• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
அத்தியாயம் - 25

தான் நிற்கும் கோலம் என்னதென உணர்ந்து அதிர்ந்த நொடி, மின்னல் வேகத்தில் செயல்பட்டு மெத்தை விரிப்பில் தன்னை புகுத்திக்கொண்டவளாய், காமபோதை ஏறிய பழுப்பும் சிவப்பும் கலந்த விழிகளால் தன்னை கொன்று தின்னும் பார்வையோடு தன் எதிரில் பெரிய தோற்றதுடன் நின்ற ருத்ரனை இதயம் நடுங்க கண்ணீருடன் பார்த்தாள் குழலி.

"கிட்ட வா குயிலுஊ.. நீ சொன்னதை உண்மையாக்கணும்" விடாக்கண்ணனாய் அவளை நெருங்கி வர,

"இல்லை.. வேணாம்.. விட்டுடுங்கோ.. ஏதோ ஒரு வ்.வே..கத்துல த்.தெரியாம சொல்லிட்டேன்" நடு தொண்டையில் வின்வின்னென்று பெரிதாக வலி எடுக்க பேச முடியாமல் திணறிவளிடம் கோணல் சிரிப்போடு நெருங்கினான்.

"இல்ல குயிலு நீ சொன்னதுக்கு பிறகு தான் இந்த மரமண்டைக்கு புரிஞ்சிது கல்யாணம் ஆன புது பொண்டாட்டிய ஏங்க விடறது எவ்வளவு பெரிய தப்புனு. தாலி கட்டின அன்னைக்கு முதல் ராத்திரி கொண்டாடி இருக்கனும் நான் தான் நாள்கடத்தி தப்பு பண்ணிட்டேன்"

மீசையில் ஒளிந்து கிடந்த பட்டை உதட்டை அப்பாவி போல் பிதுக்கியவனை பீதியோடு கண்டாள் குயிலு.

"ஏற்கனவே நிறைய கொலைகளை செய்து தலைக்கு மேல பாவத்தை சுமந்துகிட்டு இருக்கேள். இப்ப என்னை கலங்கடிச்சி பெண் பாவத்தையும் கூட சேர்த்துக்காதேள் ப்ளீஸ்" கைகள் நடுங்க ஒன்று கூப்பி கெஞ்சியவளை கண்டு ஹா..ஹா..ஹா.. சத்தம் போட்டு சிரித்தான் ருத்ரன்.

"எது பாவத்தை சுமக்குறேனா.. ஏன் டி ரொமான்ஸ் பண்ண வேண்டிய நேரத்துல பாவ புண்ணியத்தை பற்றி பாடம் எடுத்து காமெடி பண்ணிட்டு இருக்க. சரி சரி டைம் ஆகுது சீக்கிரம் வா வேலைய முடிச்சிட்டு சாப்பிடணும்"

எதற்கும் அசராமல் மெத்தை விரிப்பில் மறைந்து நின்றவளின் கழுத்தில் முகம் புதைந்தான்.

"நீங்க உங்க மனசுல என்ன நினைச்சி என் கழுத்துல தாலி கட்டினேள்" நாவின் தீண்டல் குழைய பெண் கழுத்தில் அதிதீவிரமாக வாசம் செய்தவனிடம் கேவலோடு கேள்வி எழுப்பினாள்.

"என் மனசுல நினைக்கிறதை எல்லாம் உன்கிட்ட வெளிப்படையா சொன்னா, இந்த போர்வைய உம்மேல இருந்து தூக்கி எறிஞ்சிட்டு எந்த தயக்கமும் இல்லாம இந்த நிமிஷமே நீயா எங்கூட படுத்து என் பிள்ளைய உன் வயித்துல சுமக்க ரெடியா இருக்கியா? சொல்லு எல்லாத்தையும் சொல்றேன்"

அவளின் மிரண்ட விழிகளை நேருக்கு நேர் நிமிர்வாக பார்த்து இறுகிய முகபாவனையோடு தீர்க்கமாக உரைத்தவனை, கலங்கிய கருமணிகள் உருல உதடு துடிக்கும் தவிப்போடு பதிலின்றி பார்த்த பெண்ணை ஏளன சிரிப்போடு விட்டு மெதுவாக விலகினான்.

"உன்னால முடியாது குயிலுஊ.. ஏன்னா உன்ன பொறுத்த வரைக்கும் நான் ஒரு கொலைகாரன், ரவுடி மட்டும் தான். ஆமா நான் ரவுடிதான் அப்டியே இருந்துட்டு போறேன். எவளுக்காகவும் என்னால கத்தி துப்பாக்கிய கைல எடுக்காம நல்லவனா மாற முடியாது மாறவும் மாட்டேன். என் மனசுல உள்ளது இதுதான், சொல்லிட்டேன் போதுமா.." கழுத்தின் நரம்பு புடைக்க அறை அதிர அவன் கத்த மழையில் நனைந்த கோழிக்குஞ்சியாக வெடவெடுத்துப் போனாள் குழலி.

"எனக்காக ஒன்னும் நீ மாற வேண்டாம் டி. நானும் கடைசி வரைக்கும் இப்டி தான் இருப்பேன். உன் உடம்பு தான் என் டார்கெட்னா இந்த தாலி கடத்தல் இதெல்லாம் பண்ணனும்னு எனக்கு அவசியமே இல்ல. என்னைக்கோ உன்ன புசிச்சி தூக்கி போட்டு போயிட்டே இருந்திருப்பேன்.

உடம்புக்கு தேவைனா காசுக்கு வர பொம்பளைங்க கிட்ட போகாதவன் இல்ல. ஆனாலும் அவளுங்ககிட்ட எல்லாம் கிடைக்காத ஏதோ ஒன்னு உன்னோட குரலை கேட்டாலே என்னோட ஜென்மம் முழுமையடைஞ்ச திருப்தி கிடைக்குது.

இதையெல்லாம் தாண்டி உன்கிட்ட வந்தா ஏதோ ஒரு அமைதி. எனக்கு உன்கிட்ட தேவையானது முத்தத்ததை தாண்டி வேற ஒன்னும் இல்ல. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த உடம்புல உசுரு தங்கும்னு தெரியாது அதுவரைக்கும் என்கூட நீ இருக்கனும்.

அதைவிட்டு சும்மா அம்மாவ பாக்கணும் அண்ணனை பாக்கணும்னு சொன்னதையே சொல்லி நையாநையானு அழுது வடிஞ்சிட்டு இருந்த, அந்த போலீஸ்காரன் கழுத்தை ஒரே சீவுல சீவி போட்டுடுவேன்.

புரிஞ்சிதா.." ரவுத்திரக்குரலில் மிரண்டு அவசரமாக ம்ம்.. என தலையாட்டிய கோதையை அழுத்தமாக பார்த்து

"உனக்கு புடிக்குதோ இல்லையோ கட்டாயம் நீ எங்கூட தான் இருக்கனும். என் உயிர் என்னைக்கு என் கூட்டை விட்டு பிரியிதோ அன்னைக்கு நீ என்னை விட்டு தாராளமா போகலாம். யாரும் அன்னைக்கு உனக்கு தடை இல்ல"

ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக அலைப்புறளும் அவளின் கோலிகுண்டு விழிகளை பார்த்தபடியே சொன்னவன், மின்னல் வேகத்தில் அவள் நெஞ்சை முட்டி நிற்கவும் அச்சத்தில் தேகம் உதறியவளின் இதழை அசந்த நேரம் வன்மையாக முற்றுகையிட்டு பெண்ணவளின் இதயத்துடிப்பை எகிற வைத்திருந்தான்.

நெடிய இதழ் முத்தம் அவனுக்கு மட்டும் மாதுளை முத்துக்களாய் தித்திக்க, குழலிக்கோ அவன் சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடி கண்டறிய முடியாமல் திகைத்து நின்றவளின் கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.

சிறையில் சிக்கிய கைதியின் நிலையை விட தன்நிலை மிக மோசம் என்பதை உளமார உணர்ந்தாள்.

குடும்ப சூழ்நிலைக்கு கொலை செய்வதை கேள்வி பட்டு இருக்கிறாள் இப்போது தான் முதல் முறையாக பொழுது பொழுது போக்கிற்காக கொலை செய்து ஜாலி செய்பவனை நேரிலேயே பார்க்கிறாள். அதுவும் தனக்கு விருப்பம் இல்லா தாலி கட்டியவன் உருவத்தில்.

குயிலின் சீனிமிட்டாய் உதட்டில் முத்தமிட்டபடியே அவள் அறியாது விலகி தரையில் விழுந்திருந்த மெத்தை உரையை காலால் எட்டி எறிந்தவன், முதுகின் பின்னே கழண்டு தொங்கிக்கொண்டிருந்த மெரூன் நிற மார்புக்கச்சையின் கொக்கியினை பூ போல பூட்டிவிட்டவனாக, அவளின் முன்பக்கத்தில் எஞ்சி இருந்த மீதி சட்டையை பெண்ணை அதிர வைத்து பிடுங்கி வீசி, ஆங்கரில் தொங்கிக்கொண்டிருந்த அவனது மேற்சட்டையை எடுத்து அவள் தோளோடு போர்த்தி முதத்தத்தை முடித்துக்கொண்ட ருத்ரன் விலகி சென்று உணவு உண்பதில் கவனமாகி விட்டான்.

அவன் தந்த முத்தத்திலே அதிர்ந்து போனவள், தற்போது அவன் செய்து விட்டு போன காரியத்தில் திக்பிரம்மை பிடித்ததை போல் நின்றிருந்த குழலி, சன்னலின் வழியே வீசிய அதீத குளுங்காற்றில் தோளில் போர்த்திய சட்டை நழுவி செல்வதை உணர்ந்து, சட்டென இழுத்து இறுக்கிப் பிடித்துக்கொண்டவளாய் அவசரமாய் சட்டை பொத்தான்களை பூட்டிவிட்டு நிமிர்ந்து பார்க்க, நக்கல் சிரிப்போடு அவளை தான் உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்தான் ருத்ரன்.

"இப்போதைக்கு முத்தம் மட்டும் போதும் சொல்லி இருக்கேன்தான், அதுக்காக எப்பவும் அதே எண்ணத்தோட இருப்பேன்னு நினைக்காத. உன்னோட ஒவ்வொரு அசைவும் என்னை போதை ஏத்துது, ரொம்பவே கஷ்டப்பட்டு அடக்கிட்டு இருக்கேன். என்னைக்கு கண்ட்ரோல் இல்லாம எல்லை மீருதோ அன்னைக்கு நீ எனக்கு தீனி"

நக்கலாக சொல்லிட, அவன் மீது பயம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை ஒதுக்கித்தள்ளி முறைத்து பார்த்தாள் குழலி.

"மசமசன்னு முறைச்சி நிக்காம வந்து உக்காந்து சாப்ட்டு உடம்பை இந்த ரவுடி பாவாக்கு ஏத்த மாதிரி தேத்து. மேல மட்டும் வக்கனையா வளத்து வச்சிருக்க வேற எங்கேயும் ஒன்னுதுத்தையும் காணல, கைக்கு கிரிப்பே கிடைக்க மாட்டுது"

சட்டைக்கு மேலே துருத்தி நின்ற இரட்டை அள்ளியில் கண் பதித்து ஒரு மார்க்கமாக சொல்லிட தேகம் கூசிய நிலையில் வேண்டா வெறுப்பாக உணவை உண்ணப் போக, அதையாவது நிம்மதியாக உண்ண விட்டானா கேடி,

தளிர் விரல்களில் உணவை அள்ளி அவளின் முத்து வாயில் வைத்தது தான் தாமதம், அவள் திமிரத் திமிர இதழ் வழி உணவு பரிமாற்றத்தை செய்ய தொடங்கி விட்டான்.

** ** **

இத்தனை நாளும் கிட்டாத நிம்மதி தன்னவளின் அருகாமையில் கண்கள் மூடி லைத்துக் கிடந்த வெங்கட் உணர்ச்சி வசத்தில், மங்கையின் வயிற்றில் அழுத்தம் கொடுத்து இழுத்து அவனது அடிவயிற்றில் பதுக்கிக்கொண்டதும், ஏதோ வித்தியாசமான உணர்வில் உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண்விழித்த காவேரி அவள் வயிற்றில் பாம்பு போல் சுற்றி இருந்த ஆண் கரத்தை கண்டு பயத்தில் கத்தி அலறப் போனவளின் வாயை சட்டென சுதாரித்து பொத்தி இருந்தான் வெங்கட்.

"ஷ்.. பயப்படாத டி கட்டச்சி நான்தான் வெங்கட்" சூடான எச்சில் படிந்த மூச்சிக் காற்று அவள் பின்கழுத்தில் மோத ரகசியக் குரலில் கிசுகிசுத்தவனை, அதிர்ச்சி குறையாமல் கண்களை உருட்டி மெதுவாக திரும்பி பார்த்தாள் காவேரி.

"நீயலா.. இ.இங்க எப்டி" ஒற்றை படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த பாட்டியை தலைத்தூக்கிப் பார்த்து தானும் வார்த்தை வராமல் கிசுகிசுப்பாக கேட்டாள்.

"உன்ன பாக்க தான் வந்தேன் டி. ஓவர் ஸ்ட்ரெஸ் தனியா இருக்க மூச்சி முட்டுது. என் மனக்குமுறலை எல்லாம் யார்கிட்டயாவது கொட்டணும் போல இருந்துச்சி. அதான் உன்ன தேடி வந்துட்டேன், ப்ளீஸ் கொஞ்ச நேரம் மட்டும் இப்டியே உன்ன கட்டிக்கிட்டு படுக்க விடு காவேரி"

எப்போதும் அவளிடம் மட்டும் திமிராக வெளிப்படும் பேச்சில் இன்று கெஞ்சலும் கவலையுமாக அவள் அருகாமைக்கு ஏங்கி பாவமாக மன்றாடியவனின் முகத்தை, அந்த சிறிய மின்விளக்கு வெளிச்சத்தில் கண்டு பெண் உள்ளம் கனிந்ததென்னவோ உண்மை.

ஆனால் இங்கு இப்படி அதுவும் இத்தனை நெருக்கமாக பாட்டி திடீரென விழித்துக் கொண்டால் என்ன நினைப்பார் என்ற பதற்றத்தில், அவனை விளக்கித் தள்ளவும் முடியாமல் அணைத்துக்கொள்ளவும் முடியாமல் தவித்துப் போனாள் காவேரி.

அதிலும் இந்த சோகத்திலும், அடங்காமல் சீறி எழுந்த நல்லப்பாம்பு ஒன்று அவனையும் அறியாமல் படமெடுத்து ஆடி, பெண்ணவளின் இடைக்கு கீழ் சீண்டி திம்ஸுகட்டை தேகம் ஆட்டம் கண்டு போனது.

"அதுக்காண்டி இப்டிதே அடுத்தவைங்க வீட்டுக்குள்ள திருட்டுத்தனமா பூந்து வயசு பொண்ணு பக்கத்துல படுத்து அராஜகம் பண்ணுவீயலா. ஒழுங்கா எந்திரிச்சி வெளிய போங்க. பாட்டி பாத்தா அசிங்கமா போவும்"

அவன் மீதுள்ள கோபம் தலைதூக்க, அவனது உடன்பிறந்தவன் செய்யும் அட்டகாசம் தாங்காது அவஸ்தையாய் அவசரமாக மொழிந்தவளை வெற்று பார்வை பார்த்தவன், இங்கு எதுவும் பேசி புரியவைக்க முடியாதென்பதை உணர்ந்து, ஆழ்ந்த மூச்செடுத்து, ஆளையே அல்லேக்காக தூக்கிக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

"ஐயோ என்ன பண்றீய. யாராவது பாத்தா என்னையதே கேவலமா பேசுவாங்க. இதுவரைக்கு ந்நாபட்ட அசிங்கமெல்லாம் போதாதா. எதுக்காக இங்கேயும் வந்து இருக்க கொஞ்சநஞ்ச நிம்மதியும் கெடுக்க பாக்குறீய"

பதறிக்கொண்டு அவன் கையில் இருந்து துள்ளி இறங்கிய காவேரி, கலங்கிய கண்களோடு தெருமுக்கில் சுவற்றின் பின்னே இருந்த இருட்டிய மறைவிடத்தை சுற்றியும் பார்த்துவிட்டு, தன் முன்னே இடுப்பில் கை வைத்து நின்று தன்னையே குறுகுறுவென பார்த்திருந்த வெங்கட்டை முறைத்தாள் காவேரி.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 25
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
46
Reaction score
36
Points
18
Dei venkatu ithellam romba over da ...ranakalathulaiyum unaku oru kilukilupu kekuthu....... Ji sathiyama solren ruthran oru puriatha pithir ji.... Unmaiyile Ivan rowdy thana? Enaku doubt ah ve iruku...ji
Ithe mari daily oru ud kuduthudunga ji... eagerly waiting....
 
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
Dei venkatu ithellam romba over da ...ranakalathulaiyum unaku oru kilukilupu kekuthu....... Ji sathiyama solren ruthran oru puriatha pithir ji.... Unmaiyile Ivan rowdy thana? Enaku doubt ah ve iruku...ji
Ithe mari daily oru ud kuduthudunga ji... eagerly waiting....
Innaiku mattum leave ji. Nalaiku vanthidum thalaivali konjam 😊
 
Top