• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

அத்தியாயம் 23

Administrator
Staff member
Messages
309
Reaction score
251
Points
63
அத்தியாயம் - 23

“சார் அவங்க பிழைச்சிட்டாங்க, இனிமே எந்த பிரச்சனையும் இல்ல. மயக்கம் தெளிஞ்சதும் டிஸ்டர்ப் பண்ணாம போய் பாருங்க," மருத்துவர் கூறி சென்ற விடயம் அங்கு குழுமி இருந்த அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி என்றால், ராமின் மனமோ சொல்லுன்னா உணர்வில் இதயம் சீராகி நிம்மதி பெருமூச்சு விட்டவனுக்கு இமையினோரம் வழிந்த நீர் துளியை தனது தோள்ப்பட்டையை தூக்கித் துடைத்துக் கொண்டு கண்மூடி ஆழ மூச்செடுத்தவன் சுவாசமெல்லாம் அவனது காதல் மனைவியே நிரம்பி வழிய, "தீஷு.. என்று மெல்ல முனுமுனுத்தன இதழ்கள்”.

உயிர் இருந்தும் தற்போது நேத்ராவின் சுயநினைவை இழந்த நிலையில், அப்போது தீஷா எத்தனை மாதங்கள் கண் விழிக்காமல் படுத்திருந்து அவனை சோதித்தாள் கொடுமையாக. இப்போது கண் விழிப்பாள், அப்போது கண் விழிப்பாள் தன்னவள் பழைய நிலைக்கு மீண்டு வந்ததும் முன்பை விட இன்னும் பாதுகாப்போடு அவளை மகிழ்ச்சியாக வைத்து மற்றவர்களை போல் தாங்களும் நிறைவான குடும்பமாக வாழ வேண்டும்” என்று பற்பல கனவுகளை கொண்டு ஒவ்வொரு நாளும் அவள் பாதத்தை கண்ணில் ஒற்றி முத்தமிட்டு ஆவலோடு நம்பிக்கையாக காத்திருந்தான். "ஆனால் அவன் நம்பிக்கை மொத்தமும் சிதறி வெடிக்கும் விதமாக நிரந்தரமாக அவள் கண் மூடி விட்டாள்” என்ற செய்தியில் மொத்தமாக உடைந்து செத்து துடித்தான் ஆண்மகன்.

இப்போதும் அவள் உயிருடன் இல்லை என்பதை நினைக்க முடியவில்லையே. அவன் மூச்சில் கலந்தவள் தீஷா. சுவாசத்திலும் அவள் வாசம். உயிர் முழுக்க அவள் மீதுள்ள நேசம். அவளோடு கொண்ட அவன் காதல், அவள் அவன் மீது காட்டிய அதீத காதல் மட்டுமே அவன் உடலையும் மூளையையும் ஆட்டிப் படைக்கிறது. அவளை தவிர்த்து வேறு எதுவும் யோசிக்க முடியாத அளவிற்கு தன் மனைவியைப் பற்றியே அனுதினமும் நினைத்துக் கொண்டு இருப்பவன், இந்த மூன்று நாட்களாக நேத்ரா கண் விழிக்காமல் ரத்தகிளறியாக படுத்திருந்த தோற்றம், இன்னும் அளவுக்கு அதிகமாக தீஷாவின் எண்ணத்தில் நெட்டித் தள்ளியது அவனை.

‘நீயும் இவள மாதிரியே என்ன ஏமாத்தாம பிழைச்சி இருந்தா இந்நேரம் நீ நான் நம்ம குட்டி யுவானு எவ்ளோ சந்தோசமான வாழ்க்கைய வாழ்ந்திருக்கலாம் தீஷா. ஏன் டி என்ன இப்டி தவிக்க விட்டு போன, சித்ரவதையா இருக்கு டி நீ இல்லாம.' இருக்கையில் அமர்ந்திருந்தவன் முகத்தை மூடிக் கொண்டு சத்தம் வராமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த காதல் கண்ணாளனை நெருங்க முடியாமல் துடிதுடித்து தவித்து கண்ணீர் விட்டது நிழலற்ற கொடிய உருவம்.

“ராம்.. ராம்.. நான் எங்கேயும் போகல உங்களோடவே தான் இருக்கேன், உங்கள நெருங்க முடியாத பாவியா உங்களையே சுத்தி சுத்தி வரேனே, உங்களால என்ன உணரவே முடியலயா." வேதனையாக ஒலித்த மர்மக் குரல் அழுகையில் உடைந்து, "எனக்கும் நீங்க இல்லாத நிம்மதியா இருக்க முடியல ராம் நீங்க படர அதே துன்பத்தை இம்மியும் குறையாம நரக வேதனைய அனுபவச்சிட்டு இருக்கேன். விதி வசத்தால பிரிய வேண்டிய நம்ம ரெண்டு பேரையும் சதி வசத்தால துடிக்க துடிக்க பிரிச்சிட்டாங்க ராம்ம்ம்.." ஆத்திரத்தில் குரூமாக கத்தியது.

"எனக்கு நீங்க வேணும் ராம். உங்க காதல் வேணும். உங்களோட நான் வாழ்ந்த அந்த சந்தோசமான வாழ்க்கை திரும்ப வேணும். அதுக்கு ரெண்டே வழி தான் இருக்கு, ஒண்ணு நான் உங்ககிட்ட வரணும் இல்ல நீங்க என்கிட்ட வரணும், இது ரெண்டுல எந்த வழிலயாவது உங்ககிட்ட வந்து என் பழைய வாழ்க்கைய நான் சந்தோசமா வாழனும். அதுக்கு யார் தடையா இருந்தாலும் ஒவ்வொருத்தரையும் கொடூரமா கொல்லுவேன்ன்ன்.." மெல்லிய அமைதியான குரல், மெல்ல மெல்ல நெஞ்சை அதிர வைக்கும் கொடிய உருமளாக மாறி அழுகையோடு சுற்றி சுற்றி வந்தது ராமை.

வர்மன் அவன் குட்டி பனியை மடியில் வைத்துக் கொண்டு ராமின் அருகில் அமர்ந்திருக்க. "பனி.. அதான் நேத்ராக்கு ஒன்னும் இல்லனு டாக்டர் சொல்லிட்டாங்களே, நானும் ராமும் அவளை பாத்துக்குறோம். நீயும் வர்மனும் குழந்தைங்களை கூட்டிட்டு வீட்டுக்கு போமா, சரியா சாப்பாடு தூக்கம் இல்லாம உன் முகமெல்லாம் உள்ள போயிடுச்சி பாரு” என்ற பத்மா தனது முந்தானையால் அவள் முகத்தை துடைத்து விட்டு, ஒன்றும் பாதியுமாய் முகத்தில் விழுந்த முடிகளை காதோரம் அக்கறையாக ஒதுக்கி விட்டார்.

“இல்ல அத்தை, நீங்களும் மாமாவும் வீட்டுக்கு போயிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. இங்கேயே இருந்தா மாமா அக்கா நினைப்பாவே இருப்பாரு. பாவம் அவரும் தொடர்ந்து எத்தனை பிரச்சனைகளை தான் சமாளிப்பாரு. என்ன பத்தி கவலை படாதீங்க. அதான் எங்கூட வரு இருக்காரே. அவர் பத்துப்பாரு நீங்க மாமாவ கூட்டிட்டு போங்க” எனும் போதே, ப்.ப்பா.. அ.ப்பா.. என ஓரமாக முகத்தை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த ராமை மழலை குரலால் அழைத்து அவனிடம் எகுறிதாவ நெளிந்துக் கொண்டிருந்த யுவாவை 'கண்ணா அமைதியா இரு அப்பாக்கிட்ட அப்புறமா போகலாம்' என பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

செல்லமகனின் ஏக்கமான அழைப்புக் குரல் கூட அவன் செப்பறையை எட்டவில்லை. மகனை பெற்றவளை உள்ளம் மறுக நினைத்துக் கொண்டிருந்தமையால்.

“பாரு பனி இதுக்கு தான் சொல்றேன். புள்ளய அவன் அப்பா சரியா தூக்காம, கொஞ்சாம எப்டி அவனையே ஏக்கமா பாத்து கைய தூக்கிட்டு இருக்குனு. அவன் இப்ப இருக்க நிலைல எதையும் கண்டுக்க மாட்டாமா. இங்கேயே இருந்தா உன்னாலயும் இவனை அடக்க முடியாது. நேத்து கூட இவன் தூக்கலனு எப்டி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணான். நீ வர்மனோட வீட்டுக்கு போ நான் பாத்துக்குறேன்." பத்மா உறுதியாக சொல்லவும் வேறு வழியின்றி, "சரி அத்தை நேத்ரா கண் முழிச்சதும் அவளை ஒரு எட்டு பாத்துட்டு போறேன். இல்லனா எனக்கு தலையே வெடிச்சிடும்” என்றிட. அதற்கு மேலும் மறுப்பு கூறாமல் சரி என்றார் பத்மா.

இருவரது சம்பாஷனைகளை இறுக்கமான நிலையில் கண்ட நரேன் தன் தாயைப் பார்க்க, ஓரமாக நின்று icu அறையையே தவிப்பாக எட்டி எட்டி பாவமாக பார்த்திருந்தவரை கண்டு என்ன நினைத்தானோ. விறுவிறுவென வெளியேறிவன் சிறிது நேரத்திலேயே கையில் கப்போடு வந்து அவர் முன்னால் நின்றவனை புரியாமல் பார்த்தார் குணவதி.

“இந்தாங்க, காலைல இருந்து ஒண்ணுமே சாப்பிடாம இருக்கீங்க, இந்த டீய குடிங்க." இயந்திரக் குரலில் உரைத்தபடி தன் முன்னால் இருந்த மகனை, கண்களை அகல விரித்து அதிசயமாக கண்ட தாயின் விழிகளை கண்டும் காணாததை போல் டீயை நீட்டியபடி இரும்பாக நின்றான் அவன்.

இரண்டு குழந்தைகளையும் பெற்றதோடு சரி, ஆசைதீர குழந்தைகளை மார்போடு அணைத்துக் கொஞ்ச கூட நேரம் குடுத்ததில்லை பரமானந்தம். முதலில் பிறந்த நரேனையாவது அவனுக்கு ஓரளவு கருத்து தெரிந்து ஒரு 5 ஆண்டுகள் வரை தன்னோடு வைத்துக் கொள்ள முடிந்தது, எப்போது நேத்ரா பிறந்தாளோ அப்போது பரமுவின் உண்மை முகம் வெளிவந்து, கொஞ்சம் கூட மனதில் ஈரமின்றி குழந்தைக்கு அமுது பருகும் பச்சை உடம்புக்காரியிடம் இருந்து ஆறு மாதத்தில் இரண்டு குழந்தைகளும் கொடூரமாக பறிக்கப்பட்டது.

“அம்மா என்ற ஒருத்தி பெரும்பாவம் செய்தவள்” என்பது போலவே பிள்ளைகளை அவரிடம் அணுக விடாமல், தான் மட்டுமே ஒசத்தி என அவர்களின் மனதில் பதிய வைத்து, தன்னிடம் படுக்கையை பகிர்ந்து கொள்ள வரும் இன்பராணிகளிடம் பிள்ளைகளை கொடுத்து வளர்த்து, பெற்றவளின் வயிற்றை எரிய வைத்து வேலைக்காரியை விட மோசமான நிலையில் இப்போது வரை வைத்திருக்கிறார்.

குணவதியோ பிறந்தது முதலே வாய்யில்லாத அப்பிராணி. சிறுவயது முதல் தந்தையின் ஆணாத்திக்த்தில் வளர்ந்தவர். “பெண் பிள்ளைக்கு படிப்பு எதற்கு” என்று மழைக்கு கூட பள்ளியின் அருகில் ஒதுங்க விட்டதில்லை. பிறகு எப்படி பரமுவுடன் காதல் கல்யாணம்? குணவதியின் தந்தை அப்போதே பெரிய அரசியல்வாதி அவரிடம் பஞ்சம் பிழைக்க தொண்டு பணிக்கு சேர்ந்தவர் பரமு. காலப்போக்கில் அவருக்கு சகலமும் ஆனவர், பின் குணவதியை தன் காதல் வளையில் விழ செய்து திருமணம் முடித்துக் கொண்டவர். அவரின் தந்தை இறப்பிற்கு பின் அந்த இடத்தை இவர் எடுத்துக் கொண்டு, இப்போது ஆள்பலம் பணபலம் என்று மந்திரியாகி பெரிய செல்வாக்கில் இருக்கிறார்.

“கண்முன்னே நடக்கும் அநியாயங்களை கூட தட்டிக் கேட்ட முடியாத கோழையாக தன் வீட்டிலேயே ஒரு ஓரத்தில் அபலையாய் வாழ்ந்துக் கொண்டு இருக்கும், குணவதியை கண்டு கொள்ள இருவரையிலுமே யாரும் இருந்ததில்லை. இப்போது திடிரென தன் முன்னால் தான் பெற்ற மகன், முதன் முறையாக தன்னைப் பற்றி யோசித்து டீ வாங்கி வந்து தன்னைக் குடி” என்றதில் உள்ளுக்குள் பரவிய பரவசத்தில் அடிவயிறு குளிர்ந்த உணர்வு.

“தம்பி.. உண்மையாவே நீதான் இந்த அம்மாவ பத்தி யோசிச்சி இத வாங்கிட்டு வந்தியா." மகள் படுக்கையில் கிடப்பதை கூட மறந்தவறாக கலங்கிய கண்களோடு சிறுபிள்ளைக்கு மிட்டாய் வாங்கி வந்தாள் கண்கள் பளபளத்து மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பதை போல், இந்த தாயின் மனமும் குதூகளித்து சிறுமியாக முகம் மலர்ந்த அன்னையைக் கண்டு தொண்டைக் குழியில் பெரிய சைஸ் இரும்பு உருண்டையாக கடினப்பட்டு எச்சில் விழிங்கி உணர்வுகளை வெளிக்காட்டாத கல்லில் வடித்த சிற்பமாக இறுகி நின்றான் நரேன்.

“மச்.. வேணும்னா குடிங்க இல்லனா விடுங்க. ஏன் தேவை இல்லாத ஓவர் எக்ஸ்பிரஷன் கொடுத்து இருக்க டென்ஷன்ல நீங்க வேற இரிடேட் பண்றீங்க. குடிக்கிறீங்களா இல்ல குப்பை தொட்டில வீசிட்டு போகவா" கோவத்தில் சிடுசிடுத்தவன் மீண்டும் மீண்டும் ஒரே பிடியாக நின்ற விடயம் அவன் வாங்கி வந்த தேநீரை அவன் அன்னை பருக வேண்டும் என்பதிலேயே பிடிவாதமாக தொக்கி நின்றது.

மலர்ந்த முகம் மகனின் சுடு சொர்களில் மீண்டும் வாடிப் போனாலும், மனித உடலை ஆக்கிரமிக்கும் கண்ணுக்கு தெரியாத நுண்ணிய செல்களை போல், மகனின் கடுமையிலும் கடுகளவு ஒளிந்திருந்த அக்கறையோ அன்பையோ மௌனமாக அவன் கையில் இருந்த டீயை வாங்கி தலை குனிந்து பருகியவரின் அடிமனம் உணர செய்தாலும், முகமோ ஏமாற்றத்தில் கன்றி விட்டது.

“நரேன் அவன் அன்னையிடம் நடந்துக் கொண்ட விதத்தை ராம் குடும்பத்தினர் வித்தியாசமாக பார்த்து வைத்தனர்”.

கயல் விழிகள் இரண்ரையும் இத்தனை நேரமும் பாதுகாத்த வைத்திருந்த இமைகுடைகள் இரண்டும் படபடப்பாக விரிய, தன் அருகில் தன் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்மூடி அமர்ந்திருந்த ராமை, அத்தனை ரணத்திலும் கர்வமாக கண்டு புன்னகைத்தாள் நேத்ரா.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 23
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top