• வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

அத்தியாயம் 26

Administrator
Staff member
Messages
309
Reaction score
251
Points
63
அத்தியாயம் - 26

“ராம்ம்ம்... என்று உயிர் போகும் அளவிற்கு அதிர்ச்சியில் கத்தியவளை பதட்டமாக கண்டு ஏய்.. நேத்ராஆ..” என வேகமாக உளுக்கியவனை, கண்கள் வெளியே தெறித்து விழும் அளவிற்கு மிரண்டு பார்த்து சுற்றியும் முற்றியும் இதயம் நடுங்க எதையோ தேடி அவனது தலையை திருப்பி, அவனையும் தன் கரத்தையும் மிரண்டு போய் மாறி மாறி ஆராய்ந்தவளை வினோதமாக பார்த்திருந்தான் ராம்.

ராமின் திகைத்த முகத்தை உள்வாங்கிய படியே தடித்த இதழ்களை கொய்து இதமாக முத்துக் கொடுத்து இமைகளை சுழட்டியவளின் கருவிழிகள் மட்டும் பெரிதாக அதிர்ச்சியில் வரிவரியாக விரிசல் விட்டு விரிந்து உறைந்து போயின.

“எத்தனை முறை சொல்றது அவன் எனக்கு மட்டும் தான் புருஷன் அவன நெருங்காதே நெருங்காதேனு.. ஒருமுறை சொன்னா கேக்க மாட்டியாடிஇஇ.. இதனால அழிவு உனக்கு நினைச்சியாஆஆ.. நீ அவனை நெருங்க நெருங்க அவனுக்கு தான் டி அழிவூ..” அகோர பற்கள் ரத்தக்கரை படிந்து காது வரை கிழிந்த வாயில் இருந்தும் தலையை சுற்றிலும் கட்டி கட்டியாக கருப்பு நிற ரத்தம் சொட்டிட, கண்கள் இரண்டும் பிய்த்துக் கொண்டு கொடூரமாக வெளியில் தொங்கி தலை சாய்த்து சிரித்த சாத்தான் கையில் கூர்மையான இரும்புக் கோடாலியோடு தங்களை நெருங்குவதை கண்டு, அச்சத்தில் திகைத்துப் போனவள், இமைக்கும் நொடிதனில் ராமின் தலையில் கோடாலியால் தாக்கிவிட்டிருந்ததில் குருதி தெறிக்க மூச்சை இழுத்து பிடித்து ஆக்.. என மார்பை புடைத்தவனை கண்டு தான் அவள் உயிர் போகும் அளவிற்கு கத்தியது. இப்போது அவன் நன்றாக எழுந்தமர்ந்து அவளை உளுக்கியதில் சுயம் தெளிந்தும் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் இதயம் அதிர அமர்ந்திருந்தாள் நேத்ரா.

“ஏய்.. என்ன டி ஏன் இப்டி பைத்தியக்காரதனமா கத்தி அடிக்கடி உயிர வாங்குற” அவள் முத்தமிட்ட ஈரஎச்சில் பட்ட அதரத்தை ஆத்திரத்தோடு துடைத்தபடி கடுகடுத்தான் ராம்.

“நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக மாடில இருந்து கீழ குதிச்ச எனக்கு நான் கேட்ட நம்பிக்கைய எப்ப தர போறீங்க ராம்” எப்போதும் கலங்காத விழிகள் முதன் முறையாக அவனது நம்பிக்கை பிச்சையை எதிர்பார்த்து லேசாக ஈரம் கசிந்தன, திமிர் பார்வை வீசும் ஆணவ விழிதனில்.

“ஆஆஆஆ... நம்பிக்கை.. நம்பிக்கை.. நம்பிக்கை.. அப்டி அந்த நம்பிக்கைல என்ன தான் இருக்குனு ஒன்னும் இல்லாத அந்த நம்பிக்கைய பிடிச்சிகிட்டு என்னை அனுதினமும் டார்ச்சர் பண்ற. கேவலம் என்ன பழி வாங்க இன்னும் என்னென்னலாம் கதை விட்டு உன்ன நீயே கேவல படுத்திக்க போறே. அப்டி உனக்கு ஆம்பள உடம்பு தான் வேணும்னா அதுக்குனே நாக்க தொங்க போட்டு காத்திருக்க எத்தனை பேர்கிட்ட வேணாலும் போடி. எதுக்கு விருப்பம் இல்லாதவன பிடிச்சி உடம்பு சுகத்துக்காக அலைஞ்சி தொங்கிட்டு இருக்க. உன்னோட டார்ச்சர தாங்கிட்டு வாழுறதுக்கு பதிலா என் பொண்டாட்டி போன இடத்துக்கே நானும் போய் சேர்ந்தடலாம் போல”.
ஏற்கனவே அவள் அத்து மீறி முத்தமிட்டதில் அப்பட்டமான எரிச்சலோடு இருந்தவன், மீண்டும் மீண்டும் அவள் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்ததில் கட்டுப்படுத்தி வைத்திருந்த கோவமெல்லாம் காட்டாராக கரையுடைத்து விட்டது.

நிலைத்த விழிகளால் அவனை நிதானமாக பார்த்தவளின் உள்மனதில் அவன் பேசிய வார்த்தைகள் எரிமலை பிழம்பாக கொலுந்து விட்டு எரிந்த போதிலும், தன் முடிவில் நிலையாக “திரும்ப திரும்ப சொல்றேன் இப்ப நிகழ்காலத்துல உங்க மனைவினு ஒருத்தி இருக்கானா அது நான் மட்டும் தான். எனக்கு தேவை உடல் சுகம் இல்ல, என் கணவரோட அறைவனைப்பும் அன்பும், அவர் மூலமா கிடைக்கிற சந்தோஷமான தாம்பத்தியமும் தானே தவிர வேற எந்த சுகத்துக்காகவும் உங்கள பிடிச்சி தொங்கிட்டு இல்ல” சீற்றம் பொங்க உரைத்தவள் அவனது சிவந்த முகத்தின் நேரே சொடக்கிட்டு, “உங்கள ரொம்ப சாஃப்ட் கைண்டு பர்சனு நினைச்சி தான் இத்தனை நாளா உங்க அனுமதிக்கும் மரியாதைக்கும் ஏங்கி காத்திருந்து பொறுமையா இருந்தேன், ஆனா இப்ப தானே புரியிது நீங்க சரியான கல்நெஞ்சக்காரர்னு”.

‘நீங்க என்னை பத்தி என்ன வேணாலும் நினைச்சிக்கங்க எனக்கு அதை பத்தியெல்லாம் எந்த கவலையும் இல்ல, அதை நினைச்சி கவலை பட நேரமும் இல்ல. இத்தனை நாளா உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லணும்னு துடிச்சி தவிச்சு உங்க நம்பிக்கைய பெற உயிர விடற அளவுக்கு கூட துணிஞ்சிட்டேன். ஆனாலும் உங்க கல்லு மனசு மாறவே இல்லைல. உண்மை தான் உங்கள எனக்கு ஆரம்பத்துல பிடிக்கல மிடில் க்ளாஸ் ஆளு ஒரு குழந்தைக்கு அப்பா, பொண்டாட்டி இல்லாதவனு உங்கள கேவலமா நினைச்சதுண்டு. அதை வச்சி உங்கள அவமானமும் படித்தி இருக்கேன் அதெல்லாம் தப்பு தான். அதன் பிறகும் பிடிக்காத உங்களை, என் ஸ்டேட்டஸ்க்கு தகுதி இல்லாத உங்களை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி இருக்கேனா எதுக்குனு நினைச்சீங்க. நீங்க சொன்ன சுகம் தர தயாரா இருக்க ஆம்பளைங்க யாரும் கிடைக்காம போனதாலையாஆ..’ ஆவேசம் பொங்க கத்தியவளை கொஞ்சமும் குறையா கோவத்தோடு புருவம் இடுங்க பார்த்தான் அவன்.

“எதுக்காக உங்கள மிரட்டி உருட்டி கல்யாணம் பண்ணேனு அதுக்கான காரணத்தை சொல்லவும் விட மாற்றீங்க, என்ன சொல்ல வரேன்னு காது கொடுத்தும் கேக்க நீங்க தயாரா இல்ல. இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க இதுக்கு மேல உங்க நம்பிக்கைய எதிர்பாத்து காத்திருக்க என்னால முடியாது ராம். ஒவ்வொரு முறையும் நீங்க என்னை ஆண் சுகத்துக்கு அலையிறவனு சொல்லும் போது எனக்குள்ள ஏற்படுற கோவத்தை இன்னும் எத்தனை நாள் பொறுத்துக்கிட்டு இருப்பேன்னு எனக்கே தெரியாது, அவ்ளோ கோவத்தையும் உள்ளுக்குள்ள அடக்கி வச்சிட்டு இருக்கேன்”. நெஞ்சை சுட்டிக் காட்டி கோவமாக உரைத்தவளின் குரல் சற்றே நடுக்கமாக வந்ததை உணர்ந்தும் சிலையாகவே நின்றான்.

“இத்தனை தூரம் ஆன பிறகு இனிமே நீங்களே கேட்டாலும் எதுவும் சொல்ல நான் தயாரா இல்ல. நான் இங்க வந்ததுக்கான நோக்கம் உங்க பாணில சொல்லனும்னா, ஆம்பள சுகம் தேடி தான் அதுவும் உங்ககிட்ட”. இந்த முறை அவன் நெஞ்சை விரல் கொண்டு வேகமாக குத்திக் காட்டியவளாக, “அந்த ஒருநாள் சுகத்தை மட்டும் கொடுங்க, ஜென்மத்துக்கும் உங்க முகத்துல முழிக்காம உங்கள விட்டும் உங்க வாழ்க்கைய விட்டும் நிரந்தரமா போயிட்றேன் போதுமாஆ..” ஈரம் சுரந்த விழிகளை அவனது அலைபுரும் விழிகளில் கலக்க விட்டு ஆக்ரோஷமாக கத்தியவள், அவனுக்கு பின்னே தெரிந்த கோரமான உருவத்தை கண்டு கர்வப்புன்னகை சிந்தியவளின் ஈரவிழியில் ரத்தம் சொட்டும் இரும்பு சங்கிலியை அவ்வுருவம் விசிறிவிட்டு அடித்ததில் அம்மாஆஆஆ.. என்ற அலறளோடு மயங்கி சரிந்தவளை ஏய்ய்.. நேத்ராஆஆ.. என பதறியவனாக தாங்கி பிடித்து மெத்தையில் கிடத்தினான் ராம்.

தலை வெடிக்காத குறையாக உள்ளம் மறுகிய நிலையில் அவளின் அருகில் அமர்ந்திருந்தவனுக்கு முதன் முறையாக நேத்ராவின் வேதனை ததும்பிய பேச்சிலும் கோவத்திலும் உள்ள துடிப்பையும் ரணத்தையும் தாண்டிய பயத்தினை தெள்ளத் தெளிவாக கண்டுக் கொண்டவனின் விழிகள், அவ்வறையை சுற்றிலும் நோட்டம் விட்டன யோசனையாக. அப்படி பயம் கொள்ளும் அளவிற்கு அந்த அறையில் அவன் கண்களுக்கு ஒன்றுமே தென்படவில்லையே. ஆனால் இங்கு வந்த நாளில் இருந்து பயம் என்றால் என்னவென அறியாதவள் திடீர் திடீரென ஒவ்வொரு முறையும் பயந்து அலறுவது மனதினோரம் சிறு நெருடல் ஏற்பட தொடங்கியது அவனுள்.

அதிலும் கூட அவளுக்காக பயம் போல் தெரியவில்லையே, ஏதோ உயிரான ஒன்றினை யாரிடமிருந்தோ மீட்டு பத்திரமாக தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் கூடிய அச்சம் அது.

தன்னிலையில் இல்லாத போதிலும் அவளின் முகம் ஒருவித இறுக்கத்திலும் யோசனையிலும், சுருங்கி இருப்பதனை கூர்ந்து நோக்கிய ராம், அதிகப்படியான எமோஷன் ஆகி கத்தியதில் காயப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் கசிந்ததோடு ஒரு துளி கண்ணீரும் வழிவதை பெருவிரல் கொண்டு மென்மையாக துடைத்து விட்டவனாக காட்டன் வைத்து ரத்தத்தை சுத்தம் செய்தவனின் எண்ணமெல்லாம், ‘நேத்ரா ஏன் இவ்வாறு தன்னோடு இணைய வேண்டுமென்று அத்தனை பிடிவாதத்தோடு இருக்கிறாள். அதுவும் விருப்பம் இல்லாதவனோடு ஒற்றை நாளில் கூடிக்கலப்பதினால் அப்படி என்ன சந்தோசம் கிட்டி விடும் இவளுக்கு. ஆணோ, பெண்ணோ இருமனம் ஒத்து காதலோடு இணைந்தால் தானே அது சுகமான தூய்மையான தாம்பத்தியம். அப்படி தானே என் தீஷாவோடு ஒவ்வொரு இரவும் பொன்இனிய இரவாக காமன் கொண்ட ராத்திரிகளை கூட மகிழ்ச்சி பொங்கும் நினைவுகளாக மாற்றி இனிக்கும்படி வாழ்ந்திருக்கேன். ஆனால் இவள் கேட்கும் ஓரிரவு நினைத்துப் பார்க்க கூட ஒப்பவில்லை அவனுக்கு, இவளையே மனைவியாக இன்னும் ஏற்றுக் கொள்ளாத போது தாம்பத்தியமா உடலெல்லாம் அருவருப்பில் சிலிர்த்து போயின’.

ஆனாலும் இவளிடம் அத்தனை தூரம் வெறுப்பை உமிழ்ந்து வார்த்தைகளை சிதற விட்டிருக்கக் கூடாதோ என்று தாமதமாக உணர்ந்தவன், அவளின் முகத்தில் இழையாடிய மெல்லிய முடிகளை காதோரம் மெல்ல ஒதுக்கி விட்டு அங்கிருந்து எழப்போனவன் கரத்தை விடாமல் பிடித்திருப்பதை கண்டவன் மனம் முதன் முறையாக நேத்ராவை சந்தித்த அந்த கசப்பான நினைவில் மூழ்கியது.

ஆறு மாதங்களுக்கு முன் :-,

“வெறும் வயித்தோட எப்டி வேலைக்கு போக முடியும். இன்னும் எத்தனை நாளைக்கு தீஷாவ நினைச்சி சாப்பிடாம கொள்ளாம உங்கள நீங்களே இப்டி வருத்திக்க போறீங்க மாமா. கொஞ்சமாவது வயித்துக்கு நேரத்துக்கு சாப்பிட வேணாமா, உங்கள நம்பி யுவா இருக்கான், அவனுக்காகவாது நீங்க திரும்பவும் முன்னாடி மாதிரி கலகலப்போட மாறனும், வாழ்க்கையோட எதார்த்தத்தை புரிஞ்சி நடந்துக்கணும் மாமா. இவ்ளோ தூரம் சொல்றேன்ல ப்ளீஸ் சாப்பிடுங்க” என பனி தினமும் கூறும் அதே ஆறுதல் வார்த்தைகளை சலிக்காமல் சொல்லியும் ஒருநாளும் பயனின்றி போயின.

பனி அத்தனை தூரம் சொல்லியும் எதையும் காதில் வாங்காது அலுவலகம் செல்ல தயாராக பேக்கை எடுத்து மாட்டியவன், தோளில் அழுத்தமாக பதிந்த கரத்தின் சொந்தக்காரன் யாரென உணர்ந்து, “எனக்கு பசி இல்ல வர்மா, ஆபிஸ்க்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்” அவனும் தினமும் சொல்லும் வார்த்தை தான் என்றாலும் அதை வர்மன் கேட்க வேண்டுமே.

“பசி இருக்கோ இல்லையோ என் பொண்டாட்டி சமைச்சது வீணா போவ கூடாது ஒழுங்கா வந்து சாப்புடல நானே சாப்பாட்ட பிசைஞ்சி வயிறு முட்ட ஊட்டி விட வேண்டியதா போவும் எப்டி வசதி” அழுத்தமான குரலால் புருவம் ஏற்றி இறக்கியவனை சலிப்பாக கண்டு பனி எடுத்து வைக்கும் உணவை வேண்டா வெறுப்பாக கடைமைக்கென உண்டு முடிப்பான், இல்லையேல் வர்மன் சொன்னது போலவே வயிறுமுட்டி வெளியே வந்துவிடும் அளவிற்கு ஊட்டி விட்டுவிடுவான் அவன்.

மனைவியை பரிகொடுத்த சோகத்தில் வாழ்க்கையை வெறுத்து போன நிலையில் துக்கத்தில் இருந்தவனுக்கு பக்கபலமாக இருந்ததெல்லாம் வர்மனே ஆவான். தாயையும் மகனையும் விட மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தவன் கட்டுப்பட்டு போகும் ஒரே ஜீவன் வர்மன். பெண்களிடம் எரிந்து விழுந்து கோவத்தைக் காட்டி தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்பவன் வர்மனிடம் வீம்பாக நடந்தால், அவனும் பதிலுக்கு வீம்பு பிடித்து செய்யும் அடாவடித்தனத்தை தாங்க முடியாமல் பல நேரங்களில் சரண்டர் ஆகி விடுவது பழக்கமாகி போனது, “சந்தோஷம் தன்னுயிரானவள் இன்றி தொலைந்து போனது”.

காலை போக்குவரத்து நெரிசலில் தீஷாவின் நினைவில் மிதமான வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான் ராம்.

சாலையில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர், சாலையோரம் உள்ள கடைகளில் உள்ளோர் என்று அனைவரையும் பீதயேற்றும் வகையில் அத்தனை கூட்ட நெரிசலிலும் காற்றைக் கிழித்துக் கொண்டு அதிவேகத்தில் வளைந்து வளைந்து வந்த மகிழுந்தை கண்டு பலரும் வாய்க்கு வந்த சாபத்தை விட்டு செல்ல "ஏய்.. நேத்து.. காரை ஸ்லோவா ஓட்டு டி. யார் மேலயாவது இடிச்சிட போற" ஸ்ருதியின் ஈரக்குலை நடுங்கியது அவள் ஓட்டும் வேகம் கண்டு.

“ஆமா ஆமா நேத்து ப்ளீஸ் எங்களுக்கு எங்க உயிர் முக்கியம். இந்த சேஸிங் ரேஸிங் எல்லாம் வேணாம். காரை ஸ்லோ பண்ணு நேத்து”. உயிர் பயத்தில் கெஞ்சிய சுஷ்மி ரேஷ்மாவை ஏகத்துக்கும் முறைத்து தள்ளினாள் ஸ்ருதி.

"எல்லாம் உங்க ரெண்டு பேரால வந்தது. நீங்க மட்டும் இவளை ஏத்தி விட்டு குடிய ஊத்திக் கொடுக்காம இருந்திருந்தா, இப்ப இப்டி ஒரு சூழ்நிலைல உயிருக்கு பயந்துட்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்குமா? உங்களோட சேத்து என் உயிரும் போக போறத நினச்சா தான் உங்க மேல எனக்கு கொலைவெறி ஏறுது. பாருங்க டி எப்டி குடிச்சிட்டு நிதானம் இல்லாம காரை ஓட்டுறானு" ஸ்ருதி கோவமாக கத்திக் கொண்டு வரும் வேலையில் சல்லிசல்லியாக கண்ணாடிகள் உடையும் சத்தத்தோடு கார் எதிலோ பலமாக இடித்து நின்றது.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 26
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top