- Messages
- 300
- Reaction score
- 215
- Points
- 63
அத்தியாயம் 19
"அக்கா, அப்பாகிட்ட சொன்ன அட்ரஸ் வச்சி.. அக்கா வீட்டை கண்டு பிடிச்சி போனேன்.. அங்க போய் பாத்த பிறகு தான் தெரிஞ்சிது, ரெண்டு வருசமா என் அக்கா வாழ்ந்த வாழ்க்கைய பத்தி...ஒவ்வொரு நாளும் நரகத்துல வாழ்ந்து இருக்கா..
எங்க வீட்ல ராஜகுமாரியா இருந்தவ, இங்க தானே எழுந்து நிக்க கூட முடியாத நிலைமைல பாக்கவே பரிதாபமா இருந்தா... அவ ஆசை பட்டு தேர்ந்தெடுத்த வாழ்க்கை தானே எப்டி இருந்தாலும் சந்தோஷமா இருப்பான்னு இத்தனை நாளா நினைச்சிட்டு இருந்தேன்.. அவளை அப்டி ஒரு சூழ்நிலைல பாத்ததும் ரொம்பவே அழுகையா வந்துச்சி...
என்ன பாத்ததும் முகத்தை மூடி கதறி அழுதா... என்ன ஏன் இங்க வந்தன்னு கேட்டு அடிக்க கூட செஞ்சா... அப்புறம் அவ சொன்னதை எல்லாம் கேட்டதும் என்னால தாங்கிக்கவே முடியல....
என் அம்மா அப்பாவ பிளான் பன்னி சாகடிச்சிட்டாங்க... மேலும் என் அக்காவை அந்த துருவன் ஏமாத்தி கல்யாணம் பன்னிகிட்டான்.. அப்புறம் தான் அவ எங்க வீட்டுக்கு வந்தா, நல்லவன் போல நடிச்சி அவ மனச கலைச்சி வச்சிட்டான்.. எங்க எல்லாரையும் தூக்கி எறிஞ்சிட்டு அவன் தான் வேணும்னு திரும்பவும் இங்கேயே அவனோட வந்துட்டா.. அதுக்கப்புறம் தான் அவளுக்கு எல்லா கெட்டதும் நடந்து அவ இப்ப இந்த உலகத்தை விட்டும் போயிட்டா.." முல்லை சொல்லி அழ, பாட்டிக்கும் அவள் நிலையை நினைத்து கண்கள் கலங்கியது..
அவளின் இத்தகைய இழப்பின் வேதனையை, நன்றாகவே அரவிந்தால் புரிந்து கொள்ள முடிந்தது, அவனும் இது போன்ற பெற்றோரின் இழப்பை கடந்து வந்தவன் தானே....கலங்கி தான் போனான்...
"அகரன், துருவன், சந்திரன்.. மூணு பேரும் அண்ணன் தம்பிங்க, அதுல அகரன் அண்ணன்.. துருவன் சந்திரன் ரெண்டு பேரும் ரெட்டைங்க.... இவனுங்க தொழிலே விபச்சாரம் பண்றது தான்...
அழகா இருக்க பாக்குற பொண்ணுகளை எல்லாம், எப்டியாவது அவங்க வலைல சிக்க வச்சி.. காதல் கல்யாணம்னு பேர் சொல்லி ஏமாத்தி அவங்க கூட அழைச்சிட்டு போய்... முதல்ல துருவனும் சந்திரனும் அந்த பொண்ணுங்கள நாசம் பன்னி அப்புறம் ஒரு பெரிய விலைக்கு அவங்கள வித்துடுவாங்க...
அது தெரியாம என் அக்காவும் அதுல ஒருத்தியாகிட்டா.. துருவன் தான் அக்காவ ஏமாத்தி கல்யாணம் பன்னது.. ஆனா அந்த சந்திரனும் இவனும் சேந்து என் அக்காவ தினமும் நாசம் பன்னி இருக்கானுங்க.... ஒவ்வொரு நாளும் அள்ளி நரக வேதனைய அனுபவச்சிருக்கா... அகரன் ஆண்மை இல்லாதவன் இல்லனா அவனும் கூட்டு சேந்து இருப்பான்...
எல்லா பொண்ணுங்களையும் விலைக்கு வித்தவங்க.. என் அக்காவ மட்டும் யாருக்கும் விக்கல, காரணம் அவளோட சொத்துங்க.. கூடவே என் அக்காவ அவன் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி எங்க குடும்பத்தை பத்தி எல்லாத்தையும் அவ வாயாலே கேட்டு தெரிஞ்சிகிட்டான்... அப்ப தான் அக்கா எங்க குடும்ப போட்டோ எல்லாம் காட்டினா அதுல என்னோட போட்டோவையும் பாத்துட்டான்...
என் அக்காவ வச்சி என்னையும் இங்க கொண்டு வர பிளான் பன்னி, அவளை ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க... ஆனா அக்கா என்னபத்தி அவங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல.. அவ அவனுங்க கிட்ட சிக்கி சீரழிஞ மாதிரி, என்னையும் அவனுங்ககிட்ட மாட்டி விடக் கூடாதுன்னு, எனக்காக எல்லா கொடுமைகளையும் தாங்கிக்கிட்டா..
அந்த சூழ்நிலைல தான் அவ கர்பம் தரிச்சா.. அவளுக்கு அந்த மிருங்கங்களோட குழந்தைய சுமக்க சுத்தமா விருப்பம் இல்லாம, அவளும் சாகலாம்னு முடிவு எடுத்து தற்கொலை பன்ன பாத்தா... ஆனா அவ பன்ன தப்புக்கு, ஒரு குற்றமும் செய்யாத இந்த குழந்தைக்கும் சேத்து தண்டனை கொடுக்க மனசு வராம.. எப்படியாவது குழந்தைய பெத்து பாதுகாக்க நினச்சா...
குழந்தை பிறக்க போற சமயத்துல... அவளுக்கு ரொம்ப பயம் வந்துடுச்சி.... அதனால வேற வழி இல்லாம, யாருக்கும் தெரியாம, அப்பாக்கு போன் பன்னி எல்லா விஷத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்டு அழுது இருக்கா...
அப்பாக்கு அதை எல்லாம் கேட்டதும் கோவம் ஒரு புறம், அக்காவ நினைச்சி அழுகை ஒரு புறம்னு.. என்கிட்ட எதுவும் சொல்லாம, அம்மா அடம் பண்ணினதால அவங்கள மட்டும் கூட்டிட்டு கிளம்பினாரு...
ஆனா அக்கா என் அப்பாகிட்ட யாருக்கும் தெரியாம பேசினத எல்லாம் அகரன் கேட்டுட்டான்... அவளுக்கே தெரியாம பிளான் பன்னி அவங்க கார்ல வரும்போதே ஆக்சிடெண்ட் பன்னி சாகடிச்சி எந்த ஒரு பத்திரிக்கைலயும் அவங்க பேரு வராம அவனுங்களே என் அம்மா அப்பாவோட உடம்ப எரிச்சிட்டானுக...
எப்டியும் நான் என் அம்மா அப்பவ தேடி இந்தியா வருவேன்னு தெரிஞ்சி.. எனக்காகவே காத்திருந்தானுங்க,, அதுக்கு தான் அக்காவும் என்ன பாத்ததும் அடிச்சா.. ஏன் இங்க வந்தேன்னு.... ரொம்ப அழுதா அவளால தான் அம்மா அப்பா இறந்து இப்ப நீயும் இங்க வந்து மாட்டிகிட்டியேன்னு... என்னையும் அவனுங்க அங்கேயே சிறை வச்சானுங்க...
மறுநாள் அவனுங்க எல்லாரும் எங்கயோ வெளிய போய் இருந்த நேரம், அக்காக்கு பிரசவ வலி வந்து, இவன் பிறந்தான்...அக்கா பிழைக்க மாட்டேன்னு அவ இருந்த நிலைமையே உணர்த்துச்சி... "என்ன இங்கிருந்து எப்டியாவது குழந்தையோட தப்பிச்சி போக சொல்லி, நான் பன்ன தப்புகாக குழந்தைய வெறுந்துடாத முல்லை, அவனை நீ தான் பாத்துகணும்னு" அழுகைடனே பேச முடியாம கடைசியா என்கிட்ட பேசி இறந்து போயிட்டா...
எனக்கு என்ன பண்றதுன்னு ஒண்ணுமே புரியல, பைத்தியம் பிடிக்காத குறை தான், அழ கூட முடியாத நிலையில குழந்தைய கைல வச்சிட்டு என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல...அப்பதான் அங்க வேலை பாக்குற ஒரு வயசான அம்மா ஒருத்தங்க, குழந்தை வேற பசில கத்துறத தாங்க முடியாம.. என் பொண்ணுக்கும் குழந்தை பிறந்து கொஞ்ச நாள் தான் ஆகுது, இங்க பக்கத்துல தான் என் வீடு இருக்கு...நான் குழந்தைய யாருக்கும் தெரியாம என் வீட்டுக்கு தூக்கிட்டு போறேன்.. நீ எப்படியாவது தப்பிச்சி வந்து.. என்கிட்ட இருக்க குழந்தைய வாங்கிக்கோ.. அதுக்கு முன்னாடி குழந்தை என்னாச்சுன்னு யாராவது கேட்டா அள்ளி வைத்துக்குள்ளவே குழந்தை செத்து போச்சின்னு சொல்லுனு...
உயிர் பிரிஞ்சி வெறும் உடம்பா இருந்த அக்காவோட வயித்துல, துணி மூட்டைங்களை வச்சி, குழந்தை பிறக்காத மாதிரி உள்ளவே இருக்குறத போல செஞ்சி வச்சிட்டு குழந்தைய பைல வச்சி யாருக்கும் சந்தேகம் வராம அவங்க தூக்கிட்டு போய்ட்டாங்க... அவங்க பொண்ணு தான் இந்தனை நாளா இவனுக்கு தாய்பாலும் கொடுத்தாங்க....
போனவங்க திரும்ப வந்து கேட்டப்ப.. அந்த அம்மா சொல்லி கொடுத்த மாதிரியே சொன்னேன்.. அத கேட்டு இறந்து கிடந்த அக்காவ ஒரு பொருடாவே மதிக்காம.. கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம.. என் கண்ணு முன்னாடியே..அதே இடத்துலே பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டாங்க... மழை ஒரு புறம் ஜோன்னு பெய்ய என் அக்காவோட உடம்பு ஒரு புறம் ஜெகஜோதியா எரிஞ்சிது..
அப்புறம் நான் அழுது எவ்ளோ கெஞ்சியும், என்னை விடாம, அக்கா செத்து ஒரு நாள் கூட முடியாம,, கண்ணை மறைக்கும் அந்த வெளுத்து வாங்கும் மழைளையும் என்ன இழுத்துட்டு போய் அலங்காரம் பன்னி கோவில்ல தாலி கற்ற நேரம் தான், நான் அங்கிருந்து தப்பிச்சி வந்தது... உங்களை பாத்தது எல்லாமே நடந்துச்சி..."
வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டவளாக, "அப்புறம் நீங்க இங்க உங்க வீட்ல இருக்க சொன்னதும், எனக்கும் அப்போதைக்கு வேற யாரையும் தெரியாததால, குழந்தையும் நான் போய் அந்த அம்மாகிட்ட வாங்க வேண்டிய வேலை இருந்ததால தான் இங்க இருக்க சம்மதிச்சேன்..
இன்னும் என் அம்மா அப்பா அக்கா எல்லாரும் இறந்தது, இந்தியால இருக்க ரெண்டு பாட்டிங்க வீட்டுக்கும், இங்கிலாந்துல இருக்க எங்க ரிலேஷன் அப்புறம் தம்பி இப்படி யாருக்கும் தெரியாது..." என்று தேம்பி அழ...
இதை கேட்ட இருவருக்குமே என்ன பேசுவது என்றே புரியவில்லை... அள்ளி பட்ட துன்பங்கள் எல்லாம் நினைக்கவே அத்தனை வேதனையாக இருந்தது..
முல்லையின் இழப்பு பெரிது தான் அதற்காக, அவளும் அப்படியே அதை நினைத்தே காலம் கடத்தி விட முடியுமா என்ன... குழந்தைக்காக அனைத்தையும் கடக்க அவளாகவே முடிவு செய்து இருந்தால்.. இருந்தும் ஒரே நாளில் அவள் வாழ்க்கை திசை மரியாதை அவளால் கிஞ்சித்தும் தாங்கி கொள்ள முடியாமல் தவித்து தான் போகிறாள்.. ஒவ்வொரு நாளும்...
"அழாதமா, ஆண்டவன் ஒரு கதவை அடச்சாலும், நல்லவங்களுக்கு கஷ்டம்னு ஒன்னு வரும்போது இன்னொரு கதவை திறக்காம இருக்க மாட்டார்..அதான் இப்ப நீயும் குழந்தையும், அந்த பாவிங்க கிட்ட மாட்டம தப்பிச்சி..நல்லபடியா பாதுகாப்பா இருக்கீங்களே அதுவே இப்போதைக்கு பெரிய விஷயம்மா முல்ல.. இப்ப நீ என்னமா முடிவு பண்ணிருக்க".. எங்கே அவள் இந்த நாட்டை விட்டு சென்று விடுவாளோ என்ற பரிதவிப்புடன் பாட்டி வினவ...
"குழந்தைய வாங்கிட்டு எப்டியாவது, இங்கிலாந்து போய்டலாம்னு தான், என்ன யாருக்கும் அடையாளம் தெரியாத மாதிரி, ஆபத்துன்னு தெரிஞ்சும் அங்க போனேன். ஆனா. என் கெட்ட நேரம் அகரன் கண்ணுல சிக்கி, மறுபடியும் சார் தான் வந்து என்னயும் என் குழந்தையும் காப்பாத்தினாரு.." என்றவள் அடுத்து சொன்னதில் பாட்டி வருத்தமாக அவளை பார்க்க...
அரவிந்த், எந்த உணர்ச்சியும் அற்று, அவளையே வெறித்திருந்தான்....
அதே நேரம் முல்லையை பார்த்த அனு,, அம்மாஆ.. என உற்சாகமாக கத்திக் கொண்டே ஓடி வந்து அவள் கால்களை கட்டிக் கொண்டால்...
மழை...

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 19
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.