• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
அத்தியாயம் - 20

ஆஆஆ.. என்ற அலறல் சத்தம் அந்த மண்டபத்தையே திடுக்கிட வைக்க, அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி புரியாமல் பார்த்தனர்.

கிருஷ்ணா தாலியை வைத்துக்கொண்டு மலங்க விழிக்க, பார்த்தசாரதியின் மடியில் திருமண கோலத்தில் அமர்ந்திருந்த குழலி திடீரென ஏன் கத்தினாளோ! முகமெல்லாம் வியர்த்து அச்சத்தில் இதயம் படபடவென அடித்து வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

சரியாக கிருஷ்ணா தாலியை வாங்கி அவள் கழுத்தில் கட்டும் சமையம், யாரோ பின்னிருந்து அவனை துப்பாக்கியாய் தொடர்ந்து சுடுவதை போன்ற கொடிய பிரம்மை. அதில் சூடான ரத்தம் மொத்தமும் அவளின் முகத்தில் தெறித்து ரத்தபிஷேகம் செய்ததை உணரும் முன்பே, வலிய கரம் அவளின் கழுத்தில் தழுவி தாலியை அணிந்து உரிமை நாட்டிய பகல் கனவை நினைத்து மிரண்டு போனாள் அவள்.

தாலி கட்டும் சமையத்தில் பயந்து அலறி மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த பேதையை ஆளாளுக்கு பதட்டமாக உளுக்கி எடுத்து கேள்வி மேல் கேள்வி எழுப்ப, அதற்கும் முழித்துப் பார்த்தவளை வெங்கட் வந்து தலைவருடி வியர்வையை ஒத்தி துடைத்து விட்டான் மென்மையாக.

"தேனு.. எதுவும் கெட்ட கனவு கண்டியா?"

"அ.ஆமாண்ணா. இவாள யாரோ சுட்டுட்டா" கரம் நடுக்கத்தோடு கிருஷ்ணாவை காட்ட

"என்ன என்னை சுட்டுட்டாளா" தாலியை கையில் இறுக்கிக் கொண்டு அதிர்ச்சியில் விழித்தான் அவன்.

"ஐயோ பெருமாளே எந்த நாழில என்ன பேச்சி பேசுறா பாருங்கோ. ஏன் டி நோக்கு கனவுகாண வேற எதுவுமே இல்லையா, மங்கள சூத்ரம் கட்ற சமயம் பகல்கனவு கண்டு அபசகுனமா பினாத்திட்டு இருக்கே" பரிமளம் அவள் முதுகில் லேசாக அடித்து புலம்ப தொடங்கிட,

"அம்மா விடுங்கோ திடீர்னு எதையோ நினைச்சி பயந்துட்டா வேற ஒன்னும் இல்ல. இதை பெருசு படுத்தாம இப்டி வாங்கோ, கிருஷ்ணா நீ தாலி கட்டு" வெங்கட் சொன்னதும் சரி என்றவன் மேலே பார்த்து சுவாமியை கும்பிட்டு, மீண்டும் குழலியின் கழுத்தில் தாலியைக்கட்டப் போக, இப்போது நிஜமாகவே கிருஷ்ணாவின் முதுகிலும் கரத்திலும் துளையிட்டது துப்பாக்கி குண்டு.

அருங்கமே குருதியை கண்டு அதிர்ந்து அலற, கிருஷ்ணா வலியில் துடித்து மொத்தமும் குருதி படிந்த திருமங்கலத்தை தரையில் தவறவிட்டு தானும் சரிந்தவனை பதறியடித்து வெங்கட் தாங்கிப் பிடித்த நேரம், சித்தபிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்த குழலியின் கழுத்தில் நிரந்தரமாக தாலி ஏறி இருந்தது இப்போது.

கண் மூடிக் கண் திறப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருக்க, அனைவரும் உறைந்த நிலையில் இருந்து வெளிவரவே நீண்ட நேரம் பிடித்தது.

அதற்குள்ளாக பெண்ணையும் காணல, குருதியோடு மயங்கிய மாப்பிள்ளையும் காணல. போலீஸ்காரன் கண்ணுல மண்ணை தூவிட்டு முகமூடி கொல்லையர்கள் போல் வந்த கூட்டம் புகையைப் போட்டு அதிரடியாக கிளம்பிவிட்டுருந்தனர்.

அரைமணி நேரம் முன்னர் வரை கலைகட்டி இருந்த கல்யாண மண்டபம் இப்போது, இழவு நடந்த இடம் போல் அழுகைக் குரலும் தலையில் அடுத்துக் கொள்ளும் அலறல் ஓலமுமாய் கண்ணீரில் மூழ்கி இருந்தது.

எப்போதும் தைரியமாக விவேகத்துடன் செயல்படும் வெங்கட், தன் தங்கை என்று வந்ததும் மூளையின் இயக்கங்கள் நின்று விட்டவன் போல் உடைந்து போய் தூனில் சாய்ந்து அமர்ந்தவனுக்கு எதையும் யோசிக்க தோன்றவில்லை.

தங்கை எங்கே? கிருஷ்ணாவை சுட்டது யார்? என்று மட்டுமே அவன் மூளையை குடைந்துக்கொண்டிருக்க,நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் தாய் தந்தைக்கு கூட ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் உடலும் மனமும் எதற்கும் பிடிக்கொடுக்காமல் தளர்ந்து போய் இருந்தது.

இங்கோ பறந்து விரிந்த மெத்தையின் நடுவே தலையில் சூடிய வாசப்பூக்கள் வாடி கசக்கப்பட்டு, திருமண அலங்காரம் அரைகுறையாக கலைக்கப்பட்டு, தன்னிலை மறந்து ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் தேன்குழலி.

நேரம் செல்ல செல்ல மயக்கம் தெளிந்து நெற்றி சுருக்கி இமைகளை திறக்க மிகவும் சிரமப்பட்டு மெல்ல திறந்தவள், தான் இருக்குமிடம் புரியாமல் கண்ணை உருட்டியவளின் வயிற்றில் ஏதோ கனத்தபாரம் உள்ளதை போன்ற உணர்வில் தலை தூக்கிப் பார்த்தவளின் உலகம் இருண்டு போனது.

கழுத்து வரை அடர்ந்த கேசம் உற்று பார்க்குமிடத்தில் வெள்ளிக்கம்பிகள் மறைந்து காணப்பட, சட்டையற்ற கட்டுடல் மேனி விறைத்து திரண்ட புஜங்கள் புடைத்த நிலையில் பெண்ணவளின் சேலை நீக்கிய பொன்வயிற்றில் முகத்தைப் புதைத்து குப்புற படுத்துக்கிடந்தான் அவன்.

அவன் யாரென்று தெரியாமல், அதீத பயத்தில் நெஞ்சமெல்லாம் தூக்கிவாரிப் போட, தேகத்தை சுற்றிய சேலை கலைந்து இருப்பதை கண்டதும் எதைப்பற்றியும் யோசிக்காமல் பட்டென அவன் தலை பிடித்து தள்ளி விட்ட குழலி காலை சுருட்டிக்கொண்டு பின்னால் நகரும் வேளையில், ஏய்.. என்ற கர்ஜிக்கும் உருமலோடு இரும்புமேனி அதிர எழுந்து நின்றவனை கண்டு, ஆஆ.. என்ற அலறலோடு முகத்தை மூடி அரண்டு போனாள்

இன்னும் சரியாக அவன் முகம் கூட பார்க்கவில்லை அவள். அதற்குள் அவனது ஆஜானுபாகுவான பயங்கர தோற்றமே அவளை மிரள வைக்க நடுங்கிக் கொண்டு கண்களை மூடியவள் தான் நேரம் கடந்தும் கண்திறக்காமல் இருப்பது அவனுக்கு எப்படி இருந்ததோ!

மெல்ல அவளருகில் நெருங்கி சிகப்பும் பச்சையும் கற்கள் பதித்த முத்துமணி ஜிமிக்கி ஆடும் அந்த சிவந்த செவிமடலில் சுடும் மூச்சுரச, "குயிலுஊ" முரட்டுக்குரல் கரடுமுரடாக ஒலித்ததில் தேகம் திடுக்கிட்டு மீண்டும் கண்திறக்காமல் அலறியவளை கண்டு பெருமூச்சு விட்டான் அவன்.

"ஷாப்பா.. என்ன இந்த குயிலு சும்மா கூப்ட்டதுக்கே இந்த கத்து கத்துது"

கண்கள் இடுங்கி அவளின் முகத்தை மூடி இருந்த கண்ணாடி வளையல் குலுங்கும் கரத்தை பிரித்தெடுக்க தொட்டதும் மின்சாரம் தாக்கியதை போல் திமிறி குதித்து ஆர்ப்பாட்டம் செய்தவளை ஒரே அணைப்பில் படுக்கையில் சாய்த்து தானும் அவள் மீது உடல் பாரத்தை போட்டிருக்க, பேரதிர்ச்சியில் தானாக விழிகளை திறந்தவளுக்கு, மிக அருகில் உதடும் உதடும் உரசும் தூரம் இருந்த அவனது முரட்டுமுகம் பார்த்து மேலும் அதிர்ந்து போனாள்.

"ஐயோ கொலைகாரா" அன்று கோவிலில் வைத்து அவன் செய்த கொலையை நினைத்து அவளையும் அறியாது பதறிக்கொண்டு கத்தியதில் சிவப்பேரிய கண்கள் இரண்டும் அவளை உறுத்து விழுங்கின.

"என்ன சொன்ன திருகி செப்பு" தேனூரும் இதழில் கிறக்கமாக மையல் கொண்ட பார்வையை சகிக்க முடியாது மெல்லிய தேகம் நடுங்க, "என்னை ஏன் இங்க தூக்கிட்டு வந்தேள். நேக்கும் கிருஷ்ணாக்கும் இன்னைக்கு கல்யாணம். ஆத்துல பெரியவா எல்லாம் தேடுவா ப்ளீஸ் என்னை விட்டுடுங்கோ அண்ணா"

அவளின் கடைசி வார்த்தையில் சிறுமூளை பெருமூளை அனைத்தும் சுர்ரென சூடேரி, "ஏய்.. என்ன சொன்னஆஆ" வேகமாக அவள் மீதிருந்து எழுந்ததும், தானும் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து மலங்க மலங்க முழித்தவளின் தோள்ப்பட்டையை இறுக்கமாக பிடித்து உளுக்கி சுவரோடு சாய்த்து நிறுத்தியவன், பாவையின் சங்கு கழுத்தை கடுமையாக மேய்ந்த கண்கள், சட்டென அங்கு முகம் புதைத்து தேய்க்கவும், கால் பாதம் இரண்டும் தரையில் அழுத்தமாக ஊன்றிய நிலையில் உறைந்து போனாள் பேதை.

"இப்ப சொல்லு குயிலு. என்னை என்னனு கூப்பிட்ட" பெண் வாசத்தை நன்கு சுவாசித்து ஆழ மூச்செடுக்க, ஆணவனின் தகிக்கும் அனல் மூச்சி பெண்ணவளின் இரட்டைக்கிளிகளின் பிளவை தாண்டி உள்ளே சென்று நெஞ்சை அடைந்தது.

"எ.என்னை எதுவும் செய்யாதேள். நேக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆகப்போறது" திணறலாக உரைத்தவளின் நியாபகத்தில் இன்னும் அவன் குண்டடிபட்டு சாய்ந்தது நினைவு கோரவில்லை போலும்.

"ம்ஹும்.. அவனுக்கும் உனக்கும் கல்யாணம்னா அப்போ உன் கழுத்துல இதோ இந்த மார்பை தொட்டு உரசி உறவாடுற நான் கட்டின தாலிக்குப் பேரு என்ன குயிலு" தடித்தப் புருவம் ஏற்றி இறங்கி நக்கலாக அவன் கேட்டதும் அவசரமாக குனிந்து தன் கழுத்தைப் பார்த்தவளுக்கு இன்னுமின்னும் அதிர்ச்சி.

எப்படி சாத்தியம் இது. "இல்ல இல்ல இது உண்மை இல்ல. நீ.நீங்கோ பொய் சொல்றேள். என்கிட்ட இதுமாதிரி கேவலமா பிஹேவ் பண்றது என் அண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சிது உங்கள அவா சும்மா விடமாட்டா" நிற்காமல் கொட்டிய கண்ணீரோடு உதடு நடுங்க கீச்சிட்ட பெண்ணை சுவாரிசியமாக பார்த்தான்.

"சொல்லு டி, என்னை என்ன பண்ணிடுவான் உன் நொண்ணயன் ஹ்ம்.." கூழாங்கள் போல் வழவழத்த இடையில் தடுத்த விரலால் கோலமிட தேகம் கூசி அருவருத்தவளாய் அவனிடமிருந்து நகர முற்பட்டவளை நகரவிடாது பச்சக்கென இடைகசக்கி தன்னுள் இறுக்கி இன்னும் அதிகமாய் சோதித்து பாவையின் கண்ணீரையும் அச்சத்தையும் அதிகப்படுத்தினான் ருத்ரங்கன்.

"த்.துப்பாக்கி எடுத்து உன் நெஞ்சில சுடுவா"

"வேற"

"என்னை கண்ட இடத்துல தொடர உன் கைல சுடுவா"

"வாறே வாவ்.. கை மட்டும் உன்ன தொடலையே குயிலு. இங்க பாரு என் கால்விரல்கள் உன் கால்விரலை உரசி தொடறதுல இருந்து என் முட்டிக்கால், தொடை அப்டியே படிப்படியா மேல ஏறினா, உடம்புல உள்ள ஒவ்வொரு பாகமும் சிக்கிமுக்கி கல்லை போல உரசிக்கிட்டு, ஸ்ஸ்ஸ்.. கண்ட இடத்துல சூடேரி வெடிச்சிடும் போல. என்னை சுட துப்பாக்கி குண்டு தேவை இல்ல டி குயிலு. இதோ இது போதும்"

அவனது திரண்ட நெஞ்சை முட்டிய பாவையின் நெஞ்சாங்கனியில் கிறக்கமாக பார்வை பதிந்த இரட்டை அர்த்தப் பேச்சில், இதயம் அதர அவனிடமிருந்து கத்திக் கூச்சலிட்டு திமிறிக் கொண்டிருந்தவளை, மெத்தையில் தூக்கி வீசி அவள் மீது பாய்ந்திருந்தான் ருத்ரன்.

தொடரும்.
 
Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 20
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
46
Reaction score
36
Points
18
Aahaa ena ji...ipdi pannitinga...Krishna pavam ji... Avana poi gun shot pannitele... Mmm analum ruthran romba fast tha epo suttan epo thaali katnan epo thukunane therialaye... Next ud sekirama kudunga pls....
 
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
Aahaa ena ji...ipdi pannitinga...Krishna pavam ji... Avana poi gun shot pannitele... Mmm analum ruthran romba fast tha epo suttan epo thaali katnan epo thukunane therialaye... Next ud sekirama kudunga pls....
Innaiku varum dr
 
New member
Messages
7
Reaction score
6
Points
3
அத்தியாயம் - 20

ஆஆஆ.. என்ற அலறல் சத்தம் அந்த மண்டபத்தையே திடுக்கிட வைக்க, அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி புரியாமல் பார்த்தனர்.

கிருஷ்ணா தாலியை வைத்துக்கொண்டு மலங்க விழிக்க, பார்த்தசாரதியின் மடியில் திருமண கோலத்தில் அமர்ந்திருந்த குழலி திடீரென ஏன் கத்தினாளோ! முகமெல்லாம் வியர்த்து அச்சத்தில் இதயம் படபடவென அடித்து வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.

சரியாக கிருஷ்ணா தாலியை வாங்கி அவள் கழுத்தில் கட்டும் சமையம், யாரோ பின்னிருந்து அவனை துப்பாக்கியாய் தொடர்ந்து சுடுவதை போன்ற கொடிய பிரம்மை. அதில் சூடான ரத்தம் மொத்தமும் அவளின் முகத்தில் தெறித்து ரத்தபிஷேகம் செய்ததை உணரும் முன்பே, வலிய கரம் அவளின் கழுத்தில் தழுவி தாலியை அணிந்து உரிமை நாட்டிய பகல் கனவை நினைத்து மிரண்டு போனாள் அவள்.

தாலி கட்டும் சமையத்தில் பயந்து அலறி மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த பேதையை ஆளாளுக்கு பதட்டமாக உளுக்கி எடுத்து கேள்வி மேல் கேள்வி எழுப்ப, அதற்கும் முழித்துப் பார்த்தவளை வெங்கட் வந்து தலைவருடி வியர்வையை ஒத்தி துடைத்து விட்டான் மென்மையாக.

"தேனு.. எதுவும் கெட்ட கனவு கண்டியா?"

"அ.ஆமாண்ணா. இவாள யாரோ சுட்டுட்டா" கரம் நடுக்கத்தோடு கிருஷ்ணாவை காட்ட

"என்ன என்னை சுட்டுட்டாளா" தாலியை கையில் இறுக்கிக் கொண்டு அதிர்ச்சியில் விழித்தான் அவன்.

"ஐயோ பெருமாளே எந்த நாழில என்ன பேச்சி பேசுறா பாருங்கோ. ஏன் டி நோக்கு கனவுகாண வேற எதுவுமே இல்லையா, மங்கள சூத்ரம் கட்ற சமயம் பகல்கனவு கண்டு அபசகுனமா பினாத்திட்டு இருக்கே" பரிமளம் அவள் முதுகில் லேசாக அடித்து புலம்ப தொடங்கிட,

"அம்மா விடுங்கோ திடீர்னு எதையோ நினைச்சி பயந்துட்டா வேற ஒன்னும் இல்ல. இதை பெருசு படுத்தாம இப்டி வாங்கோ, கிருஷ்ணா நீ தாலி கட்டு" வெங்கட் சொன்னதும் சரி என்றவன் மேலே பார்த்து சுவாமியை கும்பிட்டு, மீண்டும் குழலியின் கழுத்தில் தாலியைக்கட்டப் போக, இப்போது நிஜமாகவே கிருஷ்ணாவின் முதுகிலும் கரத்திலும் துளையிட்டது துப்பாக்கி குண்டு.

அருங்கமே குருதியை கண்டு அதிர்ந்து அலற, கிருஷ்ணா வலியில் துடித்து மொத்தமும் குருதி படிந்த திருமங்கலத்தை தரையில் தவறவிட்டு தானும் சரிந்தவனை பதறியடித்து வெங்கட் தாங்கிப் பிடித்த நேரம், சித்தபிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்த குழலியின் கழுத்தில் நிரந்தரமாக தாலி ஏறி இருந்தது இப்போது.

கண் மூடிக் கண் திறப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருக்க, அனைவரும் உறைந்த நிலையில் இருந்து வெளிவரவே நீண்ட நேரம் பிடித்தது.

அதற்குள்ளாக பெண்ணையும் காணல, குருதியோடு மயங்கிய மாப்பிள்ளையும் காணல. போலீஸ்காரன் கண்ணுல மண்ணை தூவிட்டு முகமூடி கொல்லையர்கள் போல் வந்த கூட்டம் புகையைப் போட்டு அதிரடியாக கிளம்பிவிட்டுருந்தனர்.

அரைமணி நேரம் முன்னர் வரை கலைகட்டி இருந்த கல்யாண மண்டபம் இப்போது, இழவு நடந்த இடம் போல் அழுகைக் குரலும் தலையில் அடுத்துக் கொள்ளும் அலறல் ஓலமுமாய் கண்ணீரில் மூழ்கி இருந்தது.

எப்போதும் தைரியமாக விவேகத்துடன் செயல்படும் வெங்கட், தன் தங்கை என்று வந்ததும் மூளையின் இயக்கங்கள் நின்று விட்டவன் போல் உடைந்து போய் தூனில் சாய்ந்து அமர்ந்தவனுக்கு எதையும் யோசிக்க தோன்றவில்லை.

தங்கை எங்கே? கிருஷ்ணாவை சுட்டது யார்? என்று மட்டுமே அவன் மூளையை குடைந்துக்கொண்டிருக்க,நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் தாய் தந்தைக்கு கூட ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் உடலும் மனமும் எதற்கும் பிடிக்கொடுக்காமல் தளர்ந்து போய் இருந்தது.

இங்கோ பறந்து விரிந்த மெத்தையின் நடுவே தலையில் சூடிய வாசப்பூக்கள் வாடி கசக்கப்பட்டு, திருமண அலங்காரம் அரைகுறையாக கலைக்கப்பட்டு, தன்னிலை மறந்து ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் தேன்குழலி.

நேரம் செல்ல செல்ல மயக்கம் தெளிந்து நெற்றி சுருக்கி இமைகளை திறக்க மிகவும் சிரமப்பட்டு மெல்ல திறந்தவள், தான் இருக்குமிடம் புரியாமல் கண்ணை உருட்டியவளின் வயிற்றில் ஏதோ கனத்தபாரம் உள்ளதை போன்ற உணர்வில் தலை தூக்கிப் பார்த்தவளின் உலகம் இருண்டு போனது.

கழுத்து வரை அடர்ந்த கேசம் உற்று பார்க்குமிடத்தில் வெள்ளிக்கம்பிகள் மறைந்து காணப்பட, சட்டையற்ற கட்டுடல் மேனி விறைத்து திரண்ட புஜங்கள் புடைத்த நிலையில் பெண்ணவளின் சேலை நீக்கிய பொன்வயிற்றில் முகத்தைப் புதைத்து குப்புற படுத்துக்கிடந்தான் அவன்.

அவன் யாரென்று தெரியாமல், அதீத பயத்தில் நெஞ்சமெல்லாம் தூக்கிவாரிப் போட, தேகத்தை சுற்றிய சேலை கலைந்து இருப்பதை கண்டதும் எதைப்பற்றியும் யோசிக்காமல் பட்டென அவன் தலை பிடித்து தள்ளி விட்ட குழலி காலை சுருட்டிக்கொண்டு பின்னால் நகரும் வேளையில், ஏய்.. என்ற கர்ஜிக்கும் உருமலோடு இரும்புமேனி அதிர எழுந்து நின்றவனை கண்டு, ஆஆ.. என்ற அலறலோடு முகத்தை மூடி அரண்டு போனாள்

இன்னும் சரியாக அவன் முகம் கூட பார்க்கவில்லை அவள். அதற்குள் அவனது ஆஜானுபாகுவான பயங்கர தோற்றமே அவளை மிரள வைக்க நடுங்கிக் கொண்டு கண்களை மூடியவள் தான் நேரம் கடந்தும் கண்திறக்காமல் இருப்பது அவனுக்கு எப்படி இருந்ததோ!

மெல்ல அவளருகில் நெருங்கி சிகப்பும் பச்சையும் கற்கள் பதித்த முத்துமணி ஜிமிக்கி ஆடும் அந்த சிவந்த செவிமடலில் சுடும் மூச்சுரச, "குயிலுஊ" முரட்டுக்குரல் கரடுமுரடாக ஒலித்ததில் தேகம் திடுக்கிட்டு மீண்டும் கண்திறக்காமல் அலறியவளை கண்டு பெருமூச்சு விட்டான் அவன்.

"ஷாப்பா.. என்ன இந்த குயிலு சும்மா கூப்ட்டதுக்கே இந்த கத்து கத்துது"

கண்கள் இடுங்கி அவளின் முகத்தை மூடி இருந்த கண்ணாடி வளையல் குலுங்கும் கரத்தை பிரித்தெடுக்க தொட்டதும் மின்சாரம் தாக்கியதை போல் திமிறி குதித்து ஆர்ப்பாட்டம் செய்தவளை ஒரே அணைப்பில் படுக்கையில் சாய்த்து தானும் அவள் மீது உடல் பாரத்தை போட்டிருக்க, பேரதிர்ச்சியில் தானாக விழிகளை திறந்தவளுக்கு, மிக அருகில் உதடும் உதடும் உரசும் தூரம் இருந்த அவனது முரட்டுமுகம் பார்த்து மேலும் அதிர்ந்து போனாள்.

"ஐயோ கொலைகாரா" அன்று கோவிலில் வைத்து அவன் செய்த கொலையை நினைத்து அவளையும் அறியாது பதறிக்கொண்டு கத்தியதில் சிவப்பேரிய கண்கள் இரண்டும் அவளை உறுத்து விழுங்கின.

"என்ன சொன்ன திருகி செப்பு" தேனூரும் இதழில் கிறக்கமாக மையல் கொண்ட பார்வையை சகிக்க முடியாது மெல்லிய தேகம் நடுங்க, "என்னை ஏன் இங்க தூக்கிட்டு வந்தேள். நேக்கும் கிருஷ்ணாக்கும் இன்னைக்கு கல்யாணம். ஆத்துல பெரியவா எல்லாம் தேடுவா ப்ளீஸ் என்னை விட்டுடுங்கோ அண்ணா"

அவளின் கடைசி வார்த்தையில் சிறுமூளை பெருமூளை அனைத்தும் சுர்ரென சூடேரி, "ஏய்.. என்ன சொன்னஆஆ" வேகமாக அவள் மீதிருந்து எழுந்ததும், தானும் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்து மலங்க மலங்க முழித்தவளின் தோள்ப்பட்டையை இறுக்கமாக பிடித்து உளுக்கி சுவரோடு சாய்த்து நிறுத்தியவன், பாவையின் சங்கு கழுத்தை கடுமையாக மேய்ந்த கண்கள், சட்டென அங்கு முகம் புதைத்து தேய்க்கவும், கால் பாதம் இரண்டும் தரையில் அழுத்தமாக ஊன்றிய நிலையில் உறைந்து போனாள் பேதை.

"இப்ப சொல்லு குயிலு. என்னை என்னனு கூப்பிட்ட" பெண் வாசத்தை நன்கு சுவாசித்து ஆழ மூச்செடுக்க, ஆணவனின் தகிக்கும் அனல் மூச்சி பெண்ணவளின் இரட்டைக்கிளிகளின் பிளவை தாண்டி உள்ளே சென்று நெஞ்சை அடைந்தது.

"எ.என்னை எதுவும் செய்யாதேள். நேக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆகப்போறது" திணறலாக உரைத்தவளின் நியாபகத்தில் இன்னும் அவன் குண்டடிபட்டு சாய்ந்தது நினைவு கோரவில்லை போலும்.

"ம்ஹும்.. அவனுக்கும் உனக்கும் கல்யாணம்னா அப்போ உன் கழுத்துல இதோ இந்த மார்பை தொட்டு உரசி உறவாடுற நான் கட்டின தாலிக்குப் பேரு என்ன குயிலு" தடித்தப் புருவம் ஏற்றி இறங்கி நக்கலாக அவன் கேட்டதும் அவசரமாக குனிந்து தன் கழுத்தைப் பார்த்தவளுக்கு இன்னுமின்னும் அதிர்ச்சி.

எப்படி சாத்தியம் இது. "இல்ல இல்ல இது உண்மை இல்ல. நீ.நீங்கோ பொய் சொல்றேள். என்கிட்ட இதுமாதிரி கேவலமா பிஹேவ் பண்றது என் அண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சிது உங்கள அவா சும்மா விடமாட்டா" நிற்காமல் கொட்டிய கண்ணீரோடு உதடு நடுங்க கீச்சிட்ட பெண்ணை சுவாரிசியமாக பார்த்தான்.

"சொல்லு டி, என்னை என்ன பண்ணிடுவான் உன் நொண்ணயன் ஹ்ம்.." கூழாங்கள் போல் வழவழத்த இடையில் தடுத்த விரலால் கோலமிட தேகம் கூசி அருவருத்தவளாய் அவனிடமிருந்து நகர முற்பட்டவளை நகரவிடாது பச்சக்கென இடைகசக்கி தன்னுள் இறுக்கி இன்னும் அதிகமாய் சோதித்து பாவையின் கண்ணீரையும் அச்சத்தையும் அதிகப்படுத்தினான் ருத்ரங்கன்.

"த்.துப்பாக்கி எடுத்து உன் நெஞ்சில சுடுவா"

"வேற"

"என்னை கண்ட இடத்துல தொடர உன் கைல சுடுவா"

"வாறே வாவ்.. கை மட்டும் உன்ன தொடலையே குயிலு. இங்க பாரு என் கால்விரல்கள் உன் கால்விரலை உரசி தொடறதுல இருந்து என் முட்டிக்கால், தொடை அப்டியே படிப்படியா மேல ஏறினா, உடம்புல உள்ள ஒவ்வொரு பாகமும் சிக்கிமுக்கி கல்லை போல உரசிக்கிட்டு, ஸ்ஸ்ஸ்.. கண்ட இடத்துல சூடேரி வெடிச்சிடும் போல. என்னை சுட துப்பாக்கி குண்டு தேவை இல்ல டி குயிலு. இதோ இது போதும்"

அவனது திரண்ட நெஞ்சை முட்டிய பாவையின் நெஞ்சாங்கனியில் கிறக்கமாக பார்வை பதிந்த இரட்டை அர்த்தப் பேச்சில், இதயம் அதர அவனிடமிருந்து கத்திக் கூச்சலிட்டு திமிறிக் கொண்டிருந்தவளை, மெத்தையில் தூக்கி வீசி அவள் மீது பாய்ந்திருந்தான் ருத்ரன்.

தொடரும்.
Nalla nadathura da kalyanatha...yenda ipdi un moonjiya kita kaamichu baya paduthara andha pullaya...
 
Top