New member
- Messages
- 24
- Reaction score
- 1
- Points
- 3
அத்தியாயம் 12
வினோதினியின் பேச்சை மீள முடியாமல் அவள் சொல்லும் அனைத்திற்கும் அவன் சரி என தலையாட்டிவிட்டு யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வினோவும் வீட்டில் போய் காரணம் சொல்லி ஹைதராபாத் செல்வதாக சொல்ல அவர்களும் சரி என ஒத்துக் கொண்டனர்.
வினோதினியை அழைத்துக் கொண்டு அவன் ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் கார் நிறுத்தப்பட்டது. காரை ஓட்டிய டிரைவர் சொல்லாமல் கொள்ளாமல் இறங்கி ஓடியே விட்டான். கார் சாவியையும் எடுத்துக் கொண்டு போய்விட்டான். திடீரென நடந்த நிகழ்வில் விதுரனுக்கும், வினோதினிக்கும் ஒன்றும் புரியவில்லை. திருதிருவென முழிந்திருக்க... அங்கே முக மூடி போட்டு கொண்டு நான்கு கயவர்கள் இவர்களை சுற்றி வளைத்தனர். விதுரன் அவர்களோடு சண்டை போட்டான். வினோ நீ இங்கேயே காருக்குள்ளேயே இரு எக்காரணத்தை கொண்டும் வெளியே போயிடாத என்றான். அவளும் பயத்தில் சரி என தலையை ஆட்ட.. அவர்களுடன் முடிந்த மட்டும் சண்டை இட்டான். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு விதுரன் சோர்வடைய அதை பயன்படுத்தி கொண்ட நால்வரில் ஒருவன் இரும்பு ஆயுதத்தால் விதுரனை ஓங்கி அடித்தான். அவன் மயங்கி கீழே விழ... அவனுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என பார்த்தனர் அவர்கள். இல்லை என தெரியல வரவும் டேய் அவளை போட்டு தள்ளுங்கடா என ஒருவன் சொல்ல காரை நோக்கி அவர்கள் வர அவள் எப்போதோ தப்பித்து ஓடி கொண்டிருந்தாள். அவர்களும் தேடி பார்த்துவிட்டு டேய் அதோ அங்கே போறா பாரு புடிடா அவளை என அவளை துரத்த ஆரம்பித்தனர். அவளும் விடாது ஓட அந்த நால்வரில் ஒருவன் பெரிய கட்டை ஒன்றை எடுத்து வீச அவள் மீது பட்டு அவள் தடுமாறி விழுந்தாள். அவர்கள் கிட்டே நெருங்கி வர... அவள் எழ முடியாமல் எழுந்து மீண்டும் ஓட அவர்களும் துரத்திக் கொண்டே இருந்தனர். கடைசியாக அவள் புதற்க்கடியில் போய் ஒளிந்துக் கொண்டாள்.
நால்வரில் ஒருவனின் போன் ஒலிக்க.. அதை அட்டன் செய்தவன் என்னடா ஆச்சு?
சார் அந்த பொண்ணு தப்பிச்சு போயிருச்சு...
வெட்கமா இல்ல இப்படி சொல்ல...
போனை வை...
என்னடா?
ரிஷி சார் ரொம்ப கோபப்படுறாருடா..
அவளை முதல கண்டுபிடிச்சு கொள்ளணும்.
இதை புதருக்குள் இருந்து கேட்ட வினோதினி அதிர்ச்சி அடைந்தாள். அவளின் சிறு அசைவில் அவர்கள் கண்டு பிடித்து விட்டனர். அவளை அடித்தனர். மயக்கம் அடைய செய்தனர். அவளின் கையில் போன் இருக்க... அவள் மயக்கம் அடைந்து விட்டாள் என நினைத்து அவர்களும் எங்கோ சென்றனர். அவளால் எழ முடியவில்லை. ஆனால் அவளால் பேச முடியும் என நம்பிக்கை வர போனை பார்த்தாள். குலழிக்கு போன் செய்தாள். அக்கா நான் மிக பெரிய பிரச்சனையில் மாட்டி இருக்கேன். நான் இன்னும் க்கொ... க்கொ... கொஞ்ச நேரத்துல இறந்தும் போய் விடுவேன். என் இறப்புக்கு காரணம் ரிஷிவேந்தன். அவனை நீ சும்மா விடாதே என்று சொன்னாள். அதற்குள் அவர்கள் வந்து விட அப்படியே கண்களை மூடி கொண்டாள். பெட்ரோளை கையில் எடுத்து வந்தனர். அதை அவள் மீது ஊற்றி கொளுத்தினர். அவளும் துடிதுடித்து இறந்தும் போனாள். எந்த பாவமும் செய்யாத ஒரு சிறு பெண் இறந்து போய்விட்டாள்.
விதுரனுக்கு தெரிந்தவரை அவன் சொல்ல... அதற்கு பிறகு நடந்ததை குழலி சொன்னாள். இருவரும் உடைந்து அழுதனர். எவ்வளவு நேரம் விதுரன் அழுது இருப்பான். எவ்வளவு கோபம் கொண்டான். கையில் கிடைப்பதை எல்லாம் போட்டு உடைத்தான். என்ன செய்கிறோம் என தெரியாமல் ஆக்ரோஷமானான்.
விதுரா... விதுரா... ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருடா...
என்னை எப்படி பொறுமையா இருக்க சொல்ற... அ... என்றான் கர்ஜனையுடன்.
இருந்துதான் ஆகணும்.
பைத்தியமாடி நீ... என் அண்ணனுக்கு என் மேல அப்படி என்னடி கோபம். நான் அவளை காதலிக்க போறேன்னு அவன்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுதானா காதலிச்சேன். கல்யாணம் பண்ணிக்க போறேன்னு அவன்கிட்ட சொல்லிட்டுதான் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். ஒவ்வொன்னும் அவன்கிட்ட கேட்டுதான் செஞ்சேன். அப்படி இருக்க... அவன் ஏன் என் வினோவை கொன்றான். என்ன காரணம் அவனுக்கு... எனக்கு வர ஆத்திரத்துக்கு அவனை இப்பவே கண்டம் துண்டமா வெட்டி வீசணும் போல இருக்கு என்று கோப எரிமலையாக பொழிந்தான்.
அதுக்கு அவசியமே இல்ல விது... நானே அவனை கொன்னுட்டேன்.
என்ன சொல்ற...
ஆமாம் நான் உன்கிட்ட ஒன்னு மறைச்சுட்டேன். நான் உங்க வீட்டுக்கு வேலைக்கு சேர்ந்ததே உன் அண்ணனை தீர்த்து கட்டதான்.
விதுரன் விழி விரிக்க அவளை பார்த்து கொண்டிருக்க...
ஆமாடா என் தங்கச்சி கடைசியா ரிஷிவேந்தன்தான் என்னை கொலை செய்தான் என சொல்லவும் என்னால ஜீரணிக்கவே முடியல. பல திட்டங்கள் போட்டேன். எல்லாம் தோல்வி அடைந்தது. கடைசியாக... வீட்டில் வேலைக்கு சேர்வதை போல சேர்ந்து உன் அண்ணனை கொலை செய்ய முடிவெடுத்தேன். அதை நடத்தியும் வந்து விட்டேன். நிறைய தூக்கு மாத்திரைக்களை பாலில் கலந்து கொடுத்துவிட்டு வந்து விட்டேன். அவனும் அதை குடிக்கும் வரை என் கண்களால் பார்த்தபின்புதான் உன்னை அழைத்துக் கொண்டு இங்கு வந்தேன் என்றாள்.
விதுரனுக்கு இப்போது என்ன சொல்வது என தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் குழலி எப்படிடி உன்னால முடிஞ்சுது. அவனை நீ மானசீகமா ரொம்ப காதலிச்சியேடி.
அதனால... விரக்தியான பார்வை பார்த்தாள்.
அதனால என்னவா? என்ன குழலி. எல்லாம் என் தப்பு நான் இதை செய்திருக்கவே கூடாது. உன் மனசுல தேவை இல்லாத ஆசையை வளர்த்துவிட்டேனே... என்னவெல்லாம் சொன்னேன்.
ஒரு நாள் இருவரும் பேசுகையில்...
ஏய் குழலி இந்த போட்டோ பாரு... என காமித்தான் விதுரன்.
யார்டா இது? ஆள் பார்க்க உன்னையாட்டாம் இருக்கான். ஆனா சிரிப்புக்கு பஞ்சம் போல... உர்ருன்னு உர்றான் கொட்டையாட்டம் இருக்கான்.
ஏய் உதை விழும். இது என் அண்ணண்டி...
அண்ணனா சொல்லவே இல்ல...
ஆமாம் என் அண்ணாதான் கூட பிறந்த அண்ணன். இவனை நீ கல்யாணம் பண்ணிக்கோ...
😲 அ... என்னது கல்யாணமா?
ஆமா.... நீ என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்கோ... நான் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிறேன். ரூட் கிளியர் ஆகிடும்ல...
அட பாவி உன் காதலுக்கு நாங்க ரெண்டு பேரும் ஒன்னு சேரணுமா போடா முட்டாள் என சொல்லிவிட்டு சென்று விட்டாள். ஆனால் அவனிடம் உள்ள போட்டவை எப்படியோ திருடி கொண்டாள். அவனை தினமும் பார்க்க... அவனின் மீது அவளுக்கே தெரியாமல் காதல் வந்தது. ஆனால் யாருக்கும் சொல்லாமல் இருந்தாள்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான் என்னும் விதத்தில் அவளின் காதல் விதுரனுக்கு தெரிந்து போக... இந்த இழவுக்கு நீ அப்பவே ஓகே சொல்லிருக்கலாம்ல என்றான்.
சரி நான் என் அண்ணாகிட்ட பேசுறேன் என்றான்.
டேய்... டேய்... வேணாடா... உங்க ஊரு திருவிழா வருதுல அதுக்கு நாங்க வரோம் அப்ப நானே என் காதலை சொல்லிக்கிறேன் என்று சொல்லி அப்போதைக்கு பேச்சை முடித்து விட்டாள்.
ஆனால் ஊருக்கு கிளம்பும் ஒரு நாளைக்கு முன் நடக்க கூடாத ஒன்று நடந்தது. அந்த நிகழ்விற்கு பிறகு அவளின் காதலும் கசிந்து விட்டது.
கள்வன் தொடர்வான்.
ஹலோ பிரெண்ட்ஸ் படிச்சுட்டு கமெண்ட் பண்ணிருங்க.

Author: shakthinadhi
Article Title: கள்வன் 12
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.