• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
அத்தியாயம் - 22

"அண்ணையா.. சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்"

மதன் முன்பு போல் இயல்பாக ருத்ரன் அறைக்கு செல்லாமல், வெளியே நின்று அவனை மெதுவாக அழைத்திருக்க உள்ளிருப்பவனுக்கு கேட்டால் தானே!

பெண்ணின் ஆலிலை வயிற்றில் புதைந்து, நாபியில் நாவு சிக்கி சிதையும் அளவிற்கு அங்குள்ள ரகசியங்களை நுண்ணியமாக ஆராய்ந்துக் கொண்டிருப்பவனுக்கு, கண்ணீரோடு இதயம் நொறுங்க படுத்துக்கிடந்த பாவையின் மனதை ஆராய எந்த அவசியமும் இல்லாமல் போனது.

இங்கு வந்து இன்றோடு ஒரு வாரம் முடிந்து போயிற்று. வந்ததில் இருந்து இதே கதை தான். ருத்ரன் வீட்டில் இருக்கும் போதெல்லாம் பெண்ணவளின் மடியில் புரண்டு, அவளது துடிஇடையில் தொலைந்து, இதழில் கரைந்து, வயிற்றில் தஞ்சம் கொள்ளும் அவனை எந்த வகையில் சேர்ப்பது என புரியாமல் உள்ளூர மருகித் தவிப்பாள் பேதை.

உண்ண உணவு உடுத்த உடை அவளுக்கு தேவையான அனைத்தும் அவளை தேடி வந்து விடும். ஆனால் நிம்மதியும் மகிழ்ச்சியும் துளி அளவும் கிடைக்கவில்லையே!

முதல் இரண்டு நாட்கள் அழுது கதறி கெஞ்சி கோவம்கொண்டு அரக்கனிடமிருந்து தப்பிக்க முரண்டு பிடித்த குழலியை அவன் கொஞ்சமும் கண்டுகொள்ளாது, அந்த கீச்சிக் குரலில் கிறங்கி எஃது குரல் உயர்த்தி அதட்டி பெண்ணை மிரள வைத்து, மெத்தையை அலங்கரித்த மலரின் மீது புரண்டு அவன் பாட்டுக்கு ஏதேதோ செய்துகொண்டிருக்க, அவனது கணத்தை தாங்காத மென்மலர் தேகம் துடித்துப் போகிறது. மனம் நம்பிக்கை இழந்து வெறுத்து விட்டது இனிமேல் இவனிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதனை அறிந்து.

அவன் சம்பவம் செய்ய போகும் அந்த சில மணி சொற்ப நேரத்தில் குளித்து உடை மாற்றிக் கொண்டால் தான் உண்டு. இல்லையேல் அரக்கன் நான் குளிப்பாட்டி விடுகிறேன், முதுகு தேய்த்து விடுகிறேன், குளியலறைக்கு தூக்கி செல்கிறேன் என்று படாதபாடு படுத்தி விடுவான்.

முதல் நாள் அப்படி தான் அரக்கனிடம் மாட்டிக்கொண்டு அறையை சுற்றிலும் ஓட்டபந்தயம் ஓடினாள்.

"குயிலு நீயா குளிக்க போனா நல்லது இல்ல நானே பிடிச்சேன்னு வையி, தக்காளி கோழிக்கு தோலை உறுக்கிறது போல உன் துணிய உறிச்சி உன்ன மட்டும் தனியா எடுத்து தண்ணில முக்கி எடுத்துடுவேன்" காட்டுக்குரலால் அவளை அஞ்சி நடுங்க வைத்தான் கிறுக்கன்.

"இல்ல முடியாது. நான் என் ஆத்துக்கு போகணும் என்னை விட்டுடுங்கோ" மேஜையின் பின்னே பதுங்கி நின்று கைக்கூப்பி அழுதவளின் நிலையை வேடிக்கையாக விழி சுருக்கிப் பார்த்தான் ருத்ரன்.

"ஏய் உன்னைய ரேப் பண்ணவா கூப்பிடுறேன். வந்ததுல இருந்து அழுக்கு மூட்டையா இருக்கியேன்னு குளிக்க தானே டி சொல்றேன். இந்த ருத்ரன் பொறுமைய ரொம்ப சோதிச்சிப் பாக்குற நீ. இப்டியே நீ ஓவரா ஆட்டம் காட்டிட்டு இருந்த நிஜமாவே கதறக்கதற ரேப் பண்ணிடுவேன்"

ருத்ரனின் ஆங்கார குரலில் இதயம் நின்று துடிக்க, வேறு வழி இல்லாமல் குளியலறை ஓடிச் சென்றவளின் பின்னாலே அவனும் வேகமாக சென்று கதவடைத்து இருக்க, ஆக்...நெஞ்சம் திடுக்கேறி பயந்து பின்நகர்ந்த வேகத்தில் குழலியின் தோள்ப்பட்டை ஷவரின் திருகாணியை மேலே ஏற்றிவிட்டு இருந்ததில் ஜில் ஜில்லென்ற தண்ணீர் மழை தூறலாய் தூறி பெண் தேகத்தை நனைத்து இருந்ததில், பெண்ணின் உயர்கோபுர வனப்புகளை வளைவு நெளிவோடு காட்டி முரடனை பைத்தியமாக்கியது.

தலையில் இருந்து சொட்டும் நீர் பாவையின் முகத்தை நனைத்து நடுங்கும் உதட்டில் படிந்து மேலும் அந்த ஜீரா இதழை பளபளப்பாக மாற்றியதில், கண்கள் கிறங்கி மோகத்தில் சிவப்பேறிய பித்தனாக அவளை நோக்கி அடியெடுத்து வைக்க, குளிரும் அச்சமும் ஒருசேர பெண் தேகத்தை ஆட்டிப்படைத்து கோழிக்குஞ்சாக மூலையில் நடுங்கிக் கொண்டு நின்றவளை கண்டு திடீரென என்ன நினைத்தானோ!!

"சீக்கிரம் குளிச்சிட்டு வந்திடு குயிலுஊ.. இன்னைக்கு எனக்கு வயிறும் உடம்பும் சேர்த்தே பசிக்குது. விட்டா வயித்துக்கு முன்னாடி உடம்புக்கு தீனி எடுத்துடுவேன் போல அப்புறம் உனக்கு தான் கஸ்டம். ஒழுங்கா சொல் பேச்சை கேட்டு நடந்துக்கோ டி குயிலுஊ.."

நங்கையின் உப்பி சிவந்த கன்னத்தில் தட்டிட, நடுக்கமாக முகத்தை பின்னுக்கு இழுக்கவும் நக்கலாக பார்த்தவன் நீரோடை வழுக்கி சென்ற வழுக்கிடையில் நறுக்கென கிள்ளி விட்டு அங்கேயே பச்சக்கென முத்தம் கொடுத்து விட்டு அவன் வெளியேறி இருந்தான்.

கரெண்ட் ஷாக் அடித்ததை போல் உடல் விறைத்து நின்ற குழலி தன் நிலையை எண்ணி நொந்து கொண்டவளாக குளித்து முடித்துவிட்டு, அவன் கொடுத்து உடையை கண்டு கேவலோடு முகம் சுளித்தாள்.

கீழே அணிந்து கொள்ள ஃப்ரீல் வைத்த பாவாடையும், மேலே அணிய அவனது தொளத்தொள சட்டையும் கொடுத்து அவளை மேலும் சோதித்தான் ரவுடி.

குழலி எப்போதும் அதிகாலையில் அவள் வீட்டின் வாயிலை பெருக்கும் போது பாவாடை மீது வெங்கட்டின் சட்டையை போட்டுக் கொண்டு பெருக்குவதை பார்த்து கடுப்பாகி, தன் சட்டையை அவள் மேனியை அலங்கரித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் இவ்வாறு செய்திருக்க, விருப்பமே இல்லாமல் அவனை வெறுத்து போய் அந்த சட்டையை போட்டுக் கொண்டு வெளியே வந்தவளை இடைவிடாமல் அணைத்து, பனிக்கட்டி தேகம் கொண்டவளை ஆங்காங்கே உருண்டை பிடித்து விளையாடினான் முரட்டு ரவுடி.

அன்றில் இருந்து அவன் சொல்லும் முன்னே குளித்து காப்போர்டில் அவளுக்காக வாங்கி அடிக்கி வைத்த உடையில் கைக்கு கிட்டியதை போட்டுக்கொண்டு கடைமைக்கே என உண்டு அவன் படுத்தும் அவஸ்தையெல்லாம் தாங்க முடியாமல் தவித்து போகிறாள் மெல்லிய பாவை.

இதோ இப்போதும் அவள் வயிற்றை தான் மஞ்சமாக்கி தலை வைத்து படுத்து இருக்கிறான். வெறுமினே படுத்து இருந்தால் போதாதா அங்கு இல்லாத வேலையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறானே.

"குயிலுஊ.. ஏதாவது பேசு" ஃபிங்கர் சிப்ஸ் என நினைத்து வெண்டை விரலை மீசை மறைத்த அவன் உதட்டில் வைத்து வருடிக்கொடுத்து சட்டென வாய்க்குள் குதப்பிக்கொள்ள, அசௌகர்யமான அருவருப்பு உணர்ந்து குறுகிப் போனாள் குழலி.

விரலை விடுவிக்க முயன்று இழுத்து பார்க்க, கடி வைத்து வலிக்க வைத்ததில் முயற்சியை விடுத்து, அழுகை வெளிவராமல் இருக்க கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டவளை வயிற்றில் இருந்து தலை தூக்கிப் பார்த்தான் அவன்.

வந்த நாளில் இருந்து கொஞ்சமும் ஓய்வு கொடுக்காமல் பார்க்கும் போதெல்லாம் ஏதோ சுவிங்கம் போல் அந்த மென்னிதழை சுவைத்துக் குதறி வைத்திருக்க, உதடு முழுதும் வீங்கி ரத்தசிவப்பாகி இருந்தும் அந்த உதட்டின் மீதிருந்த மோகம் மட்டும் குறையவே இல்லை.

"அதை நான் கடிச்சி ருசி பாத்துக்குறேன், இப்ப உனக்கு பேச அவகாசம் கொடுத்திருக்கேன் பேசு டி" அவள் பற்களுக்கிடையே சிக்கி இருந்த உதட்டை இழுத்து செல்லக்கடி வைத்து ஒரு நீண்ட முத்தம் பருகி விட்டான் அவளிடம்.

"நீ சொன்னா நான் பேசணும்னா" என்ற கடுப்பில் வின்வின்னென்று வலித்த உதட்டை துடைத்துக் கொண்டு அவள் முகத்தை திருப்பிக் கொள்ள,

"உன் குரலை இடைவிடாம கேட்டுகிட்டே இருக்கனும் குயிலுஊ.. பேசு" திருப்பிய மதி முகத்தை அழுத்தமாக திருப்பினான் தன்னை பார்க்கும்படி.

"பேசு பேசுன்னா பிடிக்காதவாகிட்ட என்ன பேச சொல்றேள். நேக்கு உங்களையும் பிடிக்கலை உங்களோட பேசவும் பிடிக்கலை போதுமா.." குயில் பாட்டு கோவமாய் இசைக்க அதையும் சுரணை இல்லாது செவி இனிக்கக் கேட்டான் முரட்டு ரசிகன்.

"சரி அப்போ பாடு" அசால்ட்டாக சொல்லி அவள் வயிற்றில் புரண்டு தாடைக்கு கையால் முட்டுக்கொடுத்து கோவத்தில் சிவந்து துடித்த முகத்தை பார்த்தான்.

அவன் பாடு என்றதும் அதற்கு ஏற்ற சிச்சுவேஷன் பாடலாக அவளின் வேதனையான நிலையையும் மீறி மனதில் ஓடியது இந்த பாட்டு.

"குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி கூவ சொல்லுகிற உலகம்..
மயிலை புடிச்சி காலை ஒடைச்சி ஆட சொல்லுகிற உலகம்..
அது எப்படி பாடும் அய்யா..
அடி எப்படி ஆடும் அய்யா..
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.."

அதில் தன்னை நினைத்தே எரிச்சல் பட்டவள். "இந்த நிலைமைலையும் நோக்கு எப்டி டி மூளைல பாட்டு ஓடுது. முதல்ல இந்த கொலைகாரன் கிட்ட இருந்து எப்படியாவது தப்பிக்கப் பாரு குழலி" தன்னை தானே திட்டிக் கொண்டு யோசனையில் இருக்கும் போதே, வெளியே நீண்ட நேரமாக கத்திக்கொண்டிருந்த அப்பாவி ஜீவனின் குரல் கேட்டதும் கண்கள் பளிச்சிட்டது.

"உங்க தம்பி ரொம்ப நழியா வெளிய கூப்ட்டுட்டுருக்கா. போய்ட்டு என்னனு கேளுங்கோ" 'அப்டியே ஒழிஞ்சி போயிடுங்கோ' கடைசி வரியை மட்டும் மனதில் நினைத்தவளாய் கடுகடுத்தாள்.

"இப்ப என்ன மைத்துக்கு இந்த நாயி முக்கியமான நேரத்துல தொந்தரவு பண்றான். இன்னைக்கு இவனை ஒரேடியா முடிச்சி விட்டுடறேன்" பற்களைக் கடித்துக்கொண்டு மெத்தையில் இருந்து தாவி குதித்து அவன் எழுந்து செல்ல, எங்கே உண்மையாகவே மதனை கொன்று விடுவானோ என்ற அச்சத்தில் தானும் பதட்டமாக அவன் பின்னாடியே ஓடினாள்.

கதவை திறந்த வேகத்தில் துப்பாக்கி சரியாக மதனின் நெஞ்சை குத்திட்டு நிற்பதை கண்டு, ஐயோஓ..என்று அலறியவளை நிதானமாக திரும்பி பார்த்த ருத்ரனின் உதட்டில் கேலி சிரிப்பு.

குழலியை விட மதனின் முகம் அப்பட்டமாக வெளிறிய நிலையில், "உங்க வயித்துக்கு சாப்பாடு கொண்டு வந்த குற்றத்துக்காடா எனக்கு இந்த நிலை" உள்ளூர நினைத்து சாப்பாட்டு கூடையும், துப்பாக்கியும் ருத்ரனின் முகத்தையும் மாறி மாறி பாவமாக பார்த்தான்.

"அண்ணையா.. சுட்டுடாத அண்ணையா.. உனக்கும் வதினாக்கும் சாப்பாடு தான் கொண்டு வந்தேன். உன்ன தொந்தரவு பண்ண வரல அண்ணையா"

அப்பாவியாக அவன் சொல்லும் போதே மெல்ல நிமிர்ந்து பார்த்த குழலி ருத்ரனின் கேலி சிரிப்பை பார்த்து விட்டு கடுமையாக முறைத்தவளுக்கு அப்போது தான் விளங்கியது, மதனை கொல்லுவது போல் தன்னை அச்சுறுத்தி தன் பயத்தை கண்டு கேலி செய்கிறான் என்று.

குழலி முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே செல்வதை கண்டு சத்தமாக சிரித்தவன்,

"ஏன்டா கெலுப்ப அவதான் இந்த துப்பாக்கிக்கு புதுசு பயந்து சாகுறா. உனக்கு என்ன டா" கையை மடக்கி அவன் வயிற்றில் குத்து விட, உள்ளிருக்கும் உறுப்புகள் எல்லாம் ஆட்டம் கண்டது மதனுக்கு.

"நீ என்ன வேணாலும் சொல்லு அண்ணையா. வேற யார் இந்த துப்பாக்கிய நெஞ்சில வச்சாலும் எனக்கு பயமே வராது. ஆனா நீ அப்டி இல்ல, எப்ப உன் மூடு எப்டி மாறும்னு யாராலயும் கணிக்க முடியாது. பொட்டுனு கோவத்துல போட்டு தள்ளிட்டின்னா உன்ன என் அளவுக்கு யாரு அண்ணையா கவனமா பாத்துப்பா"

என்ற மதனை உணர்வுகள் தொலைத்த பார்வை வீசிவிட்டு, எதுவும் பேசாமல் சாப்பாடு கூடையோடு உள்ளே சென்று விட்டான் ருத்ரன்.

உள்ளிருக்கும் குழலிக்கும் மதன் பேசியது நன்றாக கேட்க செய்திருக்க, அதுவரை இருந்து கேலி முகம் மாறி ஏதோ யோசனையாக உள்ளே வந்தவனை இவளும் யோசனையாக பார்த்து வைத்தாள் குயிலு.

தொடரும்.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் தங்கங்களே!
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 22
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
New member
Messages
7
Reaction score
6
Points
3
Enada unoda morattu moonjiya ipdi avakita poi kamicha maami bayapadralono.. Avaaa verum thair sadham da Agni kanna...epo paaru meratiye Meena pudikira ne...oh sorry maami romba aacharam ...vera ena sollalam sari ipdi vechukalam kuyila koova solranu vechukalam...
 
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
Enada unoda morattu moonjiya ipdi avakita poi kamicha maami bayapadralono.. Avaaa verum thair sadham da Agni kanna...epo paaru meratiye Meena pudikira ne...oh sorry maami romba aacharam ...vera ena sollalam sari ipdi vechukalam kuyila koova solranu vechukalam...
Super dr
 
Top