Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
204
Reaction score
203
Points
63
அத்தியாயம்-1

சாரு. சாரு. அடியே சாரு. அடங்க மாட்டியா டி நீ.
எரும கடா வயசாகியும் உன்னோட இந்த பழக்கம் மட்டும் என்னைக்கும் உன்ன விட்டு மாறவே மாறாதா. என்றபடி வசைப்பாடி கொண்டே கையில் தோசை கரண்டியோடு அவளை தேடிக் காட்டுக் கத்தல் கத்தி கொண்டு இரவு இரண்டு மணிக்கு, மொட்டை மாடிக்கு வந்தால் மாலினி.
அடி அடி என வெளுத்து வாங்கும் மழையில், முழுதாக நனைந்த படி. கைகள் இரண்டையும் காற்றில் விரித்து மாடியில் மஞ்சள் விளக்குகள் ஒளிர இரவு வேளையில் ஸ்சூஉஉஉ. என்று பெரும் சத்தத்தோடு சலசலத்து வானில் இருந்து கொட்டும் வெள்ளி அருவியாக பெய்யும் மழையில். முகத்தை வான் நோக்கி காட்டி மழையுடன் கொஞ்சி பேசி, காதல் செய்து, ஒவ்வொரு மழை துளி அவள் மென்இதழில் படும் வேளையில் முத்தம் கொடுத்து விளையாடி கொண்டு இருந்தால் சாரல்.
அவள் பேருக்கு ஏற்றார் போலவே அவளுக்கு சிறு வயதிலிருந்தே மழை என்றால் அத்தனை பிரியம். இருவரும் நல்ல நெருங்கிய நண்பர்கள் என்று கூட சொல்லலாம்.
சிறிதாக தூறல் போடும் சாரல் மழை பெய்தாலும் சரி,
இடியுடன் கூடிய பெருத்த சத்தத்துடன் மழை பெய்தாலும் சரி, கோடைக்கால மழை பெய்தாலும் சரி, எந்த சீதோஷன மழை வந்தாலும் சரி.
மழை வந்தால் சாரல் இல்லாமல் போகுமா.
அதே போல் இந்த சாராலும் இருப்பாள். அதுவும் இது மழை காலம் வேறு, அவளுக்கு சொல்லவா வேண்டும். மழை வரும் போது அதில் முழுவதுமாக நனைந்து மழை துளிகளை ரசித்து, அவள் முகத்தில் படும் ஒவ்வொரு மழை துளிக்கும் முத்தங்களை வாரி இறைத்து, அவள் கையில் பட்டு தெறிக்கும் மழை துளிகளை சேகரித்து அதை மீண்டும் வானுக்கே முகத்தில் நீரை தெளிப்பதை போல வான்னோக்கி தெளித்து, மழை துளிகள் பட்டு, குளிரில் நடுங்கி கொண்டு இருக்கும் மரம் செடி கொடிகளை ஆட்டி விட்டு. அது சேகரித்து வைத்துள்ள மழை துளிகளில் நின்று நனையும் போது அதில் ஒரு சிலிர்ப்பு உண்டாகுமே ப்பா. அப்டி இருக்கும். அது தரும் சிலிர்ப்பில் துள்ளி குதித்து நடனம் ஆடி, மழைநீர் மண்ணில் கலந்ததும் காற்றில் கலந்து வரும் மண்வாசனையை நுகர்ந்து, அந்த வாசனையை உள்ளிழுத்து என்று ஆனந்தமாய் மழைவுடன் ஆகிய ஒவ்வொரு நிமிடங்களையும் ரசித்து மகிழ்வால் சாரல்.
இதோ இப்போது நல்லிரவு மணி இரண்டு.
இந்நேரத்தில் அவளின் அறையில் சன்னல் ஓரத்தில் போட பட்டுள்ள படுக்கையில் படுத்து சாரு நன்றாக உறங்கி கொண்டு இருக்க. லேசாக திறந்து இருந்த சன்னலின் வழியே பலத்த காற்றின் மூலம் இந்த பூமிக்கு தான் வரவிருக்கும் செய்தியை, சிறு சிறு மழை துளி சாரல் காற்றில் கலந்து, அவள் முகத்தில் படும் படி வீசி உணர்த்தியது அவள் மழைத் தோழி.
அதில் சரியாக ஒரு துளி கூட இல்லை அதிலும் ஒரு துளிக்கும் குறைவாக உறங்கி கொண்டு இருந்தவளின் பட்டு இதழில், பட்டு தெறிக்க.
அத்தனை உறக்கத்திலும் மெலிதாக சிரித்த சாரல். தன் தோழியின் வரவை எண்ணி மகிழ்ந்து கொண்டே அவள் இதழில் உள்ள சிறு துளியை அவள் நாவல் இதழை வருடி, உள்ளிழுத்து உற்சாகமாக எழுந்து சென்று சன்னலின் வெளியே வானத்தை பார்த்தால்.
சீக்கிரம் வா சாரல், நீ வந்தால் தான் நான் வேகமாக வருவேன் எனும் ரீதியில் ஆங்காங்கே சிறு சிறு தூரல் பொட்டுகளாக போட்டு வானத்தில் சத்தம் இல்லாமல் மின்னல்கள் மின்னி கொண்டு தன் உயிர் தோழியின் வரவுக்காக அந்த மழையே சாரலை எதிர் பார்த்து காத்து இருக்க.
அதை எல்லாம் ஒரு வித சிலிர்ப்போடே கண்டு மகிழ்ந்த சாரல்.
இதற்கு மேல் தான் போகாமல் விட்டால், சலசல சத்தத்தோடு கலகலவென சிரித்து கொண்டே பூன்தூரலாய் கொட்டி வரும் தன் தோழி மழை.
கோவித்து கொண்டு சோகத்தில் அழுது கொண்டே உர்ரென ஊமை மழையாய் வந்து. அடுத்து எப்போது வருவேன் என்று என்னிடம் சொல்லாமல் போக்கு காட்டி நான் அசந்த நேரத்தில் சிறிது மட்டும் பொழிந்து விட்டு போய் விடுவாள் என நினைத்து.
மிக மெதுவாக அடி மேல் அடி எடுத்து நடந்து வந்து வெளியே ஹாலில் உறங்கி கொண்டு இருக்கும் மாலினிக்கு தெரியாமல்.
மொட்டை மாடி வந்தவல் முகத்தை வான் நோக்கி காட்டி இரு கைகளையும் வா என்பது போல் விரித்து காட்டி.

காற்றே சரி சரி கம சரி கம.
பூவே கம கம கம கம.
நதியே கல கல கல கல.
மழையே சல சல சல சல.
இசையே தக தக திமி தக திமி.
கவியே சந்தங்கள் கொஞ்சி.
முகிலே சிறு சிறு சிறு சிறு சிறு.
அணிலே துரு துரு துரு துரு.

இதற்காக தானே இத்தனை நேரம் காத்திருந்தேன் என்பதை போல வேகமாக தூறல் மழையாக ஆரமித்து, முதலில் சாரலின் பட்டு கன்னத்தை முத்தம் இட்டு சலசலவென்று பூமியில், அவளின் வழுவழுக்கும் "வெல்வெட்டு தேகத்தை" முழுவதுமாக நனைத்து கொண்டே இறங்கியது
சாரலின் மழைத் தோழி. அதை உணர்ந்தவள்.

என் ஜன்னல் வந்த காற்றே.
ஒரு தேநீர் போட்டு தரவா.
உன் வீட்டில் வந்து தங்க.
பெண் தோழியாய் நானும் வரவா. என் வாசல் கோலம் பார்த்து.
ஒரு கவிதை சொல்லும் வானம். என் கைகள் கோத்துக் கொள்ள.
அட காற்றுக்கென்ன நாணம். நான் கால்கள் கொண்ட தென்றல். நடமாடும் சாலை மின்னல்.
நான் கூந்தல் கொண்ட மேகம்.
நலமாக பாடும் ராகம்.
நீ கவிதை கொஞ்சம் குயிலே.
நீ பாடப் பாட சுகமா.
உன் கையொப்பம் தான் கேட்டேன். நான் மட்டும் தனியாய் வரவா.
காற்றே சரி சரி கம சரி கம.
பூவே கம கம கம கம.
நதியே கல கல கல கல.
மழையே சல சல சல சல.
இசையே தக தக திமி தக திமி.
கவியே சந்தங்கள் கொஞ்சி.
முகிலே சிறு சிறு சிறு சிறு சிறு.
அணிலே துரு துரு துரு துரு.

கவலைகள் மறந்து கொட்டும் மழையில் பாட்டு பாடிக்கொண்டே நடனமாடி.
அடியே. என் செல்ல பட்டு. உன்ன நான் காலைல இருந்து எதிர் பாத்து எதிர் பாத்து எவ்ளோ தேடின தெரிமா.
ஆனா நீ எல்லாரும் தூங்கினது அப்பறம் நடு ராத்திரி திருட்டு தனமா என்ன பாக்க வந்துருக்க.
ஹ்ம்ம். என இடுப்பில் கை வைத்து அவளின் தோழியை செல்லமாக முறைக்க.
அவளின் செல்ல கோவத்தையே தாங்க முடியாமல், அவளை சமாதானம் செய்யும் நோக்கில். அதுவரை அமைதியாக இருந்த மின்னலயும் இடியையும் துணைக்கு அழைத்த மழை.
மின்னலுடன் பட் படீர்.என்று இடி சத்தம் முழங்க.
ஸ்சூஊஊஊ. என வானில் இருந்து கொட்டும் மழைநீர் அங்கும் இங்குமாய் அலைப்பாந்து நடனமாடி தன் தோழியை சமாதானம் செய்ய.
அதில் வாயில் கைவைத்து கலகலவென்று சிரித்து கொண்டு இருந்த சாரலை, அவளின் அம்மா மாலினி கையில் தோசை கரண்டியுடன் மாடி வாசலில் சாய்ந்த வன்னம் கோவமாக முறைத்து கொண்டு இருந்தார்.
மகிழ்ச்சியாக சிரித்து கொண்டே திரும்பிய சாரல். அப்டியே அதிர்ச்சியாகி, ஷாக் அடித்தார் போல் நின்றது ஒரு சில நிமிடங்கள் தான். உடனே மாலினியை பார்த்து அசடு வழிய. ஈஈ. பல்லை காட்டி. மீ. நீ எப்ப வந்த மீ. சரி சரி வந்ததும் தான் வந்துட்ட வா மீ.என் பிரண்ட் கிட்ட ஒரு ஹாய், ஹலோ சொல்லிட்டு நலம் விசாரிச்சிட்டு போ என்று மாலினி கையை பிடிக்க போக.
ஏய். ஏய்ய். அங்கேயே நில்லு டி. பதறிய படி என்ன இந்த ஈரத்தோட தொட்ட. அப்புறம் நாளைக்கு சொந்த பந்தம் எல்லாம் என்னை பத்தி உன்கிட்ட தான் நலம் விசாரிப்பாங்க.
இந்த லட்சணத்துல நான் இந்த மழைய வேற நலம் விசாரிக்கணுமா.
ஏன் டி, உனக்கு கொஞ்சமாச்சம் அறிவு இருக்கா இல்லையா. மூணு வயசுல சாப்பிட அடம் பண்றியேன்னுnஒரு நாள் மழை வந்தப்போ அதுல உன்ன விளையாட்டு காட்ட நனைய வச்சி நான் சோறு ஊட்டின பாரு என்ன சொல்லணும் என்று தலையில் அடித்து கொண்டவரை பாவமாக பார்த்தால் சாரல்.
அன்னைக்கு தொடங்கின இந்த மழைல நெனஞ்சி தனியா மழை கூட பேசி சிரிக்கிறத. இன்னும் நிறுத்தல. வயசு பொண்ணு இப்படித்தான் நடு ராத்திரில இந்த கும் இருட்டுல வந்து பேய் மழைல நின்னு ஆட்டம் போடுவியா சாரு. வயசு பொண்ணு இப்டி நீ தனியா பேசி சிரிச்சா பாக்குறவங்க என்ன நினைப்பாங்க.
உன்கிட்ட இப்டி பண்ணாதேன்னு எத்தனை தடவ சொன்னாலும் புரியாதா. என மூச்சு விடாமல் அடுக்கிக்கொண்டே போக.
அதை எல்லாம் கேட்ட சாரலுக்கு தான் மூச்சு வாங்கியது. மாலினி பேச பேச.
மீ. மீ. போதும் மீ நிறுத்து. இப்ப என்ன ஆகி போச்சின்னு எனக்கு நீ மிட்நைட்ல கிளாஸ் எடுத்துட்டு இருக்க. மழையில் தொப்பளாக நனைந்து ஈரம் சொட்ட சொட்ட வாயடிக்கும் சாரலை கண்டு முறைத்தவர்.
என்ன டி இன்னும் ஆகணும். எல்லாம் உங்க அப்பா கொடுக்கிற செல்லம் அவர மொதல்ல சொல்லணும். போதும் நீ மழைல ஆட்டம் போட்டது கீழ வாடி. பாரு எப்டி தொப்பலா நெனஞ்சி போய் இருக்கன்னு. சாரலை பேச விடாமல் கொண்டு வந்த தோசை கரண்டிக்கும் வேலை இல்லாமல் இழுத்து சென்றால் மாலினி.
சித்ரா. இன்னும் என்னமா பண்ற உன்கிட்ட டீ கேட்டு பத்து நிமிஷம் ஆச்சி ஆனா நீ மேலையே பாத்துட்டு நிக்கிற. ஜனார்த்தனன் சொல்ல
சித்ரா கையை பிசைந்து கொண்டு சும்மதான் ஒன்னும் இல்லங்க. இதோ போய் டீ எடுத்துட்டு வர என்றவர் அடுகளைக்குள் சென்று விட்டார்.

ம்மா. சீக்கிரம் எனக்கு டியூட்டிக்கு டைம் ஆகிடுச்சு சாப்பாடு எடுத்துவை என்றபடியே அவள் திமிர் பாவனையுடன் காக்கி சட்டை விகிதம் வந்து சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தால்.
ரியா ஜனார்த்தனன்.சப் இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்.

சித்ரா தன் கணவருக்கு டீயை கொடுத்து விட்டு, ரியாக்கு சாப்பாடு எடுத்து வைத்து கொண்டே, ஊர்ல உலகத்துல எங்கயாவது இங்க நடக்குற கூத்து நடக்குமா. நான் பெத்த மூணுல, மூணும் ஒவ்வொரு ரகம். எது என் பேச்ச கேக்குது.
புலம்பி கொண்டு இருக்க.

சாதுவான மங்களகரமாக
முகத்துடன் அழகாக புடவை கட்டி தோலில் பேக் மாட்டிக்கொண்டு கையில் புத்தகங்களை வைத்து கொண்டு வந்து அமர்ந்தால்
தியா ஜனார்த்தனன். ஒரு பிரபல கல்லூரியில், பேராசிரியையாக பணி புரிகிறாள்.

ரியா தியா இருவரும் ரெட்டையர்கள். இருவரும் ஒரே உருவத்தில் இருந்தாலும் குணாதிசதயங்கள் வெவ்வேறு.
அக்கா தியா அமைதியின் மறுஉருவம் என்றால்
தங்கை ரியா திமிரின் மறுஉருவம்.

தியா யாரிடமும் அதிர்ந்து கூட பேசமாட்டாள் பயந்த சுபாவம் குடும்பம் என்றால் அந்தனை பிரியம்.

ரியா மற்றவர்கள் பேசுவதற்கு முன்னமே என்ன பேச வருகிறார்கள் என கணித்து நல்லதா இருந்தால் அமைதியாக கேட்டு கொள்வாள். இல்லை என்றால் மறுபடி அவர்களால் திரும்ப பேச முடியாத படி செய்து விடுவால்.
ஆனால் குடுப்பத்தினரிடம் பாசமாகவும், குறும்புதானமாகவும் நடந்து கொள்வாள்.

ம்மா. என்னாச்சி மா, ஏன் இப்டி புலம்பிட்டு இருக்க தியா தான் கேட்டாள்.
ஏன் தியா, அம்மா எதுக்கு இப்டி புலம்புறாங்கன்னு உனக்கு நல்லாவே தெரியும் தெரிஞ்சும் நீயும் சலிக்காம இதையே தான் தினமும் கேக்குற.
அம்மாவும் சலிக்காம திரும்ப திரும்ப ஒரே பல்லவிய தான் பாடறாங்க
அப்புறம் ஏன் ரியா உண்டுக் கொண்டே கேட்க.

மச்.சும்மா இரு ரியா, எல்லாம் உனக்கு விளையாட்டு தான் தங்கையை கடிந்து விட்டு சித்ராவை பார்த்தால் தியா

சித்ரா, தன் புடவை தலைப்பால் கண்ணை துடைத்து கொண்டு எல்லாம் உன் அருமை அண்ணனை பத்தி தான் மா. 30 வயசாகுது இன்னும் பொறுப்பில்லாம இப்டி பாக்குற பொண்ணை எல்லாம் கல்யாணம் வேணான்னு தட்டி கழிச்சிட்டே போனா. அவனுகப்புறம் இன்னும் நீங்க ரெண்டு பொம்பள பிள்ளைங்க இருக்கீங்க. உங்களுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சி, அவன் இப்டி பண்ணா எப்டி தியா என்று கண்ணை கசக்க

இதை கேட்ட தியாக்கு கஷ்டமாகி போனது. ரியாவும் தன் அண்ணனை நினைத்து வருந்தாமல் இல்லை.

ஜனார்த்தனன் இதில் தான் என்ன சொல்வது என ஒன்னும் புரியாமல் தன் கண்ணாடியை கழட்டினார்.

இவர்களின் கவலை கொள்ளும் நம் நாயகனோ.
நீல நிற கோர்ட் சூட் விகிதம் நெற்றி வரை தொட்ட கேசம் ஏசி காற்றில் சிறிது அலைப்பாய்ந்து கொண்டிருக்க அதை ஒரு கையால் சரி செய்து, இடது கையில் டாம் போர்ட் பிராண்டர்ட் வாட்ச் அணிந்து கால்களில் கருப்பு வண்ண ஷூ என்று கம்பீரமான நடையில் தன் அறையில் இருந்து நேர் கொண்ட பார்வையுடன் வந்தான். மாநிறம், ஆறடிக்கும் சற்று அதிகமான உயரம், நீண்ட அளவான முகம், தடித்த உதடு, அதில் உதடு பிரியா சிறு புன்னகையுடன், வந்து அமர்ந்தான்
ருத்ரதேவன்.

படித்து முடித்து தந்தையின் தொழிலை, எடுத்து நடத்தி அதில் பெரும் அளவு வெற்றியும் கண்டு கொண்டு இருக்கிறான்.
தாய் தந்தை தங்கைகள் என்றால் அத்தனை பாசம் இவர்கள் நால்வர் மட்டுமே அவன் உலகம்.

தொழில் விடயங்களில் மட்டுமே அவன் பேருக்கு ஏற்றார் போல் ருத்ரனாக கண்டிப்புடன் இருப்பான்.
குடும்பம் நண்பர்கள் என்று வந்து விட்டால் சிரித்த முகமாக வளம் வருவான். தண்ணி தம் இது போன்ற எந்த பழக்கமும் இல்லாதவன்.

இப்போது அவனும் , அவன் அம்மாவும்
சில காலமாக பேச்சி வார்த்தையில் இல்லை.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 1
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top