- Messages
- 302
- Reaction score
- 217
- Points
- 63
Fantasy with toxic (psycho) Love Story
ராட்சசனின் சுடரொளியே!
அத்தியாயம் 1
கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் பறந்து விரிந்துக் காணப்படும் நீலவானம் நீர்வீழ்ச்சிகள் என்று கண்ணுக்கு குளிச்சியூட்டும் பச்சை பசேர் வனப்பு மிகுந்த இயற்கை காடுகள், அதனுள் வாழும் விலங்கு, பறவை, பூச்சியினங்கள் என இயற்கையை வர்ணிக்க வைக்கும் அழகுகள்.
காலையில் உதித்து மாலையில் மறையும் சூரியன் ஓர் அழகு என்றால் கிழக்கில் காலையில் உதிக்கும் போது கீழ்வானத்தை சிவக்கச் செய்து மாலையில் மேற்கில் மறையும் போதும் அது சார்ந்த கடற்பரப்பை வர்ணமயமாக்கும் அழகோ தனி அழகே!
இரவின் ராணியான வெள்ளிநிலா வளர்வதையும் தேய்வதையும் இயல்பாக கொண்டு தன் வடிவங்களை மாற்றி அதன் அழகை வெளிப்படுத்தும் இதமான அழகு.
பச்சை வண்ண காடுகள் அவை கொண்டுள்ள அழகும் ஆச்சரியங்களும் எண்ணற்றவை.
சிணுங்களோடு சலசலக்கும் ஆறுகள் மலைகளில் உருவாகி பல இடங்களை கடந்து இறுதியாக கடலில் சங்கமிக்கும்.
வரும் வழியில் இந்த ஆறானது ஓடை, நீர்வீழ்ச்சி என பல வடிவங்களை எடுத்து இயற்கையின் அழகையும் கூட்டி பிரம்மிக்க வைக்கும்.
ஐந்து அறிவு உள்ள மிருங்கள் யாவும் அதன் வாழிடமான காடுகளை விட்டு அதுவாக வெளிவந்து மனிதர்களை தொந்தரவு செய்வது இல்லை. ஆனால் மனிதர்கள் அப்படியா?
காட்டில் இருக்கும் இயற்கையில் இருந்து மரம், செடி, கொடிகள் மட்டுமில்லாது மிருகங்களை வேட்டையாடிக் கொன்று அதன் தந்தம் தோல் எலும்பு என்று அதன் நகத்தை கூட விட்டு வைக்காது மனிதர்கள் தான் மிகக் கொடூரமாக நடந்துக் கொள்கின்றனர்.
இப்போது அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக, மக்கள் வாழும் நிலத்தில் தரையில் இருந்து 10, 17, 25 அதற்கு மேலும் வான் தொடும் தூரம் உள்ள அடுக்கு மாடி ரெசார்ட்கள் கட்டியும் அந்த உயரங்கள் போதாமல், கடல்நீரில் கப்பல் ரெசார்ட் தொடங்கி காடுகள் மற்றும் மலைகளில் எல்லாம் பெரிய பெரிய ரெசார்ட்கள் மற்றும் தனி தனி குடில்கள் போன்ற ரெசார்ட்கள், ஓபன் டிரான்ஸ்பரன்ட் ரெசார்ட்கள் என்று வகைவகையாகக் கட்டி, பலவகை இயந்திரங்கள் கொண்டு பலத்த சத்தமெழுப்பி அந்த வேலைகளை செய்து அதில் மனிதர்கள் குடியேறி மிருகங்களையே மிரள வைக்கின்றனர்.
மக்களும் இயற்கை வளத்தை ரசிக்கலாம், திருமணநாளை இயற்கை வளத்தை ரசித்துக் கொண்டே கொண்டலாம், நண்பர்களுக்கு ரிச்சாக பர்த்டே பார்ட்டி கொடுக்கலாம், காதலியை அழைத்து சென்று ப்ரோபோசல் செய்வது, ஹனிமூன், காதலியை மகிழ்விக்கலாம் என்று டேட் செய்து கூத்தடிக்க என்று இன்னும் பலவாராக நாள் ஒன்றுக்கே லட்சக் கணக்கில் பணத்தை ஆடம்பரமாகக் கொட்டித் தீர்த்து சந்தோஷத்தை அனுபவிக்கின்றனர்.
மிருங்களின் நிம்மதியையும் அதனுடைய சுதந்திரங்களையும் பறித்துக் கொண்டு.
அப்படிபட்ட ரெசார்ட் ஒன்றில், மலைகள் மேல் தனி குடில்களாக லக்ஷ்ரியாக அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பரென்ட்டான அறையில், எதற்குமே குறை இல்லாமல் டெலஸ்கோப், மினி ஜர்கூஸி, ஓபன் ஷவ்வர், ஊஞ்சல், டபுள் குஷன் சேர்ஸ் என்று பால்கணி போன்ற அமைப்பு உள்ள இடத்திலேயே கலக்கலாக இருந்தது.
உள்ளே கிங் ஸைஸ் மெத்தையை சுற்றிலும் வெள்ளை நிற (கர்ட்டன்ஸ்) திரைசீலைக் கட்டி தொங்க விடப்பட்டு, உள் அமைப்பும் வெளி அமைப்பும் பார்ப்பதற்க்கே இரண்டு கண்கள் போதாது என்பது போல, மேலே கண்ணாடி திரையில் இரவில் தெரியும் நட்சத்திரமும் நிலாவையும் பார்க்க அத்தனை குதூகலமாக கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் விதமாக இருந்தது.
அட நட்சத்திரத்தையும் நிலாவையும் பாக்குறதுக்கு, நம்ம வீட்டு மொட்டை மாடி போதாதா, அதுக்கு எதுக்கு அம்புட்டு தூரம் போயி லட்சம் கணக்குல செலவு பண்ணனும்னு நமக்கு தோணுது, ஆனா அது அவய்ங்களுக்கு தோணலையே!
ஆடம்பரமான நான்கு பேர் படுத்து உருளக் கூடிய பெரிய மெத்தையில் கிடந்த வெள்ளை போர்வையில் மூழ்கி ஓஓ.. வென்று முகத்தை மூடி கதறி அழுத்து கொண்டிருந்த கலைந்த ஓவியமாக காட்சியளித்த அப்பாவி மங்கைக்கு, தன்னை யார் கெடுத்தது என்று கூட அறியாமல் அவள் கற்பை பறிக்கொடுத்து விட்டு, தன் காதலன் முன்பு இப்படியே போய் எப்படி நிற்பது?
அவன் தன்னைப் பற்றி என்ன நினைப்பான் என்ற பயத்தில் இன்னும் அழுகை பீறிட, அவளை இந்நிலையில் தேற்றக் கூட ஆளில்லாமல் தன்னந்தனியாக அந்த காட்டில் உள்ள தனிகுடில் ரெசார்டில் அழுதுக் கொண்டு இருந்தாள் இதழினியமுனா.
எத்தனை நேரம் தனிமையில் கரைந்து மனம் நொந்து அழுதாளோ! போர்வையை தன் மேல் சுற்றிக் கொண்டு எழ முயற்சித்து தரையில் கால் ஊன்றி மேஜையை பிடிமானமாக ஒரு கையால் பிடித்துக் கொண்டு நின்றவளுக்கு, இடுப்பில் இருந்து கால்கள் எல்லாம் அவள் உடலோடு இல்லாத உணர்வு. மார்புகளை அறுத்து வீசி விட்டால் என்ன என்பது போல் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் கொடுமையான வலியை உணர்த்தியது.
தன்னை இந்த அளவுக்கு சித்ரவதை செய்து சீரழித்தவன் யார்? என்ற கேள்வியோடு அதை நினைக்கும் போதே அழுகை அவளின் யமுனா என்ற பெயரை போலவே நதியாக கண்களில் பெருக்கெடுத்து ஓடியது.
மூலைக்கு ஒரு பக்கம் வீசி எரியப்பட்டிருந்த அவள் உடைகளை ஒவ்வொன்றாக குனிந்து எடுத்துக் கொண்டு, அங்கேயே உள்ள ஓபன் ஷவ்வரில் திரைசீலைகளை முற்றிலுமாக இழுத்து விட்டு சூடான நீருக்கு அடியில் நின்றவள், எதிரே ஆள்உயரம் உள்ள கண்ணாடியில் அவள் முழு வின்பம் கண்டு தன்னையே அருவருத்துப் போனாள் யமுனா.
யாரென்று முகம் தெரியாதவனால் தன் கற்பை குலைக்க இப்படி ஒரு கருப்பு நாள் வரும் என்று தெரிந்திருந்தால், இப்படி ஒரு இடத்திற்கு எப்பேர்ப்பட்ட உயிர் போகும் நிலையிலும் வருகை தந்திருக்கவே மாட்டாள்.
பெற்றோர்கள் அனாதையாய் கை விட்ட நிலையில் காதலனுக்காக, காட்டில் உள்ள பெயர் போன அவள் இப்போது இருக்கும் ரெசார்டில், அவள் இருக்கும் குடில் அறைக்கு இன்சார்ஜராக வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. அவள் தோழி ஒருத்தி மூலம் கிடைத்த வேலை இது.
பிடித்தமே இல்லாமல் தான் வேறு வழி இல்லாமல் இங்கு வேலைக்கு சேர்ந்தாள். தனி குடில் போன்ற அமைப்பு கொண்ட ரெசார்ட் மொத்தம் வரிசையாக 20 இருந்தது. மேலே இருக்கும் ரெசார்ட் குடில் ஒவ்வொன்றுக்கும், கீழே அங்கு தங்க வருவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கும் உயர்ரக உணவுகளை எல்லாம் சமைக்க தெரிந்த ஷெப், ஹெல்பர்ஸ் என்று நிறைய பராமரிப்பாளர்கள் தங்கி இருப்பார்கள்.
அங்கு பெருக்கும் வேலை செய்பவர்களுக்கு கூட குறைந்தது மூன்று மொழிகளாவது தெரிந்து இருக்க வேண்டும் அங்கு வேலை செய்ய.
ஏனெனில் பல மாநிலங்களில் இருந்தெல்லாம் கூட நிறைய சுற்றுலா பயணிகள் இயற்கை சூழலை தம் தமது இணைகளுடன் தனியாக ரசிக்க, புக்கிங் செய்து வருகை தருவதால்.
அந்த இடம் நடுக்காட்டில் உள்ளதால், அங்கு வேலை செய்பவர்களும் ரெசார்ட் குடிலுக்கு அவர்களுக்காக அமைக்கப்பட்டு தனியாக கொடுக்கும் அறைகளில் தங்கிக் கொள்ளலாம்.
யமுனாவும் கீழே உள்ள ஓர் அறையில் தான் தங்கி வேலைப் பார்க்கிறாள். அங்கு அவள் மட்டும் இல்லை அவளோடு மற்ற வேலை பார்க்கும் பெண்களும் தங்க வேண்டும், கிட்டதட்ட ஹாஸ்டல் போல் தான். மொத்தம் நான்கு பேர் அதில் இருவர் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்று விட இப்போது யமுனாவும் இன்னொரு பெண்ணும் இருக்கிறார்கள்.
எல்லாம் அவள் வயதையொத்த பெண்கள் தான் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்கள் இவள் மட்டுமே தமிழ் பெண், ஆனால் யமுனாவோடு நன்றாக ஒட்டிக் கொண்டனர். அதுவே அவளுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது.
ஆனால் அந்த நிம்மதி எல்லாம் கூட நிலைக்காத வண்ணம் இன்று அவள் வாழ்வு கேள்விக் குறியாகி போனது தான் சாபமோ!
அவளின் இந்த 24 வருட வாழ்க்கைப் பயணத்தில் பல அவமானம் மற்றும் துரோகங்களை சந்தித்தவள் இன்று விதியின் விளையாட்டால் அவள் கற்பை இழந்து, தன்னையே வெறுத்து, உயிருக்கு உயிராக காதல் செய்யும் அவள் காதலன் திலீபனுக்கு என்ன பதில் சொல்வது அவன் முகத்தில் இனி எப்படி முழிப்பது என்றவாரு கலங்கிப் போய் பல சிந்தனையில் உழன்றபடியே, அவள் உடையான சந்தன நிற காட்டன் பேட்ச் வைத்த யூனிபோர்ம் சேலையை மனம் வெறுத்த நிலையில் மெதுவாக கட்டிக் கொண்டு அந்த குடிலை விட்டு வெளியேறி, கீழ் இருக்கும் அவள் அறைக்கு சென்றாள் இதழினி யமுனா.
கண்கள் மூடிய முகத்தில் ஃபைல் ஒன்றை கவிழ்த்து விட்டபடி சுழல் நாற்காலியில் அமர்ந்தவாறே ஷு அணிந்த கால்களை தூக்கி மேஜையில் போட்டு ஆட்டியவாறு இருந்தவன் முன்பு "சார்... இந்தாங்க நீங்க கேட்ட டீ..." என்று பம்மியபடி நீட்டினான் ஸ்டீஃபன்.
ஸ்டீஃபனின் குரல், கண்கள் மூடி இருந்தவன் காதில் எதிரொலிக்க, உடற்பயிற்சியின் மூலம் உரமேறிப் போய் இருந்த அவன் நரம்புகள் புடைத்து நின்ற தடித்த கரம் உயர்த்தி முகத்தில் மூடி இருந்த ஃபைலை படிப்படியாக கீழ் இறக்கினான் அவன்.
ஏசிக் காற்றில் ஆடும் சீராக வெட்டப்பட்டு இருந்த கருப்பு கேசம், உயர் நெற்றி, அடர் கருப்பு புருவங்கள், கூர் விழிகள் இரண்டிலும் வானநீல நிற கோலிகுண்டாய் உருண்டது விழிகள். கத்திக்கு பதில் அவன் மூக்கே போதும் குத்திக் கிழிக்க, ட்ரிம் செய்யப்பட்ட மீசையும் லேசாக கன்னத்தில் ஷேப் கொடுத்து வெட்டப்பட்டிருந்த தாடிக்கும் நடுவே அழுத்தமான சிவந்த உதடுகள் தொண்டைக் குழியில் ஏறி இறங்கும் அந்த சிறு குண்டும் கட்டுமஸ்த்தான படிக்கட்டு தேகமும் கண்டு, பார்க்க இவன் எத்தனை அழகாக உள்ளான் என்று நினைப்பது தான் தவறு.
இயற்கை அழகுகளில் என்ன தான் ப்ரம்மிக்க வைக்கும் அழகுகள் நிரம்பி இருந்தாலும் அதில் உள்ள ஆபத்துகளை போல, அழகான தோற்றத்தைக் கொண்ட இவனுக்குள்ளும் பலவித பேராபத்துகள் கொட்டிக் கிடக்கிறது.
பளபளப்பான தேகம் கொண்டவன் பார்ப்பதற்கு, 90%சதவிகிதம் இந்தியனாகவும், மீதி 10%சதவிகிதம் வெளிநாட்டவன் போலவும் இருப்பான். அம்மா ஆன்ரோகல்ஸ் யூஎஸ், அப்பா சிவராமபூபதி இந்தியன்.
பணத்தின் மேல் அலாதி பிடித்தம் உள்ள சிவராமன் அவருக்கு பார்த்த மிடில் கிளாஸ் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று யூஎஸ் ஓடி வந்தவர், பல நிறுவனங்கள் கொண்ட வங்கிகளுக்கு சொந்தக்காரியான ஆன்ரோகல்ஸை காதல் செய்து வெளிநாட்டவர் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.
யார் தயவுமின்றி தனியாக வங்கித் தொழில் தொடங்கி அவன் அன்னை தந்தையின் தொழிலீட்டையே பின்னுக்கு தள்ளிவன், இப்போது வெளிநாடு விட்டு இந்தியாவிலும் அவன் வங்கியை தொடங்கவிருக்கிறான் யுகன் ஷிவேஷ்.
இன்னும் மூடிய கண்ணை திறவாமல் கண்கள் மூடி இருந்தவனை பார்க்க, ஸ்டீஃபன்க்கு கைகால்கள் உதறல் எடுக்கத் தொடங்க, மற்றுமொருமுறை "சார் டீ ஆருது..." என்றான் உள்ளே போனக் குரலில். நீல விழிகள் கொண்ட ருத்ரவிழி கண்களை சட்டென அவன் திறக்கவும் நடுங்கி விட்டான் ஸ்டீஃபன்.
மீண்டும் அவன் முன்பு "சார்..." என பம்பலாக டீ கோப்பையை நீட்ட, அதை அமைதியாக வாங்கியவன் கண்ணிமைக்கும் நொடியில் ஸ்டீஃபன் முகத்தில் வீசியடிக்கப் பட்டது அந்த டீ.
சூடு தாங்காமல் எரிச்சலில் அலறிக் கொண்டு இருந்தவனை கண்டு இதழ் கோணி நகைத்தவன், "இப்ப சொல்லு ஸ்டீஃபன், டீ சூடா இருக்கா ஆறிப்போய் இருக்கா..." என்றான் அழுத்தமான இதழ் விரித்து மிரள வைக்கும் குரலில்.
"நோ சார்.. நல்லா சூடா தான் இருந்துச்சி.." என்றான் தன் வலியை அவன் எதிரில் காட்டாத முகபாவனையோடு.
"ம்ம்.. குட்.. அப்ப போய் இதை விட நல்ல சூடு ஜாஸ்தியா இன்னொரு டீ கொண்டு வா" கணீர் குரலில் உத்தரவிட்டவன், மீண்டும் அவன் முகத்தில் ஃபைலை வைத்துக் கண் மூடியவன் கண்முன்னால் வந்து நின்று முத்துப் பற்கள் தெரிய சிரித்தாள் அவனுக்கே அறியாமல் அவன் மனம்கவர்ந்த பேரழகி ஒருத்தி.
எல்லாம் பழகிப் போன ஒன்று தான். அந்த டீ ஆறிப் போனாலும் முகத்தில் பறக்கும், சூடாக இருந்தாலும் முகத்தில் தான் பறக்கும், யுகன் ஷிவேஷ் ஏதாவது முக்கியமான பயங்கர யோசனையில் இருக்கும் போது தொந்தரவு செய்தால்.
ஆகையால் அமைதியாக அந்த ப்ரமாண்டத்திற்கு குறைவில்லாது இருந்த யுகனின் அலுவலக அறைக் கதவை திறந்துக் கொண்டு வெளியேறினான், யுகனின் நம்பிக்கைக்கு பேர் போன விசுவாசியான ஸ்டீஃபன் மற்றுமொரு டீ போட.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 1
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.