• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 13

இதழ் முத்தத்தில் மயங்கிப் போன ருத்ரன் பெண்ணவளின் அதரத்தில் குட்டி குடும்பம் நடத்தியபடி விழிகள் மூடி உறங்கிய சிப்பி இமையாளை சொட்டு விடாமல் ரசித்தான்.

தேவாமிர்தமாய் தித்தித்து ஒற்றை இதழ் முத்தம் அவனை சொர்க்கலோகத்தில் அழைத்து செல்ல, குயிலு.. குயிலு.. என இடைவிடாமல் அவன் மனதில் பிதற்றிக் கொண்டே கிறங்கிப் போனவனின் ஒற்றை வலிய கரம் பாவையின் வெற்றிடையில் ரேகை புதைய அழுத்தமாய் பதிந்து அதன் வழவழப்பான மென்மையை உணர்ந்தவனுக்கு புதுமையான சுகத்தை அளித்தாள் உறங்கும் குயில்.

பதுமையின் தாவணி வேறு விலகி ஆடவனை உச்சி வரை சுடேற்ற, கொங்கையின் பிளவில் சிக்கி துண்டானது அவனது இரும்பு இதயம். அவனது தடித்த அதரம் அவள் மென்னிதழ் தாண்டவில்லை, கரங்களும் இடை விட்டு நகரவில்லை ஆனபோதும் அவன் ராட்சச பார்வை மட்டும் பெண்ணவளை மொத்தமாக விழுங்கி ஏப்பம் விடும்படியான முரட்டு பார்வையாக மாறி கிறக்கம் அதிகரித்துப் போக, இதழ் முத்தத்தின் மூலமாகவே பெண்ணுடலில் சூட்டை பரப்பி காய்ச்சலை பறக்கவிட்டிருந்தான் கள்ளன்.

வெட்டு குத்து கொலையையே தொழிலாக கொண்டவனுக்கு பெரிதாக கல்யாண வாழ்க்கையில் ஈடுபாடு என்றதே இல்லை. அதனாலே தானும் ஒரு ஆண்மகன் தான் என அவன் உடலில் ரசாயன மாற்றங்கள் நிகழும் போது மட்டும் விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்கு பெண்ணுடலை நாடி அவர்களின் முகத்தை கூட பார்க்காமல் இதழ் தீண்டல் முத்தங்கள் இல்லாமல் கட்டி அனைக்காமல் ஏதோ பெயருக்கு எந்திரம் போல் தன் தேவையை பூர்த்தி செய்து கொண்டு திரும்பி விடுவான்.

காதல் காமம் வாழ்க்கை பற்றியெல்லாம் தெரியாது, தெரிந்து கொள்ள அவசியமும் ஏற்படவில்லை. வாழும் வரை தனக்கு தானே ராஜா என்று ஏனோ தானோவென இரத்தக்கிளறியாக சென்று கொண்டிருந்தவன் வாழ்க்கையில் தான் எதிர்வீட்டு ரோஜா வந்து அவன் கல்மனதை சலனப்படுத்தி இதோ அனுமதியின்றி திருட்டுத்தனமாக படுக்கையறை வரைக்கும் வரும்படியான உணர்வுகளை அவனுள் கிடத்திவிட்டாள்.

முதல் முறையாக ஒரு பெண்ணின் மீது பார்த்த மாத்திரத்தில் இருந்து இனம்புரியாத ஈர்ப்பு வந்ததென்றால் அது அவன் குயில் ஒருத்தியின் மீது தான். அதிலும் அவளின் அந்த தித்திக்கும் தேன் குரல் ஹய்யோ.. அதில் தானே அவள் முகத்தை கூட பார்க்கும் முன்னமே மொத்தமாக ஃபிளாட் ஆனது.

தெவிட்டா தேன் இதழை விட்டு செல்ல மனமே இல்லை அவனுக்கு. விட்டால் ஆழிலையாக பெண்ணவளை மொத்தமாக சுருட்டி அவன் ஆண்மைக்கு தீனி போட்டுக்கொள்ளும் துடிப்பில் உடல் உஷ்னம் எகிறிப் போனது.

"முடியாது டா ருத்ரா.. இதுக்கு மேல இங்க இருந்தா என் குயிலுக்கு பாதுகாப்பு இல்ல, மச்.. என்னவோ உள்ளுக்குள்ள புகுந்து பண்றாளே கண்ட்ரோல் மிஸ்ஸாகுது ருத்ரா." சுயகட்டுப்பாட்டை மெல்ல மெல்ல இழந்தவனாய் நங்கையின் கழுத்தில் முகம் புதைத்து அவளது வாசனையை உடல் மொத்தமும் நிரப்பிக் கொண்டவனாய் வேக மூச்செடுத்தவன் கண்கம் எல்லாம் மோகத்தில் நிறம் மாறிப் போனது.

அவளின் அப்பழுக்கற்ற இமைமூடிய வதனம் பார்த்து கர்வமாய் ஒரு புன்னகை சிந்தி மீண்டுமொரு மென்மையான இதழ் முத்தம் செய்யும் போதே விழிப்புதட்டி முழித்துக் கொண்ட குழலியின் கண்கள் அதிர்ச்சியில் விரிய. "ஐயோ.. பெருமாளே!" கத்த கூட முடியாத நிலையில் இதழ்கள் அவன் வாய்க்குள் பூட்டி இருக்கவே இமைகள் படபடத்து அதிர்ச்சி தாலாமல் மீண்டும் இமைமூடி திறப்பதற்குள் மாயக்கண்ணன் மறைந்து போனானே அவள் கண்களை விட்டு.

அன்றில் இருந்து இரவில் தூக்கம் பரிபோனது குழலிக்கு. கண் விழிக்கும் போது தான் கண்டது நிஜமா கற்பனையா என்ற எண்ணமே அவள் மூளையை குடைந்து எடுக்க, ஆடவனின் ஸ்பரிசம் கண்ட ரத்த சிவப்பாக பளபளத்து மின்னிய அவள் இதழ்களில் கர்வமாய் மின்னினான் அக்னி கண்ணன்.

இப்போது அவனை கண்ட நொடியில் இருந்து தற்காலிகமாய் மறந்து போய்ருந்த அந்நினைவுகள் எல்லாம் மீண்டும் உயிர்பெற்று முறைத்தவள், இதழில் ஊரிய எச்சில் குறுகுறுப்பு தாங்காமல் தன்னையும் அறியாமல் புறங்கையால் உதட்டை துடைத்து சும்மா இருந்தவனையும் தூண்டி விட்டவளாக சன்னல் கதவடைத்து குழம்பித் தவித்தாள்.

இங்கோ கருப்பு வேஷ்டியின் முனையை ஒருகையால் பிடித்தபடி மறுக்கையால் மீசையை முறுக்கிவிட்டவனின் சிரிக்கத் தெரியாத அதரங்கள், குழலியின் ரசிக்க வைக்கும் செயலில் தானாக சிரித்துக் கொண்டது.

"என்ன அவ முறைச்சி பாத்தாளா?" தனக்கு தானே விரைப்பாக கேள்விக் கேட்டுக் கொள்ள. "பின்னே உன்ன பாத்து சிரிச்சிட்டு போனாளா. அதுவும் இல்லாம படார்னு கதவ அடிச்சி சாத்தினாளே நீ கவனிக்கலையா" வசமாக எடுத்துக் கொடுத்தது இன்னொரு குரல்.

"ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும். அவ இல்லாம வேற யாரும் என்ன முறைச்சி பாத்திருந்தா இந்நேரம் வேற மாறி சீனா இருந்திருக்கும் ஆனா என்ன பாத்து முறைச்சது என் குயிலாச்சே. இதுக்கு தண்டனைய கூடிய சீக்கிரம் உன்ன என்கூட வச்சி கொடுக்குறேன் டி குயிலு"

மதனை தாண்டி மனிதர்களிடம் பெரிதாக பேசி பழக்கமில்லாதவன் இப்போதெல்லாம் தனிமையில் பேசி தலையை தட்டிக் கொள்வதும் நெஞ்சை நீவிக் கொள்வதும் வழக்கமாய் மாறிப் போனது.

** ** **

"ஏண்ணே, இந்த மீன் கொழம்பு ஊத்தவா? கருவாட்டு தொக்கு வைக்கவா? இன்னும் கொஞ்சோ சோறு வச்சி ரசம் ஊத்தவா?"

காவேரியின் கைப்பக்குவத்தை ஆற அமர ருசித்துக் கொண்டிருந்தவனை உண்ண விடாமல் உபசரிக்கிறேன் என்று நொய்நொய் என நச்சரித்தவளை முறைப்பாக பார்த்து வேண்டியதை அவனே எடுத்து பரிமாறிக் கொண்டு உண்ணவும் ம்க்கும்.. என முகத்தை சிலுப்பிக் கொண்டாள்.

உணவை பக்குவமாக செய்து முடித்து ருத்ரனின் வருகைக்கு காத்திருக்க, அவனோ வந்தது முதலே எரிபுரியாக தான் முகத்தை வைத்திருக்கிறான். உணவு பரிமாற வந்தவளை வேண்டாமென கை நீட்டி தடுத்து, அவனே தேவையானதை பரிமாறிக் கொண்டு உண்ணும் விதத்தைக் கண்டு முகம் சுழித்தாள் காவேரி.

"என்ன இவக, பாதி சோத்த கீழேயும் மேலேயும் கொட்டிக்கிட்டு கரண்டில உள்ள சொச்சத்த தட்டுல போட்டு தின்கிறாக. இப்டி தின்னா எப்டி துன்ற சோறு ஒடல்ல ஒட்டு. இதுல என்னையும் சோறு வைக்க வேணான்னு சொல்லிட்டாக" மனதில் நினைத்தபடி ஓரமாக நின்றிருந்தவள் அவன் அரைகுறையாக உண்டு முடித்து எழுப்போகும் போது தான் ஓடி வந்து கேட்டாள், குழம்பு ஊத்தவா ரசம் ஊத்தவா என்று.

அதையும் முறைப்பாக நிராகரித்து விட்டு, தன் நீண்ட நாவால் கையில் ஒட்டி இருந்த மிச்ச உணவினை சுத்தம் செய்தபடியே எழுந்து சென்றிட, அவன் முதுகை வெறித்த காவேரியின் முன்பு வந்து கையசைத்து தெளிய வைத்தான் மதன்.

"அலோ.. மேடம் அக்கட என்ன லுக்கு."

"ஒன்னியு இல்ல. நீய எனக்கு செஞ்ச உதவிக்கு கைமாறா நீயி சமைக்க சொன்ன மாறியே ஏதோ எனக்கு தெரிஞ்சத சமைச்சி வச்சிட்ட. அதுக்காக தெனமு இங்கன இருந்து எல்லாம் என்னால சமைச்சி போட முடியாது. ந்நா நாளைக்கே இங்கிருந்து கெளம்பியாவனும். என் மச்சான தேடி கண்டுபுடிக்கணும். வேணும்னா ந்நா இங்கிருந்து போறதுக்கு முன்னாடி காலைக்கும் மதியத்துக்கு சேர்த்து சமைச்சி வச்சிட்டு போறே. நீயும் உங்க அண்ணனும் சாப்பிடுங்க சரியா"

ஒரு கேள்விக்கு ஓராயிர வார்த்தைகளை கோர்த்து படபடத்து விட்டு சென்ற காவேரியை மூச்சிமுட்ட பார்த்தான் மதன்.

"எப்டி இவளால வாய் மூடாம பேசிட்டே இருக்க முடியிது?" தலையை உளுக்கிக் கொண்டவனாக பாக்கி இருந்த உணவினை திருப்தியாக உண்டு முடித்து களைப்பில் கண்மூடியவன் நினைவினில் வந்து அழகாக புன்னகைத்தாள் காவேரி.

காவேரியின் துடிப்பான பேச்சில் அவன் மனம் அவள்பால் சாய்ந்து விட்டதோ என்னவோ. முதல்முறை பார்த்த பெண்ணின் மீது தன்னை மீறி மனதை தொலைக்க விருந்தவனின் ஆசையெல்லாம் நாளையே நிராசையாக போவது அறியாமல், கனவில் கூட காவேரியின் நினைவாகவே உறங்கிப் போனான்.

** ** **

"அம்மா.. குடிக்க ஹாட் வாட்டர் குடுங்க.." உடற்பயிற்சி செய்த களைப்பில் துண்டில் முகத்தை துடைத்தபடி வந்த வெங்கட், ஆர்ம்கட் பனியனில் திண்ணிய புஜங்கள் புடைக்க ஷோபாவில் கண்மூடி சாய்ந்து அமர்ந்தவன் மணக்கண்ணில் இளம்பெண்ணொருதி மந்திரப்புன்னகை வீச அவன் அதரமும் குறுநகை செய்தது.

"ராட்சசி கொஞ்ச காலமா ரொம்பவே டிஸ்டர்ப் பண்றா. மறக்க நெனச்சாலும் இதயத்த ஒருப்பக்கமா குடஞ்சி எடுக்குறா. இவள பத்தி எப்டி ந்நா ஆத்துல சொல்றது" யோசனையில் கண் திறவாமல் இருந்தவன் முன்னால் சீரகம் போட்டு கொதிக்க வைத்த வெண்நீரை நீட்டியபடி அழைத்தாள் பரிமளம்.

"ஏன்டா வெங்கட்டா நைட் டியூட்டி பாத்துட்டு விடிய வந்து செத்த நாழி கூட தூங்கி ரெஸ்ட் எடுக்காம, அப்டி மூச்சிறைக்க எக்சசைஸ் பண்ணியே தீரணுமா? பாரு தூக்கம் இல்லாம எப்டி முகமெல்லாம் சோர்ந்து போயிருக்குனு" தாகத்தில் நீரை அருந்தும் மகனின் முகத்தில் இருந்த வியர்வை துளிகளை அவனுக்கு அருகில் இருந்த துண்டை எடுத்து சுத்தமாக துடைத்து விட்டாள் பரிமளம்.

"அதான் விடிஞ்சி போச்சே ம்மா.. கையோட பிரேக் பாஸ்ட் சாப்ட்டு போய் ரெஸ்ட் எடுக்குறேன்" என்றவனது கண்கள் சோர்வாக உறக்கத்திற்கு ஏங்குவது தாய்க்கு தெரியாமல் இருக்குமா!

"சரி போயி முகம் அலம்பிண்டு வாடா. சப்பாத்தி எடுத்து வைக்கிறேன். சீக்கிரம் சாப்ட்டு தூங்கு இல்லனா அதுக்கு தனியா உன்ன எழுப்பி கெஞ்சிட்டு இருக்கனும், செத்த எழுந்து ஒரு வாய் சாப்ட்டு தூங்குயா ராசானு" என்ற பரிமளம் வாய் பேசினாலும் கைகள் என்னவோ வேகவேகமாக மகன் சாப்பிட வேண்டிய உணவினை எடுத்து வைத்துக் கொண்டிருந்ததே!

"அம்மா.. சப்பாத்திக்கு பட்டர் மசாலா ரொம்ப நன்னாருக்கு. இன்னொன்னு வையி" என்றபடி நான்காவது சப்பாத்தியை பிட்டு வாயில் போட, "இதோ கண்ணா இந்தா நன்னா சாப்டு" அருகில் இருந்த பரிமளம் அவசரமாக இன்னொரு சப்பாத்தியை வைத்தாள்.

"எப்பவும் வேல வேலனு ஓடியே சரியான நேரத்துக்கு சாப்பிட முடியாம என் புள்ள ஒடம்பு ஒண்ணு இல்லாம போவுது. இதுக்குதா ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வச்சா அவளாவது உனக்கு புத்திமதி சொல்லி நேரத்துக்கு சாப்பிட சொல்லுவால்ல" இதற்க்காகவே நேரம் பார்த்து காத்திருந்ததை போல பரிமளம் வருத்தமாய் கூற அமைதியாக ஒரு பார்வை பார்த்தான்.

"முதல்ல நல்லபடியா தேனு கண்ணாலம் முடியட்டும்மா.. அதன்பிறகு என்ன பத்தி யோசிக்கலாம். ஆமா தேனுக்கு பூரி தானே புடிக்கும் தனியா சுட்டு வச்சியா"

"ம்ம்.. கண்ணால பேச்ச எடுத்தா மட்டும் அப்டியே பேச்ச மாத்திடு. உன் தங்கைக்கு அதெல்லாம் முன்னாடியே பூரிய சுட்டு தனியா வச்சாச்சு" அலுத்துக் கொண்ட தாயின் கன்னத்தை பிடித்து ஆட்டி, "ஸ்வீட் மம்மி" என முத்தம் வைத்து சென்ற மகனை கண்டு சிரித்துக் கொண்டாள் பரிமளம்.

கீழே இருந்த வரை கண்ணை சொக்கிய தூக்கமெல்லாம் மொசுமொசு மெத்தையில் மல்லாக்க படுத்த நொடியில் இருந்து எங்கோ பறந்து போக, ஏனோ வீடு வந்து சேர்ந்ததில் இருந்தே என்னதென்ன புரியாத உணர்வில் மனதெல்லாம் படபடவெனவே அடித்துக் கொள்கிறது அவனுக்கு.

"மொசகுட்டி கண்டிப்பா எம்மேல கோவமா இருப்பா. அவகிட்ட சொல்லாம கொள்ளாம அம்போனு விட்டு வந்துட்டேனே!" வருத்தமாக உள்மனம் யோசிக்க.

"நீ என்ன அவளை கட்டிக்கிறேன் காதலிக்கிறேன்னு நம்பிக்கை ஏதாவது கொடுத்துட்டு வந்தியா வெங்கட். அவளா பாத்தா உன் பின்னாடி லூசுத்தனமா சுத்தினா. இத்தனைக்கும் உனக்கு தான் அவளை கண்டாலே எரிச்சல் வருமே. பிறகு ஏன் தேவைஇல்லாம அவளை பத்தின நினைப்புல இருக்க." வீம்பு பிடித்தவன் மனதுக்கு பதில் சொல்லிக் கொள்ள, இளகரமாய் சிரித்தது.

"ம்ம்.. அவ லூசுத்தனமா பின்னாடி சுத்தினா சாரு அப்டியே அவளை பாக்காம கண்ண மூடிட்டு சுத்துனீங்க பாரு. ஏன்டா இப்டி காதல சொன்ன அவளையும் வேண்டான்னு கஷ்டப்படுத்திட்டு நீயும் அவ நினைப்புலே கிடந்து தவிக்கிற. பேசாம ஊருக்கு போயி அவளை பாத்து வாடினு ஒரு வார்த்தை சொன்னா, நாய்க்குட்டி மாறி உன்பின்னாடியே வந்திட மாட்டா. போய்ட்டு கூட்டிட்டு வந்துடு டா" காதல் மனம் அடித்துக் கொண்டது.

"நெவர். நானே போய் அவளை கூப்பிடனுமா சான்ஸே இல்ல. அந்த திமிரு பிடிச்சவள ந்நா போயிட்டு கூப்பிடணுமா! எனக்கும் அவளுக்கு கொஞ்சமும் செட்டாகாது. அதுவும் இல்லாம ஆத்துல இந்த விஷயத்தை ஏத்துக்கவே மாட்டா." நிராகரித்து விதண்டாவாதம் செய்தவனிடம் அதற்கு மேலும் பேசி புரியவைக்க முடியாமல் ஓடிவிட்டது சோர்ந்தமனம்.

உறக்கம் எட்டாகனியாக மாறிவிட, காற்றோட்டமாக எழுந்து மொட்டைமாடி சென்றவன் தங்கைக்கு அழைத்தான்.

இரண்டு ரிங்கில் அழைப்பை ஏற்ற தேனு "சொல்லு அண்ணா" என்றாள்.

"நாழி ஆச்சே கோவில்ல இருந்து கிளம்பியாச்சா தேனு"

"இதோ தெரு முக்குல தான் இருக்கேண்ணா. செத்து நாழில ஆத்துல இருப்பேன்" என்று அழைப்பை துண்டித்தவள் சில நிமிடத்தில் வீட்டு வாயிலில் வண்டியை நிறுத்த, படிகளில் இருந்து இறங்கிய வெங்கட் தான் கண்ட காட்சியில் இதயம் தாறுமாறாக எகுறி குதிக்க திகைத்து நின்றான்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 13
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top