• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 10

"டேய் மதனு அவகிட்ட போயி என்னாச்சினு கேளு" ருத்ரனின் பார்வை மழையில் நனைந்த முல்லை மலராக இமைகள் படபடக்க நின்றிருந்த மாமி மீது மிக கவனமாக படிந்ததை போல் அவளின் பஞ்சரான ஸ்கூட்டி மீதும் படிந்தே மீண்டது.

"அண்ணையா பாத்தா தெரியல வதினா வண்டி பஞ்சர் போல அதா நிக்குது. இதுல என்னத்த போயி தனியா கேக்க." பாவம் மதனின் பார்வை மாமியின் வண்டி மீது ஆராய்ச்சியில் இருந்ததால் ருத்ரங்கனின் முகத்தை பார்க்கத் தவறிப் போனவன் தொடையில் சிகரெட் சூடு ஆழமாக பதிந்ததில் "ஸ்..ஆஆ..அண்ணையாஆஆ.." சத்தம் போட்டு அலறப்போனவன் வாயை ஷ்.. என தீ பார்வையால் அடக்கி இருந்தான்.

"இ..இதோ.. இதோ போயி கேக்குறேன் அண்ணையா.." சிகரெட் சூடு பட்டு ஆழமாக காயம் பட்டதின் வலியை அவன் முன்பு காட்டிக் கொள்ளாமல் அடித்துப் பதறி வெளுக்கும் மழையில் இறங்கி ஓடி இருந்தான் மாமி முன்பு.

"என்னாச்சி வதினா, நுவ்வு எந்துக்கு இக்கட உன்னாவு?" (எதுக்கு இங்க நிக்கிறீங்க) ஏதோ நன்கு பரிட்சியமானவன் போல் கேட்கவும், அவன் தோற்றம் பார்த்து பயந்து போனாள் குழலி.

பெயர் தான் மன்மதன் ஆனால் ஆள் பயங்கர டெரர் பார்ட்டி. ருத்ரங்கனிடம் அவன் காட்டும் அமைதியும் பொறுமையும் மற்றவர்களிடம் சிறு துளி கூட காட்டமாட்டான். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தான். இப்போது குழலியிடம் காட்டும் அக்கறையும் மரியாதையும், ருத்ரனும் குழலியும் வெவ்வேறு இல்லை என்று அவனது ஏழாம் அறிவு உணர்த்திவிட்டதாலோ என்னவோ!. மீசையும் தாடியும் செம்பட்டை பிடித்த புதர் மண்டையும் பார்த்து பயந்து போன குழலி நான்கடி பின்னால் வைக்க, "வண்டி பஞ்சரா வதினா" அவள் பயம் கொள்வது அறியாமல் அவனும் முன் செல்ல மேலும் பயந்து போனாள்.

அதிலும் அவன் மொத்தமாக தெலுங்கில் பேச ஒரு மண்ணும் புரியாது, பதில் பேசாமல் போனை எடுத்து வெங்கட்டிற்கு கரம் நடுங்க அழைப்பதை காரில் இருந்து பார்த்தே, இதழ் கோணி நகைத்தான் ருத்ரங்கன்.

"டேய்.. நாயே அவளுக்கு பாஷ புரியல சட்டு புட்டுன்னு ஒனக்கு தெரிஞ்ச தமிழ்ல பேசு" காதில் மாட்டி இருந்த ப்ளூடுத் வழியாக கடுகடுத்ததில், "சரி அண்ணையா" என தலையாட்டி."அக்கட எங்க காரு ஓரமாக நிக்குது வரீங்களா" பதட்டமாக உரைத்தவன் கன்னத்தில் கரம் நடுங்க அறைந்திருந்தாள்.

"ராஸ்கல்.. யாரு நீ.. ஒரு பொண்ணு தனியா நின்னா தனியா கூப்பிடுவியா.. ஒழுங்கா போய்டு இல்ல என் அண்ணாட்ட சொல்லி முட்டிக்கு முட்டி தட்டி கம்பி எண்ண விட்ருவேன்" கோவத்தில் குயில் ஓவராக சத்தமிட்டதும் தான் அவன் புத்தியில் உறைந்தது அவன் உரைத்த அரைகுறை தமிழ் வசனம் வேறுமாதிரி மாறி போனதை பற்றி.

"ஐயோ வதினா.. நா இல்ல எங்க அண்ணையா தான் உங்கள காருக்கு கூப்ட்டாரு" கைகளை இல்லை என பதட்டமாக விரித்து ஆட்டி நன்றாக அவன் உளறிக் கொட்ட, "யோவ் நீ கூப்ட்டதே தப்பு இதுல உன் நொண்ணன் வேற கூப்பிடுவானா.. இருடா நோக்கும் அவனுக்கும் நான் யாருனு இப்பவே காட்றேன்." கோவத்தில் பொங்கிய குயில் போனை எடுத்து மீண்டும் மீண்டும் வெங்கட்டிற்கு அழைக்க, அதுவோம் நாட்ரீச்சபிள் என்ற வசனத்தை மாற்றுவேனா என்றது.

"வதினா, நேனு செப்பிந்தி கொஞ்சம் அர்த்தமாயிந்டி" (நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன்) பயத்தில் தமிழ் தெரியாமல் அவள் காலில் விழாத குறையாக அத்தனை பெரிய ரவுடி சிறுவன் போல் கெஞ்சிக் கொண்டு இருப்பதை எதையும் கண்டு கொள்ளாத குழலி, "நீ செப்பும் செய்ய வேண்டா சிலையும் செய்ய வேண்டா அக்கட ஓடு" அவன் பாணியிலேயே மூக்குடைத்து "இன்னும் இவா போனை எடுக்காம அப்டி என்ன வேலை பாத்துட்டு இருக்கா" உதட்டசைவில் வெங்கட்டை திட்டிக் கொண்டிருக்க, "இக்கட என்ன சத்தம்" ருத்ரனின் கனீர் குரலில் குழலியின் கையில் சிக்கி சின்னாபின்னம் ஆன அலைபேசியை தவறவிட்டு திட்டுக்கிடலுடன் துள்ளி பிடித்தாள் அவள்.

கம்பீர தோற்றத்தில் அரைக்கை சட்டைல் புஜங்கள் புடைத்துத் திமிர நின்றிருந்த ருத்ரங்கனை ஸ்லோமோவில் நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் அகல விரிந்து இமைக்க மறந்து சில கணங்கள் பார்த்தவாளாக, "இவாளா.. இவா இங்க என்ன பண்றா" என்ற யோசனையோடே பாவமாக இருவரையும் பார்த்திருந்த மதனை முறைத்து வைத்தாள் குழலி.

இருவரிடமும் பேசாமல் அவ்விடம் விட்டு நகரப் போக, "நானும் வீட்டுக்கு தான் போறேன் கார்ல ஏறு" அதிகாரமாக அவன் அழைத்த விதத்தில் 'ஹான்..' என புரியாமல் கண்களை உருட்டி உருட்டி பார்த்த குயிலின் அழகினை இத்தனை அருகில் பார்த்தும் அவன் பொறுமை காத்து நின்றது நிச்சயம் குழலியின் நல்ல நேரம் தான்.

"இவன் என் ஆளுதா, நான் தான் உன்ன கூப்ட்டு விட்டேன், அவன் மொழி தெரியாம சொதப்பிட்டான் வந்து ஏறு" நிதானமாக உரைத்த ருத்ரங்கனை உறைந்த நிலையில் பார்த்தான் மதன்.

"சொன்னது புரியல, இப்போதைக்கு மழ நிக்காது வந்து வண்டில ஏறு" அவன் அதட்டிய அதட்டலில், ஏற்கனவே ஈரம் சொட்ட சொட்ட நடுங்கிக் கொண்டிருந்த மெல்லிய தேகம் சட்டென மேலும் நடுங்கிப் போக, ஏனோ அவன் பயங்கர தோற்றம் கண்டு எதிர்த்து பேசவோ அடுத்த வார்த்தை பேசவோ வார்த்தை எழாமல், அவன் கை நீட்டிய பக்கம் இருந்த காரின் பக்கம் சென்று பின் சீட்டில் ஏறப் போகவும், "ஒய்..பின்னாடி இல்ல முன்னாடி ஏறு" மீண்டும் அவனது கனீர் குரலில் இதயம் திடுக்கிட்டவளாய் தயக்கமாக முன் சீட்டில் அமர்ந்தாள்.

"நம்ம அண்ணையாவா இது! கத்தி துப்பாக்கியால பேசாம வாய திறந்து பேசுறது. ஒருவேள ஆவி கீவி புகுந்திருச்சா" தீவிர யோசனையில் மதன் இருக்கும் போதே, ருத்ரன் அவன் தலையில் தட்டி அழைத்த விதத்தில் தலை டாப் தனியாக கழந்து போகும் வலியில் "ஸ்ஸ்.. செப்பு அண்ணையா.." என்றான் தலையை தேய்த்தபபடி.

"அசிங்கமா தான் டா செப்பனும். உன்ன என்ன பண்ண சொன்னா என்ன பண்ணி வச்சிருக்க. வண்டிய பஞ்சர் ஒட்டி எடுத்துட்டு வா உன்ன வச்சிக்கிறேன்" பற்களை கடித்து விட்டு ருத்ரன் நடையை கட்டியதும் தான் உள்ளடங்கிய மூச்சே வெளிவந்தது.

காரில் அமைதியான சில நிமிட பயணம். ருத்ரனின் அருகில் இருப்பது ஏனோ பயங்கரமான டெவிலின் அருகில் இருப்பதை போன்ற மூச்சடைக்கும் உணர்வு போல் தோன்றியது குழலிக்கு. அதிலும் அவன் அடிக்கடி பார்க்கும் பார்வையில் உடலெங்கும் ஊசி குத்துவதை போல் ஒருமாதிரி கூசிப்போக, காரெங்கும் ஏதோ ஒப்பாத ரத்த வாடை வீசுவது போல் குடலை பிரட்டும் உணர்வு.

(உணர்வு எல்லாம் வேண்டாம் தாயி அது உண்மையாவே ரத்த வாடை தான். ஆளை வெட்டிய அறிவாளில் தெறித்த ரத்தத்தை கூட சுத்தப்படுத்தாமல் பின் சீட்டில கரையாக கிடைக்கவும் தான் உன்னைய முன் சீட்டுல உக்கார வச்சது. இல்லனாலும் உனக்கு சீட்டு முன்னாடி தான், வாந்தி வந்தாலும் அவன் முன்னாடி எடுக்காம பதமா நடந்துக்கத்தா. இல்லாட்டி பிள்ளை வாந்தியா எடுக்க வச்சிப்புடுவான் கேடி)

'அவசரப்பட்டு இவன் காரில் ஏறி விட்டோமோ' என்று அவள் நினைத்திருக்கும் போதே, "மழை நேரத்துல எங்க தனியா போயிட்டு வர்ற" கொஞ்சமும் அடங்காத குரல் காரின் தனிமையில் உயர்ந்து வந்தது.

"அ.அதுவா ஆத்துல சும்மா இருக்க போர் அடிச்சுது. அதான் பீச் பார்க்னு சுத்தி பாக்க வந்தேன். ஆனா பாருங்கோ திரும்ப வரும் போது வண்டி பஞ்சர் ஆகி மழை வரும்னு எதிர்பாக்கலை அண்ணா" அவள் பேச தொடங்கும் போதே அத்தனை ஆர்வமாக அவள் குரலை கேட்டுக் கொண்டு வந்தவன் கடைசியாக அவள் உச்சரித்த அண்ணா என்ற வார்த்தையில் ஆர்வம் வடிந்து கோவம் எக்கச்சக்கமாய் பெருகிப் போனது.

"ஆமா அண்ணா நீங்க என்ன இந்த பக்கம் வேலைக்கு போயிட்டு வரேளா" சற்று சகஜமாக பேச்சி கொடுத்தபடி அவன் பக்கம் திரும்ப, ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மாமியின் அருகாமையில் ஒருமாதிரி கிக்காக உணர்ந்தவனாக, "ரெண்டு பேர வெட்டி வீசிட்டு வரேன் ஒருத்தன முண்டமா இன்னொருத்தன ரெண்டு பீசா" அவன் கூலாக உண்மை சொன்னதில், "அட பெருமாளே" நெஞ்சில் கை வைத்து ஒருநொடி திகைத்து போனாள்.

"ஏன் இப்டி விளையாட்றேள். நேக்கு நெஞ்செல்லாம் அப்டியே படபடப்பா வருது. ஆமா என்கிட்ட வந்து பேசிட்ருந்தாளே அந்த ஆள் யாரு இதுவரைக்கும் நான் அவாள பாத்தது இல்லையே உங்க தம்பியா அண்ணா" மீண்டும் பிபி எகிறிப் போனது குழலியின் அண்ணாவில்.

"சொல்லுங்கோ, யாரு அவா.. உங்க தம்பியா" விடாமல் கேட்டதில் 'ஆமா' என்றான் ஒற்றை பதிலாய்.

"ஓஹ்.. அவா என்கிட்ட என்ன பேசிண்டு இருந்தானு புரியாம பயத்துல அவாள தப்பா நினைச்சுட்டேன். திரும்ப பாத்தா ஒரு சாரி கேக்கணும், நீங்களும் உங்க தம்பிய நான் அடிச்சேன்னு தப்பா எடுத்துக்காதேள் அண்ணா" மீண்டும் அவள் அண்ணாவில் பொறுமை முற்றிலுமாய் உடைந்து கோவத்தில் மீசை துடிக்க அவள் பக்கம் திரும்பி, 'ஏய்ய்..' என முறுக்கிய கைவிரல் நீட்டி ஏதோ கடுங்கோபத்தில் கர்ஜிக்கும் முன், குழலியின் அலைபேசியின் ரிங்டோனில் எரிச்சலானான் ருத்ரங்கன்.

"இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது.. என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே..
இது ஒரு கனவு நிலை.. கரைத்திட விரும்பவில்லை.. கனவுக்குள் கனவாய் என்னை நானும் கண்டேனே..
எனக்கென்ன வேண்டும் என்று
ஒரு வார்த்தை கேளு நின்று.. இனி நீயும் நானும் ஒன்று என சொல்லும் நாளும் என்று.."

அவளின் தற்போதைய மனதிற்கு ஏற்றார் போல் வைத்திருந்த அழகான பாடல் வரிகள் ரிங்டோனில் ஒலித்துக் கொண்டிருக்க, முழுதாக அவளின் அலைபேசி நனைந்து இருக்கவே சட்டென ஸ்வைப் செய்து அட்டன் செய்ய முடியாமல் முதல் முறை முழுதாக ரிங்காகி இரண்டாம் முறையில் எப்படியோ அட்டன் செய்து காதில் வைத்தவளின் முகம் பிரகாசமானது.

"என்ன மாமி ரொம்ப பிஸியோ" அந்த பக்கம் மென்மையாக ஒலித்தது கிருஷ்ணாவின் குரல்.

"அதெல்லாம் இல்ல. போன் மழைல நனைஞ்சிடுத்து அதான் அட்டன் பண்ண முடியாம போச்சி. நீங்க சொல்லுங்கோ ஏன் போன் பண்ணேள்." கொஞ்சும் குரல் குழைந்து பேசுவதிலேயே, அறிந்து கொண்டான் அவள் யாரிடம் பேசுகிறாள் என்று. அதில் சிறிது சிறிதாக கோபம் தலைக்கேற அவளின் உச்சி முதல் பாதம் வரை அளந்து கொண்டிருந்தவன் பார்வை, மொபைல் பிடித்து பேசிக் கொண்டிருந்த வெண்மையான கைவிரலில் புதிதாக போட்டுக் கொண்ட டாட்டூ சிவந்து கன்றி போன நிலையில் பட்டதும், கண்கள் சுருங்க அவ்வெழுத்தை கண்டான்.

VR என்று சிறியதாக இருந்த எழுத்துக்களை புருவ முடிச்சுடன் கண்டு அவள் பேசுவதையும் உன்னிப்பாக உள்வாங்கி கொண்டிருந்தவன் இதழில் மர்மப் புன்னகை தோன்றி மறைந்தது ஏனோ!

"நாள கழிச்சி மறுநாள் நல்ல நாளாம், முகூர்த்த புடவைய அன்னைக்கே எடுத்துக்கலாம்னு உங்காத்துலயும் என் ஆத்துலயும் பேசி முடிவெடுத்துட்டா. அதுனால நாளைக்கே ஆத்துல எல்லாரும் ஆந்திரா கிளம்பி வரா."

"அப்டியா ரொம்ப சந்தோஷம். ஆமா உங்காத்துல இருந்து எல்லாரும் வரானா என்ன அர்த்தம் நீங்க இங்க வரலையா?" என்றாள் எதிர்பார்ப்புடன்.

"எனக்கும் வரணும்னு ஆசதா மாமி. அதிலும் உன்ன பாக்க வர அவ்ளோ ஆர்வம் ஆசை, ஆனா பாரு முக்கியமான பிராஜெக்ட்ல மாட்டிகிட்டேன். அதுக்காக தான் சரி உங்கள எல்லாரையும் தஞ்சாவூர்க்கு புடவை எடுக்க வர சொன்னேன், ஆனா உன் அண்ண வெங்கட்தா கேஸ் இருக்கு பூசிணிக்கா இருக்குனு எல்லாத்தையும் கெடுத்துட்டான்." அவளை பார்க்க வரமுடியாத கோவத்தில் அவன் பற்களை கடிக்கவும் மென்புன்னகை அவள் இதழினில்.

"சரி விடுங்கோ இதுக்காக எல்லாமா ஃபீல் பண்ணுவா. கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம மீட் பண்ண கூடாதுனு இருக்கோ என்னவோ" பெருமூச்சு விட்டவளுக்கும் அவனை பார்க்க முடியாதோ என்ற ஏக்கத்தில் முகம் சுருங்கி போனது.

"ஏய்.. என்ன நீ.. நாளைக்கு வர முடியாதுனு சொன்னா அதோட கல்யாணம் வரைக்கும் வர மாட்டேன்னு அர்த்தமாகிடுமா. நாளைக்கு தான் மாமி வர முடியாது ஆனா முகூர்த்த புடவை எடுக்கும் போது கண்டிப்பா நான் வந்திடுவேன், நீ வருத்தப்படாத சரியா" கிருஷ்ணா சமாதானம் செய்ததில் பளிச்சிட்ட முகத்துடன், அருகில் ஒரு டெரர் பாய் அவளை வில்லங்கமாக பார்த்துக் கொண்டு அர்ந்திருப்பதையே மறந்து போனவளாய் வெட்க புன்னகையுடன் சில கதைகள் பேசி அவள் முடிக்கவும், வீடு வரவும் சரியாக இருந்தது.

"ரொம்ப தாங்க்ஸ் அண்ணா. நீங்க மட்டும் சரியான நேரத்துல வரலைனா இந்நேரமானாலும் நான் அங்கேயே தான் மழைல தனியா நின்னுட்ருப்பேன். சரி நான் வரேன்." அரிசி பற்கள் தெரிய அவன் பதிலை எதிர்பாராமல் நன்றி உரைத்து விட்டு கார் கதவை திறக்கப் போனவளின் கரத்தை சட்டென பிடித்திழுத்த ருத்ரன், அவள் என்னதென உணரும்முன் யோசிக்காமல் லபக்கென அவள் மென்னிதழில் அவன் வன்னிதழை அழுத்தமாக பொறுத்தி, அவள் அண்ணா என்று அழைத்ததற்கெல்லாம் சேர்த்து தண்டனையாக பெண்ணவளின் இதழில் வண்டாக மாறி மரகததேன் குடித்திருந்தான்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 10
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top