Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 22

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் 22

அரவிந்த், முல்லை, அனு, குட்டிப் பையன் என நால்வவரும் ஒரு குடும்பமாக, முல்லையின் தாய் நாடான இங்கிலாந்து நோக்கி விமானத்தில் பறந்துக் கொண்டு இருந்தனர்...

விமானம் தரை இறங்க இன்னும் சற்று நேரம் இருக்க.. முல்லையின் முகம் வாட்டமாக இருப்பதை கண்ட அரவிந்த், "என்ன முல்ல உன் தம்பிய எப்டி சமாளிக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருக்கியா" அவள் கையில் அழுத்தம் கூட்டி கேட்டான்.

"ம்ம்..ஆமா சார், பாவம் சைத்து சின்ன பையன், இதுவரைக்கும் எங்க யாரையும் பிரிஞ்சி அவன் இருந்ததே இல்லை, இப்ப போய் திடிர்னு அம்மா அப்பா அக்கா இப்டி யாருமே இல்லைனு சொன்னா அவன் எப்டி எடுத்துக்குவான்னே தெரியல" கண்கலங்கி விட்டாள்.

"இங்க பாரு முல்ல, உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு பெரிசு தான், அதுக்காக அதையே நினைச்சிட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா.. அந்த இழப்பை எல்லாம் சரிக்கற்ற விதமா, பாரு நம்ம பையன் எப்டி சிரிச்சிட்டு இருக்கான்னு.." என அரவிந்த் கையில் குட்டி கண்களை உருட்டி, கால் கட்டை விரலை தூக்கி வாயில் வைத்து சப்பி கொண்டே குறும்பு கண்ணனாக சிரித்த வன்னம் இருந்த குழந்தையை காட்ட...

மழலையின் குறும்பு நிறைந்த புன்னகையில் தன்னை தொலைத்தவள்.. "இவன் மட்டும் இல்ல நீங்களும் அனுக்குட்டியும் தான்" என்றவள், அவள் கையில் மழலை மாறாத பால் முகத்துடன் உறங்கி கொண்டிருந்த அனுஸ்ரீ கன்னத்தில் முத்தம் வைத்தவளாக, அருகில் இருந்த அவளின் கணவனின் கையோடு கைக் கோர்த்து அவன் கன்னத்திலும் மென்மையாக முத்தம் வைக்க.. மனைவியின் மென்மை இதழ் தீண்டளில் சிலிர்த்து போனான் ஆடவன்..

இப்படியே இவர்களின் விமானப் பயணம் நிறைவடைந்து, அவர்களுக்காக முல்லையின் பிஏ. டெல்வினா காத்திருந்தாள்..

முல்லையை கண்டதும் அவளுக்கு சல்யூட் வைத்து, அரவிந்தை பணிவாக அவள் மொழியில் வரவேற்க.. அவனும் சிறு தலையசைப்பை அவளுக்கு கொடுத்து, அவர்களுக்கான காரில் அனைவரும் ஏறிக் கொள்ள.. கார் முல்லையின் ஆடம்பரமான வீட்டை நோக்கி சென்றது...

கார் முல்லை வீட்டு வாசலில் நின்றதும், ஓரளவு அங்கு இருந்தவர்களுக்கு நிலைமையை அரவிந்த் வீட்டில் இருக்கும் போதே பெரியவர்களுக்கு மட்டும், நடந்ததை போனில் அழைத்து மேலோட்டமாக கூறி இருந்ததில், அனைவரும் அங்கு தான் கூடி இருந்தனர்.. அதில் முல்லையின் அம்மாகளின், அம்மாக்கள், அதாவது அவள் பாட்டிகளும் அங்கு தான் இருந்தனர்...
முல்லையை கண்டதும் பாட்டிகள் மூவரும் ஓடி வந்து கட்டிக் கொண்டு அழ.. அவளின் அத்தை எமிலி குழந்தைகளை அழைத்து சென்று அவளின் பிள்ளைகளுடன் அனுவை விளையாட விட்டு விட்டு.. அல்லி குழந்தையை பார்த்துக் கொண்டே மௌனமாக கண்ணீர் சிந்தினால்...
அரவிந்த் அங்கு ஒரு ஆளாக நடப்பதை வேடிக்கை பார்த்தபடி கை கட்டி நின்றிருந்தான்..

பின் முல்லையே அனைவருக்கும் ஆறுதல் கூறி முடித்தவள்.. அரவிந்தை அனைவருக்கும் அறிமுக படுத்தி வைத்தவள், எந்த சூழலில் இருவரும் சந்தித்தோம் என அனைத்தையும் கூறி, தனக்கும் அவனுக்கும் திருமணமாகி தாங்கள் இருவரும் மனம் ஒத்த தம்பத்திகளாக வாழ நினைக்கிறோம் என்று கூற,

அங்கு இருக்கும் அனைவரும் அவனை பெருமை பொங்க பார்த்து.. கை கூப்பி நன்றிக் கூறி.. அவர்களின் திருமண வாழ்க்கையை ஆனந்தமாக தொடங்க ஆசிர்வாதம் செய்தனர்...

அங்கு இருப்பவர்கள் யாருக்கும் முல்லையை, இரண்டாம் தாரமாக வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டாலே என்றெல்லாம் நினைக்கவில்லை.. காரணம் அங்கு அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணமான ஒன்று தான்..
இருந்தும் முல்லையின் வீட்டினர் சற்று தமிழ் பண்பாட்டை விரும்புபவர்கள் என்பதால், அரவிந்தின் நற்க்குனங்களையும், அவனின் கடந்து வந்த பாதையை, பெரியவர்கள் முல்லையின் வாய் மொழியால் கேட்டு அறிந்து இருந்தவர்கள்.. முல்லையை விரும்பியே முழுமனதாக அரவிந்திடம் ஒப்படைத்தனர்..

அரவிந்த்,, குடும்பத்தினர் அனைவரும் முல்லையின் மேல் வைத்துள்ள அன்பும்.. எத்தனை பெரிய இழப்பின் வேதனையிலும் அவர்களின் கண்ணீரை துடைத்துக் கொண்டு வந்தவர்களை அன்பொழுக வரவேற்று உபசரிப்பதை எல்லாம் பார்த்து வியந்து தான் போனான்..

சைத்தன்யன் ஒரு ஓரமாக நடப்பதை கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருந்தவன்.. நடந்த அனைத்தையும் முல்லை வரும் முன்னே பெரியவர்களின் பேச்சிலும் அழுகைலும் தெரிந்துக் கொண்டவன், அதிர்ச்சியாகி பின் ஓரளவு தன்னை தானே சமாதானம் செய்து தேற்றி இருந்தவன்.. இப்போது தமக்கையை கண்டதும் அவனால தாங்க முடியாமல் ஓடி போய் முல்லையை அனைத்துக் கொண்டு அழ ஆரமிக்க..

"சைத்து, அழாத டா.. அம்மா அப்பா அக்கா யாரும் நம்மள தனியா விட்டு போகல டா... பாரு நமக்காக இன்னொரு அழகான குடும்பத்தை கொடுத்துட்டு தான் போய் இருக்காங்க.. இதோ இவன் அப்டியே அல்லி அக்கா மாதிரியே இருக்கான்" என்று அவன் கையில் குழந்தையை கொடுக்க... கண்ணீரை துடைத்துக் கொண்டு கையில் ஆசையாக வாங்கிக் கொண்டான்...

மூன்று மாதங்கள் கடந்த நிலையில்....

"சார், ஏன் சும்மா அவனை கைல தூக்கி வச்சிட்டு இருக்கீங்க... நீங்க வீட்ல இல்லாதப்பயும், என்ன வேலை செய்ய விடாம தூக்க சொல்லி அழறான் தெரியுமா.. " முல்லை பாவமாக சொல்ல..

"என் பையன தூக்கி வச்சிருக்கறத விட உனக்கு என்ன டி பெரிய வேலை இருக்கு.. அதான் வீட்ல வேலை செய்ய நிறைய பேர் இருக்காங்களே, நீ இனிமே எந்த வேலையும் செய்யாம பிள்ளைய பாரு,..." நான்காவது மாதம் அடி எடுத்து வைக்க போகும் வீர்ஆதவ், என பெயரிட்ட குழந்தையை கொஞ்சிக் கொண்டே இருந்தான்.

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால் முல்லை, பின்ன அவள் எங்கே அங்கு வேலை செய்கிறாள், இப்போது தான் தன் கணவன் மற்றும் பிள்ளைகளுக்காக,, தானே தன் கையால் சமைத்து போட ஆசைக் கொண்டு,, சமையல் செய்பவர்களிடம் கேட்டு தெரிந்து கற்றுக் கொள்ளலாம் என்று சமையல் அறைக்கு சென்றால்..

வீர் வீரிட்டு கத்தும் சத்தத்தில் அவனிடம் ஓடோடி வந்து விடுவாள்..

இல்லை என்றால் அனு, "அம்மா என் கூட விளையாட வாங்க, வீர் எப்பபாரு தூங்கிட்டே இருக்கான்.." என்று முல்லையை இழுத்து சென்று விடுவாள்.. ரெண்டு குட்டிகளையும் சமாளித்து இனி எப்போதும் சமையலை கற்றுக் கொண்டு, தன் கையால் சமைத்து தன் கணவனுக்கு பரிமாற என்ற கவலையில், முகத்தை தூக்கி வைத்து இருக்க...
வீர் பையனை தூங்க வைத்து மெதுவாக மெத்தையில் கிடத்திய அரவிந்த்... பூனை நடையிட்டு வந்து பின்னால் இருந்து அவன் மனைவியை கட்டி அவள் கழுத்தில் முகம் புதைக்க.. கூச்சத்தில் நெளிந்தாள் பாவை.

"ஐயோ சார் என்ன பண்றீங்க கூசுது," அவன் ஸ்பரிசத்தில் மூச்சி முட்டியது.

"சும்மா இரு டி, உன்ன நான் ஒன்னும் பண்ணல.. சரி ஏன் முகத்தை உம்முனு வச்சிருக்க.."

" ஏன் சார்.. உங்களுக்கு தெரியாதா.."

"தெரிஞ்சதால தான் கேக்குறேன் முல்ல.. இப்ப என்ன நீ சமைச்சி போட்டு நான் சாப்பிடணும் அதானே சரி வா நானே உனக்கு கத்துக் கொடுக்குறேன் நீ செய்.. நான் சாப்பிடற சரியா" என்க,

"நிஜமாவா சார், ஆமா உங்களுக்கு சமைக்க தெரியுமா.."

"ம்ம்.. கொஞ்சம் கொஞ்சம் தெரியும் முல்ல.." என்றவனின் கைகள் அவளின் இடை புகுந்து அதன் மென்மையை உணர்ந்து அதில் அழுத்தம் கூட்டி கவி எழுத..

"சார் என்ன பண்றீங்க, பாட்டிக்கு தெரிஞ்சா அவளோ தான்..". கூச்சத்தில் நெளிந்து கணவனின் கைகள் செய்யும் மாயாஜாலத்தில் கிறங்கி சிவந்தாள்.

"ஏன் டி என் ஏக்கம் உனக்கு புரியவே இல்லையா முல்ல, கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆகுது டி, ஆனா இன்னும் ஏன் முல்ல நம்மல இந்த பாட்டி பிரிச்சி வச்சி இருக்காங்க.."
மனைவியின் நெருக்கத்தில் மயங்கி கிறங்கினான் ஆடவன்.

"அது சார், ஜோசியர் சொல்லி இருக்காருள்ள.. நம்ம நேரம் காலம் எதுவும் பாக்காம கல்யாணம் பன்னி கிட்டதால, நம்ம மூணு மாசம் பிரிஞ்சி தான் இருக்கணுமாம்.. மீறி ஒன்னு சேந்தா.. உங்களுக்கு ஏதோ கண்டம் இருக்குன்னு," அவள் சோகமாக சொல்ல..

"மச்..போடி, அதெல்லாம் சும்மா கட்டு கதை, பாட்டி தான் ஜாதகம் ஜோசியம்னு மூடநம்பிக்கைய நம்பிட்டு இருக்காங்னன்னு பாத்தா, நீ யூஎஸ்ல பொறந்து வளந்தவ தானே, நீயுமா டி அதை எல்லாம் நம்பர.." அவளின் கழுத்து வளைவில் வார்த்தைக்கு வார்த்தை இச்.. இச்.. வைத்துக் கொண்டே கேட்க...

"ஏன் சார், யூஎஸ்ல பொறந்து வளந்தா, எனக்கென்ன ரெண்டு கொம்பா இருக்கு.. எந்த நாட்ல பிறந்து வளந்த பொண்ணா இருந்தாலும்,, ஒன்னு பண்ணா, தன் புருஷனுக்கு ஒரு ஆபத்து வரும்னு தெரிஞ்சா, எப்டி பட்ட பொண்ணா இருந்தாலும் அதை பன்ன மாட்டா சார்.. எனக்கு முதல்ல நீங்க தான் முக்கியம், அப்பறம் தான் மத்தது" என்றவலாக அவனை வலுகட்டாயமாக தன்னிடமிருந்து இருந்து விளக்கி தள்ளியவள்.. அந்த அறையை விட்டு சிவந்த முகத்தை மறைக்க ஓடி இருந்தால்...

இங்கிலாந்தில், அவளின் கல்லூரி மட்டும் பள்ளிகளுக்கு.. முல்லையின் பிஏ.. டெல்வினா'வை அனைத்தையும் பராமரிக்கும்படி சொல்லி விட்டு, மேலும் அவளுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களை உடன் விட்ட முல்லை..
அவளின் தம்பியான சைத்துவை அவளுடைன் இந்தியா அழைத்தாள்.

அவன் வர மருத்து, "தான் இங்கேயே இருந்து படிப்பை முடித்ததும் அவர்களின் அனைத்து நிறுவனங்களையும் பொறுப்பாக எடுத்து நடத்த போவதாகவும், என்னதான் டெலினா அனைத்தையும் பார்த்துக் கொண்டாலும், அவளுக்கு உதவியாக தான் இங்கு இருப்பது அவசியம் " எனவும், முழு மனதாக சொன்னதை முல்லைக்கும் அவன் சொல்வது சரி என்று படவே. அனைவரின் ஆசிர்வாதம் பெற்று மகிழ்ச்சியாக இந்தியா வந்தடைந்தனர்...
மழை.....
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 22
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top