• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
அத்தியாயம் - 26

வந்ததில் இருந்து எதுவும் பேசாமல் தன்னையே குறுகுறுப்பாக பார்க்கும் அவனது பார்வையில் அசோகர்யமாக உணர்ந்த காவேரி அங்கிருந்து வீட்டிற்கு ஓடப் பார்க்க, அசைய முடியாத அளவுக்கு ஹைட்ராலிக் மெஷினில் நசுங்குவதை போல வெங்கட்டின் இறுகிய அணைப்பில் தேகம் நடுங்கிப் போனாள்.

ஏதாவது பேசலாம் என நினைத்தால் முதலில் மூச்சுக் காற்றை சீராக சுவாசிக்க வேண்டுமே. காவல்க்காரன் கையில் வெற்றிலையாக மடிந்து நின்றாள் காவேரி.

"கொஞ்ச நேரம் எதுவும் பேசாம அப்டியே நில்லு காவேரி. உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் ப்ளீஸ்" சுவாசம் தகிக்கும் ஆண் குரல் பெண் காதில் கெஞ்ச அவள் பஞ்சி கழுத்தில் புதைந்தான் வெங்கட்.

அவன் கட்டிப்பிடித்து நிற்பதே அவள் மூளையை மழுங்கடித்து இருக்க, வெங்கட்டின் இத்தகைய ஏக்கம் நிறைந்த பேச்சில் தவிப்பாக நெஞ்சி உருகிக் கரைந்தன.

"எ.என்னாச்சி.. எதாவது பிரச்சனையா?" சில கணங்கள் கழித்து மென்மையாக கேட்டிருந்தாள்.

"ம்.. தங்கைய காணல, அப்பாவுக்கு ஆப்ரேசன், வேலை பிரஷர் அம்மாவ தனியா விட்டு வந்துட்டேன். மூச்சி விட முடியலை டி. அதா உன்னத் தேடி வந்தேன்"

அவள் கழுத்து வளைவில் இருந்து முகத்தை விளக்காது நடந்தவற்றை சுருக்கமாக சொல்லிட, அவன் வீட்டில் நடந்த அசம்பாவிதங்களை எண்ணி வருத்தம் கொண்டாலும், அப்போது கூட தன்னைப் பற்றியும் தன் உணர்வுகளை பற்றியும் அவன் யோசிக்கவே இல்லையே என்ற விரக்தி தான் இதயத்தில் பரவியது.

"சரி எல்லாம் சரியாகிடும். நீய உங்க வீட்டுக்கு போங்க இப்பவே நடுசாமம் அச்சு" அவனிடமிருந்து விலகப்பார்க்க மேலும் அணைப்பு இறுகியதும் தவிப்பாகியது அவள் தான்.

"எதுக்கு டி யாரோ மாதிரி பேசுற" அவளது மரியாதை பேச்சில் அந்நியம் உணர்ந்தான் போலும்.

"ஆமா நீய எனக்கு யாரோ தான். முதல்ல என்னைய விடுங்க யாராவது பாத்துட்டா எனக்குதே அசிங்கம். இந்த தெருவுல என்னால தலைகாட்ட முடியாது" அவன் கை வளைவில் நிற்க பிடிக்காமல் துள்ளியவளை, சிம்மண்ட்டால் பூசாத சுவற்றில் சாய்த்து நிறுத்தி ஒருகையால் சுவற்றில் ஊனி அணை போட்டவன், இன்னொரு கையால் சதைப்பற்றான பெண்இடையை நசுக்கிப் பிடித்தான்.

"என்ன டி ஓவரா துள்ளுற. ஏதோ மனசுக்கு கஸ்டமா இருக்கேன்னு உன்கிட்ட ஆறுதல் தேடி வந்தா என்னவோ உன்ன நான் ரேப் பண்ண வந்த மாதிரியே அசிங்கம் அசிங்கம்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்ற. எனக்கு ஒன்னும் அப்டியான கேவல புத்தி இல்ல"

அதுவரை இருந்த இலகுதன்மை மறைந்து, அவளது ஒதுக்கலில் பாம்பாக சீறியவனை கண்டு எதையோ எண்ணி கோவமாக முறைத்தாள் காவேரி.

"பொம்பள புள்ள ஒரு ஆண்கிட்ட ஆறுதல் தேடி வந்தா உடம்பு சுகத்துக்கு வந்துட்டியானு வாய் கூசாம கேக்குறது. அவ வளர்ப்பு சரிஇல்லனு அவமானப் படுத்துறது. அதுவே ஒரு ஆம்பள நடுசாமத்துல வீடு புகுந்து தூங்கியாந்து பொம்பளகிட்ட ஆறுதல் தேடுறதுக்கு பேரு என்னனு தெரியல சாரே"

சாட்டையடி வார்த்தையால் அவனது இதயத்தை கூரு போட, வார்த்தையின்று ஆண் உதடுகள் நடுங்கியது.

"ஏய்.. கட்டச்சி.. சத்தியமா உன்ன கஷ்டப்படுத்த பேசல, நான் அப்ப இருந்த டென்ஷன்ல தெரியாம பேசிட்டேன் டி. அது இந்த அளவுக்கு உன் மனசை பாதிக்கும்னு எனக்கு தெரியாம போச்சி. எதையும் மனசுல வச்சிக்காத டி ப்ளீஸ்.."

இடை நசுக்கி இருந்த கரம் அவள் தாடைப் பற்றி கெஞ்சிட. சட்டென தட்டி விட்டாள் அவன் கரத்தை.

"எதையும் மனசுல வச்சிக்கக் கூடாதுன்னுதே எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா மறக்க முயற்சி பண்றேன். ந்நா மறந்துடுவேன், உங்களுக்கு மறக்க ஒன்னும் இல்லனு நினைக்கிறேன் இங்கிருந்து போங்க எனக்கு தூக்கம் வருது"

அவனையும் சேர்த்தே மறந்து விடவதாக அழுத்திக்கூறி அலட்சியமாக நகர முற்பட்டவளின் குட்டியான மென்இதழை மொத்தமாக சிறைபிடித்து மேலும் அவளை அதிர்ச்சியில் தவிக்க விட்டான்.

ஒருகை மீண்டும் இடையில் புதைந்து தாவணி விளக்கி புதையல் தேட, மற்றொரு கை பின்னங்கழுத்தில் அழுத்தி பிடித்து அவளின் உதட்டின் தித்திப்பை உதட்டால் கரைத்து கடித்து உறிஞ்ச, திகைப்பில் நெஞ்சிக்கூடு ஏறி இறங்கியது காவேரிக்கு.

மஞ்சள் நிற தெருவிளக்கின் ரம்மியமான நடுஇரவில் மனம் விரும்பும் பெண்ணோடு தனிமையில் இத்தகைய இதழ் முத்தம் தேனாய் தித்திக்க, ஜவ்வுமிட்டாயாக கடித்து முதல் முதலாக அதன் சுவை அறிந்தவனின் எண்ண ஓட்டத்தில், இதற்கு முன்னவும் இப்படி ஒரு அழகிய நினைவினை சேமித்த உணர்வு தோன்றி மறைய குழப்பம் சூழந்தாலும், அதனை புறம் தள்ளிவிட்டு இதழ் தேனை குடித்தான் இதமாக பதமாக.

ஒரு கட்டத்திற்கு மேல் பொருக்க முடியாது அவன் நெஞ்சில் கை வைத்து ஓங்கி தள்ளி விட்டு கண்ணீரை துடைத்தவளை, அசராது பார்த்தவன் வேண்டுமென்றே தான் அவள் லேசாக தொட்டதும் தள்ளி நின்றது.

"இதையும் சேர்த்தே மறப்பியா கட்டச்சி" கேலியாக கேட்டு அவன் உதட்டை ஈரப்படுத்திக்கொள்ள, அமைதியாக நின்று தீர்க்கமாக பார்த்தவளின் கண்களில் ஏதோ ஒரு ஏலனம் "இதையும் தாண்டிய அனைத்து கடுமையான சூழலையும் தான்பார்த்து விட்டேனடா" என்பது போல. ஆனால் அதனை அவன் தான் கண்டுகொள்ளாது போனான்.

"நீய ஒரு போலீஸ் அதிகாரி அது நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். அதை மறந்துட்டு என்கிட்ட கேவலமா நடக்காதீய சாரே. உங்க வீட்டு சூழ்நிலை சரியானதும் உங்க அம்மா உங்களுக்கு, அம்மா அப்பா சொந்தம் பந்தம்னு எல்லாரும் கூட இருந்து வளர்த்த நல்ல பொண்ணா தேடி கல்யாணம் செஞ்சி வைப்பாக கட்டிக்கிட்டு சந்தோசமா வாழுங்க"

தனக்கு பெற்றோர் இல்லை என தெரிந்தும் அவர்கள் உடன் இருந்து வளர்க்காததை அன்று அவன் சொல்லி காட்டியதை, இன்று அவள் சொல்லியதும் இயலாமையோடு கண்டான்.

"ஏதோ கோவத்துல வார்த்தைய விட்டுட்டேன் இன்னும் ஏன் டி அதையே பிடிச்சிட்டு என்ன டார்ச்சர் பண்ற. வேணும்னா நான் பேசின வார்த்தைக்கு பரிகாரமா உன் காலுல விழுந்து மன்னிப்பு கேக்கட்டுமா" அவள் தோளை பிடித்து ஆவேசமாக உளுக்கியவன் சட்டென அவள் காலில் விழுந்தும் விட்டிருக்க, அவனது எதிர்பாராத செயலில் அதிர்ச்சியில் மூச்சே நின்று போனது அவளுக்கு.

"ஐயோ.. சாரே.. என்ன பண்றீங்க. போயும் போயும் என் காலுல விழுந்து. மச்.. தயவுசெய்து எழுந்திரிங்க" குனிந்து அவனை தூக்க போராடியவளுக்கு கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை அவன்.

"பழசு எல்லாத்தையும் மறந்துட்டு என்ன ஏத்துகிட்டேன்னு சொல்ற வரைக்கும் நான் எந்திரிக்க மாட்டேன் டி" விடாப்பிட்டியாய் அவள் பாதத்தில் முகத்தை அழுத்தினான்.

அதில் இன்னும் பதறிய காவேரி,

"விளையாடாதீய சாரே, உங்களுக்கு ந்நா பொருத்தமானவ இல்லனு புரிஞ்சிதே விலகி வந்ததுக்கு காரணமே. உங்க தகுதி எங்கே என் தகுதி எங்கே, ஆசைபட கூட ஒரு தகுதி வேணும்னு நல்லா புரிஞ்சிக்கிட்டேன். தயவுசெய்து என்னைய மேலும் மேலும் நோகடிக்காம போய்டுங்க"

அவன் காலில் விழுந்தது தாங்காது, சட்டென வீதியில் சம்மணம் போட்டு அவனை எழுப்ப, ஊர்ந்து வந்து அவள் மடியில் படுத்து வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டதும் அவஸ்தையாய் நெளிந்தாள் பெண்ணிலா.

"இது ரோடு சாரே.. காக்கிசட்டைய போட்டுக்கிட்டு ஒரு உயர்ந்த அதிகாரி பண்ற வேலையா இது. மேல எல்லாம் மண்ணாகுது" அவசரமாக கண்ணில் பட்ட மண்ணை தட்டிவிட ஹாயாக மல்லாக்க படுத்து அவளின் கரத்தை பிடித்து மென்முத்தமிட்டு நெஞ்சோடு அழுத்திக்கொள்ள, மேனி சிலிர்த்து மூக்கை உறிஞ்சினாள் காவேரி.

"உன் மடில படுத்தா ரோடு கூட சொர்கம் தான். எனக்கு இந்த தகுதி தராதாரம் எல்லாம் தெரியாது என் மனசுக்கு உன்ன புடிச்சி போச்சி. இந்த வெங்கட்க்கு பொருத்தமானவ இந்த காவேரி ஒருத்தி தான். நான் அதை எப்பவோ தெளிவா உணர்ந்துட்டேன். ஆனா சொல்ல சரியான சந்தர்ப்பம் அமையல. நீயும் அதை உணர்ந்து இருப்ப அதுனால தானே இவ்வளவு தூரம் என்னை தேடி வந்த. சரி விடு மன்னிச்சிட்டியா கட்டச்சி" கண்களை மட்டும் நிமிர்த்தி ஆவலாக அவள் முகம் பார்த்தான்.

"ந்நா யாரு உங்கள மன்னிக்க" கண்கள் படபடவென அடித்துக்கொள்ள முகத்தை திருப்பினாள்.

"நீ யாரா.. என் ஆத்துக்காரி டி" திருப்பிய முகத்தை தன் முகத்தின் நேரே இழுத்து உதட்டில் ஒரு இச் வைத்தான்.

"ம்ச்.. இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்" உதட்டை துடைக்க.

"எனக்கு தேவாமிர்தமா இருக்கு" நாவை சப்பு கொட்டினான்.

"ஏதோ கவலையா வந்தேன் ஆறுதல் தேடி வந்தேன்னு சொன்னீய. ஆனா நீய பண்ற வேலையெல்லாம் பாத்தா ஏதோ தேன்நிலவுக்கு வந்தது போல இருக்கு" என்றாள் கடுப்பாக.

"ஆயிரம் கவலை இங்கே மறையாம இருக்கு தான். ஆனா அந்த கவலைக்கு மருந்து நீதான் டி. உன்ன பாத்தா எவ்வளவு கவலை இருந்தாலும் தேன்நிலவு மூடு தானா வந்து போகுதே. என்ன செய்யலாம்" குறும்பாக அவள் வயிற்றில் விரலால் நண்டு ஏற, கூச்சத்திலும் நாணத்திலும் சிவந்து துள்ளினாள் அவனிடம்.

"மச்.. கைய எடுய்யா.. கூச்சமா இருக்கு" தளதளத்த நாபி பள்ளத்தை தூறுவாரிய விரலை அமுக்கிப் பிடிக்க, "இப்பதான் டி என் வழிக்கு வர வா வா.." கள்ளகமாக சிரித்து, கையில் தட்டுப்பட்ட பாவாடை நாடாவை விரலில் சுற்ற, பாவாடை தளர்வதை தாமதமாவே உணர்ந்து, ஆடவனின் சேட்டையில் உள்ளம் திடுகிட்டாள்.

"பாக்க அம்மாஞ்சி மாறி இருந்துகிட்டு பண்றது அம்புட்டும் சேட்ட. மன்னிச்சிட்டாச்சி கைய எடுய்யா" விட்டால் ரெண்டு கிலோ முறுக்கு பிழிந்து இருக்கலாம். அத்தனை முறுக்கு அந்த ஒற்றை முகத்தில் முறுக்கினாள் அலுப்பாக.

"அது ஆரம்பத்துலே சொல்லி இருந்தா ஓகே. இப்ப டூ லேட். என் உதட்டுல இங்கிலிஷ் கிஸ் எச்சில் தெறிக்க கன்னாம்பின்னான்னு கொடுத்து,

"மச்சா மச்சா நான் உங்கள மன்னிச்சிட்டேன். நாளைக்கே உங்க கூடவே நம்ம வீட்டுக்கு வந்திடறேன். கோவிச்சிக்காதீங்க என் செல்லமில்ல" இப்டி கொஞ்சி கொஞ்சி முத்து குடுத்துகிட்டே சொல்லு. உன் மன்னிப்ப ஏத்துக்குறேன்"

நமட்டு சிரிப்போடு இருளில் மின்னிய அவனது நிலவை பார்க்க, அவனை நன்கு முறைத்துக்கொண்டிருந்தாள்

"என்ன டி முறைப்பு. ஓஓ.. மச்சானை சைட் அடிக்கிறியா அடிச்சிக்கோ அடிச்சிக்கோ.. ஆனாலும் நீ என்கிட்ட மன்னிப்பு கேக்காம விடமாட்டேன் சொல்லிட்ட"
அப்படியே பிளேட்டை மாற்றியவனை வாய் பிளந்து பார்த்தாள்.

"யோவ் நீதானே என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருந்த. இப்ப என்ன அப்டியே மாத்தி என்னைய மன்னிப்பு கேக்க சொல்ற"

"நீயும் நானும் ஒன்னான பிறகு யார் மன்னிப்பு கேட்டா என்ன டி கட்டச்சி. சரி விடு நானே கேட்டுக்குறேன்"

அசால்ட்டாக தோளைக் குளிக்கியவன், அவள் அசந்த நேரம் வாய் வழி மன்னிப்பை யாசிக்க தொடங்கிட,


"ஏ ஹே ஏ ஹே..
ஏ ஹே ஏ ஹே..

காக்கிச் சட்டை போட்ட மச்சான்..
களவு செய்யக் கன்னம் வைச்சான்..
கன்னம் வைக்க வந்த மச்சான்..
கன்னத்தில கன்னம் வைச்சான்..

பக்கம் வந்து பக்கம் வந்து..
பாவி மனச பத்தவச்சான்..
எங்க வீட்டுத் திண்ணையில.
இதுக்குத் தானா குத்த வச்சான்.."


பெண் மனதுக்குள் இன்பமாக பாடல் இசைக்க, முதலில் திமிறிய மானும் தன் துடிப்பை நிறுத்திவிட்டு, சிறுத்தையிடம் இன்பமாக அடங்கி விட்டிருந்தது.

"வெளக்க அணைச்சா வெவரம் என்ன

ஒத்திகை பார்த்தா தப்பு இல்லை.."

அவள் மனதை படித்தவன் போல் பாடி அவள் மூக்கை கடித்தான் வெங்கட்.

"ஒத்திகை இங்கே உண்மையாப் போனா..
கல்யாணம் நடக்கும் நமக்குள்ள.. ஏ ஹே.. ஏ ஹே.."
நாணம் கொண்டு அவள் தரையில் சாய,

"ஹெய் இன்னும் என்னை நம்பவில்லையா..
கன்னம் தர எண்ணமில்லையா.."

அவள் மேலேறி கன்னம் உரசினான்.

"தாலி இன்னும் செய்யவில்லையா..
சேதி சொல்ல தேதி சொல்லையா.."

பாடிக்கொண்டே அவனை மண்ணில் சரித்து தள்ளி எழுந்து, களுக்கென்ற சிரிப்போடு வீட்டை நோக்கி ஓடியவளை, தானும் எழுந்து நின்று மண்ணை தட்டி விட்டு சிரித்தவன்,

"காலைல பாத்துக்குறேன் டி" நினைத்தபடி அவன் வீட்டை நோக்கி பறந்தான்.

தொடரும்.
 
Last edited:

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 26
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Messages
46
Reaction score
36
Points
18
Ena ji intha venkat ivlo irangitan.... Paduthe vittaniya.... Poangal....ellam k bt vetuku kutitu pona parimala ma vaya thirandhu pesa aaramicha tha iruku....intha pulla marupadiyum ooruke poiduvale apdi illa pesum.... Enga ji kuyila kanoam today.... Ruthran ku etho secret iruku athu ennanu reveal pannunga ji...
 
Administrator
Staff member
Messages
169
Reaction score
145
Points
43
Ena ji intha venkat ivlo irangitan.... Paduthe vittaniya.... Poangal....ellam k bt vetuku kutitu pona parimala ma vaya thirandhu pesa aaramicha tha iruku....intha pulla marupadiyum ooruke poiduvale apdi illa pesum.... Enga ji kuyila kanoam today.... Ruthran ku etho secret iruku athu ennanu reveal pannunga ji...
இன்னைக்கு வரும் ஜி 😍😂
 
Top