• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
அத்தியாயம் - 21

என்ன நடந்தது? எப்படி தன் கழுத்தில் தாலி ஏறியது? கிருஷ்ணா உயிர் போகும் அளவிற்கு அலறிய சத்தம் மட்டும் கேட்டதே பிறகு அவனுக்கு என்னானது? எப்படி மயங்கினேன்? மயங்கும் முன்னர் கண்ணை மறைக்கும் அளவிற்கு புகைமூட்டம் உண்டானதே! எல்லாம் இவன் வேலைதானா? வீட்டில் அம்மா அப்பா அண்ணன் யாவருக்கும் தான் அங்கு இல்லாத விடயமும் திருமணம் நின்ற விடயமும் அறிந்து எப்படி வருந்தினார்களோ? தன்னை அண்ணன் தேடுவானே இந்த கொலைகாரன் தான் தன்னை கடத்தியது என்பது அவனுக்கு தெரியுமா?

ஒரு பெண்ணின் அனுமதியின்றி எப்படி இவனால் தன்னிடம் அத்துமீறி நடந்துக்கொள்ள முடிந்தது?

பல கேள்விகள் நெஞ்சை அடைக்க பெண்மனம் குமுறியவளின் நினைவில் சற்று நேரம் முன் நடந்த நிகழ்வுகள் கண்முன் தோன்றி அருவருக்க வைத்தது.

குழலி திமிறத் திமிற அவளை படுக்கையில் தூக்கி போட்டவன், அவள் என்னதென உணரும்முன் அதிர்ந்த மென்னுடல் மேலும் அதிர பாவையின் மேல்படர்ந்த முரடன், அவளின் துடிப்பை எல்லாம் அடக்கும் விதமாக எப்போதும் போதை ஏற்றும் அந்த தேனூரும் செவ்விதழை கவ்வி நா பின்னி விளையாடி, வழவழத்த இடையில் இரும்புகரம் அழுத்தமாக பதுங்கிக் கொண்டதில், பெண்தேகம் மொத்தமாக தூக்கிவாரிப் போட்டு அழுகைக்கு கூட வழியின்றி அவனது கிணற்றான பெரிய வாயினுள் அடங்கி போனது.

நீண்ட இதழ் முத்தம் மூச்சிமுட்டும் நிலையில் மானின் இருவிழிகள் மயக்கத்தில் சொருகி, செவிப்பறையில் நிறைந்து வழிந்த கண்ணீர் துளிகள் படுக்கையை நனைத்துக் கொண்டிருக்க, மென்னிதழ் மோகத்தில் இருந்து வெளிவர முடியாத ருத்ரன் பெண்ணவளின் பண்ணீர் எச்சிலை சப்புக்கொட்டி உறிஞ்சி உதட்டோடு இழுத்தவனாய் அவளின் பக்கவாட்டில் படுத்துக்கொண்டு பழுப்பு விழிகளில் தாபம்வழிய அங்குலம் விடாமல் பார்த்தான் பெண்ணை.

நெஞ்சிக்கூடு ஏறி இறங்க அவன் விட்ட வேகத்தில் படபடவென கூட்டை விட்டு சிறகரித்து பறக்கும் பறவையாய் தாவி தப்பிக்க நினைத்தவளின் தொடையில், ஒற்றை கனமான காலை போட்டு அமுக்கி கிடுக்குப்பிடி பிடித்து, ஒற்றை கரத்தையும் அவளது வயிற்றில் அழுத்தி தன்ப்பக்கம் இழுத்த ருத்ரன், நரம்பு புடைத்த முகத்தை பெண்ணவளின் ஈரம் படிந்த கன்னத்தில் வைத்து தேய்க்க, ஆஆஆ.. என்று உரத்தகுரலால் தன் வேதனையை வெளிப்படுத்தியவளை எந்த ஒரு பதட்டமுமின்றி அமைதியாகவே பார்த்தான்.

"என்ன குயிலு இது சும்மா சும்மா கத்திக்கிட்டு. நான் என்ன உன்ன கத்தியால குத்தினேனா இல்ல துப்பாக்கியாலதா சுட்டேனா. தம்மாத்தூண்டு முத்தம் அதுக்கு போய் உயிர் போற மாதிரி கத்துறது சரியில்ல, இந்த ருத்ரங்கனுக்கும் அது அழகில்ல.

முதல்முறை காருக்குள்ள முத்தம் கொடுக்கும் போது அமைதியா வாங்கிகிட்ட. கல்யாணத்துக்கு முன்னாடி தினமும் உன் ரூம்க்கு வந்து உன் உதட்டை கடிச்சுகிட்டே கட்டிக்கிட்டு தூங்கும் போதெல்லாம் அமைதியா இருந்த, இப்ப என்னாச்சி உனக்கு?"

அசால்ட்டாக கேட்டு புரியாத முகபாவனை காட்டியவனை மேலும் அதிர்ந்து பார்த்தாள் குழலி.

"அப்போ நிஜமாகவே அன்று தனக்கு இவன் முத்தம் கொடுத்தானா? அதுமட்டுமில்லாது வேறு ஏதேதோ உளறிகிறானே கிராதகன், என்னுடன் என் அறையில் உறங்கினானா. அதுவும் ச்சீ.." அருவருப்பாக முகத்தை சுளித்தவன் மேலும் அவனது பிடியில் இருந்து முரண்டாய் விடுபட முயற்சிக்க, எலிக்குட்டியாக எளிதாக தன்னுள் அழுத்திக் கொண்டான் அவளை.

"விருப்பம் இல்லாத பொண்ணுகிட்ட போய் உன்னோட கேவலமான பொறுக்கி வேலையகாட்டி இருக்கியே நோக்கு கொஞ்சமாது அறிவிருக்கா" சீற்றமாக அவள் கேட்ட நொடி ஐவிரல் பதிந்த கன்னத்தில் அனல் பறக்க கண்கள் மேலேறி நெஞ்சம் நடுங்க அழுகையில் வெடித்தாள் மாது.

"ஏய்.. ஷூ.. இப்ப இங்க என்ன இழவு நடந்துதுன்னு அழுது சீன் போடற. இந்நேரம் உன் இடத்துல வேற ஒருத்தன் இருந்திருந்தா நடக்குற சம்பவமே வேற. என்ன பண்றது என் விதி புள்ளைபூச்சிய எல்லாம் எம்முன்னாடி பேச விட்டு வேடிக்கை பார்க்கணும்னு" சலிப்பாக தலையில் அடித்துக் கொண்டு உருமியவனை கண்டு வெளவெளத்து போனாள் நங்கை.

"கொலைகாரா கொடுமைக்காரா துஷ்டா நீயெல்லாம் நல்லா இருப்பியா. பல கனவுகளோட கல்யாணம் நடக்க இருந்த பொண்ணு கழுத்துல திருட்டு தாலிகட்டி தூக்கி வந்து அடிச்சி சித்ரவதை பண்ற"

அடித்தே கொல்லத் துணிந்தாலும் இவனிடமிருந்து தப்பித்து தன் குடும்பத்தாரிடம் சென்றிட வேண்டும் என்ற ஆற்றாமையில் அழுது சிவந்த கண்களோடு ரவுத்திரத்தில் கத்தியவளை கண்டுகொள்ளாது, நீ என்னத்தையாவது கத்து என இந்த வெண்ணிடை ஏன் இத்தனை வழவழத்து பளிச்சிட்டு கண்களை கவர்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கி விட்டான் அவன்.

"விடு என்ன.. என் ஆத்துல எல்லாரும் என்னை தேடி அழுவா. ஆனா நீ உன்னால என்கிட்ட எவ்வளவு கேவலமா நடந்துக்க முடியுமோ அத்தனையும் செஞ்சி என்னை உயிரோட வதைத்து சாகடிச்சுட்ருக்க"

அரக்கனிடம் சிக்கிய குட்டி அணிலாய் அவனுக்கடியில் அசைய முடியாமல் கண்ணீர் கோடுகளோடு கிடந்து தவித்தவளின் துடிப்புகள் அவளையும் அறியாமல் கண்மயங்கி உறங்கி இருந்தாள் கன்னிகை.

அதுவரையிலும் கூட பெண்ணவளின் தென்னங்குருத்து இடையின் வளைந்து செல்லும் வழவழப்பின் மென்மையை முத்தமிட்டு நாவால் ருசித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவன் மது உண்ட வண்டாக அங்கேயே கண்சொக்கி விழுந்து கிடந்தான் ருத்ரன்.

உறக்கம் கலைந்து கண் விழித்ததில் இருந்து ஒன்றும் புரியாத நிலையில், திக்பிரம்மை பிடித்தவள் போல் மெத்தையின் நடுவே ஆள்பாதி ஆடைபாதியாக வற்றாத கண்ணீரோடு அவள் கிடக்க, அந்த தட்டையான மென்பஞ்சி வயிற்றினுள் தாடி மீசை வஞ்சனையின்றி வளர்ந்து வெள்ளிக்கம்பிகள் மின்னும் முரட்டுமுகம் குப்புறப்படுத்து பெண்ணின் வாசத்தை ஆழ ஸ்பரித்துக் கொண்டிருந்தவனை உணர்வுகளை தொலைத்து தலை தூக்கிப் பார்த்துவள், ஒரே நாளில் வாழ்க்கையை வெறுத்தே போனாள்.

இங்கோ சொந்தங்கள் அனைவரும் ஆறுதளுக்காக சில வார்த்தைகள் பேசிவிட்டு கலைந்து சென்ற நிலையில், கிருஷ்ணாவின் பெற்றோர் வேறு அலறலோடு அவன் காணாமல் போன பரிதவிப்பில், மகனுக்கு என்னானதோ ஏதானதோ என்று அஞ்சிக்கொண்டு சண்டையோடு போலீஸ் கம்ப்லைட் கொடுப்பதாக கிளம்பி விட, குழலியின் வீட்டினர் முற்றிமாய் மனமுடைந்து போயினர்.

"வெங்கட்டா புள்ள காணாம போயி ரெண்டு நாளாய்டுத்து இன்னும் அவ இருக்க இடத்தை கண்டு பிடிக்க முடியலையா" சோர்ந்து ஒலித்தன பார்த்தசாரதியின் குரல்.

இல்லை என மெதுவாக தலையாட்டிய வெங்கட் இரண்டு நாட்களாக தூக்கம் தண்ணி இல்லாது குழலியை தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறான். மண்டபத்தில் ருத்ரனும் அவன் ஆட்களும் வந்து போனதற்கான எந்த ஒரு தடயமும் இல்லை.

வந்தவர்கள் அனைவரும் அங்கிருந்த அனைவரின் கண்களும் மறைக்கும் அளவிற்கு புகையை கிளப்பிவிட்டு முகமூடி கொல்லையர்கள் போலவே தங்களை முகத்திரையில் மறைத்துக்கொண்டு வந்திருக்க, கேமராவில் இருந்து அனைத்தும் நமத்து போன பட்டாசாகி விட்டது.

கிருஷ்ணாவை அந்த புகையிலும் சரியாக குறிவைத்து சுட்ட ருத்ரன், அன்று நகைகடையில் தங்கத்தூக்கு கயிறு என்று கேட்டு வாங்கிய தங்கத்தாலியை பெண்ணவள் கழுத்தில் மாட்டிவிட்டவன், கையோடு மயக்கமருந்தையும் மூக்கில் வைத்து அடைத்து சத்தமில்லாமல் கிளம்பியவனின் ஆட்கள் ரத்தம் சொட்டக்கிடந்த கிருஷ்ணாவையும் கையோடு தூக்கி விட்டனர்.

"ஐயோ ஆண்டவா அப்போ என் பொண்ணு இனிமே என்கிட்ட திரும்பி வர மாட்டாளா. அவளுக்கு ஒரு நல்லது நடக்குற நாழிலயா இப்டி ஒரு அசம்பாவிதம் நடந்து அவ காணாம போகணும்" நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறிய பரிமளத்தை சமாளிக்க முடியாமல் திணறிப் போயினர் இரு ஆண்களும்.

"பரிமளோ அழாதேமா நம்ம குழந்தை எங்கே இருந்தாலும் நம்மகிட்ட வந்துடுவா" ஆறுதலாக பேசியவருக்கே நம்பிக்கை இல்லை ஆனாலும் மனைவிக்காக அவர் சொல்லிட, விரக்தியாக அவரை பார்த்தாள் பரிமளம்.

"ஏண்ணா இந்த ஆறுதல் வார்த்தை உங்களுக்கே வேடிக்கையா இல்லையோனோ. வயசு பொண்ணு பாக்க வேற மூக்கும் முழியுமா லட்சமா இருப்பா. எந்த நாசக்காரன் அவளை தூக்கிட்டு போனான்னு தெரியலையே. என் குழந்தை எப்டி தவிக்கிறாளோ"

பெற்ற மகளின் நிலையை எண்ணித் தவித்து பரிமளம் அழுதபடி சொல்ல சொல்ல, நாட்டுநடப்பில் நடப்பவை எல்லாம் மனக்கண்ணில் தோன்றி மறைந்து பார்த்தசாரதியின் நெஞ்சினில் பாரம் கூடிக்கொண்டே போனதில் கண்கள் இருட்டிக்கொண்டு மயங்கி சரிந்தவரை பதறியடித்துக் கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வெங்கட், மேலும் பயத்தில் அழும் அன்னையை சமாதானம் செய்தபடி தானும் உள்ளுக்குள் மருகித் தவித்தான் ஆணவன்.

"பக்காவா பிளான் போட்டு உங்க தங்கைய தூக்கி இருக்காங்க வெங்கட். நாங்களும் அந்த மண்டபம் முழுக்க ஒரு இடம் விடாம மூலை முடுக்கெல்லாம் தேடிப்பாத்துட்டோம் ஒரு துரும்பு கூட ஆதாரம் கிடைக்கல"

வெங்கட்டின் நண்பன் ஜெய் இப்போது தஞ்சை காவல் நிலையத்தில் போஸ்டிங் கிடைத்திருக்கவே, குழலி காணாமல் போனதில் இருந்து அவன் தான் தற்போது வெங்கட்டிற்கு உதவியாக தானும் அவளை தேடி வருகிறான்.

"என்ன டா அமைதியா இருக்கே. நீயே இப்டி நம்பிக்கை இல்லாம உடைஞ்சி போனா குழலிய எப்டி கண்டு பிடிப்ப. வீட்ல எப்டி அம்மா அப்பாவ சமாதானம் செய்வ" அவன் தோளை ஆறுதலாக தொட்டதும் பாய்ந்து போய் நண்பனை கட்டிக்கொண்டு சிறுவனாக கேவிட பதறினான் உயிர் தோழன்.

"டேய்.. என்ன டா சின்ன பிள்ளை அழற. ஒன்னும் இல்ல வெங்கட் குழலிய எப்படியாவது கண்டு பிடிச்சிடலாம் பயப்படாதே" பாத்தட்டமாக முதுகை தட்டிக்கொடுக்க,

"அப்பாக்கு ஹார்ட் அட்டாக் மச்சி. அதுவும் செகண்ட் டைமாம். இதுவரைக்கும் ஆத்துல யார்கிட்டயும் சொல்லாம இருந்திருக்கார். இப்போ ரொம்ப கிரிட்டிக்கல்னு சொல்றாங்க டா. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. பயமா இருக்கு மச்சா"

முதல் முறையாக பயம் என்ற வார்த்தை தன் குடும்பத்திற்காக அவன் வாயில் இருந்து வெளிவருவதை உணர்ந்த ஜெய் நண்பனின் நிலையை எண்ணி கலங்காமல் இல்லை. ஆனாலும் தைரியம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் விரைப்பான அதிகாரியாய் செயல்பட்டு முடிந்து மட்டும் ஆறுதலாய் இருந்தான் ஜெய்.

"நீ ஒன்னும் கவலை படாதே வெங்கட். டாக்டர் என்ன சொல்றாங்களோ அதன்படி அப்பாக்கு ட்ரீட்மென்ட் பாக்கலாம். நீ அம்மாவை சாப்பிட வை நீயும் சாப்ட்டு தெம்பா இரு. எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம். குழலிக்கு ஒன்னும் ஆகாது"

நண்பனின் ஆறுதல் அப்போதைய மனநிலைக்கு வேண்டுமால் சற்று அமைதியை கொடுத்து இருக்கலாம், ஆனால் அதன் பிறகான நிலை?

குழலி இல்லாத கவலையும், icu வில் அனுமதிருக்கும் தந்தையின் உடல் நிலையும், தாயின் அழுகையும் ஆண் மனதை பிசைந்து வதைத்துக் கொண்டிருந்தனவே!

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 21
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
46
Reaction score
36
Points
18
Ji pavam ji venkat...ipo intha ruthran Mela kovama varuthu ....pidikatha ponna ivlo kattaya padutha kudathu...pavam kuyilu... Next ud sekiram kudunga ji...
 
Top