- Messages
- 309
- Reaction score
- 251
- Points
- 63
அத்தியாயம் - 22
முதல் முறையாக மகனோடு தனியாக காரில் வரும் குணவதிக்கு மகிழ்ச்சிக்கு பதில், குழப்பமும் பதட்டமுமே அளவுக்கு அதிகமாக இருந்தது. "திடீரென ஏன் தன்னை அவனோடு அழைத்து வருகிறான் தன்னை நரேன் அழைத்து வரும் விடயம் அவன் தந்தைக்கு தெரிந்தால் என்னாகுமோ” என்ற கவலை இருப்பினும், தன்னை உடன் அழைத்து செல்லும் அளவிற்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற யோசனையோடே வேங்கையாக உருமாரி காரை வெறித்தனமாக ஓட்டும் தோற்றம் வேறு அவரை அச்சுறுத்த 'கொஞ்சோ மெதுவா போ தம்பி' என வாயை திறந்து சொல்ல கூட அத்தனை பயத்தை கொடுத்தது அவன் தோற்றம்.
கார் நின்றதும் பெருமூச்சு விட்டவராக வெளியே பார்க்க மருத்துவமனை என்று கண்டுகொண்டதும் இன்னும் படபடப்பு அதிகரித்து, "என்னாச்சி தம்பி எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க" அவரை பேச கூட விடவில்லை. 'சீக்கிரம் காரை விட்டு இறங்கி வாங்க' ரோபோ போல் உரைத்து விட்டு அவசரமாக உள்ளே சென்றவனை பின் தொடர்ந்தவருக்கு பலமாக மூச்சிவாங்கியது.
வேக எட்டுக்கள் வைத்து icu இருக்கும் திசையை நெருங்கிய நரேனை கண்ட ராம் அமைதியாக எழுந்து நிற்க தாவி அவன் சட்டையை பிடித்தவன். “டேய்.. என் தங்கச்சிய என்ன பண்ண, icu ல அட்மிட் பண்ற அளவுக்கு என்னாச்சி டா அவளுக்கு, சொல்லு அவளை என்ன பண்ண." கோவமாக கத்திய நரேனின் கரத்தை அழுத்தமாக பிடித்த வர்மனை சீற்றம் குறையாது கண்டான் அவன்.
"என்ன சார் பட்டுனு வந்து சட்டைய புடிக்கிறீங்க. பதிலுக்கு அவன் உங்க சட்டைய புடிக்க எம்மா நேரம் ஆகும்" நண்பனின் சட்டையை பிடித்ததும் அடக்கப்பட்ட கோவத்தோடு பற்களை கடித்தான் வர்மன்.
“ஹேய்.. நீ யாரு முதல்ல. என் கைய புடிக்கிற அளவுக்கு அவ்ளோ தைரியமா உனக்கு. எங்க என் சட்டைய தைரியம் இருந்தா இந்தாள புடிக்க சொல்லு பாப்போம்," பதிலுக்கு சீரிய நரேனை கை முஷ்டி இறுக கோவத்தோடு அவன் கரத்தை பிடித்து அழுத்திய வர்மனின் கரத்தை பக்குவமாக எடுத்து விட்ட ராம், 'வர்மா நீ இரு நான் பேசுகிறேன்' என்றவன் 'சட்டைல இருந்து கைய எடுங்க நரேன். உங்க தங்கச்சி பண்ண வேலைக்கு நியாயப்படி பாத்தா நான்தான் கோவப்படனும். ஆனா இங்க எல்லாமே தலைகீழா நடக்குது. முதல்ல இப்டி காச்மூச்னு கத்தாம சொல்லவரற்த கேளுங்க சார்' ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாக உரைத்து தன் சட்டையை அவனிடமிருந்து உருவிக் கொண்டான் ராம்.
“ஹொவ் டேர்.." என மீண்டும் வாயெடுக்க போன மகனை தடுத்த குணவதி. "தம்பி எதுக்குபா வந்த இடத்துல சண்டை போடுற, இங்க எதுக்கு நம்ம வந்திருக்கோம். தங்கச்சினு சொன்னியே அது நம்ம நேத்ராவா?" கலக்கத்தோடு கேட்டவரை ஒரு பார்வை பார்த்து "அதான் கேக்குறாங்கள்ள என்னாச்சி அவளுக்கு இப்பாவது வாய தொறந்து சொல்லு டா" நிதானமின்றி கத்தினான் நரேன்.
ஆரம்பத்தில் இருந்து நடந்ததை ஒளிவு மறைவின்றி சொன்ன ராம் 'இன்னும் என் மனைவி இறந்து போய்ட்டா அப்டின்ற ஒரு எண்ணத்துல இருந்தே நான் வெளிய வரல, அதுக்குள்ள இவ குழந்தைகளை கடத்தி வச்சி கிறுக்குத்தனமா ஒவ்வொன்னையும் செஞ்சி, என்னையும் என் குடும்பத்தையும் டார்ச்சர் பண்றா. ஒரு அளவுக்கு மேல அவ பண்றத பொருக்க முடியாம தான் கோவத்துல மேல இருந்து கீழ குதிக்க சொன்னேன். ஆனா இப்டி உண்மையா அவ குதிச்சி உயிருக்கு போராடுற நிலைமைக்கு வருவானு நிஜமா நான் எதிர்பாக்கல' எனும் போதே 'ஐயோ.. என் பொண்ணு அப்போ பிழைக்க மாட்டாளா தம்பி' பதறி அழுத குணவதிக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் அனைவரும் நின்றிருந்தனர்.
“தப்போ சரியோ என் தங்கச்சி அவ மனசுக்கு சரினுபட்டத எதையும் யோசிக்காம செய்றவ. அதோட பின் விளைவுகளை பத்தியெல்லாம் யோசிக்க மாட்டா, அந்த நேரம் அவளுக்கு தோணுறத யோசிக்காம செஞ்சி முடிச்சிடுவா, உனக்கு பிடிக்காத ஒன்ன செஞ்சிட்டானு கோவம் வந்தா மேல இருந்து அவளை கிழ குதிக்க சொல்லுவியா நீ. உன் கோவத்துக்கு இறையா அவளை நீ யூஸ் பண்ணிப்பியா, ஏன்டா என்னடா தெரியும் என் தங்கச்சிய பத்தி உனக்கு. அவ சாகக் கிடக்குற விஷயத்தை கூட சாவகாசமா சொல்ற, உன்ன.." சிறிதும் கோவம் அடங்காமல் கொதித்த நரேன், ஓங்கி ராமின் கன்னத்தில் ஒரு குத்து விட எச்சிலோடு ரத்தம் வடிந்த நிலையில் தள்ளாடி நின்ற நண்பனை நொடியும் தாமதிக்காது தாங்கி பிடித்த வர்மன். “டேய்.. என கண்கள் சிவக்க கத்தியிருந்தான்”.
"நீ எது பேசினாலும் அமைதியா போறான்னா, இன்னைக்கு உன் தங்கச்சி உயிருக்கு போராடிட்டு இருக்க ஒத்த காரணத்துக்காக மட்டும்தான். அதையே சாக்கா வச்சி இன்னொரு முறை என் ராம் மேல கைய வச்ச.. எலும்பு தனியா கறி தனியானு துண்டு துண்டா நறுக்கிப் போற்றுவேன் பாத்துக்கோ." அவன் முகத்துக்கு நேரே விரல் நீட்டி கர்ஜனை செய்யும் தோரணையில் பனிக்கும், ராம்க்கும் பழைய வர்மன் கண்முன் தோன்றி மறைந்ததில், பனி திகைத்து விழிக்க, சிறிதும் பயமின்றி நெஞ்சை நிமிர்த்தி நின்ற நரேனை ஒரு பார்வை பார்த்த ராம் நண்பனை அடக்கி இருந்தான்.
“வர்மா.. கொஞ்சநேரம் அமைதியா இருடா டென்ஷன் ஆகாதே." புறங்கையால் வாயை துடைத்தபடி பனிக்கு கண்ணைக் காட்ட, "வருஊ.. நீ என்கூட வா.. மாமா கூப்டா நம்ம வரலாம்" என்றவளோ பதட்டமாக உள்ளே அழைத்து செல்ல நரேனை முறைத்தபடியே அவளின் இழுப்புக்கு சென்றவனை தானும் வெறியாக முறைத்து நின்றான் நரேன்.
"என்ன ரவுடி பயலை எல்லாம் கூட வச்சிக்கிட்டு பூச்சாண்டி காற்றியா. மீண்டும் சண்டைக்கு தயாராகிய மகனின் கரத்தை நடுக்கமாக பற்றிய அன்னையை கண்டவனின் மனதில் என்ன தோன்றியதோ கரத்தை சட்டென உருவிக் கொண்டு நேத்ரா இருக்கும் அறைக்கு செல்ல, ராமை பார்த்தபடியே அவனோடு கண்ணீரோடு சென்றவர், "ஐயோ என் பொண்ண இப்டி ஒரு நிலைலயா நான் பாக்கணும்" என மகளின் நிலையைக் கண்டு வாய் பொத்தி குளிங்கி அழுதார்.
'மச்.. இங்க அழ கூடாதுனு உங்களுக்கு தெரியாதா' நரேனின் கோவத்தில் அழுகை விசும்பலாக மாறி பரிதாபமாக அவளையே கண்டவரை, ராமும் வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தான். நரேன்க்கு அவர் பயந்து நடுங்குவதையும் அவன் பேச்சிக்கு மறுபேச்சி பேசாமல் தலையை ஆட்டி மகனுக்கு அடிபணிந்து போவதையும், ஏறத்தாழ நரேன், நேத்ரா இருவரது குணமும் அச்சில் வடித்தார் போல் ஒன்றன்போலவே தான் இருந்தது.
தங்கையின் காலருகில் அமர்ந்து நரேன் அவளையே பார்த்திருப்பதை கண்டு ராமிடம் சென்றவர். "தம்பி என் பொண்ணுக்கு ஒண்ணு ஆகாதுள்ளப்பா அவ பிழைச்சிப்பா தானே, அவ உங்களுக்கு பண்ணது எதையும் நான் நியாயப் படுத்த விரும்பல, ஆனா அவபக்கம் இருந்து என்ன சொல்ல வரான்னு ஒரே ஒருமுறையாவது காது கொடுத்து கேட்டிருந்தா இன்னைக்கு என் பொண்ணுக்கு இப்டி ஒரு நிலைமை வந்திருக்காதுல்ல. இதுவரைக்கும் என் பசங்க என்கிட்ட அன்பா அக்கறையா ஒரு வார்த்தை கூட பேசினது இல்ல தம்பி, நான் சாகுறதுகுள்ளயாவது என் பிள்ளைங்க என்ன புரிஞ்சிகிட்டு பாசமா ஒரே ஒரு வார்த்தை அம்மானு கூப்பிட மாட்டாங்களானு முப்பது வருஷமா தவம் இருக்கேன். அதுல ஒருத்தி எனக்கு முன்னாடி என் முகத்தை கூட பாக்காம கண்ண மூடி மணிநேரத்தை எண்ணிட்டு படுத்திருக்கா, என்னால தாங்கிக்கவே முடியல தம்பி." வேதனையாக கண் கலங்கிய குணவதியை ராம் புரியாமல் பார்க்க, தனக்கு பயந்து கிசுகிசுப்பாக கண்ணீரோடு பேசிய தாயின் வார்த்தைதனில் கல்லில் பொறுத்திய இதயமாக துடிக்காமல் அமர்ந்திருந்தான்.
“டாக்டர் என் தங்கச்சிய காப்பாத்த முடியுமா முடியாதா.. முடியாதுனா சொல்லுங்க இதை விட பெஸ்ட்டானா ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போய் வேர்ல்ட் பெஸ்ட் டாக்டர்ஸ் வச்சி எப்டியாவது அவளை காப்பாத்த முயற்சி பண்றேன். அவளை இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணுங்க," முப்பது நிமிடங்களே எஞ்சி இருக்க தங்கையின் நிலை மோசமாவதை கண்டு துடித்து போன நரேன், மருத்துவரை பிடிபிடியென பிடித்துக் கொண்டான்.
“எந்த டாக்டர்ஸ்கிட்ட போனாலும் நாங்க இங்க என்ன பண்றோமோ, சொல்றோமோ அதையே தான் அச்சி பிஸிராம சொல்லுவாங்க. சோ எங்க கூட்டிட்டு போனாலும் ஒன்னும் ஆக போறது இல்ல. ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க சார்” என்ற மருத்துவர் சென்றிட பித்துப் பிடித்ததை போல் பிடிமானமின்றி தளர்ந்த நிலையில் இருக்கையில் அமர்ந்தவனின் தங்கைக்கான பாசத்தை அங்கிருந்த அனைவரும் உணரவே செய்தனர்.
இந்த விடயம் தன் தந்தைக்கு தெரியுமோ, தெரியாதோ என்ற எண்ணத்தில் அவருக்கு அழைக்க, 'இந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது' என்றே மீண்டும் மீண்டும் வந்ததில் தலையை பிடித்துக் கொண்டவனுக்கு, அவர் மீது அப்படி ஒரு கோவம் எழுந்தது. போனை கூட எடுக்காம அப்டி என்ன தான் இவரு பண்ணிட்டு இருக்காரோ ச்ச.. என சுவற்றில் கரத்தை மடக்கிக் குத்திக் கொண்டவனுக்கு எப்படி தெரியும் அவன் தந்தை அலைபேசியை அணைத்து விட்டு மங்கைகளோடு உல்லாசமா மஞ்சள் நீராட்டு விழா நடத்திக் கொண்டு இருப்பதை பற்றி.
நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்துக் கொண்டே வந்த நிலையில் கண்மூடி படுத்திருந்தவளை சுற்று போட்டு நின்ற அனைவருக்கும் எப்படியாவது கடைசி நேரத்திலாவது கண்விழித்திட மாட்டாளா என்ற எண்ணமே கவலையாக இருந்தது. ராமின் நெஞ்சமோ படபடவென அடித்துக் கொள்ள தன்னையறியாது உயிர்ப்பின்றி கிடந்த அவள் கரத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டவனக்கு, சுயநினைவை இழந்த தீஷாவின் இமைமூடி படுத்திருந்த பின்பமாகவே தெரிந்த நேத்ராவை கண்டு திகைத்துப் போனான்.
“தி..தீ.ஷு.. தீஷு.. ந்..நீ. எப்டி.. எனக்காக திரும்பவும் வந்துட்டியா தீஷு.. கண்ண திற டி ப்ளீஸ்.. இந்த முறையாவது என்ன சோதிக்காம கண்ண திறந்துடு தீஷாஆ.. உன்ன கெஞ்சி கேக்குறேன் ஏமாத்திட்டு போயிடாத டி, திரும்பவும் என்னால உன்னோட இழப்பை தாங்கிக்க முடியாது. நீ இல்லாம செத்துடுடலாம் போல இருக்கு டி ப்ளீஸ்.. கண்ண திற தீஷுமா.." கண்ணீரோடு அவன் கத்தி கதறியது அணைத்தும், அவன் மனதின் குரலால் மனதுக்குள்ளே துடித்து கத்தியது சுற்றி இருந்த யவரின் செவியையும் எட்டவில்லை, ஆனால் அவனது மனதுக்கு சொந்தக்காரிக்கு கேட்டு விட்டதுவோ என்னவோ. இத்தனை நேரமும் பிணத்திற்கு சமானமாக அசையாதிருந்த பெண்ணவளின் கரத்தை பிடித்திருந்த ஆடவனின் கரத்தினுல் விரல்கள் தாளம் தட்டியதில் மனக்கதறலில் இருந்து சட்டென தெளிந்தவனாக குனிந்து நேத்ராவின் முகம் பார்க்க. மூடிய இமைக்குடைக்குள் கருமணிகள் அசைவதை கண்டவனுக்கு புரியாத ஈர விழிகள் வியப்பில் விரிந்தது.
டாக்டர்ர்ர்.. என்று அவனுக்கு அருகில் இருந்தவரையே காது கிழிய கத்தி இருந்தவனுக்கு தலைகால் புரியவில்லை, புரியாத தாக்கத்தில். டாக்டர்.. டாக்டர்.. என்றவனுக்கு வார்த்தைகள் வராமல் நாவுக்குள் சிக்கி திணறியதை கண்ட மருத்துவர், "ஸ்ஷ்.. சார்.. இப்டிலாம் இங்க கத்தக் கூடாது நாங்களும் அவங்கள கவனிச்சிட்டு தான் இருக்கோம். அவங்ககிட்ட அசைவு தெரியிது மே பி, அவங்க ரெக்கவர் ஆக சான்ஸஸ் இருக்கு ப்ளீஸ் எல்லாரும் கொஞ்சம் வெளிய போங்க” என்றவர் அனைவரையும் வெளியே அனுப்பி வைக்க, கடைசியாக வெளியேறலாம் என்று நினைத்து உள்ளுக்குள் பல குழப்பங்களோடு அவளின் கரத்தை விடுவிக்க முயன்றவன் கரத்தை, இப்போது நேத்ராவின் கரம் இறுகி பற்றி ர்..ரா.ம்.. என்றவனது பெயரை அவளின் வறண்ட இதழ்கள் மிக மிக மெல்லியதாக உச்சரிப்பதை சரியாக கவனித்து விட்டவனது கரத்தை அவளிடமிருந்து பிரித்து சிலையாக நின்றவனை கடினப்பட்டு வெளியேற்றி இருந்தாள் செவிலிப்பெண்.
தொடரும்.

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 22
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.