Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 20

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் 20

அனு, அம்மாஆ... என்று அழைத்தபடி ஓடி வந்து முல்லையின் கால்களை கட்டிக் கொள்ள...
அவள் அம்மா என்றழைத்ததும், முல்லைக்கு அரவிந்த் அடித்தது நிபாகம் வந்ததும் .. அனுவை தூக்க பரபரத்த கைகளை கடிவாளமிட்டு அடக்கிக் கொண்டவளாக, அரவிந்தை தயக்கமாக பார்த்தாள்.

இப்போது அவள் என்ன நினைக்கிறாள், என்று அரவிந்த் சரியாக யூகித்து கொண்டவன்... இருந்தும் இதற்கு முன் அவள் பாட்டி உன் முடிவு என்ன என்று அவளிடம் கேட்டதற்கு...
அவளின் நாட்டில் உள்ள தம்பிக்காகவும், அவளின் குழந்தைக்காகவும், அவளின் வாழ்க்கையை வாழப்போவதாகவும், தான் தன் நாட்டிற்கே திரும்ப செல்லப் போவதாகவும், முல்லை கூறியதை அவன் கேட்ட பிறகு...
அரவிந்துக்கு தன் தாய் தந்தையரின் இழப்போ இல்லை கீதா செய்த நம்பிக்கை துரோகங்கள் கூட அவனுக்கு இப்படி ஒரு வலியை கொடுக்கவில்லை... முல்லை இங்கிருந்து மொத்தமாக செல்கிறேன் என்ற வார்த்தை மொழி அவனுக்கு ஏனோ இதயம் கனத்து போனது,..

அதுவும் அவளை பற்றி தெரிந்து கொண்ட பிறகு அவளை தன்னுடனே காலம் முழுக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவனுள் துளிர்ந்து எழுந்த நேரம், முல்லை அப்படி சொல்லவும், சிறங்கொடிந்த பறவையை போல அவன் மனமும் உடைந்து போனது...

அவள் இருக்க மாட்டேன் என்ற பதிலை அவள் தெளிவாக உரைத்த பிறகு, அனு அவளை அம்மா என்றழைப்பது அவனுக்கு கோவத்தை கிளறவும் வேகமாக அனுவை அவளின் கால்களை விடுத்து பிரித்து தூக்கியவன்,

"இங்க பாரு ஸ்வீட்டி, இங்க புதுசா வந்த யாரும் நிரந்தரம் இல்லாதவங்க, உனக்கு என்னைக்கும் அப்பா மட்டும் தான், அதை நீ நல்லா புரிஞ்சிக்கோ... இனி நீ யாரையும் உரிமையா அம்மா ஆட்டு குட்டின்னு கூப்ட்டு கிட்ட நெருங்காத.. ஏன்னா அவங்க என்னைக்கும் நிஜமில்ல நிழல்".. முல்லையை பார்த்துக் கொண்டே குழந்தைக்கு புரியாத பாஷையில் மொழிய.. அது சரியாக முல்லைக்கு விளங்கியது.. அவன் கண் பேசும் பாஷையும், அவன் வாய் மொழி உணர்த்தும் பொருளும்...

"கண்ணா ஏம்ப்பா, குழந்தைகிட்ட போய் இப்டிலாம் பேசுற.. அதுக்கு என்ன புரியும் ஆசையா தானே அவ முல்லைகிட்ட போனா" பாட்டிக்கு வறுத்தமாய் போனது.

"குழந்தைகிட்ட நீங்க தான் முல்லைய அம்மான்னு கூப்பிட சொன்னீங்கன்னு எனக்கு தெரியும் பாட்டி.. அப்டி அனு இவள அம்மா அம்மான்னு ஆசையா கூப்ட்டு பழகிட்டு, முல்லையும் அனுவ கொஞ்சி அவளுக்கு பாசத்தை காட்டி ஏமாத்திட்டு, இவ நாளைக்கே அவ குழந்தைய தூக்கிட்டு பறந்து போய்டுவா, இதனால யாருக்கு பாட்டி பின்னாடி கஷ்டம்... என் குழந்தைக்கு தான்".. என்றவனின் கண்கள் சொன்னது எனக்கும் நீ இல்லாமல் கஷ்டம் என்று...

பாட்டிக்கும் அரவிந்த் சொல்வது சரி என்று புரிந்தாலும்.. அனு ஏக்கமாக முல்லையை பார்த்துக் கொண்டு இருப்பது, பிஞ்சி மனதின் ஏக்கத்தை கண்டு பரிதவித்து போனது... இதற்காகவே முல்லையிடம் எப்படியாவது பேசி அவளை இங்கே இருந்து விடுமாறு கேட்டு விடலாமா என பாட்டி நினைத்துக் கொண்டு இருக்க...

"சார், கொஞ்சம் அனுவ என்கிட்ட கொடுங்களேன்.." பாவமாக முல்லை கேட்க... அரவிந்த் இறுகி போய் நின்றிருக்க... அதற்குள் அனு முல்லையை நோக்கி தாவிக் கட்டி கொண்டால்...

முல்லையும் தன்னிடம் தாவிய குழந்தையை முகமெங்கும் முத்தமிட்டு கொஞ்சி.. "அனு குட்டி இனிமே நீங்க யாரு என்ன சொன்னாலும்,, என்ன நீங்க அம்மான்னு தான் கூப்பிடனும் சரியா".. என்றவளின் பார்வை அழுத்தமாக அரவிந்தை தாக்குதல் செய்ய... பிஞ்சி குழந்தையோ முல்லையின் சொல்லில் குதூகலமாக "ஓகே அம்மா" என்று அவளுக்கு முத்த மழை வாரி இறைத்தது...

அரவிந்த் தான் முல்லையின் இந்த சொல்லிலும் செயலிலும், நெஞ்சம் பூறிக்க, உள்ளம் குத்தாட்டம் போட, வெளியில் திகைத்து போய் சிலையாக நின்றான்...

பாட்டிக்கு இவர்களின் கண்கள் பேசும் பாஷைகள் ஒன்றும் புரியாமல், முல்லை சொன்னதற்கு அரவிந்த் என்ன செய்ய போறானோ என்று கவலையாக பார்க்க... அடுத்து சொன்ன முல்லையின் வார்த்தையில் பாட்டியின் மனம் மகிழ்ச்சியிள் துள்ளியது...

அரவிந்த் வைத்த கண் வாங்காமல், முல்லை சொன்ன பதிலில் உரிமையாக அவன் மனைவியை கண்டான்....

"பாட்டி, நான் இங்கிலாந்து போகணும் பாட்டி, என் புருஷன் பிள்ளைகளோட, அங்க போய் எல்லாருக்கும் இங்க நடந்ததை சொல்லி புரிய வச்சி.. அங்க இருக்க எங்களோட ஸ்கூல் காலேஜ்ஸ்க்கு எல்லாம் நம்பிக்கையான ஆளுங்களை பாத்துக்க சொல்லிட்டு.. என் தம்பியோட விருப்பத்தையும் கேட்டுகிட்டு நான் என் கணவர் இருக்க இடத்துல இருக்க விரும்புறேன்.. நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க" நேரடியாக அவளின் விருப்பதையும் சொல்லி, அவர்கள் விருப்பதையும் முல்லை கேட்டு விட...

இருவருக்கும் சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை என்று தான் கூற வேண்டும்...

அதுவும் அரவிந்த் தன்னை பற்றியும் தன் கடந்த காலத்தை பற்றியும் எதுவும் தெரியாமல், முல்லை எப்படி தன்னை கணவனாக ஏற்றுக் கொண்டால், என்ன இருந்தாலும் அவளுக்கு இது முதல் திருமணம், தனக்கு!.. அதுவும் தான் ஒரு கலங்கமானவன், என்ற எண்ணம் அவனின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல், தான் முல்லைக்கு துரோகம் செய்து விட்டதாக வேதனையில் தடுத்து நிறுத்தியது...

முல்லை நீ என்னமா சொல்ற... அப்ப நீ இந்த கல்யாணத்தை மனசார ஏத்துகிட்டியாமா.. பாட்டி நம்ப முடியாமல் மீண்டும் கேட்கவும்,

"அனு குட்டி, நீங்க கொஞ்ச நேரம் உள்ள போய் டாய்ஸ் வச்சி விளையாடுங்க,.. பாட்டி அப்பா கூட பேசி முடிச்சதும், அம்மா வந்து உன்கூட விளையாடுறேன் சரியா..." கொஞ்சல் மொழியாக குழந்தையிடம் சொல்ல... தனக்கு அம்மா கிடைத்து விட்ட ஆனந்தத்தில், முல்லை சொல்வதை சமத்தாகக் கேட்டு கொண்டு மழலை சிரிப்புடன் அங்கிருந்து தத்தி குதித்து ஓடியது..

இப்போது பாட்டியின் புறம் திரும்பிய முல்லை... "பாட்டி நான் பிறந்து வளந்தது எல்லாம் வெளிநாட்லயா இருக்கலாம்.. ஆனா என் அம்மாவும் அப்பாவும் எங்கள வளத்த விதம் எல்லாம் தமிழ்நாட்டு கலாச்சாரப்படி, தாலியோட முக்கியத்துவத்தையும், கணவன் மனைவியோட உறவுன்னா என்ன என்றதையும் சொல்லி கொடுத்து தான் வளத்தாங்க..

அன்னைக்கு இருந்த சூழ்நிலைல எங்க கல்யாணம் எப்டி நடந்ததுன்லாம் யோசிக்க நேரமில்லை.. யாருன்னே தெரியாத பொண்ணுக்காக அவ மானத்தை காப்பாத்த, கத்தி குத்தெல்லாம் பட்டு, இவரு உயிருக்கு போராடும் போது எனக்கு உண்மையாவே வலிச்சுது பாட்டி..

அப்பவே என் மனசுல ஓடிய முடிவு தான் இவரை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியலைனாலும், அவரோட இந்த நல்ல குணத்தை வச்சே இவரு மட்டும் தான் என் கணவன்னு என் மனசுல தீர்மானிச்சிட்டேன்.. ஆனா என் பிரச்சனைகள் எங்க தேவை இல்லாமல் உங்களை எல்லாம் பாதிக்க போகுதுன்னு பயந்து தான், அவரு கட்டிய இந்த தாலிய மட்டும் என் கழுத்துல சுமந்துகிட்டு.. விலகி போக முடிவு பண்ணேன்.

அதுமட்டுமில்ல, என் குடும்பத்தை இழந்த கையோட எனக்கு ஒரு புது வாழ்க்கையை அமைச்சிகிட்டு வாழ ஒரு மாதிரி இருந்துச்சி, இப்பவும் இருக்கு பாட்டி" என்றவளின் வேதனை நிரம்பிய கண்ணீர் கன்னம் தொட்டது.

"என்னதான் எங்களுக்கு விபரம் தெரியறதுக்கு முன்னாடியே எங்க அப்பா சாயா அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும்....
இப்ப அனு குட்டிய பாக்கும் போது, சின்ன வயசுல நானும் என் அக்காவும் அம்மா இல்லாத எப்டி ஏங்கி இருப்போம்னு.. என்னால அனுவோட ஏக்கப் பார்வையும் அவ அம்மான்னு என்ன கூப்பிட்ட வார்த்தைலயும், குழந்தை எந்த அளவுக்கு தாய் பாசத்துக்கு ஏங்கி தவிச்சி இருக்கான்னு என்னால உணர முடிஞ்சிது பாட்டி... அதனால தான் அவளுக்காக என்னோட இந்த முடிவ மாத்திகிட்டேன்".. முல்லை தன் மனதில் உள்ளதை சொல்லி முடிக்கவில்லை.... அதற்க்குள் மூச்சி முட்டும் அளவிற்குக்கு அரவிந்தின் இறுகிய அணைப்பில் இருந்தால் அவள்....
மழை...
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 20
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top