- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் 17
"வேண்டாம் என் குழந்தைய கொல்லாதீங்கஆ...". என்ற அலறலோடு அடித்து பிடித்து எழுந்தவளின் முகம் வெளிரி போய் இருக்க.. அதுவரை, முல்லையை போலவே இருந்த அவளின் குழந்தையை கையில் வைத்து விழியகலாது பார்த்துக் கொண்டு இருந்தவன்.. அவளின் கத்தல் சத்தம் கேட்டு பதறியவனாக, அவளிடம் வந்தான் அரவிந்த்..
"ஹேய்.. ஹேய்.. ரிலாக்ஸ், உன் குழந்தைக்கு ஒன்னும் ஆகல, நல்லா தான் இருக்கு.. இங்க பாரு" என அவன் கையில் இருந்த குழந்தையை அவளிடம் காட்ட...
அவனிடமிருந்து பிடிங்காத குறையாக, குழந்தையை வாங்கி.. அதன் நெற்றியில் முத்தம் வைத்து நெஞ்சோடு அனைத்துக் கொண்டு, சிறிது நேரம் கண்ணீரில் கரைந்தவள்.. தன்னையே ஒருவன் குறுகுறுவென பார்ப்பது போல் இருப்பதை உணர்ந்து அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தாள்.
அரவிந்த் நிற்பதை கண்டு, இவர் எப்படி இங்கு என்ற யோசனையாக அவனை கேள்வியாக நோக்க,
இடுப்பில் கை வைத்து, நெற்றியை நீவியபடி, அவனும் அவளை தான் பார்த்திருந்தான்.
"ச.சார் நீங்க இங்க எப்டி,, என் குழந்தை எப்டி உங்ககிட்ட.. நான் எப்டி இங்க வந்தேன்" புரியாமல் கேள்விகளை தொடுத்தவளை அமைதியாக கண்ட அரவிந்த்...அங்கு நடந்ததை சுருக்கமாக சொல்லி, அந்த தடியர்களை போலீஸில் ஒப்படைத்தது வரை கூறி முடித்தான்.
"ரொம்ப நன்றி சார், எனக்காக நீங்க ரொம்ப பெரிய உதவிய செஞ்சீங்க, இப்ப என் குழந்தை உயிரையே காப்பாத்தி கொடுத்து இருக்கீங்க... இந்த உதவிய நான் காலத்துக்கும் மறக்க மாட்டேன்" உணர்ச்சிவசப் பட்டு கை கூப்பி, கண்ணீருடன படபடத்தவளை விடைவெட்டி அரவிந்த்,
"ஓகே.. பேசி முடிச்சிட்டியா, சரி கிளம்பு வீட்டுக்கு போலாம்... அதிர்ச்சில வந்த மயக்கம் தான் கண் முழிச்சதும் வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாங்க" என்றவனை தயக்கமாக பார்த்த முல்லை.
"சார், நான் என் வீட்டுக்கு போகணும்.." என்றவலை நெற்றி சுருக்கி பார்த்தவன்,
"சரி, போலாம் அதுக்கு முன்னாடி பாட்டிய பாத்துட்டு, அவங்ககிட்ட நீ நல்லா தான், இருக்கேன்னு சொல்லிட்டு போ.. நீ வீட்ட விட்டு வந்ததில இருந்து சோகமானவங்க தான் இன்னும் சாப்பிடாம இருக்காங்க" அவளை இப்போதைக்கு தனியாக விட மனம் வராமல், ஏதோ பாட்டியை வைத்து வாய்க்கு வந்ததை அடித்து விட்டான்.
அரவிந்த் அப்படி சொன்னதும், வேற வழி இல்லாமல், அமைதியாக அவனுடன் புறப்பட்டாள்.
காரை அரவிந்த் ஓட்ட, அவன் அருகில் குழந்தையை அனைத்தார் போல் வைத்த்திருந்த முல்லையின் மனம் முழுக்க வெறுமையாக சாலையை வெறித்தபடி இருந்தது.
அவளின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமல் அரவிந்த் தான் குழம்பிய நிலையில் இருந்தான்.. அதற்கு காரணம், இன்னும் அரவிந்த் கட்டிய மாங்கல்யம் அவள் கழுத்தில் இருப்பது தான்...மேலும் அவளை போலவே உள்ள குழந்தையை பார்த்து பல குழப்பங்கள் அவன் மனதில்..
அவர்கள் சிந்தனையை கலைக்கும் விதமாக, பசியில் குழந்தை பையன் அழ ஆரமிக்க.. "அச்சோ, குட்டி பையா ஏன் அழறீங்க, சேரி சேரிபா ஒன்னு இல்ல, என் தங்கபிள்ளல்ல அழாதீங்க பட்டு.." அவனை தோளில் போட்டு தட்டி கொடுக்க.. அப்போதும் குழந்தையின் அழுகை நிற்காமல், அழுகையின் சத்தம் அதிகரித்தது..
அதன் அழுகையை நிறுத்தும் வழி தெரியாமல் திணறி, குழந்தையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி சமாதானம் செய்தும் அழுகை நின்ற பாடு தான் இல்லை...
அதை கவனித்த அரவிந்த்.. "முல்லை, குழந்தை பசி எடுத்து அழறான்" போல..
அமுதம் கொடுத்து பசியாற்று, என்று நேரடியாக சொல்லாமல் அப்படி அவன் சொல்ல..
"ஆமா சார், ரொம்ப பசிக்குது போல, அதான் இப்டி வீரிட்டு கத்துறான்.." பாவமாக சொன்னவளும் மேலும் அவனை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தாள்.
"என்ன இவ, குழந்தைக்கு பசிக்கிதுன்னு தெரிஞ்சும் பால் கொடுக்காம, தட்டி கொடுத்துட்டு இருக்கா,.. ஓஹ், ஒரு வேல நாம இருக்கோம்னு பால் கொடுக்க தயங்குறாளோ" என நினைத்து காரை ஓரம் கட்டியவனாக, "நான் வெளிய இருக்கேன் முல்ல, நீ குழந்தைக்கு பால் கொடு.." என்றபடி வெளியேற போக,
"என்ன நானா, நான் எப்டி குழந்தைக்கு பால் கொடுக்க முடியும்.. " என்றவலை வினோதமாக பார்த்தான்.
"உன் பிள்ளை தானே அப்ப நீ தான் கொடுக்கனும்"
"என் பிள்ளை தான், ஆனா நான் எப்டி சார்.." திரும்பவும் பரிதாபமாக அவனையே கேள்வி கேட்க..
"என்ன இவ லூசா" என்பது போல் பார்த்தவன்... "இதுவரைக்கும் எப்டி கொடுத்தியோ அப்டி தான் கொடுக்கணும்.. நீ என்ன புதுசா, கேள்வி கேக்குற" என்றான் கடுப்பாக.
"சரி சார், அப்ப ஏதாவது மகப்பேறு ஹாஸ்பிடல் போங்க சார்.. இப்போதைக்கு அங்க யாரு கிட்டயாவது குழந்தைக்கு பால் கொடுக்க சொல்லலாம்" என்றதும் அரவிந்த்க்கு இப்போது ஆத்திரம் தான் வந்தது..
"ஏய், குழந்தை பசில அழுட்டு இருக்கு நீ என்னடான்னா, அதுக்கு பால் கொடுக்காம இப்டி அழவிட்டு, தேவ இல்லாம பேசிட்டு இருக்க.. ஓஹ்.. எங்க குழந்தைக்கு பால் கொடுத்தா, உன் அழகு குறைஞ்சிடுமோன்னு கொடுக்காம இப்டி பண்றீயா,," கோபத்தில் குரல் எகிறியது.
அவன் கோவம் கண்டு, அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் விழித்த முல்லை,
"இவன் என் குழந்தை தான் சார், அதுக்காக நான் என் வயித்துல பத்து மாசம் சுமந்து பெத்தெடுத்த குழந்தை இல்லையே.. அப்ப நான் எப்டி அவனுக்கு,," என்று தவிப்பாக அதோடு நிறுத்த...
"வாட்.. என அதிர்ந்து கேட்டவன்... "ஏய்ய் என்ன சொல்ற நீ, இது நீ பெத்த குழந்தை இல்லையா" என்றான் , அதிர்ச்சி மாறாமல்.
"ஆமா சார், நான் உங்களுக்கு எதுவா இருந்தாலும் அப்புறமா சொல்றேன், மொதல்ல ஏதாவது ஒரு ஹாஸ்பிடல் போங்க சார்.. குழந்தை ரொம்ப அழறான்" என்று குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்று தவித்து போனாள்.
குழம்பிய மனநிலையில் காரை மகப்பேறு மருத்துவமனைக்கு திருப்பினான் அரவிந்த்.
அவசரமாக ஒரு ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தவர்கள்.. அங்கு ஒரு பச்சிளம் குழந்தையின் தாயிடம், குழந்தையை கொடுத்து பசியாட்ட உதவி கேட்டு கொடுக்க சொல்லி, அவருக்கு நன்றி உரைத்து, காரில் ஏரி பயணமாகினர், அரவிந்த் வீடு நோக்கி, அமைதியாக..
வீட்டினுள், கையில் குழந்தையுடன் வந்த முல்லையை பார்த்த பாட்டி, "அம்மாடி வந்துட்டியாமா, எங்க நீ வராமலே போய்டுவியோன்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சி.. நல்ல வேலை நீ வந்துட்ட.. ஆனா இந்த குழந்தை.." என்று நிறுத்த..
"என் குழந்தை தான் பாட்டி", என்றவலை.. "இவ என்ன சும்மா தேஞ்ச ரெகார்டையே திரும்ப திரும்ப தேய்க்கிறா என் குழந்தைய தவிர வேற லைன் சொல்றாளா" உள்ளே நினைத்து அவளைதான் பார்த்தான்.
நெஞ்சை பிடித்துக் கொண்ட பாட்டி," என்னமா சொல்ற நீ, அப்ப உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா" அரவிந்த் வேறு அவள் கழுத்தில் தாலி கட்டியத்தை நினைத்து பயந்து போனார். அரவிந்துக்கும் பல சந்தேகங்கள் இருந்து கொண்டு தான் இருந்தது..
"இல்லை பாட்டி, எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல" மேலும் அவர்களை குழப்பி விட்டாள்.
"முல்ல கொஞ்சம் தெளிவா சொல்லும்மா.. உனக்கு கல்யாணம் ஆகலைன்னா, இந்த குழந்தை எப்டி உன்ன மாதிரியே இருக்க முடியும்."
இந்த கேள்விக்கான பதிலை கேட்க, அரவிந்துக்கும் அத்தனை ஆர்வம்..
அது அவள் பெற்ற குழந்தை இல்லை என்றால், எப்படி அவளை போலவே இருக்க முடியும், இத்தனைக்கும் அவளுக்கு திருமணம் கூட ஆகாமல்... வார்த்தைக்கு வார்த்தை என் குழந்தை என் குழந்தை என்று வேறு கூறுகிறாளே"
ஒரு வேலை திருமணத்திற்கு முன்பே யாராவது அவளிடம் தவறாக நடந்து கொண்டு இருப்பார்களா,...அப்போது கூட குழந்தையை அவள் சுமக்கவில்லை என்றாளே!
ஒருவேளை வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டாளா, அதற்கு என்ன அவசியம், அதுவும் திருமணம் கூட ஆகாமல்,.. என்று பல வித கேள்விகள் அவன் மனதில் தோன்றி கொண்டே தான் இருந்தது...
மழை...

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 17
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.