• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
அத்தியாயம் - 23

"வெங்கட்டா, டாக்டர் என்னபா சொன்னாங்க அப்பாக்கு உடம்பு நன்னா இருக்கா வேற எதுவும் பிரச்சனை இல்லையே!"

மகளை காணாத கவலையும் கணவரின் உடல்நிலை குன்றிய கவலையும் ஒருசேர அன்னம் தண்ணீர் ஆகாரம் செல்லாது மனமுடைந்து போனாள் பரிமளம்.

"பயப்படற அளவுக்கு பிரச்சனை இல்ல ம்மா ஆனா சின்னதா ஆப்ரேசன் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டா"

தந்தையின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. ஆனாலும் அறுவை சிகிச்சை மூலம் சற்று காலம் உயிர் வாழலாம் என்று மருத்துவர் சொன்னதன் தீவிரத்தை மறைத்து முடிந்து மட்டும் இயல்பாக கூறி விட்டான்.

"ஐயோ பெருமாளே அவருக்கு ஆப்ரேசனா. சின்னதா காயம் பட்டா கூட அவர் தாங்கமாட்டாரே அவர் உடம்புலயா கத்தி வைக்கணும்" தளர்ந்து போய் சுவற்றில் சாய்ந்து நின்று அழுத அன்னையை சமாதானம் கூறி எப்படியோ டீயை அருந்த வைத்தான் வெங்கட்.

நல்லபடியாக பார்த்தசாரதிக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்க அவனது அலைபேசி வேறு தொடர்ந்து கதறிக்கொண்டிருந்தது காவல் நிலையத்தில் இருந்து.

"தங்கச்சி கல்யாணம்னு நாலு நாள் லீவ் கேட்டு ஊருக்கு போயிட்டு ரெண்டு வாரம் கடந்தும் டியூட்டிக்கு வராம என்ன பண்ணிட்டு இருக்கீங்க mr. வெங்கட்" அந்த பக்கம் மேலதிகாரி காட்டுக்கத்து கத்திட தலையை உளுக்கிக் கொண்டான் வெங்கட்.

"சாரி சார் வந்த இடத்துல ஒரு எமெர்ஜென்சி. அப்பாக்கு ஹார்ட் அட்டாக் சோ ஆப்ரேசன்.." அவனை முழுதாக கூட சொல்ல விடவில்லை அந்த பக்கம்.

"ஷட் அப்.. சின்னப் புள்ளத்தனமா காரணம் சொல்லாதீங்க வெங்கட். நாளைக்கு ஈவினிங் நடக்கப்போற மாநாடுல பாம் வைக்க போறதா இன்பார்ம் வந்திருக்கு. என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது நாளைக்கு நீங்க இங்க இருக்கனும். பாம் விஷயம் உண்மையா பொய்யானு நீங்க தான் இன்வெஸ்ட்க்கெட் பண்ணனும்"

டிஐஜி உறுதியாக உரைத்து விட்டு அழைப்பை துண்டித்திருக்க, இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எப்படி பெற்றோர் இருவரையும் தனியாக விட்டு செல்வது என புரியாமல் தலையில் கை வைத்துக்கொண்டான்.

"டேய் வெங்கட் எதுக்கு டா அவரசமா போன் போட்டு வர சொன்ன ஏதாவது முக்கியமான விஷயமா" காவல் நிலையத்தில் இருந்து அவசரமாக பைக்கிள் வந்தவன், ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு ஓடி வருவதற்குள் மூச்சி வாங்கியது ஜெய்க்கு.

"ஆமா மச்சா. நாளைக்கு நடக்க போற மாநாட்டுல பாம் வைக்க போறதா சீக்ரெட் தகவல் வந்திருக்கு. உடனடியா டிஜி என்ன வரசொல்லிட்டாரு. ஆனா.. அம்மா அப்பாவ இந்த நிலைல எப்டி தனியா விட்டு போறதுனு நினைச்சா தான் டா கவலையா இருக்கு" அவன் தயக்கமா நண்பன் முகம் பார்த்தான்.

"இதுக்கு ஏன் டா கவலை படர. அதான் நான் இங்க இருக்கேன்ல அம்மா அப்பா கூட இருந்து நான் வேண்டியதை பாத்துக்குறேன். நீ போய் வேலையப் பாரு. நாய் வேஷம் போட்டா குறைச்சி தானே ஆகனும். இந்த போலீஸ் வேலைல நம்மளோட சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமே இல்ல டா. அவனுங்க கூப்பிடற நேரத்துக்கு சொன்ன இடத்துக்கு ஓடி தான் ஆகணும்.

ஆனாலும் பிடிச்சி ஏற்றுக்கிட்ட வேலை. அதுக்கு நாமலும் டெடிகேஷனா இருக்கனும். அதான் அப்பாவுக்கு நல்லபடியா ஆப்ரேசன் முடிஞ்சிடுச்சில்ல நீ போய்ட்டு வா மச்சி நான் பாத்துக்குறேன்"

மீண்டும் அவனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக " நான் இருக்கிறேன்" என்று ஆறுதலாக சொன்ன ஜெய் அவன் கரம் பற்ற, இறுகி அணைத்துக் கொண்டான் நண்பனை.

பரிமளத்திடம் நிலைமையை எடுத்துக் கூறியதும், வேறு வழி இல்லை சென்று தானே ஆக வேண்டும் என்ற நிலையில் மகனை ஆந்திராவுக்கு வழியனுப்பி வைத்தவரின் மனதில் ஏதோ சொல்ல முடியா தவிப்பு, அவனை மீண்டும் அங்கு அனுப்பி வைத்ததில்.

நிம்மதி இல்லா பயணம். ஆனாலும் மனதினோரம் சிறு புள்ளியாக துளி மகிழ்ச்சி நீண்ட நாட்கள் கழித்து தன்னவளின் மதிமுகத்தை காணலாம் என்றதில்.

ஆனால் இங்கு காவேரியின் மனம் சுக்கலாகி அவன் கொடுத்த வார்த்தையின் ரணத்தால் வெங்கட்டை அவள் மனதில் இருந்து சிறுக சிறுக கட்டாயமாக வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் என்று பாவம் யார் அவனிடம் கூறுவது.

மதனின் பாட்டி மிகவும் தங்கமாக குணம் கொண்டவர். வயது எழுபதை தாண்டினாலும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் எண்ணம் மனதில் இருந்தாலும் உடல் ஒத்தொழைக்க வேண்டுமே!

மூட்டு வலி முதுகு வலி கை கால் நடுக்கம் என வயது முதிர்ந்த காரணத்தினால் தன் வேலையை செய்துகொள்ளவே சற்றே சிரமப்பட்டவருக்கு காவேரியின் வரவு சற்று அவர் சிரமத்தை குறைத்திருந்தாலும், தனிமையில் உழன்றவருக்கு நல்லதோர் பொழுதுபோக்காவும் இருந்தாள் காவேரி.

தன் தாத்தாவை தாண்டி பெரிதாக யாரிடமும் சகஜமாக பேசி பழக்கமில்லாதவளுக்கும், ராஜேஸ்வரி பாட்டியை மிகவும் பிடித்துப் போனது. என்ன ஒன்று பாஷை தான் இருவருக்குமிடையே சற்று தடுமாற்றமாய் இருந்திட, அதையும் தங்களின் செயல்களின் மூலம் ஓரளவுக்கு புரியவைத்து கொள்கின்றனர்.

"என்னமா கொஞ்ச நேரம் கூட உக்காராம பம்பரம் போல் சுழண்டு ஏதாவது வேலை பாத்துகிட்டே இருக்க. அது கெடக்கட்டும் வா வந்து உக்காந்து கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டு இரு"

அவள் செய்யும் வேலையை பார்த்து அவருக்கே கண்ணை கட்டிவிட்டிருக்க, தரையில் கை தட்டி தன்னோடு அமர சொன்னார் ரசஜேஸ்வரி பாட்டி.

"இந்த பூஜை சாமான்ல இருக்க தண்ணிய துணியால துடைச்சி வச்சிட்டு இதோ வரேன் பாட்டி" ஒரு கூடை பித்தளை பூஜை சாமானையும் பளபளப்பாக கழுவி அதில் உள்ள ஈரங்களை சுத்தமாக துடைத்து வைத்த பின்னரே கையோடு மஞ்சளை குழைத்துக் கொண்டு குங்குமத்தோடு பாட்டியின் அருகில் அமர்ந்தவள், துடைத்த பூஜை பொருட்களுக்கு மங்கள் குங்குமம் வைக்கத் துவங்கி விட்டாள்.

"நீ செய்ற ஒவ்வொரு வேலையும் நேர்த்தி. பாத்து பாத்து கவனமா செய்ற, சமையல் ருசி நாக்கை விட்டு நீங்க மறுக்குது. ராசாத்தி உன்ன கட்டிக்கிட்டு போற பைய ரொம்ப குடுத்து வச்சவன்"
காவேரியின் நேர்த்தியான வேலைகளை கவனமாக பார்த்தவறாக, அவள் தலை வருடி மனமார வாழ்த்தியவரை கண்டு விரக்தியாக சிரித்தாள் அவள்.

"ஏன் பாட்டி நீயவேற வெந்த புண்ணுல வேலப் பாச்சிக்குனு. என்னைய மாறி தீஞ்சி காஞ்சி கருத்தக் கருவாடா இருக்க ஒருத்திய யாருக்கு புடிக்கப் போவுது. தகுதிக்கு மீறி எதுவும் ஆசைப்பட கூடாதுனு இந்த ஊருக்கு வந்த பிறகுதே தெரிஞ்சிகிட்டேன் பாட்டி.

ஏதோ நானும் இந்த பூமியில பொறந்தேன் வளந்தேன் அம்புட்டுதே என் வாழ்க்க. அத்ததாண்டி எம்மனசுல வேற எந்த எண்ணமும் இல்ல. இந்த ஒடம்புல உசிரு இருக்க வரைக்கும் கிடைக்கிற எடத்துல பத்துபாத்திரம் கழுவி இந்த வைத்த நிரப்பிக்க வேண்டியதுதே"

பேசிக்கொண்டே பூஜை பொருளுக்கு பொட்டும் வைத்து முடித்து விட்டாள்.

"ஏன் கண்ணு உனக்கு என்ன வயசா ஆயிபோச்சி என்னவோ வாழ்க்கைய முழுசா வாழ்ந்து வெறுட்டவ மாறி விட்டேத்தியா பேசுற. இனிதான் உன் வாழ்க்கையே தொடங்க போகுது அதுக்குள்ள ஏன் இந்த அலுப்பு"

நொடித்துக் கொண்டு அவள் கன்னத்தில் செல்லமாக குமட்டியால் குத்த, பாட்டிக்காக வெளியே சிரித்து வைத்தாள் வேறெதுவும் பேசவிரும்பாதவளாய்.

ஸ்டேஷன் வந்த வெங்கட்டிற்கு தலைக்கு மேல் வேலை குவிந்து கிடந்தது. கொலை வெட்டு குத்து ரேப் கொல்லை என்று இது போதாதென்று பாம் விடயம் வேறு கொஞ்சமும் தரையில் கால் வைக்கக் கூட நேரம் இல்லாது வியர்த்து விருவிருக்க அலைந்து கொண்டிருப்பவனுக்கு உடலும் மனமும் சற்றே ஓய்வை தேடி அலைந்தன.

"சார் பாம் மேட்டர் உண்மை தான். சாயங்காலம் சிஎம் பேசப் போற மேடைக்கு மேல உள்ள சீலிங்ல ஓடற ஃபேன்ல பாம் வச்சி இருக்காங்களாம். சரியா மாநாடு தொடங்கி 6.10 க்கு எல்லாம் பாம் வெடிச்சி சிதறிடுமாம்"

இன்ஸ்பெக்டர் சிவராஜ் நிலைமையை எடுத்துக் கூறவும் அவசரமாக மணிக்கட்டை திருப்பி நேரத்தைப் பார்த்தான். மணி சரியாக ஆறு பத்தை நெருங்க இன்னும் 15 நிமிடங்களே உள்ள நிலையில் ஷூக் காலை அழுத்தமாக காலில் உதைத்துக் கொண்டவனாக, மின்னல் வேகத்தில் சாலையில் பறந்தான் மாநாடு நடக்கும் அரங்கம் நோக்கி.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 23
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
46
Reaction score
36
Points
18
Intha ruthran nallavana kettvana ji? Ipdi potu padutharan kuyila? Konjam illa venkat ah nallave vachu seiyanum .... Kaveri easy ah kidachuta avaloda mathipu theriuthu avanuku.... Avanukum sari Avan amma Avan family ke.... So nalla suththal la vittu tha ava kidaikanum.... Kuyila Ivan enna Panna poaranu theriyalaye? Ji next ud sekiram kudunga ji....
 
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
Intha ruthran nallavana kettvana ji? Ipdi potu padutharan kuyila? Konjam illa venkat ah nallave vachu seiyanum .... Kaveri easy ah kidachuta avaloda mathipu theriuthu avanuku.... Avanukum sari Avan amma Avan family ke.... So nalla suththal la vittu tha ava kidaikanum.... Kuyila Ivan enna Panna poaranu theriyalaye? Ji next ud sekiram kudunga ji....
Innaiku varum ji 😊
 
Top