- Messages
- 204
- Reaction score
- 203
- Points
- 63
அத்தியாயம்-2
ருத்ரனும் சித்ராவும்
சில நாட்களாக பேச்சி வார்த்தையில் இல்லை என்றாலும் மகனுக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து ஒரு தாயாக சரியாக செய்து கொண்டு தான் இருக்கிறார்.
ருத்ரனுக்கு சித்ரா அவனிடம் எதற்காக பேசாமல் இருக்கிறார் என்று அர்த்தம் புரிந்தாலும். பிடிக்காத ஒன்றை நீ செய்து தான் ஆகவேண்டும் என்று அவனை கட்டாய படுத்தினால் அவனும் என்ன செய்வான். என்ன நடந்தாலும் சரி என்று அவன் முடிவில் அவன் தெளிவாக இருக்கிறான். இருந்தும் அன்னையிடம் பேசாமல் அவனும் வருத்த பட்டு கொண்டு தானே இருக்கிறான்.
உணவு மேஜையில் அமர்ந்து தட்டை திருப்பி வைத்து கண்ணாடி தம்பளரில் தண்ணீரை ஊற்றி அதை பருகி கொண்டே. சித்ராவை ஓரக்கண்ணால் பார்த்தான்.
சித்ராவின் கண்கள் சிவந்து சிறிதாக முகம் வீங்கி இருந்ததிலேயே கண்டு கொண்டான். அவர் தண்ணை நினைத்து தான் கவலை கொண்டு அழுது இருக்கிறார் என்று.
அது அவனுக்கு வறுத்தத்தை அளித்தாலும்.அவன் கொள்கையில் இருந்து மாறப்போவதும் நிச்சயமாக இல்லை.
இதற்கெல்லாம் பெரிதாக கவலை பட்டு மற்றவர்கள் இழுப்புக்கு இசைந்து கொடுத்து போக ருத்ரன் ஒன்றும் சாதாரண மனிதன் இல்லையே. தொழில் வட்டார உலகில் உச்சத்தில் கொடிக் கட்டி பரப்பவன். ஒரு பெரிய சாம்ராட்ஜியத்தையே தனி ஒருவனாக நடத்தி வரும் கார்ப்ரேட் லிமிடெட். நிறுவனங்களின் CEO mr. ருத்ரதேவன்.
தொழிலில் ருத்ரனாக வளம் வருபவன். குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு தேவா வாக வளம் வருவான்.
என்ன தான் அவன் தன்னை சாதாரணமாக காட்டிக்கொண்டாலும் அவனின் சில இயல்புகள்.அதாவது மென்மை குணங்கள், சிரிப்பு, குரும்புதனங்கள் என்று, இந்த சிறு வயதிலேயே அவனின் அயராத உழைப்பின் காரணமாக அவனை விட்டு முக்கால் வாசி அவனுக்கு தெரியாமலே காணாமல் போய் இருந்தது.
ஆனால், அளவுகடந்த கோவம் மட்டும் புதிதாக ஒட்டி கொண்டது. அதுவும் அவனுக்கு தெரியாமலே என்பதை விட, அவன் கடந்து வந்த பாதை தான் முக்கிய காரணம்.
அவனுக்கு இயல்பிலே கோவம் அதிகமாக வராது என்றாலும் அவன் இருக்கும் பதவியில், சிரித்து கொண்டு அன்பாக வேலை வாங்கினால்.
இளிச்சவாயன், பைத்தியக்காரன், முட்டாள், வேலை வாங்க தெரியாத லூசு பய, இப்டி பைத்தியம் மாரி சிரிச்சிகிட்டே வேலை வாங்குறான் இவனுக்கு இந்த வேலையை பத்தி முழுசா தெரியுமா தெரியாதா. இப்படி பல இழிவான வார்த்தைகளை கேட்டு கடந்து வந்து தான் கோவம் எனும் மற்றொரு முகம் அவனுக்கு தெரியாமலே ஒட்டி கொண்டது.
அது அவனுக்கு தெரியுமோ என்னவோ. அவனை நெருங்கியவர்களுக்கு ருத்ரன் அவன் இயல்பில் இருந்து வெளி வந்து பல வருடங்கள் ஆனதை கண்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.
அது எதனால் என்றும் புரிந்து கொள்ளாத அளவுக்கு அவர்கள் ஒன்றும் முட்டாளும் இல்லையே. இதற்கு காரணம் அவனின் இந்த பதவி தான் என்று.
மற்றவர்களுக்கு வேண்டுமானால் அவன் பெரிய பதவியில் இருப்பதனால் எத்தனை திமிர், அஹங்காறம், பெரிய இவன், என்று இன்னும் பலவாறு, சாதாரணமாக நினைக்கலாம்.
ஆனால், அந்த பதவியில் இருக்கும் பொறுப்புகள் என்ன என்பது அவனுக்கு தானே தெரியும். அதில் உள்ள சிக்கல்களும், இன்னல்களும், சவால்களும் எத்தனை சோதனைகள் வன்தாலும் அதை புத்தியால் தகர்த்துதெரிந்து விட்டு தனி ஒருவனாக இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி காப்பது ஒருன்றும் அத்தனை எளிதான காரியம் இல்லையே.
தடை, அதை உடை.
புது சரித்திரம் படை.
நாளை நமதே.
வலி அதை ஒழி.
புது வழி பிறந்திடும்.
மாற்றம் உறுதி.
ருத்ரனும் மாறிவிட்டான்.
அதற்காக அவன் சில பல விஷயங்களில் இருந்து தன்னை தானே மெருகேற்றி கொள்ள. எத்தனை கடின பட்டு இருப்பான். அதை கண்கூடாக பார்த்த அவனின் நெருங்கிய தூய்மையான உறவுகளுக்கு தானே அவனின் கஷ்டங்கள் தெரியும்.
சித்ரா ஜனார்த்தனன் இருவரும் அவர்கள் வீட்டில் இருந்த எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்தவர்கள்.
அந்த சூழலில் ஜனார்த்தனன் மிகவும் கஷ்ட பட்டு சிறிதாக உருவாக்கிய கார்ப்ரேட் நிறுவனம். இன்று கொடி கட்டி பறக்க காரணம் ருத்ரன் தான். படிப்பை முடித்து தந்தைக்கு உதவியாக சில காலம் அவருடன் பணி புரிந்தவன். அவனின் அறிவு திரனால், பல பல யோசனைகளை முன்னிறுத்தி அதை நல்ல முறையில் செயல் படுத்தி காட்டி தொழிலில் நல்ல வெற்றியும் கண்டான்.
ருத்ரன், ஜனார்த்தனனை விடவெ சிறந்த முறையில் தொழிலை நடத்த. அவர் மனம் நிறைவாக பிள்ளையிடம்
இனிமேல் உன் பொறுப்பு என முழுதாக விட்டுவிட்டு. இப்போது அவர் வீட்டில் அமர்ந்து கடலை உருண்டையை முழுங்கி கொண்டு இருக்கிறார்.
இப்போது ருத்ரன் கையில் பொறுப்பை விட்டு எட்டு ஆண்டு காலம் ஆகிறது. மேலும் மேலும், முன்னேறி கொண்டு தான் செல்கிறானே தவிர எந்த விதத்திலும் குறைந்து போகவில்லை.
இதில் அவன் இயல்பு ஒன்று மட்டுமே அவனை விட்டு தூர சென்று இருந்தது.
தியா, ருத்ரனை மிரட்சியோடு பார்க்க.
ரியா, என்ன தான் அண்ணன் மேல் பாசம் இருந்தாலும், அவள் திமிரில் இருந்து வெளிவராமல். நெஞ்சை நிமிர்த்தி நேராக பார்த்தால்.
ஜனார்த்த்தனன், இப்ப என்ன ஏழரை நடக்க போகுதோ என்று கலக்கமாக நினைத்து கொண்டு பார்த்தார்.
சித்ரா, அவனை கண்டு கொள்ளாமல் அவன் எடுத்து வைத்த தட்டில் சாப்பாடு பரிமாறிக் கொண்டே. எல்லாம் என் நேரம் மூணு பிள்ளைகளை பெத்து ஒண்ணுத்துக்கும் புண்ணியம் இல்லாம போச்சி. ஒருத்தன் என்னடான்னா காரணமே சொல்லாம கல்யாணம் வேணாங்குறான்.
இவளுங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணாம நாங்களும் கல்யாணம் பண்ணமாட்டோம்னு பிடிவாதமா இருக்காளுங்க.
அப்டியே இவளுங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் பண்ணா கூட. கல்யாணத்துக்கு வரவங்க எல்லாம் என்ன கேப்பாங்க. இத்தனை வயசாச்சு இன்னும் ஏன் பையனுக்கு கல்யாணம் பண்ணலன்னு கேக்க மாட்டாங்களா.
எங்களுக்கு என்ன இன்னும், வயசு ஏராம குறைஞ்சிகிட்டேவா இருக்கு. பெத்தவங்களுக்கு வயசாவுதேன்னு கொஞ்சமாச்சம் அக்கறை இருக்கா.
எங்களுக்கும் கால காலத்துல பேர பிள்ளைகளை தூக்கி கொஞ்ச ஆசை இருக்காதா.
இப்டி மூணு பேரும் ஒவ்வொரு திசைல போறதுக்கா நாங்க உங்களை ஆசை ஆசையா பெத்து வலத்தோம். சித்ரா பாட்டுக்கு புலம்பி கண்ணை கசக்க.
சித்ரா அழுவது பொறுத்துக் கொள்ள முடியாமல். அம்மா. ஏன் இப்டி அழுது உங்க உடம்ப நீங்களே வீனாகிக்கறீங்க. நான் தான் சொல்லிட்டனே ம்மா. எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேனான்னு. அப்புறம் ஏன் உங்களையும் வருத்திக்கிட்டு என்னையும் வருத்த பட வைக்கறீங்க. பொறுமையாக பேச முயன்று கோவத்தில் தன்னையும் மீறி கண்ணாடி கிளாசை உடைத்திருந்தான் ருத்ரன்.
நடு இரவில் கொட்டும் மழையில் நனைந்து இருந்த சாரலை இழுத்து வந்த மாலினி. அவளை சோபாவில் அமர்த்தி, ஒரு துண்டை எடுத்து வந்து, சாரலின் தலை முடியை துவட்டி கொண்டே.
ஏன் டி அறிவு கெட்டவளே, இப்டியா போயி சொட்ட சொட்ட மழையில நனையுவ, அதுவும் இந்த ராத்திரி நேரத்துல. பாரு டி இவளோ நீட்டு முடி காய கொறஞ்சது ஒரு மணி நேரமாகும்,, ஆயாசமாக சொல்லி. முட்டிக்கால் அளவு இருக்கும்,, அவளின் நீண்டு வளந்து இருந்த, கருக்கரு முடியை தூக்கி காட்ட.
போ. மீ. சந்தடி சாக்குல,, நீயே என் முடிய கண்ணு வைக்கிற பாத்தியா.
வேண்டுமென்றே சாரல் சொல்ல.
ஹ்ம்ம். ஆமா டி. அப்டியே கண்ணு வைக்கறாங்க. எனக்கெல்லாம் உன் வயசுல, இதுக்கு மேல முடி நீட்டா இருந்துச்சி தெரியுமா என்று வெறும் உள்ளங்கை நீளம் உள்ள முடியை முன்னாள் தூக்கி போட்டு காட்ட.
அது எங்க முன்னாள போட்டா நின்னா தானே. முன்னாள் நிற்க நீளம் பாத்தாமல் திரும்பவும் பின்னால் போய் மறைந்து விட.
அதை பார்த்த சாரலுக்கு சிரிப்பு சிரிப்பாக வர. அடக்க முடியாமல் சிரித்தும் விட்டால் சாரல்.
அவள் சிரிப்பில், மாலினிக்கு சிரிப்பு வந்தாலும், அதை வெளி காட்டாமல் முறைத்து பார்க்க.
அவளின் சிரிப்பு சத்தத்தில், நன்றாக உறங்கி கொண்டு இருந்த,, துரைமூர்த்தி தூக்கம் கலைந்து, என்னமா இன்னைக்கு நல்ல மழையா சொல்லிக்கொண்டே, அவரது வீல் சேரை, இயக்கி கொண்டே அங்கு வந்தார். சாரல் தந்தை.
அவருக்கும் தெரிந்தது தான் சாரலின்,, மழை தோழியை பற்றி.
துரைமூர்த்தியை பார்த்ததும் தான். ஐயையோ, சத்தமா சிரிச்சி,, நல்லா தூங்கிட்டு இருந்த அப்பாவை எழுப்பி விட்டுட்டேனே, நாக்கை கடித்து புலம்ப.
ம்க்கும். பின்ன நடு ராத்திரில. இப்டி பேய் மாதிரி சிரிச்சா. நீ போட்ட சத்தத்துக்கு. எங்கெங்கோ தூங்கிட்டு இருக்க, பூதம் பேய் பிசாசுங்க கூட எந்திரிச்சி வந்துருக்கும். இதுல உங்க அப்பா வந்தது ஒன்னு பெருசில்லயே,, மாலினி அலுத்துக்கொள்ள.
அப்பா. பாருங்க ப்பா. அம்மாவை சும்மா சும்மா என்ன வம்பு பண்ணிட்டே இருக்காங்க,, மூர்த்தியிடம், மாலினியை பற்றி புகார் சொல்ல
என்ன மாலு, சின்ன பிள்ளைகிட்ட வம்பு பண்ணிட்டு இருக்க.
ஆமா, அப்டியே சின்ன பிள்ளை தான் உங்க பொண்ணு, 26 வயசாகுது, இன்னும் சின்ன பிள்ளையாம்.
இப்போது மாலினி பேச்சி எங்கு வந்து முடியும் என்று தெரிந்த மூர்த்து. பேச்சை மாற்ற
ஏய். மாலு, பிள்ளைக்கு முடியாம போய்ட போது. நல்லா, தலைய துவட்டி விடுமா. பாரு எப்டி முடில இருந்து தண்ணி சொட்டுது.
ஐயோ. ஆமா மாமா, பேசிட்டு இருந்ததுல, மறந்து போயிட்ட. என்று எதுவும் பேசாமல், கடமையே கண்ணாக,, சாரல் தலையை துவட்டி கொண்டு இருக்க.
மாலினிக்கு தெரியாமல், மூர்த்தியை பார்த்து, சிரித்து கொண்டே கன்னடித்து, சூப்பர் ப்பா. சாரல் சொல்ல
அவரும் தலையாட்டியவர். சாரலின் கள்ளம் கபடமற்ற சிரிப்பை பார்த்து, முழுதாக சந்தோஷ படவும் முடியாமல்,, நின்மதியாகவும் இருக்க முடியாமல்,, மனது கணத்து போனது. அவருக்கு.
இருந்தும் மகளிடம் எதுவும் கேட்டு அவளை சங்கட படுத்த வேன்டாம் என்று நினைத்தவர். சாருமா அப்பாக்கு ரொம்ப தூக்கம் வருது, நான் போய் தூங்குற என்றிட.
மூர்த்தியை பார்த்த சாரல்க்கு. அவள் தந்தை வீல் சேரில் அமர்ந்து இருப்பது, வருத்தத்தை அளித்தாலும், அதை அவரிடம் காட்டி கொல்லாமல். சிரித்த முகமாக. ம்ம். சரி ப்பா.போய் தூங்குங்க,
மீ. நீயும் போய் தூங்கு, எனக்கும் தூக்கம் வருது,, கண்களை கசக்கி,, கோட்டாவி விட்டுக்கொண்டே சொல்ல
வரும் டி வரும், எங்க தூக்கத்தை கெடுத்துட்டு, உனக்கு மட்டும் எப்டி சாரு, படுத்ததும் தூக்கம் வருது. இன்னும் தல காயல சாரு, என்று மீண்டும் அவள் தலை முடியை உள்ளர்த்தி கொண்டு இருக்க. என்னதான் அவளை திட்டி தீர்த்தாலும், கண்டித்தாலும்,, எங்கே ஈர தலையோடு படுத்தால், தலை வலி, காய்ச்சல், வந்து விடுமோ. தாய்க்கே உரிதான பாசம், மாலினியிடம் வெளி வர தான் செய்கிறது.
மீ. அதான், முக்கியமா காயவேண்டிய மண்டைகுள்ளயே காஞ்சி போச்சே.இது வெறும் முடி தான் மீ. அப்டியே படுத்தா, பேன் காத்துல தானா காஞ்சிடும்,, நீ போ . என்றிட.
நல்ல பொண்ணு டி நீ. நல்லா இருந்த தலைய கொற்ற மழையில என்று ஆரமிக்க.
ஐயோ. மீஈஈ. போதும், மறுபடியும் நீ கிளாஸ் எடுக்க ஆரமிச்சா,, எனக்கு வந்த தூக்கம் எல்லாம் ட்ரெயின் பிடிச்சி, ஊர் பேர் தெரியாத இடத்துக்கு போய்டும் சொல்லிட்ட.
என்று விட்டு,,, அவள் அறைக்குள் ஓடி கதவை அடைத்து இருந்தால். சாரல்.
மாலினி, அவள் போன திசையை வெறித்து பார்த்தவர் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கன்னம் தாண்டி, தரையில் பட்டு தெறிக்க.
கடவுளே என் பொண்ணு கூட என்னைக்கும் நீதான் துணையா இருக்கனும்,, கடவுளுக்கு மானசிகமாக ஒரு வேண்டுதலை போட்டு விட்டு,, சாரல் அறையை பார்த்த படியே,, அங்கிருந்த சோபாவில் படுத்து, மனதில் ஆயிரம் கவலைகளுடன் உறங்கி போனார். மாலினி.
தனதறைக்கு வந்த மூர்த்தி, படுத்து கொண்டு இருந்தவருக்கு, தூக்கம் எட்டா கன்னியாக போனது. அவருக்கும்,, மாலினி எதை நினைத்து கவலை கொள்கிறாளோ, அதே கவலைகள் தான். அப்படியே விட்டதை வெறிகொண்டே இருந்தவர். எப்போது உறங்கி போனார் என்பது அவருக்கே தெரியாது.
கதவை சாத்திய சாரல். கதவின் மேல் அப்படியே சாய்ந்து அமர்ந்தவலுக்கு தான் எத்தனை எத்தனை,, துயரங்கள். எதையும் வெளியே காட்டி கொல்லாமல்,, அவள் படும் மன துன்பங்களுக்கு. எந்த கடவுளாளும் பதில் கூற முடியாதே.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 2
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.