- Messages
- 302
- Reaction score
- 217
- Points
- 63
அத்தியாயம் - 2
"ஹேய் இதழ், என்ன மதியமே கெஸ்ட் பாத்துட்டு வரேன்னு போனவ நைட்டாகிடுச்சி இப்பதா கீழ வர. என்னாச்சி டி ஏன் ஒருமாதிரி சோர்வா இருக்க"
அறைக்கு வந்த யமுனாவின் தடுமாறிய நடைகண்டு வேகமாக வந்தாள் அவளோடு ஒரே அறையில் தங்கி இருக்கும் யமுனாவின் தோழி சரித்ரா, பெங்களூரை சேர்ந்தவள்.
சரித்ராவை கண்டதும் பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டவளாக, "சரித் ந்..நா.நான் கெஸ்ட் பாக்க மேல போனேன்ல அப்போ யார் அங்கே ஸ்டே பண்ணது? எங்கிருந்து வந்தாங்க, எத்தனை பேர் வந்தாங்க, எந்த விபரமாவது உனக்கு தெரியுமா?" சம்மந்தம் இல்லாது கேள்வி கேட்ட யமுனாவை புரியாமல் பார்த்தாள் சரித்ரா.
"என்ன இதழ் லூசு மாதிரி பேசுற, நீதானே இன்னைக்கு டே டியூட்டி எத்தனை பேர் வந்து ஸ்டே பண்ணாங்கனு உனக்கு தெரியாமலா மதியத்துல இருந்து நைட் வரை கெஸ்ட்ட கவனிச்சிட்டு வர" அவள் நிலை புரியாமல் சீண்டலாக சலித்துக் கொண்டாள்.
"ஐயோ.. சரித் நான் எப்படி அதை சொல்லுவேன்" தலையில் அடித்துக் கொண்டு அழுதவளை பதறித் தடுத்து, "என்னாச்சி இதழ் எனிதிங் சீரியஸ்" ஆதரவாக அவள் தோள் சாய்த்துக் கொண்டவளுக்கும் கலக்கம் ஒட்டிக் கொண்டது.
"எல்லாமே போச்சி சரி என் வாழ்க்கையே போச்சி. இனிமே நான் எப்படி என் திலீப் முகத்துல முழிப்பேன். அவன் என்னை நம்புவானா இனி, ஹையோ எனக்கு செத்திடலாம் போல இருக்கு டி"
பாவமாக கேவி அழும் தோழியை எப்படி சமாதானம் செய்வது என புரியாமல்,
"என்ன டி பேச்சி இது. நீ இவ்வளோ ஃபீல் பண்ணி அழறத பாத்தா என்னவோ பெருசா நடந்திருக்குனு மட்டும் நல்லா புரியிது. என்ன டி நடந்துச்சி எதையும் மறைக்காம சொல்லு அப்பதா அடுத்து எப்படி மூவ்ஆன் பண்றதுனு தெளிவா யோசிக்க முடியும்" நம்பிக்கையாக அரவணைத்த தோழியைக் கட்டிக் கொண்டு நடந்ததை கண்ணீரோடு சொல்லலானாள் இதழினி யமுனா.
காலை ஆறு மணி போல், நெஞ்சு வரை இறுக்கிக் கட்டிய துண்டில் அவளின் அழகு திருமேனி பாதி மறைத்தாலும் அப்போதே குளித்து துவட்டாது இருந்த வெளிமேனி ஈரத்தில் மினுமினுக்க,
"My life is in this town
And I ain't going down
You think that I'm crazy?
But I don't want the crown
I'm just an ordinary person
Yeah, I'm just a peace loving soul
I'm just an ordinary person
Yeah, I'm just a peace loving soul
Peace loving soul"
ஃபோனில் சத்தமாய் ஓடிய லியோவில் வரும் ஆங்கிலப் பாடலுக்கு ஏற்றார் போல் உடலை வளைத்து ஈரக் கூந்தலை இப்படியும் அப்படியுமாக நகட்டிக் கொண்டு பிட்டத்தை தூக்கி தூக்கி ஆடிக் கொண்டிருந்தவளை போர்வையின் உள்ளிருந்தே தலை தூக்கி முறைத்தாள் சரித்ரா.
"இதழ் எரும. நானே நைட் டியூட்டி பாத்துட்டு இப்போ தானே டி வந்து படுத்தேன் அதுக்குள்ள பாட்ட சத்தமா வச்சி மங்கி டான்ஸ் ஆடி என் தூக்கத்தை ஏன் டிஸ்டர்ப் பண்ற" அவள் எரிச்சலாக கத்துவது எதுவும் காதில் விழாததது போலவே,
"டிஸ்டர்பா இருந்தா காதை பொத்திக்கோடி இங்க ஏன் கண்ண திறந்து பாக்குற" இன்னும் நன்றாக அவள் முகத்தின் நேரே வந்து பின் புறத்தை தூக்கி தூக்கி பாடிக் கொண்டே ஆட,
"திருந்தாத கேசுஸு போடி அங்க" என முணுமுணுத்து அவள் பின்னால் அடித்து விட்டு மீண்டும் போர்வையில் மூழ்கி காதில் கைவைத்து கண்மூடிக் கொண்டாள்.
இது தினமும் நடக்கும் கூத்து தான், யமுனா மிகவும் சுட்டி அவள் கால்கள் ஓரிடத்தில் நின்றால் பூமி சூழல்வது நின்றுவிடும் என தோழிகள் கூட அவளை கேலி செய்வது உண்டு. அவள் இருக்கும் இடம் எப்போதும் சிரிப்பாகவும் கலகலப்புக்கு பஞ்சமின்றி சுவாரசியமாக இருக்கும். ஒரு வேலை செய்தால் அனைவரும் பாராட்டும்படி நேர்த்தியாக முடித்துக் கொடுக்கும் பக்குவம் கொண்டவள்.
இவளின் காதல் விவகாரம் அறிந்து அம்மா அப்பா தலைமுழுகியாயிற்று, காதலன் தான் அனைத்தும் என துணிந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டதில்.
அதற்கு முன்னரே அவளிடம் பக்குவமாக எதிர்காலத்தை பற்றியும் குடும்பத்தை பற்றியும் எடுத்துக் கூறாமல் அவளை அடித்து துன்பறுத்தி காதலை மறக்க சொல்லி, சொந்தப்பந்தம் கூட்டி பஞ்சாயத்து நடத்தி அவளை என்னென்ன அசிங்கப்படுத்த வேண்டுமோ அனைத்தும் செய்தபின் தான் மனம் வெறுத்த நிலையில் காதலன் திலீபன் அன்பில் அனைத்து உறவுகளையும் உதறி தள்ளிவிட்டு வெளிவந்தது.
கல்லூரி நண்பன் தான் திலீப் தூய நட்பு காதலாக மாறியது. இதோ வீட்டை விட்டு வெளியேறி மூன்று வருடங்கள் கடந்து விட்டது இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. காரணம் திலீபனின் வீட்டு சூழ்நிலை. (அதைப் பற்றி கதையின் போக்கில் பார்ப்போம்)
கையோடு அழைத்து வந்த காதலியை தனி அறை எடுத்து தங்க வைத்து நன்றாக பார்த்துக் கொண்டவன், அடுத்து வந்த ஒன்றரை வருடத்தில் துபாய் சென்று விட்டான் சம்பாதித்தே ஆக வேண்டிய கத்திமுனை நிர்பந்தத்தில். யமுனாவும் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது எல்லாம் திலீபனின் குடும்பத்திற்காக மட்டும் தான்.
நேர்த்தியாக பட்டை வைத்து சந்தனநிற யூனிஃபார்ம் புடவையை எடுப்பாக கட்டி, லேசான ஒப்பனையில் நெற்றியின் நடுவே கருப்பு நிற கடுகு பொட்டு வைத்து கண்ணின் கீழே அடர் கருப்பு நிறத்தில் பளபளப்பாக மை தீட்டி, உதட்டுக்கு லிப்க்லாஸ் என்று வகுடு எடுக்காமல் தலையை பின்னி கொண்டை வளையில் அளவான கூந்தலை அடக்கிக் கொண்டு கண்ணாடியின் முன்னே தன் முழு உருவம் பார்த்து நின்றாள் தேவதை பெண்.
மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண் என்றாலும், உடையிலும் அவள் லேசாக தீட்டிக் கொள்ளும் ஒப்பனையிலும், அவளே சம்பாதித்து கழுத்தில் வாங்கி மாட்டிய டாலர் வைத்த மெல்லிய தங்க சங்கிலியும், காதில் ஆடும் குட்டி ஜிமிக்கியும் என கல் பதித்த குட்டி மூக்குத்தியில் இருந்து கையில் அணியும் பிரேஸ்லெட் மற்றும் கைக்கடிகாரம் வரை அவளின் நேர்த்தியான கண்ணிய அலங்காரத்தை உணர்த்தும் விதமாக இருக்கும்.
தொட்டால் கன்றிப் போகும் நிறத்தை உடையவள் எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பாள். தன் அழகினை கண்ணாடி பார்த்து திரும்பி திரும்பி வேறு எதுவும் தவற விட்டு விட்டோமா என்று பார்த்துக் கொண்டிருக்க, சரியாக மணி ஏழை தொட்டதும் அலைபேசியில் பாடல் நின்று திலீப் எண்ணில் இருந்து அலாரம் அடித்ததும், கன்னியின் முகம் மலர்ந்து உடனே அழைப்பை ஏற்றாள்.
"ஹெலோ இதழிஇ.." திலீபனின் குரலே உருக வைக்க,
"ம்ம்.. சொல்லு டா" என்றாள் உற்சாகமாக.
"என்ன டி டியூட்டிக்கு ரெடியாகியாச்சா"
"ஓ.. ஆச்சி ஆச்சி. நீ என்ன டா ஆபிஸ் பிரேக்ல தம்மா" சிறு கோபத்தோடு கேட்டிட, அங்கு திலீப் கையில் பாதி புகைத்து மீதம் இருந்த சிகரெட் அவனை பார்த்து பல்லிளித்தது.
"பழக்கத்தை விட முடியல பேபி.." அசடு வழிந்தான்.
"நேர்ல வந்து ரெண்டு வச்சா தெரியும் முடியுமா முடியாதானு, ஏன்டா எத்தனை முறை சொன்னாலும் உன் புத்தில எட்டவே எட்டாதா" திலீப்போடு பேசியபடியே மேலும் தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டவள், மேலே குடில் ரெசார்ட் சென்று படுக்கையை எல்லாம் சரி செய்து வைத்து மலர்களால் அலங்கரித்து விட்டு மீண்டும் கீழே வந்தவளாக ஹாட் வாட்டர், ட்ரிங்ஸ், க்ளாஸ், நட்ஸ், ஃப்ரூட்ஸ் என வரும் கெஸ்ட்க்கு ஏற்றார் போல் எடுத்து சென்று சிறிய டீபாயில் அடுக்கி வைத்து விட்டு வந்தாள்.
"சரி சரி ஃபோனை வைக்கிறேன்டி எனக்கு பிரேக் ஓவர். நைட் வந்து உன்னோட மீதி அட்வைஸ பொழி, தூங்கிட்டே கேக்குறேன், இப்ப பை இதழி டேக் கேர்.." இச் இச்.. வைத்து அழைப்பை துண்டிக்க புன்னகையோடே அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்தினாள்.
சரியாக பத்து மணியளவில் ஏற்கனவே புக்கிங் செய்து வைத்த கெஸ்ட் வரும் நேரம் பார்த்து அர்ஜென்ட்டாக யமுனா பாத்ரூம் சென்றிருக்கவே, அங்கு வேலை பார்க்கும் மற்றொரு பணியாள் தான் வந்திருந்த கெஸ்ட்டை யோசனையாக வரவேற்று குடில் ரெசார்ட் அழைத்து சென்று அவருக்கு தேவையானவற்றை எடுத்து கொடுத்து கவனித்து விட்டு வந்தான்.
"பிரதர், இன்னைக்கு புக் செஞ்ச கெஸ்ட் லேடி பேர்ல இருக்கு, ஆனா வந்திருக்குறது ஒரு மேல் பெர்சன். பாக்க நல்லா செம்ம ஸ்மாட்டா இருக்காரே யார் இவரு?" மற்றொரு பணியாளிடம் ஆங்கிலத்தில் கேட்டான் கெஸ்டை கவனித்தவன்.
"ஓஹ்.. நீ இங்க புதுசுல்ல அதான் தெரியல. இங்க வர சிலர் தங்களோட ஒரிஜினல் நேம்ல புக் பண்ணிட்டு வர மாட்டாங்க.
அதுவும் இல்லாம பெரிய இடத்து ஆட்கள் சிலர், அவங்க பிரண்ட்ஸ் ஆர் பேமிலில உள்ளவங்க நேம்ஸ்ல புக் பண்ணுவாங்க, பட் வரற்து ஆணா பெண்ணா எத்தனை பேர் அப்படின்ற டீடெய்ல்ஸ இன்பார்ம் செஞ்சிடுவாங்க. சிஸ்டம்ல செக் பண்ணா தெரியும் இதழ் தானே இன்னைக்கு டே டியூட்டி அவ வந்து பாத்துப்பா நீ வேலையப் பாரு" என்று அவன் செல்லவும் இவனும் அத்தோடு விட்டுவிட்டான்.
மதிய உணவு வேளையின் போது கெஸ்ட் ஆர்டர் செய்த விதவிதமான உணவு வகைகளை ட்ரேவில் பார்வையாக அடுக்கிக் கொண்டு சென்ற யமுனாவின் தலை சுற்றிக் கொண்டு வந்ததும் பிடிமானமாக ட்ரேவை அழுத்திப் பிடித்து நின்றாள்.
"என்ன இது திடீர்னு தலை சுத்துது..?"
தள்ளாட்டமாக சுவரில் சாய்ந்தவள் தலையை உலுக்கிக் கொண்டவளாக நேரம் ஆவதை உணர்ந்து மெதுவாக தாக்கு பிடித்து குடில் ரெசார்ட் சென்றதும் தன்னை மீறி கண்ணை இருட்டிக் கொண்டு வந்ததில் உள்ளிருப்பது யார்? எத்தனை பேர் என்று எதையும் பார்த்து உணர முடியாத நிலையில் மயங்கி விழுந்த வரை தான் நினைவில் இருந்தது.
மீண்டும் மயக்கம் தெளிந்து கண் விழிக்கையில் உடலில் பெயருக்கும் ஆடையின்றி, அவள் அலங்கரித்து வைத்த அதே வெண்ணிற மெத்தையில் அலங்கோலமாக கிடந்ததும், உயிரை வதைக்கும் உடல் வலியும், பெண்ணுருப்பில் லேசாக கசிந்திருந்த உதிரமும் கண்டு அதிர்ச்சியில் உறைந்து செய்வதறியாது அழுது கதறி, உடையை தேடிப் பொறுக்கி அணிந்து வந்த வரை சொல்லி முடித்து ஓ.. வென குலுங்கி அழுதவளை எப்படி என்ன சொல்லி தேற்றுவது.
"ஐ கான்ட் பிலீவ் இட் இதழ். இப்படியும் கூட நடக்குமா? நினைக்கவே பயங்கரமா இருக்கு. ஆனா அது உனக்கே நடந்திருக்குனு தெரியும் போது உடம்பெல்லாம் நடுங்குது டி."
காலையில் புத்தம் புதிய செந்நிற மலராக பார்த்த தோழியை இப்போது கசங்கிய மலராக பார்த்து சரித்ராவின் மனமும் பதறிப் போனது.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 2
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.