- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் 18
முல்லைக்கு திருமணம் ஆகவில்லை என்று சொன்னதும் தான் பாட்டிக்கு நிம்மதியாக இருந்தது.. இருந்தும் அவள் கையில் இருந்த குழந்தை பற்றி குழப்பமாக இருக்க.. "அம்மாடி எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு முல்லை" என்றார் படபடப்பாக.
"என் அக்காவோட குழந்தை என் குழந்தை தானே பாட்டி, இவன் என் கூட பிறந்த அக்காவோட குழந்தை"
இப்போது தான் அரவிந்துக்கு புரிந்தது, குழந்தை ஏன் முல்லையை போன்று இருக்கிறான் என்று.. இருந்தும் பிறந்து ஐந்து ஆறு நாட்கள் கூட ஆகாத தாய் பால் குடிக்கும் குழந்தையை இவள் ஏன் கையில் வைத்துக் கொண்டு சுற்றுகிறாள்.. என எண்ணியபடி இருக்க..
அதே கேள்வியை தான்,, பாட்டியும் அவளிடம் கேட்டிருந்தார்...
"அவ இப்ப இல்லை, இறந்துட்டா பாட்டி,." விரக்தியாக மொழிந்தவள்..
"எங்க சொந்த ஊர் இங்கிலாந்து..
அப்பா இங்கிலாந்து, ஜோசப் டேனியல், எங்க அம்மா இந்தியன் கொடிமலர்.. அப்பாக்கு சொந்தமா அங்க காலேஜ் ஸ்கூல்னு நிறைய இருக்கு, ரொம்ப வசதியானவரு..
அப்பாக்கு சொந்தமான காலேஜ்ல ஒன்னுல தான் அம்மா மெரிடல சீட் கெடச்சி படிக்க வந்தாங்க.. அப்ப தான் அப்பா படிப்ப முடிச்ச கையோட, எங்க தாத்தா அவரு கிட்ட பாதி பொறுப்புகள ஒப்படைச்சாரு..
அப்பாவும், அவருக்கு கொடுத்த பொறுப்புகள எல்லாம் திரன்பட நடத்தினாரு.. அன்னைக்கு ஒவ்வொரு காலேஜா ரவுன்ஸ் போகும் போது தான் முதல் முறை அம்மாவை பாத்தாரு, அம்மா அமைதியானவங்க.. அப்பவே அப்பாக்கு அம்மாவை ரொம்ப பிடிச்சி போச்சி.. லவ் அட் பிரஸ்ட் சைட்.. அதிலிருந்தே அவங்கள அப்பா கண்காணிக்க ஆரமிச்சாரு..
அம்மா ரொம்ப இல்லனாலும், ஓரளவு வசதியானவங்க தான், நல்ல குடும்பம்னு எல்லாம் தெரிஞ்சிகிட்டாரு.. அப்பா என்னதான் யூஎஸ்ல பிறந்து வளந்தாலும், எங்க அப்பா பேமிலிக்கு இந்தியன் கலாச்சாரம்னா ரொம்ப பிடிக்கும்... அதனாலோ என்னவோ, அம்மா படிப்பு முடியற வரைக்கும் அப்பா அவங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கல..
அம்மா படிப்பு முடிஞ்சி.. இந்தியா வந்த கையோடு, அப்பா பேமிலி எல்லாரும் வந்து அம்மாவ பொண்ணு கேட்டாங்க.. முதல்ல மறுத்தவங்க.. அப்புறம் எப்டி எப்டியோ பேசி ரெண்டு பேர் கல்யாணமும் தமிழ்நாட்டு முறை படி நடந்துச்சி.. கல்யாணத்துக்கு பிறகு தான் அம்மாக்கு அப்பா அவங்கள இத்தனை வருஷமா காதலிச்சி காத்திருந்தது தெரிய வந்துச்சி.. அப்போதிலிருந்து அம்மாவும் அப்பாவும் ரொம்ப சந்தோஷமா வாழ ஆரமிச்சாங்க..
அடுத்த வருஷமே என் அக்கா பிறந்தா, அவளுக்கு தமிழ் பெயரா அப்பா தான் அம்மா பேரோட சிங்க் ஆகுற மாறி அள்ளிமலர்'னு பேர் வச்சாரு.. இந்தியா vs இங்கிலாந்து மிக்சிங்ல அம்மா அப்பா ரெண்டு பேர் ஜாடைலயும் ரொம்ப அழகா இருப்பா அமைதியான குணம், தொட்டதுக்கெல்லாம் ரொம்ப பயப்படுவா.. யார் என்ன சொன்னாலும் உடனே நம்பிடுவா.. அப்பாவி, அப்பா செல்லம்..அதே சமயம் ரொம்ப பிடிவாதம் ஜாஸ்தி...
அடுத்த மூணு வருஷம் கழிச்சி நான் பிறந்தேன்.. ஆனா அம்மா இறந்துட்டாங்க.." என்றவளின் கண்ணீர் துளி தரையை நனைக்க மேலும் தொடர்ந்தால்...
"அம்மாக்கு அடுத்த குழந்தையை சுமக்குற சக்தி இல்லன்னு டாக்டர் சொல்லியும், அப்பாக்கு குழந்தைங்கன்னா பிடிக்கும்னு அவங்க உயிர பத்தி கூட கவலை படாம என்ன பெத்து அவங்க செத்துப் போய்ட்டாங்க...
அப்பா, அம்மா இறந்தல இருந்து எங்க ரெண்டு பேரையும் வளக்க ரொம்பவே சிரம பட்டாரு.. தாய் பால் குடிக்காதனால எதிர்ப்பு சக்தி இல்லாம, எனக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போய்டும் அப்போலாம் அப்பா என்கூடவே தான் இருப்பாரு..
அம்மாவோட நினைவா எனக்கும் முல்லைமலர்"னு பேர் வச்சி சின்ன சந்தோசம் பட்டுக்கிட்டாரு...
எங்கள பாக்க இங்கிலாந்து வந்த பாட்டி, அப்பா எங்கள வச்சி கஷ்ட படரத பாத்துட்டு, அப்பாவ ரெண்டாவது கல்யாணம் பன்னிக்க சொல்லி போர்ஸ் பண்ணாங்க.. அப்பா முடியவே முடியாதுன்னு மருத்துட்டாரு.. அப்புறம் கஷ்ட பட்டு அவரு மனச மாத்தி, தமிழ்நாட்டு பொண்ணா பாத்து, எங்க அம்மா சாயாவதிய கல்யாணம் செஞ்சிகிட்டாரு...
எங்க அப்பா ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவறு போல.... எங்கள பெத்த அம்மா மாதிரியே சாயா அம்மாவும் ரொம்ப ஸ்வீட்.. அப்பாவையும் புரிஞ்சிகிட்டு எங்க ரெண்டு பேரையும் சொந்த பொண்ணுங்களாவே அதிக பாசம் வச்சி ரொம்ப நல்லா பாத்துகிட்டாங்க..
எங்களுக்கு ஒண்ணுன்னா முதல்ல துடிச்சி போறவங்க அவங்கதான்.. எந்த ஒரு இடத்துலயும் எங்கள விட்டு கொடுத்ததே கிடையாது... நாங்களும் எங்கள பெத்த அம்மா இல்லையென்னு இதுவரை பீல் பண்ணதே கிடையாது..
இப்படியே எங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போய்ட்டு இருந்தப்ப தான் மேலும் சந்தோஷம் தர தம்பி சைத்தன்யன் பிறந்தான்.. எனக்கும் அவனுக்கும் சண்டை வரும் போதெல்லாம் என் அக்காதான் இன்னொரு அம்மாவா கண்டிச்சி எங்கள அடக்குவா..ஒவ்வொரு நாளும் இனிமையான நாளா ரொம்ப ஜாலியா என்ஜாய் பன்னி ரசிப்போம்...
அக்கா டாக்டர்க்கு கடைசி வருஷம் படிச்சிட்டு இருந்தப்போ, கேம்ப்புக்கு இந்தியா வந்த இடத்துல தான் எங்க வாழ்கையே தரம் புரண்டு ஒண்ணுமே இல்லாம போச்சி...
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் அக்கா முதல் தடவ இந்தியா வந்தா.. அம்மாக்கு அவள இங்க தனியா அனுப்ப விருப்பமே இல்ல, பிடிவாதம் பிடிச்சி வந்தா.. இங்க வந்ததில இருந்து அக்கா அவ பிரண்ட்சோட, பார்க் பீச் மால்னு எல்லா இடத்தையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுத்தி பாக்குறது வழக்கமாகி போச்சி...
அன்னைக்கும் அதே போல மால் போய்ட்டு சாப்பிட போன இடத்துல அவளோட செயின ஒருத்தன் அறுத்துட்டு போய்ட்டான்.. அதுல ரொம்ப பயந்து போனவ அழுதுட்டு இருக்கும் போது இன்னொருதுதன் அவளோட செயின கொண்டு வந்து கொடுத்துட்டு போனான்.
அதிலிருந்து அக்காக்கு அந்த ஆள் மேல் நல்ல அபிப்ராயம் வந்திடுச்சி..அப்புறம் அவனாவே நிறைய இடத்துல அவளை பாத்து பேச ஆரமிச்சு, அவ மனச கலைச்சி.. அக்கா அவனை விரும்ப ஆரமிச்சிட்டா... ரெண்டு பேரும் சேந்து சுத்தாத இடம் இல்ல...
கேம்ப் முடிஞ்சி ரெண்டு நாள் முடிஞ்சும், அவ வீட்டுக்கு வராததால வீட்ல எல்லாரும் ரொம்ப பயந்துட்டாங்க... போன் பண்ணாலும் எடுக்கல.. மூணாவது நாள் அவளே வந்தா,, ஆனா கழுத்துல தாலியோட வேற ஒருத்தன் மனைவியா, அம்மா அப்பாக்கு என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல.. அம்மா அவ சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிட்டு வந்ததுல அழ ஆரமிச்சிட்டாங்க...
இவர் தான் என் கணவர்னு, ஒரு போட்டோல ஒருத்தன காட்டினா.. அந்த போட்டோல இருக்க ஆளை பாத்ததும், அப்பாக்கு ஏனோ சுத்தமா பிடிக்காம போச்சி.. அவரு ரொம்பவே அக்காவ திட்டி அடிக்க கூட செஞ்சாரு... அவரு ஒன்னும் காதலுக்கு எதிரி இல்ல, இருந்தாலும் அவரு மனசுக்கு எதுவோ சரி இல்லாததை போல இருந்துச்சி போல...
ஆனா அக்கா ரொம்ப பிடிவாதமா இருந்தா அவன் தான் வேணும்னு... அதிலிருந்து அப்பா அக்காட்ட பேசுறத நிறுத்திட்டாரு.. அம்மா ரொம்ப மனசொடஞ்சி போய்ட்டாங்க... அதுவரை சந்தோசமா இருந்த எங்க வீடு சிரிப்பு சத்தம் இல்லாம கலை இழந்து போச்சி...
ஒரு நாள் யாருக்கும் சொல்லாம, அள்ளி வீட்டை விட்டு போயிட்டா.. அவளை தேடாத இடமில்லை... என்னதான் அப்பா அவ மேல வருத்தத்துல பேசாம இருந்தாலும், அவளை வெறுத்து ஒன்னும் ஒதுக்கிடல.. அப்பாவே இந்தியா கிளம்பி வந்து அவரோட பவர வச்சி எங்கெல்லாமோ தேடினாரு, எங்கயும் கிடைக்காம சோர்ந்து போய் ஊர் வந்து சேந்தாரு...
அவளை தேடியே ரெண்டு வருஷம் ஓடி போச்சி, இப்போ ஒரு பத்து நாள் முன்ன தான் அவ இருக்க இடம் தெரிஞ்சிது, அதுவும் அவளே அப்பாக்கு போன் பன்னி சொன்ன பிறகு தான்... எங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம், நான் படிச்சி முடிச்சிட்டு எங்க காலேஜ பாத்துட்டு இருந்தேன்.. தம்பிக்கு எக்ஸாம்ஸ் போயிட்டு இருந்ததால, என்ன அவனுக்கு துணையா இருக்க சொல்லிட்டு.. உடனே அப்பா கூட அம்மாவும் அடம் பன்னி அக்காவ பாக்க இந்தியா வந்தாங்க...
அவங்க இங்க வந்து மூணு நாள் ஆகியும் எந்த ஒரு போனும் பண்ணாததனால, எனக்கு ஒரு மாதிரி படபடப்பா இருந்துச்சி.. தம்பிய எங்க அப்பாவோட கூட பிறந்தவங்க எமிலி அத்தை வீட்டுல விட்டுட்டு, நானும் இந்தியா கிளம்பி வந்தேன்.
அப்ப தான் தெரிஞ்சிது, அவங்க இந்தியா வந்த அன்னைக்கே ஆக்சிடெண்ட் ஆகி இறந்து போய்ட்டாங்கன்னு."என தேம்பியவள்...
"ஆனா, அது ஆக்சிடெண்ட் இல்லை, பக்காவா பிளான் பன்ன கொலைனு என் அக்கா என்கிட்ட சொன்னதும் என்னால தாங்கிக்கவே முடியல, ஒரே நாளுல நான் அனாதை ஆயிட்டேன்,, என்றவள் வெடித்து அழுது விட்டால்....
மழை...

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 18
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.