்ட் பண்ணுவேனா, எல்லாரும் சமத்து குட்டிகளா உள்ள வாங்கோ.." மதுரம் சிந்தும் குரலால் குழந்தைகளை அழைத்தவளுக்கு, ஆலிலை கிருஷ்ண பெருமானே குழந்தைகள் ரூபத்தில் தன் வீட்டிற்குள் வந்து விட்ட இதத்தை அளித்தது.

வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, இனிப்பு சீடை, அதிரசம், தேன்குழல், பழங்கள் என இலை போட்டு படையல் வைத்த குழலி, குழந்தைகளோடு சேர்ந்து கோகுல கண்ணனை வழிபட்டவளாக, அவர்களை சுற்றியும் அமர வைத்து கிருஷ்ணவதாரத்தை பற்றி கதையாக கூற தொடங்கி விட்டாள்.

"தீமையை அழிச்சி தர்மத்தை நிலைநாட்டவே, மகாவிஷ்ணுவோட எட்டாவது அவதாரமா பிறந்தவா தான் இந்த கிருஷ்ண பெருமாள்..

மதுராவை ஆட்சி செய்த கொடுங்கோலன் கம்சன், சிறை கைதிகளாக வச்சிருந்த அவாளோட தங்கையான தேவகி அம்மாவுக்கும் வசுதேவரையாக்கும் மகனாக பிறந்த கிருஷ்ணரை, கோகுலத்துல வாழ்ந்த நந்தகோபர் யசோதையிடம் வசுதேவர் ஒப்படைத்தாராம்..

கிருஷ்ணர், அவா குழந்தைப் பருவத்தில செய்யாத லீலைகளே இல்ல தெரியுமோ.. வளர்ந்த பிறகு கம்சனைக் கொன்னு தர்மத்தை நிலைநாட்டியதும், துவாரகையில் வாழ்ந்து, அர்ஜுனனுக்கு கீதை உபதேசம் செய்ய தொடங்கிட்டாளாம்..

இதுனால தான் கண்ணனோட பிறப்ப நம்ம எல்லாரும் பண்டிகை நாளா வழிபடுறோம்.."

குழந்தைகளுக்கு புரியும்படி மிக சுவாரிசியமாக குழலி சொல்லிக்கொண்டிருக்க, அப்போதே வீட்டிற்கு வந்த ருத்ரங்கனும் மனைவி சொல்லும் கதையினை பிடித்து கேட்டானோ! இல்லை அவள் மதுரக் குரலை ரசித்தானோ! அமைதியாக கேட்டான்.

மனைவியோடு காஷ்மீர் வந்து பல மாதங்களுக்கு மேலாகிறது. எப்போதாவது குழலி ஆசைப்பட்டால், குழலியின் சொந்த ஊரான தஞ்சைக்கே மீண்டும் சென்று அங்கேயே வசிக்கும் அவளது குடும்பத்தை காண அழைத்து சென்று வருவான்.

ஆந்திர மண்ணில் பிறந்த கம்பீரமான உடற்கட்டும், மனவலிமையும் கொண்டவன் ருத்ரங்கன். அந்த கிருஷ்ணரை போலவே தான் அதர்மத்தை அழிக்கப் அவதரித்தானோ! தன்னுயிரை பற்றிய கவலையேதுமின்றி, கண்ணில் படும் தீவிரவாதிகளை கொன்று புதைக்கவே ஊர் பேர் தெரியாத இடத்தில் தங்கி இருக்கிறான் தற்போது.

இத்தனைக்கும் கொண்டவளும் அவனுக்கு வழிதுணையாக இருக்கிறாள் என்றால் இன்னும் பலம் கூடி போகாதா, உடையவன் நெஞ்சிலும் உடலிலும். யானை பலத்துடன் மீண்டும் தன் வேட்டையினை தொடங்கி விட்டிருந்தான் ருத்ரன்.

முன்பு தான் தன்னவனை பற்றி எதுவும் தெரியாது, அவனை தவறாக எண்ணி தூற்றிப் பேசி பெருந்தவறு செய்து விட்டாள். இப்போதோ கணவனை பற்றின அனைத்து விபரமும் பாவையவளுக்கு அத்துபடியே!

பனிக்கட்டி கண்கள் உருண்டு, மருதாணி பூசிய விரல்கள் அபிநயம் பிடித்து, தஞ்சாவூர்க்காரி தலையாட்டி பொம்மையாகவே மாறி, குழந்தைகளுக்கு மும்புரமாக கதை சொல்லிக்கொண்டிருந்தவள், கதவுபுறம் ஆடிய நிழலினை உணர்ந்து அப்பக்கம் பார்வையினை செலுத்தியவளின் முகமோ, அதீத பூரிப்பில் பிரகாசிப்பை காட்டியது.

"ஏண்ணா.. எப்போ வந்தேள்.." வெண்பற்கள் பளிச்சிட கேட்டு எழ முற்பட்ட மனைவியை,

"உட்கார்" என கண்ணசைவால் காட்டிய ருத்ரன், "ரூம்ல இருக்கேன் குயிலு, முடிச்சிட்டு பொறுமையா வா.." கத்தி சொன்னால் குழந்தைகள் அதிர்ந்து விடும் என நினைத்தானோ! ஓரளவு மென்மையை குரலில் தேக்கி சொல்லி சென்ற கணவனை, சிறு புன்னகையுடன் நோக்கினாள் தேன்குழலி.

"அக்கா மாமா வந்துட்டார், நாங்க வீட்டுக்கு போகட்டுமா.." குழந்தைகள் சத்தமில்லாது கேட்டது.

"ஏன் மாமா உங்கள என்ன பண்ணா.."

"மாமாவ பாக்கவே பயமா இருக்கு அக்கா.. நாங்க போய்ட்டு மாமா இல்லாதப்போ திரும்பி வர்றோம்.." என்ற குழந்தைகளை செல்லமாக முறைத்த குழலி,

"மாமா என்னைக்காவது உங்கள மிரட்டி இருக்காளா, இல்லைதானே.. இப்ப கூட வந்தவா, அவா பாட்டுக்கு ரூம்க்கு போயாச்சு.. இனிமே கீழ வர்ற மாட்டா.. பயப்படாம வந்து சமத்து பிள்ளைகளா சாப்பிடுங்கோ, பிறகு ஆத்துக்கு போலாம்.." மென்மையாக மொழிந்து ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் பரிமாறிய குழலி, ஒவ்வொரு குழந்தையும் உண்ணும் அழகை ரசித்து பார்த்தாள்.

எப்போதுமே அவன் முரட்டு தோற்றம் பிள்ளைகளை அச்சுறுத்தவே செய்யும். இத்தனைக்கும் குழந்தைகள் வீட்டிற்கு வந்தால் அவர்கள் முன்பு ருத்ரன் வாய் திறப்பதே அரிது தான். ஒரு காலத்தில் சத்தம் என்றாலே பிடிக்காதவனுக்கு, மனைவிக்கு பிடிக்கும் என்றே நிறைய விடயத்தை கண்டுகொள்ளாது விட்டு செல்வது எல்லாம் அச்சிறு குழந்தைகளுக்கு புரிய வைக்க முடியுமா!

இரவானதை உணர்ந்து, பிரசாதம் கொடுத்து குழந்தைகளை பத்திரமாக அவர்கள் வீட்டிலே கொண்டு சென்று விட்டு வந்த குழலி, கணவனுக்காக உணவை எடுத்துக்கொண்டு தங்கள் அறைக்கு வந்தாள் பதுமையாக.

"ஏண்ணா"

"என்ன உன் தோஸ்து எல்லாம் போயாச்சா.." அப்போது தான் குளித்திருப்பான் போலும், நீர் திரளாக உருளும் மேனி துடைத்துக்கொண்டிருந்தவன் கையில் இருந்த துண்டை வாங்கி, தானே துடைத்து விட்ட குழலி,

"பத்திரமா கொண்டு போயி அவா ஆத்துலே விட்டு வந்தாச்சு.. என்னண்ணா மதியம் கொடுத்த சாப்பாட்டை சரியா சாப்பிடலையோனோ!" லேசாக வயிறு ஒட்டி போயிருக்க, சரியாக கண்டுபிடித்து விட்டாள்.

"ரோட்டோரத்துல குளிர்ல நடுங்கி பசில கெடந்த ரெண்டு பசங்கள மதன் கூட்டிட்டு வந்தவன், அவசரத்துக்கு என் சோத்த தூக்கி அதுகள்ட்ட குடுத்துட்டான்.." இவனும் தான் சாப்பிட வைத்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருப்பான், அதை சொல்லாது சலித்து சொல்ல கேட்ட குழலி,

"அப்டியாண்ணா இப்ப அந்த பசங்க எப்டி இருக்கா, குளிர் தெரியாம தூங்க சவுகரியம் பண்ணி கொடுத்தேளா.." ருத்ரனின் தற்காப்புகலை பயிற்சி கூடம் தான் யாருமற்ற சிறுவர்களின் வீடும் கூட.

இவன் பெயர் வெளியே அடிப்படாது, ஓய்வு பெற்ற பயிற்சியாளர்களை உடன் வைத்து,
குத்துச்சண்டை, கிக்ஸ் பாக்ஸிங், கராத்தே, மல்யுத்தம் போன்ற பல்வேறு சண்டை பயிற்சிகளை கற்பித்து வருகிறான்.

கூடவே தற்காப்பு திறன்களை வளர்ப்பதோடு, உடல் வலிமை, சகிப்புத்தன்மை, உடல் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் பயிற்சியளித்து, சத்தமில்லாது பல நன்மைகளை செய்து வர்ற, மனைவியானவளுக்கு இதை தாண்டி வேறு பெருமை வேண்டுமா!

"எல்லாம் மதன் பாத்துப்பான் டி.." சற்றே குரல் உயரவும், இனி பசி தாங்க மாட்டான் என உணர்ந்த குழலி கொண்டு வந்த உணவை தானே பிசைந்து ஊட்ட, நாலே வாயில் உணவை காலி செய்து பெரிய ஏப்பம் விட்டான்.

"நீ சாப்டியா குயிலு" என்ன தான் பூஜை செய்த புத்துணர்ச்சி அவள் முகத்தில் தெரிந்தாலும், உண்ணாமல் உறங்காமல் வீட்டை கூட்டி சுத்தம் செய்து, மேலும் பல வேலைகளை இழுத்து போட்டு செய்த களைப்பு அப்பட்டமாக தெரிந்ததோ அவள் கண்ணனுக்கு.

"அது வந்துண்ணா.."

"என்ன இழுவை பலமா இருக்கு.."

"சொன்னா கோவிச்சுக்க கூடாது இன்னைக்கு நான் விரதம், விடிஞ்சதும் ஸ்நானம் செஞ்சிட்டு சுவாமி பாதத்துல உள்ள நெய்வேத்தியத்தை சாப்ட்டு தான் விரதத்தை முடிக்கணும்.." எங்கே விரதமெல்லாம் வேண்டாம் என் கண் முன்னே உண் என கண்டிப்புடன் சொல்லி விடுவானோ என்ற அச்சத்தில், கண்ணை உருட்டி பேசிய மனைவியை ஆழ் பார்வையால் துளைத்தன அவனது சிவப்பு கண்கள்.

இவன் சிறு சத்தமிட்டால் போதும், விரதமாவது சுவாமியாவது என்று லபக் லபக்கென்று உணவை விழுங்கி விடுவாள், தான், ஆனால் நினைத்து நினைத்து கண்ணீர் விட்டு முகத்தை உம்மென வைத்திருப்பாளே! அதற்கு ஒரு நாள் விரதமே இருந்து விட்டு போகட்டும் என்று நினைத்து விட்டால், மாதத்திற்கு ஏழு எட்டு விரதம் சத்தமில்லாமல் கடைபிடித்து ரொம்பவும் தான் கொண்டவனை சோதித்து பார்க்கிறாள்.

அடிக்கடி தலை சுற்றல், உடலில் பலம் இல்லாது காய்ச்சல் என படுத்துக்கொள்ள, எல்லாம் இந்த விரதத்தால் என்று கோவத்தில் காச் மூச்சென சத்தம் போட்டு விடுவான் ருத்ரன்.

"இன்னையோட இதெல்லாம் தூக்கி மூட்ட கட்டிட்டு, ஒழுங்கா சாப்பிட்டு உடம்ப பாத்துக்க குயிலுஊ.. இன்னொரு தரம் வாயால சொல்லிட்டிருக்க மாட்டேன்.."

கனமான குரல் உடைய மிரட்டும் தொனியில் சொன்னவன், அவளுக்கு முதுகை காட்டி படுத்துக்கொள்ள, கணவனை ஏக்கப் பார்வையால் வருடி பெருமூச்செறிந்த தேன்குழலி, விடியும் வரை கிருஷ்ணர் பாதத்திலே சரணாகதி அடைந்தாள்.

தொடரும்.

கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு மிட்டாய் குயில் 2 தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சி 😊
 
Last edited:

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 1
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
2
Reaction score
2
Points
3

Super siss
 
Top