• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
170
Reaction score
146
Points
43
அத்தியாயம் - 2

"என்னாச்சு அண்ணையா சம்பவம் பண்ண போறேன்னு சொல்லி வேகமாக வந்துட்டு ஒரு பொண்ணோட தாவணிய தேடி கொடுத்துட்டு நிக்கிற. அப்போ இன்னைக்கு சம்பவம் லேதுவா?" நமட்டு சிரிப்பை தெரியாதவாறு உதட்டில் அடக்கிக் கொண்டு ருத்ரங்கன் பின்னிருந்து பவ்யமாக கேட்டான் மதன்.

எதிர்வீட்டு மிட்டாய் குயிலின் மாயை குரலை கேட்டே அதுவரை ஒருவித மயக்கத்தில் இருந்தவன் அவளை பார்க்காது விட்டதில் கடுப்பாக பின்னால் திரும்பிய வேகத்தில் குண்டடி பட்ட கால் மலுக்கென முறுக்கிக் கொண்டது வேகமாக பின்னால் அடியெடுத்து வைத்ததில்.

'என்ன கேட்ட, திரிகி செப்பு?' சீரானக் குரலில் கண்களை இடுங்கி அவன் கேட்ட தொனி தொண்டைக் குழியில் மீன்முள் சிக்கிய உணர்வு. 'ஒ.ஒன்னும் இல்ல அண்ணையா இன்னைக்கு சம்பவம் பண்ண போகணும் நேரம் ஆகுதுனு நியாபகப் படுத்தினேன்' சமாளிப்பாக பதில் சொன்னவனை அழுத்தமாக பார்த்தவனாக தாடியை நீவியபடி வில்லங்கமாக தலையாட்டிவன் ஸ்லோமோவில் முன்னால் நடக்க, 'அண்ணையா.. அண்ணையா.. தயவுசெய்து இந்த ஒருமுறை என்ன மன்னிச்சி விற்று அண்ணையா. இனிமே எது சொல்லணும்னாலும் தெளிவா புரியும்படி சொல்றேன்' பரிதாபமாக கத்திய மதனின் நிலையோ மிகவும் மோசம்.

ருத்ரங்கன் அடுத்த அழைப்பாக மன்மதனை அழைக்கும் வரை ஒற்றைக் காலில் ஆடாமல் அசையாமல் நிற்க வேண்டும் அதுவும் குண்டடி பட்டு ரத்தம் கசியும் காலை தரையில் பதித்து. தப்பித் தவறி மற்றொரு காலை ஊன்றி விட்டால் நிரந்தரமாக காலை இழக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறதே!!

"ஏண்ணா இந்தாங்கோ காப்பி" முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு காப்பியை நீட்டிய ஆத்துக்காரியை சலிப்பாக பார்த்தபடி வாங்கிக் கொண்டார் பார்த்தசாரதி.

"ஏன் டி வந்ததுல இருந்து முகத்தை தூக்கி வச்சுண்டே சுத்திட்டிருக்கே. நியாயமா பாத்தா நான்தான் கோவப்படணும் ஆனா இந்த ஆத்துல தான் எல்லாமே தலை கீழாவே நடந்துட்டுட்ருக்கே, எல்லாம் உன் மகன் ராஜ்யம் தான்" அங்கலாய்த்துக் கொண்டு காப்பியை வாங்கியவர் புதிய குஷன் சோபாவில் அப்பாடா என அமர்ந்து கொண்டார்.

"நன்னா இருக்கே உங்க பேச்சி. ஊருல இருக்கும் போது ஒரு பேச்சி பேசிண்டு இங்க வந்ததும் ஒரு பேச்சி பேசுறேளே இது எந்த ஆத்துலயாவது அடுக்குமா. பிள்ளையாண்டான் தனியா ஊர் தெரியாத இடத்துக்கு போயி கஷ்டப்படுவான் அதுனால குடும்பமா என் பிள்ளையாண்டான் இருக்க இடத்துல தான் இருக்கணும்னு, பிடிவாதமா என்னையும் கூட சேத்து அழைச்சிட்டு வந்துட்டு என் மகன் ராஜ்யம்னு வேற சொல்றேளா" இடுப்பில் கை வைத்து முறைத்தபடி சண்டைக்கு நின்றார் பரிமளம்.

இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு காலங்காத்தால சண்டைக்கு நிக்கிற, வேலை இல்லையா நோக்கு. அவருக்கு அவர் கடுப்பு அதை மனைவியிடம் காட்டினார்.

ஓஹ்.. நீங்க ஒண்ணுமே சொல்லாம நானா தான் வேற வேலை இல்லாம சண்டைக்கு நிக்கிறேன் அப்டிதானே. இருவரின் வாக்கு வாதமும் முற்றுவதற்குள் 'உங்க சண்டைய திரும்பவும் ஆரம்பிச்சிட்டேளா' என அங்கு ஓடி வந்து விட்டாள் தேன்குழலி.

உன் அம்மா தான் முதல்ல தொடங்கினா அவரும். உன் தோப்பனார் தான் முதல்ல தொடங்கினார் என பரிமளமும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாடிக் கொள்ள, இருவரையும் மாறி மாறி பார்த்தவளுக்கு தெரியுமே அவர்கள் சண்டை எதனால் என்று.

தஞ்சையில் உள்ள பிரபல பெருமாள் கோவிலில் இரண்டு நாட்கள் முன்பு வரை பெருமாளே கதி என பெருமாள் நாமம் போற்றிக் கொண்டு குருக்களாக சேவை புரிந்தவர் பார்த்தசாரதி. இப்போது மகனின் வேலை பணிமாற்றம் செய்யப்பட்டதால் அவனை தனியே விட விரும்பாதவரையும் குடும்பத்தையும் ஆந்திரா அழைத்து வந்து விட்டான். இதில் பரிமளத்தின் பெரிய கவலை இங்குள்ளவர்களுக்கு தமிழ் தெரியவில்லை பேச்சி துணைக்கு ஆள் இல்லை என்பதே!!

சொந்த ஊரை விட்டு வந்தது பார்த்தசாரதி பரிமளம் தம்பதியருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் பிள்ளைகளே அனைத்துமாய் வாழ்ந்து பழகியவர்களுக்கு வேறு வழியும் இல்லையே. கூடவே சிலபல காரணங்களும் உண்டு போக போக தெரியும்.

"ஏம் ப்பா.. அண்ணா உங்ககிட்ட என்ன சொன்னா. இங்க பக்கத்துல உள்ள வெங்கடாஜலபதி கோவில்ல ரொம்ப வருஷமா குருக்கள் இல்லாம இருக்கா. அவாகிட்ட உங்கள பத்தி சொன்னதும் வர சொல்லிட்டதா சொன்னாளே. அப்புறமும் பெருமாளுக்கு சேவை செய்ய முடியலைன்னு முகத்தை தூக்கி வாசூண்டுருந்தா எப்டி. ஏம் ம்மா.. நோக்கு வேற தனியா சொல்லனுமா வந்த ரெண்டே நாளுல புது இடம் பழகிடுமா, இதே மாதிரி ரெண்டு பேரும் சண்டை போட்டு ஆளுக்கு ஒரு பக்கம் திருப்பிட்டுருந்தா உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தஞ்சாவூருக்கு டிக்கெட் போட்டு திரும்ப ஊருக்கே அனைச்சி விற்றுவா உங்க புள்ளையாண்டான், அப்புறம் உங்க விருப்பம். நமட்டு சிரிப்போடு இருவரிடமும் சொல்லி விட்டு அவள் அறைக்கு ஓடி விட்டாள்.

அவள் சொன்னதை கேட்ட இருவரும் தான் சிறிது பயந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். "ஏண்ணா இவ என்ன அவனை விட மோசமா மிரற்றுறா. எதுக்கு நம்ம ஜாக்கிரதையா இருக்கணும் இல்லனா அண்ணனும் தங்கையும் நம்மள பிளான் போட்டு ஊருக்கு அனுப்பி வச்சிட்டு நன்னா ஊரை சுத்தி வந்து கும்மாளம் போடுங்க" மடிசாரை உதறிக் கொண்டு மாமி புலம்ப, "ஆமா ஆமா பரிமளோ, இதுங்க ரெண்டையும் கண்ணெதிரே வாட்ச் செஞ்சிட்டே இருக்கனும். இல்லனா பல சேஷ்ட்டைகளை செய்ய வாய்ப்பிருக்கு" பிள்ளைகளைப் பற்றி நன்கு அறிந்தவராக தீவிரமாக சொன்ன பார்த்தசாரதி மீண்டும் பெருமாளின் பாத அடியில் அமர்ந்து கண் மூடி அமர்ந்து பெருமாள் நாமம் போற்ற துவங்கி விட, பரிமளம் சமையல் கட்டில் தஞ்சம் புகுந்து கொண்டார்.

ஈரமான கார்க்கூந்தல் அசைந்தாட துண்டை வைத்து மெதுவாக துவட்டியபடி கண்ணாடியின் முன் அமர்ந்தாள் தேன்குழலி. பிராமண பெண்ணுக்கான அணைத்து சௌபாக்கியங்களும் நிறைந்த வட்ட முகம், பிறை நெற்றி, கருமையான அடர்ந்த புருவங்களுக்கிடையே கோபுர மெரூன் பொட்டும் அதன் கீழ் வெள்ளை சாந்தை பிறை போல் வரைந்து கோபுரப்பொட்டின் மேல் சிறு கீற்று குங்குமம் வைத்திருக்க தெய்வமகளாக காட்டியது அவளை. மின்னல் விழிகளில் அஞ்சனம் தீட்டி சற்றே நீட்டிய கிளி மூக்கில் கண்ணை பறிக்கும் சிகப்பு வைரக்கல் பதித்த மூக்குத்தி மாமி பொண்ணை இன்னும் அழகாக காட்டியது.

சீனிப் பாகில் ஊற வைத்து விட்டாளோ என்று சந்தேகம் தோன்றும் அளவுக்கு மினுமினுக்கும் சதைப்பற்றான ஆரஞ்சி நிற அதரங்கள். சிவந்த செவிமடலில் நர்த்தனம் ஆடும் அளவான தங்க ஜிமிக்கி, அவளின் அன்பு அண்ணன் முதல் மாத சம்பாத்தியத்தில் தங்கைக்கென வாங்கி வந்து அவனே அதை அழகாக மாட்டி விட்ட அழகிய தருணம்.

வீட்டின் செல்லப் பெண் தேன்குழலி. அன்னை தந்தை குடும்பத்தினர் அனைவரும் குழலி என்று அழைக்க அவளின் அண்ணன் மட்டும் செல்லமாக தேனு என்று அழைத்தால் போதும் தேனாக உருகி விடுவாள். 'உனக்கு அண்ணன்னா அப்டி புடிக்குமா' அவள் தோழிகள் பலரும் அவளின் அண்ணனிடம் பேச கூட ஒரு வாய்ப்பு கொடுத்தது இல்லையே என்ற பொறாமையில் கிண்டலாக கேட்கும் போதெல்லாம், 'என் அண்ணன் தான் எனக்கு எல்லாமே' ஒற்றை மெல்லிய சிரிப்பில் அவளின் மொத்த பாசத்தையும் வெளிகாட்டிவிடுவாள்.

அப்டி எவன் தான் டா அவ அண்ணன்னு பாக்க ஆவலா இருக்கா வெயிட் பண்ணுங்க செகண்ட் ஹீரோல்ல பொறுமையா வருவாப்புல.

ரவிக்கைக்கு மேட்ச்சாக கட்டி இருந்த மஞ்சள் வண்ண தாவணியை சரி செய்துக் கொண்டு வந்ததில் இருந்து இதுவரை திறக்காமல் இருந்த பெரிய அளவிலான சன்னல் கதவை திறந்து விட்டவளாக சில்லென்று வீசிய தென்றல் காற்றில் முகத்தை வெளிநீட்டிக் காட்டி கண்கள் மூடி ஆழ சுவாசித்தவள் மெல்ல கண் திறக்கம் போது தான் பார்த்தாள் எதிர் வீட்டை.

அளவான ஓரடுக்கு மாடி கொண்ட வீடு தான். அவன் ஒற்றை ஆளுக்கு அதுவே அதிகம் தான். அவன் அறையை தாண்டி தேவையற்ற நேரங்களில் வெளியே பார்ப்பது அரிது. முன்பு சமையல் செய்ய 50 வயதை மிக்க ஒரு பெண்மணி வருவார், ருத்ரங்கன் கொலை கூட்டத்திற்கு தலைவன் என்று கேள்வி பட்டு உள்ளுக்குள் நடுகத்தோடு இருந்தவர், காய்கறி எடுக்க ஃப்ரிட்ஜை திறக்கயில் தலை மட்டும் தனியாக எக்சிபிஷனில் வைப்பதை போல் வெட்டி வைத்து இருப்பதை கண்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியவர் தான். அதிலிருந்து ருத்ரங்கனும் சமையலுக்கு ஆள் தேடியது இல்லை. பசித்தால் மட்டும் வேட்டையாடி உண்ணும் சிங்கம் போல் அவனுக்கே பசி என்று தோன்றில் தானாக சமைத்து உண்டு கொள்வான் டெவில்.

அவனோடு நாலு அல்லக்கை அதில் எப்போதும் கூடவே இருப்பது மதன் தான் மற்ற கோஷ்டி எல்லாம் அவசர சம்பவ வேலையின் போது ஒன்று கூடுவது தான். எதிர் வீட்டு சன்னல் கதவு திறக்காத வரை நல்லது அது திறக்கும் போது குழலியின் சந்தோஷக் கதவு மூடிக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஊரை விட்டு காலி செய்து வந்ததில் இருந்து கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அந்தந்த இடங்களில் அடிக்கி வைப்பதிலேயே நேரங்கள் ஓடிட சற்று நேரம் நின்று ஆசுவாசமாக மூச்சி விடக் கூட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை அவள். சிறிது நேரம் வெளியே தெரிந்த வீடுகளையும் தெருவையும் கண்ணுகெட்டும் தூரம் வரை எட்டிப் பார்த்துக் கொண்டே வந்தவளின் புருவங்கள் இடுங்கின, மயான அமைதியைக் காட்டியது அத்தெரு. ருத்ரங்கன் வீட்டை தவிர மற்ற வீடுகளின் கதவுகள் அனைத்தும் சாற்றியே இருக்கிறது. எதனால் என புரியாமல் அதை உடனே அலட்சியம் செய்தவளாக, 'எல்லாரும் ஆத்த திறந்து வச்சுண்டேவா இருப்பா வேலை இருக்கும். பிறகு பாத்துக்கலாம்' தனக்குள்ளே பேசிக் கொண்டு இருக்கும் போதே அவளின் அலைபேசி சிணுங்கியது.

அண்ணனா என ஓடி சென்று ஆர்வமாகப் பார்க்க கிருஷ்ணா என்ற பெயரோடு ஹார்ட் சிம்பிள் திரையில் மிளிர வெட்கப் புன்னகை அவள் முகத்தினில்
அன்டன் செய்து அலுங்காமல் காதினில் வைத்தாள் குழலி.

'என்ன மேடம் ஆந்திரா போனதும் கட்டிக்க போறவனை மறந்தாச்சா' அந்த பக்கம் கிருஷ்ணராமலிங்கம், ஆறு மாதங்கள் முன்னவே குழலிக்கு பரிசம் போட்ட மாப்பிளையாண்டால்.

'நீங்களா அப்டி நினைச்சீண்டேள்னா நான் என்ன பண்ண முடியும்' மீண்டும் வந்து சன்னலின் முட்டில் சாய்ந்து நின்றாள் முதுகு புறத்தை வெளிப்பக்கம் காட்டியபடி.

'வேற என்னனு நினைக்கனும் மாமி, நீங்க சொன்னேள்னா அப்டியே நினைச்சிப்பேன்' அவளை சீண்ட. 'ச்சீ.. சும்மா இருங்கோ. ஆமா எப்டி இருக்கேள் ஆத்துல மாமி மாமா எல்லாரும் சௌக்கியமா இருக்காளா?' பரிசம் போட்ட புதிதில் அவனிடம் பேச கூச்சப்பட்டவள் இப்போதெல்லாம் உரிமையாக கதைக்கிறாள்.

'எல்லாரும் நன்னா இருக்கா மாமி. நான் மட்டும் தான் உன் நினைப்பாவே இருக்கேன்' ஏக்கமூச்சி அவளை தாக்கியதில் முகம் செவ்வானம் பூசிக் கொண்டது.

குளித்து முடித்து சூரிய அஸ்தமனம் பார்ப்பது வழக்கம் இல்லை என்றாலும் இப்படி எக்குத்தப்பாக உறக்கம் கலைகையில் அமைதியாக சன்னல் மீது ஏறி அமர்ந்து இலக்கின்றி வானத்தை வெறிப்பான் ருத்ரங்கன். வேலையா வெட்டியா? அவன் வேலை வரும் வரை யாரும் அவனை அழைக்கப் போவது இல்லை. உழைப்பு என்றால் விலை என்ன என்று கேட்கும் வர்கம். ஒற்றை பார்வையில் ஊரையே ஆட்டிப் படைப்பான்.

மதனுக்கு தண்டனை கொடுத்து விட்டு நேராக தனதறைக்கு வந்து சிறிது நேரம் மெத்தையில் மல்லாக்க விழுந்து விட்டத்தைப் பார்த்தவன் விருட்டென எழுந்து சன்னல் கதவை அடித்து திறந்த சத்தம் நல்லவேளையாக குழலியின் செவியை எட்டவில்லை, அவள் தான் கிருஷ்ணாவோடு மும்புரமாக கடலை வறுத்துக் கொண்டு இருக்கிறாளே.

காலை வெயில் கண்ணை கூச செய்ய எதிர் வீட்டு குயிலின் சிரிப்புச் சத்தம் கூர்மையான செவியை அடைந்ததில் விலுக்கென நிமிர்ந்து பார்த்தவன் கண்கள், பெண்ணவளின் ரவிக்கை மூடா பளிங்கு முதுகை ஊடுருவி இடைவரை நளினமாக தெரிந்த வரைந்து வைத்த வளைவுகளை அளந்து, தாவணியை கையில் சுற்றிக் கொண்டு பேசி சிரிக்கையில் அவ்வபோது நலுங்கித் தெரிந்த செதுக்கிய வெண்ணிடையில் பார்வை மையல் கொண்டு நின்றது.

பெண்களை பார்க்காதவன் அல்ல அவனுக்காக தோன்றினால் மட்டும். ஒரு சம்பவத்திற்கு லட்சம் தாண்டி கோடி வரை டீல் பேசி சம்பாதித்து வைத்துள்ளான். பெரிதாக எதிலும் நாட்டம் இல்லாதவன் சம்பவத்தை தவிர. அப்படி இருக்க பணத்தை வைத்து என்ன செய்வது என்றும் தெரியவில்லை, சும்மா இருக்கும் பணத்தை வெளியே தானம் கொடுக்கும் இளகிய மனமும் அவனுக்கு இல்லை. வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல் ஓட்டிக் கொண்டு இருக்கிறான்.

எதிர்வீட்டு மாமியின் சிரிப்பலையில் தன்னிலை அடைந்தவன், முன்னால் இருந்த அவள் கூந்தலை அள்ளி பின்னால் தூக்கிப் போடவும் கருப்பு கடலாக அவள் அசைவுக்கு ஏற்ப அலை அலையாக மேலெழும்பிய கருங்கூந்தலை தொட்டு ஸ்பரிசிக்க தோன்றிய கரத்தை வினோதமாக உயர்த்திப் பார்த்த நொடிதனில் பட்டென சன்னல் கதவை மூடும் சப்தம் நிசப்தத்தை கலைக்க கரத்தில் இருந்த பார்வையை சட்டென விலக்கி மீண்டும் அவள் நின்ற இடம் பார்க்க, மூடிய சன்னல் கதவே வரவேற்றது அவன் பார்வையை.

ரவுடியின் பார்வை மாமியை தொடர்ந்தால் அடுத்தடுத்து சம்பவமும் சிறப்பாக அமையும்.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 2
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top